சேரசோழபாண்டிய சங்ககால ~10000 BCE ‘சதுரத்தமிழி’ எழுத்துகள் சென்னை வரலாற்றாளரால் கண்டுபிடிக்கப் பட்டன!
February 22, 2022
இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.
இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின் உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.
* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதி…
-0-0-0-0-0-
…முன்னதாக, டிஎஸ்க்ருஷ்ணன் அவர்கள் கைவண்ணத்தில், கீழ்கண்ட வரலாற்றுப் புத்தகம், கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு சேரசோழபாண்டியர்கள் பெருமை பெற்றது தெரிந்ததே.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் அவர்கள் ‘மூவேந்தர் முன்னேற்றக் கழகம்‘ கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிச் செய்தி.
அக்கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய மஹாராஜராஜேந்திர ஸ்ரீதர் வாண்டையார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கொபசெ கிருஷ்ணனார் அடுத்த சில நாட்களில், என் வரலாறையும் ‘மூவேந்தவேந்த முதுகுடுமிப் பெருவழுதி’ எழுதி வெளியிடப்போகிறார், அதுவும் புலிட்ஸர் பரிசைப் பெறப்போகிறது” எனத் தெரிவித்தார்.
நிற்க, அது ஒருபக்கமிருக்க, டிஎஸ்க்ருஷ்ணன் அருளிச்செய்த புத்தகமான சேரசோழபாண்டியமூவேந்தவரலாறின்பின்னட்டையில்:
முதலில் பலப்பல வாசகர்கள் (அடியேன் உட்பட), இது என்ன எனப் புரியாமல் திக்குமுக்காடிவிட்டார்கள்.
பின்னர், கொஞ்சம் தெளிவு வந்ததும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது – தாங்கள் படிக்கப்போவது, ஒரு வரலாற்று ஆவணம் என்று – உடனே டக்-என வாத்துப்போலவே, அவர்கள் அதனை ஒரு கல்வெட்டியல் குறிப்பியல் அல்லது ஓலைச்சுவடியின் புகைப்படம் என இனம் கண்டு கொண்டுவிட்டனர்.
வரலாற்று வாசகர்கள், எப்போதுமே படுபுத்திசாலிகள் என்பது சான்றோர் சொல். ஆன்றோர் அகவல். ஆஃப்றோர் ஆஃபர்.
ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு அக்கல்வெட்டுப் படியில், வெறும் சதுரம் சதுரமாக நிறைய இருப்பதாகத் தோன்றலாம் – ஆனால் அவையெல்லாம் ஹோலோக்ராம் பிரதிகள், தன்னைத் தானே எழுதிக் கொண்டவை, புராதனம் மிக்கவை. இதனைச் சரியாகப் படிப்போர், சிந்துசமவெளி/ஹரப்பா எழுத்துகளைச் சுளுவாக பகுத்தறிந்து கொள்ள முடியும்.
இச்சமயம் ‘சதுரகராதி‘ என ஒன்று இருந்தது நினைவுக்கு வருகிறதா?
அதுதான் சதுரத்தமிழியின் ஆதி அகராதி.
இப்படி எவ்வளவோ விஷயங்களை நாம் மறந்துவிட்டோம், மறக்கடிக்கப்பட சதிவலைகளில் வீழவைக்கப்பட்டு மழுங்கவைத்து, ஒடுக்கப் பட்டோம். இப்போது புழுங்கி என்ன புண்ணியம்.
சதுரத்தைத் தாண்டி செவ்வகம் வந்து நாம் எங்கோ சென்றிருக்கவேண்டும்.
மாறாக வட்டெழுத்துகளில் மாட்டிக்கொண்டு செக்குமாடுகள் போலச் சுற்றிச் சுற்றிக் குறுகிப் போய்விட்டோம்!
ஆதித்தமிழன் பறிகொடுத்த கலாச்சாரக் கூறுகளை நினைத்தால், ரத்தக் கண்ணீர் தான் வருகிறது. அடியே காந்தா….
-0-0-0-0-0-
பிரச்சினை என்னவென்றால் – இந்த சதுரத்தமிழி / சதுரெழுத்து எழுத்துகளை நாம் அலசுவதற்குள், குடுகுடுவென்று ஹரன் பிரசன்னா அவர்கள் ஓடிவந்து, அந்த அரிய சதுரத்தமிழி சான்றை, வெறும் அச்சுத்தவறு எனச் சுருக்கி விட்டார்.
அவர் ஒரு ஆரிய பார்ப்பன பனிய வகை வந்தேறியாகத் தான் இருக்கவேண்டும்.
…என்ன அயோக்கியத்தனமான குசும்பு பாருங்கள்!
இப்படியா நிகழ்வரலாறுகளை மூடி மறைப்பார்கள், பாவிகள்?
தமிழா!
எவ்ளோநாள்டா இப்டியே கொர்ட்டே வுட்டுக்கினு கமுந்தட்ச்சி பட்த்துக்கினு கெடப்பே?
முள்ச்சிக்கடா பேமானீ!
:-(
-0-0-0-0-
இது குறித்து, நடுநிலைமையுடன் பலப்பல சான்றோர்களிடம் (வேறு வழியில்லாமல், சூழ்ச்சிக்கார ஹரன் பிரசன்னா உட்பட) ஒத்திசைவு டிவி சார்பாக நேர்காணல் கண்டோம்.
கீழே அவற்றைப் பற்றிய சுருக்கமான விவரங்களைக் கொடுக்கிறோம்.
ஜெயமோகன் உவாச:
நுண்ணுணர்வு ஊடுபாவுகளினூடே நுணுக்கமாக நுனிவரை நுகர்ந்தாலும் நோகாமல் நுங்கெடுக்க முடியலாகாது. உள்ளுணர்வு மெய்மையைத் தரிசனம் செய்ய என்னைப்போன்ற ஆசானின் கருணையும் ஆட்டுக்கெடாட்சமும் வேண்டும். என் காலடியில் அமர்ந்து ஞானத்துக்காக என்னை யாசித்த ஆதிசங்கர குருவுக்கு அப்படித்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
அவருடைய பாஷ்யம் ஒன்றுக்கு (பிரம்ம சூத்திரம் குறித்து – பிராமணர்களும் சூத்திரர்களும் அத்வைத ஞானமரபில் ஒன்றே என முற்றுணர்ந்த ஞானியவழி அவர் நிறுவியது என மோனியர்-வில்லியம்ஸ் எழுதியிருக்கிறார்) நான் எழுதிய முன்னுரையின் தலைப்பு: சபாஷ்யம்; அதில், வைசியர்களும் சத்திரியர்களும் எங்கே போனார்கள் என நான் வெகுண்டு கேட்டதற்கு, பிரம்மசூத்திரம் பாஷ்யத்தின் இரண்டாம் எடிஷனில் ஆதிசங்கரரும் கிழக்கு பதிப்பகத்தாரும் பிரம்மசூத்திரவைசியசத்திரியம் என மாற்றிவிட்டார்கள் என நினைவு.
அந்தக்கால இலக்கியவாதியான விமலாதித்தமாமல்லனின் பரிந்துரைப்படி, கிண்டல் வெளியீடாக வரவிருக்கும் மூன்றாம் அறச்சீற்றப் பதிப்பில், அதனை…
தலிதச்சத்திரியசூத்திரவைசியப்ரம்மம்
…எனச் சமூகநீதியுடன் மாற்றப் பரிந்துரை வைத்திருக்கிறேன். கிழக்கு அதற்கு மறுத்தால் எதிர்த்திசையில் பயணித்து மேற்கு அதனை வெளியிடும் என்பது அஸ்தமனம்; கையில்மனது என இதனைப் புரிதல்கொள்ளவேண்டும் என மோனியர்-வில்லியம்ஸ் சுட்டியிருக்கிறார். அதாவது, பாரதி சொன்னதுபோல, ‘நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.’
2023க்கான விஷ்ணுபுரம் விருது, என் பிரதமசீடரான ஆதிசங்கரருக்கே கொடுக்கவேண்டும், என என் வாசகர்கள் விரும்புகிறார்கள்; அதனைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.
…சதுரத்தமிழி வரிவடிவம் குறித்து இது நான் ஏற்கனவே பலமுறை, பகுத்துத் தொகுத்து குரு நித்யா என் சீடராக ஆனதற்கு முன்பிலிருந்து (1856?) அறச்சீற்றப் புரிந்துணர்வுடன் எழுதியதுதான். என் மாற்றுப்பார்வையில், அது ஏன் சதுரத்தமிழி என இருக்கவேண்டும்? தமிழிச்சதுரி என இருக்கலாகாதா? ஏனெனில், அது முதலில் தமிழ், பின்னர்தாம் சதுரம்.
மேடைப் பேச்சாளர்களை நாம் சமூகத்தில் அனுமதிக்கலாகாது என்பது என் கருத்து என்றாலும், என் நண்பர்களையும் வாசகர்களையும் முடிந்தவரை, வரலாற்று எழுத்தாளர்களைப் பார்த்தால், அறத்துடன் அவர்களை அடித்துவிரட்டும்படி கோரிக்கை வைக்கிறேன் என்பதும் நடராஜகுருவின் கருத்துதான். என் காந்திக் கிழவன் வன்முறையை துளிக்கூட அனுமதிக்கலாகாது என ஒட்டுமொத்தமாக அதனை நிராகரிக்கவில்லை என்ற பார்வையின் படி, இயக்குநர்மாமணி மணிரத்னத்தை, மணி என்றே கூப்பிடுவது சாலச் சிறந்தது.
சதுரத்தமிழி குறித்து என்ன எழுதியிருக்கிறேன் என எனக்கு இனியஜெயக் கடிதம் எழுதிக்கொண்டு, தேவையானால், அதாவது பெருஞ்சர்ச்சையைக் கிளப்பும் வாய்ப்பிருந்தால், பதிலுமளிக்கிறேன்.
தமிழில் பொய்மை அதிகம், தற்கால இலக்கியச் சூழலில் அது மிகமிகமிகவும் அதிகம். நானே என் அறம் கதைடகீல்களில் எத்தையோ என் வழமையே போல வளமான கற்பனை செய்து, நன்றாகத் தெரிந்தே முற்கால எழுத்தாளர்களை அவதூறு செய்தேன்; எதிர்ப்பு வந்ததும் உடனடியாக அதற்காக முட்டுக் கொடுத்து விக்கிபீடியாவில் அதுதொடர்பான சங்கதிகளை என் கதையாடலுக்குத் தோதாக மாற்றினேன். மாற்றி எழுதினேன், போல எழுதினேன், திரும்பத் திரித்தேன். பின்னர், இந்தப் புத்தம்புது பழையவரலாறு புத்துருவாக்கம்தான் உண்மையானது, மெய்யாலுமே நடந்த வரலாறு என நிறுவி, அதை மேற்கோள் காட்டத்தக்க ஆவணமாக மாற்றினேன். ‘நான் அவதூறு செய்தேன்’ எனக் குற்றம்சாட்டியவர்களை அழகுகாட்டி வெற்றி கொண்டேன்.
இந்த அழகில்தான், நம்பகத்தன்மையும் நேர்மையுமற்று விக்கிபீடியா இருக்கிறது. இதன் காரணமாக, இம்மாதிரி விஷயங்களை ஏகபோகம் செய்வதற்காக நானும் என் ஆசானிய வாசகர்களும் சேர்ந்து இன்னொரு செய்திப் பெட்டகத்தை உங்களுக்கேஉங்களுக்காக என உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்… இது குறித்த படுபீதியளிக்கும் அறச்சீற்ற அறிவிப்பை அண்மையில் நீங்கள் என் அறிவியக்கக் கலைக்களஞ்சியத்தில் பார்த்திருக்கலாம்.
என்ன சொல்கிறேன் என்றால், எங்களுடைய கட்டற்ற கலைக்களஞ்சியத்தில், “இந்த சதுரத்தமிழி என்பதைப் பற்றி முதலில் பேசியதே ஜெயமோகன் தான், அதுவும் 1970களின் நடுவிலேயே பேசிவிட்டார்” எனச் சந்தேகத்துக்கிடமில்லாமல் எழுதித்தள்ளி நிறுவப் போகிறோம். அதுதான் நடந்த வரலாறாகவும் ஆகிவிடும்.
ஆனால், நான் அரசியலுக்கும் காழ்ப்புகளுக்கும் சராசரித்தனத்துக்கும் பொய்மைகளுக்கும் அப்பாற்பட்டவன்.
அதாவது, என் சொந்தஸ்டாக், அறச்சீற்ற ஸ்டாக்.
டிஎஸ் கிருஷ்ணன்கள் கோபப்படவேண்டாம். வரலாறுகள் இப்படித்தான் எழுதப்படவேண்டும். நமக்கான மாற்றுவரலாறுகளை நாம்தாம் உருவாக்கவேண்டும். அயோத்திதாசர் அப்படித்தான் செய்தார். மாறாக, தேவையற்ற சான்றுகளுக்காக நீலகண்டஸாஸ்திரி ராமசாமிமேஸ்திரி எனப் படித்தால், படித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
எஸ்.ராமகிருஷ்ணனின் கருது:
டால்ஸ்டாய் ஒரு கவிதை எழுதியிருகிறார். அதை டாஸ்டாவ்ஸ்கி கதையாக மொழியுருபெயர்திருகிறார்.
ஆங்கிலதில் சொல்வது போல டால்ஸ்டாய் ஒரு polymath/பாலிமத் – இதனை சிலர் இந்து மடங்களில் உறுபசிக்கு பிரசாதமாக கிடைக்கும் போளி என நினைகிறார்கள், அது சரியில்லை; அதன் உண்மையான பொருள் – ப்ளாஸ்டிக் பொருட்களை வைத்து கணிதம் கற்றுத் தருபவர்.
டாஸ்டாவ்ஸ்கி கதையை பிரெஞ்சு மொழிக்கு ஆல்பெர்ட்காமூஸ் மொழிபெயர்ததை திரைகவிதையாக மங்கோலிய மொழியில் ஒரு படம் ‘இன்று போர், நாளை வார், நேற்று படுபோர் ‘ என ஜப்பான் உலக சினிமா டைரக்டர் காராசேவு நிக்குமாநிகாதா எடுத்திருகிறார்கள். நான் இன்று பார்தேன். நெகிழ்ச்சி.
இப்படி எவ்வளவோ தனிதுவ படங்கள் பார்பவர்களில்லாமல் பார்க்க படுகின்றன. அந்த தனித்துவ படம் மௌனமாக எவ்வளவு பேர்களை பார்த்திருகும்? சினிமாவுக்கு மொழியா முக்கியம்?
இந்த படத்துக்கு சப்-டைட்டில்ஸ் சதுரதமிழியில் இருகின்றன. ஆதிமங்கோலியன் அதிவனாந்திரங்களில், தேசாந்திரியாக அலைந்துகொண்டிருந்தபோது இயற்கையுடன் தமிழில்தான் பேசியிருபான், சுவாசிதிருபான்.
அங்கிருகும் புல்வெளிகள் இன்னமும் அதே தமிழை பேசுகின்றன. ஆனால் அவற்றுகு தெரியுமா தமிழில் தான் பேசுகிறோம் என்று?
சாருநிவேதிதா குதிரைலத்தி கலாச்சார விமர்சனம்:
சதுரத்தமிழி உட்பட பல விஷயங்களை கடந்த 80 வருடங்களாகத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் மொழியிலும் அரபியிலும் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் தமிழகத்தில் தமிழ் எழுத்தாளனுக்கு மதிப்பில்லை.
Philistines.
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்: PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com – Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com – Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID: charu.nivedita.india@okaxis இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். … …
‘சங்க இலக்கியச் சான்றோர்’ நேயதேவ வெண்பாவாணர் டகால்டி அவர்களின் குறிப்பு:
இது சங்ககாலத்துக்கும் முந்தைய கல்வெட்டுச் செய்தியின் பிரதி என என் அபிமான பாபுலர் வரலாறு வல்லுநர் டிஎஸ்கிருஷ்ணன் என்னிடம் ஒருமுறை சொன்னார். அதை நான் ஆமோதிக்கிறேன், அதாவது, that is அவர் சொன்னார் என்பதை.
இந்த எழுத்துவடிவம், சதுரப் பிரவாள நடை எனப்படும். இது க்ரந்தத்துக்கும் காந்தத்துக்கும் நடுவே ஏற்பட்ட தகாத உறவினால் உண்டாகியிருக்கலாம் என, ‘தீராநதி’யில் எஸ்ராமகிருஷ்ணன் ஒருமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நடையில் ஒரு வெண்பா போல யாத்திருக்கிறேன். (என் வழக்கமான சுத்த யாப்பு இல்லை, என் சீர் தளை தப்பாமல் இருக்கும் – ஆனால் அவசரத்துக்குக் கொஞ்சம் ஆப்படித்திருக்கிறேன், false modesty warning!)
யாமே வள்வன்.
இக்கல்வெட்டின் கதாநாயகன், ராயப்பட்டர் என்பது…
….பலகாலங்களாக ப்ளாக் ட்விட்டர் எழுதி போகிறவருகிறவர்களை வேலைவெட்டியற்றுக் கிண்டல் செய்துகொண்டிருக்கும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. (அதாவது, self-deprecationஆம், சரி)நாலாயிர திவ்வியப் பிரபந்தமே முதலில் சதுரத்தமிழியில் தான் எழுதப் பட்டிருக்கவேண்டும். அந்தப் பார்வையில், அதற்கு அதன் மொழியே அகச்சான்று எனச் சொல்லலாம்; மொழியைப் பாருங்கள் என்கிறேன், அவ்வளவே வெவ்வே! (தோ பார்றா!)
மனுஷ்யபௌத்திரம் ஃபேஸ்புக் பதிவு:
சோழப்பாண்டியர்களும்
சேர்ந்த
சேரர்களும்
ஏன்
சதுரத்தமிழியும்
யாரும்
என்னைக்
கண்டுகொள்ளவில்லை
மௌனமே பதில்
உழைப்புக்கு
இதா
பரிசு
சோர்வாக இருக்கிறது
எனக்கு ஜீரம்
கொலஸ்ட்ரால்
டயபட்டீஸ்
ஓமிக்ரான்
உயிர்மை
திமுக
என
பல
வியாதிகள்
விடியுமா?காலை 01.15, படுக்கையிலிருந்து. 22 02 2022
பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன் (ரிட்டையர்ட் குமாஸ்தா) அவருக்கு வரும் வழக்கமான கோபத்துடன் சொன்னது:
இது அபத்தம். ஹிந்துத்துவா நாஜி பிராம்மணப் பொறுக்கிகளிடம் வரலாறு அகப்பட்டுக்கொண்டு திண்டாடுகிறது. நேரு காலத்தில் இது நடந்திருக்குமா?
என் சக அறிவுஜீவியான அரவிந்தன் கண்ணையன் அவர்களிடம் துறைவல்லுந அபிப்ராயம் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் பதிக்கிறேன்.
மோடீ ஒழிக. ஊக்கபோனஸ்ஸாக அண்ணாமலை லும்பனும் ஒழிக!
அரவிந்தன் அய்ன்ரேண்ட் கண்ணையனின் காட்டமான பின்னூட்டம்:
நன்றிக் கிருஷ்ணன். சதுரத்தமிழிவ் விவகாரம் இப்போதுதான்க் கிடைத்தது. இது உண்மை. உங்கள்ப் பிராம்மணவெறி உங்கள்க் கண்களைம் மறைக்கிறது.
என் அமெரிக்கா எப்போதோ இந்தச் சதுரத்தமிழிப் பற்றி அறிந்துகொண்டுவ் விட்டது. நியூஜெர்ஸியிலேயேய் இரண்டுக் கல்லூரிகளில் இரண்டுப் பாடத் திட்டங்கள் இதுக் குறித்து இருக்கின்றன.
உங்கள்ந் நியோந் நேருவியச் சோசலிசப்பார்வையைச் சீர்ச் செய்துக் கொள்ளவும்.
தோ பார்றா ராகவனின் திரைக்கதை வஜன ட்ரெய்லர்:
முன்னதாக, காப்பிக்கடை யுவகிருஷ்ணாவின் தனிப்பெரும் குருவாக அலங்கரித்து அழகு பார்க்கப்பட்ட பா. ராகவன் (author of many different kinds of books, released at great speeds/frequency at the rate of one per week + சீனாக்கார கோவிட் வைரஸ், த பார்ரா ராகவன், நம் மக்கள், பாரதம் – குறிப்புகள் 26/04/2021) சொன்னது:
இரண்டு செய்திகள். இரண்டுமே மொழி – வரிவடிவம் தொடர்பானவை. ஒன்று, தமிழகத்தில் வளர்ந்த அதிஅற்புதமாக சதுரத் தமிழி. இன்னொன்று வடக்கே வளர்ந்ததாகச் சொல்லப்படும் பிராம்மி, அதாவது பார்ப்பனி.
இரண்டு விஷயங்களைப் பற்றியும் நான் மேதாவிலாசத்துடன் எழுத, சில பக்கங்களும் வீடியோக்களும் என் வழமையே போல (இன்னொரு புத்தகம் எழுதுவதற்காக) அடுத்தடுத்து டவுன்லோட் ஆகிக் கொண்டிருந்தன. (எங்கிருந்தெல்லாம் டவுன்லோட் செய்தேன் என மறந்துவிட்டது). தமிழகத்துப் போராளிக் கூட்டத்தினர், சதுரத்தமிழி சார்பாகக் கூட்டம்கூளம் கூடாதீர்கள் என்று தடுக்க முயன்ற போலீசாரைக் கல்லால் அடித்து, பெட் ரோல் பாம்ப் போட்டு, தீப்பந்தங்களுடன் துரத்துகிறார்கள். தமிழகப் போலீசார் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
பார்ப்பனி சார்பாக, ப்ராம்மி ஒரு மூலவரிவடிவம் எனக் கொண்டாடவோ, உணர்ச்சிவசப்பட்டுக் திருக்கல்லடிக்கவோ வடக்கில் ஒரு ஆளில்லை. வெறும் பல்கலைக்கழகங்களில், சில பேராசிரியர்களும் துறைகளும் இதுகுறித்து ஆராய்ச்சி நடத்திக்கொண்டிக்கிறார்கள். ஒருவரும் இது தொடர்பாக, வடக்கத்திப் போலீலிசாருக்கு உடற்பயிற்சி கொடுக்கவே இல்லை. அந்தப் போலீசார் எட்ட நின்று கவனிப்பதுடன் சரி.
மொத்தமே பத்து நிமிடங்களுக்குள் டவுன்லோட் ஆகி, எனக்கு இன்னொரு புத்தகம் எழுத வாய்ப்பளித்த இரு விஷயங்களும், வடவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டன. கல்லாதவன் கல்லால் அடிப்பான், கல்லாவும் கட்டுவான் என்று திராவிடமுனிவன் திருவள்ளுவன் சொன்னது நினைவுக்கு வந்தது. இங்கு தமிழின் பெருமையும் கர்வமும், பாரதி சொன்னதுபோல் கள்வெறி கொள்ளுதடி எனவாகிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சுதி ஏறுகிறது. நெஞ்சம் விம்முகிறது. வடக்கில் நம்மைபோலத் திராவிட, சின்னத்திரைக் களப்பணி செய்யாமல் இப்படிச் சோம்பேறிகளாக இருப்பார்கள் என்று நம்பவே முடியவில்லை.
டீவீஷ்வரியும் டவுன்லோடேஸ்வரியும் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
பேராசிரியர் தர்மராஜ் தம்புராஜ் பிஹெச்டி தீஸிஸ்:
வழக்கம்போலவே, இந்தச் சதுரத்தமிழியின் உண்மை வரலாற்றை, ஆதி பூர்வ பஸ்சிம பௌத்தனின் கண்டுபிடிப்பை சனாதனிகள் கைப்பற்றி விட்டனர் என நான் சொன்னால் நானே நம்பமாட்டேன்.
அந்த அளவுக்கு நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள், இந்த வேஷப் பார்ப்பனர்கள்.
மாறாக, சதுரத்தமிழி என்பதே பிற்காலத்தில் ஆதிக்க சாதிகள் பகவன்க்க சாதிகளுடன் கொள்கைக் கூட்டணை அமைத்துக் கொடுத்த பெயர் – ஆதியில் அது சங்கப்பாலி எனவே போலச்செய்து வழங்கிவந்திருக்கிறது எனக் கருணாம்ருதசாகரத்தில் திரும்பச்செய்து இருக்கிறது என அயோத்திதாசர் சொல்வார் என்பதை ஃப்ரெஞ்ச் அறிஞர் ழான் போத்ரியாரே ஆதரிப்பார். இதற்குமேல் என்ன தரவுகள் வேண்டும்?
ஆனால் ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர்களால் வெச்சிச்செய்யப் படுபவை என்பதையும், இவர்களால் எக்காலத்திலும் சதுரத்தமிழி குறித்த உண்மைகள் வெளியாகமாட்டா என ஆம்பேட்கர் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன் – என்றவகையில் என்னைச் சொல்லவைத்துவிடுவார்களோ என்ற வருத்தமும் படபடப்பும் எனக்கு இருக்கிறது எனத் தெளிவுபடுத்துவதற்காகவது நமது சமூகத்துக்கு உரிமை இருக்கிறதா?
என்றால் இருக்கலாம் – ஆனால் இல்லாமல் இருப்பதற்குத்தான் சாத்தியம் அதிகம் என என்னைச் சொல்ல வைக்கிறது என் அனுபவம்.
வாழ்க்கையே வரிசையாக சிமுலாக்கிரமங்களால் அமுக்கப் பட்டது என்பது பல அக்கிரமங்களில் தலையாயது எனச் சொன்னால், வாலானது எங்கே எனக் கேட்குமளவுக்குத்தான் நமக்கு அறிவிருக்கிறது, என்ன செய்ய – என பண்டிட் குருச்சேத்திரதாசரே சொல்வார்.
ஆனால், நான் சிமுலாக்கிரமும் அல்ல. ஏன், நான் நானே அல்ல. இக்கருத்தை வெளியிடுவதும் நானில்லை.
பத்ரி சேஷாத்ரியின் உரத்த நிந்தனை:
சதுரத்தமிழி எழுத்துகள் நவபௌத்தமா அல்லது பூர்வபௌத்த பண்பாட்டு எச்சமா, அல்லது வேஷப்பிராம்மணர்கள் ஜோடித்ததா என்பவை குறித்து அயோத்திதாச பண்டிதர் என்ன ஏதாவது எழுதியிருக்கிறாரா என ஆய்ந்து ஒரு நக்கல் ஃபேஸ்புக் பதிவு போட வேண்டும்.
‘சதுரத்தமிழி சர்ச்சை‘ என யார் எழுதினால், பத்துபிரதிகளாவது விற்று நஷ்டம் குறையும்? யோசிக்கவேண்டும். யுவகிருஷ்ணா? நிசப்த ஸைலண்டான மணிகண்டன்? ஜெயமோகன்?
ஒத்திசைவு ராமசாமி? வேண்டவேவேண்டாம், வெறும் அக்கப்போர் ஆசாமியவர். படுதிராபை.
வேறு யாரும் வேண்டாம். இதைக் குறித்த சரியான பார்வையை பேராசிரியர் தர்மராஜ்தான் வைக்கமுடியும். ஏனெனில் அவர்தாம் தற்காலத்தில் பிரசித்தி பெற்ற அயோத்திதாசரியலாளர்.
தேமதுர அயோத்திதாசரிய ஓசையைச் சதுரத்தமிழி வழியே உலகெலாம் பரவ வகை செய்திடவேண்டும்.
ஹரன் பிரசன்னாவின் ஹாதங்கம்:
ஒத்திசைவு ராமசாமிகள், கொஞ்சம் ஒதுங்கலாம். ஏதோ சிறு தவறு ஏற்பட்டால் இப்படியா வன்மம் காட்டுவது?
இப்படி நக்கல் செய்தே இந்த ரிட்டையர்ட் ஆசாமிகள், நல்ல முயற்சிகளை கவிழ்த்தி விடுகிறார்கள்; தமிழெழுத்தின் தளபதியான ஜெயமோகனைக் கரித்துக் கொட்டாமல், அவருக்குப் பொழுது விடிவதில்லை. ஆனால் நல்லவேளை, அவர் நடத்துவது ஈயோட்டித் தளத்தைத்தான். ஆகவே, பெரிய பாதிப்பு இல்லை; ஏன், காலுப்புக் கூட இல்லை.
டிஎஸ் கிருஷ்ணன் ஒரு பெரும் வரலாற்றாளர், வளர்ந்துவரும் எழுத்தாளர். ஆனால், வயதாகியும் விவேகமில்லாமல் இப்படி ஒருவர் பொறாமையில் வெந்தால், பகடி செய்து அரிப்பைத் தீர்த்துக்கொண்டால், அது ராமசாமிகளின் பிரச்சினை – சேரசோழபாண்டியர்கள் பிரச்சினையல்ல.
ஓம். வலமே வலிமை. இடத்துக்கு இடம் கொடேல். ஜெல்ப்பே ஜலத்தின் பாக்கியம். இதற்கும் என் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு வாழ்க. நேற்று, நான் ஒரு தமிழ்ப்படமும் பார்க்கவில்லை. சோகம்.
ராமசாமி போன்ற ஆசாமிகளைப் பாம்பு என்று தாண்டவும் முடியாது, பழுதை என்று மிதிக்கவும் முடியாது. தாங்குகிறதுபோல் தாக்குவார்கள், தாக்குவது போலத் தாங்குவார்கள். பல சமயங்களில் தாக்குவதுபோலத் தாக்கியே விடுவார்கள். எது என்ன என ஒன்றும் பிடிபடாமல், அகன்று விடுவதே உத்தமம்.
மற்றபடி, பாரத்மாதா கீ ஜெய்.
தமிழகத்தின் ஆதிஆசீவக வாலேசன் ரங்கராட்டினம் கோபு அவர்களின் தட்டாமாலை வாழ்த்துரை:
முன்னமே இந்த விஷயம் தெரிந்திருந்தால், எங்கள் வர்ராஹ்ஹமிஹ்ஹிர ஃபார்ரும் அதிஅறிவியல் பெரும்பேச்சுக்கச்சேரி மெகா நிகழ்வில் இந்த சதுரத்தமிழி பற்றியும் மஹாமஹோ சான்றோர், தசாவதானி, பல்துறை (Dental surgery included) வல்லுநர் டாக்டர் கேபி மோகனனிடம் கேட்டிருக்கலாமே!
அருமையான தகவல்களைத் தொடர்ந்து, அளவுகடந்த இளக்காரத்தனத்துடன் அட்ச்சிவுட்டுக்கொண்டே இருந்தாரே! இதுமட்டும் அவருக்குத் தெரியாமலா இருக்கும்?
… ஆழமாக போல, எத்தையாவது மேற்கோளுடன், பழங்கதைகளுடன் (“இந்தக் கேள்வியை பிஹெச்டிகளிடம் கேட்டேன், எல்லாம் தண்டம்! ஒருத்தனுக்கும் பதில் தெரியவில்லை! அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், உங்களுக்கும் இதுகுறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை!“) சொல்லியிருப்பாரே! எங்க சக அறிவியல்/அறிவு ஆர்வலர்களுக்கு வடெ போச்சே!
சரி. அண்மையில் போய்ச்சேர்ந்த பெரியவர் இரா நாகசாமி அவர்கள், இந்த சதுரத்தமிழி வரிவடிவம் குறித்து, ‘அது கரோஷ்டியிலிருந்து வந்ததுதான்! டொக்காரியன்-பி தொடர்புகளும் இருக்கலாம்!’ போன்ற ஆவணபூர்வமான ஆணித்தரக் கருத்து தெரிவித்திருக்கிறாரா எனப் பார்த்து ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
அடுத்து டை-அம்மோனியம் ஃபாஸ்பேட் உரத்தின் வரலாறு பற்றி, தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆழமாக உழுவதன் அடிப்படைகளைத் தெரிவிக்கவேண்டி ஒரு புத்தகம் படிக்கவேண்டும். ஜாரட் டயமண்டுவின் புத்தகத்தை ஒரு மாற்றுமொழிபெயர்ப்பு செய்தாலென்ன என யோசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி.
என்ன? பெரியவர் இரா நாகசாமியின் நினைவாக, அவரைப் போற்றும் விதமாக – உடனடியாக தமிழக அகழ்வாராய்ச்சித் துறையை மறுவார்ப்பு செய்து, அதில் ஊடுருவி இருக்கும் வெட்டி அரசியல் தண்டங்களை கல்தா கொடுத்தனுப்பிவிட்டு, உண்மையான/நேர்மையான திறமைமிக்கவர்களை உட்கொணரவேண்டும் + பணியில் இருக்கும் தொழில் அறம் மிக்கவர்களை ஊக்குவித்து புத்துருவாக்கம் செய்யலாம் எனச் சொல்கிறீர்களா? இல்லையேல் தமிழகமே கேலிக்கிடமாகிவிடும் என்கிறீர்களா?
எனக்கு லீனஸ் பாலிங் மீது ஆர்வம் அதிகம். விடமின் ஸி அவரால் பெரும்பேறு பெற்றது. சார்ல்ஸ் டார்வின் புகழ் மேன்மேலும் ஓங்குக!
வரலாற்றாளர் டிஎஸ்க்ருஷ்ணனின் பணிவான கருத்து:
யாரோ ஒரு அன்பர் என் புத்தக அட்டையைக் குறித்துக் கிண்டலாக எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதைப் படிக்கவில்லை, பொருட்படுத்துவதாக இல்லை. ஆனால் அவர் எழுதியிருப்பது சரியல்ல.
மொழிபெயர்ப்பாளர் என் கல்யாண்ராமன் டெலிஃபோனில் சொன்னது:
This script is well known as a forgery to serious scholars of Tamil literature. Thaamarai, Kachada thapara magazines of yore, and other Left journals, had written about the scandal a while back.
ஒரு தவறைத் திருத்த விரும்புகிறேன்; இது வெறும் ஒரு வரிவடிவம் அல்ல – தனியாகவே அதற்கான மொழியியற் கூறுகளைக் கொண்டுள்ள திராவிட மொழி எனத்தான் கதையாடல்.
Checkout the poem written on Caturath-thamizhi by the fantastic avant garde progressive vanguard feminist Poetess Perundevi (foreign university), in my english translation of 2022.
(whole translation releasing soon via Farrar, Strauss & Giroux in 2022, USA)
இந்துத்துவவெறி தோல்வியடையும். இந்தியா வெல்லும்.
வொலகவொளற நாயகன் கமல்ஹாசன்:
நம் சதுரத்தமிழி நீடூழி வாழ, வாழியவழியவே என வாழ்த்தும் நேரத்தில் அதன் அருமைச் சகோதரி செவ்வகத்தமிழிக்கும் செவ்வனே ஆவன செய்திடுவார்களா ஆட்சியாளர்கள்?
ஆக்கிரமிப்பு பிரமிப்பு தராதபோதும் அடக்குமுறை அடங்க மறுக்குமென்றாலும், பொறுத்தது போதும் பொங்கியெழு தமிழித்தாயே என அறக்கிழவன் காந்தி சொன்னதை ஆம்பேட்கரும் ஆமோதித்ததால், நம் மய்யம் ஓரத்தில் மையம் கொண்டாலும், தமிழர்கள் மய்யத்தின்மீது இமயமளவு மையல் இமைக்காமலே கொள்வார்கள். எதிர்காலம் நம் தாள்பணியும். நாம் வெல்வோம்.
வெங்காயத்தின் விலையை பாசிச சக்திகள் ஏற்றினாலும். கட்டுப்பாடுகளைக் கவிழ்த்தினாலும் பெரியாருக்குக் கட்டுப்பட்ட தமிழகத்தில் கடப்பாடுக்குத் தட்டுப்பாடு இல்லை.
திட்டக் குழு வழியாகவும் அறிவியல் வளர்ச்சியைத் திட்டும் டாக்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
அது வெறும் சதுரத்தமிழியோ சதுரெழுத்தோ அல்ல… அந்த வரிவடிவம், நாலு பக்க நால்-வர்ணத்தாருக்கு மட்டுமே உரியதல்ல…
கருஞ்சதுரத்தமிழி நீலச்சதுரத்தமிழி என இந்த உலகம் முன்னேறிப் பின்னேற வேண்டிய வேளையில், எங்களை, உங்களுக்கும் அவற்றுக்கும் என்ன சொந்தம் என தட்டி, அடித்து உதைத்தார்கள் எங்கள் திராவிடர்கள்.
திராவிடர் ஈவெரா பெரியார் எங்கள் பெண்மணிகளுக்கு ஏன் மாராப்பு/ரவிக்கை வேண்டும் எனக்கேட்டார். அவர்களால் தான் ஜவுளிகளின் விலை ஏறுகிறது என்றார். கீழ்வெண்மணி கொலைகள் பற்றிக் கருத்துசொல்லாமல் அங்கிருந்து ஒடிவந்துவிட்டு, ஒருவருடத்துக்குப் பின் இறந்தவர்களின் சமூகத்துக்கு மேலான அறிவுரை கொடுத்தார்.
அதனால் தான் அவர் புகழைப் பாடுகிறோம். அவர் குறித்துப் பெருமிதப் படுகிறோம். அவரது கல்லுருவத்தை வழிபாடு செய்கிறோம். திராவிடத்தை நெகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறோம்.
பவ்வியமாக, அந்தக் பகுத்தறிவுப் பகலவச் சிலையை ஒரு பீடத்தில் ஏற்றிவிட்டு அருகே மரியாதையுடன் புன்னகை பெருக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம்.
…இன்று உலகில் சிறந்த திரைப்படம் எடுப்போம் (ஆனால், அதன் பெயரை மட்டும் சொல்ல மாட்டோம்; அது ஸீக்ரெட்!).
ஆயிரக்கணக்கில் எழுதுவோம். எந்த சதுரத்தமிழி எழுத்து எங்களுக்கு மறுக்கப் பட்டதோ, அதே எழுத்துலகில் கடை விரிப்போம். கொள் வார் ஆயிரம். கொள்ளும் வாரும் தேவைப்படும் குதிரைகளும் ஆயிரம்.
திராவிடச் சதுரத்தமிழி வாழ்க! திராவிடஸ்டாக் கோடவுன்கள் வளர்க!!
உதயசந்திரன் ஐஏஎஸ் இத்தியாதிகளின் அலப்பரைகள்:
ஆ! அருமை. பொதுயுகம்முன் 10,000 வருடத்த்திலிருந்தே சதுரத்தமிழி எழுத்துருவும் வரிவடிவங்களும் இருந்திருக்கின்றன!
ஆகவே கீழடிய ப்ளடி ஓட்டிக்கினு 12, 000 வருஷம்முன்னாடி போங்கடா! இன்னும் ஆழமா தோண்டுங்கடா! வேகமா வேலை செய்ங்க்டா அகழ்வாராய்ச்சி நாய்ங்க்ளா!
எவ்ளோ ஜேசிபி டிக்கர் வேணும்னாலும் தமிழ்வளர்ச்சிக்காவ கொட்க்கறேண்டா!
கார்பன் டேட்டிங் வோணுமா? வேற பொம்பள டேட்டிங் வோணுமா? யெணய ரேட்டிங் வோண்மா?
அல்லாத்தயும் அர்ரேஞ்ச் பண்றோண்டா…
ஆழமா தோண்டி என் நெஞ்சில பாலை வாருங்கடா, யெனமானப் பாவீங்களா!
தமிழ் திராவிடம் வாழ்க. இந்திய ஒன்றியம் ஒழிக.
முக இசுடாலிர், தமிழக முதலையமைச்சர்:
இந்திய ஒன்றிய அரசு, இதுவரை இந்த ‘சதுரத்தமிழி’ பற்றி ஆராய ஒரு முனைவும் எடுக்காதது, தமிழக மாநிலமானது ஒன்றியத்திலிருந்து பிரிய வாய்ப்பு ஏற்படுத்தக்கூடாது என்கிற அதே நேரத்தில் பாசிச ஹிந்துத்துவா சக்திகள் இங்கு காலூன்றக்கூடாது என அண்ணாமலையை எச்சரிக்கிறேன்!
நீட் தேர்வு வேண்டவேவேண்டாம் என்பது கொள்கை, நீட் தேர்வு நிச்சயமாகத் தொடரும் என்பது நிதர்சன உண்மை. சதுரத்தமிழிக்கு செவ்வரிவடிவ அங்கீகாரம் கேட்டு, ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அது கிடைக்காவிட்டால் ஐநா அலுவகம் முன் பிரச்சாரம் செய்ய, அமெரிக்காவில் மாங்காய்புளித்ததோ தேங்காய்புளித்ததோவென கழகத்தோழர்கள் தயாராக இருக்கின்றனர்.
‘தோண்டிற் புகழோடு தோண்டுக’ – என ஔவையார் 1947 ஆகஸ்ட் 15 இலங்கை குடியரசு தினத்தன்று சொன்னதை மறக்காமல், கீழடி, மேலடி, நடுவடி, தடியடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழகத் தொல்லியல் அகழ்வாராய்ச்சித் துறை தோண்டும். புகழ் பெறும்.
இந்தப் புதிய சதுரத்தமிழி கண்டுபிடிப்பினால், சங்ககாலமும் சுமார் 12,000 ஆண்டுகால பாரம்பரியம் உடையது, உலகத்தின் ஆதிமொழி தமிழ் என மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
(…இன்னும் என்னென்னமோ எழுதியிருக்க்காங்க, சின்ன துண்டுச் சீட்ல இர்க்கற்தால, எனக்குப் புரீல…)
நன்றி!
கலைஞர் புகழ் ஓங்குக! உதைய்ணாநிதி வளர்க!!
அம்ரீகா அறிங்கர் ரவிசங்கர் கண்ணபிரான் ‘கரச’ கரடியார் விட்ட … :
பின்னதாக, மன்னிக்கவும் முன்னதாக – நம் ஒத்திசைவுயூட்யூப் சேன்னலுக்குக் கொடுத்த பேட்டியில், கரசனார் புரிந்த கரசனை!
புறநானூற்றுக்காலத்திலிருந்து, பிச்சைக்காசுக்கு ஏங்கும் புலவர்கள், அதனைக் கொடுக்காத மன்னனை ஏசுவது அல்லாவது சாடுவது எல்லாம் உண்டு… ஆகவே என் பல்லை நறநறத்துக்கொண்டு நம் சங்ககாலப் பாரம்பரியத்தை வாழ்வுரிமையுடன் தொடர்கிறேன்…
டேய் உயர்திரு மாண்புமிகு கலைங்கர்புதல்வ திராவிடஸ்டாக் முதலையமைச்ச முகஸ்டாலின்!
மாபெரும் தமிழ்தமிழிவடைமொழி இட்டிலிமொழி ‘ விற்பன்னனும், ‘ஆனானப்பட்ட நாசாவுக்கே மொழிபெயர்ப்பு செய்த‘ பல்துறை வள்ளுநனுமாகிய நான், உனக்கு இவ்ளோ முட்டுக் கொடுத்தற்கு, நீ செய்யும் கைமாறு இதுதானாடே?
குழந்தைசாமி ஃபோர்ட்ரேன் கணிநி மொழியைக் கற்பித்தார் என டகீல்விட்டேனே! உன் ‘பெரியார்’ ஈவெரா கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆதிக் கம்ப்யூட்டர் ஸைன்ஸ் கற்பித்தார் எனக்கூட சொல்லத் தயாராக இருந்தேனே! ஆனால் உனக்கு, கேவலம் ஒரு வரிவடிவத்தைக் கூடக் காப்பாற்றத் திராணியில்லையே!
சும்மா, ஒப்புக்குச் சப்பாணியாக ஒன்றிய அரசுக்கு உம் வழக்கம்போல பிராது வைத்தால் போதுமா, ஃப்ராடே?
உடனடியாகத் சதுரத்தமிழியை தமிழின் அதிகாரபூர்வமான வரிவடிவமாக அறிவி!
#கீழடியில் ஆயிரம்கிலோமீட்டர் தோண்டி, ஆதித்தமிழ்த் திராவிடன், நிலவுக்குக் கத்திக் கப்பல் விட்டான் என நிறுவி ஐநா சபையில் வீர முழக்கம்செய்!
சதுரத்தமிழி வரிவடிவத்தை தேவநாகரிக்கு ஏற்றுமதி செய்து பின்னதை ஒழி! (நான் உடனடியாக உனக்கு ‘தேவநாகரி கொண்டான்’ ‘சமச்சுக்கிருதசமரோன்,’ ‘வடநாடு நாடோன்’ போன்ற பட்டங்களை அளிக்கிறேன்; முடிந்தால் மாஞ்சா நூற்கண்டும்)
‘செந்தமிழி சதுரத்தமிழி 2022’ மாநாட்டை உடனடியாக அறிவித்து, என்னை அதன் நாற்காலிமனிதனாக அறிவி! (உடனடியாக, அதன் மூலமாக, உனக்கு ‘தமிழரக்கன் செவ்வரக்கன்’ எனும் பட்டத்தை விடுகிறேன்)
என் பொறுமை எல்லை மீறிக்கொண்டிருக்கிறது… அது அம்ரீகாவைவிட்டு தமிழக எல்லைக்கு வருவதற்குள்… ஒழுங்குமருவாதியா உடனடியாகப் போர்க்காலரீதியில் மேற்கண்டவற்றைச் செய்யவில்லையென்றால், என் ஏகோபித்த திராவிடதிமுக ஆதரவை வாபசு பெற்றுக்கொண்டு விடுவேன்! சொல்லிப்புட்டேன்.
மேலும், இன்னமும் நிறைய நாசா மொழிபெயர்ப்பு செய்து, உன்னோடு சேர்த்து உலகத்தையே ஒட்டுமொத்தமாக நாசா செய்துவிடுவேன்…
ஏச்சரிக்கை!
…கரச இப்படி கரசனை செய்து அறிவிட்டார்…
-0-0-0-0-
:-(
ஆனால், பாவம் – இந்தப் புதிய, அதாவது பழைய வரிவடிவத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தவர், ஸ்ரீகாந்த் பார்த்தசாரதி என்பவர்.
ஆனால் ஐயகோ, இவரை மட்டும் எல்லோருமே மறந்தேவிட்டனர் என்பதை நினைத்திட்டால்…
ஆகவே, இவருக்கு 2022ல் கலைமாமணி விருது கொடுக்கப்படவேண்டும்.
இதற்கு எம் திமுக உடன்பிறப்புகள், வேண்டுமென்கிற உதைவி செய்வார்கள் என நம்புகிறேன்.
பாவம், அவர்.
—
—
வாழ்க சதுரத்தமிழி!
வெல்க சதுரெழுத்து!
ஓங்குக கீழடியின் புகழ்!
February 22, 2022 at 10:23
Classic. Koncham Seeman kitteyum kettirukkalam.
February 22, 2022 at 10:50
Sir, I tried. But he was very busy advising V.Pirabakaran via some ghostly-medium – on how to setup his TamilEelam in bleddy hell. Sorry.
February 22, 2022 at 18:27
Dear Ramasamy, Wow what a detailed essay, appreciate the time taken to deliver this historically significant article with all relevant historical facts and references. Great work. Hail the new master.. Vazthukkal Thalaiva…
February 22, 2022 at 22:46
இப்படி ஒரு நீளிடுகையில் பற்பல புஜபல பராக்ரமபாஹுகளுக்கிடையில் எளியேனையும் ஒரண்டையில் இழுத்துவிடப்பட்டிருப்பட்டிருப்பதை தெரிந்தவர் ஒருவர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
கள்ள மௌனம் காத்துவிட்டு கடப்பதே இதற்குச் சரியான எதிர்வினை என்றாலும் ஒரு கேள்வி:
இவ்விடுகைக்கான திட்டமிடல், நேரம், தட்டச்சு உழைப்பு, உரிய சுட்டிகள், படங்கள் இவற்றை தேடித் தொகுத்துக் கோர்த்து செய்வதன் மூலம் நீங்கள் தமிழ்ச்சூழலுக்கு சொல்ல வருவது என்ன?
ஒரு blogpostகே நான் இத்தனை மெனக்கெடுகிறேன் என்றால், நீங்களெல்லாம்……
அது தானே?
(இப்படியாப்பட்ட்டதொரு சூழலில்) “என் இருப்பே என் செய்தி” என்று காந்தி ரேஞ்சுக்கு சொல்ல வருகிறீர் போலும்.
நடாத்துக.
March 1, 2022 at 06:35
ஐயா , சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறீர்களே !
February 23, 2022 at 04:42
thalaivaaaaa thirumpavanthuttinga magzchi. inimela cricket patti eshuthalam, thiraippada revie panna nalla kindala irukkum
bjp vettri patti enna nenakkaringa?
February 23, 2022 at 20:04
sirichu maalavillai. romba porumai ungalukku, ivalavu neela comedy katturai ezhutha.
February 24, 2022 at 06:54
Ram is back in full glory :)
February 24, 2022 at 10:40
‘நா வந்துட்டேன் சொல்லு’ – ஒத்திசைவு
‘நெருப்புடா’ – ராமேஸூ
February 24, 2022 at 11:21
திராவிடவீரருக்கு பயந்து தளத்தை முடக்கிய காவி பார்ப்பானேதொடர்ந்து பாடம்புகட்டுவோம் இந்துத்துவா சங்கிகளை கறுவருப்போம்
February 24, 2022 at 18:51
இந்துத்வா சங்கிகளை “கறு” வருப்பதற்கு முன் சங்கத் தமிழை கருவறுத்து விட்டாயே படுபாவி ! உருப்படுவியா?🤣🤣
February 26, 2022 at 21:36
வாடா , நான் ரெடி
February 24, 2022 at 15:23
😁😁😁😁
February 25, 2022 at 08:05
ரொம்ப பொறுமைசாலி சார் நீங்க. சாரு ரியாக்ஷன் தெரியணுமே!
February 27, 2022 at 15:30
February 28, 2022 at 07:16
அன்பரே,
நீங்கள் யார் என்பதை நான் அறிவேன். பிறவிஷயங்களில் மும்முரமாக இருந்ததால், எதற்கும் இதுவரை பதிலளிக்கவில்லை.
என் பொறுமையை நீங்கள் கோழைத்தனம் எனப் புரிந்துகொள்வது உங்கள் விடலைத் திராவிடப் பொறுக்கியுரிமை. அதேபோல, உங்கள் பெற்றோருக்கு அவர்களுடைய தறுதலை மகனின் லீலைகள் பற்றிச் சொல்லமாட்டேன் என நான் கொடுத்த வாக்குறுதியை நான் எக்காலமும் மீறமாட்டேன் என்பது என் கடமை. இந்தச் சூழலில், நீங்கள் துள்ளுவதை, இனமான இளங்கழுதை நிலைகொள்ளாது எனப் புரிந்துகொள்கிறேன்.
மற்றபடி, இதுவரை எந்தக் கழுதையையும் நான் ப்ளாக் செய்ததில்லை. வெறுமனே இம்மாதிரிக் குப்பைகளை அவைசார்ந்த திராவிடக்குழிக்கு அனுப்பியிருக்கிறேன். இனி உங்களுக்கும் அப்படியே.
1. நான் ஓடவில்லை, இன்னும் இருக்கிறேன். ‘திராவிட வீரன்’ என்பது நகைக்கத்தக்க oxymoron என்பது, திராவிடமாயையில் வீழ்ந்திருக்கும் வெறும் moronஆகிய உங்களுக்கு அது புரியவில்லை,
2. முடிந்தவரை எல்லா பதிவுகளையும் FWIW, மீட்டெடுக்க முயன்று கொண்டிருக்கிறேன், கவலை வேண்டேல்.
3. நீங்கள் சுட்டியுள்ள படமும் அவர் பெயரும்(?) நன்றாகவே உள்ளன. என்ன, உள்ளே பெரியாரையும் அல்லாவையும் பிரபாகரனையும் சேர்த்திருக்கலாம், கேளிக்கை ஜொலித்திருக்கும். ராவணப் பிரபாகரப் பெரியாரிய அம்பேத்கருல்லாஹ்.
எது எப்படியோ.
இம்மாதிரிப் பைத்தியக்காரத்தனங்களை விட்டுவிட்டு, உருப்படும் வழியை, நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் வழிகளைப் பார்க்கவும். உங்களுடைய பாவப்பட்ட பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்க முடியாவிட்டாலும், அவர்களைச் சிறுமைப் படுத்தவேண்டாம். அவர்கள் திராவிடர்கள் அல்லர்.
மற்றபடி திராவிடக்குஞ்சாகச் சீரழிந்து கண்ட இடத்தில் மூத்திரம் அடிப்பதோ, அல்லது பாரதப்பேரொழுக்கின் கரையில் அமர்ந்து அதன் வற்றா ஞானப் பொழிவினை நுகர்வதோ – உங்கள் விருப்பம்.
நன்றி.