‘ராகுகால மகாத்மாவுக்கு ஏன் ரெண்டு ஓட்டைகள் போடவேண்டும்?’ – பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஒரு விண்ணப்பம்
March 13, 2019
எஸ்ரா அவர்கள் மட்டும் இப்பூவலகில் அவதரிக்காமல் இருந்திருந்தால், என்னால் எப்படித்தான் காலட்சேபம் செய்துகொண்டிருக்கமுடியுமோ!
சரி.
எப்போதுமே எனக்கு, ஹ்ம்ம், எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்களுக்கும் (அவர்கள் என்னைக் கண்டாலே கதிகலங்கி ஓடும்வரை) புதிய புதிய ஐடியாக்களைக் கொடுப்பது, புத்தம் புதிய தொழில்களைத் தொடங்குவது, அவற்றை விரிவாக்கம் செய்வது என்பவை குறித்த மேலான அறிவுரைகளை, அதாவது அறிவுரைகளை மட்டுமே நல்குவதில் ஏகத்துக்கும் இன்பம்ஸ்.
இந்த அறிவுரைகள் நல்கும் துறையிலும், நம் தமிழ் அலக்கியவாதிகளும், சமூகத்தின் தாங்கொணாத் தன்னார்வ மனச்சாட்சிகளுமான பிதாமகர்கள்தாம் என் குருமார்கள் – அதாவது, ஸாஹித்ய அகாடம்மி எஸ்ராவுக்கு நன்றியுடன், prickly heat chests.
ஆகவே.
சிலமாதங்கள் முன் இந்த ஷிவம் சௌதரி எனும் இளைஞர், என் ஆசான் ராஹூல்காந்தி பற்றிய புகழ்பாடி, ஒரு அழகான புத்தகத்தைப் பதிப்பித்தார். அந்தச் செய்தியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது மறந்துவிட்டது – ஆனால் அதனைப் பற்றி ஓப்-இந்தியா தளத்தில் ஒரு கிண்டல் கட்டுரை வந்திருக்கிறது.
https://www.opindia.com/2019/03/why-to-vote-for-rahul-gandhi-shivam-chaudhary-book-author/
திமுககாங்க்ரெஸ் மேல் அபிமானம் உள்ள அனைவரும் வாங்கிப்படிக்கவேண்டிய இந்த “ராஹூல் காந்திக்கு ஏன் ஓட்டுப்போடவேண்டும்?” புத்தகத்தின் அற்புதங்களில் பலவற்றில் சில கீழே:
- மொத்தப் பக்கங்கள்: 186.
- எழுதியவர் யார்: படிப்பறிவும் செயலூக்கமும் உள்ள இளைஞர் – தன்னார்வ நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி, களப்பணிகளைச் சோர்வில்லாமல் செய்பவர்.
- புத்தகத்தின் சாராம்சம்: பல்லாண்டுகாலமாக, அதாவது பதினான்கு வருடங்கள் ஆராய்ந்து – ராஹுல் காந்தியின் பேச்சுகளையும், பாராளுமன்றத்துக்கும் உள்ளும்வெளியேயுமான செயல்பாடுகளையும், அவருடைய சாதனைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து ஆணித்தரமாக – ஏன் அவர்தான் வருங்கால பிரதமராகவேண்டும் என வாதாடி, பலப்பல திடுக்கிடவைக்கும் உண்மைகளைப் புட்டுபுட்டு வைக்கும் தரவுகள்
- புத்தகத்தின் உள்ளடக்கம்: கீழே.
- முக்கியமான குறிப்பும் எனக்குப் பிடித்தமான அம்சமும்: ராஹுல்சாதனைகளை விவரமாக அளிக்கும் இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் அனைத்தும் வெற்றிடமாக விடப்பட்டுள்ளன.
- புத்தகத்தின் பிற பயன்கள்: வாய்விட்டுக் கண்ணீர்வர உருண்டுவுருண்டு ஏகோபித்துச் சிரிக்க ஒரு நல்லவாய்ப்பைத் தருவதற்கு அப்பாற்பட்டு, இதனை ஏதாவது பள்ளிசெல்லும் குழந்தைக்கு ஒரு நோட்டுப்புத்தகமாகப் பரிசளிக்கலாம்.
-0-0-0-0-0-
…நிலைமை இப்படி இருக்கையிலே – இதனை ஏன் நம்மூர் பிதாகமர்களுக்கும் செய்யக்கூடாது எனத் தோன்றியது. இதற்கு என் அருமை நண்பர் (அதாவது, இதுவரை!) பத்ரி சேஷாத்ரிதான் சரியான நபர் எனவும் தோன்றுகிறது.
வர்த்தக ரீதியாக, நண்பர்களுக்குச் சரியான சமயத்தில் அறிவுரை கொடுக்காமல் இருப்பது மஹா பாவம்.
ஆகவே, அவருக்கு என் பகீரங்கமான கோரிக்கைகள்:
1. இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடமுடியுமா? (தயவுசெய்து எஸ்ரா அவர்களிடம் இதனை மொழிபெயர்க்கச் சொல்லவேண்டா. அவர் ‘Why To Vote For Rahul Gandhi?‘ எனும் தலைப்பையே அவருகே உரித தனிதுவததுடன், நுணுகமான புரிதலுடன் ‘ராகுகால மகாத்மாவுக்கு ஏன் இரண்டு ஓட்டைகள் போடவேண்டும்‘ எனவெல்லாம் மொழிபெயர்த்துவிடுவார்!)
அதே சமயம் பாராகவனும் இதைச் செய்யவேண்டாம் – விக்கிபீடியாவிலிருந்து வெட்டிஒட்டி புத்தகத்தை ரொப்பி விடுவார்; அதேபோலத்தான் அரவிந்தன்கண்ணையனும் – தன்னுடைய, அமெரிக்கா பற்றிய சிறுகுறிப்பை, புத்தகத்தின் பாடுபொருளுக்குத் தொடர்பில்லாமல் எழுதி, முழு முழிபெயர்ப்பையும் ஒரு நீளபுத்தகஜாபிதா, சுட்டிகள், துணை நூல்கள் என ரொப்பி விடுவார். டேஞ்சர். பள்ளிமாணவர்களுக்கு இதனை நோட்டுப் புத்தகமாக விற்கமுடியாது!
2. இசுடாலிர் குறித்தும் அப்படியேயான புத்தகம். (இவர் என்ன சாதனைகளைச் செய்து தமிழகத்தை இதுவரை உய்வித்திருக்கிறார் என்பது எனக்கு இதுவரை புரியவேயில்லை! நானும் சுமார் நாற்பது வருடங்களாக இவருடைய லீலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஊழல் செய்ததையும் ஊரூராகச் சுற்றி உளறிக்கொட்டுவதற்கும் அப்பாற்பட்டு வேறு ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறாரா? உதவமுடியுமா??)
3. எஸ்ரா அவர்கள் குறித்த – அவருடைய திறமைகளைப் பறைசாற்றி, அவர் ஸாஹித்ய அகாடம்மியான கதை.
4. மனுஷ்யபுத்திரனின் தெரிவுசெய்த கவிதைகள்.
…இன்னமும் நிறைய இப்படியே இருக்கின்றன – ஆனால் நல்ல செய்திகளைத் துளித்துளியாகத்தான் ரசித்து சந்தைப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்களித்துவிடும்.
ஒரு அனுகூலம் என்னவென்றால், முன்னமேயே குறிப்பிட்டது போல, கிழக்கு பதிப்பகம் இந்தவழியாக பள்ளிக்கூட நோட்டுப்புத்தகச் சந்தையிலும் இறங்கிவிடலாம்.
நான், உங்களுடைய கிழக்கு இந்தப் புது மார்க்கெட்டில் இறங்க, அதற்கான மேலான கருத்துகளை நல்க, கௌரவ (அல்லது பாண்டவ) ஆலோசகராக, வெண்முரசம் கொட்டிக்கொண்டு, முரசுகட்டில் மோதி கீறாராக இருக்கத் தயார்.
என்ன சொல்கிறீர்கள், பத்ரி?
என்னது?
வடக்கு நோக்கி இருக்கப் போகிறீர்களா? ஐயகோ! :-(
இப்படி இடக்காகப் பதிலளித்தால், தமிழை உய்விப்பது எப்படியாம்? :-((
March 13, 2019 at 13:36
ha ha ha
March 13, 2019 at 17:35
சிரிப்பெல்லாம் சரி, உங்கள் பொன்னான ஓட்டை எங்கு போடப்போகிறீர்களாம்?
ஒய்ங்குமர்வாதியா பதில் சொல்லவும்.
March 14, 2019 at 02:41
Mine is a negative vote. A vote against DMK.Suppose DMK has aligned with BJP, still I will vote to the party which is against DMK.My vote is always to the parties which oppose DMK.
March 14, 2019 at 06:05
👌
Sir, that *still* doesn’t explain where you will ‘put your hole’ – so, please!
In other words, ‘whose side are you on?’
YesRaw or YesCIA?
March 13, 2019 at 21:18
hilarious..made me laugh out loud
March 14, 2019 at 10:15
Sir, if you want to keep laughing your posterior off, my suggestion is that – you should keep reading stuff from http://www.sramakrishnan.com – this gent has a great sense of humour.
I promise 100% entertainment.
March 14, 2019 at 13:45
Sir
https://www.jeyamohan.in/119145#.XIobECIzbIU
Quid pro quo ..Any publicity is good, right ?
What if Charu( or Gayathri/Ramji) gets onto translate ..Peru and Garcia and Wolf Totem should be figuring somewhere.
Anyway, what’s real is to be seen to be believed.
Mr.Pawar’s projecting not Modi as next PM is a new googly to be studied over.
Regards
SB
March 15, 2019 at 14:29
அய்யா ,
இந்த பதிவில் இசுடாலிர் பற்றி ஒன்றும் செய்ய வில்லை என்று “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறுவதை ” ஒப்புக் கொள்ள மாட்டேன்.
அவரே கூறியுள்ளார் : – “நான் ஜப்பான் துணை-முதல்வராக இருந்த சமயம் பல சாதனைகள் செய்தேன்”.
அவர் மேலும் கூறியுள்ளது “காங்கேயம் காளையின் பால் போன்ற தூய்மையான தி மு க , ராகுலை பிரதமர் ஆக்கும். ஆகவே, இசுடாலிர் அவர்களை நீக்கி விட்டு மற்ற 3 பேருக்கு மட்டும் ஓட்டை போடவும் (மூவருக்கும்)
March 16, 2019 at 17:29
நான் தொடர்ந்து மதிக்கும் (இப்பொழுதெல்லாம் ஓரளவு தான்) இரு ஆளுமைகளிடமிருந்து வரும் – ஒருவர் ஜெமோ.மற்றொருவர் பி.ஏ.கிருஷ்ணன்- ராகுலை பற்றிய இந்த கணிப்புகள் உண்மையிலேயே வெறுப்பின் எல்லைக்கே நம்மை கொண்டு செல்கின்றன. மோதியை பற்றி என்றால் கண்டபடி வசை பாடுவது அதே நேரத்தில் ராகுலை ஏதோ நம்மை உய்யக்கொள்ள வந்த ‘தேவ தூதர்’ போல வர்ணிப்பது.இதில் பி.ஏ.கே.அவர்களும் மோதிஜி பற்றி கிண்டல் செய்து வந்திருந்த கணக்கு பாட வீடியோ வை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதித்து “புளகாங்கிதமடைந்தார் ” மேலும் மோதிஜியின் “சாதனைகளை” பற்றி விரைவில் பகிர இருப்பதாகவும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.இவர்களால் எப்படி தொடர்ந்து காமாலைக் கண்ணர்களாக ஜொலிக்கமுடிகிறது என்பதுதான் என்னைப்போன்றவர்களுக்கு ஏற்படும் மகா வியப்பு !