“புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா? ” – தமிழகத்தின் போக்கற்ற இளைஞப் போராளிப் பொறுக்கிக் குளுவான்கள், குறிப்புகள்

October 10, 2022

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன்.

ஆகவே.

1

இவன், இன்னொரு சீமானிய சாமான் அரைகுறை அவ்வளவுதான். வயது 26-27 இருக்கலாம். என்னுடைய பழைய ‘மாணவன்.’ தனிப்பட்ட முறையில் (இவனுடைய தந்தையார் என்னிடம் கேட்டுக் கொண்டதால்) இவனுக்குக் கணிதம்(!) கற்பிக்க(!!) முயன்றிருக்கிறேன் – சுமார் ஒரு வருடத்துக்காவது வாரம் இருமுறை,  ஒரு முறைக்கு ஒன்றரை மணி நேரம். முடிந்தவரை ஆத்மார்த்தமாக – ஏனெனில் பலப்பல நாட்களில் எனக்கும் சலிப்பாகத்தான் இருந்தது, ஏண்டா ஒப்புக்கொண்டோம் என்றாகி விட்டது.

ஆகவே, முடியவில்லை; வெட்கங்கெட்டுத் தோற்றேன், இளைஞனும் தேர்வில் தோற்றான். பிரச்சினை என்னவென்றால் – சோம்பல்.

அதைவிட முக்கியமாக – தன் அற்பத்தனங்களுக்கு, போதாமைகளுக்கு, முட்டாள்தனங்களுக்கு, கேடுகெட்ட சோம்பேறியத்துக்கு, தன்முனைப்பு என்பதற்கு கிட்டவே போகாதமைக்கு, மகத்தான அறியாமைக்கு – சதா பிறரைக் குற்றம் சொல்லும் திராவிடமாடல்தனம்,

 பின்னர் தமிழ் தேசியத்தனம். விஜய்-சூர்யா போன்ற அரைகுறைகளின் படக்குசுக்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதில் இருக்கும் தீவிரம், தினமும் அரைமணி நேரமாவது உபயோகமாகச் செலவழிப்பதில் இல்லவேயில்லை.

பிஎஸ்ஸி (கணிதம்) ‘படிப்பில்’ ஏகத்துக்கும் ‘அர்ரியர்ஸ்.’ அவன் அப்பனார், வேறு வழியேயில்லாமல்(!)  ‘பேப்பர் சேஸிங்’ என்றெல்லாம் முயற்சித்தேன் என்று சொன்னார். ஆனால் – ஒன்றுக்கும் உபயோகமில்லை. லஞ்சம் கொடுத்ததுதான் மிச்சம்.

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின், அவனை சென்ற டிஸெம்பர்2021 வாக்கில் சந்தித்தேன். அதற்குள் அவன் திராவிடம் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, சீமான் பின்னால் அலைய ஆரம்பித்திருந்தான். எதற்கெடுத்தாலும் ஆரிய-பார்ப்பன-வடவ-தெலுங்க சதி. அம்பானி-அடானி அடாவடி.. மீத்தேன் அரக்கன்.ந்யூட்ரினொ ராக்கதன். அணுவுலை, சந்ததிக்குச் சமாதி. கண்களில் வெறுப்பிய மினுமினுப்பு. வாயோரத்தில் நுரைதள்ளல்.

ஆகவே கண்டு பிடித்திருக்கிறான். “கணிதத்தில் இருக்கும் பார்ப்பன நுண்ணரசியல்” எனும் அலாவுத்தீனின் விளக்குபூதத்தை. அதனால் தான் அவனுக்குப் பாவம் படிப்பறிவில் அவ்வளவு விருப்பம் இருந்தாலும் பிஎஸ்ஸி (கணிதம்) முடிக்க முடியவில்லையாம், ஏனெனில் கணிதத்தில் கால்குலஸைத் துளைத்தேழ் மேட்ரிஸீஸ் புகுத்தி ஒடுக்கி-நசுக்கி-தேய்த்து விட்டார்கள் பாவிப் பார்ப்பனர்கள் . ‘சரி. அப்ப வேற எத்தையாவது பிஏ எம்ஃபில் பிஹெச்டி எனச் சல்லீஸாகச் செய்வதுதானே’ என்றதற்கு ‘எனக்குத் தேவையானால் நானே நாம்தமிழர் பாசறையில் படித்துக் கொள்வேன்…’

சரிதான், நல்லவேளை பெரியார் மாடல் எனும் புதைகுழியிலிருந்தாவது வெளியில் வந்தானே என மகிழ்ந்தேன்.

எது எப்படியோ… என்னிடம் இம்மாதிரிச் சொன்னபோது – நான் என் செல்லங்களில் ஒருவரான அந்தக்கால ஆர்யப(ட்)டர் பிராஹ்மணர் அல்லர் என்றேன். அவன் சொன்னது “அதனால் என்ன, அவன் பாப்பானுக்குக் கூழைக் கும்பிடு போட்ட அடிவருடி.”  சரி. ‘சீமார் மாடல்’ என்றால் என்ன எனக் கேட்குமளவுக்கு என்னிடம் சக்தியிருந்திருக்கவில்லை.

…எனக்குக் கோபமும் வரவில்லை, வெறும் வருத்தமும் – வாழ்நாளில் கணிசமான ஒரு பகுதியை அவன்மேல் வியர்த்தம் செய்ததற்கும் என் மேல் எனக்கே ஏற்பட்ட சுயவெறுப்புதான். மேலும், என்னால் ஒரு இளைஞன் காயடிக்கப் படுவதைக் கூட, ஒரு வருடத்துக்கு மேல் மல்லாடியும் தடுக்க முடியவில்லை என்கிற போதாமையுணர்ச்சிக் கழிவிரக்கம்.

2

இதற்குப் பிறகும் நான் படிப்பினைகளைப் பெற்றேனா என்றால் இல்லை.

இதற்கு ஒரு காரணம், சிலமாதங்களுக்கு ஒருமுறை, பயணத்துக்கான காரணங்களைக் குவித்துக்கொண்டு, பள்ளி செல்லும்போது, அவன் தகப்பனையும் ‘மரியாதை நிமித்தம்’ பார்ப்பேன். அவர் ஒரே அழுகை, தொல்லை; பாவம். “பையன் வெட்டியா சுத்திட்ருக்கான், பாப்பாவுக்கு கல்யாணம் கட்டணும், வரன் பாத்துட்ருக்கோம், உங்க ஸ்டூடண்டுக்கு ஏதாவது உதவி செய்யுங்க…”

அவன் ஓரளவு தமிழ் எழுத, படிக்க என அறிந்து கொண்டிருந்ததால் (இதற்கு நான் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாமென நினைக்கிறேன்), வழக்கமாக நான் இளைஞர்களிடம் சொல்வது போல, “ஏதாவது காத்திரமாக எழுதேன், ஏழரைகள் மட்டுமே படிப்பார்கள் என்றாலும் நான் போடுகிறேன்.”

அல்லது “என் தொழிலதிப நண்பர்கள் யாரிடமாவது சொல்லி ஏதாவது மெஷின் ஆப்பரேஷன், ஸிஎன்ஸி எனக் கற்றுக்கொண்டு முன்னேறலாமே, சும்மா வீட்டில் உட்கார்ந்து அப்பன் சோற்றைச் சாப்பிட்டு வெளியே போராளி அரசியல் செய்வதற்குப் பதிலாக…”

அவன் வழிக்கு வரவில்லை. ஆனால்  “ஊடகம் எதிலாவது பணியாற்றலாம், எனக்குச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன…”

..சொல்வதற்கு? ப்ளடி.

பொதுவாகவே நம் இளைஞர்களுக்கு (அதுவும் ஓரளவு படிக்க/பார்க்க/கேட்க எனத் தெரிந்துவிட்டால்) சுமார் 20 வயதிலிருந்தே உலகத்துக்குச் சகலதுறைகளிலும் போதனை அளிக்க அவர்களுக்கு ஒரு முக்கியமான, தனிப்பெறும் தகுதி வந்துவிட்டதாக எண்ணி விடுகிறார்கள். (இவர்களுக்குத் தற்கால எடுத்துக் காட்டுகள்: ரெண்டுமணி நேரம் இணையத்தை மேய்ந்து விட்டு அல்லது ரெண்டு புத்தகம் படித்துவிட்டதால் எந்தத் துறையிலும் திடீரெக்ஸ்  வல்லுநராகி விட்டதாகப் படு தெகிர்யத்துடன் நம்பும்,  வீம்பு மிக்க, எள்ளி நகையாடத்தக்க இளைங்கர்கள் – ‘பேசுதமிழாபேசு’வில் பேசுவேலை செய்யும் சரவணன், ‘வலையொளி மகிழன்’ அசோக் போன்றவர்கள்)

என் நாக்கில் (லும்) சனி.

“சரி தம்பி, எனக்கும் மின்னியல், பொறியியல், இயல்பியல், அணுக்கருசக்தி,  சங்ககாலம், கல்வி அப்படி இப்படி என்று சிறுசிறு ஆனால் தரமான விடியொக்களை வெளியிடலாமா என ஓரமாக ஒரு எண்ணம் இருக்கிறது. நீயும் படித்திருக்கிறாய். நாம் இருவரும் உரையாடுவது போல அல்லது ஏதாவது கைவேலை செய்வதுபோல 7-8 நிமிட விடியோக்களை வெளியிடலாமா? தயாரா?  நம் விடியொக்களை அதிகபட்சம் 200-300 பேர், அதுவும் ஆறுமாதக் கணக்கில் பார்த்தால் அது போதுமானது. முதல் 8 மாதங்களுக்கு நான் மாத சம்பளம் என 15, 000 கொடுக்கிறேன். ஆனால் நீதான் அதற்கு முழு பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு நீயே அந்தத் தளத்தை ஓட்டலாம் அல்லது வேறு எங்காவது போகலாம் – அதாவது, அந்த அனுபவம் உனக்கு உதவியாக இருக்குமானால்…”

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. (இப்போது ஆர அமர யோசித்தால், பல வருடங்கள் முன், ‘வீட்டுக்கு வா, கணிதம் சொல்லிக்கொடுக்கிறேன்’ என்று நான் சொன்னபோதும் உடனடியாக அவன் முகம் பளிச் என்று ஆனது நினைவுக்கு வருகிறது)

இரண்டு மூன்று நாட்கள் உட்கார்ந்து ஒரு பெரும்பட்டியல் தயாரித்தோம் – ஹ்ம்ம், நான் தான் இதற்கு கணிசமான உழைப்பைக் கொடுத்தேன். என்னென்ன பேசலாம், எப்படிப் பேசலாம், தரத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே செய்தாகவேண்டிய வேலைகள், டைம்லைன்கள், வழிமுறைகள் என….

பின்னர், அவனுடைய ஐடியா:

“முதலில் உங்கள் ஒத்திசைவு தளத்தை மெருகேற்ற(!) வேண்டும். அதனை டெவலப் செய்யவேண்டும். எனக்கு ஒரு வாரம் கொடுங்கள்…” (அவனுக்கு முன்னமேயே இந்த மாதிரி வெப்-பேஜ் டிஸைன் அதுயிது எனக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேன் – அவனும் கொஞ்சம் முனைந்து மேலதிகமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றான்)

சரியென்றேன். அவனிடம் என் வேர்ட்ப்ரெஸ் தளத்திற்கான அனைத்து விஷயங்களையும் கொடுத்தேன். (யூஸர் நேம், பாஸ்வேர்ட், ஜிமெய்ல் விவரங்கள் உட்பட) – இது ஜனவரி 2022ல் நடந்தது.

விளைவுகள்:

1. வரைவில் இருந்த (50-80% முழுமையடைந்தவை)  சுமார் 600 பதிவுகளை மொத்தமாக நீக்கினான்.

2. மொத்தமாக 2011-ல் ஆரம்பித்து, சுமார் 1500 பதிவுகள் போட்டிருப்பேன் – இவற்றில் சுமார் 450 பதிவுகளை அகற்றினான். இவற்றில் பலப்பல திராவிட/திமுக + ஜிஹாதிகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவை. கிண்டல் செய்பவை.

3. ஏதோ ப்ராட்கேஸ்ட் கணக்காக இருந்த ஃபேஸ்புக் அக்கௌண்டுக்கும் அதே கதி. (நல்லவேளை ட்விட்டர் கணக்கு விவரங்களை அவனுக்குக் கொடுக்கவில்லை)

“நீங்க இப்ப என்ன செய்வீங்க எனப் பார்க்கிறேன். முழுவதையும் அழிக்கப் போகிறேன்.”

ஏன் எனக் கேட்டால் – ஒர்ரே பைத்தியக்காரப் புலம்பல். “நீங்க திராவிடம் சீமான் அயோத்திதாசர் பற்றியெல்லாம் எழுதியது பிடிக்கல. நீங்க ஆரிய வந்தேறி. தமிழர்கள தொடர்ந்து நசுக்கறீங்க! ஹிந்துத்துவாவ ஒழிக்கணும், உங்க எல்லாரையும் தமிழ் நாட்டை வுட்டு தெர்த்தணும்…”

ஆச்சரியமாகி விட்டது, நான்கைந்து வருடங்களுக்குள்ளேவா இந்த திராவிட-தமிழ்தேசிய வெறி ரேபீஸ் நாய்க்கடிகள் இவ்விதமான வெறுப்பிய மாற்றங்களை ஏற்படுத்தும்?

மாற்றங்களை அறியாமல் நான் அவனைக் கடிந்து கொண்டபோது, “என் அப்பாரு கிட்ட சொன்னா தூக்கு போட்டுக்குவேன். ஆனாக்க நீங்க மன்னிப்பு கேட்டா பேசாம எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுவேன்…” (மனப் பிறழ்வோ என்ன எழவோ! தமிழ்த்தேசியமாகவோ திராவிடமாகவோ கூட இருந்திருக்கலாம்!)

நான் தவறு செய்திருந்தால்தானே மன்னிப்புக் கேட்பதற்கு. ஆகவே, “முட்யவே முட்யாத், நீ செய்யறத செஞ்சிக்கோ பையா…” எனச் சொல்லி விட்டேன்.

அதனால் அவனுக்கு ஆச்சரியம். “நெஜம்மாத்தான் சொல்றீங்க்ளா?”

“ஆம். நீ செய்வதைச் செய்துகொள். என்னுடைய சுயபிம்பத்தில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஒத்திசைவு ப்ளாக். அது போனால் மயிராப் போச்சு என விட்டுவிடுவேன்…”

சுமார் மூன்று-நான்கு வாரங்கள் இப்படியே கழிந்தன என நினைவு. அந்த சமயத்தில் நான் இட்ட இரண்டு ட்வீட்கள்:

கடைசியில் எனக்கும் பொறுமை எல்லை மீறிப் போனதால், வீம்பு ஆரம்பித்தது: “தம்பீ, நீங்க ரெண்டு நாள்ல திருப்பிக் கொடுக்கலேன்னாக்க, நேராக உன் அப்பாரு கிட்டத்தான் பேசப்போறேன்; அப்புறம் தூக்குல தொங்குறதோ தொங்காததோ உங்க இஷ்டம். “

அடுத்த நாளே அனைத்தும் திரும்பி வந்துவிட்டன; ஆனால் அழிக்கப் பட்டவை அழிக்கப் பட்டவைதாம். அவற்றை வேர்ட்ப்ரெஸ் காரர்களிடம் இருந்து திரும்பப் பெற முடியவில்லை. அவர்களுடைய பேக்-அப் களில் கோளாறு – மேலும் எனது தளம் அதுவரை ‘ஓஸி’ தளமாகத் தான் இருந்தது…

சுபம்.

இந்தக் கதையின் சில பகுதிகளை ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.

…ப்ளாக் பயங்கரவாதம் தொடர்கிறது… February 19, 2022

(அவன் பெற்றொர்களைப் பிறகும் ஓரிரு முறை பார்த்தேன், ஆனால் அந்த சமயங்களில் அவனுக்கு ‘ஏதோ அர்ஜெண்ட் வேலையா பாண்டி போய்ருக்கான்.‘ சரிதான்!)

3

இப்போது அந்த இளைஞனுடைய கேள்விகளுக்கும் உளறல்களுக்கும் வருவோம். வசைகளை லூஸ்லவுடுவோம்.

// என்னா முட்டு

முட்டும் இல்லை, குட்டும் இல்லை. நான் எழுதியிருப்பவை ஆவணபூர்வமாக, சர்வ நிச்சயமாக நிரூபிக்கக் கூடிய உண்மைகள்.

எப்படியும் உங்கள் தமிழ்தேசிய + திராவிடப் பொறுக்கிகளுக்கு இவையெல்லாம் விளங்கமாட்டா. ஏனெனில் நீங்கள் உங்கள் பொறுக்கிக் கதையாடல்கள் போலவே தான் பிறருடைய வாதங்களும் இருக்கும் என அறியாமை + கீழ்மை காரணமாக நம்புபவர்கள்.

பௌத்தம், சமணம்,சீக்கியம் எல்லாம் ஹிந்து மரபுகள் மட்டுமே.

// புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா?

இல்லவே இல்லை. ப்ராஹ்மணர்களை கோதமர் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார். (பொதுவாகவே சதுர்வர்ணர்களையும் அப்படியே தான் அணுகினார் – ஏனெனில் புத்தர் ஜாதிபேதம் பார்த்தவர் தாம் – அந்தக் காலத்தில் ‘லிபரல்’ எனச் சொல்லி மினுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை, பாவம்!)

சொல்லப் போனால், பௌத்தத் த்ரிபிடகத்தின் ஒரு முக்கியமான அங்கமான குலகம்மவிபங்கஸுத்த-வில் அவர் தெளிவாகச் சொல்கிறார். ப்ராஹ்மணர்களுக்கு அவர்கள் தொழிலில் உதவி செய்பவர்களுக்கு அடுத்த பிறவி நல்லதாக அமையும். (பிற விஷயங்களும் இருக்கின்றன, கீழே பார்க்கவும்!)

// பாப்பாருங்கடானடா சனாதனம்

இல்லவே இல்லை. ப்ராஹ்மணர்கள் மட்டுமே ஸனாதனத்தின் போஷகர்கள் அல்ல.

ஸனாதன தர்மம் என்பது ஒரு வகுப்பினருக்கோ ஜாதியினருக்கோ வர்ணத்தினருக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. எந்த ஒரு பாரதக் குழுவும் அதற்குத் தனியுரிமை கொண்டாட முடியாது. மாறாக நம் ஹிந்து/ஸனாதனப் பாரம்பரியங்கள் ஊர்கூடித் தேரிழுத்ததால் மட்டுமே பொலிந்தவை, பொலிபவை.

பலப்பல வேதகால ரிஷிகள் ப்ராஹ்மணர்கள் அல்லர். ராமாயணம் எழுதிய வால்மீகியும் கம்பரும் ப்ராஹ்மணர்களில்லை.

ப்ராஹ்மணர்களும் ஸனாதன தர்ம பாரம்பரியங்களின் ஒரு அங்கம்.

ஆனால் ஒரு விஷயம்: இந்த ஜாதி முறை என்பது கடந்த சுமார் 2000 ஆண்டுகளாக மட்டுமே நடைமுறையில் இருக்கிறது, இறுகியும் இருக்கிறது.

இன்னொரு விஷயம்: இந்த ஜாதி, வர்ணம் போன்றவை பற்றியெல்லாம் அடிப்படைகள் புரியவேண்டுமென்றால் நீங்கன் நிறையப் படிக்கவேண்டும், பாரதீயர்களை அவதானிக்கவேண்டும்.

வெறும் திராவிட தமிழ்தேசிய குப்பைச்சட்டியில் வீரமண்குதிரை, அதுவும் வெள்ளிமூக்குக் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் ஒன்றுக்கும் தேறாது.

// அதனாலதாண்டா பாப்பானுங்க ஒழியணும்னு சொல்லறஓம்,

நன்றி. என் மேல் உங்களுக்குக் கோபம் இருக்கலாம் – ஏனெனில் உங்களுக்குக் கணிதம் புகட்ட, உங்கள் குடும்பத்தினருடன் பேச-கொள்ள, உங்களைப் பற்றிக் கவலைப்பட என நிறைய நேரம் செலவு செய்திருக்கிறேன் அல்லவா?

…ஆனால், அதற்காக, ஒரு மக்கள் திரளையே ஓழிப்பேன் என்பது, அசிங்கமான தமிழ்தேசிய திராவிடத்தனம். அப்படியொரு சாத்வீகித் தந்தைக்கு, இப்படியொரு சாதிவெறி மகனா?

வேண்டுமெனில் உங்கள் தகப்பனாரிடம் பேசிக் கொள்ளவும் – ஏனெனில் உங்கள் மனச்சாட்சி என்பது மக்கர் செய்கிறது, அது ஸெல்ஃப் எடுக்கவில்லை.

// அப்பதாண்டா சனாதனம் ஒழியுங்கறோம்

மன்னிக்கவும். அது ஒழியவே ஒழியாது. மாறாக, பொலியுமது.

ஓரிரு தெருப்பொறுக்கிகள் (உங்கள் சீமார் திருமா உட்பட) வாய்க்கு வந்ததுபோல உளறிக் கொட்டுவதால் ஒரு பயனும் இல்லை – என்ன, உங்கள் பொழுது போகலாம், அவ்வளவுதான்.

// சொந்தபேர்ல வாடா

முதலில் உங்கள் பெயரை இடுங்கள்.

நான் வெகு சுலபமாக உங்கள் பெயர் முகவரி ஆதார் எண் என அனைத்தையும் கொடுக்க முடியும். அதேபோல, நீங்களும் எனக்குச் செய்ய முடியும். ஆனால் உங்களைப் பகிரங்கமாக அசிங்கப் படுத்துவது என் நோக்கம் அல்ல. எப்படியும் நீங்கள் என்னைப் பற்றி (தொலைபேசி எண் உட்பட) விவரங்களை வெளியிட்டாலும் ஒரு பிரச்சினையுமில்லை. Fact is that, nobody cares for small fries. At all. So do whatever you want.

மேலும், உங்கள் லீலைகளை உங்கள் பெற்றோரிடம் ருசுவுடன் சொன்னால் – அது என்னவாகும் என்பதை நினைவில் நிறுத்தவும். ஆனால், தகப்பனையே குடிவெறியில் அடிக்கும் உங்களைப் போன்ற அயோக்கியக் குப்பைகள் இருந்தால் என்ன செத்தால் என்ன.

இளைஞர்கள் ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்வார்கள், ஏன் வயது வந்தவர்களே செய்வார்கள் – ஆனால் தொடர்ந்து, திரும்பித் திரும்பித் தவறு செய்வது சரியல்ல. மீண்டும் மீண்டும் குளவிக்கூட்டில் கைவைக்க வேண்டா. குளவியின் பொறுமைக்கும் ஒரு அளவுண்டு.

இதனைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவும்; உங்கள் எதிர்காலத்துக்காகவும் தான் நான் சொல்கிறேன். இன்னொரு முறை இந்தத் தளம் பக்கம் வரவே வேண்டாம், உளறியும் கொட்டவேண்டாம்.

வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாகச் செய்யவும், பெற்றோருக்குப் பாரமில்லாமல் இருக்கவும் – அவர்களுக்கு உபயோகமாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் செய்யவேண்டாம்.

உலகின் மூத்தகுடி பெருங்குடி எல்லாம் தமிழன் தான், சரி – அதற்காக மொந்தைமொந்தையாக மொடாக்குடி குடித்துவிட்டு தமிழ்தேசியத்தனமாகப் பெற்றோர்களையே மொத்த வேண்டாம்.

உங்களைப் போன்ற நன்றிகெட்ட திராவிட தண்டக்கருமாந்திரங்களை வீரமிலா நாய்கள் எனச் சொல்லி நாய்களைக் கேவலப் படுத்த விருப்பமில்லை.

மற்றபடி உ ங்கள் உத்தரம், உங்கள் தூக்குக் கயிறு.

முன்னதாக நாக்கைப் பிடுங்கிக் கொண்டால் அதுவும் சரியே!

நன்றி.

19 Responses to ““புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா? ” – தமிழகத்தின் போக்கற்ற இளைஞப் போராளிப் பொறுக்கிக் குளுவான்கள், குறிப்புகள்”

  1. ஏழரை Says:

    //எனக்கும் மின்னியல், பொறியியல், இயல்பியல், அணுக்கருசக்தி,  சங்ககாலம், கல்வி அப்படி இப்படி என்று சிறுசிறு ஆனால் தரமான விடியொக்களை வெளியிடலாமா என ஓரமாக ஒரு எண்ணம் இருக்கிறது.//
    எனது நீண்டநாள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஐயா, இப்படியோர் கொடுங்கதையைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதுவும் ஒரு தும்பியின் கைங்கர்யத்தால் இத்தனை சேதாரங்கள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.


    • இளம் ஐயா, நன்றி. (உங்களைப் போன்ற இளைஞர்களும் இருக்கிறார்கள்தாம், ஆகவே பொத்தாம் பொதுவாகத் தலைப்பை, ஏதோ இளைஞர்கள் அனைவரும் உதிரிகள் எனச் சித்திரித்து வைத்திருக்கக் கூடாது; மன்னித்து விடுங்கள்;  தொண்டு கிழவர்களும் கிழத்திகளுமே அப்படி அலைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில்… தமிழிளைஞ செவ்விளைஞர்களைக் கரித்துக் கொட்டுவது தகாது. கூடவே, ‘இந்திரா பார்த்தசாரதி‘ நினைவுக்கு வருகிறார்.)

      ஆனால் என்னுடைய சொந்த, செல்ல அதிர்ச்சி என்னவென்றால் நான் இப்படியொரு முட்டாக்கூவானாக இருந்திருக்கிறேன் என்பதுதான். இதற்கு நான், என்னை நம்பிவிடுவது முக்கியக் காரணம்.

      அந்தத் தும்பித்தம்பியைச் சொல்லியும் குற்றமில்லை. அவருடைய மனோவியல் கண்டிஷனுக்கும் என்னுடைய கையறு நிலைமைக்கும் தோதாக ஏதாவது ஹோமியோபதி பல்லிப்புழுக்கை இருந்தால் கொடுக்கவும். (பல்லிப் புழுக்கையில் இரண்டு முக்கியமான பாகங்கள் – வெள்ளைச் சிற்றுருண்டை, கறுப்புப் பேருரண்டை செவ்வுரண்டை; இதில் வெள்ளை பாகத்தைத் தான் குறிப்பிடுகிறேன் – அதுதான் பல்லிகளின் ‘சிறுநீர்’)

      இப்படிக்கு:

      சேராதயிடம் சேர்ந்து சோர்ந்த பல்லிப்படைச் சிற்றுரண்டை கண்ட சேரன்.

  2. Kannan Says:

    Moral of the story is don’t help others, it is a thankless job.

    Early on, a friend and I tried to help a poor boy to setup a mobile tea business on the condition that he should repay the amount without interest. We bought a cycle, drum and few other items.

    He never showed up after that. Finally we tracked him down to shanty part of the area. We were surrounded by a mob and finally managed to escape with only bruised ego.

    We wrote of the 2k as bad loan and forgot the episode.

    Kannan

    PS: Years later I ran into the same guy, now a teenager, and he greeted me as if nothing has happened.


    • 😳 but, bleddy suits you guys for having encouraged child labour.

      grr

      • Kannan Says:

        Guilty as charged, but give credit for trying to create a young suckerberg.


      • Yes, I appreciate the cheerfulness with which you reveled in your terrible guilt.

        But then, I do not consider ‘child labor’ as inherently bad or evil.

        There is a suckerberg born every minute. Only thing is that most of them stay small. Like I.

      • Kannan Says:

        Don’t kick yourself for being too helpful. Life’s second half is real bad from what I see and hear. Atleast you won’t regret for being a good person while waiting for the inevitable lying in the bed.

        Cheers/-


      • hmm. point taken, of course.

        but my current plans are not to be bed-ridden but move on cheerfully and if not, just fold up and mix with the cosmic background noise.

        (once I saw a documentary (or am imagining?) in which, an old, ancient elephant after losing its fifth set of teeth or so – and really hungry because it can’t eat because of that – just fold up, die and slowly fall down as if in a slow motion trance; without a whimper or a trumpeting to announce the last seconds. It was at once poignant and exhilarating… the finale of mukti and merger with rta)

        May be I am imagining. Dunno.


  3. ‘தனிப்பட்ட முறை’யில் தொடர்பு கொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டவர்களுக்கும், தொடர்பு கொள்ளாமல் இறும்பூதடைந்தவர்களுக்கும் நன்றி.

    வாடிக்கை(!)யாளர்களுக்கு ஒரு நல்ல (=கெட்ட) செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

    அகற்றப்பட்ட சுமார் 450-500 பதிவுகளில், சுமார் 15-20 போலத் தவிர அனைத்தும் ஆர்கைவ் தளத்தில் இருக்கின்றன, https://web.archive.org/

    என்ன, அதில் ஃபார்மேட்டிங் சிறிது போயிருக்கும் – அவ்வளவுதான். முடிந்தபோது அவற்றைத் திரும்பிக் கொணரப் பார்க்கிறேன். கர்மா. தேவையா?

    (வேலையற்ற வேலை; ஏதோ தொலைந்த எட்டாம் நூற்றாண்டு மிச்சச் சங்கயிலக்கியத்தை மீட்டு, சர்வ நிச்சயமாக, 100% சங்கயிலக்கியம், தமிழர் பண்பாடு எல்லாம் ஹிந்துக்களுடையதே + ‘சங்க இலக்கியங்கள்’ எல்லாம் 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் ரூம்பு போட்டு ரோசிச்சி உருவாக்கப் பட்டவையே என நிரூபிக்கப் போவது போல் (…மிச்சம் கிடைக்காமலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே எனச் சொல்லிக்கொண்டு வராதீர்கள்) அப்படியொரு ப்ளடி பில்ட் அப்)

  4. ஏழரை Says:

    ஐயா, என்னைப் பொறுத்தவரை “தமிழகத்தின் போக்கற்ற இளைஞப் போராளிப் பொறுக்கிக் குளுவான்கள்” என்பது மிகச்சரியான தலைப்பே.

    // தொண்டு கிழவர்களும் கிழத்திகளுமே அப்படி அலைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில்//
    இந்த மேனாமினுக்கிகளின் குறிக்கோள் தங்களையொத்த மலிவுவிலை தற்குறிக் கூவான்களை உருவாக்குவதே, போராளிக் குளுவான்களின் வாழ்வோ மேற்கண்ட உயிரினங்களின் அவயங்களைப் பற்றித் தொங்கிக் கூச்சலிடுவதிலேயே கழிகிறது. அப்படியிருக்க தலைப்பை நொந்து என்ன பயன்?

    அந்தத் தும்பி புரட்சி ரீங்காரமிடுவதாய் எண்ணிக்கொண்டு புழுக்கள் நெளியும் வஸ்துவைச் சுற்றிவந்ததை உணரும் நாளில் (அதுவரை முழுமையாகக் காயடிக்கப்படாமல் தப்பினால்) தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.

    //அகற்றப்பட்ட சுமார் 450-500 பதிவுகளில், சுமார் 15-20 போலத் தவிர அனைத்தும் ஆர்கைவ் தளத்தில் இருக்கின்றன.//
    மிக்க மகிழ்ச்சி, தயவுசெய்து சமயம் வாய்க்கையில் அவற்றை மீள்பதிவிடுங்கள், நன்றி🙏🙏

  5. Rajmohanbabu Mani Says:

    மிகச்சிறந்த ஆசிரியரின் அருகாமை கிடைத்தும் பயன்படுதத இயலாத அந்த இளைஞனின் மனநிலையை என்ன என்று சொல்வது. வாழ்க்கையில் தேவைபடுபவருக்கு இது போல் அமைவதில்லை.


    • 😳, thanks for the kind words, Babu Saheb, but I was merely stupid. (also have learnt from experience or so one hallucinates!)


    • Here the teacher is that boy and the student is our ramasamy sir. He learnt lesson


      • Sir, thanks. I am not sure about the longevity of ‘lesson learnt’ though! Life is lived on hopes.

        I also think about the way I have let down my teachers (actually quite a few of them – both maanasika & kaayika/pratyaksha, who wanted me and/or urged me to do this and that at various points of time) in good-faith & out of affection for me – by going against what they said. Sometimes I have even fought pitched-battles with them, but never impolitely or whatever. I do not think I have effectively learnt all the bounties from them. Still, is it easy for me blame it on Karma? Ars longa vita brevis. It is also galling to the see the carbon-copy repetitions of certain historical cycles, and of course, of the ‘human condition’ so-called.

        I do not think I had affection for the lad – though was concerned about him. And I know I have not even sought to pass on even 10% of the things that my teachers have tried to pass on to me.

        Anyway. Quite flows the Ganga.

  6. RC Says:

    நம்ப முடியவில்லை.Blind spot may be? don’t know, எல்லாம் முருகன் செயல்ன்னு போறது suits me,உங்களுக்கு நான் என்ன சொல்லமுடியும்? அவனவன் நல்ல வாத்தியார் தேடி தவிக்கையில் இப்படி ஒரு இளைஞன்!


    • ஐயா, இங்கேயே ‘Optimus Prime’ என ஒருவர் இட்டிருக்கும் பின்னூட்டச் சத்துக்கு இருக்கும் பதிலையும் பார்க்கவும்.

      உங்களுக்கும் நன்றி. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – தமிழ்ப்படக் கேளிக்கையாளக் கோமாளிகளுக்கு அப்பாற்பட்டு, அங்கிருந்தே உதித்து நாம்தமிழராகியிருக்கும் சீமானின், நம் இளைஞர்களின்மீதான, திராவிடர்களுக்கும் அப்பாற்பட்ட கிடுக்கிப் பிடி – முன்னமே அனுமானித்த விஷயம் என்றாலும் எப்போதுமே கொஞ்சம் திகைக்க வைக்கிறதுதான். பலப்பல விதங்களில் நாட்ஸி கட்சியின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.

      #3. இது ஒரு கவலை: சீமான்கள் அமோகமாகக் கிண்டல் செய்யப்படுகிறார்கள் என்றாலும், எனக்கே அவர்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா என்றாலும் – என் ஊர்ச்சுற்றல்களில் எனக்குப் படுவது என்னவென்றால், வேலைவெட்டியற்ற விசிலடிச்சான் குஞ்சப்பத் தமிழ் இளைஞர்கள், மேலும்மேலும் சீமான் வகையறாக்கள் பின்னால் அணி திரள்வது அமோகமாக நடக்கிறதோ, அல்லது இது என் தொடரும் பிரமையா? (பார்க்க, இன்னொரு சீமார் பதிவு: இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு! 27/11/2013)

      …ஏனெனில் திராவிடத் தலைவர்கள் (இந்தத் திராவிடத் தலைவர்களின் பேரணியில் நான் திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களைக் கூட நிச்சயம் இணைப்பேன்) அனைவருமே நம்பகத்தன்மையைப் பெரும்பாலும் இழந்துவிட்டார்கள்; ஆக, நீண்டகால நோக்கில் அற்ப வெறியாளர்களிடம், உதிரிகளிடம் நம் இளம் அறியாமைச் சிங்கங்கள் அகப்பட்டுக்கொண்டுவிடக்கூடாதே, வெட்டி வன்முறைப் பாதைகளை அடையக்கூடாதே என்று எனக்குக் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

      இது இப்படியாகாது என்று யாராவது எனக்குச் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். :-(

      https://othisaivu.in/2015/08/04/post-532/

      சரி, சீமார் சொல்கிறார் என்றால், நம் பிள்ளைகளுக்கு எங்கே போச்சு மூளை எனும் கேள்விக்கு என்னிடம் இருந்து பதிலை ஒரு பெருமூச்சாக அளிக்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s