திமுக ஸ்டாலின் ஊழல்கள், அற்பத்தனங்கள்: சில குறிப்புகள்
March 11, 2019
…இவர்கள் விசிலடிச்சான் குஞ்சப்பர்களாக இல்லாவிட்டாலும் – என்னவோ, போயும்போயும் இந்த இசுடாலிரைப் போய், பெரிய ‘ஆக் ஷன் கிங் அர்ஜுன்’ போலவும், கறைபடியாத கரம்கொண்டவராகவும், இளைஞராகவும், கட்சிக்காக உழைத்து படிப்படியாக மேலெழும்பி வந்தவராகவும், தமிழகத்தின்மீது கரிசனம் உள்ளவராகவும், இளரத்தம்(!) எனவும் கருதுகிறார்கள். தொடர்ந்து இவர் அமோகமாக உளறுவதையும் சொதப்புவதையும் வாய்கூசாமல் பொய் சொல்வதையும் ‘லூஸ்ல வுட்ர்லாம்’ என்கிற கேளிக்கை அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். (இவர்கள் பார்வையில் – இசுடாலிர் தமிழகத்துக்கு மறுமலர்ச்சியைத் தருவார்! ஆஹா!!)
இல்லையேல், அஇஅதிமுக ஆசாமிகளுக்கு இந்த ஆள் ‘பெட்டர்’ எனவும் ஒரு மனப் பிரமையில் இருக்கிறார்கள். (எப்படி இவ்வாறு நினைக்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது)
…படுபீதியாக இருக்கிறது. ஆகவே, இக்குறிப்புகள். அதுவும் சில எடுத்துக்காட்டுகளாகத்தான் – ஆனால் மலைத்தொடர் போல இருக்கின்றன இந்தத் திராவிட சிசுவின் ஊழல்களும் அற்பத்தனங்களும்…
ஏனென்றால் – ‘இளைஞர்’ இசுடாலிர் அவர்களும் ஒரு ‘குட்டையில் ஊறிய மட்டை’தான்.
அதுவும் அழுகி நாறிக்கொண்டிருக்கும், ஊழலாள, படுமட்டமான மட்டைதாம். பலவிஷயங்கள் (மேம்பால ஊழல்கள் உட்பட) நினைவிருக்கின்றனவா?
இவருடைய ‘இள’வயது லீலாவினோதங்களையே சொல்லவரவில்லை, இருந்தாலும்…
இவர், நேரடியாகவோ மறைமுகமாகவோ (தற்)கொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்தாம்! (ஒரு எடுத்துக்காட்டாக ‘அண்ணா நகர் ரமேஷ்’ விவகாரம் நினைவில் இருக்கிறதா?)
தம் பிள்ளையின் அயோக்கியத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆசாமியின் வெளி நாட்டுச் செலாவணி ஊழலை அமுக்கியவர். (2007ல் உதயநிதி இசுடாலிர், ஜோஸஃப் அலெக்ஸ் எனும் கடத்தல்நபர் மூலமாக திருட்டுத்தனமாக, குறைந்த பட்சம் எண்பது லட்சம் பெருமானமுள்ள ‘ஹம்மர்’ காரை ‘இறக்குமதி’ செய்த கேஸ் நினைவில் இருக்கிறதா? எல்லாம் வொழயோவொழன்னிட்டு வொழச்சி சம்பாரிச்ச காசுதாங்க!)
தன் பிள்ளைக்கு திமுகவில் ரத்தினக் கம்பளத்தை விரிப்பவர். தன் மருமகனை திமுக தலைமைக் கொள்ளைக் கும்பலில் சேர்த்து அதிகார மையத்தில் ஒருங்கிணைத்தவர். (இத்தனைக்கும் ‘நான் எக்காலத்திலும் என் குடும்பத்தினரை திமுகவில் ஈடுபடுத்தவே மாட்டேன்!’ என வெட்கமேயில்லாமல் சொல்லியிருக்கிறார் வேறு! ஆனால், மானத்துக்கும் திராவிடத்துக்கும் என்றுதான் சம்பந்தமிருந்திருக்கிறது, சொல்லுங்கள்?)
இப்போது கிராமம்கிராமமாகச் சென்று அமோகமாகப் பொய்சொல்லி உளறிக்கொட்டுவதைக் கூட அவர் அப்போது ‘துணை முதல்வராக’ இருந்த காலத்தில் செய்தாரா என்பது நினைவிலிருக்கிறதா? (ஏனென்றால், ஐயா அவர்கள் அப்போது ஊழலில் படுபிஸி!)
இந்த இசுடாலிர் – தம்முடைய 65+ வாழ்நாளில், ஒரு நயாபைசாவையாவது நேர்மையாக உழைத்துச் சம்பாதித்திருக்கிறாரா என்ற கேள்வி எழும்புகிறதா?
எம்எல்ஏ சம்பளமாக (நம் வரிப்பணத்தில் அவருக்கும் போடப்பட்ட பிச்சைதான் இது) சம்பாதித்த பணத்துக்காவது தமிழகத்துக்கு, அதன் நல்லாட்சிக்கு உழைத்திருக்கிறாரா? வெறுமனே தடாலடியும் சட்டையைக் கிழித்துக்கொண்டு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதும் சபையில் உளறிக்கொட்டுவதும் – வெளிநடப்பு செய்வதும், மரத்தடி மீட்டிங்கும் தான் நடந்திருக்கின்றன அல்லவா?
(சட்டை எப்படி திடீரென்று கிழிந்தது என ஆச்சரியத்துடன் சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்க்கும் துரைமுருகன், காரில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார், பாரீர்!)
-0—0-0—0-
சரி.
கீழ்கண்ட இரண்டு பதிவுகளில் இசுடாலிர் தொடர்பான சிலபல ஊழல்களையும் பகற்கொள்ளைகளையும் விவரித்திருக்கிறேன். பொறுமையாகப் படிக்கவும்.
- ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1 (https://othisaivu.wordpress.com/2011/04/05/post-12/)
- ஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2 (https://othisaivu.wordpress.com/2011/04/07/post-14/)
- மேலவர் நாகசாமியும் கீழவர் இசுடாலிரும்: தமிழகத்தின் தன்னிகரற்ற வெட்கக்கேட்டின் இன்னுமொரு உளறல் – சில குறிப்புகள் 09/03/2019
நல்ல தலைவர், நல்ல பொறுக்கிக் கட்சி.
ஒத்திசைவைப் படிக்கும் ஒன்றிரண்டு இளைஞர்களுக்கு(ம்) இது ஒரு கோரிக்கை: இசுடாலிர் குறித்த பொய்பிம்பங்களை அகற்ற இம்மாதிரி விவரணைகளை, உங்களால் முடிந்த அளவில் பயன்படுத்தவும், பரப்பவும் முடியுமா?
-0-0-0-0-
நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, மிகத் தெளிவாகவே தெரியும் ஒரு விஷயம்: வரும் லோக்ஸபா தேர்தலில் துப்புரவாகவே ஒழிக்கப்படவேண்டியது இந்த திமுகவின் கொள்ளைக் கூட்டணிதான்.
ஆமென்.
ஆனால் பார்க்கலாம் – நம் தமிழகத்து வாக்காளர்களுக்கு நம் தமிழகத்தின் மேலே துக்குணியூண்டு கரிசனமாவது இருக்கிறதா என்று… அல்லது, மகிழ்ச்சியுடன் ஒட்டுவியாபார ஏலத்தில் நற்’குடி’மகன்களாக தம் கோமணங்களைப் பறக்கவிடப்போகிறார்களா என்று…
March 11, 2019 at 15:23
Sir,
Who could we vote for ?
Kamal Hassan is the only choice going by your logic of extirpating dravida parties. Please clarify …DMN & AIADMK are the obverse and reverse of the same coin and I read so that your detailing on MKS holds good for the other side too.
Regars
SB
March 11, 2019 at 17:00
Sir, I can not recommend, but can only request; also my current voting right is not in TN; in my opinion, AIADMK is definitely a lesser evil. Also it has BJP and PT in its alliance.
So.
Kamal Hassan? Nice joke. Useless circus parties like his need to be TORCHed. Thanks.
March 11, 2019 at 22:34
வழிகாட்டியதற்கு நன்றி
March 12, 2019 at 08:58
ஐயா, இவை என் கோரிக்கைகள், பரிந்துரைகள் எனக்கூடச் சொல்லலாம்;
ஆனால், அவை வழிகாட்டல்கள் அல்ல – அதற்கெல்லாம் பராக்கிரமும் வீர்யமும் தெகிர்யமும் மிக்க பேராசான்களால் மட்டுமே முடியும்.
நன்றி!
March 12, 2019 at 15:33
எடப்பாடியார் மிகச்சாதுர்யமான அணுகுமுறையின் மூலம் வலுவான கூட்டணி அமைத்துள்ளார்
நல்லதே நடக்கும் என நம்புவோம்
April 5, 2019 at 18:41
[…] மகாமகோ செல்லம் அவர். நான் அவரை ஆதரிக்காமல் வேறுயாரை […]
March 7, 2021 at 11:18
[…] இது! போடா!!‘ கதையின் நாயகன் ‘கள்ள இறக்குமதிக் கார்‘ புகழ் […]
April 5, 2021 at 14:13
[…] கொஞ்சம் எழுதியிருக்கிறேன்: திமுக ஸ்டாலின் ஊழல்கள், அற்பத்தனங்கள… […]