ரூபன் ஜே எனும் தமிழ்த்திரைப்படக் கோமாளி தண்டக்கருமாந்திரம், குண்டுதெகிர்யத்துடன் வுடும் பீலா
August 11, 2019
தற்காலத் தமிழ்த் திரைப்படக்காரர்கள் என்றாலே பேடிப் பொய்யர்கள், மனச்சாட்சியே துளிக்கூட இல்லாமல் அண்டப்புளுகுகளை அட்ச்சிவுட்ட வண்ணம் இருப்பவர்கள், அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவர்கள் எனும் மிகமுக்கியமான அடிப்படை உண்மை, நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எவ்வளவு பேடிகளை நாம் பார்த்திருக்கிறோம்!
இந்த தண்டக்கருமாந்திரங்கள் (இதற்கு, எனக்குத் தெரிந்தவரை விதிவிலக்குகளே இல்லை), சினிமாக்கலையும் தெரியாமல், தொழில் நுட்பத்தையும் அறியாமல் டவுன்லோட்/திருட்டு டிவிடி வகை வொலகத் திரைப்படங்களைப் பார்த்து, குப்பைத்தனமாகக் காப்பியடித்து அதிநவீன ட்ரீட்மென்ட் திரைச்சதை வஜனம் என எழுதினால், ஷாட்டுக்குச் ஷாட் காப்பியடித்து டைரடக்கிங் செய்தால், பிதுங்கும் பாற்சுரப்பிகளுடனான இளம் நடிகைகளை அலங்கார அலங்கோலமாக வளையவரவிட்டால், பரவாயில்லை — ஓகே, ஏதோ திராவிடக் கழுதைகளுக்கும் இன்னபிற வக்கிர விசிலடிச்சான்குஞ்சப்பர்களுக்கும் பொழுதன்னிக்கும் தீனிபோட்டாகவேண்டுமே என இவர்கள் ஏகோபித்து உளறுகிறார்கள், பிழைத்துப் போகட்டும் என விட்டுவிடலாம்.
ஆனால், இப்படியா – இல்லாத ஒரு விஷயத்தை இப்படி இட்டுக்கட்டி மினுக்குவது, சொல்லுங்கள்? எதை எடுத்தாலுமா இப்படியொரு மாய்மால திரைக்கதை வஜனம் எழுதுவது? சோகம். இந்த அழகில் அமித்ஷா பற்றி, ஒர்ரே ஏகோபித்த ‘மானுடம் செழிக்கவேண்டுமே’ டைப் கவலையுடன் ஒரு மேலான கர்த்து. பேடி.
மக்கள்மேல் அவ்வளவு கரிசனம் இருந்தால் – ஊரை ஏய்க்கும், எத்திப் பிழைக்கும் திரைப்படத் தொழிலை விட்டுவிட்டு வந்து நேர்மையாகச் சம்பாதித்து வாழலாமே! ஆனால் அப்படிச் செய்யமாட்டார்கள், அயோக்கியர்கள்.
மாறாக பொய்பேசி வதந்தி பரப்பியே காலட்சேபம் செய்துகொண்டிருப்பார்கள்.
-0-0-0-0-0-0-
சில நாட்களுக்கு முன் இன்னொரு திரைப்படத் தண்டகருமாந்திரம் குறித்து (=’அருள் எழிலன்’) ஒரு அன்பரிடம் இருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட் வந்தது. அதனைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என என் ஆப்த நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் வேண்டாமென்றார்.
இப்போது, அதே அன்பரிடம் இருந்து இன்னொரு தண்டக்கருமாந்திரம் குறித்து வந்திருக்கிறது! (தமிழ்த்திரைப்படச் சாக்கடையில் இருக்கும் பலப்பலர் ஏனிப்படி அரைகுறை அரைவேக்காட்டான்களாக இருக்கிறார்கள்?)
ஆனால், இந்தமுறை ‘இதைப் பற்றியெல்லாம் பிறர் பார்த்துக்கொள்வர். நீ வாய மூடிக்கினு சும்மா கெட’ என அன்புடன், ‘அருள் எழிலன்’ தண்டம் குறித்து அறிவுரை கொடுத்த நபரிடம், மிகச் சமயோசிதமாகவே, நான் கருத்து கேட்கவில்லை.
ஆகவே!
-0-0-0-0-
இந்த இரண்டாம் தண்டகருமாந்திரம் (ஃபேஸ்புக் எழவில்) இப்படி எழுதியிருக்கிறது.
ஏதாவது முன்னேபின்னே லடாக் என்றால் என்ன கார்கில் என்றால் என்ன கஷ்மீர் எங்கே இருக்கிறது என ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், தொடர்பற்ற (உத்தராகண்ட்) படங்களைப் போட்டு…
…ஏதோ ஒரு வேலூர் ராணுவவீரர் சொன்னார் என ஒரு கார்கில் பக்க கதையைக் கட்டி, ஆயிரம் பிழைகளுடனும் அபுரிதல்களுடனும், மானேதேனே++.
-0-0-0-0-
சரி. இனி இந்த ரூபனின் கூறுகெட்ட ரூபத்தையும் தொடர் உளறல்களையும் பார்க்கலாம்.
இந்த ப்ராக்ப எனும் சமூகத்தினர் பற்றிய எத்தனொக்ரஃபி ஆராய்ச்சியை, அங்கே சிலவருடங்கள் போல விட்டுவிட்டுத் தங்கிச் செய்துவரும் ஒரு மாணவி+அவருடைய வழிகாட்டிப் பேராசிரியரையும் நான் நன்கறிவேன்.
இந்தக் கோரரூபன் சொல்வது 100%, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
1. டார்ட் என்பது பலகுலக்குழுக்களின் திரள். டார்கள் அனைவரும் ப்ராக்பக்கள் அல்லர். கடந்த பலப்பல வருடங்களாக இவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கீழே 2011 ஸென்ஸஸ் படியான நிலவரம்.
2. கீழேயுள்ள 2001 ஸென்ஸஸ் வரைபடத்தைப் பார்க்கவும்.
3. 2018 வருட கள நிலவரப்படி, இவர்களில் மிகப் பெரும்பான்மையோர் ~ 94% ஷியா முஸ்லீம்கள், மதம் மாற்றப்பட்டவர்கள். ஹிந்துக்கள் அல்லர். தற்போது பின்னவர்கள் எண்ணிக்கை சுமார் 800-1000 இருந்தால் மிகமிக அதிகம்.
4. அங்கே polyandry / பால்யாண்ட்ரி / பலதனையமணம் / ஒருபெண்:பல ஆண்கள் மணம் (பாலிகமி / polygamy என்றழைக்கப்படும் பலதாரமணம் 1ஆண்:பலபெண்கள் எனவிரியும் பதத்திற்கு எதிர்ப்பதம்) என்றெல்லாம் அங்கு துளிக்கூட இல்லை. கடந்த 100 ஆண்டுகளாகவே சர்வ நிச்சயமாக அப்படி இல்லை. அதற்கு முன்பும் அப்படி இருந்ததாக வெறும் சுவாரசியமான கதையாடல்களே இருந்திருக்கின்றன. ஒரு ருசுவும் இல்லை. (இதற்கு மாறாக, ஒரு, ஒரேயொரு காத்திரமான ருசுவை, இந்த ரூபன் ஜந்து காண்பிக்க முடியுமானால், நான் ஒத்திசைவு பதிவுகள் எழுதுவதையே நிறுத்தத் தயார்! இன்னொரு விஷயம்: நான் இவ்விஷயங்களை ஒழுக்கவியல்(!)ரீதியாக அணுகவில்லை. வெறும் ஊர்ஜிதம் செய்யப்படக்கூடிய தரவுகள் வழியாக மட்டுமே பார்க்கிறேன். கவனிக்கவும்.)
5. அங்கே சில திரள்களில் (இவையும் எண்ணிக்கையில் 1000 பேருக்கு மேலில்லை) உள்ள சிலருக்கு வெளிர் நீலக்கண்கள் இருக்கின்றன; மற்றபடி அங்குள்ள பிறர்போலத்தான் உடலமைப்பு/வாகு எல்லாம். ஆனால், இவர்களின் மூதாதையர்கள் – அலெக்ஸாண்டர் கிலெக்ஸாண்டர் படையினர் சொறியினர் சிரங்கினர் என்றெல்லாம் அட்ச்சிவுடப்படுபவை. கதையாடல்கள். இவற்றுக்கு, ஒரு மசுறுக்கும் சான்று இல்லை.
6. ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இவர்களில் சிலபலர் ‘ஆரியர்கள்’ எனவும் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். இவர்களின் மிகப்பெரும்பான்மையினர் ஷியா முஸ்லீம்களாக இருந்தாலும், தங்கள் கடைசிப்பெயரை ‘ஆர்யன்’ என வைத்துக்கொள்கிறார்கள். இப்பகுதியை ‘ஆர்யன் பள்ளத்தாக்கு’ என அழைக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கும் டிக்மார்க் டூரிஸ்ட்களுக்கும் இந்த அபூர்வ விஷயங்கள் வெல்லமாதலால் நன்றாகப் பரப்புரை செய்யப்படும் விஷயம் இது.
7. இது ஒருபுறமிருக்க – அந்தப் படங்கள் (ஒருபெண்ணும் ஐந்துஆண்களும் கொண்டவை) தொடர்பாகச் சில விஷயங்கள்.
அ. படங்கள் கீழ்கண்ட தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை: http://www.merinews.com/article/rajo-verma-a-24-year-old-uttarakhand-woman-who-is-married-to-five-brothers/15917713.shtml
ஆ. அயோக்கிய ரூபர், தன் ஃபேஸ்புக் கட்டுரைப் படங்கள் எடுத்ததாகக் கோடிகாட்டுமிடம் கார்கில்; ஆனால் மேற்கண்ட தளத்தில், அவை உத்தராகண்டில் எடுக்கப்பட்டவை எனக் குறிப்பிடப்படுகின்றன.
இ. படங்களை ‘எடுத்தது’ – ஷாரிக் அல்லாகபந்த் எனும் புகைப்படக் காரர். வெறித்தன இஸ்லாமியர். ஒவ்வொரு படத்திலும் இது இருக்கிறது.
ஈ. ஆனால் படங்களிலிருந்து ஷாரிக் பெயரை வெட்டி விட்டு மேற்கண்ட படங்களைப் பொய்யாகப் பதித்திருக்கிறார், இந்த அயோக்கிய ரூபன்.
உ. இந்தக் கட்டுரை குறித்து ஆராய்ச்சியாளி மாணவி, அந்த இணைய தளத்திற்கு மேலதிகச் செய்திகளைக் கேட்டதற்கு ஒரு பதிலும் இல்லை. அவர் சொல்வது என்னவென்றால்: புகைப்படங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டுரை ஒரு கதை. ஆனால் மனிதர்களுக்கு இதுதானே சுவாரசியம் தரும்?
ஊ. இப்படியொரு ‘செய்தி’யை வைத்துக்கொண்டு மசாலா கலந்து மானேதேனே செய்து முடித்துவிட்டார் அயோக்கிய ரூபன்!’
8. அயோக்கிய ரூபன் சொல்வதற்கு மாறாக, அவர்களில் பலர் ராணுவம் என்றெல்லாம் போகவில்லை; ஆட்டிடையர்களாகத்தான் இருக்கிறார்கள்.
9. பரதனின் ‘வெங்கலம்’ திரைப்படத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த ரூபன் தண்டம், நாயர்களைக் குறித்துத்தான் ‘இப்படி ஒரு பழக்கம் இருந்ததாக’ பேசுகிறது என நினைக்கிறேன். அவர்கள் மருமக்கதாயம் எனவொரு முறையில், மணமகன் மணந்தபெண்ணின் வீட்டிற்குக் குடிபோவர் என்ற ஒரு நியதி இருந்தது. ஆனால் சகோதரர்கள் ஒருசேர ஒரு பெண்ணை மணப்பது என இந்த தண்டம் சொல்வது/கோடிகாட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! (எனக்கு, பல நாயர் நண்பர்கள் இருக்கிறார்கள்; நான் சிறுவயதில் பாதி நேரம் செலவழித்தது ஒரு அற்புதமான நாயர் குடும்பத்தினருடன்! எனக்குத் தெரிந்து 1930களிலிருந்தே இந்த மருமக்கதாயம் முறை பெரும்பாலும் தகர்ந்துவிட்டது. இப்போது தரவாடுகளும் தகர்ந்து விட்டன. ‘கிழக்கே நடுவத்து’ பிரபாகரன் சிவதாசன், வெறும் பிரபாகரனாகி, பிரபாகரனின் குழந்தைகள் ‘ஷ்யாம் ப்ரபாகர்’ ஆகிவிட்டனர்!)
10. இந்தக் கோரப் பீலா ரூபன்களுக்கு – ஒரு மயிரும் தெரியவில்லை. தெரிந்துகொள்ள முனைப்புமில்லை. ஆனால் உட்கார்ந்த இடத்திலிருந்து இணையத்தில் மேய்ந்து, வெட்கமோ மானமோ துளிக்கூட இல்லாமல், அட்ச்சிவுடல். அதற்கும் ஆயிரம் லைக்குகள் வந்திருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. பேடிப் பட்டாளங்கள். முட்டாக் கூவான்கள்.
11. இம்மாதிரி அற்ப அரைகுறைகள் களையெடுத்து ஒழிக்கப்பட்டால்தான் தமிழ் திரைப்படம் முன்னேற்றம் என்ற திக்கில் அடியெடுத்து வைக்காவிட்டாலும், கொஞ்சம் அந்தத் திசையில் திரும்பும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
உங்களுக்கு?
-0-0-0-0-
சில நண்பர்கள் ஃபேஸ்புக்குக்கு, குறைந்தபட்சம் ஒரு பேக்-அப் தந்திரோபாயத்துக்காவது, வா – என்கிறார்கள்!
ஆனால் எனக்கு நடுக்கமாக இருக்கிறது. கோர ரூபன் போல ஆயிரம் கூமுட்டைகள் அங்கு குஞ்சுபொரிக்கும் சூழ்நிலையில் எனக்கு வினாடிக்கு ஒரு மாரடைப்பு வந்து கொண்டிருக்கும்!
தேவையா?
பின்குறிப்பு: இந்த கோர ரூபன் தண்டம், கூடிய விரைவில் திரைக்கதை புருடாக்களுக்காக ஆஸ்கர் பரிசு வாங்க வாழ்த்துகள். நன்றி!
—
August 12, 2019 at 00:48
Remember..he is product of American College School Madurai.. Think twice before..
August 12, 2019 at 05:26
thrice?