ஹிஹ்ஹீ! … வேசிமகன் / தேவடியாள் மகன் என எங்களைத் தெருவோர திமுக திராவிடக்காரன் வசைபாடினால், மகிழ்ச்சியுடன் அசடு வழிய ஒப்புக்கொள்வோம்…
November 10, 2022
…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி?
‘கவர்’ச்சி நடனத்தை எங்களைவிட வேறெவர் நன்றாக ஆடமுடியும்?
மேலும். எங்கள் திராவிடத் தமிழர் தலைவர், பகுத்தறிவுப் பகலவப் பெரியார் ஈவெராவே, எங்கள் முதலாளிகளான திமுக திராவிடர்களை – அறிஞர் அண்ணாவை ‘வேசி மகன்’ என்று சொல்லி அழகு பார்த்திருக்கிறார். அப்படிப் பட்ட பராக்கிரமம் மிக்க வேசியின் மைந்தர்கள், எங்களையும் அப்படியே வாழ்த்துவது போற்றத்தக்கது தானே? ஆக, எங்களைத் ‘தேவடியாள் மகன்’ என்று ஒரு திமுகதலைவர் மரியாதையுடன் அழைத்தால், அது எங்களுக்கும் எங்கள் தாய்களுக்கும், ஏன், எங்கள் மனைவிகளுக்கும் மகளுக்குமேகூட பெருமை சேர்ப்பதுவே அன்றி வேறொன்றில்லை.
…ஆனால் ‘குரங்கு போல ஏன் தாவித்தாவி வர்ரீங்க’ என அப்படித் தாவித்தாவி வழியை மறித்து மைக்கை நீட்டி உளறிக்கொட்டும் எங்களைத் தடுத்து, பாஜக அண்ணாமலை, தோழமைச் சுட்டலைச் செய்தால், அதனை மிகக் கடுமையாக எதிர்ப்போம்!எங்களுக்கும் மானம். ரோஷம் எல்லாம் உண்டு.
ஏனெனில், நாங்கள் கவரிமான் போன்றவர்கள். கவரி (மன்னிக்கவும், கவர்) கொடுப்பவர்களிடம் பணிந்து பம்மி வாலைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் செருப்புகளை ஆனந்தமாக நக்குவோம். ஆனால் – அந்தச் செருப்புமுதலாளிகளற்ற மற்றவர்களிடம் எங்களுக்கே நாங்கள் கொம்புசீவிக்கொண்டு மறத்தமிளர்கலாக வீரவஜனம் பேசுவோம்…
இப்படிக்கு,
-ஒப்பம்-
- போக்கற்ற திராவிடப் பத்திரிகைக் குளுவான்
- தமிழ்தேசியவெறி + ஹிந்துவெறுப்புக் கூவான்
- இடதுசொறி புரட்சிப்பூபாளன்
- மனிதவுரிமை மாமா
- சோரம்போன ஊடகப் பேடி
- ஜிஹாதி-யேஸுமாற்றி
- …
-0-0-0-0-0-
ஒரு வழியாக இன்றுதான் இந்த குரங்கூடகவியாலாளக் கோமகன்கள் பற்றிய பின்புல விவரத்தை அறிந்துகொண்டேன். அதாவது, செய்திகள் நடக்க நடக்க அவற்றை உடனுக்குடன் அறிந்து இறும்பூதடைபவனே நான் தான், என்ன செய்ய, சொல்லுங்கள்.
ஆனால் – அக்கப்போர்களை அறிந்துகொள்வதற்கு ஓரளவு ஃபேஸ்லேக் (phase lag) எனக்கு வாய்த்திருப்பது என் பூர்வ ஜன்மப் புண்ணியம்தான்.
இருந்தாலும்…
-0-0-0-0-0-
பல்வேறு காரணங்களால் 1991-2011 வரை இந்த அயோக்கியத் தமிழ் ஊடகக் குப்பைகளில் நீந்தக்கூடாது என முடிவெடுத்திருந்தாலும் – நான் ஒரு ‘தமிழ் எழுத்தாளன்’ என ஒரு பெரிய முடியையும் பிடுங்கவில்லை என்றாலும் – 1991வரை தமிழ் ஊடகங்களில் எனக்குப் பல நேரடி ஆட்களுடன் பலப்பல தொடர்புகள் – அவர்களைக் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்புகள் என இருந்தன. இப்போது ‘கோலோச்சிக் கொண்டிருக்கும்’ ஊடக அற்பர்களில் சிலரை, அவர்கள் அயோக்கிய இளைஞர்களாக (அதாவது ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர்’ போன்ற ஜந்துக்களாக) வளர்ந்து வந்த காலகட்டங்களில் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் அதிபர் ராம்நாத் கோயங்காவின் பேரன் மனோஜ்குமார் ஸொந்தாலியா போன்றவர்களுடனும் ஓரளவு பழக்கம் (நான் பணிபுரிந்துகொண்டிருந்த அலுவலகத்துக்கு அவர் மாதமிருமுறையாவது வேலை நிமித்தமாக வந்து கொண்டிருந்தார் அவர்; ஆகவே கொஞ்சம் சுவாரஸ்யமான ‘ஜர்னலிஸ’ அரட்டை + பின்னர் கொஞ்சம் மனஸ்தாபம்) இருந்தது. ‘த ஹிந்து’ எனும் தண்டக் கருமாந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்த சில பாவப்பட்ட ஜீவன்களையும் அறிந்திருந்தேன். மற்றபடி தினமணி, குங்குமம், இதயம்பேசுகிறது, கல்கி, விகடன் என அது கொஞ்சம் நீண்டது.
நண்பன் நடத்திய ‘முன்றில்’ பதிப்பகம்/புத்தகக் கடையில் இந்த வேலைவெட்டியற்ற ஊடக தண்டங்கள் (பெரும்பாலும் போக்கற்ற இளைஞர் கும்பல்) வந்து புரட்சிப்பூபாளமும் தெராவிடப் பம்மாத்தும் எலக்கியமும் பேசுவதைக் கேட்டு வெறுத்திருந்த நான் – அங்கு போவதையே மாதக்கணக்கில் நிறுத்தியிருக்கிறேன்கூட.
இதற்குப் பின் ‘கல்வி’ தொடர்பான அலைச்சல்களில் சிலபல பிறமொழி சார்ந்த ஊடகக் காரர்களையும் அறியும் பேறு பெற்றிருக்கிறேன்.
என்ன சொல்லவருகிறேன் என்றால்: நான் பாம்பல்ல; ஆனால் ஊடகப்பேடிப் பாம்புகளின் கால்களை நன்கறிவேன். அதனால் தான் சொல்கிறேன்:
தமிழகத்தில் இருக்கும் ஊடகப் பேடிப் பொறுக்கிகளைப் போலச் சோரம்போன நாதாரிகள், பாரதத்தில் வேறு பிரதேசங்களில் இல்லை.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகத் தொழிலில் நிருபர்/செய்தியாளர்/ஆசிரியர் என இருப்பவர்கள் – வேசிகள் மட்டுமே. திராவிட ஆர்எஸ் பாரதி சொன்னது மிகவும் சரியான அவதானிப்பே.
(இப்படி நான் வேசிகள் எனச் சொல்வதால், நான் வேசிகளைக் குறைத்து மதிப்பிடுவதில்லை – ஏனெனில் அவர்கள், சமூகத்தின் ஸேஃப்டி வால்வ்கள்’ என ஒருமாதிரிச் சொல்லலாம். அதாவது, மானுடர்களின் இயல்பான கலவி அழுத்தங்களுக்கு, சமூகத்தில் பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்ட ரீதியில் வடிகால் கிடைக்காதபோது, அந்தச் சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தொழில்ரீதியாக அளிப்பவர்கள். மேலும், அவர்கள் வாங்கிய காசுக்கு உழைப்பை நல்குபவர்கள். ஒருவரையும் ஏமாற்றி, எத்திப் பிழைப்பதில்லை. விஸிவிக் மனிதர்கள்; what you see is what you get என இருப்பவர்கள்.
மாறாக, ‘பைசாவையும் சலுகைகளையும் அந்த எத்திப் பிழைக்கும் ஊடக நாய்கள் பக்கம் விட்டெறிந்தால் நிர்வாண நடனமும் ஆடுவார்கள்’ + ‘பிறரையும் ஏகத்துக்கும் ஏய்ப்பார்கள்’ எனும் கருத்தாகத்தான் இச் சொல்லை, இந்த ஊடகப்பேடிகள் மீது பிரயோகிக்கிறேன்.)
-0-0-0-0-
நான் சிலபல ‘பத்திரிகையாளர் கூட்டங்களுக்குப்’ போயிருக்கிறேன். குறிப்பாக மூப்பனார் ‘சைக்கிள்’ சின்னம் பெற்று, கருணாநிதியுடன் கூட்டணி வைத்து, ஜெயலலிதாவுக்கு எதிராக அணி திரண்டபோது.
ஊடகப் பேடி நிருபர்களுக்கு, அவ்வப்போது ‘கவர்’களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை, நேரில் பார்த்திருக்கிறேன்.
‘அறிவாலயம்’ வளாகத்தில் பெரிய பைகளில் (பொங்கல், தீபாவளிப் பண்டிகை சமயம்) வெடிகள், இனிப்புகள், ரொக்கம் கொடுக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.
டைட்டன் வாட்ச், தங்க டாலர் என, ரெவலுக்கு ஏற்றபடி நிருபர்களுக்கும் அவர்கள் மேலாண்மைக் காரர்களுக்கும் படியளக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.
‘ஜர்னலிஸ்ட்’ எனச் சொல்லிக்கொண்டு இலவச (அல்லது மிகக் குறைவான விலையில்) வீடுகளை வீட்டு வசதி வாரியங்களிடமிருந்து திராவிடர்களுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு பெற்றவர்களைப் பார்த்திருக்கிறேன். (கனிமொழி ராஜாத்திகளுக்கு நெம்ப க்ளோஸ் ஆக இருந்தும், அவர்களிடமிருந்து தம்பிடி பெயர்க்க முடியாமல், வீட்டு வசதியையும் பெறாமல் மன அழுத்தத்தில் வாடியவர்களில் ஒருவரை அறிவேன்)
தொழிலதிபர்களிடம் துட்டு வாங்கிக்கொண்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டவர்களை அறிவேன்.
உட்கட்சி அதிகார மோதல்களில், ஒருவர் இன்னொருவரை ஓரம்கட்ட, துட்டு வாங்கிக்கொண்டு – ‘இன்வெஸ்டிகேடிவ்’ நிருபத்தனம் செய்தவர்களையும், அநியாயமாகக் கதைகளை ஜோடித்தவர்களையும் அறிவேன். இரண்டு பக்கமும் துட்டு வாங்கி – ஆனால் துரதிருஷ்டவசமாக மாட்டிக்கொண்டு உதை பட்டவர்களையும்!
சில கேஸ்களில், ஹீரோ ஹோண்டா வண்டியைப் பெருமிதமாகப் பிச்சை பெற்றவர்களையும் அறிவேன்.
‘பாடி அட்ஜஸ்ட்மெண்ட்’ விஷயங்களுக்குத் தரகர்களாக இருந்த பெண்ணுரிமைச் சிகாமணிகளை அறிவேன்.
நடிகர்-நடிகைகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு – அவர்களுடன் நேர்காணல் குண்டிகாணல் எனச் செய்து பின்னால் வழிவதை நக்கிக்கொண்டு இறும்பூதுடன் அலையும் ‘திரைப்பட நிருபர்’களையும் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
தங்கள் கூட்டுறவு அமைப்புகளில் கட்சி-ஜாதி ரீதியாக அணிதிரண்டு அடிவுதைகளில் ஈடுபட்டாலும் – ‘பொதுவாழ்வில் வன்முறை’ எனப் பினாத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். தங்கள் அடியுதைப் பொறுக்கிச் சங்கத்திற்குத் தேர்தலே நடத்திக் கொள்ளாமல், ஊழல் செய்துகொண்டு – ஆனால் வெளியுலகத்தில், ஜனநாயகம், ‘தேர்தல் முறைகேடு’ என்றெல்லாம் உருட்டும் இரட்டை நாக்கினர் தான் இவர்கள்.
விடுதலைப்புலி பொறுக்கிகளிடம் வாலாட்டி, லாபங்களைப் பெற்றுக்கொண்டு, ‘இனமானம்’ என்றும் ‘தொப்புள் கொடி உறவு’ என்றும் முழ நீளமாகப் பிதற்றியவர்களை அறிவேன். (ற்றொம்ப வாலாட்டி உதைகளைப் பெற்றுக் கொண்டவர்களையும்தான்!)
வீரப்பனிடம் பணம் பெற்றுக்கொண்டு, அந்தக் கொலைகாரனையும் ஏமாற்றியவர்களையும்.
காவல்துறையில், அரசு இயந்திரத்தில் உயர்பதவியில் இருப்பவர்களிடம் ஆதாயம் பெற்றுக்கொண்டு காரியங்களைக் கமுக்கமாக முடித்துக் கொண்டவர்களையும், முடித்துக் கொடுத்தவர்களையும்…
சர்ச்களிலிருந்தும் ஜிஹாதி அமைப்புகளிடமிருந்தும் துட்டு வாங்கிக்கொண்டு மனிதவுரிமை, சுற்றுச்சூழல் சேதாரம் எனக் கம்பு சுற்றி, நேர்மையாளர்கள், மானுடவிரும்பிகள் எனப் பொய்மை பேசும் ஜந்துக்களையும்…
அரசுவேலைகளில் இருப்பவர்களுக்குப் பணி மாற்றம் அதுஇது என ‘பொதுக்காரியமாக’ அலைந்து பைசா பார்த்தவர்களையும் அறிவேன்.
கட்சி ப்ரெஸ் கான்ஃபரன்ஸ்களில் தீபாவளி ஹல்வா டப்பாவில் தங்கமோதிரம் பொதித்து வைத்துக் கொடுக்கப் பட்டதைப் பார்த்திருக்கிறேன்.
வருடக்கணக்கில் பசிப்பிணியால் வாடியவர்கள் போல, கட்சி மாநாடுகளில் ஓஸி பிரியாணிக்கு அலைமோதிய பிச்சைக்கார ‘நேர்மைப் பிழம்பு’களையும்தான்.
குடிப் பிரச்சினையைப் பெரிதாக எழுதும் நிருபர்கள்/பத்திரிகையாசிரியர்கள் – ஓஸி சாராயத்துக்காக ஆலாகப் பறப்பதைக் கவனித்திருக்கிறேன்.
சில பெண் ‘நிருபர்கள்’ துளிக்கூடக் கூச்சமேயில்லாமல், “வெறுமனே மோதிரம்தானே கொடுத்திருக்கிறீர்கள், அந்தக் கட்சியில் கம்மல் கூடக் கொடுத்திருக்கிறார்களே” எனக் கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
க்ரிக்கெட் டெஸ்ட்மேட்ச் ஓஸி ‘ஜர்னலிஸ்ட்’ டிக்கட்டுகளுக்காக (அதாவது தொழில் முறைக்காக இல்லை – மாறாக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்) ஏகத்துக்கும் நக்கியவர்களையும் அசிங்கவுணர்ச்சியுடன் பார்த்திருக்கிறேன்
‘ப்ரெஸ் கிட்’ எனக் கொடுக்கப்படும் “தளபதி ஸ்டாலின் சூளுரையிட்டார்” என ஸ்டாலின் கும்பலே டைப் அடித்துக்கொடுக்கும் கட்-பேஸ்ட் அறிக்கைகளை அப்படியே வெளியிடும் பத்திரிகைகளையும், “ஐயோ! நாங்களே இதை டைப் அடிக்கணுமா, ஸாஃப்ட் காப்பியை கொடுங்க, அப்படியே போடுகிறோம்” எனப் பம்முவர்களையும் பார்த்திருக்கிறேன்.
“போன தடவை ஐயாயிரம் கொடுத்தீர்கள், இந்த முறையும் அதே ஐயாயிரம்தானா? வெலைவாசியெல்லாம் ஏறிட்டே இருக்கே” என உரிமையாகக் கேட்கும் பாங்கினையும் பார்த்திருக்கிறேன்.
நரஸிம்ஹாராவ், மன்மோஹன்ஸிங் சமயத்தில் (ஏன், ஏபி வாஜ்பேயி சமயத்திலும்) – அதிகாரப் பிச்சை கேட்டு கூடவே ஒட்டுண்ணிகளாக இருந்து இலவசங்களை நக்கிப் பிழைத்த நாய்களையும் அறிவேன். (நேரடியாக அல்ல – நண்பர்கள் மூலமாகத்தான்)
(ஒரு சிலர் – தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைக்காரர்கள் ஒன்றும் வாங்கிக்கொள்ளாமல், கூச்சத்துடன் அசிங்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்)
-0-0-0-0-
மேற்கண்டதெல்லாம் (அதாவது முக்காலே மூணுவீசம்) சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே நான் அறியப் பெற்றவை… (நான் பூர்வ ஜன்மத்தில் கொடும் பாவங்களைச் செய்திருக்கிறேன் தான்!)
இக்காலங்களில், எனக்கு இம்மாதிரி அழுகுணி ஆட்டக்காரர்களின் சகவாசமே துளிக்கூட இல்லை. ஆனால் அப்படியும் இப்படியும் என் சொற்ப நண்பர்கள்/அறிமுகங்கள் வழியாகச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன…
ஆகவே.
இந்தக் குப்பை அயோக்கியர்கள், இப்படி எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப் படாமல் (எப்படியும் இந்த ஜந்துக்கள் கூச்ச நாச்சத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நாம் அறிந்தாலும்) – ஒருமாதிரி டைரக்ட்-பெனிஃபிட்-ட்ரான்ஸ்ஃபர் நடப்பதாகவும் அறிகிறேன். அதுவும் மாதாமாதம் டாண்டாணென்று நடப்பதாகவும், பண்டிகை காலங்களில் மேலதிகமாகவும் என…
நடு நிலையாமே? உண்மை வேட்கையாமே! ஜனநாயகத்தின் ‘நான்காம் தூணாமே!
ப்ளடி பாஸ்கெட்ஸ்.
வாழ்க!
-0-0-0-0-
பேச வந்துவிட்டார்கள், பேமானிகள் – ஏதோ புதுவுலகத்தைச் சிருஷ்டிப்பதாக பாவலா காட்டுகிறார்கள்.
அயோக்கிய அற்ப மானுடப் பதர்கள்.
தமிழ் ஜர்னலிஸ்ட் எனச் சொல்லடா, பிச்சையைப் பொறுக்கித் தின்னடா.
அவ்ளோதான்.
நன்றி!
–
-0-
November 14, 2022 at 07:44
பிச்சை புகினும் ஊடகப்பேடித்தனம் நன்றே!
November 21, 2022 at 00:06
இன்னா வாத்யாரே ஸௌக்யமா? நம்மோ முண்டகலப்பைஸ் பத்தி நெம்ப ராங்கா பேஸ்னுகீறதா நம்க்கு நியூஸ் வந்த்ச்சி அதான் இன்னா சங்கிதினு கேட்னு போலாம்னு வந்தென். இன்னாதான்யா ப்ரச்ன ஒங்ளுக்கு? பெர்ய பெர்ய கையெல்லாங் நடுங்கினிர்க்கு, தூக்கமில்லாமே மெர்ஸலாய்ட்டு பேஸினிர்குங்கோ. இன்னாடா புடுங்கினுகீறீங்கோனு நம்ளுக்கு ராடு ஏத்றானுவோ. எல்லாங் ஒங்ளமேரி ஆள்ங்கனாலதான்.
வரவர நெம்ப பாய்ண்ட் பாய்ண்டா பேஸ்ரிங்ளாமே, அப்டியா? ஜெனங்களும் அத்த காது குட்த்து கேக்குதாமே? இதெல்லாங் புத்ஸாகீதேயா, எதோ அங்கொன்னு இங்கொன்னுனு ஒங்ளமேரி ஆளுங்கோ சுத்தி நடக்றத பாத்தாச்சும் திர்ந்துங்டா ஸொர்னகெட்ட சோமாறிங்ளானு கத்தினிர்ந்தீங்கோனு லூஸ்ல வுட்டோம். இந்த ஐபிஎஸ் ஆஃபிஸர் வந்தப்றம் ஸீனே மாறிட்ச்சேபானு நம்மொ வஸ்தாதுங்கோ கூடிக் கூடி ஒப்பாரி வச்சினிர்க்குங்கோபா, பாக்கவே படா பேஜாராகீது. அதெப்டி இவ்ளோ சீக்ரம் நம்மொ ஜெனங்கோ ரோசிக்க ஸ்டாட் பன்ச்சி? அப்டி நாங்க பளக்கலையே? ஒன்னியும் பிர்லயேபா. இவ்ளோ காலமா எத்னயோ சம்பவம் பன்ட்டு வரோம், இப்போமேரி யாருங் கேள்வி கேக்லயே? இப்ப இன்னாடானா அல்லா பயலுவலும் அலறிட்ருகானுவோ.
அனிதா கேஸயே எட்த்துப்போம். கஸ்டபட்ற குட்ம்பத்து புள்ள, டாக்டராவ ஆஸபட்ச்சி ஆனா நீட்ல பாஸ்பண்ண முட்யல. சரி கெட்ச்சத பட்ச்சி முன்னேறுவோம் இல்ல டாக்டரேதான் ஆவனும்னா அட்த்த வர்ஸம் நீட் எள்துவோம்னு அந்த புள்ளய நெனைக்கவே வுடாம நம்மொ அல்லக்கைங்கொ வூடுபூந்து அந்த புள்ள மண்டய கய்வி ஒனக்கு சீட்டுக்கு நானாச்சினு கோர்ட் கேஸுனு சுப்ரீம்கோர்ட் வரைக்கும் அலயவச்சி நான்ஸ்டாப் மீடியா கவரேஜ் குட்த்துனே இர்ந்தோம்.
ஏண்டா ஸோமாறிங்ளா கவர்மென்ட் ஸ்கூல்ல ஒய்ங்கா ஸொல்லிகுட்த்துர்ந்தா அந்த புள்ள ஏன்டா நீட்ல ஃபெயிலாவ்துனோ இல்ல நாட்ல இத்தன கோடி புள்ளைங்க நீட் எள்தறப்போ இந்த ஒரு புள்ளைக்கு மட்டும் டைரக்டா டாக்டர் ஸீட் குட்க்க ஸொல்லி எந்த கோர்ட்ரா ஸொல்லப்போவ்துனோ எவ்னயாவ்து கேக்கவுட்டமா? அல்லா ப்ரச்னைக்கும் காரணம் மோடிதானு இன்னா ஜோரா படம் காம்ச்சோம்? ஏண்டா நீட் கொண்ட்டுவந்தது காங்ரஸ் பீரியட்ல கூட்டணில இர்ந்தது நீங்கோ இத்ல மோடி எங்கடா வந்தார்னிட்டு கூட ஒர்த்தனயும் கேக்கவுடாமா ஒர்ரே கோரஸா வாத்யம் வாசிச்சோம்.
நென்ச்சமேரியே சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு வந்த்ச்சி. அய்யோ ஒன் வாய்க்கையே போச்சேமா டாக்டராவேனு ஒலகம்பூரா ஸொன்னியேமா டாக்டராவாம இர்ந்து இன்னாமா பிரயோஜனம்னு ஒப்பாரி வச்சே அந்த புள்ளய கொன்னோம், அதுக்குங் காரணம் மோடிதான்னு எப்பயும்போல ஊதிவுட்டோம். ஒர்த்தனும் ஏன்னு கேக்லயே. இவ்ளவும் பன்னப்றம் நாங்க வந்தா மொதொ கையெள்த்லயே நீட்ட ஒய்ச்சிடுவோம் அந்த சீக்ரெட் எங்ளுக்குதான் தெர்யும், அத்த செய்ய மானம் வெக்கம் சூடு சொரண வோணும் அத்கு ஒர்ரே அத்தாரிட்டி நாங்கேதானு நம்மொ பால்டாயில் ஸ்டார் ஊரெல்லாம் அட்ச்சிவுட்டப்போ இவனுங்ளால ஆவுமா எப்பயாச்சும் ஸொன்னத செஞ்சிர்க்கானுவளானு எவ்னாவ்து கேட்டானா? 350 கோடி குட்த்து பீகார் ஐயிர கூட்யாந்து விளம்பரம் பன்னி வாய்க்கு வந்தத அட்ச்சிவுட்டே பவர்ல ஒக்காந்தமா இல்லியா? ஆட்டுமந்தயாட்டம் டமிளனுவ ஓட் போட்டானுவ்ளே?
ஆனா எண்ணி ஒன்ற வர்ஸத்ல அல்லாமே ரிவர்ஸ் ஆய்ட்ச்சினு பொலம்புதுங்க பெர்ஸுங்க. இத்தனைக்கும் நம்மொ அல்லக்கைஸ் கொத்தடிமைஸ் மீடியா பாய்ஸ் எடுப்பு தொடப்பகட்ட அல்லாருமே ஐபிஎஸ்லாம் ஜூஜூபி அதெல்லாங் ஒரு மேட்டரே இல்லனிட்டு டிவி யூட்டுப்பு டுட்டரு பேஸ்புக்னு பலான பலான பேர்ல டிசைன் டிசைனா தம் கட்டினிர்க்கோம். அப்டியிர்தும் இப்ப ஐபிஎஸ்னு ஸொன்னாலே மொத்தமா அதிர்தேபா, இன்னா மேஜிக் நட்க்குதுனே தெர்லயே? போற போக்க பாத்தா அந்த அண்ணாமலையார் புண்ணியத்ல நம்மொ ஜெனங்கோ நமோ ஜனமாய்டும் போலர்க்கே? ஐபிஎஸ் கூட சேரப்போறதா நம்மாளு ஒர்த்தன் ஸொன்னான் மெய்யாலுமா வாத்யாரே? நம்மொ ஸைடு வர்துனா இன்னா கேப்பீங்கோ, டீல் பேஸ்லாமா?
November 22, 2022 at 11:23
ஐயா! ஐயோ!!
சிரித்து மாளவில்லை, ஆனால் சோகமாகவும் இருக்கிறது, என்ன செய்ய…