சுப வீரபாண்டியனின் திராவிட வக்கிரப் பராக்கிரமம்

June 1, 2021

பலப்பல ஆண்டுகளாக, இந்த ஆளின் படுகேவலமாக லீலைகளைக் குறித்து எழுதலாம்எழுதலாம் எனச் சிலபலமுறை நினைத்து, பின்னர் லூஸ்ல வுட்டிருக்கிறேன், கெடப்புல போட்ருக்கிறேன்.

இதற்கு மூன்று காரணங்கள்.

1. இந்தப் பதரின் காமாந்தக லீலைகளைக் குறித்து எழுதினால், சம்பந்தப் பட்ட பெண்கள் பாதிக்கப் படுவார்கள், தர்ம சங்கடம் நேர்ந்துவிடும். இப்படிப் பாதிக்கப் பட்ட, ‘தமிழ்/திராவிட மாயைக்கு மயங்கிய’ ஒரு அப்பாவி திராவிட மங்கையைத் தெரியும்வேறு, பாவம்; ஏற்கனவே நொந்துபோனபின் மேலதிகமாக அசிங்கப்படும் திராணியில்லை.. ஆக – இது ஒருமாதிரி கத்தியின் மேல் நடக்கவேண்டிய விஷயம்.

2. இந்தப் புல்லுருவியின் (கருணா)நிதிரீதியான அமுக்கல்கள்/ஊழல்கள் + புரோக்கர் வேலைகள் + பணம்/’சலுகை’ வாங்கிக்கொண்டு அந்தக் காசுக்குக் குரைப்பது குறித்தெல்லாம் எழுதலாமென்றால், அதற்கான மூல ஆவணங்கள் தற்போது என்னிடம் இல்லை, முன்னால் கிடைத்த விவரங்களை அகழ்ந்தெடுக்க முடியவில்லை, மறுபடி நகல்கள் பெற கடந்த சிலபல மாதங்களாகப் பிராது கொடுத்துவிட்டுப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

3. மேலும் எனக்குப் பல பத்தாண்டுகளாக மிகவும் அணுக்கமாக இருக்கும் நண்பன் ஒருவன் இந்த உதிரியின் அபிமானி; ஏனெனில் அவன் நான்கு மாமாங்கங்கள் முன் படித்த ஸைவெட் கல்லூரியில் (SIVET – சாம்பார் இட்லி வடை ஈட்டிங் ட்ரெய்னிங் காலேஜ் எனப் புகழ்பாடப்பட்ட கல்லூரி – தாம்பரம்-வேளச்சேரி சாலையில் ஒருகாலத்தில் இருந்தது, இப்போதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை) இந்த உதிரி, அவனுக்கு ஒரு வாத்தியாக இருந்திருக்கிறார், சுமுகமாகப் பழகியிருக்கிறார் இன்னபிற. இதன் காரணமாக – இவனுக்கு அந்தாள்மேல் அப்படியொரு பற்று, ராஜவிசுவாசம், மனமுருகல்… என நினைக்கிறேன். ஓ ஸ்ஸுபவீஈஈஈஈஈ! நல்ல பையன், ஆனால் வெகுளி வெளுத்ததெல்லாம்பால் டைப்.

(இந்த  சுபவீ தரகுப்போலி ஆசாமியுடன் பொருத்திப் பார்க்கையில் அவருடைய மூத்த சகோதரர் எஸ்பி முத்துராமன் (தமிழ் மசாலாப்பட டைரக்டர்) அவர்களுக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாம் – நமக்கு அவருடைய மசாலா ஒத்துவருமோ இல்லையோ, அவர் திரைப்படங்கள் திராபையோ அல்லது ஸெல்லுலாய்ட் வியர்த்தமோ என்ன எழவோ…. ஆனால், நேர்மையாக உழைத்துச் சம்பாதித்தவர் அவர்)

இந்த ஆள், சிலபல திராவிடர்களிடமிருந்து பலன் வாங்கிக்கொண்டு  அநியாயமாக ‘சோ ராமசாமி ஒரு ஸிஐஏ ஏஜெண்ட்’ என, திமுக சார்பாகப் பொய்ப் பிரச்சாரம் செய்ததையும் பல்கலைக்கழக ஆசிரியர் தெரிவுகளில் / நியமனங்களில் ஒருமாதிரி புகுந்து விளையாடியதையும் (இவற்றை சிலபல திராவிட ‘ஸோர்ஸ்கள்’ மூலமாகவும் அறிந்தேன்) பற்றி என் நண்பனுடன் பேசியபோது – அவனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. “அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்டா! ற்றொம்ப நல்லவர்டா!! யாரோ கெளப்புற வதந்திய நம்பாத… அப்புறம் உன் இஷ்டம்.”

இருக்கும் இரண்டரை ஆப்த நண்பர்களில் விட்டுக்கொடுக்கவும் அவர்கள் மனதை புண்படுத்தவும் திராணியில்லாமல்* ஈனஸ்வரத்தில் முனக வேண்டியிருக்கிறது, என்ன செய்ய…

* சும்மா சொன்னேன். நானாவது இங்கிதம் பார்த்து அட்ஜஸ்ட் செய்வதாவது…

நான்காவது காரணமும் இருக்கிறது: திராவிடத்தில் – தமிழ்ப்பேரினவாத கும்பல்களில் – இந்த வக்கிரங்களெல்லாம் சகஜமப்பா.

நிலைமை இப்படி இருக்கையிலே… இந்தப் பொறுக்கிக் குப்பை கும்பல்களில் எதை எடுப்பது எதை விடுப்பது, சொல்லுங்கள்? ஒரு வாழ்நாள்/ஆயுள் போதாது – இந்த உயர்மட்ட, ஆகவே படுமட்டப் பொறுக்கிகளைக் குறித்து விலாவாரியாக எழுதுவதற்கு…

-0-0-0-0-0-

இந்தச் சமயத்தில் தான் கவிஞர் தாமரை அவர்களின்  அண்மைய குறிப்புகள் உதவ வருகின்றன.

தமிழகத்தில் இருக்கக்கூடும் சுமார் ஒருகோடி அக்மார்க் திராவிடர்களில், மொத்தம் மூன்று திராவிடர்களை (அப்படித் தங்களை அறிவித்துக் கொள்பவர்களை) நான் மதிக்கிறேன். இவர்களில் தாமரை அவர்களும் ஒருவர்.

ஏனெனில், திராவிடம் எனும் கருத்து திராபையாக இருந்தாலும் – எனக்குத் தெரிந்த வரையில் பலப்பல வருடங்களாக, தாமரை ஒருமாதிரி சமரசமற்ற கறார் பார்வை உடையவராக இருந்து வந்திருக்கிறார். பொய்பொய்யாக இங்கொன்று அங்கொன்று எனச் சொல்வதில்லை, இரட்டைவேடம் போடுவதில்லை, தயவு தாட்சணியம் பார்ப்பதில்லை., தமிழ்த் தோசையம் இனமானம் என்றெல்லாம் அளவுக்கதிகமாக உளறிக் கொட்டுவதில்லை, பணத்தையோ கவிதைகளையோ திருடுவதில்லை…. மாறாக, சிந்தனைகளைக் கோர்த்துத் தெளிவாகவும் நேர்மையுடனும் பேசக்கூடியவர் மட்டுமல்லாமல், உரக்க அவற்றைப் பேசிச் செயல்பட்டு வருபவரும் கூட. எனக்குத் தெரிந்த சொற்ப, ஜாதிவெறியற்ற திராவிடர்களில், இவரும் ஒருவர். (மற்றபடி இவருடைய திரைப்படப் பாடல்களைப் பற்றி எனக்கு அறிமுகமில்லை – ஆனால் அவருடைய படைப்புத் தரத்தைப் பார்த்தமட்டில், எனக்கு அத்திரைப்பாடல்களும் நன்றாக அமையவே வாய்ப்புகள் அதிகம் எனப் படுகிறது)

…சொல்லப்போனால் இவர் எப்படி இந்தத் தமிழச் சினிமாச் சாக்கடையில் விழுந்தெழுந்திருக்கிறார் என்பதே எனக்கு இன்றுவரை ஆச்சரியம், பாவம். எங்கோ நன்றாக இருந்தால் சரி.

சரி. என் மதிப்புக்குரிய தாமரை அவர்கள் கருத்துகளை அப்படியே ஒரு தளத்திலிருந்து கட் பேஸ்ட் செய்து கொடுத்திருக்கிறேன்; அதாவது ஒரு பிடிஎஃப் கோப்பாக.

அதன் மூலச் சுட்டி: வைரமுத்துவை தொடர்ந்து சுபவி சிக்குகிறார்? வெளுத்து எடுத்த கவிஞர் தாமரை!

அவசியம் படிக்கவும்.

-0-0-0-0-

தாமரை அவர்களின் எத்தனங்களும் திட்டங்களும் நடந்தேறவும், அவர் தொடர்ந்து ஜொலிக்கவும். சுபவீ, தியாகு, முகிலன் வைரமுத்து இன்னபிறர் போன்ற வக்கிர குண்டர்கள், பகிரங்கமாகத் தோலுரிக்கப் பட்டு அசிங்கம் செய்யப்படவும் வாழ்த்துகள்:…

21 Responses to “சுப வீரபாண்டியனின் திராவிட வக்கிரப் பராக்கிரமம்”

 1. Vel Says:

  //தமிழகத்தில் இருக்கக்கூடும் சுமார் ஒருகோடி அக்மார்க் திராவிடர்களில், மொத்தம் மூன்று திராவிடர்களை//

  மற்ற இருவர் யார்? தாமரை இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் கடுமையாக எதிர்ப்பவர் + அவர் ஒரு veganனும் கூட. திராவிட கூட்டத்திற்கு சைவ உணவு உண்பவர்களை கண்டாலே ஆகாது என்னோவோ பிராமணர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுவதை போல. அவர் vegan என்று கூறியதற்கு, பிராமண பெண்ணாக மாறுவதற்கு முயற்சிக்கிறார் என்று கூட சில திராவிட முண்டங்கள் எழுதின. சைவ உணவை ஒரு அறம் சார்ந்த பார்வையில் கூட பார்க்க முடியவில்லை இந்த தி(தீ)ராவிடர்களால்.


  • ஐயா,  நன்றி. எனக்கு இவ்விஷயங்கள் குறித்து அறிவில்லை. இந்த வீகன் சைவ வைணவ உணவுகள் குறித்தெல்லாம்… … :-)

   தாமரை அவர்கள் திராவிடர்தாம். ஆனால் அதனை மீறி அவரிடம் பொருட்படுத்தக்கூடிய பண்புகள் இருக்கின்றன எனத்தான் நினைக்கிறேன். அவர் ஒரு நல்ல சாம்பல் நிறத்தோள். ஒருமாதிரி.
   இம்மாதிரி விஷயத்தோர்களை நாம் போற்றவேண்டும் என நினைக்கிறேன்.

   மற்றபடி, அந்த இரு திராவிடர்கள், தலைவர்களல்லர். கிழவர்கள். எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் அந்திம காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவுதான். லூஸ்ல வுடவும்.

   (நான் அ இ அ தி மு க-வினரை திராவிடர் என பாவிப்பதை நிறுத்திவிட்டேன்; அவர்கள் பலவிஷயங்களில் பாவிகள்தாம்… சில ஒருமாதிரி விதிவிலக்குகளும், படித்த பண்பாளர்களும் அங்கே இருக்கிறார்கள் என்பதை அறிவேன் – மாஃபா பாண்டியராஜன் அவர்கள்போல – இவர் என் (இறந்துவிட்ட) நண்பன் குடும்பத்திருக்கு மிக நெருக்கமானவர் என்பது எனக்கு இவர் குறித்த மேலதிகச் செய்திகளை அறிய வகை செய்திருக்கிறது)

   • dagalti Says:

    Regarding ADMK being non-Dravidia and Mafoi, one point.

    Mafoi in a pre-election meeting came out and clearly distinguished ADMK and DMK ‘ideologically’ on the point that only the latter was anti-Brahmin.

    While this was kinda known always, I think he was the first to ever overtly state it.

    But let us see what the state of affairs in TN politics was.

    In 2018, one Premeela Gurumoorthy was appointed as VC of Music College. One of the applicants – an ADMK member, singer Pushpavanam Kuppusamy alleged that he was as qualified (PhD, teaching experience etc) and was overlooked because he wasn’t a Brahmin.

    Mafoi Pandiarajan defended the choice of the selection committee saying Premeela checked more boxes (administrative experience etc). And then proceeded to clarify: “”she is not a Brahmin either”.

    Now, this is a minister who is hated by Dravideilogists for his having been in BJP. And he is in – as you rightly say – in a party that isn’t Dravidian except in name.

    But he didn’t find it amiss to make this clarification. Doesn’t it suggest that tomorrow if a Brahmin is appointed to that position – or for that matter any position – it would be a ‘valid’ objection to make? He isn’t dumb. He knows what he is doing.

    That is the state of affairs in TN politics. That a supposed Hindutva puppet in an ostensible non-Dravidian party still has no qualms whatsoever in clarifying that he has not performed the unpardonable high-crime of appointing a Brahmin to some post.


   • I have no clue about this incident.

    However.

    One thing you must agree with: Posturing against Brahmins (but not necessarily having ill-will or wishing death to them) is a ‘hygiene factor’ in TN politics and also in some other States. (am not going in to the reasons)

    That is, if that posturing is there, then nobody does anything – it is not an ‘Actionable’ and nobody cares; but if he is not there (even as a mere sabre-rattling) then, that may become an issue. For a politico, actively supporting ‘brahminism’ – whatever that it means or imputes – is effectively digging one’s own political grave.

    Given everything, including all shades, I have respect for Mafoi Pandiyarajan.

    Again.

    Victimhood narratives, even when they are true, do not carry any group far. At all. One should actually be biased for Agency, instead. IMHO, of course. YMMV.

    While it is important to register and record the concerns, and continuing to educate others based on evidence, ultimately what works is the ‘parable of the pedestrian.’

    Also, we should understand that, we are not intellectual, rational animals. At all.

    My approach would be: ‘Dont forgive, dont forget – but plan ahead, be careful.’

   • dagalti Says:

    Nothing to disagree here.
    It is about ‘documenting the normalization’ of what ought to be unacceptable in a civil society.

    I mentioned to point out the state of affairs that the posturing needs to be done even by the supposed opposer of the trenchant anti-brahmanism (who has also paid the electoral price for, besides other things, his outspoken stances)

    This article has the details https://www.thehindu.com/news/national/tamil-nadu/music-varsity-v-c-was-selected-on-merit/article22801480.ece

    No one saw it amiss and it flew under the radar.

 2. dagalti Says:

  தாமரையார் ஒரு மேதகுவேபிரபாகரப்புலியார் ஆராதகர்.
  சீமான் போன்றவர்களின் புலிகள்
  குறித்த பம்மாத்து பிம்பங்களுக்கு மயங்கும் முதிரா பதின்பருவத்தினரையாவது ‘ஒழியுது போ, வயதானால் சரியாகிவிடும்’ என்று நம்பலாம் (எனக்கு அந்த நம்பிக்கையும் கறைந்துகொண்டு வௌகிறது).

  ஆனால் 40-50 வயதுள்ள ஒருவர் பிரபாகரப்பாதக்கப்பயலின் ரத்தவெறிக் கொடூரங்களின் நேர்சாட்சி. அப்பாவிகளையும், சிறார்களையும் கொன்றழிக்கத் தயங்காத, அதை உத்தியாக கடைபிடித்த ஒரு மனவிகாரம் படைத்த அயோக்கியப்பயலை போராளி என்றெல்லாம் நினைக்க/பேச முற்படும் எவர் மீதும் சிறிதளவும் மரியாதை வைப்பதை ஏழரையோத் சங்கம் சார்பாக கண்டிக்கிறேன்.

  சினிமா கோஷ்டிகள் வழக்கம்போல் ஏதோ ஒரு இலைங்கைப்போர் நிறுத்தம் கோரி ஒரு டகில்பாஸ் உண்ணாவிரத (சன் டிவி நேரடி ஒளிபரப்பு) செய்தபோது இந்த அம்மாள்: ‘ஒரு தாயாக இலங்கை ராணுவத்தை கண்டிப்பதாக’ ஏதோ பெனாத்தல் கவிதைப் படித்தார். பிரபாகரப்படையினரினால் கொன்றழிக்கப்பட்டவர்கள் – குறிப்பாக ராணுவத்தினர் அல்லாத குடிமக்களும், சிறார்களும், அன்னையரின்றி பிறந்த அயோனிஜர்களா? என்ன அயோக்கியத்தனமான உணர்ச்சிச் சுரண்டல் வேலை இது?

  2009க்குப் பிறகு அவனுக்கு ‘இமேஜ் ரிஹபிலிடேஷன்’ செய்தவர்களில் இவரும் ஒருவர்.
  இவர்களை செய்கைகளை அடுத்த தலைமுறைக்கு(!) எடுத்துச் சொல்லவேண்டிய சாட்சிகள் அருகி வருகின்றனர்.

  திராவிடர்கள் நாட்ஸிகள், கள்ளக் க்ரூரகள். ஆனால் தமிழ்தேசிய ஆசாமிகள் ‘பச்சைப் படுகொலை’ பண்ணப் பழகியவர்கள். பண்ணியவர்களை போற்றுபவர்கள்.


  • ஐயா, உங்கள் கோபத்தைப் புரிந்து கொள்கிறேன். பிரிந்துபோய் ‘அனைத்து இணைய தம்பீ ஏழரை பின்னேற்றக் கலகம்’ தொடங்க வாழ்த்துகள்.

   1, தாமரை அவர்கள், அயோக்கிய ஃபாஸ்ஷிஸ்ட் புலிகளின் ஆதரவாளர் என்பதை அறிவேன். (குறைந்த பட்சம் 5-6 வருடங்களுக்கு முன்னராவது அப்படி இருந்தார்)

   2. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஒருவரைக் குறை சொல்லமாட்டேன். ஏனெனில்:

   2.1 நான் என் இளம்வயதில் (<22-23) அடச்ச்சே குவாரா, ஏன் முக ஸ்டாலினுக்குக் கூட ஆதரவாளனாக இருந்திருக்கிறேன். இதற்கு அறியாமை, அனுபவமின்மை போன்ற காரணங்கள். அயோக்கியனாக இல்லாவிட்டாலும் முதிர்ச்சியின்மை என வைத்துக் கொள்ளலாம்.

   2.2 ஆனால் நான் மனதறிந்து, கம்யூனிஸ்ம் வகையறாக்களிலிருந்தோ, அமைப்புகளிலிருந்தோ நிதியோ ஆதரவோ பெறவில்லை; என் ஆதரவு என்பது அறியா ஆவேசம் சார்ந்தது. அதேபோல, தாமரை அவர்களும் புலிகளிடமிருந்து நிதி/ஆதரவு பெற்றவர் அல்லர் எனத் திடமாக நம்புகிறேன் – அவருடைய புலி ஆதரவு நிலைக்கு, அவருடைய அறியாமையே காரணம் என்பதையும். (பிற எந்த தலைவரையும் இப்படிச் சொல்லமாட்டேன் – மாறாக, உணர்ச்சிகர  வைகோபால்சாமி ஒரு பேக்கலைட் என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்)

   2.3 தாமரை அவர்களின் சிலபல சார்புகளை நான் ஆதூரத்துடன் பார்க்கிறேன்; திராவிடக் குறுங்கூட்டிலிருந்து விட்டு விடுதலையாக உள்ளார்ந்து, தன்னிலையறியாமல் விழையும் பட்டாம்பூச்சியாக  அவரை அனுமானிக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள். (நான் அப்பாவித்தனமாக இருக்கிறேன் என நினைக்காதீர்கள்!)

   2.4 ஒரு திராவிடருக்குச் சகதிராவிடரை காட்டமாக விமர்சனம் செய்வது கடினம் என்பதைக் கவனியுங்கள். பொதுமேடைகளில் அப்படிச் செய்பவரை நாம் மதிக்கவேண்டும்.  (மாறாக, இந்த 'ஹிந்துத்துவ' ஆசாமிகள் பலரிடம் நாம் காணும் குணம் – எதற்கெடுத்தாலும் விமர்சனம் – சண்டை, சச்சரவு… பொது எதிரிகளுக்கெதிராக ஒருங்கிணைவது என்பதே இல்லை)

   3. திராவிடம் என்பது ஒரு ஃபாஸ்ஷிஸ்ட் கருத்தாக்கம்; ஆனால், திராவிடர்கள் நாட்ஸிகள் அல்லர். 1) அவர்களில் அறிவுஜீவிகள் இல்லை, அவர்களுக்கு உண்மையான அறிவுஜீவிகளின் சித்தாந்த ரீதியான முட்டுக்கொடுத்தலும் இல்லை 2) அதன் அடிப்படைகள் வெறும் பம்மாத்து மட்டுமே, அதற்கு சித்தாந்தரீதியாக எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, வரலாறு ரீதியாகவும் ஒரு சுக்கும் இல்லை  3) அவர்கள் பேசும் அளவுக்குச் செயல்பாடு இல்லை 4) அவர்கள் கூட்டுக் கொள்ளை,  பொறுக்கித்தனம், அதன் பயன்பாடு என்கிற ரீதியில், குறுநில ஃயூடல் சிறுமன்னர்களாக மட்டுமே ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர் 5) அவர்களுக்கு ஆயுதம் தரித்த, அதற்குப் பயிற்சி பெற்ற, அல்லது பயிற்சிபெற ஆவலாக இருக்கும் கும்பல் இல்லை 6) கட்டப் பஞ்சாயத்து தொழில் என்பதற்கு அப்பாற்பட்டு தொழில் ரீதியாக (ஊடகங்கள் தவிர்த்து) ஒரு அடிப்படையும் இல்லை. 7) பொறுக்கிகளாக இருந்தாலும் அவர்கள் கோழைகள் 8) பொதுவாக வெகு சில ஜாதிகளால் மட்டுமே அடிப்படைக் கட்டமைப்பு இருந்தாலும் – அதிலுள்ள ஜாதிகளின் பொறுக்கிகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளனர். 9) ஆகவே திராவிடம் என்பது சிலபல ஜாதிசார் பொறுக்கிகளால், அந்தந்த ஜாதிகளின் முன்னேறத்துக்காக(!) மட்.டும் செயல்படுவது. இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் – ஆனால் பலப்பல விஷயங்களின் இந்தத் திராவிடத் தெருப்பொறுக்கிகளை, நாட்ஸிகள் என்று சொல்லிப் பெருமை சேர்க்கவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

   நான் நாட்ஸிகள் ஒழிக்கப்படவேண்டும் என நினைப்பவன்.

   இடதுசாரி இயக்கங்கள் நாட்ஸி சார்பின என்பதையும் உணர்ந்துள்ளவன்.

   4. நமக்கு, சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

   5.  தாமரையாரும் சாம்பல் நிறத்தோள். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம்: முதுகெலும்பு. மாற்றான் தோட்டத்து மல்லேஷ்வரி ஆனாலும் இது எனக்கு முக்கியம். பிற விஷயங்களைத் தற்போதைக்கேனும் லூஸ்ல வுடுவேன்.

   6. நீண்ட கால நோக்கில், எனக்கு – 'கலாச்சாரரீதியான தடுத்தாட்கொள்ளல்' (cultural appropriation) என்பதன் வீரியம் முக்கியம் எனப் படுகிறது – பாபுஜியானாலும் சரி, தாமரையானாலும் சரி. உங்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன்.

   7. YMMV.

   • dagalti Says:

    /பிரிந்துபோய் /
    Vibrant உட்கட்சி ஜனநாயகம் உள்ள இவ்விடமிருந்து பிரிந்துபோவதாவது.

    இது ஒரு தோழமைச் சுட்டு மட்டுமே.

    I agree with almost all your points, especially the ones in 3. Except that IMO this Dravida recrudescence is more virulent than earlier and TN now is a bit of a tinderbox with insecure politicians at the helm. So I’d not underrate the possibility of this round getting overtly worse than say half a century back.

    Anyway, I do see that ThAmarai is a rarity insofar as being an internal critic. And yes, her opinions are likely not driven by some covert funding.

    That said, she wasn’t a young greenhorn whippersnapper when holding forth on the LTTE. It is likely she holds those opinions even now.

    That points to a crooked ability to cut ginormous slack to murderous maniacs as long they espouse some sort of cause one lays allegiance to. That is too revolting a stance for someone to hold way into late adulthood.


   • // IMO this Dravida recrudescence is more virulent than earlier and TN now is a bit of a tinderbox with insecure politicians at the helm.

    Agreed. However, though I think ‘this too shall pass’ – am also not too sure about it, given the fact that the Chief Lumpen Stalin has pretty much divided up TN and handed over the resultant fiefs to a bunch of casteist-dynastic families – so he actually does not have much control over what the deranged/lumpen families do. In essence the ‘monopoly on violence’ has now become an oligopoly, or kuru-nila-mannaropoly if you will – of approximately – some thousand families and their heads.

    It would be worthwhile to watch what happens to the Madurai Mirasdar Thiyagarajan – whether any action would be taken against him for all his stupid/vile street-talk & ‘indpendence.’ whether he would be reined in or not. That may provide a clue as to whether the other satraps also may become loose-cannons – and become independent mafia families as opposed to a centralized setup. So capability for violence can be broadbased and hence some ‘cleansing’ can start.

    I feel that, Seemaan kinda lumpen are far more dangerous – because they have the fundamental capacity to be charismatic and hence militarize – given the calibre of the youth flocking over to him.

    As far the Lotus, I am partial it, if you haven’t already figured it out. So.

    She is ALSO smart & courageous, unlike Kanimozhis. I have a grudging respect for smart people, though I may not like them and they may even be evil personified.

    Case in point: Mohammed, the inventor of Islam.

   • dagalti Says:

    I wonder why many ppl think the Maquis de Uthamapalayam will be slapped on wrists by DMK. He is thrilling the whistlingschlongs on SocMed.

    The supporters have the depth of historical understanding to believe the Marquis is the first one to issue G-Secs in the financial history of Tamilnadu.

    He is the modern bad-boy foil to the gentle elder MKS. There is no incentive to rein him back.

    /Seemaan kinda lumpen are far more dangerous/
    Yes. At @7% he is mighty scary.
    I thought he’d whither away without funding. That he hasn’t dried up beats me.

    But I shall have you know that more than one of your செல்ல BJP partyfolks/supporters have publicly wistfully hoped for roping in that deranged psycho and repackaging him as a orator who can serve the dharmic (எதுக்கெடுத்தாலும் இது ஒரு வார்த்தையை சேர்த்துக்குறானுக) cause(!) by rallying the youth away from Dravid.

    Where I come from, the most succinct response to such musings is: வெளங்கும்!


   • “whistlingschlongs”

    loved it. but they do not have a long penis either. it is rather short, befitting their IQ.


 3. Meanwhile some comments from some guy:

  ThAmarai is a good cinema song writer who does not use English words in her lyrics

  Her attempt at rap in pure Tamil in a Kamal movie is also praise worthy

 4. Em Says:

  Why is it that the men who are portrayed, claimed to be progressive and feminist turn out to be scumbags ? Normal men who have a bit of misogyny are far better to deal with than these cretins.

  Regarding Thamarai’s pro LTTE stance, it is very difficult to go against LTTE in TN because people get scared that they will be branded anti-Tamil/Eelam. Even younger people who know nothing about the Sri Lankan crisis think that they were some kind of armed militants fighting against oppression instead of the depraved, psychotic maniacs they were. The kids who joined them willingly and otherwise were their victims too. The politicians and the media / movies lionised them and Seeman is so popular among the young voters because he projects himself as a revolutionary like Prabakaran did earlier.

  Coming to the mirasu of Madurai – he is just so damn annoying. His know-it-all attitude and the disdain he has for others is unparalleled. It is really comical how he thinks he knows everything better than everybody else. Most people think he is the second coming of Jesus who is back to save the Dravidian stock(which is just idiots calling themselves stupid names) from the mismanagement of the previous govt and usher in a new glorious era because he is oh so phoren educated and so smart and gave up his career to serve the people of TN. Did you know he has a Ph.D in psychology, too ? I do, thanks to you. Why do you hate me ?

  At the end of the day, it’s all head-letter (copyright S.Ra), what else !


  • OMG! What an excoriation of my one&only leader Palanivel Thiagarajanaar, PhD, MBA, MLA. 3rd Gen, 4th Gen etc! :-(

   Luckily I am neither a progressive nor a feminist – so I hope ‘Em,’ you would spare me.

   I promise to practice a little bit misogyny from now onwards, so that I continue to stay in your good books.

   Having said all that, I noticed with dismay that you are talking about the ‘second coming of Jesus’ – and I take grave objection to that.

   Do you mean to say that, Jesus practiced sex and has had orgasms?

   I NEVER expected you to be anti-Jesus. Sorry. This is not done.

 5. dagalti Says:

  /திராவிடர்கள் நாட்ஸிகள்/

  தொடர்பான உங்கள் மேற்குறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் ‘எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை பார்க்கமுடிகிறது’ என்றாலும் (i.e. அதற்கான சித்தாந்த உள்ளீடற்றவர்கள்) அவர்கள் ஹிட்லர் வழிவந்தவர்களாகத் தான் கொள்ளமுடியும், ஸ்டாலின் வழிவந்தவர்களாக அல்ல.

  சோவியத் ஒன்றியத்தின் களையெடுப்புகளில், பெயரளவிற்கேனும் ஒரு கங்காரு அநீதிமன்றம் அமைத்து, ‘நான் புரட்சிக்கு எதிராக துரோகஞ்செய்தவன்’ என்றொரு வாக்குமூலம் வாங்கி, அதன் பின்னர் துரிதமரணமோ, சைபீரியப்பயணமோ வழங்குவது ஸ்டாலினிய வழமை. அதாவது, அன்னார் தண்டிக்கப்படுவது அவர்களது புரட்சிவிரோத –> மக்கள்விரோத செயல்பாட்டுக்காகத்தானே ஒழிய, அன்னாரது அடையாளத்துக்காக அல்ல என்றொரு ‘அத்தி இலை’ தரிப்பு உண்டு.

  அவ்வளவு ஏன், குலாகுகளிலிருந்து ‘பாசத்தலைவன் காம்ரேட் ஸ்டாலினுக்கு’ பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் பதிவு செய்து அனுப்பி கூட்டு-மனசாட்சி’க்கு ஒரு மயிலிறகு வருடல் செய்தவர்கள் அவர்கள்.

  மாறாக, ஶ்ரீமான் ஹிட்லர் அத்தகைய பாசாங்கு செய்தாரல்லர். நீ இன்னார் என்பதால் கொன்றழிக்கப்படுகிறாய், என்பதைச் சொல்லத் தயங்காதவர்கள் நாட்ஸிகள்.

  அதனால் தான், திராவிட கருத்தியலாளர்களை (!) பொதுவாக ஃபாஸிஸ்ட்/அத்தாரிடேரியன் என்று சொல்வதைவிட, குறிப்பாக நாட்ஸி என்ற வகைப்படுத்துவது பொருத்தப்பாடு உடையது என்று எண்ணுகிறேன் – அவர்கள் அதற்குண்டான கருத்தியல் காத்திரம் அற்ற வெத்து பம்மாத்துக்காரர்கள்தான் என்றாலும்.

 6. Muthukumar Says:

  ராதாரவி போன்ற கழிசடைகள் பெரிய மனிதர் தோரணையில் உலாவர பாதிக்கப்பட்ட சின்மயி வக்கிரமான அவதூறுகளுக்கு உள்ளாகும் பேரவலம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும் போல.


  • ? Sir, must be some current dravidian affairs, am not much clued in. :-(

   • Muthukumar Says:

    Oh, not a current affair, kind of an old one only. this actor Radha Ravi, is the president of dubbing artists union and he himself was accused of sexual harassment. But that guy is still enjoying the limelight without even a small scar on his fame (at least VM was dragged allover the media). But that gentleman made sure to kick Chinmayi from the union, quoting some silly reason.

    Heard that, he accused Chinmayi on a public stage, of course, shamelessly.


   • Hmm… Didn’t know about these stuff also! At a variety of levels, ignorance is a real bliss, no? :-(

    In the meantime, dravidian rectums seem to growing from strength to strength.

    Given the situation, what do we meaningfully do, tell me. (not really a rhetorical question)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s