“அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.”

May 29, 2021

:-(

ங்கோத்தா. தமிள் இணி வுருப்படவே வுருப்படாது. ங்கொம்மாள… ஸொல்லிப் புட்டேன்!  எள்தியே கொட்க்கறேன்…

மெல்லட் டமிள் இனி ஸாவாது, ஏன்னாக்க அத்து ஆல்ரெட்டி ஸெத்து பூட்ச்சி.

ஏன்னாக்க தெனிக்கும் நம்ப அற்வுஜீவ்ங்கொ நம்பள நாஸ்தியாக்கிக்கினு கீறாங்கடா. நம்ப டமில வெச்சே நம்பளயே வெச்சிசெய்றானுவோடா… ஸ்ஸாவு கெராக்கீங்கொ… 

எல்க்கணமும் தெர்யல கருத்த எள்தவும் வர்லே  எள்தற்தெல்லாம் பீலாவா வுட்றானுவோ இல்லாக்காட்டி ஓள்பஜனே செய்றானுவோ… அறிவுரெ அறவொறே ன்னிட்டு அட்ச்சுவுட்றானுவோ… அல்லாக்காட்டீ ஜால்ரா அட்க்கறானுவோ… இல்லாட்டீ வொலக சினிமா வொளற எலக்கியம் வொலக குஞ்சாமணீ… யென்னால ஸுத்தமா மிடீலடா…எவ்னாவ்து மண்டயப் போட்டா வொடனே அடுத்த நிமிட்டு பத்தாயரம் வார்த்தேல அஞ்சலீ எள்திட்றானுவொடா… கோவிட்டு வந்தூ கும்பலா இவ்னுங்க்ள கொள்ளேல அள்ளிக்கினு போனாதாண்டா நம்க்கு நிம்மதீ!

பொள்து வெட்ஞ்சா போனா இவ்னுங்க ரோதன தாங்க முடிய்லயே! நம்பள இப்டியே ரவுண்டு கட்டிக்கினு ஸாவ்டிக்கறாங்கடா கபோதீ கஸ்மாலங்க…டெய்லி எள்தி எல்தியே வுஸ்ப் ஏத்றாங்ளேடா… யிப்ப யின்னாடா ஸெய்றது… வெற்ப்புவெற்ப்பாக் கீதுடா.

அப்டீன்னிட்டு நென்ச்சி…

…நம்பொ அர்சியல்வாந்தீங்க் கிட்ட போனாக்கா அவ்னுங்க்ளும் தட்டாமாலே அட்ச்சி சுத்திக்கினு அடிக்கிறாங்கடா…. வ்வொங்க மொத்லெமேச்சர் இஸூடாலின் கீறாரே! அவ்ரு  ஸெம்மொளீ டமிள்மொளீல அர்ஸாங்க அறிக்கே புளுக்கேன்னிட்டு அட்ச்சிவுட்றத பாத்து நேத்தெல்லாம் வ்வோத்தா பேதி புட்ங்கிக்கிச்சு… இன்னாத்த ஸெய்றத் ஸொல்லூ… ;-(

அப்பால ஒர்மாறீ ஸளிய ஸிந்திட்டு, வேற ஆவுற வேலயப் பாக்கலாம்னிட்டு…

அந்த அளுவுணி யாட்டமாட்ற கேப்மாறீ அயோக்கிய லவ்டேகோபால்கள அல்லாத்தயும் அப்பால கடாசீட்டு,  நம்ப ரெவெல்ல கீற சின்பஸ்ங்க்ள யெளஞ்ஜர்கள அல்லாரையும் ஊக்குவிக்கலாம்னிட்டு பாத்தாக்க….

வ்வோத்தா அவ்னுங்க்ளும் என்னய கவ்த்துபோட்டு இப்டீ  கற்பள்ச்சிட்டாங்க்ளே! ஐயகோ!

:-(

-0-0-0-

பொதுவாகவே, யாராவது எழுதுவதில் விருப்பப்பட்டு, நம் தமிழக எழவையும் தமிழெழவு அலக்கியத்தையும் தமிழெழவைக் கூறுபோடும் நல்லெழவுலகத்தையும் வுய் வுய் என வுய்விக்க என்ன எழவைச் செய்யலாம் என ஒருமாதிரி போற்றத்தக்க, நல்லெண்ண ஆர்வத்துடன் என்னிடம் (போயும்போயும் என்னிடம்! பிரச்சினை என்னவென்றால், நானும் ஒருமாதிரி தமிழ் போன்ற ஒரு பாடையில் ஒருமாதிரி பயிற்சிக்காக எழுதுபவன் தான், தமிழய்யா எலக்கணமய்யா அலக்கியமய்யா என்றெல்லாம் இல்லை, வெறும் தமிழையோ மட்டுமே!) கேட்டு வந்தால், அவர்களுடைய திறனையும் செயலூக்கத்தையும் பரிசோதிக்க (!)  – நான் பரிந்துரைப்பவை (அவரவர் சக்தியைப் பொறுத்து) கீழ்கண்ட சிலபல விஷயங்களில் ஒன்றை – சில சமயம், தொல்லை தாங்க முடியவில்லை என்றால்… அனைத்தையும் பரிந்துரைப்பேன். (அதாவது, கீழ்கண்ட ஜாபிதா/குறிப்புகள் கட்-பேஸ்ட் செய்யப்படும்)

-0-0-0-

…எதையும் மேம்போக்காக, பொழுதுபோக்காக மட்டுமே படிப்பது எனக்கு ஒத்துவராது, உங்களுக்கும் ஒத்துவரக் கூடாது. உங்கள் அளவைகள் உயர்தரமானவையாக இருக்கவேண்டும். அதற்கு உங்களுக்குப் பயிற்சி வேண்டும். அது சரியாக வாய்க்கவில்லையானால். முட்டிமோதி முயற்சிக்கவேண்டும். எந்தவொரு குறுக்குவழியும் ஒத்துவராது.

நினைவிருக்கட்டும் – நீங்கள் தான் என்னை அணுகினீர்கள். மேலும் நான் உங்களுக்குச் சேவை செய்வதற்கு அவதரிக்கவில்லை. உங்களிடமிருந்து நான் எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், நீங்கள்,  ஒப்புக்கொண்டவற்றைச் செய்து முடிக்கவேண்டும் – அதிக பட்சம் 10 நாட்களுக்குள் உங்கள் ஹோம்வர்க் என்னை வந்தடைய வேண்டும்.

அவ்வளவுதான்.

1. உங்களுக்குப் பிடித்த ஜெயமோகன் பதிவு அல்லது  கடலூர் சீனு / ஆஸ்டின் ஸௌந்தர் / சாரு நிவேதிதா / எஸ்ராமகிருஷ்ணன் / … … கம்மினாட்டிஸ்ட் டோளற் இரா. முருகவேள் (=வக்கீல் + பகுதிநேர பீலாமன்னர்) / யுவகிருஷ்ணா / நிசப்தம் மணிகண்டன் / … அல்லது பத்ரி சேஷாத்ரி தளத்தின் இடதுபக்கச் சட்டகத்தில் இருக்கும் ஏதாவது ஒரு எழுத்தாளரின் (ஒத்திசைவு உட்பட) ஏதாவது ஒரு … கட்டுரை/கதை எந்த எழவையாவது எடுத்துக்கொண்டு கீழ்கண்ட விஷயங்களைத் துப்புரவாகச் செய்து, ஒரு வாரத்துக்குள் அனுப்பவும்.

1.1 அதில் உள்ள எழுத்து/இலக்கணப் பிழைகளைப் பட்டியலிட்டு – அவை எப்படி இருந்திருக்கவேண்டும் எனும் அட்டவணை.

1.2 அதில் உள்ள கருத்துகளின் சாராம்சத்தை சுமார் 100 வார்த்தைகளுக்குச் சுருக்கி, எளிமையாக, உங்கள் நடையில் எழுதவும். (கட்-பேஸ்ட் கூடாது)

1.3 அந்தக் கட்டுரை/கதை எழுத்தாளரின் சொல்வளம் / நடை / பாவனை என்பவற்றை அப்படியே ஜெரித்து சுமார் 250 வார்த்தைகளில் உங்களுக்குப் பிடித்த விஷயத்தை எழுதவும். படிக்கும் எனக்கு, அந்த ஆசாமியின் எழுத்துக்கும் உங்கள் எழுத்துக்கும் வித்தியாசம் எளிதில் புலப்படக் கூடாது.

1.4 அப்பதிவுகளில் உள்ள அபத்தங்களை (அவை இருந்தால்), நிறைகளை (அவை ஒருவேளை ஏதாவது தப்பித்தவறி இருந்தால்) ஜாபிதா போட்டு, அவற்றின்மீதான உங்கள் எதிர்வினைகளை, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவு செய்யவும்.

2. சுமார் 500 வார்த்தைகளடக்கிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சுட்டியைக் கொடுத்திருக்கிறேன், அதில் நான் குறிப்பிட்டுள்ள பாகங்களை மட்டும் கருத்துச் சிதைவு இல்லாமல், எஸ்ராமகிருஷ்ணமில்லாமல் மொழிபெயர்த்து அனுப்பவும். தமிழில் அது 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை/கதை ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்பியிருக்கிறேன். அதன் மூலத்தையும் படித்து, அந்த மொழிபெயர்ப்பை எப்படிச் செம்மையாகச் செய்யலாம் என ஒரு கட்டுரை எழுதி அனுப்பவும். 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்.

4. உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்குப் பாண்டித்தியமுள்ளதாக நீங்கள் கருதும் ஏதோவொரு விஷயத்தைப் பற்றி – அது குறித்து ஒன்றுமே அறியாத ஒரு பாமர, தமிழ் வாசகருக்குத் தெரிவிக்கவேண்டும். அதிக பட்சம் 1000 வார்த்தைகள்.

5. கருத்துத் திருடல்  (அல்லது அப்பட்டமான திருடல்) செய்து மீளுருவாக்கம்(!) செய்யப்பட்ட கதை / கட்டுரைத் துணுக்கு / கவிதை ஒன்றை அதன் எழுத்தாளர்(=திருடர்) பெயருடன் கொடுத்திருக்கிறேன்.

இந்த  ஆக்கத்தின் மூலத்தையும் அதன் ஒரிஜினல் எழுத்தாளரையும் இணையத்திலோ அல்லது வேறெங்கோ கண்டுபிடித்து, அது ஆங்கிலவழியில் இருந்தால் – அதன் சரியான, ஓரளவுக்கேனும் ஒப்புக்கொள்ளக்கூடிய மொழிபெயர்ப்பையும்  சந்தமோ வார்த்தைஅடுக்கோ மாறாமல், சொற்சிக்கனத்துடன், குறியீடுகளையும் படிமங்களையும் சிதைக்காமல் – ஒன்றுக்குப் பத்துமுறை சரிபார்த்து அனுப்பவும்.

(இந்த ஒருமாதிரி களவாடல்களில் அல்லது ‘ஆழ்ந்த பாதிப்பு’களில் –  இந்திரன் எனத் தன்னை விளித்துக்கொள்ளும் ஒருகால ‘கலை விமர்சகர்’  ராஜேந்திரன் ஐயாவும் இக்கால போகஸ் சங்கர்களும்  பாம்பாட்டிச் சித்தர்களும் இருக்கிறார்கள் – நம் தமிழில், கவிதை திருடுபவர்கள் அதிகம்! மிக அதிகம்!)

6. தமிழகம் சார்ந்த சிலபல பிரபலஸ்த டிவிட்டனார்களின் சிலபல ட்வீட்களை/திரிகளை(!) அனுப்பியிருக்கிறேன் – அவற்றின் தரம் பற்றி, உண்மையைப் பற்றி 400-500 வார்த்தைகளில், தரவுகளுடன் அலசி எழுதவும். அல்லது…

எனக்கு ஃபேஸ்புக் அவ்வளவு பரிச்சயமில்லை – அங்கு அவ்வளவு கட்டுரைகளும் படித்ததில்லை. ஆனால் நீங்களே அவற்றைப் படித்து, அவற்றைக் குறித்த உங்கள் கருத்துகளை/எதிர்வினைகளை சுமார் 500 வார்த்தைகளில் அனுப்பினாலும் சரியே.இதற்கு நீங்கள் அந்த ஃபேஸ்புக் மூலத்தின் ஸ்க்ரீன்ஷாட்டையும் அனுப்பவேண்டியது முக்கியம்.

7. இப்படியில்லாமல் – நீங்களே ஒரு ட்வீட்-பின்னலைத் தெரிவு செய்து எனக்கு அது குறித்து மேற்கண்ட ரீதியில் எழுதினாலும் சரியே.

8. உங்களுக்கு சமூகப் பிரக்ஞை அதிகம் என என்னைப்போல பிரமையில் இருந்தால்… கீழ்கண்ட தலைப்புகளில் ஐந்துக்கு, 500 வார்த்தைகள் கொண்ட காத்திரமான கட்டுரைகளை எழுதியனுப்பவும்.

தலைப்புகளுக்கு மாறான கருத்துகள் இருந்தால், தாராளமாக அவற்றையே குவியம்கொண்டு எழுதலாம்.

  • அணுக்கரு சக்திமூலம் தரமான, செலவுகுறைந்த, சுற்றுச்சூழலைக் காக்கும் மின்சாரம் தயாரிப்பதே எதிர்காலத்துக்கு ஒத்துவரும்
  • தமிழகத்தில் ந்யூட்ரினோ ஆய்வு மையம் வரவேண்டியதன் அவசியம்
  • ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை தமிழகத்தில் பணிபுரியவேண்டிய அவசியம்
  • தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால் தமிழ்ப் பிரிவினைவாதம் ஒரு முடிவுக்கு வரும்
  • பாரதம் இன்னமும் இரண்டுமுறையாவது பிரிக்கப்படும். கேரளமலபார்,மேற்கு வங்காளம் இதற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றன
  • நாம் தமிழர் சீமானின் அரசியல் அணுகுமுறை, ஆட்சிப் பிடிப்புக்கு முந்தைய நாட்ஸிகளின் அரசியல் போலிருக்கிறது
  • அடுத்த பத்தாண்டுகளில் காசி விஷ்வநாத் ஆலயமும் மதுராவின் க்ருஷ்ணர் கோவிலும் மீட்டெடுக்கப்படும்
  • தமிழகத்தின் பிலிம் கவர்ச்சிமாயையிலிருந்து நமக்கு விமோசனமே இல்லை
  • அல்லாஹ் எனும் கதையெல்லாம் பீலா. மொஹம்மத் எனும் ஒரு இறைதூதர் இருந்திருக்க உண்மையில் வாய்ப்புகள் குறைவு
  • க்றிஸ்தவமும் இஸ்லாமும் முறையே சகோதரத்துவக் கருணையையும் அமைதிமார்க்கத்தையும் போதிப்பவை
  • பௌத்தம் என்பது ஒரு தத்துவ தரிசனம், ஒருமாதிரி தத்துப்பித்துவம். அவ்வளவுதான்
  • ஆம்பேட்கரின் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் மிகச் சரியானவை. பௌத்தம் குறித்த கருத்துகள், சொதப்பல்கள் – சரியில்லை. ஹிந்துமதம் குறித்தவை, அப்படியும் இப்படியும்
  • ஆம்பேட்கர், இந்திய அரசமைப்புச் சட்டச் சாஸனத்தின் வடிவமைப்பாளர்
  • திராவிடத்தால் வீழ்ந்தோம், வீழ்வோம்
  • மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமம் அல்லர்
  • ‘ஆர்கனிக்’ விவசாயத்தால் அல்லது இயற்கை வேளாண்மையால் உலகமக்கள் அனைவருக்கும் வேண்டிய அளவு சோறு பொங்கமுடியும்
  • பேலியோ டயட் என்பதன் அடிப்படைகள் மஹாமஹோ நகைச்சுவை
  • உலகத் தரத்துக்குத் தற்காலத் தமிழலக்கியம் இருக்கிறது
  • சீக்கியம் என்பது ஒரு தனிமதம்
  • காந்தி நேரு நமக்குக் கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள்

9. கீழ்கண்ட, (தமிழக) வரலாற்றுரீதியான தலைப்புகளில் ஏதோ ஒன்றுக்கு 2500 வார்த்தைகளுக்கு மிகாமல், அடிக்குறிப்புகளோடு, தரவுகளோடு கட்டுரை எழுதவும் – தலைப்புகளுக்கு எதிராகவும் எழுதலாம். (மூன்று வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்)

  • சங்ககாலங்கள் குறித்த கதையாடல்களில் எது உண்மை, அப்படிப் பல இருந்தனவா? ஒன்றாவது இருந்ததா??
  • தமிழ் இலக்கியங்களின் தொன்மை – அதாவது அவை பொதுயுகம் முன் இருந்திருக்குமா?
  • தமிழக வரலாற்றில் களப்பிரர் கால நிர்ணயம் எனும் நகைச்சுவை
  • தமிழக வரலாற்றுக்கால நிர்ணயங்களில், கஜபாஹு ஒத்தியைபு/ஸிங்க்ரொனிஸ்ம் எனும் தகிடுதத்தம்
  • சிலப்பதிகாரம் ஒரு மூலத் தமிழ்க் காப்பியம் அல்ல
  • முற்காலச் சோழர்கள் என உண்மையிலேயே எவ்வளவுபேர் இருந்தார்கள்? அவர்களது மூலம் என்னவாக இருந்திருக்கும்?
  • திராவிடக் கட்டுக்கதைகளுக்கு ஏதாவது ஒரு காத்திரமான சான்றாவது உள்ளதா? 
  • கரிகாலன் எனும் சோழன் கல்லணையைக் கட்டினானா?
  • சிதம்பரம்கோவில் கட்டமைப்பும் அங்கிருக்கும் இறைவர்களின் வடிவமைப்பும் எங்கிருந்து அங்கு வந்தன?
  • சோழர்கால ஐம்பொன் வார்ப்புச் சிற்பங்கள் – இவற்றின் முன்மாதிரிகள் யாவை?
  • சோழர்கள் கங்கை வரை சென்றார்களா? வங்கத்தின் மீது படையெடுத்து வென்றார்களா?

10. ‘நகைச்சுவை’ – ஒரு சாதாரண விஷயத்தைப் பற்றி, நான் வாய்விட்டுச் சிரிக்கும்படி நூறு வார்த்தைகளில் எழுதவேண்டும். (மாதிரிக்கு, அல்லது ஒரு பயிற்சிக்காக – சாருநிவேதிதாவின் வீடியோ பேச்சு ஒன்று – இது முழு நீள உளறல் நகைச்சுவை: வாழ்வை இனிதாக்கும் விஷயங்கள்)

நகைச்சுவையாக எப்படி எழுதுவது என்பதைக் குறித்து ஒரு தரமான கட்டுரையை ஜெயமோகன் எழுதியிருக்கிறார், அதனைப் படித்து – அதன் வழியொழுகினாலும் சரியே. (அதன் சுட்டியைக் கேட்டுக்கொண்டு வராதீர்கள்!)

யோசித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா தற்காலத் தமிழ் எழுத்தாளர்களும் நகைச்சுவைக்காரர்கள்தாமே?

11. அடுத்த பத்து நாட்களுக்கு, அனுதினமும் சுமார் 400 வார்த்தைகளை ஒரு டயரிகுறிப்பு எழவு போல எழுதி, அவற்றைத் தொகுத்து, அதற்கேற்ற பெயரையும் சூட்டி அனுப்பவும்.

12. புத்தகக் குறிப்புகள் – திறனாய்வுக் கட்டுரை கதை கவிதை  (மட்டும் இல்லை)  – தாராளமாக அறிவியல் கட்டுரைகளையும் அவற்றைக் குறித்த உங்கள் கருத்துகளையும் (மூலத்துடன்) எனக்கு அனுப்பலாம்.

தமிழ் சினிமா, (தற்கால) திரை இசை, க்ரிக்கெட்/விளையாட்டு குறித்து என்றெல்லாம் முயலவேண்டாம். ஏனெனில் எனக்கு அவற்றின்மீது பெரிதாக மதிப்பில்லை, ஈடுபாடுமில்லை.

சரி.

நீங்கள் அனுப்புபவைகளைச் சரிபார்ப்பதற்கு எனக்குக் குறைந்தபட்சம் பத்து நாட்கள் (அதிகபட்சம் பதினைந்து நாட்கள்) அவகாசம் வேண்டும். வாட்ஸ்அப் டிவிட்டர் டிஎம் ஒத்துவரா. மின்னஞ்சல் மட்டுமே. என் தொலைபேசி எண்களைச் சுலபத்தில் பகிரமாட்டேன். நன்றி.

நான் சொன்ன சொல் காப்பேன்; நீங்களும் அப்படியே இருக்கவேண்டும். பல்ட்டி அடிப்பது, நேரம் தவறுவது என ஆரம்பித்தால் – இரண்டாம் முறையும் அதனைச் செய்தால், அதற்குப் பிறகு, உங்கள் மின்னஞ்சல்களுக்குப் பதில் அனுப்பப் படமாட்டாது.

-0-0-0-0-

மேற்படிச் சட்டகத்துக்குள் பல சுற்றுகள் – பிழை திருத்தம், பரிந்துரைகள் இன்னபிற நடக்கும்.

இப்படிப் பலமுறை (சென்ற மூன்று நான்கு வருடங்களில் 15 பேர்களுக்கும் அதிகமாக) நடந்திருக்கிறது. ஆனால், பொதுவாகவே இந்த நேரவியர்த்தங்கள் குறித்து என் அனுபவம் என்னவென்றால்…

இவர்களுக்குப் படிப்பறிவு மிகவும் குறைவு. ஆங்கிலம்/ஹிந்தி (எனக்குத் தெரிந்தவை) மொழிகளையே விடுங்கள் – தமிழிலும் ஒருபெரிய சுக்கும் படிக்கவில்லை. கோர்வையாக ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கவோ, எழுதவோ தெரியவில்லை; ஆனால், பேசுவார்களோ என்னவோ – பிரச்சினை என்னவென்றால் – நான் பொதுவாகவே, தொலைபேசியை அவாய்ட் செய்பவன்.

ஆனால், எதை எடுத்தாலும் படுபயங்கர பீதியளிக்கும் கருத்து வைத்திருக்கிறார்கள்.

நம் இளைங்கர்களுக்கு, சுத்தமாகக் கற்றுக் கொள்ள விருப்பமே இல்லை, திருப்பித் திருப்பி ஒரே விஷயத்தையே திருத்திக் கொடுத்தாலும் மறுபடியும் மறுபடியும் அதேஅதே தவற்றினைச் செய்வதில் சமர்த்தர்கள்.

தமிழ்த் தாயைக் கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள், சொற்பிழைகள், அடுக்குவதில் பிரச்சினைகள்… இந்த அழகில் காப்பிவேறு. சொற்சிக்கனமில்லை.

மேம்போக்கான எண்ணங்கள், குவியமேயில்லை, காலம் குறித்த கவலையே இல்லை. கிறுக்கன், எவ்ளொ லேட் ஆனாலும் பொறுத்துப்பான் என்கிற எண்ணமோ?

ஆனால் எழுத்தாளன், சிந்தனைச் சிற்பி எனத் தங்களைக் கருதிக்கொள்ள மேலும் பெருமை பெற படுபீதியளிக்கும் அளவுக்கு, இதில் பெரும்பாலான தண்டக்கருமாந்திரங்களுக்கு ஆர்வமிருக்கிறது

-0-0-0-0-0-

சரி. இப்படியாகத்தானே கட்டுரை ஒன்றின் சுட்டியை, ஏழரை பதவிக்காகப் பெட்டிஷன் போட்டுவிட்டுக் காத்துக்கொண்டிருக்கும் மடச் சொம்புராணி ஒன்றுக்கு அனுப்பி வைத்தேன்.

அதில் தானே “It goes without saying” எனும் ஒரு சொற்றொடர் இருந்தது.

அப்படியாகத்தானே அது “அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது” எனப் பெயர்க்கப்பட்டு என்னைச் சரணடைந்தது.

அடேய்ங்க்ளா! நமக்கு ஒரு எஸ்ராமகிருஷ்ணன் போத மாட்டாரா! எவ்ளோ பேர்டா இப்டீ கெள்ம்பிகிறீங்கோ! பாவீங்க்ளா!!

இளைங்கர்கள் ஒளிக…

இந்த கேடுகெட்ட நிலைமையைக் குறித்து பத்து நாட்கள் முன்பு சில நண்பர்களிடம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தேன்.

இன்று என் மனைவியிடமும் (= துணைவி = இணை…..) அழுதுதீர்த்தேன்…

அவள் கொஞ்சம் கடுகடு மூஞ்சியுடன் கனிவாகச் சொன்னது என்னவென்றால் – “உன் பக்தன் புத்திசாலித்தனமா கூக்ள் ட்ரேன்ஸ்லேட் போட்டு எடுத்ற்க்கான். உனக்குத்தான் வேலைவெட்டியில்ல, விழுந்துவிழுந்து உழைக்கிற, உன்னமாரியா எல்லாரும் இருப்பாங்க, மூடமே!”

எனக்கு அவமானம் தாங்கமுடியவில்லை.. வில்லை…வில்லை… அவளா சொன்னாள்? இருக்காது! அது நடக்கவும் கூடாது…. நம்ப முடியவில்லை வில்லை வில்லை… …

அப்டி யிப்டி என்று மூச்சுத் திணற ஓடிவந்து  எப்படியாவது அவள் சொன்னது சரியில்லை என நிரூபித்தே ஆகவேண்டும் என ‘கூக்ள் ட்ரேன்ஸ்லேட்’ போட்டு எடுத்தால்…

உடனடியாகக் கதனகுதூகலத்துடன் வாட்ஸ்அப் ஃபோன் போட்டுச் சொன்னேன், “கண்ணே! நீ சொன்னது தப்பூ! அவன் எழுதியது “அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.” தேனே! உன்னோட ‘கூக்ள் ட்ரேன்ஸ்லேட்’ சொல்றது என்னன்னாக்க, “இது சொல்லாமல் செல்கிறது.” ஹிஹ்ஹீ… மானே, அந்தப் பையன் கொஞ்சம் வொழச்சிர்க்கான் போல!”

*டொக்*

:-(

ய்யோவ்! நீங்களும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடாதீர்கள்! ப்ளீச்! 

you too without word without horsegram no go leaving… :-(

(நல்லவேளை நான் தமிழ் எழுத்தாளன் அல்லன்.ஆகவே ற்றொம்ப, படுமோசமான டிப்ரெஷன் வரவில்லை,  வெறும் கவலைதான். நன்றி)

:-(

8 Responses to ““அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.””

  1. saranabhi Says:

    திகிலாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் கேட்டு விடுகிறேன் – அமெரிக்க எழுத்தாளர் கார்ல் யக்னேமா-வின் சிறுகதைகளில் ‘Children of Hunger’ என்ற கதையை அவரிடம் அனுமதி பெற்று ‘பசியின் பிள்ளைகள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.

    அருமையான கதை, மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று விருப்பமிருந்தால், நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு சொல்ல முடியுமா?

    சரியென்றால், உங்கள் மின்னஞ்சல் தாருங்கள்.

    நன்றி, சரவணன்.


    • ஐயா சரவணன், திகில் பிகில் ஒன்றுக்கும் அவசியம் இல்லை, தூக்கிச் சாப்பிட்டுவிடவா போகிறேன்? வெறுமனெ ரெண்டு அடி பத்து மொத்து அவ்ளொதான், கவலைவேண்டேல்.

      மற்றபடி.

      மூன்று விஷயங்கள்.

      1. எனக்குத் தெரிந்து கார்ல் யென்யாமா படித்திருக்கும் (+அவரைப் பற்றிப் பேசும் தமிழ் தெரிந்த) ஆசாமி ஒருவரை இன்றுதான் கேள்விப்படுகிறேன்; பொலிக, பொலிக.

      2. அவருடைய ரொபாட்டிக்ஸ் புத்தகம் ஒன்றினை, டர்பா அமைப்பின் ரொபாட் போட்டிகள் குறித்தது என நினைவு – புரட்டியிருக்கிறேன் (தவறான நினைவாக இருக்கலாம்!). பொதுவாகவே இப்படிப் பலப்பல துறைகளில்  ஒரேசமயத்தில் வல்லுநர்களாக இருப்பவர்களை ஆராதிப்பவன் நான். Welcome, and join the club.

      ஆனால் நான் அவருடைய Children of Hunger / பசியின்பிள்ளைகள் ஆங்கில மூலத்தைப் படித்ததில்லை.

      அவருடைய இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் படித்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன் என நினைவு. Kingdom, Order, Species + The Ore miner’s wife.

      3. உங்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி தேவையில்லை (அது இதே தளத்தில் இருக்கிறது என்றாலும்) – ஏனெனில், உங்கள் மொழிபெயர்ப்பின் சுட்டியைப் பிடித்துவிட்டேன். https://padhaakai.com/2018/06/17/children-of-hunger-1/

      ஆனால் அதன் மூலத்தை நீங்கள் அனுப்பிக் கொடுத்தால் ஒழிய (அல்லது சுட்டி கொடுத்தால் ஒழிய), உங்கள் மொழியாக்கத்தைப் படிக்கப் போவதில்லை.

      4. அப்படியே நீங்கள் அனுப்பினாலும் எனக்குக் குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும் — அதனைத் தொடவே கூட. மற்றபடி உங்கள் விருப்பம்.

       நன்றி.


      • இன்னொன்று: நீங்களும் அமெரிக்கவாசி என்றால் – ஒரு பரிந்துரை.

        சொல்வனம் இணையதள கும்பலில் சிலரும் இம்மாதிரி ஏடாகூடமான ஆர்வங்கள் உள்ளவர்கள்.

        அவர்களிடம் உங்களுக்கு முன்னனுபவம் இல்லையென்றால் நகுல்வசன் என்ற பெயரில் அங்கு சந்தேகாஸ்பதமான முறையில் நடமாடுபவரைக் கொஞ்சம் தெரியும்.  ஆகவே.

        அவரைத் தொடர்பு கொண்டு உங்கள் இலக்கியப் பணியை ஆற்றுஆற்று என ஆற்ற வாழ்த்துகள்.
        https://solvanam.com/author/nakul_nagul_vasan_nambi_krishnan/

      • saranabhi Says:

        நான் சிங்கப்பூர்வாசி. சொல்வனத்தில் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதுண்டு. நகுல்வசனை உங்கள் அறிமுகத்தோடு தொடர்பு கொள்கிறேன். நன்றி.

      • saranabhi Says:

        நன்றி!

        உண்மைதான். மிகச்சிலர் தொடும் interface-களை எழுதியவர் என்று எனக்குப்படும்.

        அந்த கதையையும் Zilkoswsky’s Theorem என்ற இன்னொரு பிரமாதமான சிறுகதையையும் (On the Nature of Human Romantic Interaction என்ற அவருடைய புத்தகத்திலிருந்து) அனுமதியுடன் மொழிபெயர்த்திருக்கிறேன். இரண்டாவதும் ‘சிலகோவ்ஸ்க்கியின் தேற்றம்’ என்ற பெயரில் பதாகையில் வெளியாகியிருக்கிறது.

        இரு கதைகளின் ஆங்கில மூலங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. என்னிடமிருக்கும் புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்து அனுப்பவா?

        சரவணன்


      • // ஸ்கேன்

        🙏🏿


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s