…ப்ளாக் பயங்கரவாதம் தொடர்கிறது…

February 19, 2022

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ?

-0-0-0-0-0-

சரி. என் மூத்தபெரும்பேராசான் ஜெயமோகன் குருதேவ்ஜி அவர்களுடைய பிரசித்தி பெற்ற குருசிஷ்ய பாரம்பரியத்தின்படி, இனி நானேகேள்வி-நானேபதில் தொடர்கிறது.

ஒத்திசைவுத்வா. இதற்கான அவசியம் என்ன? ஒத்திசைவே பொறுக்கமுடியாமல்தான் இருந்தது – யார் அழுதார்கள், இது வேண்டுமென்று?

இதென்ன அநியாயமான கேள்வி? அரவிந்தன்கண்ணையன் எஸ்ராமகிருஷ்ணன் சாருநிவேதிதா இத்யாதிகளுக்கு மட்டும் என்ன பெரிய எழுதவேண்டிய அவசியம்?  அவர்களால்  பெஞ்ச்தேய்க்காமல் நேர்மையாக உழைத்து உன்னதத்தை நோக்கித் தங்களை உந்திச் செலுத்திக்கொண்டு அறத்துடன் வாழமுடியாதா என்ன? எம், தன்னிகரற்ற நுணுக்க உள்ளுணர்வின் மெய்யுணர்வு அறப்பெரும்பேராசான் ஜெயமோகன்கூட அந்த இத்யாதிப் பக்கத்துக்குத் தானே தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கிறார்?

அவர்களும் அவர்களுடைய ‘ஆக்கங்களும்’ இல்லாவிட்டால், தமிழகம் தாராந்துபூடுமா, வாழ்க்கை சிதைந்துவிடுமா, வளர்ச்சி பாதிக்கப்படுமா, தமிழலக்கியம் தான் வளராதா – ப்ளடி?

அவர்கள் இல்லாவிட்டால் எங்கள் தமிழ்க்கூட்டங்களுக்கு, அவர்களுக்கு அத்தியாவசியமான, பொறுக்கமுடியாத உன்னதக் குப்பைகளை அள்ளிவீச எங்கள் நிசப்தம் மணிகண்டன் இருக்கிறார், அரக்கர்கூட்ட அரைக்கர் யுவகிருஷ்ணா இருக்கிறார், அதிஷாபெர்னாட்ஷா இருக்கிறார், ஏன், ஊசிப்போன ஸமோஸாவும் தனித்துவமாக அருஞ்சொல் ஒழுகும்ஜொள்ளென ஓடிவந்திருக்கிறார் – பராக்கிரமமிக்க அவர்களே தொடர்ந்து தமிழகத்தையும் தமிழையும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்வார்கள்… கவலை வேண்டேல்!

தமிழ நிலைமை இப்படிப் படுகேவலமாக இருக்கையிலே…

…இப்போது நான் வந்துதான் தமிழலக்கியமும் அறிவு(!)லகமும் மேலதிகமாக நோகவேண்டுமா என்ன? அது ஏற்கனவே உச்சம்கொண்டு உச்சியில் உச்சுக்கொட்டிக் கொண்டிருக்கிறது அன்றோ?

ஏன் பிற கழிசடைகளுடன் பொருத்திப் பார்த்துக்கொள்கிறாய்? ‘ஊரான் கழிசடையை ஊட்டி வளர்த்தால், தன் கழிசடையை கொடைக்கானல் பார்த்துக்கொள்ளும்’ என்பதை அறியாதவனா நீ?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்.

சரி.

ஒத்திசைவுத்வா எனக்கு, எழுத்துப் பயிற்சிக்காக, தமிழில் கொஞ்சமேனும் சட்டகப் பூர்வமாக சிந்திக்க (of course, this is an arbitrary, sentimental nonsense) அவசியம்; இது ஒருமாதிரி ஆன்லைன் குறிப்புகளின் தொகை, அவ்ளோதான். ஊக்கபோனஸ்ஸாக சிலபலர் தேவைமெனக்கெட்டுத் தொடர்ந்து இந்த எழவையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வழியான ‘பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை’ தொல்லையும் கொஞ்சம் இருக்கிறது.

உங்களுக்கும் இந்த எழவைப் படிக்க முடியுமென்றால், உங்கள் கர்மா, பூர்வஜன்மப் பாவம், இந்தஜன்மப் பேரிடர், வேறென்ன சொல்ல.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்க்கினே இர்ங்க. ப்ளெட்டி ஹெல்.

ஒத்திசைவுக்கும் ஒத்திசைவுத்வாவுக்கும் என்ன வேறுபாடு?

ஒரு மசுத்துக்கும் வேறுபாடு இல்லை.

எல்லாம் – ஹிந்துய்ஸ்ம் X ஹிந்துத்வா போலத்தான். பிராமணஎதிர்ப்பு X பிராம்மணீயஎதிர்ப்பு போலத்தான். ஏன், ஜிஹாதிஇஸ்லாம் X ஆன்மிகஇஸ்லாம் போலவும்தான்.  ஊக்கபோனஸ் ஒத்திசைவு ஆஃபராக, இந்தியப்ரேண்ட்ஸெக்யூலரிஸ்ம் X வெறிசொறிநாய்த்தனம் என்பதையும், தற்கால நிலவரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற பரப்புரை இரட்டைகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசம் எனத் துளிக்கூட இல்லை. அப்படிப்பட்ட வித்தியாசங்களை (“நாங்கள் ஹிந்துத்துவாவைத்தான் எதிர்க்கிறோம், ஹிந்துக்களை அல்ல” வகை) அகழ்வாராய்ச்சி செய்து உபயோகிப்பவர்களுக்கு ஒரு எதிர்மறைக் குறிக்கோள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..

வேறுபாடு இல்லையென்றால், ஏன் இந்தப் புதிய ஒத்திசைவுத்வா?

முந்தைய ஒத்திசைவு தள விஷயம் ஒருமாதிரி ‘ஹைஜேக்’ செய்யப்பட்டுவிட்டது; அது தொடர்பாக நான் அண்மையில் ட்விட்டரில் வெளியிட்ட ‘பிரகடனம்:’

அப்படியானால் தளம் முடக்கப் படவில்லையா?

இல்லை; ஆனால், முன்னர் சிலபல முறை வலைத்தளமும் ட்விட்டர் கணக்கும் ‘ரிப்போர்ட்’ செய்யப்பட்டன. அதற்கான காரணங்களை நீங்கள் வெகுஎளிதாக அனுமானிக்கமுடியும். ஆனால் என்னுடைய முறையிடல் வியாக்கியானத்துக்குப் பின் அவை ஒப்புக் கொள்ளப்பட்டன.

இத்தனைக்கும் – இவற்றையெல்லாம் படிப்பவர்கள் சொற்ப ஆசாமிகளே  – இவர்களிலும் சிலர் ‘புண் பட்டு’ வெந்து, புகார் அளித்திருக்கிறார்கள் என்பதுதான் விந்தை.

அதைவிட, இம்மாதிரிப் புகார்களைப் படுஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்ட ட்விட்டர்/வேர்ட்ப்ரெஸ் அல்காரிதம்கள் இன்னமும் விசித்திரம். (ஒத்திசைவு தளத்தை ரெகுலராகப் படிப்பவர்கள் சுமார் பத்துபேர் + ட்விட்டர் கணக்கு வழித் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஆயிரம்பேர் கூட எட்டாத அழகில் எனக்கு இதுவொன்றுதான் கேடு)

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேடித்திராவிடத் தமிழ்முதல்வாத ஜாதிவெறி விசித்திரம் என்னவென்றால் – இந்த ஆசாமிகள், என்னைக் கண்டமேனிக்கும் சபித்து, என் தாய் தந்தை மனைவி பூர்வீகம் (மத்திய ஆசியா!) வந்தேறியவழி (கைபர்-போலன்!!) கோமணம் திரிபுந்த்ரம் பூணூல் என எல்லாவற்றையும் தொடர்ந்து பலமுறை அவதூறு செய்திருக்கிறார்கள் – இவர்களில் ஒருவரைக்கூட நான் இதுவரை ப்ளாக் செய்யவில்லை; சொல்லப் போனால் இந்த தண்டங்களின் பொறுத்துக்கொள்ளும்படியான உளறல்களுக்குப் பதிலுமளித்திருக்கிறேன். பல சமயங்களில், அவற்றில், எனக்கே பொறுக்காத வசைகள் இருந்தமையால், அப்படியே அவற்றைக் குப்பைக்கூடைக்கும் அகற்றியிருக்கிறேன், அவ்வளவுதான்.

இந்த அனாமதேயங்கள் சிலரின் பெயர்கள் & வசிக்குமிடம் தெரிந்தாலும், ஒருபோதும் அவர்களை டாக்ஸ்/doxx செய்யவில்லை – அவர்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்திக் கேவலம் செய்யவில்லை – அவர்கள் படுகேவலஸ்தர்களாக இருந்தாலுமேகூட.

ஆனால் – எந்த ஒரு சமயத்திலும் என் காட்டுரைத்தளம் முழுவதுமாக முடக்கப் படவில்லை. எந்த ஒரு பதிவுமோ/ட்வீட்டோ வலைத்தளங்களின் அழுத்தத்தின் காரணமாகவோ, அன்பான ‘அறிவுரை’யின் வழியாகவோ அகற்றப் படவில்லை.

இதுவரை இப்படி. இனிமேல் எப்படி எனப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பின்னர், என்னதான் ஆயிற்று?

சொல்லிக்கொண்டு பெருமைப் படும்படிக்கெனப் பெரிதாக ஒன்றுமில்லை. 

சிலபல இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகள்; கலந்துகட்டி – திராவிட ஈனவாதம், ஆர்வக்கோளாறு, மனப்பிறழ்ச்சி (எனக்கல்ல எனச் சொல்லிக் கொள்கிறேன்), செய்நன்றி மறத்தல், பேடித்தனம், முதுகெலும்பின்மை, வலைத்தள மேலாண்மை, விசிலடிச்சான்குஞ்சுமுதல்வாதம் உட்பட. 

ஆனால் அவை அனைத்தும் கடக்கப் பட்டுவிட்டன. எனக்கும் சில முக்கியமான படிப்பினைகள் கிடைத்தன.  மேலும் – சுணங்கிப் போவதோ,  ‘என்னை ஒடுக்கி விட்டார்கள், ஒதுக்குகிறார்கள்’ எனப் பேடிப் பிலாக்கணம் வைப்பதோ, ‘மிரட்டுகிறார்கள், பயமாக இருக்கிறது’ எனப் பம்முவதோ – எனக்கு ஒத்து வராது.  தவறுகள் செய்தால் அவற்றைத் திருத்திக் கொள்வதிலும் எனக்கு மானப் பிரச்சினை எனவொன்றும் இல்லை.

என் கருத்துகளுக்கும் பதிவுகளுக்கும் நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன். அதனால் ஏற்படும், ஏற்படக்கூடும் சாதக(?) பாதகங்களை உணர்ந்துதான் நான் எழுதுகிறேன்.  முடிந்தவரை முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டாலும், ‘There shall be a price to pay’ என்பதை அறிந்திருக்கிறேன், கொடுத்துமிருக்கிறேன். (இந்த ‘நடந்த’ விஷயம் உட்பட)

எது எப்படியோ.

எப்படியும், தமிழ வரலாறின் வழமையே போல –  ப்ளாக்கண்டி முனிவர் முதற்சங்ககாலத்துக்கும் முன்பே “பழையன கழிதலும் புதியன கழிதலும் வழுவல கால வலைத்தளமானே” என எழுதினார் தாமே? அதே அதுதான் ஒத்திசைவுக்கும் ஆகியிருக்கிறது.

அவ்ளொதான்.

இப்போதைய நிலைமை என்ன?

உங்கள் நிலை தான் கவலைக்கிடம்.

2011லிருந்து இந்தக் கடையின் முந்தானை விரிக்கப்பட்டு ஒருமாதிரி 1400+ பதிவுகள் ஒப்பேற்றப் பட்டுள்ளன. இவற்றில் ஒரு மாதிரி குத்துமதிப்பாகச் சுமார் 400-450 பதிவுகள் (பெரும்பாலும் திராவிட-எதிர்ப் பதிவுகள்), மேற்கண்ட கலந்துகட்டிய நிகழ்வுக்குப் பின் எங்கே போயின எனத் தெரியவில்லை, இவற்றை வேர்ட்ப்ரெஸ் தளத்திலிருந்து மீட்க முடியுமா என அரைமனதுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னமும் பலப்பல பதிவுகளில் பல பத்திகளைக் காணோம். ஆச்சரியம்.

சிலவற்றில் நான் எழுதாத விஷயங்கள் எங்கிருந்தோ வெட்டியொட்டப் பட்டிருக்கின்றன. ஆ!

சுபம்.

ஐயோ! பிறகு?

(உங்கள் ஆனந்தக் களிப்பு புரிகிறது, ஆனால் கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டீர்கள்!)

ஆர்கைவ்.ஆர்க் தளத்தில் பதிவுகளில் பல சேகரம் செய்யப்பட்டிருக்கின்றன; கூக்ள்கேஷ் எழவிலும் சில இருக்கின்றன.

ஆக ஒரு பிரச்சினையும் இல்லை. சுமார் 80% பதிவுகளை ஒவ்வொன்றாகச் சரி/பட்டி பார்த்து டிங்கரிங் செய்து…

தேவையெனப் பட்டால் அவையும் தரவேற்றப்படும். (ஆனால் அதற்கு மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கும்; வேறு யாருக்கும் அந்தப் பொறுப்பைக் கொடுப்பதாகவும் இல்லை…)

யாருக்காவது, அழிக்கப் பட்ட ஏதாவதொரு பதிவு, கிடைத்தேயாக வேண்டும், அதைப் படித்தே தீரவேண்டும் என அரிப்புகிரிப்பு ஏதாவது இருந்தால் – விவரத்தோடு, என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.  என்ன ஆவன ஈவன செய்யலாம் எனப் பார்க்கிறேன்.

மறுபடியும் ஒரு பதிவுவரிசையை, இந்தப் பதிவான 1500ல் இருந்து ஆரம்பிக்கிறேன்.

ஃபேஸ்புக் கணக்கு என்னவாயிற்று?

முக்காலே மூணுவீசம் அவை, அதன் பதிவுகள் (ஒத்திசைவு வலைத்தளப் பதிவுக்கான) சுட்டிகளும் சிறுபதிவுகளுமாகத்தான் இருந்தன. அதுவும் ஒருமாதிரி பரிசோதனைரீதியில் தான் ஒடிக்கொண்டிருந்தது. சொல்லப் போனால், எனக்கும் ஃபேஸ்புக்(கும்) பிடிபடவில்லை, அதாவது அங்கும் ஊடாட எனக்குத் திராணியில்லை.

மேற்கண்ட காரணங்களாலும் அதிலுள்ள பதிவுகள்-வகையறாக்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் அழிக்கப்பட்டு விட்டதாலும் – அது இழுத்து மூடப்பட்டது.

யாருக்கும் இதனால் நஷ்டமில்லை. அன்புடன் அதனை விளம்பரப்படுத்திய சொற்ப நண்பர்களுக்கு நன்றி.

(ஃபேஸ்புக் எழவிலும் உபயோககரமான விஷயங்கள் நடக்கின்றன என்பதை அறிவேன்; ஆனால், எனக்குத்தான் அது பிடிபடவில்லை – ஆகவே என்னை லூஸ்லவுடவும். நன்றி!)

வருத்தமாக இருக்கிறது…

உங்கள் வருத்தம் புரிகிறது. நான் ஒழிந்துபோனேன், வேர்ட்ப்ரெஸ் வலைத்தளமும் இல்லை, ஃபேஸ்புக்கும் அம்பேல்  – வெறும் ட்விட்டரோடு மட்டும்தான் பொருதப்போகிறேன் என நினைத்துவிட்டீர்கள், பாவம். ஆனால் மறுபடியும் வந்துவிட்டேன்.

ஒருவேளை- அங்கும் எத்தையாவது ரிப்போர்ட் திரியாவரம் செய்து தொந்தரவு, தொப்பையை ஆட்டிக்கொண்டு தொந்திரவு எனக் கொடுக்கலாமெனத் திட்டமிட்டிருப்பீர்களோ என்ன எழவோ?  அப்படியே நடந்தாலும் அதுவும் பெரும்பிரச்சினை இல்லை – அங்கிருந்து இன்றுதான் ஒரு முழு பேக்-அப், FWIW, எடுத்தேன்; நன்றி.

மேலும், ஏகோபித்த ஏழரை ஏகடியத்தால் ஓஸி-வேர்ட்ப்ரெஸ் தளத்திலிருந்து ஒருமாதிரி ‘சொந்த’தளத்திற்குப் பின்னேறியிருக்கிறேன்.

ஹா! ஏழரைகள்? அவர்கள் ரெண்டுபேர்கூட இல்லை என்பதை நானா அறியமாட்டேன்?

யோவ். (உண்மையாகவே) சிலர் (பலரல்ல), ஒத்திசைவின் ஊட்டச்சத்து இல்லாமல் பசலை நோயில் வாடி, உடல்மெலிந்து அவர்களுடைய வளைகளும் மைனர்செய்ன்களும் அரையணாக்கயிறுகளும் கீழே வீழ்ந்து,  சங்ககால அல்குல்களும் ஆண்குறிகளும் நொந்து… ஈஸ்வரா

ஆகவே, கருணை ரீதியில் அவர்கள் மனுக்களைப் பரிசீலித்து நீதி வழங்கியிருக்கிறேன்.

ஆகவே, மனுநீதி ராமசாமிகிய யான் நீடூழி வாழ்க, வாழ்கவே!

பின்குறிப்பு: இதுவரை நான் மட்டும்தான் பதிவுகளைச் சிரமேற்கொண்டு படிக்கிறேன் எனக் கற்பனை செய்து கொண்டிருந்தேன்; அதுதான் உண்மை என நிறுவியதற்கு நன்றி.

அதெல்லாம் சரி, ஒத்திசைவிஸ்ம், ஒத்திசைவியல் எல்லாம் ஃபேமஸ் ஆகிக்கொண்டிருக்கின்றனவாமே?

ஆம். (அன்பர் ஒருவர் அருளிச்செய்த, ஒத்திசைவு தொடர்பான கலைச்சொற்கள் இவை)

ஒத்திசைவிஸ்ம்: ஒத்திசைவின் அடிப்படைக் கொள்கைகள், ஒருமாதிரி அப்ரஹாமிய மதமாக உருமாறிய போது அதன் பெயர். அதாவது ஒத்து + சைவம் (ஸைவிஸ்ம்) = ஒத்திசைவிஸ்ம்.

ஒத்திசைவியல்: எதிர்காலத்தில் – இளங்கலை முதுகலை இன்னபிற எச்சற்கலை வகையறா இலக்கிய மயிர்புடுங்கிங் ஆராய்ச்சியார்வல இளைங்கர்கள் ஏகோபித்து ஆழ்ந்து படித்து ஒத்திசைவின் நுணுக்கங்களையும், படிமங்களையும் வெளிக்கொணர்ந்து ஆயிரக் கணக்கில் பிஹெச்டி பட்டங்களை அள்ளும்போது அந்த இயலின் பெயர்.

(கருத்தில் கொள்ளவும்: எஸ்ராமகிருஷ்ணநெகிழ்வாலஜியல் என ஏற்கனவே ஒரு துறை இருப்பதைத் தாங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பலப்பலர் இத்துறையில் பிஹெச்டி பஜனை செய்துகொண்டிருக்கிறார்கள் எனும் பகீர்செய்தியை, எஸ்ரா அவர்களே அவர் தளத்தில் பெருமிதத்துடன் வெளியிட்டிருந்தார்)

ஒத்திசைவுதாசரியம்: இது ஒருமாதிரி அயோத்திதாசரியம் போல என வைத்துக்கொள்ளுங்கள்.

ஒத்திசைவு அறிவியக்கத்தின் மகத்தான சகஏழரைகளால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப் படப்போகும் விஷயம் இது.  (இதுவும் கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்படலாம் – என்னைப் பொறுத்தவரை ராசியான பதிப்பகமது.)

அதனையும் தொகுப்பதற்கு, அயோத்திதாசரியம் தொகைக்கு அவர் செய்ததைப்போலவே, அன்பர் ஈரோடு பாபு (அரிபாபு = Erodeபாபு) அவர்கள் ஒப்புக் கொள்வார் எனவும் கருதுகிறேன். பார்க்கலாம்.

அரிவார்ந்த விஷயங்களுக்கு எவருமே ஏகோபித்த அனுதாபத்தைத்தானே அளிப்பர்?

அப்போது… எங்களுக்கெல்லாம் விடிவே இல்லையா?

இல்லை.

23 Responses to “…ப்ளாக் பயங்கரவாதம் தொடர்கிறது…”

  1. தமிழன் Says:

    //ஒத்திசைவுத்வா. இதற்கான அவசியம் என்ன? ஒத்திசைவே பொறுக்கமுடியாமல்தான் இருந்தது – யார் அழுதார்கள், இது வேண்டுமென்று?//

    ஐயா, ஒத்திசைவை மீட்டெடுத்தமைக்கு நன்றி! உங்கள் தொண்டர்களை இப்படிக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே?! பின்னூட்டங்களைப் ஒத்திசைவு பதிவுகளைப் படிப்பதைப் வழக்கமாகக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவரா நீங்கள்?

    தங்கத் தமிழகம் தன் தலையில் பஹூத்தறிவுடன் மண்ணைவாரிக் கொட்டிக்கொள்ள முடிவெடுத்தமைக்காக இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒத்திசைவின் சேவை அத்தியாவசியமாகியிருப்பதை மறுக்கிறீர்களா?

    தமிழர்களும், தமிழகமும் எப்படி திராவிடியாப் பேடிகளால் தொடர்ந்து கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது என்பதை எவரேனும் துணிவுடன் பதிவுசெய்ய வேண்டுமல்லவா?

    இப்படி ஒத்திசைவின் இன்றியமையாத் தேவையை உணர்த்தும் பற்பல காரணிகள் உள்ளன, தயைகூர்ந்து தங்கள் சேவையைத் தொடருங்கள் ஐயா, நன்றி!


    • ஐயா, தமிழன். வருக, வருக. நிலையான பின்னூட்டங்களும், முடிந்தால் பதிவுகளும் தருக… 🙏🏿 உங்களைப் போன்ற, செயலூக்கமும் அறிவும் நிரம்பிய இளைஞர்கள்தாம் தமிழகத்தையும், ஆகவே பாரதத்தையும் தொடர்ந்து மேலெழும்பவைக்கவேண்டும்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஐயன்மீர், என் துணிவையும் மிகை மதிப்பிட விருப்பமில்லை. ஏதோ, தலைக்கு வந்தது சிலபல பதிவுகளோடு போயிற்று. அதற்குக் காரணகர்த்தாவும் இவ்விஷயங்களைக் கடந்து நேரிடைப் படிப்பினைகளைப் பெற்று, தனக்கான முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொள்வார் என நம்புகிறேன்.

      இன்னொரு விஷயம்; நீங்கள் இளைஞர், ஆகவே சொல்கிறேன். 1978-80களில் இந்திரா காட்டாட்சிக்கு எதிராக எழும்பிய ஜனதா கட்சியானது துகள்துகளாக உதிர்ந்ததும் ஒரு வெறுமை உணர்ச்சி; பின்னர் முதலாவது + இரண்டாவது பாஜக ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர்…. இதே மாதிரி, பல நிகழ்வுகள். தமிழக அளவிலும்.

      இந்த தேசத்துக்கு விடிவு உண்டா, அயோக்கியர்கள் வெறுத்தொதுக்கப் படமாட்டார்களா, நல்லாட்சி என்பது வரவேவராதா… என ஏங்கவைத்தவை அக்காலங்கள்.

      பின்னர், திடீரென்று (பல பத்தாண்டுகளாக உழைத்துதான் உள்ளுர்/மாநில அளவில் சாதனைகள் புரிந்துவிட்டுத்தான் மேலெழும்பி) மத்திய அரசு / பாரத அளவில் –  செயல்திறன் மிக்க, அப்பழுக்கற்ற, அரசச் சட்டகங்களையும் அரசியலமைப்பு ஆவணத்தையும் முழுவதும் மதிக்கும், பாரத விரும்பி ஒருவர் மேலெழும்பி  வருவார் என நான் கனவிலும்  (2000களின் ஆரம்பத்தில் கூட) நினைத்திருக்கவில்லை.
      ஆனால், அது 2014ல் நடந்தது.

      ஆகவே, தமிழகத்திலும் அது கைகூடும் என நம்புகிறேன்.

      ஏனெனில் – உற்சாகமான காலகட்டங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனப் படுகிறது.

      தமிழகத்திலும் அப்படியாப்பட்ட தலைவர்கள் (இப்போதைக்கு, அண்ணாமலை அவர்கள்தாம்,  தற்கால அரசியல் நிலவரங்களை அதிகமறியாத என் கண்ணுக்குத் தெரிகிறார் – இன்னமும் சிலபலர் இப்படி ஜொலித்துக்கொண்டு இருக்கலாம்) மேலெழும்பி வருகிறார்கள் –

      அண்ணாமலை அவர்களுக்கு த்ருஷ்டிசுற்றிப் போடவேண்டும். செயலூக்கம், தேவையற்ற வசைகள் இல்லாமை, ஆவண/புள்ளியியல் ரீதியாகப் பேசும் தன்மை,  படிப்பறிவு, பிடிவாதம், நேர்மை, அயரா உழைப்பு++  முக்கிய கல்யாணகுணமாக, முடிந்தவரை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு… அவரைச் சுற்றி குதூகலம் மிக்க, இளைஞர்குழாம் ஒன்றும் இருக்கிறது. அவர் பொலிவார். + தேசியக் கட்சிக்கான ஸ்தானத்தைத் தமிழகத்திலும் மீட்டெடுப்பார் எனப் படுகிறது.

      இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் நாமும், நம் அரசியல் தலைவர்களைக் குறித்துப் பெருமிதம் கொள்ளும் காலங்கள் வரும் எனத்தான் தோன்றுகிறது. பார்க்கலாம்.

      நான் ஒரு அதீத நம்பிக்கைவாதியோ? ஐயய்யோ!

      • தமிழன் Says:

        ஐயா, அண்ணாமலை அவர்கள் குறித்த உங்கள் அவதானிப்புகள்/மதிப்பீடுகளுடன் நூறு சதம் உடன்படுகிறேன், தமிழக அரசியலில் நம்பிக்கை அளிக்கும் தலைவராக அவர் ஜொலிக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பாஜக துடிப்புடன் செயல்படுவதையும், தமிழகத்தை மீட்டெடுக்கும் அரசியல் மாற்றாக உருவாகி வருவதையும் காணமுடிகிறது.

        ஆனால் ஐயா, இங்கிருக்கும் அரசியல் சூழலில் மாற்றத்தைக் கொண்டுவருவது அத்தனை எளிதானதுமல்ல. சமீபத்திய உதாரணமாக நீட் தேர்வை முன்வைத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்கொள்வோம்.

        நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள தகுதித்தேர்வு. இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது திமுக+காங்கிரஸ் கூட்டணியில் அமைந்த அரசு. அனைத்து மாநில மாணவர்களும் இத்தேர்வை எழுதுகின்றனர், எவருக்கும் விலக்களிக்கப்படவில்லை. இத்தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்கனவே அதிமுக அரசு முயற்சித்துவிட்டது, உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. எந்த மாநில சட்டமன்றத் தீர்மானமும் இத்தீர்ப்பை மாற்றவோ/ தேர்விருந்து விலக்கு பெறவோ போதுமானதல்ல. அடிப்படைக் கல்வி அறிவுள்ள எவருக்கும் இந்த உண்மை புரியும்.

        இருப்பினும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இதன் பயன்தான் என்ன? இந்த கேலிக்கூத்தில் பங்கேற்காத ஒரே அரசியல் கட்சி பாஜக மட்டுமே, மற்ற (தேர்விலிருந்து விலக்களிக்கக் கூடாதென உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட) அனைத்து கட்சிகளுமே இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளன. நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த நியாயமான காரணமும் இல்லாதபோதும், வெற்றுக் கூச்சலிட்டு மாணவர்களைப் பலியாடுகளாக்கி வருகிறார்கள்.

        இச்சூழலில், அண்ணாமலை உண்மை நிலையை உரத்துச் சொல்கிறார். பொய்யிலே பிறந்து வளர்ந்து ஊழலில் திளைக்கும் நபும்சகர்கள் அவரை எதிர்க்கின்றனர். இங்கிருக்கும் ஊடகங்களில் பெரும்பான்மை அக்மார்க் RSB சான்று பெற்றவை என்பதும் வெள்ளிடைமலை. இவையனைத்தையும் தாண்டி தர்மம் ஓர்நாள் வெல்லும் என்ற நம்பிக்கையைத் தக்கவைக்க உங்களைப் போன்றோரின் தொடர் பங்களிப்பு அவசியம் ஐயா! 🙏

    • தமிழன் Says:

      திருத்தம்: பின்னூட்டங்களைப் பதிவிடவில்லையென்றாலும்*

  2. nparamasivam Says:

    10 பேர் + 1000 பேரில் நானும் ஒருவன் என எண்ணுகையில், இறும்பூது எய்தி, உள்ளம் விம்முகிறேன்.


    • ஐயா, நன்றி! 

      ஆனால், 1000 பேரா??? அம்மாடியோவ்! 100மடங்கு மிகைமதிப்பீடு செய்கிறீர்களே! அடுக்குமா?

      மற்றபடி, எதை சுத்தம் செய்வதற்கும் இப்போதெல்லாம் யாரும் விம் உபயோகிப்பதில்லை. நான்கூட ஒருமாதிரி அழுக்குமஞ்சள் பிசுபிசுப்பு திரவத்தை வைத்துத்தான் பாத்திரங்களைக் கழுவுகிறேன்.

  3. dagalti Says:

    புனர்ப்ரவேஶ வாழ்த்துகள்.

    படிப்பார்வம் எனும் சந்தாவை முறையாக செலுத்திய முறையில் கேட்கிறேன், கடந்த மூன்று மாத ஒத்திசைவு இதழ்களை வலையேற்ற என்ன தடை?

    ஆர்க்கைவில் தேடுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறதய்யா. இதற்கு பாசிசபாசகவுக்கே வாக்களிக்கலாம்.

    நீங்களே ஆவன செய்யாவிடில் திமுகவுக்கு வாக்களித்துவிடுவேன் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

    /ஒத்திசைவிஸ்ம்/

    நினைத்தேன்.
    “நான் அக்நாஸ்டிக், பண்பாட்டு செயல்பாட்டாளன், ஞானமார்க்கி, குறுகிய மத அனுட்டாங்களுக்கு அப்பாற்பட்டவன்… “ என்று படம் காட்டுபவர்களிடம் தான், கடைசியில் இப்படி மதவெறி, பாறைநக்ஷத்திரம் போல, தலைவிரித்தாடுகிறது.

    ஒத்திவைணவம் எங்கே?

    எங்கள் வகையறா நம்பிக்கையை சம்பாதித்தால் தான் ஒத்திசைவியலுக்கு போதுமான கட்டுரைகள் தேத்தமுடியும்.

    ஆவன (cow forest) செய்யவும்.


    • // கடந்த மூன்று மாத ஒத்திசைவு இதழ்களை வலையேற்ற என்ன தடை?

      “2011லிருந்து இந்தக் கடையின் முந்தானை விரிக்கப்பட்டு ஒருமாதிரி 1400+ பதிவுகள் ஒப்பேற்றப் பட்டுள்ளன. இவற்றில் ஒரு மாதிரி குத்துமதிப்பாகச் சுமார் 400-450 பதிவுகள் (பெரும்பாலும் திராவிட-எதிர்ப் பதிவுகள்), மேற்கண்ட கலந்துகட்டிய நிகழ்வுக்குப் பின் எங்கே போயின எனத் தெரியவில்லை, இவற்றை வேர்ட்ப்ரெஸ் தளத்திலிருந்து மீட்க முடியுமா என அரைமனதுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      இன்னமும் பலப்பல பதிவுகளில் பல பத்திகளைக் காணோம். ஆச்சரியம்.

      சிலவற்றில் நான் எழுதாத விஷயங்கள் எங்கிருந்தோ வெட்டியொட்டப் பட்டிருக்கின்றன. ஆ!”

      எதையும் சரியாகப் படிக்காமல், குறுக்குக்கிறுக்குக் கேள்விகேட்பதையே வழமையாக வைத்திருக்கிறீர்கள், ப்ளடி. What happened was, some kinda mindless vandalism, let us not get into the details-of-it here please!

      எப்படியும், உங்கள் பார்ப்பனிய-பெண்ணடிமைவாத-ஆரிய கைபர்போலன் ஊர்த்வபுந்த்ர கட்டுரை ‘ஒத்திசைவுதாசரியம்’ தொகைக்குத் தேவையில்லை; ஈரோடு பாபு அவர்கள், என்னையே உங்கள் பெயரில் ஒரு கட்டுரையை எழுதித் தரச் சொல்லிவிட்டார். நன்றி!

      // ஒத்திவைணவம் எங்கே?

      ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம். அடுத்தமுறை இந்த அலங்கோல அத்தியாயம் அரங்கேறும்போது அவசியம் ஆவன செய்கிறேன்.

      ராமானுஜாச்சாரியர் துரத்தப்பட்டார் எனும் கதையாடல், இப்போதுதான் எனக்குப் புரிகிறது. உங்களுக்கு?

  4. Aathma Says:

    ஏழரைகளை இப்படி விரகதாபத்தில் தவிக்கும்படி செய்தீர்களே ஐயா..😜


    • எல்லாஞ்செரி; பசலை நோய் வந்ததற்கான சான்றை நோட்டரைஸ் செய்து உடனடியாக அனுப்பி வைக்கவும்.

      பின்னர் தாகசாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கலாம்,

  5. Swami Says:

    Thalaivaaaaa!
    Welcome back!!

  6. Kannan Says:

    இனிமேல் சந்தா மிச்சம்ன்னு நெனச்சேன், மறுபடியும் திரும்பி வந்து……….ம்ம்ம்

    எனிவே Welcome back :)


    • ஆத்மார்த்தமான வரவேற்புக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

      ஆனால், சந்தேகாஸ்பதமான சந்தாசாஹிப்புகளுக்கு இங்கே இடமில்லை.

      ப்ளடி.

  7. Anonymouse Says:

    Ram 2.0; welcome back!


    • Thanks, Anonymouse 2.0.

      However – 2.0 features are exactly the same as 1.0 (of course, no need or possibility to develop further, that which is already perfect, yeah?), but one bug has been debugged. So, it is more like a bug-fix release.

      So, more like ver 1.000001.

      emoclew.

  8. Sai Says:

    Welcome Back!


    • ஐயய்யோ! இங்கயும் வந்த்ட்டியா?

      இப்பத்தானடா மொழ நீள அறிவுரெ கொட்த்து முட்ச்சே…

      அத்தினி அறிவொரய கேட்டுக்கினு அமேதியா இர்ந்தாக்க, இப்டீ முதுவ்ல குத்திட்டியே!

  9. B Says:

    My already worse GAD was shooting up. Thank you for coming back!

  10. Sesha a.seshagiri Says:

    மீண்டு வந்ததற்கு நன்றி. ஆனால் திராவிஷ எதிர்ப்பு பதிவுகள் 400-450 வரை கிடைக்கப்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எப்படியாவது மீட்டெடுக்கவும். ஏனெனில் இந்த திராவிடியாக்களிடம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மல்லுக்கட்டும் போது உங்கள் பதிவுகள் உதவிகரமாக இருந்தது.வருங்காலத்தில் இது இன்னும் கூடும் என்பதால் பார்த்து ஆவன செய்ய சக ஏழரைகளின் சார்பில் வேண்டுகிறேன்


    • ஐயா, புரிகிறது. அடுத்த 3-6 மாதங்களுக்குள் விஷயங்களைச் சரிபார்த்து முடிந்தவரை உயிர்ப்பிக்கிறேன். என் தற்போதைய கணிப்பில் சுமார் 90-95% பதிவுகள் முழுவதும் மீட்கப்படலாம்.

      பார்க்கலாம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s