உக்ரைனும் திராவிடத்தமிழின் வீரதீரக் கல்விப் பராக்கிரமும் – குறிப்புகள்

March 2, 2022

1

இப்பதிவில்…

. நகைக்கத்தக்க திமுக திராவிடப் பரப்புரையான, “இசுடாலிர் தலைமையில் ஓடாக உழைத்துத் தேய்ந்து, அரும்பாடுபட்டு, உலகமோ வரலாறோ காணாத அளவில் எல்லாருக்கும் அழுத்தம் கொடுத்து, உக்ரைன்போர் இக்கட்டில் இருந்த தமிழ் மாணவர்களைக் கொணர்ந்தோம்!”  வகை வாய்ச்சவடால்கள்…

(வேறு எந்த பாரத மாநிலமாவது இம்மாதிரி, விளம்பர / ஸ்டிக்கர்முதல்வாதக் கேவலர்களைக் கொண்டிருக்கிறதா எனும் கேள்வி…)

. உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய ஞானம், பின்புலம், நடப்புகள், ‘பரவலாகத் தெரியவராத, ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்,’ ‘இது எப்படிப் போகும்’ வகை ஆரூடம் போன்றவை…

. மேற்கண்ட #2ன் மீதான பாரதத்தின் அரசாங்க/அதிகாரபூர்வ கருத்து + செயற்பாடுகளின் மீதான என் சொகுசுக் கருத்து…

பற்றியெல்லாம் இல்லை.

ஏனெனில், தற்போது அவை கைவசம் ஸ்டாக் இல்லை. விக்கிபீடியா ட்விட்டர் படித்து திடீரெக்ஸ் ஞானம் பெற்றுக்கொள்ளக் கொடுப்பினையும் இல்லை.

மாறாக.

2

மாறாக, எனக்குச் சர்வ நிச்சயமாகச் சிலபல கேள்விகள், என் காத்திரமான, சொந்த, பல்லாண்டு களஅனுபவங்கள் சார்ந்து இருக்கின்றன; திராவிட ஸ்டாக் +/ தமிழ்வெறி ஸ்டாக் பொறுக்கிக் கும்பல்களுக்கு மானம் வெட்கம் ரோஷம் என இருந்தால், இவை குறித்து, சிலபல சால்ஜாப்புகளையாவது வெளியிட வேண்டும் – ஆனால் மாட்டார்கள், ஈனப் பிறவிகள்.

சரி; கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில் என் ஆதங்கங்கள் இருக்கின்றன.

  • தமிழகக் கல்வியின் உதவாக்கரை நிலை
  • தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களின் தரம்
  • தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களுக்கான வேலைவாய்ப்புகளின் நிலை
  • தமிழகம்சார் அரைகுறை உக்ரைன்கல்வியையும் அரைகுறையில் விட்டு ஓடிவரும் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களுக்கான கல்வித் தொடர்ச்சி/முடித்தல்
  • தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களின் புற நானூற்று வீரமறம்

இனி மேற்கண்டவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

3

தமிழகக் கல்வியின் உதவாக்கரை நிலை:

இசுடாலிர் சொல்கிறார்:

“சுமார் 5000 தமிழக மாணவர்கள் உக்ரைன் தேசத்தில் படிக்கிறார்கள்!”

இது படுகேவலமல்லவா? இத்தனைக்கும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அப்படியொன்றும் பிரமாதமான தரம் வாய்ந்தவை அல்ல. இரண்டாம்தர சீன, இந்தியப் பல்கலைக்கழகங்கள்,  மூன்றாம்தர ஆஸ்த்ரேலிய, அமெரிக்க, கனடா பிரதேசங்களின் கல்வியகங்களை விட, படு கேவலமானவைதான்.

என்னவோ, தமிழகத்தின் கல்வி நிலை – உச்சகட்ட உயர் நிலை எனப் பெருமையாகப் பீற்றிக் கொள்கிறோம்… பாரதத்திலேயே கல்வி நிலையில் தமிழகம் தான் உயர்ந்தது எனப் பிலுக்கிக் கொள்கிறோம்.

ஆனால் தமிழகக் குப்பைகளை விட, உக்ரைன் குப்பை உயர்ந்தது என ஒருவரல்ல நூறுபேரல்ல… சுமார் 5000 மாணவர்கள் இப்படித் தமிழகக் கல்வியைப் பகிஷ்கரித்து உக்ரைன் எனும் பாவப்பட்ட நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

சரி, இந்த வெற்றுவேட்டு மாணவர்களில் கணிசமானவர்கள் மருத்துவம் சார்ந்த கல்வி(!)களை, புலங்களை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் – பிறர் ஒருமாதிரி பொறியியல் பொட்லங்காய் எனப் பொரிக்கச் சென்றிருக்கிறார்கள்.

முன்னதற்காகவாவது, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் (ஏன், பிற பாரதக் கல்லூரிகளிலும்) இடம் கிடைப்பது கஷ்டம், ஏனெனில் அவற்றின் சேர்க்கைஎண்ணிக்கை குறைவு, தரக் கட்டுப்பாடு அதிகம் என ஒருமாதிரிப் புரிந்துகொள்ளலாம். மேலும் பலப்பல பிரச்சினைகள்: அப்படியிப்படி என 70%க்கும் மேலாக இடஒதுக்கீடு + பல இடங்களில் படித்தவுடன் 10 வருடம் இங்குவேலை செய்தேயாகவேண்டும் எனும் விதி + மோசமான வாத்திகள் ​ + புரிந்துகொள்ள முடிந்தாலும், தனியார் கல்லூரிகளில் மிக அதிகமான கட்டணங்கள்/செலவு +++.

ஆனால், பொறியியல் தர ஏட்டுச்சுரைக்காய் படிப்புகள்? இந்த எழவுகளுக்கு ஏன் தமிழ மாணவர்கள் வெளி நாட்டுக்குச் செல்லவேண்டும்? நம் எழவெடுத்த தமிழகத்திலேயே எக்கச்சக்கமான தனியார் பொறியியல் கசாப்புக் கடைகள் திராவிட ஈயோட்டிக்கொண்டிருக்கும்போது, கல்விமாமாக்களுக்கு மாமாவேலை செய்ய தினவு எடுத்தாலும் அதனைச் செய்யமுடியாதபடிக்கு மாணவர்கள் அவர்களை/அவற்றை வெறுத்தொதுக்கும்போது… இப்படி வளர்ந்துவரும் வருங்காலப் பெரும்பொறியியலாள இளைங்கர்கள் வேறு நாடுகளுக்குச் சென்றால்??

நிலைமை இப்படி இருக்கையிலே…

தமிழக கல்விமாமா பொறியியல் பொரியல் கூட்டாஞ் சோற்றுக் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள் மீது தமிழகமே காரித் துப்பவேண்டாமா? (ஒரிரு விதிவிலக்குகள் (மட்டுமே) இருக்கின்றன, பொங்க வேண்டாம்!)

பொதுவாகவே, நம் தமிழகத்துக் கல்வித்தரத்தின் இழி நிலையைக் குறித்துத் தார்மீகக் கோபமும் அதனைச் சரிசெய்வதில் மும்முரமும் இருக்கவேண்டாமா?

பிற மாநிலங்களாவது, அவர்களுடைய ‘கல்வித்தரம் தான் உலகிலேயே உயர்ந்தது’ எனப் பொதுவாகவே பீற்றிக் கொள்வதில்லை. ஆகவே, அங்கிருந்து டெம்பரவரியாகப் புலம்பெயர்ந்து சல்லீஸாகச் சகாயவிலையில் கிடைக்கும் சான்றிதழ்களைப் பெறும் பாவப்பட்டவர்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் நம்மை?

தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களின் தரம்:

இப்படி வெளி நாட்டில் படித்துவிட்டுவந்த (குறிப்பாக உக்ரைன், சீனா, ஆஸ்த்ரேலியா) இளம் பொறியியலாளர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். ஆனால் உக்ரைனில் படித்து(!)விட்டு, மறுபடி தமிழகம் திரும்பிவந்து குப்பைகூடக் கொட்டமுடியாத நிலையில் இருந்த(இருக்கும்?) இரு மருத்துவப் படிப்புக் கோமாளிகளைப் பற்றிக் கொஞ்சம் விலாவாரியாகவே விலாநோகச் சிரித்தபடி அறிவேன் –  நேரடியாக அல்ல.

பொறியியலாளர்களை என்னால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்க முடிந்திருக்கவில்லை. எல்லாம் ஈஸிஆர் ஜேப்பியார் திருவண்ணாமலை எஸ்கேபி  பொறியியல் கல்லூரிக் கும்பல் அளவுக்குத் தான் கேவலமாக இருந்தார்கள். (இந்த உக்ரைன் பொறியில் அகப்பட்ட எலிகளை, உக்ரைன்-மைக்ரென் (UkraineMigraines – உக்ரைனியத் தலைவலிகள்; புலம்பெயரும் migrating எனும் வகை பகடியும் ஒருமாதிரி உள்ளிருக்கிறது)) எனக் கிண்டலாகவே குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது; பத்து-பதினொன்று வருடங்களுக்கு முந்தைய செய்திகள் இவை; இப்போது நிலைமை சரியாகியிருக்கலாம், அல்லது இன்னமும் மோசமாகியிருக்கலாம் – இவ்விஷயங்கள் நிகழ்காலங்களில் எப்படி இருக்கின்றன என இப்போது சரிபார்க்கவில்லை)

உக்ரைன் ஸர்டிஃபிகேட் கசாப்புக்கடை மருத்துவர்கள், பாரதத்தில் (அவர்கள் அங்கீகரிக்கப் பட) அவர்கள் எழுதித் தேர்ச்சிபெற வேண்டிய தேர்வுகளில் வெற்றிகரமாகத் தோற்றனர்.

ஆகவே, இன்றுவரை அவர்கள் கமுக்கமாக ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை(!) செய்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன்.

அவர்கள் டுபாக்குர்களானாலும், திராவிட டுபாக்குர்கள் ஆனதால், இந்த ஊழல்களெல்லாம் சாத்தியம் எனப் புரிந்துகொள்கிறேன்- அந்தத் திண்டிவனம்-விழுப்புரம் பிராந்திய மருத்துவமனையின் பெயரையும் சொல்லவில்லை – ஏனெனில் இவர்கள் தங்கள் கூறுகெட்ட பெற்றோர்கள் நடத்தும் கடைகளில் அன்றோ ‘வேலை’ செய்கின்றனர் – பின்னர் அவற்றுக்கு ‘அடுத்த தலைமுறை’ முதலாளிகளாகவும் ஆவர்?

தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களுக்கான வேலைவாய்ப்புகளின் நிலை:

பெரும்பாலும், இவர்களைச் சீந்தக்கூடாத நிலைமைதான்.

எனக்குத் தெரிந்து எந்தவொரு பெரிய மருத்துவமனையிலும் இவர்கள் இல்லை. இதற்கு முக்கியமான காரணம் – இவர்களுடைய தகுதியையும் படிப்பையும் உழைப்பையும் தொழில்சுத்தத்தையும் வைத்துக்கொண்டு ஒரு மசுத்தையும் பெரும்பாலும் பிடுங்க முடிவதில்லை. (அதாவது அவர்கள் திரும்பிவந்து, நேஷனல் மெடிக்கல் கௌன்ஸில் ஆஃப் இந்தியா தேர்வினைத் தப்பித்தவறித் தாண்டியிருந்தாலும்கூட…)

பெங்களூர், சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி என எந்த பெரிய மருத்துவமனைக்குச் சென்றாலும் (எனக்காக அல்ல) குறிப்பாக இந்த விஷயங்களைக் கேட்பேன். எந்தவொரு அமைப்பிலும் இந்த உக்ரைன்-சீனப்படிப்பு தண்டங்கள் வேலை செய்யவில்லை. தமிழகம் முழுவதும் இந்த உக்கிரவாத உக்ரைன்-மைக்ரைன்கள் இப்படித்தான் இருக்கவேண்டும். (அப்படி இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சிதான், தரவுகளுடன் உற்சாகமாக என் கருத்தைத் தவிடுபொடியாக்குங்கள்!)

பொறியியலிலும் அப்படியேதான் நிலைமை. எந்தவொரு புகழ்பெற்ற உக்ரைன்-மைக்ரைன் இஞ்சிநீர் கஞ்சிநீரையும் இதுவரை நான் சந்தித்ததில்லை; கேள்வி கூடப் பட்டதில்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் – என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

இம்மாதிரி உக்ரைனில் முட்டைவாங்கிக் குஞ்சு பொரிக்கும் குஞ்சாமணிகளுக்கான (இவர்கள் பெரும்பாலும் ஆண் குஞ்சாமணிகள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்) வேலைவாய்ப்புகள் இரண்டுவகை.

1. அநியாயத்துக்கும் அதிகமான டௌரி./ வரதட்சிணை இவர்களால் வாங்கமுடியும். இவர்களுடைய பெற்றோர்களால் வசூலிக்க முடியும்.

2. தங்கள் பெற்றோர்களின் மருத்துவக் கசாப்புக் கடைகளில் ஆட்டொமெடிக் எண்ட்ரி – டாக்டர்களாக இல்லாவிட்டாலும், மேலாண்மைக்காரர்களாக.

நன்றி.

தமிழகம்சார்,அரைகுறை உக்ரைன்கல்வியையும் அரைகுறையில் விட்டு ஓடிவரும் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களுக்கான கல்வித் தொடர்ச்சி/முடித்தல் நிலை:

சரி, போருக்குப் பயந்து நம் பிள்ளைகள் ஒடி வருகிறார்கள். இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆனால்…

இசுடாலிர், இந்த ஓடிவந்திகளில் பொறியியல் இளைங்கர்களுக்கு மட்டும் கல்வியைத் தொடர மேலேற்பாடு செய்கிறாராம்.

இது எப்படிப் போகுமென்றால் – திமுக திராவிடக் கல்விமாமாக்கள் நடத்தும் பொறியியல் ஈயோட்டிக் கசாப்புக் கடைகளுக்கு இந்த பாவப்பட்ட இளைங்கர்கள் மடைமாற்றம் செய்யப் படுவார்கள். ஏன், தமிழக அரசே (நம் வரிப்பணம் மூலமாக) இதற்கான செலவுகளை நேரடியாக அந்தக் கசாப்புக் கடைகளுக்குக் கொடுத்துவிடும் கூட.

கல்விப்பணிக்குக் கல்விப்பணியும் ஆயிற்று – ஓடிவந்த பிள்ளைகளுக்குச் சரணாலயம் கிடைக்கும்.

கல்விப்பிணிக்குக் கல்விப்பிணியும் ஆயிற்று – ஒட்டை உடைசல் கசாப்புக் கடைகளுக்கு உதவித்தொகையும் கிடைக்கும், சரிதான்…

வெளங்கிடுண்டே!

இந்தப் பொறியியலில் அகப்பட்ட எலிகளைப் பொரித்தெடுக்க, இவர்கள் அனைவரையும் ஏன், அரசுக் கல்லூரிகளில் மட்டுமே அனுமதிக்கக் கூடாது? ஏன் அவர்களுக்காக ஒரு தனி நுழைவுத் தேர்வு வைத்து அவர்களின் அளப்பரிய தகுதிகளை அளந்து – பின்னர் அவர்களை அனுமதிக்கக்கூடாது?

இதெல்லாம் ஒருபுறமிருக்க, அந்தப் பாவப்பட்ட அரைகுறை மருத்துவ மாணவர்களுக்கு இந்தத் திராவிடத் தலைமை தண்டங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?

அவர்களை ஏன் லூஸ்ல வுடுகிறார்கள்? பொறியியல் மாணவர்களை மேலும் பொரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவது போலவே, மருத்துவ மாணவர்களுக்கு என ஏதாவது செய்தால் பலவித நிறுவனங்களும் அமைப்புகளும் (நியாயமாகவே, சட்டதிட்டங்களுக்குட்பட்டு) பாயும் எனும் பயத்தினாலா?

அதாவது திராவிடச் சித்தாந்தங்களின்(!) படி எதைச் சுளுவாகச் செய்து திரவியம் தேடமுடியுமோ, அதாவது, மேற்கொண்டு ‘கல்லா கட்டமுடியுமோ,’  அதனை ஆர்வத்துடன் செய்வோம் – எதற்காவது மெனக்கிடவேண்டும் என்றால், அவற்றை லூஸ்லவுடுவோம்.

…இவ்ளோதானேடா வொங்க விடியல் அரசியல்? ப்ளடி??

தமிழகம்சார் ‘போன மச்சான் திரும்பிவந்தான்’களின் புறநானூற்று வீரமறம்:

தமிழிளைஞர்களின் – வீரம், ஜல்லிக்கட்டு, போராளி, போராட்டத் தட்டிகள், வீரவணக்க முழக்கங்கள், நடிகர் தட்டிக்குப் பாலாபிஷேகம். மெரீனா கடற்கரையைச் சிறுநீறால் முழுங்கடித்தல் எனப் பலவகைக் கூறுகெட்ட கோமாளித்தனங்களை நாம் அறிந்ததே.

ஏமாந்தால், புறநானூற்றுத் தாய் புறமுதுகு வாங்காத சிறுவன் அப்படியிப்படி எனப் புளகாங்கிதமுறுவதும் நம் வழமைதான்.

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்” எனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

— காக்காய்பாடினியார் (புறநானூறு #278)

ஆ! எனக்கே தினவு எடுக்கிறதே! எங்கேடா என் வேல்?

என்னது?? அது ஒரு திமிங்கலத்தோடு  காதல் பண்ணி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதா? ப்ளடி.

…உண்மையென்னவென்றால் – இந்தப் புறநானூறு வீரதீரம் எல்லாம் அக்காலக் கவிங்கர்கள் ரூம்பு (‘குடில்’) போட்டு ரோசிச்சி எழுதியவதைதான். அவற்றுக்கு அரசல்புரசலாக அல்லது புள்ளியல் ரீதியாக ஒன்றிரண்டு சம்பவங்கள் ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் அவை பரவலான உண்மைகளோ, தொடர்ந்து நிலப்பரப்பு முழுதும் நடைபெற்ற வரலாறுகளோ அல்ல; மாறாக அவை வெறும் (ஆனால் ரசிக்கத்தக்க, புளகாங்கித மசுர்க்கூச்சலடையலவைக்கும்) மானேதேனே மறமேஅறமே வகையறா புனைவுகள் மட்டுமே!

சரி. உக்ரைன் பிரச்சினைக்கு வருவோம்.

நம்மில் ஒருவராவது,

‘டேய்! சின்ன பஸ்ங்க்ளா, உங்களுக்குக் கல்விப்பிச்சை இட்டிருப்பது உக்ரைன். உங்கள் நாட்டில் படிக்க உங்களுக்கு வக்கோ, தரமோ, இடமோ இல்லாதபோது, உங்களுக்குக் கஷ்டப்பட்டுப் படிப்பிக்க முன்வந்தது இந்த உக்ரைன். மேலும், சீனா அளவுக்குப் பணம் வசூலிக்காமல், அதன் கெடுபிடிகள் இல்லாமல், இதனைச் செய்யவில்லையா அந்த நாடு? இது உண்மையா இல்லையா? உங்கள் செய்நன்றி எங்கே போயிற்று?

இதற்கு நன்றிக்கடனாக, புறநானூற்று வீரத்துடன் உங்களில் 0.01% பேர்களாவது அதற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடினீர்களாடா? அங்கே தங்கியிருந்து உங்களால் முடிந்தவரை உக்ரைன் சார்பாக அதற்குப் போருதவி பொருதலுதவி எனச் செய்யாவிட்டாலும் – கூடமாட ஒத்தாசையாவது செய்தீர்களாடா, அணில்போலவாவது உதவி செய்தீர்களாடா?

வெறும் வீரவஜனமாவது திராவிடத்தனமாக வெளியிட்டீர்களாடா?

வெறுமனே வாலைச் சுருட்டிக்கொண்டு, அழுது, ஒப்பாரி வைத்து, ‘எங்களைக் காப்பாற்றுங்கள், நாங்கள் வீரத்தோடு தப்பிக்கவேண்டும்’ என அழுது அடம்பிடித்து திரும்பி வருவதுதானேடா உங்களோட உச்சகட்ட புறநானூற்றுத் தமிழ் மறமும் நன்றிக்கடனும்?  ப்ளடி.

… என, சுடுசொற்கள் இல்லாவிட்டாலும், கடிந்தாவது கொண்டோமா?

மாறாக.

எனக்குத் தனிப்பட்ட முறையில், ‘கல்வி புகட்டுவோர் குழு மின்னஞ்சல் சுற்றங்களில்’ தெரிந்தே ஒரு (ஒரேயொரு கேஸ்தான்,  அதை நான் சரிபார்க்கவில்லை என்பது இருந்தாலும் அதனைப் பதிக்கவேண்டும்) – ஒரு பிஹார் மாணவன் (அவன் அனுப்பப் பட்டது பணக்காரப் பெற்றோரின் ‘சொத்து காப்பு/வளர்ப்பு’ எத்தி-னங்களால் அல்ல, வங்கிக் கடன் பெற்றுத்தான் சென்றிருக்கிறான்) அங்கேயே தங்கி, ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைன் சார்பான அத்தேசத்தின் பாதுகாப்பு முனைவுகளில், ஒரு விளம்பரமுமில்லாமல் மூன்றாம்பேருக்குத் தெரியாமல் ஈடுபட்டிருக்கிறான்.

இதே வகை பிஹாரிகளை, உழைத்துச் சம்பாதிப்பவர்களை, நேர்மையுணர்ச்சி கொண்டவர்களை – நம் திராவிடியா மகன்கள் மதிக்காமல் இருப்பது நம்மால் புரிந்துகொள்ளக் கூடியதே.

குறிப்பாக, நம் புறநானூற்று இளைங்கர்களின் வீரதீரம் குறித்து, நாம் யோசிக்குங்கால்…

…தண்டங்கள் – பெற்றோர்கள் சொத்தைக் கரியாக்கும் மாணவர்கள், சமூகத்தையே சீரழிவுக்கு இட்டுச் செல்பவர்கள் என்பதற்கு அப்பாற்பட்டு – என் சிறுமூளையில் வேறெந்த சிந்தனையுமில்லை.

(ஒரு தந்தையாக, நான் பெற்றோர்களின் மனவுளைச்சலைப் புரிந்துகொள்ளாமலில்லை – ஆனால் அவர்கள் கூறுகெட்டவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.)

4

இந்தக் கீழ்த்தரக் கும்பல்களில் அங்கொன்று இங்கொன்று என, வெறும் புள்ளியல் ரீதியாக (statistically speaking)  ஆனால் குறிப்பிடத்தக்க/பொருட்படுத்தத்தக்க (statistically significant) அளவு இல்லாமல்,  ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் (எனக்கு இதில் சந்தேகமே!).

உண்மையாகவே, தேவிஷெட்டி போன்ற தரமான மருத்துவர்களும் ஈ.ஸ்ரீதரன் போன்ற பொறியியலாளர்களும்  உக்ரைன்-மைக்ரைன்களில், அதாவது அம்மாதிரி நாடுகளில் படித்தவர்களில் இருக்கிறார்கள், ஏன், மேற்கண்ட சான்றோர்களில் 10% திறனளவுக்காவது வளர்ந்திருக்கிறார்கள் என யாராவது தரவுகளுடன் தெரிவித்தால் மகிழ்வேன்; என்னைத் திருத்தியும் கொள்கிறேன், நன்றி.

முடிந்தது

13 Responses to “உக்ரைனும் திராவிடத்தமிழின் வீரதீரக் கல்விப் பராக்கிரமும் – குறிப்புகள்”


  1. * Those who pursue MBBS abroad are mandated to pass Foreign Medical Graduates Examination – FMGE.

    * 90% Indian students who study MBBS abroad fail to clear qualifiers to be able to work as Doctors in India.

    (above off ToI report)

    :-( I rest my case. I think 90% is an optimistic estimate. It is more likely to be 98% or so at best.

    Of course, the so-called engineers are a waste. They contributed to to the GNP of Ukraine though!

    Off: https://timesofindia.indiatimes.com/home/education/news/90-indians-who-study-mbbs-abroad-fail-to-clear-qualifiers-here-says-pralhad-joshi/articleshow/89924351.cms

  2. B Says:

    I would like to register an exception here. My sister’s son raised in a second tier city in TN, caught between the Quota-Kota issues, went to China to pursue MBBS. He completed the course with merit scholarship from the Chinese government but also became fluent in Chinese (won Chinese speaking competitions for foreigners), he was also offered a merit scholarship seat to MD in the same college as well. He came back to India, cleared FMGE and completing his internship now in a very large government hospital in North India.

    • B Says:

      BTW, his parents are not doctors.


    • Sir, thanks much for the heartening news. May your nephew continue to rise, shine and help move Bharat towards greater heights. I am happy for you.

      As I said, there would always be a few exceptions, like your young fellow. His performance must have been because of his intelligence, agency and focus.

      I also recently wrote a thread on the Chinese ~MBBS racket, of which I personally know of a victim. But I must say, he deserved it – he should not have tried for things beyond his basic capability. Tragic. Dunning-Kruger proof. https://twitter.com/othisaivu/status/1497135907119710208

      • ramasami Says:

        ( உக்ரைன்-மைக்ரைன்களில், அதாவது அம்மாதிரி நாடுகளில் படித்தவர்களில் இருக்கிறார்கள், ஏன், மேற்கண்ட சான்றோர்களில் 10% திறனளவுக்காவது வளர்ந்திருக்கிறார்கள் என யாராவது தரவுகளுடன் தெரிவித்தால் மகிழ்வேன்; என்னைத் திருத்தியும் கொள்கிறேன், )

        சரி. திருந்தியாச்சா?


      • இல்லை, என்னருமை டாப்பெல்காங்கர்.

        நன்றி.

  3. தோழர் Says:

    நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
    நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா
    உக்ரேனுக்கு அழாமல் உடனே செயல் படு என் தோழா


    • ‘தோழர்,’

      1. உக்ரைன்-ரஷ்யா பற்றி எனக்குப் பெரிதாகக் கருத்தில்லை. அது குறித்துப் பொங்கி போலித்தனமாக, நபும்ஸகத்தனமாக வெர்சூ ஸிக்னலிங் / செய்யமாட்டேன். போர்கள் உயிரியல்-பரிணாம மனோதத்துவவியல்ரீதியாக மானுடவரலாற்றில் முக்கியமானவை, தொடரும் சரடுகள் என்பதை அறிவேன்; போர் என்றாலே சோகம்மட்டுமே எனக் கருதமாட்டேன் – மாறாக அது பிறவற்றுக்கும் இட்டுச்செல்லும் – எடுத்துக்காட்டுகளாக, தொழில் நுட்ப வளர்ச்சி + எல்லைகள் புத்துருவாக்கம் + தேசபக்தி (லிபரல் இடதுசாரிகளைத் தவிர்த்து) என்பதை உணர்ந்திருக்கிறேன்.

      2. இவ்விஷயத்தில், குறிப்பாக இந்தப் பதிவில் – என் குவியம் தமிழகமும் பாரதமும் மட்டுமே, அதிலும் குறிப்பாக – கல்வி குறித்த நம் பொய்மைகள்தாம்.

      3. நான் காத்திரமாக எதுவும் செய்யாத/முனையாத விஷயத்திற்காக, அளவுக்கதிகமாக உருக மாட்டேன். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. உக்ரைனுக்காக நான் ஒன்றும் செய்யப் போவதில்லை, இதில் எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை. அக்கடெமிக் இன்ட்ரெஸ்ட் கூட இல்லை, எனக்கு வேறுபல வேலைகள் இருக்கின்றனவேறு.

      புரட்சிகர அறச்சீற்றம், தேசம், இறையாண்மை, நெக்குருகல், மானுட நேயம், சகோதரத்துவம், போர், வைக்கோல் என எதற்கும் சமூகநீதிக் கருத்துகள், என்னிடம் கைவசம் ஸ்டாக் இல்லை.

      4. ட்விட்டர் ப்ளாக் ஃபேஸ்புக் வகையறாக்களில் மட்டுமே மேலான, தீவிர, தெகிர்யம் மிக்க களப்பணி செய்யும் ஜாதியில் நான் இல்லை. நீங்கள் போராட்டத்தட்டி தூக்கும் ஒரு கம்மீனிஸ்ட் – ஆகவே உங்களுக்கு இதில் மட்டும் ஆர்வம் உண்டு, பெருமிதமும் ஏகத்துக்கும் உண்டு என்பதை அறிவேன்.

      5. எம்ஜியார் வகையறா பாடல்களை வெட்டியொட்டிப் புளகாங்கிதமடைவதுதான் உங்கள் ‘செயற்பாடு’ போலும். (அதையும் நீங்கள் சரியாகச் செய்யவில்லை என்பதுதான் உம்மைப்போன்ற டோலர்களின் வாடிக்கை டொளில் திறமோ)

      ;-)

  4. B Says:

    Thank you so much for the wishes. I totally agree with you on the China-Phillipines-Ukraine-Etc medical education racket going on. I was part of the ‘negotiations’ for my nephew as his parents thought I’m ‘knowledgeable’. It was scary! I saw about 20-25 passports rubberbanded with papers on that agents table and parents with unreasonable amount money and kids with unreasonable expectations on life. I supported my nephew because he prepared for his medical like a penance and also scored decent percentile on his exams.


    • Good for you and the lad.

      I have seen two kinds of brokers:

      1. Those minting huge money promising the heaven in the countries that you mention and the like. Shady bastards.

      2. The shadier bastards are the local touts, who work with touts in Africa; there is a HUGE number of hapless African students who landup to do (primarily in Karnataka and to some extent in Punjab & Maharashtra) things such as BBA, BA(english) and the like – thanks to the pimps..

      More than the run-of-the-mill Indian jokers, I really pity these heavily/athletically built Africans who shell out GINORMOUS amounts of $$$s to do trashy courses here.

      I have heard from an African that, he paid Rs 18 lakhs for a silly 1.5 year ‘degree’ (of course other living/dying expenses are extra) – but I forget the name of the course.

      But, this whopping rate terrified me, so I remember that.


  5. I have heard of similar doctoring/forgery of FMGE by a some fraud MBBS types who ‘studied’ in China – in Tamilnadu; but the news of these dravidian forgeries never came out in public… I wonder why. (but we have way too many ‘investigative’ journos, am told!)

    h/t Ramesh.

    https://medicaldialogues.in/news/health/doctors/fmgs-from-china-bribe-medical-council-clerk-to-get-fake-mbbs-registration-all-arrested-89497


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s