கோதம ‘புத்தர்,’ பௌத்தம் எனும் ஹிந்து/ஸனாதன மார்க்கமொன்று – கேள்விகள், குறிப்புகள்
October 6, 2022
முந்தைய பதிவின் மீதான ஒரு எதிர்வினை குறித்து… (Was ‘Buddhism’ really separate from ‘Hinduism?’ ‘First Sermon of the Buddha in Saranath’ – did it happen at all? – Questions & Notes October 2, 2022)
“பாஷை ஒரு மண்வெட்டி’ என்பது போல ‘ஜேஜே: சில குறிப்புகள்’ நாவலில் வரும். இருந்தாலும், ‘சரியான பதில்கள்’ என்றில்லாமல் இருந்தாலும், முடிந்தவரை என் சக்திக்கு ஏற்ற அளவில் என் கருத்துகளைப் பகிர்கிறேன்; சரியா?
// சந்தேகங்கள் நியாயமானவையா?
ஐயா – சர்வ நிச்சயமாக; வரலாறைப் பொறுத்தவரையும், பொதுவான ட்ரென்ட்ஸ்/போக்குகள் பற்றி ஒருமாதிரி வரையறைக்குள் அடக்கலாம், ஆனால் அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நடந்திருக்கும் விஷயங்களுக்கு, ‘இன்னின்ன காரணங்களால் மட்டுமே இப்படி மட்டுமே நடந்தது’ எனவொரு நேர்க்கோட்டு விளக்கம் கொடுப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் மட்டுமல்ல, நேர்மைக்கும் அது புறம்பானது என்பது என்னுடைய கருத்து. பல விஷயங்களில் நம்முடைய நிலை குஞ்சரம் தடவிய குருடர் கூற்று எனத்தான் நம் நிலைமை இருக்கிறது – கீழடியாராய்ச்சிகள்(!) உட்பட.
மாறாக – பலவிதங்களிலும் பலதிசைகளில் இருந்தும் தரவுகளை தர்க்கரீதி வலைப்பின்னல்களாக அடுக்கிப் புரிந்து கொள்ள யத்தனிப்பது என்பதுதான் நமக்கு ஒத்துவரும் விஷயமாக இருக்கக் கூடும் என் (ஏன், நம்) துணிபு; அதாவது, nomological networks of cumulative evidenceபடி நாம், நம்முடைய அண்மைய/ சற்றே எளிதான / proximate தர விளக்கங்களையும் அதற்கும் மேலாகப் பலதிசைகளில் இருந்தும் பெறும் அல்லது வந்தடையும் இறுதி/கறார் ultimate விளக்கங்களையும் வந்தடையவேண்டும் என்பது என்/நம் அவா.
“காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே – காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.”
…மேலும் முனைப்பாடியார் அவர்களின் மேற்படி அற நெறிச்சாரத்தில் சொல்வது போல, முடிந்தவரை (இப்படி மேற்கோள் காட்டுவது எளிது, ஆனால் இது ஒரு கடினமான அணுகுமுறை என்றாலும்) நாம் ‘காய்தல் உவத்தல் அகற்றி’ விஷயங்களை அணுகவேண்டும் என்பதிலும், மனதறிந்து அநியாயமாகப் பொய் சொல்லக்கூடாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. உங்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன்.
ஆகவே, எனக்கும் பலப்பல சந்தேகங்கள் இருக்கின்றன, என் அறியாமையால் நான் வளர்த்துக்கொண்டிருக்கும் பலப்பல மானேதேனேக்களைக் களைய முடிந்தவரை நான் பலகாலமாக முயன்று கொண்டிருக்கிறேன். நான் தற்போது வந்தடைந்திருக்கும் இடம், 100% எதிர் நிலையிலிருந்து (அதுவும் வெறித்தனமான தமிழ்ப் பற்றிலிருந்து ஹிந்து பாரம்பரியங்கள் குறித்த மகத்தான அறியாமைகளில் ‘இருண்டு’) சுமார் 30-35 ஆண்டுகளில், அணுக்கமாக உணரும் ஒன்று.
எது எப்படியோ – மாற்றுக் கருத்துகளுக்கான கறார் தரவுகள் கிடைக்கும் பக்ஷத்தில் அவற்றை ஒப்புக் கொள்ளத் தயார். ஏனெனில் ars longa.
சரி.
கீழ்கண்ட ஒவ்வொரு குறிப்புக்கும் என்னிடம் கறார் தரவுகள் உள்ளன; கொஞ்சம் அவகாசமும் பொறுமையும் ஒரளவு முன்னனுபவமும் சிந்திக்கும் திறமையும் வாய்த்திருக்கும் அனைவருக்கும் அவை லபிக்கும் என்பதிலும் எனக்குச் சந்தேகமேயில்லை; ஆகவே என் குறிப்புகளை நிறுவும் தஸ்தாவேஜுகளை அடிக்குறிப்புகளாக நான் கொடுக்கவில்லை – ஏனெனில் அவை பலப்பல படி நிலைகளைக் கொண்டவை.
// உயர்தளத்தில் இந்து மரபின் ஓர் அங்கமாக பௌத்தம் உள்ளது.ஆனால் இன்று “இந்து” ௭ன்ற சொல் வர்ணாஸ்ரம பகுப்பை மட்டுமல்ல,வேதங்களையும் ஏற்பவர்கள் ++ என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுவதுதானில்லையா?
என் கட்சி என்னவென்றால் – ஹிந்து மரபுகளின் (இவற்றை religio/மதங்கள், traditio/சம்பிரதாயங்கள் போன்றவற்றின் பௌதீகமான தொகுப்பு என ஒருமாதிரிச் சொல்லலாம்) சகல தளங்களிலும் (horizontals) ஒரு அங்கமாகத்தான் பௌத்தம் உள்ளது, அப்படித்தான் இருந்தது.
கோதம (பாலி) அல்லது கௌதம (ஸம்ஸ்க்ருதம்) என்றே அவருடைய வரலாறுகள் முதலில் எழுதப் பட்டன (இவருக்குச் ‘சித்தார்த்தர்’ எனும் பெயர் (‘தம் குறிக்கோளை, பிறவிப் பயனை வந்தடைந்தவர்) இருந்தது என்பதே கட்டுக் கதை; அது, அவர் ‘இறந்த’ பின் பல நூற்றாண்டுகள் கழித்துச் சூட்டப்பட்ட மரியாதைக்குரிய பட்டப்பெயர்; அவருடைய இயற்பெயர் ஆவணப் படுத்தப் படவில்லை; அவருடைய குடும்பக்குழு கோதம, ஆகவே அதனைச் சார்ந்த அவர் ‘கோதம உறுப்பினர்’ அல்லது ‘கோதம குலக்குழுவைச் சார்ந்தவர்’ என மட்டுமே அழைக்கப் பட்டிருக்கிறார். புத்தர் என்பதும் மரியாதையுடன் அழைக்க உதவிய சொல் தான்; இனி அவரை புத்தர் என்று மட்டுமே அழைக்கிறேன். )
புத்தர் ஒரு இடத்திலும் வேதங்களை மறுதலிக்கவோ, கேள்வி கேட்கவோ முற்படவில்லை; அவற்றை அவர் உயர் இடத்தில்தான் வைத்திருந்தார். வர்ண வ்யவஸ்தாவை ஒரு இடத்திலும் மறுதலிக்கவில்லை. ஆஸ்ரம முறைச் சட்டகம் என்பது அச்சமயம் மூன்று பகுப்புகளை (ப்ரஹ்மசரியம்-கல்வி பெறும் பருவம், க்ருஹஸ்தம் – குடும்பம் குறித்த செயல்பாடுகள், வானப்ரஸ்தம் – லௌகீக விஷயங்களிலிருந்து ஒருமாதிரி விலகல்) மட்டுமே கொண்டிருந்தது; பிற்காலத்தில் ஸன்னியாஸம் (ஆன்மிக வேட்கையால உந்தப் பட்ட சமூகத் துறப்பு?) இதனுடன் சேர்க்கப் பட்டது.
இந்த ஆஸ்ரம விஷயங்களையும் புத்தரோ, அவருடைய அறிவுறுத்தல்களோ மறுக்கவில்லை; துளிக்கூட மறுதலிக்கவில்லை – பிறிதொன்றைப் போதிக்கவில்லை.
பௌத்தம், ஒருமாதிரி மடாலய வழிமுறையை (+தீவிர ப்ரஹ்மசரியத்தை) அதன் படுஸீரியஸ் வழிபாடிகளுக்குப் பரிந்துரைத்தது. மற்றபடி அதன் அடி நாதமான ஷூனியவாதம் என்பது ஏற்கனவே இருந்த பாரம்பரியம் தான். இப்போதிக்கும் ஜக்கி வாஸுதேவ் போன்றவர்கள் ஹிந்து பாரம்பரியத்தை எதிர்க்கிறார்களா என்ன? ஸனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று வழக்காடுகிறார்களா என்ன? மாறாக, அதன் ஒரு சில கூறுகளை வைத்து மானேதேனே சேர்த்து, அவர்களுடைய வழிபாடிகளுக்கு ‘நீர் தன் மட்டத்தை அடையும்’ வகை போதனை செய்கிறார்கள். இதையே தான் புத்தரும் அன்று செய்தார் – இதற்கு மாறாக தான் வேறொன்றைச் செய்கிறேன்/செய்திருக்கிறேன் என அவரே பிரகடனம் செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். முக்கியமாக, தன்னுடைய ஆசிரியர்களையும் பாரம்பரியத்தையும் தான் மதிக்கிறேன், அவ்வழிகளில் தான் நடக்கிறேன் என்றே தான் சொல்லியிருக்கிறார்.
குறிப்பு: பல சான்றோர்களின் கருத்தில், வேதங்கள் என்பவைதான் அவை மட்டுமேதான் ஹிந்துமதங்களின் ஆணிவேர் என்பது இல்லை; ஏனெனில், அவை மரியாதைக்குரியவை என்றாலும், ஹிந்து மஹாஸமுத்திரத்தில் பல ஆறுகள் சேர்கின்றன, பலப்பல பிற ஊற்றுக் கண்களும் உள்ளன. அதாவது ஹிந்து மரபுகளை, ஒரு புட்டியில் (என்னதான் அது உன்னதமாகவே இருந்தாலும்) அடைத்து விட முடியாது.
+ஹிந்து பாரம்பரியங்களின் தொடர்ச்சியில் ஒரு சிறு அங்கமே இந்த ‘வர்ணம்’ (அல்லது அதுவும் சுருக்கி இன்னொரு திக்கில் பெருக்கப்படும் ஜாதி எனும் திரளமைப்பு) என்பதில் எனக்கு ஐயமேயில்லை. ஆகவே ஸனாதன தர்மம் என்பது ‘வர்ணாஸ்ரமம்’ என reductionistஆகச் சுருக்கப் பட்டால் எனக்கு அதனுடன் பொருதுவதைத் தவிர வேறு வழியேயில்லை.
// Non-vedic Hindu என்று பௌத்தரைக் கொண்டால், நடைமுறைத்தளத்தில் இன்றைய சாதிப் பிரிவினைகளுக்கு தீர்வுகள் கண்ணில் தட்டுப்படாதபொழுது உயர்தளத்திலும் வர்ணாஸ்ரம எதிர்ப்பை எடுப்பதுதானே செய்யக்கூடியது?
தன்னை வேதத்தை எதிர்ப்பவர் என ஒருகாலத்திலும், ஒரு இடத்திலும் கூட புத்தர் தன்னைக் காண்பித்துக் கொண்டதில்லை; மாறாக, மிகுந்த மரியாதையுடன் தான் தம் பாரம்பரியத்தை அணுகியிருக்கிறார் அவர்.
ஜாதிப் பகுப்புகள் என்பதை நாம் தர்க்கரீதியாக அணுகவேண்டும். ஏனெனில் ‘மானுடர்கள் அனைவரும் சமம்” என்பது ஒரு அசிங்கமான பொய். நாம் அனைவரும் வெவ்வேறு குணாதிசியங்களின் (= பிறப்பு, பெற்றோர்கள், சுற்றுச்சூழல்… போன்றவற்றின் கலவை) அவற்றின் தொகுப்புகளின் சித்திர விசித்திரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்; இதன் காரணங்களால் நமக்குப் பல அனுகூலங்களும், வழியடைப்புகளும் லபிக்கின்றன – இவற்றுக்கு அப்பாற்பட்டு முயன்று நாம் சென்றடைய விழையும் இடங்களைத் தொட வேண்டும். இதுதான் மானுட நியதி.
உலகெங்கும் இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அவை தொடர்ந்து, இனிமேலும் இருக்கும் – இதுதான் அறிவியல், உயிர்ப் பரிணாமவியலின் பரிமாணங்களில் ஒரு முக்கியமான கூறு. நாம் கூட்டுக் கஞ்சா அடித்துக்கொண்டு ‘ஒருவனே குலம்’ என்றெல்லாம் உளறலாம் – ‘யாவரும் கேளிர்’ எனப் பினாத்தலாம் – இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன – ஆனால் இவை உண்மைகள் அல்ல.
அகிலவுலக உயிரிகளின் வாழ்விடங்களின் ஒரு பகுதியான நம் பாரதத்திலும், பிற இடங்களில்/துறைகளில் இருப்பது போலவே அமைந்திருக்கும் பலப்பல விதமான, வாழும் சமூகங்களுக்கு இன்றியமையாத ஏற்றத்தாழ்வுகளில் ஒன்று மட்டுமே தான் இந்த ஜாதி எனும் சமூகக் கூறு. கடந்த 1500+ ஆண்டுகளாக இந்தச் ஜாதிகள் வளைந்துகொடுக்கும் தன்மையை இழந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் – ‘ஹிந்து பாரம்பரியம் என்றாலே ஜாதிக் கொடுமைகள்’ எனப் பரப்பப்படும் பொய்யுரையை நான் மதிப்பதில்லை. அதே சமயம், ஜாதிவெறி எனவொரு ஜந்து இருப்பதையும் நாம் மறுக்கவில்லை – அதற்கு நான் முட்டும் கொடுக்கவில்லை.
நாமெல்லாம் பன்முகத்தன்மை / diversity என்பதை விரும்புகிறோம் – ஆனால் ‘மானுடர் அனைவரும் சர்வசமம்’ என்றும் பினாத்துகிறோம்! இது எனக்கு ஆச்சரியம் தருவது. உங்களுக்கு?
வர்ணாஸ்ரமம் எனும் வார்த்தையில் எனக்குப் பிரச்சினை (முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன்) – நீங்கள் வர்ண வ்யவஸ்தா (குணாதிசியங்கள் சார்ந்த மானுடப் பகுப்பு) என்பதை குறிப்பிட வருகிறீர்கள் என்பதை உணர்கிறேன். ஏனெனில் ஆஸ்ரம வழிமுறை என்பதை பௌத்தம் நேரடியாக அணுகவில்லை – அதற்கான தேவையும் அதற்கு இருந்திருக்கவில்லை – அக்கால பௌத்தம் என்பது ஒருமாதிரி ஜெஸூய்ட்கள் போன்ற ஒரு மடாலய வழிமுறை.
புத்தர் வர்ணாஸ்ரமத்தை எதிர்க்கவில்லை; அவர் அதனை ஆதரிக்கவே செய்தார். அவர் வாழ்ந்த காலங்களில் ஆண்வழி ஆதிக்கங்கள் நிரம்பி இருந்தன – ஜாதிகள் இறுகியிருக்கவில்லை; நான் இது குறித்துப் பிராது வைக்கவில்லை. ஆனால், புத்தரும் இந்த ஆண்வழி ஆதிக்கங்களை ஆதரித்தார். பெண்களுக்கு ‘சம உரிமை’ என்பதை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை – எதிர்க்கவே செய்தார். பின்னர் தன் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிகளைச் சேர்க்கவேண்டி அழுத்தம் வந்ததால் வேண்டாவெறுப்பாக அதனைச் செய்தார், அவ்வளவுதான்.
இப்படித்தான் அப்போதைய நிலைமை. இந்த நிலையில் ‘பௌத்தம் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தது’ என ஒரு போடுபோட்டு, அதன்மேல் – ‘அது அப்படிச் செய்ததால் பௌத்தத்துக்கு முட்டுக் கொடுக்கவேண்டும்’ எனும் தாவல், என்னைக் கேவிக்கேவி அழ வைக்கிறது.
// Text based சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்,
நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் – நாம் nomological networks of cumulative evidenceஎனும் அணுகு முறையைக் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும். மூல நூற்களைப் படிக்கவேண்டும். அவற்றின் மீதான ஆய்வுகளையும் ஓரளவுக்குப் படிக்கவேண்டும் – இவற்றைச் செய்தால் நாம் ஓரளவு திடத்துக்கு வந்துவிடலாம்.
// ஆனால் “all inclusive” தான் என்ற வாதம் யாருக்கு பயன் தரும் என்று உயர்தளத்தில் யோசிப்பவர் எடைபோடலாமா?
‘அனைவரும் சமம்’ – அல்லது ‘அனைவரையும் + அனைத்தையும் உள்ளிழுக்க வேண்டும்’ – அல்லது ‘ஏற்றத் தாழ்வுகள் கூடாது’ என ஒருகாலத்திலும் பௌத்தமோ புத்தரோ போதிக்கவில்லை.
நிலைமை இப்படி இருக்கையிலே யாருக்கு எந்தமுறை பயன் தரும் என்பதை பௌத்தத்தைக் கொண்டோ (ஏன், எந்தவொரு போதனையைக் கொண்டோ) நிர்ணயிக்கவோ கூடாது.
ஏனெனில் நாம், நம் உயிரியல் ரீதியாக முக்கியமான ‘பரிணாம வளர்ச்சியுடனேயான மனோதத்துப்பித்துவ’ அணுகல் முறைமைகளுக்கு உட்பட்டே நடப்பவர்கள். ராபர்ட் ஸபோல்ஸ்கி போன்றவர்களிலிருந்து ஆரம்பித்து நாம் இதனைப் புரிந்து கொள்ள முயலலாம்.
நான் திறம் சார்ந்த மேட்டிமைத் தனத்தின் கட்சி/வாதி; முடிந்தவரை பிற ஜனங்களுக்கும் வளர்ச்சியின் சாத்தியக் கூறுகள் சென்றடைய வேண்டும் என்பதே என் விழைவு.
ஆகவே உயர்தளத்தில் யோசிப்பவர்களும் முக்கியம். யோசிக்காமல் பயன்பெற விழைபவர்களும் தேவைதான் உயர்தள பறவைப் பார்வை வேண்டும் – முடிந்தவரை மண்புழுயனைத்த பார்வைகளும் கருத்தில் கொள்ளப் படவேண்டும்.
பௌத்தம் என்றுமே ஜனரஞ்சக மார்க்கமாக இருந்திருக்கவில்லை – ஏனெனில் அது மடாலயம் சார்ந்த ப்ரஹ்மச்சாரிகளின்/பிக்குகளின் மதம். சுற்றுவட்டாரங்களில் இருந்த பிற ஹிந்து மார்க்கங்களின் மக்கள் திரள்களால், ஆட்சியாளர்களால் போஷகம் செய்யப் பட்டது.
பௌத்தம் சார்ந்து ஒருவராலும், “all inclusive”எனப் பொத்தாம் பொதுவாகப் பேசமுடியாது – ஏனெனில் மடாலயம் என்பது அனைத்து மக்களுக்குமானதல்ல, அல்லவா?
// Intellutual honesty vs Practical usage என்ற இருமைக்குள் சிக்கித்தானே ஆகவேண்டும் இல்லையா?
இது இருமைகளை உள்ளடக்கியிருக்கிறதா என எனக்குப் புரியவில்லை. ஏனெனில் கோட்பாடு ரீதியாக இயங்கும் அறிவுஜீவியம் தான், அது மட்டுமே தான் மடாலயங்களில் அணுகப் பட்ட ஒன்று. அங்கு சமையல், தோட்டம், கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக லௌகீக விஷயங்களும் இருந்திருக்கின்றன; ஆனால் வெளியிலிருந்த ஹிந்து பாரம்பரியங்கள் சார்ந்த மக்கள்தாம் மடாலயங்களுக்கு உதவியிருக்கிறார்கள்.
பௌத்தம் என்பது ‘லௌகீகம் சார்ந்த விஷயங்களை’ அணுகியிருக்கிறதா என்றால் இல்லை, அதன் வடிவமைப்பிலேயே அது இல்லை.
இது ஒரு புறமிருக்க – வெளி வாழ்க்கைக்கு வருவோம்.
ஆம். அறிவுஜீவிய நேர்மை முக்கியம். அதாவது, பௌத்தமோ/புத்தரோ தங்களை ஸனாதன தர்மத்துக்கு ‘எதிராக’ வரிக்கவேயில்லை. எப்படியும் புத்தர் (அப்படி ஒருவர் அச்சுஅசலாக இருந்திருந்தால்) காலத்தில் சமகால வரலாறுகள் என ஒன்றுமே எழுதப் படவில்லை; ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அவை எழுதப் பட்டன; அப்படி எழுதப் பட்டவைகளிலும், பிற ஹிந்து மார்க்கங்கள் கரித்துக் கொட்டப் படவில்லை. மாறாக, புத்தர் தம்மை ஸ்ரீராமனுக்கு இணையாகவே கருதினார். தம் மனைவியைச் சீதையாகவும் அத்யந்த நண்பனை லக்ஷ்ஂமணனாகவும்…. இன்னபிற.
பௌத்தம் தற்காலத்தில் முட்டுக்கொடுக்கப்படும் + பயன்படுத்தப் படும் விதத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்: ‘தலித்’ இயக்கம் வழியாக, இடதுசாரி-லிபரல்களின் வழியாக அது ‘ஹிந்து ஸனாதனத்துக்கு எதிரானது’ என, ஒரு விதமான ஆதாரமும் இல்லாமல் செய்யப்படும் பரப்புரை; பாரதத்தை உடைக்க விழையும் சக்திகளின் அடிப்படைப் பொறுக்கித் தனம்.
-0-0-0-0-
இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.
நன்றி.
—
October 6, 2022 at 20:07
சிரமணம் VS பிராமணம் என்பதை(சமணம் பெளத்தம் உள்ளிட்ட அவைதிக சமயங்கள்)முரண்பாடுகள் கொண்ட ஆனால் ஒத்திசைவுள்ள இரு போக்குகளாகவே பார்க்கிறேன்.
October 6, 2022 at 20:23
ஐயா, புத்தரால் ஸ்தாபனம் செய்யப் பட்ட பௌத்த மார்க்கமோ புத்தரோ, ‘வேதங்களை’ எதிர்க்கவில்லை. எதிர்த்தற்குச் சான்றே இல்லை. மாறாக புத்தர் ஸனாதனப் பாரம்பரியங்களை (வேதங்கள் உட்பட) ஏற்றுக் கொண்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
சமணம் என்பது ‘வேதங்கள்தாம் ஊற்றுக்கண்’ என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை, வேதங்கள் மட்டும்தான் உண்மைத்தேடலின் வழி என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மை.
ஆனால்-அதாவது இவ்விரு மார்க்கங்களும் ‘வேதங்களை எதிர்க்கவில்லை.’ புரட்சியும் செய்யவில்லை. இவ்விரண்டின் அடிப்படைகளில்/ஸ்ம்ருதித் தொகுதிகளில் இருந்து ‘இல்லை, இவை அவைதீக மதங்களே” என நீங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்ட முடியுமானால் மகிழ்வேன். உங்களிடமிருந்து கற்றும் கொள்வேன்.
இவ்விஷயங்களில் புரட்சி என்பது மஹா புரட்டு + உருட்டு.
(பிற்காலங்களில் பலப்பல தர்மம் சார் ஸனாதன/ஹிந்து பாரம்பரியங்களின் இடையே பூசல்கள் நிலவின. அவற்றில் சமணர்கள், பௌத்தர்கள், சைவர்கள், வைணவர்கள், அத்வைதிகள் எனப் பலப்பலர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் – ஒருவரையொருவர் தூற்றிக் கொண்டனர் என்பது உண்மைதான்)
பாரத, ஸனாதன ஆழி பெரிது.
October 7, 2022 at 08:30
ம்ம்ம் பௌத்தமும் ஜெயினமும் ஏன் சண்மதங்களில் வரவில்லை என்று யோசிக்கிறேன்
October 7, 2022 at 06:39
என்னா முட்டு புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா? பாப்பாருங்கடானடா சனாதனம் அதனாலதாண்டா பாப்பானுங்க ஒழியணும்னு சொல்லறஓம், அப்பதாண்டா சனாதனம் ஒழியுங்கறோம்
சொந்தபேர்ல வாடா
October 7, 2022 at 17:40
[…] […]
October 7, 2022 at 19:00
நன்றி.
1)இந்திய தத்துவ மரபுகளை (இந்து மரபு என்பது மிகச்சரியான சொல் இல்லையா?) வேதத்தை ஏற்பவை/மறுப்பவை என்று பகுத்து புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களை உணர்த்த விரும்புகிறீர்கள் என்று நம்புகிறேன். unlearn செய்வது சிறிது கடினம் தான்.
2) /பல சான்றோர்களின் கருத்தில், வேதங்கள் என்பவைதான் அவை மட்டுமேதான் ஹிந்துமதங்களின் ஆணிவேர் என்பது இல்லை/ என்பது எனக்கு ஏற்றுக்கொள்ள மிகக்கடினமாக உள்ளது. ஒரு இந்துவுக்கு வேதம் ,ஆகமங்கள் ஆகியவை அடிப்படை என்பது எனது நம்பிக்கை,என்வயதை யோசித்து அதை உரசிப்பார்க்க இஷ்டமில்லை. ஆதிசங்கரரை ‘பிரசன்ன பௌத்தன்’ (crypto என்று இன்றைய பொருளில் எடுத்துக்கொள்ளலாமா?) என்று விமர்சிக்கப்பட்டது தாங்கள் அறியாததா என்ன?
நீங்கள் பௌத்தரும் இந்து மரபில் ஓர் அங்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,தற்போது ஒரு கூட்டம் ராஜராஜன் இந்துவே அல்ல என்று கிளம்பியிருக்கிறது. கொடுமை எங்கே போய்ச்சொல்ல.
அருகமர்ந்து கற்க வேண்டியது, வலைப்பக்க நெருக்கடி உணர்ந்து நிறுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி தங்கள் நேரத்திற்கு.
October 10, 2022 at 10:42
[…] நாம்.தமிழர் on கோதம ‘புத்தர்,’ பௌ… […]