“அப்படியானால், ஷண்மதங்களில் ஏன் ஜைனமும் பௌத்தமும் இல்லை?”
October 7, 2022
ஏனெனில் – இதற்கு ஒருமாதிரி, என் கடலூர்சீனுகுருவி மூளைக்கு எட்டிய வகையில் சிலபல காரணங்கள்:
0. ஏனெனில் அது ‘அஷ்டமதங்கள்’ எனத் தொகுக்கப் படவில்லை, மேலும் ஷண்மதங்களில், முன்னமே ஆறு இருக்கைகளும் ரிஸர்வ் செய்யப்பட்டுவிட்டனவே! (மன்னிக்கவும்!) :-)
1. முக்கியமாக, ஷண்மதங்கள்/shanmata பௌராணிக மரபை அடிப்படையாகக் கொண்டு ‘பக்தி’ மூலமாக இறையை/பரமபதத்தை அல்லது மோட்சத்தை அடையும் வழிகள்.
2. வேத வழி நெறிகளையும் பின்னர் வந்த உருவ வழிபாடுகளையும் (சரி, வேதங்களிலும் உருவக வழிபாடு இருக்கிறது) பின்பற்றி, பின்னர் தொகுக்கப் பட்டவை இவை.
3. சிவ-விஷ்ணு-ப்ரஹ்ம தொகை மும்மூர்த்திகளின் மீது கட்டியெழுக்கப் பட்டது பாஞ்சாயதானம் (இறையின் ஐவகை இருப்புகள் – சிவன் (சைவம்) சக்தி (சாக்தம்) விஷ்ணு (வைணவம்) ஸூர்யன் (ஸௌரம்) கணபதி (கணபத்யம்) – – இதில் குமரன் / கார்த்திகேயன் / முருகன் / சுப்பிரமணியன் தொக்கி நிற்கிறார், நேரடியாக இல்லை; ஷண்மதம் ஆகும்போது அவரும் கூடச் சேர்கிறார். (கௌமாரம்).
நாம் சாவகாசமாக திருச்சி மலைக்கோட்டை (இதனை நான் பெரும்பாறை எனத்தான் குறிப்பிடும் வழக்கம், இப்படிச் சொன்னால் திருச்சி உயர்வுநவிற்சி அணி வெறியர்கள் 1 & 2 சீண்டப்படுவார்கள். ஆனால்…) சென்று அதன் அடிவாரத்தில் உள்ள ‘பாண்டிய கால’ குகைகளைப் பார்த்தால் (பொதுயுகம் 7-8 நூற்றாண்டுகள்?) – இந்த மும்மூர்த்திகளின் உருவக மேலடுக்காகச் சிருஷ்டிக்கப் பட்டுள்ள (பின் சுவற்றில் என நினைவு) ஷண்மத ஊற்றுக்கண்களைப் பார்க்கலாம்; இதேபோல இருக்கும் கடவுளர் மூர்த்திகள் திருப்பரங்குன்றத்திலும் உள்ளன – ஆனால் ஸூர்யன் தவிர்த்து என நினைவு.
இவற்றையெல்லாம் இம்மாதிரி வழிபாட்டுப் பாரம்பரியங்களையெல்லாம் ஜைன-பௌத்த மார்க்கங்களுடன் நேரடியாக இணைக்க முடியாது அல்லவா? மேலும், இவற்றை இணைக்க நிரவ – சமுதாயக் காரணிகள் இருக்கவேண்டும். ஆனால் அவை ஷண்மதங்கள் பகுக்கப்பட்டுச் செம்மையாக்கப் பட்டபோது இல்லை என்பதாகவும் இருந்திருக்கலாம்.
-0-0-0-0-0-
முந்தைய கட்டுரையில் (கோதம ‘புத்தர்,’ பௌத்தம் எனும் ஹிந்து/ஸனாதன மார்க்கமொன்று – கேள்விகள், குறிப்புகள் October 6, 2022) எழுதியிருப்பது தான் – பௌத்தமும் சமணமும் சர்வ நிச்சயமாக வேதங்களை மறுதலிக்கவில்லை என்றாலும் , மாறாக மதித்தாலும், தாங்கள் தர்ம மார்க்கத்தினரே எனச் சொன்னாலும் ஹிந்து/தார்மீக வழிமுறைகளில் வேதங்களைப் பின்பற்றியேயாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
மறுபடியும் சொல்கிறேன்: சமணமும் பௌத்தமும் ‘அவைதீக’ சமயங்கள் அல்ல.
நம் வாழ்க்கைக்கான கையேடாகக் கருதக்கூடிய பகவத்கீதையே, நம்மை ~’நன்றாக யோசித்து, ஆராய்ந்து உனக்கு உவப்பானதைச் செய்’ என்பது போலச் சொல்வதைச் சிரமேற்கொண்டு பார்த்தால் – ஷண்மதங்களில் இவை இருக்க முடியாது. நமது திருப்திக்கு அஷ்டமதங்கள் என இவற்றையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் ஜைனத்திலும் பௌத்தத்திலும் பிற தர்ம/ஹிந்து மார்க்கங்களில் உள்ள அனைத்து (ஒன்றுகூட விடாமல் அனைத்தும்!) கூறுகளும் இருக்கின்றன.
பாரம்பரிய நினைவுகள்/நம்பிக்கைகள் படி ஆதிஷம்கரர்/ஆதிசங்கரர் இவற்றைத் தொகுத்தார் எனத்தான் பரவலாக கருத்து இருக்கிறது. அப்படியும் இருக்கலாம்.
இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.
இந்த ஷண்மதங்கள்-சங்கரர் பற்றி 1969ல் ஸ்ருங்கேரி மடத்தால் தொகுக்கப்பட்ட அருமையான கட்டுரைகள் இருக்கின்றன. மேலதிகமாக விவரம் வேண்டுமெனில் அவற்றைப் படிக்கலாம். தேடி. லிங்க் கிடைத்தால் நீங்கள் கொடுங்கள்; சரியா?
நன்றி.
பின்குறிப்பு + பொறுப்புத்துறப்பு: மேற்கண்ட வியாக்கியானத்தில் தவறுகள் என ஏதேனும் இருந்தால், அவற்றுக்குக் கடலூர்சீனு அவர்கள் மட்டுமே தாம் காரணம், கூடவே அவருடைய ஒற்றைப்பெரும்பேராசானும். அவர்கள்தம் பாதாரவிந்தங்களில் இக்குறிப்புகள் சமர்ப்பிக்கப் படுகின்றன.
—
October 8, 2022 at 13:37
எதற்கு இதில் பொறுப்பு துறப்பு ? புரியவில்லையே !
October 8, 2022 at 16:09
ஐயன்மீர்! புரியாமல் இருப்பதற்காகத்தான் அப்படி. க்ஷமிக்க.
October 9, 2022 at 20:57
Sir
Sorry for not reading the original Buddha text. Pl refer the start up books
As a stopgap just Googled what the great philosopher patriot and my ideal Swami Vivekananda says on this.
I think the essence is
Buddha was agnostic about GOD not cared abt it. For him there was a pressing need to clean the system of priestcraft confusions.
The link seems to be authentic
‘
He preached no theory about Godhead—he was himself God, I fully believe it’
https://vivekavani.com/swami-vivekananda-quotes-gautama-buddha/
October 10, 2022 at 08:49
Thanks for your considered comments & sweet words.
//For him there was a pressing need to clean the system of priestcraft confusions
Sir, I do not think ‘Buddha’ even said anything remotely like that. But I agree that ‘popular history’ is a different beast. Full of cobwebs.
Also.
I have fundamental respect for Swami Vivekananda, what he stood for considering what he was up against. (and also for Bapuji and Ambedkar to a significant extent, though not at all in-toto; for example, Ambedkar seems to have digested completely, the Oriental Spin on the Buddha and believed them all to be true)
Sri Vivekananda was a towering figure – and in those days, though he was well versed in Vedantic thoughts, history and much else – apart from his personal experiences – his access to the Sources was limited. (It would have been a different story altogether, if he were living today, with all the Access Networks – given his sheer prescient brilliance and indefatigable hardwork that he was capable of)
With due respect, I am of the opinion that, the most basic thing we (as Bharatiyas) need to do to our Hindu/Indic Heroes is that, wherever warranted & possible, after having digested what they have stood for in a relevant context, we should add on to what they were saying & how they were approaching various aspects, based on emergent, current knowledge. That’s what they did to their forefathers and mothers. And, that’s what we should do too, if we are grateful for they did in their times, against all odds.
We are in a fortunate position to sit on their really broad & strong shoulders + so therefore we should, at the very least, seek a bit farther than repeating what they said.
That said.
What Swami Vivekananda said about Buddha needs to be relooked at. There is perhaps a historical core to the Buddha – but most of what we read about him (even in these days and times) is mostly hagiography.
Thanks for the patience.