கவிஞர் இளையபாரதி எனும் வெட்கங்கெட்ட அடச்சேகுவரா ஜால்ரா! வ்வோங்கி அட்றா!! + அக்காலக் கவிங்கர்கள் பற்றிய குறிப்புகள்
June 2, 2021
பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.
ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்…
ஒரு எடுத்துக்காட்டாக, அவர்கள் அந்த ஆனானப்பட்ட ஸ்டாலினுக்கும்(ஒரிஜினல் ஃபேக், ஃபேக் ஃபேக் அல்லர், கவனிக்கவும்!) லெனினுக்கும் ஜால்டா அடித்ததற்கு, ஸோவியத் யூனியன் சுற்றுலா ஒன்று ஓசியில் கொடுக்கப்படும் என்ற காரணம் மட்டுமேதான்… (மேலும் சில மாதாந்திர பணவசதிகளும், மருத்துவ வசதிகளும் கொடுக்கப் பட்டமையெல்லாம் ஊக்க போனஸ்கள்)
ஆனால், இந்த யெளயபாரதி தனக்குத் தானே சுயமைதுன ஜால்ராவை வோங்கி வோங்கி, தனித்துவக் கவித்துவமாக அடித்துக்கொள்கிறது. இன்னொரு தண்டக் கருமாந்திரமான புர்ச்சிகர எர்னஸ்டொ குவாராவுடன் தன் சொந்த தண்டக் கருமாந்திரமான தலைவனைப் பொருத்திக் கொள்கிறது.
ஏதாவது பிச்சை ஜாக்பாட் அடிக்கலாம் எனப் புளகாங்கிதமும் அடைகிறது.
இதில் ஐந்து பிரச்சினைகள்:
1. ஜால்ரா
2. யின்னா பில்ட்-அப்புடா! பல முதலமைச்சர்கள் முன்னமே அப்படிச் செய்துவிட்டனர் – இதிலென்ன அப்டீ பெரிய்ய மசுர்? இப்டீ பிலிம் காட்டி பிலிம்காட்டியே காத்ல பூ ஸுத்றிங்க்டா பொற்க்கீங்க்ளா
3. ‘மரணத்தின் குகைக்குள்’ எனும் மடத்தனம் – டேய்! பொளுதன்னிக்கும் உள்ளாற போயிவர அத்தினி டாக்குட்டார்ங்க்ளும் நர்ஸுங்க்ளும் அத்தையேதானடா ஸெய்றாங்க… உயிரப் பணயம் வெச்சிதாண்டா சேவே பண்றாங்க… வொங்க மொதலையமைச்சர் என்னடா, அவ்ங்க் ஸெய்யாததயா ஸெஞ்சிட்டாரூ, மூதீ! இப்டீ வொரு புடுங்கல்! இப்டீ வொரு வெளம்பரம்
4. அடச்சே குவாரா எந்தத் தொழு நோயாளியையும் கட்டிக்கொண்டதாகச் செய்தியில்லை. புளுகுவதற்கும் ஒரு அளவுவேண்டும்
5. பகிரங்கமாக வெட்கங்கெட்ட ‘வேலை வாய்ப்பு’ தேடும் விண்ணப்பம்
-0-0-0-
இந்தச் சொம்பார், ற்றொம்ப இளம் ஜால்ராவாக இருந்தபோதே ஓரளவு தெரியும் – இம்மாதிரி இளைஞ்ஜர்கள் அக்காலங்களில் தொள்தொள ஓவர்ஸைஸ் ஜிப்பா போட்டுக்கொண்டு வரக்வரக் என சரியான அடர்த்தியில்லாத தாடியைச் சொறிந்தமணியம் கண்ணில் பஞ்சடைத்துக்கொண்டு ஒருமாதிரி இலக்கற்ற சோகத்துடன் செருப்பை(யும்) தேய்த்துக்கொண்டு அலைவார்கள் – இப்படித் தறிகெட்டுக் கூமுட்டை தேவதாஸ்-தனமாக அலைவதினாலேயே அவர்களுக்கெல்லாம் தாங்களொரு கார்கீ சைக்கிள்செய்ன் டால்ட்ஸ்டாய் டால்டாஸ்டால் ஆகிவிட்டோம், பாட்டாளி வர்க்கத்துக்கான புரட்சிப் பூபாளம் பாட எழுச்சி கொண்டுவிட்டோம் எனவொரு பெருமிதம்.
(மேற்கண்ட படம், 80களின் கடைசியில் அல்லது 90களின் ஆரம்பத்தில் எடுத்ததாக இருக்கவேண்டும் – ஏனெனில் அதேஅதே தாடி அதேஅதே சோகம் அதேஅதே ஜால்ரா – ஆகவே, அதேஅதே கவிதை)
…யாரிடமாவது தம் படைப்புப் புடைப்புணர்ச்சியைக் காண்பிக்க லபிக்குமோ என, ஓடும் வாசகன் ஓட, போக்கற்ற உறுவாசகன் வசமாக மாட்டும் வரையில் கொக்காக வாடியிருக்கும் அவர்களைப் பார்த்து…. … ஏதோ பரிதாபப் பட்டு அன்னா அக்மத்தோவா காஹ்லில் கிப்ரான் பாப்லொநெருடா புருடா வுடுடா என எத்தையாவது அவர்களுக்கு ஆதூரமாகச் சொல்லப் போனால்…
…உடனடியாகப் போர்க்கால ரீதியில் தங்கள் ஜோல்னா/தொங்குபையில் கைவிட்டு அவர்களுடைய லேட்டஸ்ட் கவிதைக்கழுதைப் புத்தகத்தை (ரெண்டு ஃபார்ம் + க்ரௌன் ஸைஸ், கொஞ்சம் திமிர் அதிகமாக இருந்தால் டெமி ஆக்டேவோ அளவு + ஒரு முழு நீள அறிமுகம் (கெஞ்சிக் கூத்தாடி யாராவது பெருந்தகையிடமிருந்து வாங்கப்பட்டது- இது கவிதைகளை விட சுவாரசியமாக இருக்கும் புனைவு) + அட்டைப் படம் என்பது அடிவயிற்றுக் கலக்கம் தரும் ஆதிமூலம் / ட்ராட்ஸ்கி மருது / வீர சந்தானம் போன்றவர்களைப் பிடுங்கி எடுத் து வாங்கியது அல்லது உரிமையுடன் சுட்டது + காப்புரிமைப் பக்கம் (கெட்ட கேட்டுக்கு) +… … கவிதைகள்(!)
“முப்பது ரூபாக்குப் போட்றுக்கேன்! ஆனால் லைபரி ஆர்டர் கவிதேங்களுக்கு இல்லியாம்…”
“சரி, இந்தாங்க அம்பது ரூவா! ஒண்ணு வாங்கிக்கறேன்!”
“இன்னும் ரெண்டு வாங்கி, நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்க தோளர்..”
“…!…”
கடவுளே! நான் நிறையவே பட்டிருக்கிறேன்…
அதற்குப் பிறகு, மரியாதை/பரிதாபம் நிமித்தமாவது கவிதைகள் எங்கே என உள்ளே வெளெக்கெண்ணைய கண்ல வூத்திக்கினு (சும்மா வுட்டுக்கினா பத்தாது) தேடவேண்டும்.
இப்படிப் புரட்டிப் பார்க்கும்போது, பலசமயங்களில் பல பிறருடைய கவிதைகளும் கருத்துகளும் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கும். (இந்தக் கவிதை/கருத்துக் கையாடல் என்பது இக்கால படுஃபேமஸ் போகஸ் சங்கர் வரை தொடர்வதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்)
சரி – நாம் நடுக்கத்துடன் கவிதே பட்க்கறோம் இல்லியா… அதேசமயம் அந்தக் கவிதைக்குண்டர்கள் நாம் என்ன படிக்கிறோம் (தேவை மெனெக்கெட்டு) என்பதை ஆவலுடன் உன்னிப்பாகப் பார்த்து உடனடியாக அதிலுள்ள படிமம் குறியீடு உருவகம் சந்தம் மண்ணாங்கட்டி தெர்ப்புள்தீ எனக் கோனார் நோட்ஸ் வேறு கொடுப்பார்கள்… கொடுமே.
மண்டை காய்ந்துவிடும்.
மானுட இருப்பியலின் அவஸ்தை தரும் இந்த அவல நிலை பொறுக்காது, தனியொருவனுக்குக் கவிதையில்லையெனில் உலகத்தைப் போற்றுவோம் எனும் விளிம்பு நிலைக்குத் தள்ளப் படுவோம்…
. பொதுவாகவே இவர்கள் புத்தக் கடைகளில் உட்கார்ந்துகொண்டு கடைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தொந்திரவு கொடுப்பதில் சமர்த்தர்கள்.
ஏதோ இருத்தலியல் நவீனகவிதை என உளறிக்கொட்டிக்கொண்டு கடையில் ஆர்டர் செய்யப்படும் இலவச டீக்களுக்காக உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்… இதற்கு அப்பாற்பட்டு ‘சினிமா சான்ஸ்’ எனும் பூதத்தின் பின்னாலும் அலைவார்கள் – இப்படி அலைந்துகொண்டிருந்தவர்கள்தாம் இந்த நா முத்துக்குமார், பழநிபாரதி போன்ற இத்தியாதிகளெல்லாம். உங்கள் செல்லமான எஸ்ராமகிருஷ்ணன் போன்றவர்களும் இதே மட்டரகம் தான். (ஜெயமோகன் அப்படியல்லர் – ஆனால் ஒசி தொலைபேசியடித்தே, தனக்கு வேலைகொடுத்த பிஎஸ்என்எல்லை நஷ்டத்தில் ஓட்டியதற்கு அப்பாற்பட்டு அந்தக் காலப் பிதாமகர்களை 20000 வார்த்தைக் கத்தைக்காகிதக் கடிதங்களாலும் துன்புறுத்திக் கொண்டிருந்தார் என நினைவு)
ஆனால் நல்லவேளை. சினிமாவுக்குப் போக நினைத்த சித்தாளு இளம் கவிங்கர்களுடைய இலக்கிய தாகம் எல்லாம், அதிக பட்சம் கோடம்பாக்கச் சுடுகாட்டைத் தாண்ட வாய்ப்பே இருந்திருக்கவில்லை. இல்லாவிட்டால் பாரத அளவில் நாம் அசிங்கப்பட்டிருப்போம் – ஏன் உலக அளவிலேயேகூட…
நம் சொம்பாரும் இதே ரகம் தான்.
பின்னர் அப்படியிப்படி பரிக்ஷா ஞாநியுடன் ஊடாடல்… பிலிம் ஃபெஸ்டிவல் சுற்றுலாக்கள், ஒருவழியாக பில்லிம் டைரடக்கர் வேலை, ஜெயகாந்தன்-சாகந்தசாமிகளுடன் ஒட்டிக் கொள்ளல், கருணாநிதிக்குப் பொன்னாடை…
…ஸ்டாலின் காலில் வீழல், கனிமொழிக்கு மனு… ஜமாய்த்தார், ஜமாய்க்கிறார்…
(இப்போது தலை ற்றொம்பவே வாங்கிவிட்டது போலும்… பாவம்)
ட்டேய்! நீ யெளய பாரதீ இல்லடா எளவு எடுக்கற தண்டமே! நீ, என்னய மாறீ ஒரு அல்பை கெளட்டுக்கூ சகதீ தாண்டா…
எப்படா நீங்கல்லாம் நேர்மயா வொழச்சி சம்பாரிக்கப் போறீங்க?
ஜால்ராக்கூவான்களா… வொங்க மொதலையமைச்சர்க்கு மின்னாடியே அத்தினீ பேரு, அல்லாம் பெர்ய அர்சியல்வாதீங்கோ தலைவர்ங்கோ… அத்தினீ பேரும் இப்டியே ஷோக்கா போய்ர்க்கானுவொடா… இந்த ஆளு போட்றது என்னடா பெரிய மசுறு… நம்ப டாக்டர் நர்ஸூங்களெல்லாம் தெனிக்கும் செய்றத வுடவாடா வொங்காள் பெர்ஸா தெகிர்யம் காட்டீ பிலிம் புட்ச்சிர்க்கார்?
-0-0-0-0-
இது தொடர்பாக, அதாவது தொடர்பில்லாமல் கவலை தரும் விஷயம் இன்னொன்று என்னவென்றால்…
தமிழகத்தில் தமிழில் ரெண்டுவார்த்தை எழுதத் தெரிந்தவன் (தெரிந்தவள்களும்தான், வள்ளென்று விழாதீர்கள்!) எல்லாம் உடனடியாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்து கதிகலங்க அடித்துக்கொண்டிருக்கிறார்கள்!
(ஐயய்யோ! நானும் ‘ரெண்டுவார்த்தை’ எழுதிவிட்டேனே! நானும் ஒரு கவிங்கனோ? ஆ!!)
-0-0-0-0-
சரி தண்டபாரதி ஜந்துவின் அடச்சே குவாரா விஷயத்துக்கு வரலாம்…
ஜந்து இப்படி எழுதியிருக்கிறது:
தொழுநோயாளிகளை தொட்டுத் தழுவிய
சேகுவேரா போல்….
மரணத்தின் குகைக்குள்….
எர்னெஸ்டொ அடச்சே குவாரா, தன்னுடைய மருத்துவமாணவ காலங்களில் தென்னரிக்காவில் கொஞ்சம் மோட்டர்ஸைக்கிளில் நண்பனோடு (=க்ரனொடோ) சுற்ற ஆரம்பித்தார் – வெகுசீக்கிரத்தில் அந்தப் பழையவண்டி உதிர்ந்துபோன காரணத்தால் பயணம் அமோட்டர்ஸைக்கிள் வகையில் தொடர்ந்தது.
இப்பயணங்களில் அவர்கள் கிழக்குப் பெரு பிராந்தியத்தில், தொழு நோயாளிகளுக்கான காலனியில் இரண்டுவாரங்கள் தங்கியிருந்திருக்கிறார். அவர்களை ஆதூரத்துடன் பார்த்திருக்கிறார் – அனைவரும் ப்ரோல்களாக இருந்தார்களோ என்னவோ.
அவர் ஓரளவு மருத்துவம் தெரிந்தவர் – ஆகவே தொற்று கிற்று எனப் பயப்படாமல் அங்கு இருந்திருக்கிறார். அவ்வளவுதான்.
அவருடைய சுய சரிதையில், விவரணைகளில் , பேச்சுகளில் (ஒரு இடத்திலும், அவருடைய மோட்டர்ஸைக்கிள்சரிதைகள் உட்பட) அவர் குஷ்டரோகிகளை அரவணைத்தாக இல்லவேயில்லை. ‘தொட்டுத் தழுவிய‘தாக எல்லாம் இல்லவே இல்லை.
மாறாக, இந்த தொழுநோயாளிக் காலனிப் பிரதாபங்களை வைத்து லெப்ராலஜி (தொழு நோயியல்(!)) விஷயங்களை இட்டுகட்டி இஷ்டத்துக்கு அட்ச்சிவுட்டதாகவும்தான் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நன்றி.
அன்பர் தண்டபாரதி, எர்னஸ்டொ குவாரா பற்றியும் ஒரு சுக்கும் அறியாமல் மானேதேனே செய்திருக்கிறார்…
-0-0-0-0-
அதென்ன ‘மரணத்தின் குகை?’ அல்லது அது கூகையா? என்ன எழவோ!
அப்பொழுது ஐஸியு உள்ளே போகிறவர்கள் எல்லாம் உள்ளே செத்துத்தான் போகப் போகிறார்களா?
எட்டுக் கால்களுடன் தான் கடைசிப் பயணம் செல்லப் போகிறார்களா? என்ன உளறல் இது.
நிலைமை படுமோசமாக ஆகிவிட்டது. படு டேஞ்சர்.
ஆகவே.
-0-0-0-0-
முக ஸ்டாலினுக்கு அல்லது/மேலும் கனிமொழி2ஜி அவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்.
இந்த யெளயபாரதி தண்டம், கவிதை கழுதை புர்ச்சிப் புயல் பிலிம் – எல்லாம் செய்துவிட்டு வேறுவழியில்லாமல் இப்படி ஜால்ரா வேடம் போட்டு முக ஸ்டாலின் மரணம் குகை என்றெல்லாம் பினாத்திக்கொண்டு மினுக்குகிறது.
இம்மாதிரி தற்கொலை ஜிஹாத் விவரங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்து பாவலா காட்டுவதற்குக் காரணத்தை நான் சொல்லவேண்டியதில்லை…
எல்லாம் பசித் தொல்லை பதவித் தொல்லை படுத்தும்பாடுதான்.
கூடியவிரைவில் ஏதாவது ‘ஆஸ்தான அரசவை ஜால்ரா‘ அல்லது ‘பளபளக்கும் கீழடிச் சொம்பு‘ அப்படியிப்படி எனப் பதவிகளை உருவாக்கி – தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வைக்கவும், தகுதியான நபர்களை அவர்களுக்கேற்ற பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கவும் வேண்டிக் கொள்கிறேன்…
நன்றி!
வெ. ரா
நிரந்தரத் தலைவர்
(ஏழரை முன்னேற்றக் கழகம்)
-0-0-0-0-0-
பின்குறிப்பு: பாவம் அந்த ஒரிஜினல் பாரதி. திராவிட பாணியில் சொல்வதென்றால், அவன் இன்றிருந்தால்… “கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இம்மயிரை…” எனத்தான் பாடியிருப்பான். :-(
June 2, 2021 at 22:29
/…உடனடியாகப் போர்க்கால ரீதியில் தங்கள் ஜோல்னா/தொங்குபையில் கைவிட்டு../
It was not bad news from home that was depressing Vladimir. What was wrong with him was the fact that this was the eighty-second suburban literary reception he had been compelled to attend since he had landed in the country on his lecturing tour, and he was sick to death of it.
When his agent had first suggested the trip, he had signed on the dotted line without an instant’s hesitation. Worked out in roubles, the fees offered had seemed just about right.
But now, as he peered through the brushwood at the faces round him, and realized that eight out of ten of those present had manuscripts of some sort concealed on their persons, and were only waiting for an opportunity to whip them out and start reading, he wished that he had stayed at his quiet home in Nijni-Novgorod, where the worst thing that could happen to a fellow was a brace of bombs coming in through the window and mixing themselves up with his breakfast egg.
– The Clicking of Cuthbert, PG Wodehouse
June 3, 2021 at 12:08
OMG, thought I would never be forced to allow any reference to that darn parental guidance needing ramshackle abode, leave alone lengthy quotes fromthat friggin’ timepass guy… :-(
Dismayed.
June 3, 2021 at 07:18
//கூடியவிரைவில் ஏதாவது ‘ஆஸ்தான அரசவை ஜால்ரா‘ அல்லது ‘பளபளக்கும் கீழடிச் சொம்பு‘ அப்படியிப்படி எனப் பதவிகளை உருவாக்கி –
இன்னான்ற நீயி, அதுக்கெல்லாம் தகுதி இப்ப வேற. இந்த தண்டக்கரு…ம்
அத்தெல்லாம் தேவயேயில்ல நாயினா, ஒரு டுவீட்டுக்கு இத்தினீனுட்டு ரேட்டு, இந்த மாரி டுவீட்டு வுட்டு வரக் காஸே ர்ரெம்ப தாஸ்தி அவுனுங்களுக்குன்னு கயகம் நெனைக்குது.ஒன் ரெக்கமன்டீஸன்லாம் ஊஹும், ஒத்வவே ஒத்வாது
June 3, 2021 at 12:09
OMG! This is the state of the DICKtion of learned Professors.
Bottomless horror. :-(
June 4, 2021 at 20:43
இப்ப ஒரு வீடல்ல கிடைக்கும். இப்படி அறியா பிள்ளை ஆகி வீட்டீர்களே. நான் என் செய்வேன்
June 4, 2021 at 20:48
ஐயா, ‘இலக்கிய மாமணி’ ஓஸீல வூடு பற்றிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
கொஞ்சம் விரசமாக இருந்தாலும் சொல்லியே ஆகவேண்டும். கொஞ்சம் கொட்டை பெரிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் விரைவீக்க ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் அவை கொடுக்கப் படும் போல; ஆனால், நம்முது நார்மல் ஸைஸ். என்ன செய்ய, சொல்லுங்கள். :-(