ஐயய்யோ! இன்னாதூ? ஒத்சைவு வொரு அற்வியக்மா?? வ்வோத்தா, ட்டாய்ய்ய்ய்…

August 10, 2019

இரண்டு நாட்களுக்கு முன், ஒரு (இளம்??) நல்லமனது அன்பர் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே பார்க்கலாம்!

-0-0-0-0-

பாவம், அவருக்கு ஒருமாதிரி ஆர்வக் கோளாறு என நினைக்கிறேன். அல்லது படுபீதியளிக்கும் பயங்கர டெங்கி சிகன்குன்யா மஞ்சக்காமாலை மலேரியா ஜுர ஜன்னியாகவும் இருக்கலாம்; இல்லை, ஆகச் சிறந்த தமிழ் அலக்கிய எழவாளர்களை மிகவும் வுருப்போட்டு வுள்வாங்கியதாலும்  இருக்கலாம், பாவம்! ஆனால் எனக்கு படாபேஜாராகி விட்டது. :-(

டேய் சின் பஸ்ங்க்ளா! காலங்கார்த்தாலே கண்முள்ச்சி அங்க போய் வுள்ந்து வெண்முற்சு கண்சிற்சு படிக்காதீங்கடா! மண்டே கொள்ம்பிப்பூடுண்டா!!‘ என்று அன்புடன் அறிவுரை சொன்னால் கேட்கிறார்களா இந்த இளங்காளைகள், சொல்லுங்கள்?

-0-0–0-0-

மரியாதைகுரிய ராம் அண்ணனுக்கு,

வணக்கம். என் பெயர் ————. ——– நிறுவனத்தில் வேலை செய்கிறேன். badriseshadri.in தளம் வழியாக உங்கள் தளத்துதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆயிரத்துக்கு மேல பதிவுகள் எழுதுயிருப்பதாகச் சொன்னீர்கள், மூன்று மாதங்களில் ஐன்னூறுக்குமேல் படித்துருக்கிறேன்.

ஒரு சஜெஷன் – உங்கள் கருத்துகள் பிடித்துருக்கின்றன. நிறைய கற்றுக்கொள்கிறேன். ஒட்டுமொத்தம் ஏழரைகள்தான் படிக்குறார்கள் என நீங்கள் எழுதுவது ஜோக்குக்கா? உண்மையா? நீங்கள் ஒருவரா பலர்களா??

இந்தத் தளத்தை ஒரு சிறுக்குழுவினர் மட்டும்மே அறிவார்ந்தரீதியில் பயன்படுத்துவதுக்கு மாற்றாகநீங்கள்  பரந்துபட்ட அறிவுயக்கமாக மாற்றவேண்டும். உரையாடல்களை நிகழ்த்துதவேண்டும், இதற்கு உங்களுக்குகு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யதயார். வேர்ட்பிரெஸிலேய தளம் வாடகைக்கு எடுத்து மேம்படுத்தலாம் அல்லது .டிகே டொமன் அல்லது .மீ me/tk; உரையாடல் கள்/திரிகள் கூக்ள் க்ரூப்புகள் போல, பதிவுசெய்தவர்கள் எழுதலாம்.  ஆனால் யார்வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு மெய்ல்மேன் பைபர்மேன் வைக்கலாம். அனைத்த்தும் பப்ளிக். நமக்குப் பிடித்தவைகளை விவாதம் செய்யலாம். நான் தள அட்மின்னாகவும் இருக்குகிறேன். என்ன செலவானாலும் சரி. உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.

அனுமதிப்பீர்களா? அப்புறம் தினம் ஒரு சிறுபதிவாவ்து பதிக்கலாமே? வசைகளை தவிர்க்க்கலாமே சாரி

என்றும் உங்கள் வாசகன்,

———– ———

ஒரு கமர்ஷியல் ப்ரேக்

–000–

அறிவியக்கத் தம்பீ!

உங்கள் மூன்று கடைசிக் கேள்விகளுக்கு பதில்களாவன முறையே: மாட்டேன். முடியாத். முட்யாத்.

உங்களுடைய நவீனதமிழைப் படித்தால் நான் உங்களுக்கு சர்வ நிச்சயமாக ஒரு தாத்தாவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாமல் போனாலும் நான் அண்ணன் கிடையாது; என்னை வெறுமனே ராம் அல்லது ராமசாமி அல்லது ராம்ஜீ என அழைத்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை, சரியா? Just don’t call me names, okay?

உங்களுடைய மேஸோக்கிஸ (‘சுய துன்புறுத்தல்’) மனப்பாட்டை நினைத்தால், எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. ற்றொம்ப அறிவுரை கேட்கிறீர்கள் என்பதனால் ஏதோ ‘முதலில் படித்துவிட்டு வாருங்கள்’ எனச் சொன்னேன் என்பதற்காக, பாவம், இவ்வளவு சிரத்தையாக ஒத்திசையப் படித்திருக்கிறீர்களே! நீங்கள் எந்த கிரகத்துவாசி? ஹ்ம்ம்??

சரி. உங்கள் ஆர்வம் புரிகிறது. நீங்களே கடக்கால்போட்டு ஒத்திசைவு பேஸ்மெண்ட் தளம் அமைத்து, குட்டிச்சுவர் கட்டி, மேல்மாடி ஃபீமேல் மாடியென எழுப்பி,  இணையக்கொத்தனாராக ஆக விரும்புகிறீர்கள். ஆனால்… சில விஷயங்களில் உங்களுக்குத் தெளிவு தேவை.

ஒத்திசைவு மூளையை உபயோகிப்பவர்களுக்கானது. புளகாங்கிதத்துக்காகவோ சொறிந்துகொடுப்பதற்காகவோ நடத்தப்படுவதில்லை.  ஆகவே படிப்பவர்கள் அதிகமில்லை.

மேலும் என்மூளை ஓடுகிற விதமும், அதனால் நான் எழுதும் விசித்திரமும் (என்னாலேயே கூட!) எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. என் பதிவுகளையே நான் இரண்டுமூன்று திருப்பித் திருப்பி பக்கவாட்டில் கீழிருந்து மேலாக என்றெல்லாம் படித்தால்தான் என்ன கஞ்சா அடித்து என்ன மசுரை எழுதியிருக்கிறேன் என ஒருமாதிரி கலங்கலாகப் பிடிபடும்; அதாவது, என் எழுத்துஸ்டைலால்(?) நான் இழந்த நட்புகள் அதிகம்.

இந்த அழகில், என்னுடைய ஆச்சரியமெல்லாம், எப்படித்தான் உங்களைப் போன்ற ஆர்வக்கோளாறு இளைஞ்ஜர்கள்வேறு இங்கு வந்து டமாலென்று விழுகிறார்களோ எனத்தான்! சிலசமயம் சங்ககாலப் புலவர்களும் லாவணி பாடிக்கொண்டே தூயதமிழ்க் கலம்பக களேபரம்வேறு!! இந்தக் கிழட்டுவயதில் எனக்கு இதெல்லாம் தேவையா?

இவற்றில் வெளிவருபவை / வெளிவரக்கூடியவை விதம்விதமாக பதிவுகள்/குறிப்புகள் – அதுவும், இப்போதைக்கு ஒரே ஆள் பகீரதப் பிரயத்தனம் செய்து சுளுக்கெழுத்தில் எழுதுபவைதான். கவலை வேண்டேல். ஆக ‘புத்தம்புதிய தளம் வித் எக்ஸ்ட்ரா ஃபீச்சர்ஸ்’ என்ற மேலதிக வேலையெல்லாம் எனக்கு ஒத்துவராது. அதேசமயம், என்னால் ஏனோதானோவெனச் செயல்பட முடியாது. எனக்கு, நான் செய்பவற்றில் ஓரளவுக்காவது செய்நேர்த்தி வேண்டும். எனக்கு ஒரு தனி ‘மேம்படுத்தப்பட்ட’ தளம் அமைத்துக்கொள்ளவேண்டுமென்றால் மெய்ல்மன் பைபர்மன் உட்பட நானே ஸெட்டப் செய்து வண்டியோட்ட முடியும் நன்றி.

மேலும், இதனைப் படிப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றி அளவுக்குமீறி பீலா விடமுடியாது. ஆகவே அப்படியிப்படி என நீட்டி ஏழரையோடு நிறுத்திக்கொள்வதே அடக்கம். எப்படியும், நான் இணையதள டிஆர்பி ரேடிங், ‘ஆயிரம்பேர் அலைமோதுகிறார்கள்,’  ‘என்னுடையது உன்னுடையதைவிட நீளம் ற்றொம்ப தாஸ்தீயேவ்ஸ்கி’ வகை பெயருதிர்ப்புப் பின்நவீனத்துவக் கட்டுடைப்புப் போட்டிகளில் இல்லை. ஏனெனில் நான் தொழில்முறையிலோ சுயமுன்னேற்றத்துக்காகவோ இந்தத் தளத்தை நடத்தவில்லை.

ஒத்திசைவு தளம், அறிவியக்கம் கிறிவியக்கம் என்றெல்லாம் ஒரு மசுறுக்கும் இல்லை. ஏதோ, எனக்குப் பட்டதை நான் எழுதுகிறேன். பதிலுக்கு சில ஏழரைகள், அவர்கள் படும்பாடாக எத்தையோ எழுதுகிறார்கள். எனக்கும் சரி, அவர்களுக்கும் சரி, சிலபல கரிசனங்கள் (=coalpeople) இருக்கலாம்; ஆனால், பிரமைகள் இல்லை. ஆனாலும், நாங்கள் அறிவை உபயோகிப்பவர்கள் என்ற பொருளில் இந்த ‘அறிவியக்கம்’ எனும் பதத்தைப் பயன்படுத்தினால், உங்கள் கருத்தாக்கத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். ;-)

மேலும் அறிவியக்கத்துக்கு, தமிழைப் பொறுருத்தவரை ஏகபோக குத்தகைதாரர்கள் ஜெயமோகன், எஸ்ரா, சாரு & கம்பெனியார். ஆகவே ‘அறிவியக்கத்துக்காக ஒத்திசைவு’ என்பது ஒரு ராங் நம்பர் அல்லது HTTP 404. மன்னிக்கவும்.

நான் எழுத்தாளனல்லன். எமக்குத் தொழில் எழுத்தல்ல. நான், அதிகபட்சம், ஒரு பகிரங்க நாட்குறிப்பாளன், குறிப்புகளை எழுதுபவன். என்னைப் பார்த்துச் சிரித்துக்கொள்ளப் பழக்கிக்கொண்டவன். ஆகவே – மிகை மரியாதையோ மதிப்போ, பிற, என்னைக் குறித்த பிரமைகளோ வேண்டாம். பிற்காலங்களில் தங்களுக்கு ஏற்படக்கூடும் ஏமாற்றத்தைத் தவிர்க்க இந்த மனப்பான்மை உதவக்கூடும்.

ஒத்திசைவில் வரும் எந்த எழவுக்கும் காப்பிரைட் கீப்பிரைட் எதுவும் கிடையாது. நீங்கள் அப்படியே காப்பிசெய்து பிறருக்குப் பரிமாறினாலும் ஒரு பிரச்சினையுமில்லை. அப்படி நடந்தாலும் ஒருவார்த்தை கூட எனக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இங்கு எழுதப்பட்டவைகளை மாற்றியெழுதினால் அவைகளும் இங்குதான் எழுதப்பட்டன எனத் தவறாகக் குறிப்பிடவேண்டாம், அவ்ளொதான்.

ஆகவே நீங்களே உங்களுக்கான அறிவியக்கத்தை ஆரம்பித்து, வேண்டுமென்ற போதெல்லாம் ஒத்திசைவு விவகாரங்களை அதற்குள் சொருகிக் கொள்ளுங்கள். உங்களுடைய தற்கொலை எண்ணங்களால், எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

எனக்கு ஒத்திசைவு ஒரு கொடுமையாக மாறும்போது அல்லது என்னுடைய எஜமானனாக மாறிவிட்டது எனப் பட்டால், நிறுத்தி விடுவேன். May be I have created a Frankenstein’s monster, but I am pretty clear that the Monster cannot control me. எப்படியும், எனக்கு இதற்கு அப்பாற்பட்டு பலப்பல செயல்பாடுகள் இருக்கின்றன.

ஆக, இந்த ஒத்திசைவுக்காக, நான் என் கருத்துகளை, என் இயல்புகளை மாற்றிக்கொள்ள முடியாது. நிறைய பேர் படிக்கவேண்டுமே, ஏதாவது வசீகரமாக நெகிழ்வாலஜித்தனமாக எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமே, நான் என்ன மசுரைச் சொன்னாலும் அது பொருட்படுத்தப்படவேண்டுமே, நான் நடுநாயகனாக (அல்லது மய்யமாக) இருக்கவேண்டுமே, மேன்மேலும் பிரபலமாக ஆகவேண்டுமே, அதேசமயம் யாரும் கோபித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமே, ஐயோ யாராவது புண்பட்டு விடுவார்களோ, நான் அறிவாளி என்கிற பிம்பம் சிதைந்துவிடுமோ, ஐயய்யோ என் க்ரீடத்தை எவனாவது திருடிவிடுவானோ, என் மண்டையைச் சுற்றிவரும் ஒளிவட்டத்துக்கு பேட்டரி ரிசார்ஜ் செய்யவேண்டுமோ, அடுத்து என்ன அட்ச்சிவுடலாம், எழுத்தை வைத்து என்னை எப்படி முன்னேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் அலைக்கழித்துக்கொள்ளப்பட நான் தயாரில்லை. என் மனச்சாட்சியும் ‘இன்டர்நேஷனல் ரோமிங்’ அளவில் இல்லை. எல்லாம் குறுகிய வட்டம்தாம்; அதற்கு மேல் எனக்கு ஒத்துவராது.

ஆக, ஒத்திசைவைக் குறித்த ஸெண்டிமெண்டல் அட்டாச்மென்ட் என்னிடமும் இல்லை. உங்களிடமும் இருக்கவேண்டாம்.

அதேசமயம் – இந்த ஒத்திசைவு எழவால் பலப்பல புது அறிமுகங்களையும் சிலபல நல்ல நண்பர்களையும் ஸஹ்ருதயர்களையும் பெற்றுக்கொண்டேன் (இத்தனைக்கும் அவர்கள் பலரின் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை!) என்பதைச் சொல்லாவிட்டால் கொள்ளையில், பேதியில் தான் போவேன் என்பதும் உண்மை.

என்றும் உங்கள் வாசகன்‘ – இது அவசியமேயில்லை; இதில் என்ன வருகிறதோ அவற்றில் உங்களுக்கு ஒத்துவருபவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், இல்லாதவற்றைக் கடாசுங்கள். தாராளமாகக் கிண்டல் செய்யுங்கள். என் தவறுகளைத் திருத்துங்கள். சரியா? விட்டுவிட்டு துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடினாலும் வோக்கேதான்.
இந்தத் திராவிடத்தனமான ‘நிரந்தர’ வாசகன் எழவெல்லாம் வேண்டாம். நானே, எனக்கு ஒத்துவரவில்லையென்றால் ஒத்திசைவைப் படிக்கமாட்டேன்! (குழம்புகிறதா? ‘கலகப் பிரதி தன்னைத்தானே எழுதிக்கொள்ளும்‘ அல்லவா? ஸ்ஸாவுங்கடே!)

உதவுவது‘ பற்றி: எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு உதவியும் தேவையில்லை. கேட்பதற்கும், உங்கள் கரிசனத்துக்கும் நன்றி. ஆனால் நீங்கள் ஏதாவது நல்ல காரியத்துக்கு உதவவேண்டும் எனப் பட்டால், தாராளமாக ஸேவாலயா அமைப்புக்குச் செய்யலாமே!

https://sevalaya.org/support/ 

https://sevalaya.org/support/abroad-donation/

அது நம் தமிழகத்துக் குழந்தைகளுக்குத் தரமான கல்விபுகட்டுவதில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஸ்தாபனம். அதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவர், நம் சகஏழரைகளில் ஒருவர்.

நன்றி.  அன்புடன்,

__ரா.

பின்குறிப்பு: உங்களுடைய ஒரு சிறு மின்னஞ்சலில், அவ்வளவு பிழைகள்;  முதலில் சலிப்பாக இருந்தது; இப்போது வருத்தம் மட்டுமே!

தாங்கள், அறிவியக்கத்துக்காக அல்லாடுவது இருக்கட்டும், கொஞ்சம் உங்களுடைய தமிழைப் பட்டிபார்த்து டிங்கரிங் செய்யக்கூடாதா? நம் தமிழை, நாமே இப்படிக் கொளை செய்தாள் தகுமா, சொள்ளுங்கல்? :-( நாம் என்ன அற்பத் திராபைத் திராவிடர்களா, மாறாக – செயலூக்கமும் செய்நேர்த்தியும் கொண்ட பாரதத் தமிழர்கள்தாமே?

இன்னொன்று: உங்களுக்கு ஓகே-என்றால், உங்கள் பெயரையும் பணிபுரியும் இடத்தையும் எடுத்துவிட்டு உங்கள் கடிதத்தையும் இந்தப் பதிலையும் (என் கடிதத்தைக் கொஞ்சம் திருத்தி, என் நண்பர்களுடன் நான் உங்கள் கடிதத்தைக் குறித்து, ‘அறிவியக்க’ ரீதியில் ‘வளவளா’வியதைச் சேர்த்து) பதிப்பிக்கிறேன். வேண்டாம் என்றாலும் சரியே!

பொதுவாகவே, வாழ்த்துகள். நன்றி.

13 Responses to “ஐயய்யோ! இன்னாதூ? ஒத்சைவு வொரு அற்வியக்மா?? வ்வோத்தா, ட்டாய்ய்ய்ய்…

  1. Sridhar Tiruchendurai Says:

    “மரியாதைக்குரிய ராம் அண்ணனுக்கு” என்று ஆரம்பிக்கிறார் இந்த இளைஞர். அவர் ஒத்திசைவை சரியாகப் படிக்க வில்லையோ என்று தோன்றுகிறது. ஒழுங்காக படித்திருந்தால் “இனிய ராமம்” அல்லது “கசப்பு ராமம்” என்று ஆரம்பித்து இருப்பார்.

    இந்த மாதிரி தினம் நூறு கடிதம் வரும் ஜெமோ என்ன பாடு பட்டிருப்பார் என்று யூகிக்க முடிகிறது.


    • ;-) யோவ்! உங்களைப் போல ஒரு அனுகூல சத்ரு இருந்தால் ஜெகத்தினை அழித்துவிடலாம்!

      இளைஞ்ஜரின் பிரச்சினை என்னவென்றால் – அவர் படித்துள்ள முதல் 500ல் அது இனிய500; அதில் ‘இனிய பயம்’ பொழிப்புரை இல்லை; இன்னா500க்கு வரும்போது தேர்ந்துவிடுவார், பாவம்!

      ஜெயமோகன் பாடு, பாவம்தான். ஆனால் எஸ்ரா சொல்லக்கூடுவதுபோல அவருக்கு ThisAlsoWant, EvenMoreAlsoWant.

  2. Kannan Says:

    I am thinking of starting vasakar vattam for you in Latvia or Estonia or both, your blessings are needed urgently.

  3. K.Muthuramakrishnan Says:

    அன்புள்ள ஸ்ரீ ராம்! சேவாலயா ஐந்தாண்டுத்திட்டம் தீட்டும் கூடுகைக்குச் சென்று வந்தததுமுதல் வெளிச்சாப்பாடு( சேவாலயாவில் அல்ல.வேறு ஓர் விடுதிச்சாப்பாடு) ஒவ்வாமை ஏற்பட்டு, தங்களுடைய 4,5 பதிவுகளுக்கு ஒரு மன வெளிப்பாடும் காண்பிக்க முடியாமல், சும்மா படித்துவிட்டு ஓய்ந்தேன்.இன்று வாசித்துவிட்டு பதில் அளிக்க வேண்டும் என்ற மனவெழுச்சி அடைந்தேன்.

    அந்த நல்ல பையன் ஸ்ரீ பத்ரி சேஷாத்ரி பற்றிக் கூறுகிறார்.ஸ்ரீ பத்ரி அவர்கள் சேவாலயாவின் நலம் விரும்பி. அவ்வப்போது சேவாலயாவிற்கு வந்து ஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பண்பாளர்.
    சேவாலயா பற்றி தாங்கள் எழுதியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி என்று சொல்லி முடித்துவிட விரும்பவில்லை.
    நீங்கள் சேவாலயாவந்து நேரில் காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


    • யோவ் முத்தூ!

      இந்த அழைப்புக்குத் தாங்கள் வருத்தப்படப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.


  4. Ram Sir, I don’t know how to type properly in Tamil. I have never written properly in Tamil. So there were many mistakes. But, you could have properly corrected them. Now I feel ashamed of myself and guilty for wasting your time.

    No worries, நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பிறவற்றை லூஸ்ல வுடவும்.

    அன்புள்ள இளைஞரே, நான் உங்களிடம் properly கேட்டு properly அனுமதி வாங்கிக்கொண்டுதானே properly பதிவு செய்தேன்? மேலும் உங்கள் பெயரையோ எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள் என ஒன்றையுமே properly தெரிவிக்கவில்லையே! ஆக, கவலையோ வெட்கமோ வேண்டேல். ஆனானப் பட்ட கலைஞ்ஜர் கருணாநிதி செய்யாத தமிழ்த் தவறுகளையா நீங்கள் செய்துவிட்டீர்கள்? உங்கள் முழுமுதல் பெரும்பேராசான் செய்யாத தவறுகளா? குற்றவுணர்ச்சியும் வேண்டேல்.

    விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து ஜமாயுங்கள், என் வாழ்த்துகள்.

    இன்னொரு விஷயம்: என் தவறுகளைத் திருத்தி ஒரளவு properly ரிப்பேர் செய்வதற்கே எனக்கு நேரம் போதமாட்டேனென்கிறது. இந்த அழகில் நான் இருக்கும்போது என்னை properly மன்னிப்பீர்கள் என properly நம்புகிறேன்.

    உங்களுக்கு விருப்பமிருந்தால் தொடர்பில் இருக்கலாம். ஆமென்றால் – முடிந்தபோது, முடிந்தஅளவு நனிதமிழில் properly எழுதவும், நன்றி.

  5. vijay Says:

    பாவம் சிறுவன்,ஆர்வக்கோளோறு.தமிழ் வளர்த்த திராவிட பாரம்பரியம் வாழ்க.


    • உண்மைதான். பாவம். ஆங்கிலவழிக் கல்வி படித்து, தமிழில் எழுத முயற்சிக்கும் பையரை, நான் தொந்திரவு படுத்தியிருக்கக் கூடாது.

      வயதாகியும் விவேகமோ வடிவேலுவோ வரவில்லை, என்ன செய்வது?

      …ஆனால் தேவைமெனெக்கெட்டு எனக்குப் போய் மறுபடியும் மறுபடியும் அதே தவறுகளோடு கடிதம் எழுதினால், கொஞ்சம் மூளை உருகிவிடுகிறது, என்ன செய்ய!

      செய்வன திருந்தச் செய். பொது உண்மை.

      வெச்சிசெய்வதை இன்னும் துப்புரவாகச் செய். என் உண்மை.

  6. dagalti Says:

    /மேலும் அறிவியக்கத்துக்கு, தமிழைப் பொறுத்தவரை/

    அறிவியக்கத்துக்காக தமிழைப் பொறுப்பது சிரமம்.


    • பொறுப்புடன் தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன். பொருத்ததுபோதும் பங்கியடி மகனே.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s