[ப்ரேக்கிங் நியூஸ்!] இசுடாலிர்: உலக மூக்கு சுவாசிக்கும் நாள் செய்தி!
March 4, 2022
முன்னதாக…
மாண்புமிகு தமிழக திராவிடஸ்டாக் முதலையமைச்சர் இசுடாலிர், உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ‘உலக காது கேட்கும் நாள்’ செய்தியை நேற்று விடுத்து, அனைவர் காதுகளிலும் ஈயத்தை ஊற்றியது எனும் அரிய தமிழ்நிகழ்வு செந்நிகழ்வு நாம் அனைவரும் ஏகோபித்து அறிந்து புளகாங்கிதம் அடைந்த விஷயமே!!
இதற்கு, தீயநோக்கம் கொண்ட ஆரிய, வடவ, சங்கி, காவி அரசியல் நோக்கர்கள் கேட்டுள்ள கீழ்கண்ட கேள்விகளுக்கு, திராவிடர்களிடமிருந்து ஸ்டாக் பதிலில்லை:
- காது வழியாகத்தான் நாம் கேட்க முடியுமா?
- உலகத்துக்குக் காது இருக்கிறதா?
- அப்படி இருந்தால், அந்த குறிப்பிட்ட நாளைத் தவிர, பிற நாட்களில் காது கேட்காதா?
- உலக காது குத்தும் நாள் எனவொன்று ஏன் இல்லை?
- உலக காதுலபூ சுற்றும் நாள் என ஏன் ஸ்டிக்கர் ஒட்டவில்லை? இத்தனைக்கும் திராவிட நாள் அனைத்தும் அப்படியேதானே?
- உலக ஆண்குறி, தமிழாண்குறி செவ்வாண்குறி நாள் என்பது எப்போது வரும்?
…இம்மாதிரியான குல்லுக பட்டர்களின் கேள்விகளுக்கு இனமான திராவிடர்கல் பதிள் சொள்ள மாட்டார்கல் எண்ராளும்…
“…இன்று, பெரியாருக்கு விருது கொடுத்துப் புகழ் பெற்ற யுனெஸ்கோ அறிவித்த ‘உலக மூக்கு சுவாசிக்கும் நாள்’ – ஆகவே வாழ்த்துகள்.”
என்று மாண்புமிகு முதலையமைச்சர் தெரிவித்தார்.
‘தமிழ்மூக்கு செம்மூக்கு வளர்ச்சிக் கழகம்’ தொடங்கப்பட்டு, அனைத்து திராவிட இனமூக்குகளுக்கும் சமூக நீதி வழங்கப்படும்…
…என்றார்.
இதற்கு, மாநில பாரதீய ஜனதா பார்ட்டி கேட்ட கேள்விகள்:
- பாரதீயஜனதாபார்ட்டி ஆட்சிசெய்த கர்நாடகத்தில் எப்போதோ நானாவித பிராணிகளுக்கும் வளர்ச்சி உறுதியாக்கப் பட்டுவிட்டது. ‘குதிரேமூக்கு‘ எனும் புகழ்பெற்ற சுற்றுலா மையமே இதற்குச் சான்று! இதில் குதிரைகளுக்கு செம்மூக்குகள் வளர்க்கப்பட்டு வருவதை அறியாத திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் எதையோ பேசவேண்டும் எனப் பேசுகிறார்கள். இம்மாதிரி கேவலம் வேறெங்காவது உண்டா?
- வெறும் செம்மூக்கு வளர்ச்சி கண்டு என்ன பிரயோஜனம்? சளியொழுகும் மூக்குக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்த விடியல் அரசு?
… வழக்கம்போலவே இதற்கும் விடியல் ஸ்டாக் முதலையமைச்சர் இசுடாலிர் நேரடியாகபதிலளிக்கவில்லை.
மாறாக, ‘உலக கைக்குட்டை துடைப்பு தினம்‘ என ஒன்றை ஏப்ரல் 1ஆம் தேதி கழக அரசு கொண்டாடும். அனைவருக்கும் டஜன் கைக்குட்டைகள், ‘முதலையமைச்சர் சளியொழுகல் நிவாரணத் திட்டம்‘ மூலம் இலவசமாக அளிக்கப்படும் என்றார்.
ஆகவே, உடனே பாசிச மோதி அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று, அகில இந்தியத் தலைவர்களான அரவிந்தகேஜ்ரிவாலர் ஹெச்டி குமாரசாமியார், மமதாபேனர்ஜியார், ஓவைஸியார் – என அனைவருக்கும் தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.
-0-0-0-0-
அதேபோல: இனிவரும் நாட்களில்:
- உலக நாக்கு சுவைக்கும் நாள்
- உலக கால் நடக்கும் நாள்
- உலக கண் பார்க்கும் நாள்
- உலக மயிர் கூச்செறியும் நாள்
- உலக இனமான நாக்கைப்பிடுங்கல் நாள்
- உலக ஜல்லிக்கட்டு மாடுவிரட்டி நாள்
- …
- …
- உலக டோப்பா ஒட்டிக்கொள்ளல் நாள்
- உலக தலைமசுர் சாயமடிப்பு நாள்
- …
- உலக திராவிட டம்மியாக்கப்படல் நாள்
- …
- உலக ஸ்டிக்கர் ஒட்டுதல் நாள்
- …
- உலக வாழ்த்துச்செய்தி நவிலல் நாள்
- …
…எனத் திராவிடர்கள் தினவெடுத்து, பொழுதன்னிக்கும், மும்முரமாக இசுடாலிர் வெளியிடப் போகும் வாழ்த்துச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
வாழ்க வாழ்த்துச் செய்தி!
வளர்க ஸ்டிக்கரின் புகழ்!!
—
—
March 4, 2022 at 13:26
உடன்பிறப்பே,
‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பது திராவிடம்.
கற்கக்கூடாதவன் கேட்டுவிட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்றச் சொல்வது ஆரியாம்.
செவிவழி மரபைப் போற்றுவதே தமிழர்தம் நாட்டாரியல்.
அதைக் களவாடி ‘கர்ண பரம்பரைக் கதை’ என்று ஆக்கியது சமசுகிருதம்.
‘பரம்பரை இல்லை’ என்று கர்ணனை இழிவுசெய்துவிட்டு அவன் பெயரையே எடுத்துக்கொள்ளும் ஆரியத்தின் கீழ்மைக்கு நிகரில்லை.
இன்று கழக ஆட்சி அமைந்து, நாமெல்லாம் செவிப்பயன் அடைந்துவிட்டால் அவாளுக்குப் பொறுக்காது.
இப்படி ஏதாவது சொல்லி தமது மேட்டிமைவாத காழ்ப்பை உமிழ்வர் ஆரிய நரிகள்.
ஆனால் அந்த நரிகளே கண்டு அஞ்சும்படியான தலைமை நமக்கு இன்று வாய்த்திருக்கிறது.
அந்த “நரி வெரூஉ தலையர்” வழிகாட்ட தமிழர்க்கு ஏறுமுகமே.
இத்தகைய புன்வசவுகளை நம் திராவிடச் செவிகள் கேட்கலாகாது.
திராவிட செவிநுகர் கனிகளை இருப்ப ஆரிய எட்டிக்காய் கவர்ந்தற்று.