இஸ்லாம் + க்றிஸ்தவம் + கம்யூனிஸ்ட்கள் குறித்து, நம்முடைய செல்லமான சித்தப்பா நேரு சொன்னது என்ன?

November 14, 2022

மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.

இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை.

ஆகவே, எனக்கு இந்த அக்கப்போர், இஸ்லாம்-க்றிஸ்தவம் பற்றி அவருடைய கருத்துகள் என்ன என்பவை பற்றியெல்லாம் பேசாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஆசை. ;-)

இருந்தாலும் சாச்சா நேருவும் ஜேஆர்டி டாடாவும் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை ஒருமாதிரி க்விஸ் கேள்விபோலக் கேட்டவுடன்…

வெட்கங்கெட்டவர்கள், நேருவின் பொருளாதார அறிவையும், அனைவரையும் ஓட்டாண்டியாக்கும் ஓட்டுவங்கி ஸோஷலிஸ வெறியையும் துளிக்கூடக் கண்டுகொள்ளாமல்… என்னை நக்கலடிக்கிறார்கள்.

குறிப்பாக ‘டகால்டி’ என்ற பெயரில் சந்தேகாஸ்பதமான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நேருவிய-ஸோஷலிஸ இளிப்பு வாரிசும், அப்பரம்பரைக்காக வக்காலத்து வாங்கி வழக்காடியும் கண்டமேனிக்கும் பா யாத்தும் கீச்சுக் காலக்ஷேபம் செய்து கொண்டிருக்கும் நண்பர்(?) இப்படிச் சொல்லிவிட்டார்!

“இதெல்லாம் அடுத்த மாசம் தானே பேச ஆரம்பிப்பீங்க?”

ஏண்டா என்னை இப்படிச் சீண்டுகிறீர்கள், நேருவின் பல்லக்குத் தூக்கிகளே! :-(

ஆகவே! :-((

-0-0-0-0-0-

“வெளிப் பிரதேசங்களில் இருந்து பாரதத்துக்கு வந்த முஸ்லீம்கள், ஒரு விதமான தொழில் நுட்பத்தையோ அல்லது அரசியல்/பொருளாதாரக் கட்டுமானங்களையோ கொண்டு வரவில்லை… …அவர்கள் வர்க்கபேதங்களையும் நிலப்பிரபுத்துவத்துவ நோக்கையும் கொண்டிருந்தார்கள்…

…அவர்களுடைய தொழில் கட்டுமானங்களும், தயாரிப்பு/உருவாக்க முறைமைகளும் அக்கால பாரதத்தில் ஏற்கனவே இருந்த முறைமைகளுக்குப் படி நிலையில் கீழே இருந்தன…”

“இஸ்லாமும் க்றிஸ்தவமும் முரட்டுத்தன/ஆக்ரோஷமான மதங்கள்…” (இதை அவர் சொன்னது ‘சிலுவைப் போர்கள்’ தொடர்பான விஷயம்; ஆனால், ஒருபோதும் ஹிந்துமதத்தை இப்படிச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.)

(சீனாவை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட்கள், பாரதத்தையும் எதிர்த்தபோது, 1959 வாக்கில் நேரு சொன்னவை)

” …கம்யூனிஸ்ட்கள் இந்தியர் அல்லர்… அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை – அவர்களுக்கு இந்தியரற்ற மேலதிகாரிகளும் அறிவுரையாளர்களும் இருக்கின்றார்கள்… அவர்களுடைய குறிக்கோள்கள் இந்தியமற்ற [இந்திய எதிர்ப்பு] தன்மை கொண்டவை…

..நீங்கள் ஏன், நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் உங்களுடைய கொடிக்குரிய தேசத்துக்குப் போய் வாழக் கூடாது?”

…இன்று வரை அவர் சொன்ன மேற்கண்ட விஷயங்கள் 100% சரிதான் என நான் ஒப்புக் கொள்வதில் எனக்குப் பிரச்சினையேயில்லை.

நன்றி, சாச்சா அவர்களே!

-0-0-0-0-


மேற்கண்ட ஸ்னிப்பெட்டுகளோடு சேர்த்து, அடியேன், நேரு புகழ்பாடிய ட்வீட்டுகள்.

twitter.com/othisaivu/status/1153346024905170944

twitter.com/othisaivu/status/1364978466446217217

குழந்தைத் தனமான டகால்டிகளுக்குக் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

சாச்சா நேரூ கி… ஜெய்!!

-0-

2 Responses to “இஸ்லாம் + க்றிஸ்தவம் + கம்யூனிஸ்ட்கள் குறித்து, நம்முடைய செல்லமான சித்தப்பா நேரு சொன்னது என்ன?”


  1. கண்கள் பனித்தன :-)

    Kindly delay resumption of regular programming.

  2. Kannan Says:

    India Un Bound ;)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s