மன்னிக்கவும். இட்லி, சாம்பார், பானிபூரி, பாலிவுட், மைசூர்பாக்கு, மீம்கள், ரிலையன்ஸ் ஜியொ… போன்ற அனைத்தையும் இந்தியாவுக்கு அளித்தவர்களும், நம் முகலாயர்களே!

June 7, 2019

நம்மில் எவ்வளவுபேர் இவற்றில் ஒன்றைக்கூடக் கேள்விப்பட்டிருக்கிறோம், சொல்லுங்கள்?

இதுதான், இதுவரை நாம் நம் செல்ல முகலாயர்களுக்கு அளித்திருக்கும் அதிகபட்ச மரியாதை. :-(

…புதைக்கப்பட்ட வரலாறுகள், மறக்கப்பட்ட மடலேறுகள்,  மறைக்கப்பட்ட மகாத்மியங்கள், சிதைக்கப்பட்ட சித்திரங்கள், அகற்றப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், குறுக்கப்பட்ட குன்றின்மேல் விளக்குகள்… (ஸ்ஸ்ஸ்… அப்பாடா! இப்பாதைக்கு இவை போதும்! மிகையாகக் கள் குடித்துக் கள் குடித்துத் தலை சுற்றுகிறது )

ஆக… ‘வாழ்க, எம் முகலாயர்கள்!’ (=Face Lawyer Toddy ©S.Ramakrishnan 2019)  என வந்தனம் செய்து, வரலாற்று ரீதியான இப்பதிவைத் தொடங்குகிறேன்.

-0-0-0-0-

சகஏழரைகளே! உங்களுக்குத் தெரியும், நானும் கடலூர்சீனு அவர்களைப் போல, ஒரு தேர்ந்த வரலாற்றாளராக உருவாகிக்கொண்டு வருபவன். அந்தத் தமிழிளைஞர்-செவ்விளைஞர் அவர்களைப் போலவே, ஜெயமோகன் அவர்களை என் மானசீக துரோணாச்சாரியாரிய குருவாகக் கொண்டு ஏகத்துக்கும் கலைவக் கலைஞனாக உருமாற மஜாபாரதத் தனமாக, பல மாமாங்கங்களாக (=Uncle Part Toddy Therefore ©S.Ramakrishnan 2019) முயன்றுகொண்டிருப்பவன். வெண்முரசு கொட்டுபவன்.

ஆகவே, நெஞ்சு பொறுக்காமல், நம் செல்ல முகலாயர்களின் பங்களிப்புகள் இனிமேலும் புதைக்கப்படாமல் இருக்க, சிலபல த்ருஷ்டாந்த எடுத்துகாட்டு உதாரணங்களை, என் இடக்கையால் ஓங்கி என் வழுக்கைமண்டையில் அடித்துக்கொண்டு, வலக்கையால் மடிக்கணிநியை நம்பியார்த்தனமாகச் சிரித்துக்கொண்டு, ஆனால், துருயோதனத்தனமாக – ஆயிரத்தெட்டு கோடியே தொன்மைவாய்ந்த தொண்ணூற்றெட்டு லட்சத்து எண்ணித்துணியாத எண்பத்தெட்டாயிரத்துப் பதிற்றுப் பதினொன்றாம் தடவையாக – ஓங்கி அறைந்து, பின்னர் அந்த சவத்து லேப்டாப் உடனடியாக உள்ளூர உடைந்து அழுது, மௌனமாக இருப்பின் அவஸ்தையை இருத்தலியல் கட்டுடைப்பினால் உணர்ந்து, பின்நவீனத்துவரீதியாக சுயத்தைத் தேடி ஆங்கே அன்னைஅட்டை (=Mother Board, ©S.Ramakrishnan 2019) அவமதிக்கப் பட்டுவிட்டதால், ஆக, தாம் வேலைசெய்வதை போர்க்கால ரீதியில் நிப்பாட்டி விட்டபடியால், பின்னர் என் கைபேசியில் இந்த வரலாற்று அகழ்வாராய்ச்சிக் கட்டுரையை, என் இருகைகளின் பெருவிரல்களால் நனி திரையை நன்கு தேய்த்து, பிறவிரல்களால் வெண்முரசுத்தனமாக தட்டையான கைபேசியின் அடியை நுனியில் பிடித்துக்கொண்டு, நெற்றியடிப் புருவங்களின் கீழ் வீழ்ந்திருக்கும் கண்களால் திரையைப் பார்த்து, முகத்தின் நடுவில் நீண்டு குழைந்து விடைத்திருக்கும் மூக்கால் மூச்சுவிட்டுக்கொண்டு, பக்கவாக்குக் குறுக்குவெட்டில் கிறுக்குத்தனமாகப் புடைத்திருக்கும் மடல்கள் கொண்ட செவ்வியல் செவியெனச் சரியாகவே அறியப்படும் காதால் சுற்றுப்புறச் சப்தங்களை அவதானித்துக்கொண்டு, வாயைச் சுழித்து ஓவென விரித்துக் கோணி நாணாமல் நானாவிதத்தில் நீள் சப்தம் எழுப்பி கொட்டாவி விட்டுக்கொண்டு – சுரந்து தெளிதேர்வெள்ளமாகப் பெருக்கெடுத்து நுப்பும் நுரையுமாக  மங்கலகரமான மஞ்சள் நிறத்துடன் பெருவூற்றெடுத்து ஓடக் காத்திருக்கும், சிறுநீர்ப் பெருமூத்திரம் என் அடிவயிற்றில் முட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்து, அவசரம் அவசரமாகத் தொடர்ந்து எழுதுகிறேன்.

…ஆனால், அது ஆங்கிலத்தில் இருக்கிறது. ஏனப்படி என்றால் – என்னைப் போன்ற முக்கியமான வரலாற்றாராய்ச்சியாளர்களின் வீரியம், ஆங்கிலத்தில் வெளிப்பட்டால்தான், அறிவுஜீவிய வட்டங்களில் அது ஒப்புக்கொள்ளப் பட்டு, நம் தமிழ்த்தாய்-செந்தாய்க்குப் பெருமை சேர்க்கும்.

+என் பேராசான், தமிழாசான்-செவ்வாசான் புகழ் பாரெல்லாம் பரவும். (உன்னிப்பாகக் கவனித்தீர்களானால், நான் இந்த அபூர்வமான  கட்டுரையையும், எம் பெரும்பேராசான் அவர்களுக்கு சமர்ப்பித்திருப்பதையும் , அவருக்குச் சமர்த்திருந்தாலும் சமர் பித்து இருப்பதையும் அறிந்துகொள்வீர்!)

ஆகவே, ஏகோபித்துச் சென்று படிப்பீர்!

TEN contributions of Mughals to Bharat, I’d bet you wouldn’t know anything about

6 Responses to “மன்னிக்கவும். இட்லி, சாம்பார், பானிபூரி, பாலிவுட், மைசூர்பாக்கு, மீம்கள், ரிலையன்ஸ் ஜியொ… போன்ற அனைத்தையும் இந்தியாவுக்கு அளித்தவர்களும், நம் முகலாயர்களே!”

 1. Vijayaraghavan Says:

  திருவாலர் ஒ(த்திசைவு).வெ.ரா. அவர்களுக்கு, ஒத்திசைவு ஏழரை மாமன்றத்தின் ஈரோடு {Lice egg with (C) yes.raw 2019} கிளையின் சார்பாக பத்து கண்ட பெருமான் {Rash saw big deer(C) yes.raw 2019} என்ற விருது வழங்கி இரும்பூது அடைகிறேன் {Iron blow pancake crane (C)yes.raw 2019}.


  • விருதுவிழாவை எப்போது வைத்துக்கொல்லப்போகிறீர்கள்?

   பணமுடிப்பு எவ்ளோ?

   போகவர நான் பிஸினெஸ் க்லாஸ் விமானப் பயணம் செய்யவேண்டும். (மங்கோலியா வழியாக)

   உங்களுக்கு இம்மாதிரி, எனக்கு உரிய மரியாதையை அளித்து என்னைக் கொண்டாடும் ஒரு வாய்ப்பை (Mouth Bag) அளித்ததற்கு நான் பெருமைப் படுகிறேன்.

 2. A.Seshagiri Says:

  ஐயா ,
  தயை கூர்ந்து இதன் தமிழாக்கத்தையும் இந்த கட்டுரை எழுத தள்ளப்பட்டதற்கான பின்புலத்தையும் தெரிவிக்கவும்.


  • ஐயா,

   1. இதற்கு முகாந்திரம் என்று பெரிதாக ஒன்றுமில்லை – நம் அறிவுஜீவி லிபரல்களுக்கு – பாரதத்தின் குறிப்பிடத்தக்க கலாச்சார/கலைக்கூறுகளுக்கு முகலாயர்கள் தாம், அவர்கள் மட்டுமேதான் காரணம் என அபாண்டமாகச் சொல்வது வழக்கம்; ஏதோ அவர்களுக்கு நாமும் கொஞ்சம் உதவலாமே என்ற எண்ணத்தில் தான்… (இது கிண்டல் என்றாலும், இம்மாதிரி நம் லிபரல்கூவான்கள் சொல்லமாட்டார்கள் என என்னால் கேரண்டி அளிக்கமுடியாதுவேறு!)

   என் பயம் என்னவென்றால் விடுதலைத் தறுதலை வீரமணி, யுவகிருஷ்ணா போன்றவர்கள் இதனை ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டுவிடுவார்கள் என்பதுதான். :-(

   2. இதனைத் தமிழில் முழிபெயர்ப்பு செய்தால் ஒரிஜினல் அளவுக்குக் கூட உருப்படியாக இருக்குமா (ஒருசில ஆங்கிலப் பிழைகளுமிருப்பது ஊக்கபோனஸ்) எனத் தெரியவில்லை; மேலும் ஆயாசமாக இருக்கிறது. ஆகவே!

   • க்ருஷ்ணகுமார் Says:

    \\\ பாரதத்தின் குறிப்பிடத்தக்க கலாச்சார/கலைக்கூறுகளுக்கு முகலாயர்கள் தாம், அவர்கள் மட்டுமேதான் காரணம் என அபாண்டமாகச் சொல்வது வழக்கம் \\

    அப்ஜெக்ஷன் உவர் ஆனர். என்ன தெகிரியம். வெண்முரசரைந்து தமிழகத்தின் கலாச்சாரக்கூறுகளுக்குப் பின்னால் சமணர்களே உள்ளனர் என்று முழங்கிய பின்னும் அது நும் கர்ணங்களில் விழாது டமாரமாகப் போய் விஷ்டதோ.

    இப்பிடி சமணப்பெருமையை மறந்து கலாசாரக்கூறுகளை கூறு கெட்டு மறைக்கும் அனைவருடைய கோமணமும் காணாமற்போம் என்று விஷ்ணுபுர மடாதீசரின் சாபம் அசரீரியாக சோப்பு டப்பா ஷேம்பு சேஷே போன்ற வடிவங்களில் வந்து தாக்கும் என நினைவிற் கொல்க. ஆமீன்.

 3. RC Says:

  நன்றி.திருநெல்வேலி அல்வா பற்றியும் சொல்லி, அதுக்குமுன்னாடி எங்கூருக்கு இனிப்பே தெரியாதுன்னு சொன்னாலும் கேட்டுக்கிடப்போறோம் :-(

  நிற்க..நீங்கள் முன்னர் எனக்கு தென்னிந்திய இஸ்லாமியர் வரலாறு புத்தகங்கள் பற்றிய குறிப்பு கொடுத்தீர்கள் .அதில் திரு.J.B.P.MORE ம் உண்டு.நான் வாசித்த ‘Origin and early history of the muslims of keralam’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் (2011 ‘other books’ பதிப்பக வெளியீடு) பக்கம் 21- /in the name of dialogue,cultural exchange and cooperation,between Indians and westerners, as they exist today are not based on equal footing.Cooperation between two parties can takeplace only when there is total absence of the urge to dominate the other.Unfortunately,this urge to dominate on the part of the one or the other is never absent./
  புத்தகத்தில்,’சேரமான் பெருமாள்’ இஸ்லாம் தழுவி மெக்கா சென்ற புராணக்கதையை எடுத்து ஆராய்ந்து மறுத்திருப்பார்.மெக்கா சென்றது ஏழாம் / பதினொன்றாம் நூற்றாண்டு என்ற இரண்டு கதைகளும் அஸ்திவாரம் அற்றவை என்று சொல்லியிருப்பார்.இதில் பதினொன்றை கூறியது திரு.M.G.S நாராயணன் அவர்கள்.(ஜெமோ கட்டுரையும் ஒன்றுண்டு சேரமான் பெருமாள் என்ற தலைப்பில்)

  மேலும், புத்தகத்தில் வாஸ்கோடகாமா + ஐரோப்பியர்கள் பற்றிய தன் நிறைவுக் குறிப்புகளாக அழகாகச் சொல்லியிருப்பார் / (பக்கம் 183) – it would be ridiculous to maintain that they conquered and subjugated the world with their values.The values came later, the arms the cannonading and bombardment came first /

  புராணக்கதைகள் தவிர்த்து தெரிந்தே செய்யப்படும்/பரப்பப்படும் பொய்களை,புரட்டுகளை தரம் பார்க்கவும் படிப்பிக்கவும் இல்லையெனில் திசை கோடிட்டு காட்டவாவது ஆசிரியர் தேவை இங்கே.

  E.H.Carr கூற்று தான் நினைவில் வருகிறது (இதுவும் நீங்கள் காட்டியது தான்,அதற்கும் நன்றி)

  நிறைவாக, இருக்கவே இருக்கு சொக்கம்பட்டி ஜமீன்தான் தின்னவேலிக்கு அல்வாவை கொண்டு வந்தாருடேன்னு வண்டி கட்டி போய் அல்வா சாப்பிட்ட எங்கூரு தாத்தா சொன்ன கதை.. அது எனக்கு போதும் :-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s