ராஹுல்காந்தி, ஜெயமோகன்: ஆகச் சிறந்ததாகப் பொய் சொல்வதை விட ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை

March 14, 2019

ஒரு வழியாக (ஜெயமோகனின் இந்தக் காலையின் ஒளிமிக்க அழகான தருண புளகாங்கித விகசிப்பைப் படித்ததினால்  + அவருடைய அபாரமான புனையும் திறமை மேல் இன்னமும் எனக்கு மரியாதை இருப்பதினால்) ‘நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட இளைய முகம்‘ ராஹுல்காந்தி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியெழவின் கூச்சலிட்டான் கும்மாளமடிச்சான் குஞ்சம்மாக்களுடன் பொத்தாம்பொதுவாகப் பேசுவதைப் படித்தேன்.

அதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் – ராஹுல்காந்தியின் தன்னம்பிக்கை மிகுந்த உளறலை முழுவதும் பயபீதியுடன் பார்த்துத் தொலைத்தேன். தேவையா?

ஸ்டெல்லாமேரிகளைப் பார்த்தால் (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர) கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

ஆனால் எனக்குப் புரியாமலும் இல்லை: அவர்கள் இளம்பிள்ளைகள், இனிமேல் தான் காத்திரமான வாழ்வனுபவங்களைப் பெற்று வளரவேண்டியவர்கள். ஊக்கபோனஸாக, கேடுகெட்ட திராவிடத்திலும் கன்னிமார்கள் நடுவிலும் புழுக்கத்தில் புழுங்கிக்கொண்டிருப்பவர்கள்; ஆகவே அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பாவம், அவர்கள் சராசரித்தனச் சிறையிலிருந்து வெளியேவந்து விடுதலையைச் சுவாசித்து ஏகோபித்து வளரட்டும். புவியில் தங்களுக்கான பங்கை ஆற்ற தங்களைத் தயார் செய்துகொள்ளட்டும், என் வாழ்த்துகள்.

ஆனால், அம்மணிகளே அம்மணர்களே! எனக்கு எங்கே போயிற்று என் மூளை, சொல்லுங்கள்?

தவறு செய்துவிட்டேன். சலிப்புத்தான் வருகுதய்யா. எனக்கு மன்னிப்பு உண்டா?

-0-0-0-0-

2017 மே மாத வாக்கில் ஒரு முறை தில்லியின் இந்தியா இன்டெர்நேஷனல் ஸென்டர் வளாகத்தில் ராஹுல்காந்தி பேச்சை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். 2018 ஃபெப்ருவரியிலும் இன்னொருமுறை (இதுவும் தில்லியில்தான், ஆனால் நடந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது – என் குறிப்புகளும் இப்போது கைவசம் இல்லை).

மேற்கண்ட இரண்டு பேச்சுகளுக்கும் நான் என் பணிதொடர்பாகப் போகவேண்டி வந்தது. சோகம்.

இரண்டு பேச்சுகளிலும் – ராஹுல் காந்தி ஒருமாதிரி கிறக்கத்திலேயே இருந்தார். பேச்சு குழறவில்லை – ஆனால் ஒன்றும் கோர்வையேயில்லை. முன்னேபின்னே இல்லை. படிப்பறிவின் பொதுஅறிவின் பக்கமே போகாதவராக இருந்ததினால் கல்வியைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக ஏதோ கறவைமாடுஓட்டல். நம் இசுடாலிர் போல ஏகோபித்த உளறல். புள்ளிவிவரம் சொல்லவந்து புள்ளிராஜ் விவரத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார். கேள்வி கேட்டவர்களிடம் அவருக்கு, காத்திரமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அவரிடம் இருந்தவையெல்லாம் தற்காலிகமாகக் கடைந்தேற அண்டப் புளுகுகள் மட்டுமே. அதுவும் அதெல்லாம் கெட்டிக்காரன் புளுகளவுக்குக் கூட இல்லை. பார்த்தால் பரிதாபமாக இருந்தது. பலதடவை தடுக்கிக்கொண்டு மாட்டினார் வேறு! அசிங்கம். (நம் செல்லமான இசுடாலிர் இப்போதும், இதே தத்தி கேஸ்தான்! தமிழகத்து அரசியலில் தண்டக்கருமாந்திரங்களுக்கு எனப் பிரத்யேக இடஓதுக்கீடு இருக்கிறதாமே?)

சரி. ராஹுலைப்போல ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு அதிபணக்கார, பாரம்பரிய அதிஉயர்குடி ஆசாமி , சகல வசதிகளும் பெற்றவன் – இப்படியா படுதிராபையாக இருப்பான், அதுவும் பதவிக்கு ஏங்கிக்கொண்டு, எனப் பட்டது. அதுவும் இப்படி ஒரு அறியாமைக் கோமாளியாக இருந்துகொண்டு தன்னைத் தானே கீழ்மைப் படுத்திக்கொள்ளவேண்டுமா எனவும்!

ஆனால், பெரும்பாலும் தன்னைப் பற்றிய பெரிய மதிப்பு என்று ஒன்று இல்லாமல் இருப்பவராதலால் – இப்படிப்பட்ட சுயபச்சாத்தாப எண்ணங்களால் அவர் பாதிக்கப்படவேயில்லை எனத்தான் தோன்றியது. முகவாட்டமே இல்லை. பரப்பிரம்மம்.

இது ஒரு சோகமென்றால், இன்னொரு சோகம், நெஞ்சையும் அதனோடு ஒத்தியைபு கொண்ட இன்னொரு உடற்பாகத்தையும் ஒருங்கே பிழிவது.

இரண்டு அமர்வுகளிலும் நான் இரண்டாம் வரிசை (பொதுவாகவே, நான் எந்த விஷயத்துக்கும் அரைமணி நேரம் முன்னமே போய்விடுவேன்). மகாமகோ ஸாம் பிட்ரோடா அவர்கள் ஒன்பதாம்/பத்தாம் வரிசை; மொத்தம் பத்தே வரிசைகள்தாம். சிறிய அளவு ஒருங்கிணைப்புகள் அவை.

சோகம்; ஸாம் பிட்ரோடா அவர்கள் – நாடகங்களில் நடப்பதுபோல, பின் ஸீட்டிலிருந்து ராஹுல் காந்திக்கு எப்போது பேசவேண்டும், நிறுத்தவேண்டும், என்ன பேசவேண்டும், எப்போது சிரிக்கவேண்டும், எப்போது என்ன நகைச்சுவையை உதிர்க்கவேண்டும், எந்தப் புள்ளியை அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டும், எப்போது சட்டை பாக்கெட்டில் உள்ள குறிப்பைப் பார்க்கவேண்டும் என (முன்னமேயே இவர்கள் இம்முறைமைகளை நிச்சயித்திருக்க வேண்டும்) ஏகத்துக்கும் சமிக்ஞை நடனமாகிக்கொண்டிருந்தார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாகவே, பாவம்! (இருந்தாலும், நம் ராஹுல் ஏகத்துக்கும் சொதப்பல்! சில தடவை பகிரங்கமாக ‘ நீ இதைப் பற்றி என்ன நினைக்கிறாய், ஸாம்? நான் சொல்வது சரியா?’ என்றுகூட கேட்டுவிட்டார்!)

சீ என்றாகிவிட்டது எனக்கு. இப்பேர்ப்பட்ட ஸாம், என் இளம்வயது நாயகன், இப்படிச் சீரழிந்துவிட்டாரே என எனக்குக் கேவலமாகிவிட்டது. பின்னர் பொதுநண்பர்களிடம் இதுகுறித்துப் பேசி வருத்தப் பட்டபோது அவர்கள் சொன்னது என்னவென்றால்: ஸாம் அவர்கள், ராஹூல்காந்தியின் பிரத்யேக ஆலோசகர், ஒரு பெரிய குழுவை வைத்து ராஹுலுக்கு இமேஜ் மேக் ஓவர் செய்துகொண்டிருக்கிறார் – இந்தப் படை சிகாகோவிலிருந்தும் தில்லி+மும்பய் நகரங்களிருந்தும் சதா ராஹுல் காந்திக்காக வேலை செய்கிறது என்றும்… ! (ஸாம் அவர்கள் ராஜீவ்காந்திக்கு அவர் பட்ட செஞ்சோற்றுக் கடனை, ராஹுல்காந்தி வழியாக அடைத்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு சரியான பார்வை என நினைக்கிறேன்; ஏனெனில் மற்றபடி புத்திசாலித்தனத்திலும், படிப்பறிவிலும், செயலூக்கத்திலும் குவியம் கொண்ட ஸாம் போன்ற நபர், எக்காலத்திலும் ராஹுல் போன்ற தொழில்முறை திராபைகளுடன் சங்காத்தமே வைத்துக்கொள்ள மாட்டார்கள் எனத்தான் நினைக்கிறேன்)

எது எப்படியோ!

பின்னர் இரண்டொருமுறை ராஹூல்காந்தியின் பேச்சுகளின் சிறுதுளிகளைப் பார்த்து (எனக்கு இன்னொரு, ஒத்திசைவு படிக்க முடியாத ஏழரை வட்டம் இருக்கிறது – அவர்கள் வழியாக வந்தது) திடுக்கிட்டிருக்கிறேன். (யூட்யூப் உபயம்)

சரி.

ஆனால் இந்த ஸ்டெல்லாமேரிஸ் அம்மணிகளுடன் அவர் பேசிய பேச்சில் சில மாறுதல்கள் தெரிகின்றன. அண்டப்புளுகுகளை அஸால்ட்டாக படு தன்னம்பிக்கையுடன் அட்ச்சிவுடுகிறார். இது ஒரு பெரிய மாற்றம்தான். தொடர்ந்து ஆதாரமற்ற அதே பொய்களை எல்லா இடங்களிலும் மறுபடியும் மறுபடியும் தடித்தனத்துடன் கூறிவருவதனால் ஏகத்துக்கும் ஸாம் பிட்ரோடிய பயிற்சி கிடைத்துவிட்டது போலும். மேலும் எந்த கேள்விக்கும் சுற்றிச் சுற்றிச் சீரங்கம் போல – மோதி ஒரு திருடன், அயோக்கியன், மேலாண்மைத் திறமை அற்றவன், என்னைப் போல மூவாயிரம் பெண்கள் மத்தியில் மோதியால் பேசமுடியுமா, ரஃபால் ஊழல், காஷ்மீர் சொதப்பல் என்றே கீறல் விழுந்த ரெக்கார்ட் ப்ளேட் போல பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

ராஹுலுக்கும் நீச சாதுர்யத்துடன் பேசமுடியலாம் என்பது இதில் தென்பட்டது. அதிலும் வட/தென் பிரிவினை வாதத்தை நேரடியாக முன்வைத்துக் குளிர்காய்வது என்பதையும் திறமையாகச் செய்தார். வினை விதைப்பது சுளுவான விஷயம்; ஆனால் வினையை அறுப்பதை இவரா செய்யப்போகிறார், சொல்லுங்கள்?

(என் சென்னை நண்பர் ஒருவரைக் கேட்டேன் – ஸாம் பிட்ரோடா இதற்கும் வந்தாரா, உனக்குத் தெரியுமா என்று; ஆனால் அவருக்குத் தெரியவில்லை; ஒருவேளை ஸாம் இமேஜ் மேக்ஓவர் கல்லூரியிலிருந்து நம் ராஹுல்ஜீ தேர்ச்சிபெற்றுவிட்டாரோ என்ன எழவோ!)

சரி. இந்த எழவைப் போய் நம் ஜெயமோகப் பேராசான் ஏன் மெச்சுகிறார், அதன்மூலம் ஆறுதலைப் பெறுகிறார் என்பது எனக்கு முதலில் புரியவில்லை.

ஆனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – ராஹுலையும் ஜெயமோகனையும் இணைக்கும் ஒரு முக்கியமாக கண்ணி – அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் தன்மையான, ஏகத்துக்கும் அட்ச்சிவுடும் பாங்கு. மாட்டிக்கொண்டாலும் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டேயிருக்கும் மனவலி. ஆகவேதான் ஜெயமோகனுக்கு இது முக்கியமாகப் பட்டிருக்கிறதோ?

சரி. ஜெயமோகன் விஷயத்திலாவது – அவர் ஒரு புனைவு எழுத்தாளர், பொழுதன்னிக்கும் புனைந்துகொண்டே இருப்பார், ஆகவே, அவருடைய ஆயகலைகளில் அட்ச்சிவுடுவதும் ஒன்று என விட்டுவிடலாம்; அவை தொழில்முறைப் புளுகுகள் எனவும் கருதலாம். மேலும் புனைவெழுத்துகளில் (அதாவது அவருடைய அனைத்து ஆக்கங்கள்) அவருக்கு நிபுணத்துவம் இருக்கிறது – அதை அவர் சமயோசிதமாக உபயோகித்துக்கொள்ளும் மூளையுமிருக்கிறது. மெச்சப்படவேண்டிய விஷயம்தான் இது.

…எப்படியும் ஒரு ஐந்து-பத்தாயிரம் பேர் ஜெயமோகனைத் தொடர்ந்து படிப்பவர்களாக இருப்பார்களா? இது ஒரு பெரிய விஷயமுமில்லை, மேலும் இது ஒரு தமிழக் கேளிக்கையின் ஒரு அங்கம், அதனால் பரவாயில்லை.

ஆனால் ராஹுல் காந்தி வாய்கூசாமல் சொல்லும் பொய்கள் – அயோக்கியத் தனங்கள். வெறித்தனத்தின் வெளிப்பாடுகள். படுகேவலங்கள். ஊழல்கள். ஏமாந்தால் நம் தேசத்தையே ஒழித்துக்கட்டிவிடுவார்கள் இந்தப் பேடிகள்.

ஆகவே இம்மாதிரி ராஹுல் இசுடாலிர் வகை உதிரிகள், இந்தத் தேர்தலில் பாடம் புகட்டப்படுவது நடந்தேயாகவேண்டும் என்பது என் அவா.

பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று…

12 Responses to “ராஹுல்காந்தி, ஜெயமோகன்: ஆகச் சிறந்ததாகப் பொய் சொல்வதை விட ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை”

  1. K.Muthuramakrishnan Says:

    It is news to me that Sam Pitroda is the Ghost writer to Rahul.Or a Ghost Maker?


    • He is a well-wisher of the Rajiv family, he is fond of it. I think he saw ‘modernity for India’ thru the youthfulness of Rajiv, and now he conflates it with Rahul. Oh my.

      (I think, at the time when Rajiv was killed by the Tamil Supremacists – he was personally with the family and that incident completely changed his perspective and permanently skewed him, I suppose!)

      He runs an organization which does not only an image makeover for Rahul, but also does brand management for Rahul overseas and inland. They seed and create stories – and plant them in the media among others.

      But, the personal grooming of Rahul to make him a ‘resolute young leader with a mass appeal’ was being done him, and he took an enormous interest in it, for whatever reason! (may be he is continuing with that)

      All for a serial criminal, out on bail! But I do not believe that Sam is a scumbag.

      I think he is caught in a Rashomon effect, and we are too. :-(

      Sometimes, I do not want to even understand things like these modern Karnas. Oh what to do.

  2. yaaru Says:

    atha paarthu yen kaandavureenga ?

    itha paarunga Jolly pannunga, unga rasigargalukku kaattunga –


    • Normally, I do not deal with anonymous 2bit cowards. But let this comment be.

      There is NOTHING wrong in the context of math, about what Modi said in that video, though it is doctored. However, I do hope your math is good enough.

      Get out of your bloody and asinine negativism – and start building something positive. Something at least!

      Or, get the hell out of here.

      Thanks.

      • yaaru Says:

        Super muttu saare!

        Instead of bush beating around Rahul, Jeyamohan – why don’t write something about what your supreme leader did in :

        Education
        Healthcare
        Infrastructure (remember bullet train, smart city BS)
        Employment
        Agriculture
        etc.,

        YOU WILL NOT. Because all he did was BIG ZERO.
        But, I can assure you that, he messed up a lot in all sectors.

        O if I talk about your supreme leader it is negativism, if you talk about all others it is positivity – great saare – Keep going saare, election days very near, let us see எப்படி விரிகிறதென்று – kadavul irukkan saare –


      • Am an atheist. So.

        He is not MY supreme leader. He is a leader, a bloody good one at that, for the WHOLE of India, get it?

        Also I am planning write snippets about ALL the above and MORE by Narendrabhai Modi. The kind of positive things that he has managed to do amidst constraints have been very significant.

        In the meantime, may I request you to please get lost or go back to whichever hole that you came from.

        Or talk based on concrete DATA.

        Thanks much.

  3. Giri Says:

    அவர்தான் உளறுகிறார் என்றால் இந்த பாழும் பத்திரிக்கைகளுக்கு என்ன வந்தது? அவர் உளறுவதை எல்லாம் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஏன் போடுகிறார்கள்?
    ராஹுலுக்கு Jarding என்று எவரோ ஆலோசனை அளிப்பதாக எங்கோ படித்தேன். அவர் யார் என்று தெரியவில்லை


    • ஸ்டீவ் ஜார்டிங்? நன்றாக அறிவுரைக்கட்டும். இரண்டும் திராபை கேஸ்கள்.

      பத்திரிகைகள் பேடிகளால் நடத்தப்படும்போது பப்பரப்பா உளறல்கள்தான் விற்கும் என விலைபோவார்கள். அயோக்கியர்கள்.

      வேறென்ன அவர்களிடமிருந்து எதிர்பார்க்கமுடியும்?

  4. A.Seshagiri Says:

    நான் தொடர்ந்து மதிக்கும் (இப்பொழுதெல்லாம் ஓரளவு தான்) இரு ஆளுமைகளிடமிருந்து வரும் – ஒருவர் ஜெமோ.மற்றொருவர் பி.ஏ.கிருஷ்ணன்- ராகுலை பற்றிய இந்த கணிப்புகள் உண்மையிலேயே வெறுப்பின் எல்லைக்கே நம்மை கொண்டு செல்கின்றன. மோதியை பற்றி என்றால் கண்டபடி வசை பாடுவது அதே நேரத்தில் ராகுலை ஏதோ நம்மை உய்யக்கொள்ள வந்த ‘தேவ தூதர்’ போல வர்ணிப்பது.இதில் பி.ஏ.கே.அவர்களும் மோதிஜி பற்றி கிண்டல் செய்து வந்திருந்த கணக்கு பாட வீடியோ வை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதித்து “புளகாங்கிதமடைந்தார் ” மேலும் மோதிஜியின் “சாதனைகளை” பற்றி விரைவில் பகிர இருப்பதாகவும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.இவர்களால் எப்படி தொடர்ந்து காமாலைக் கண்ணர்களாக ஜொலிக்கமுடிகிறது என்பதுதான் என்னைப்போன்றவர்களுக்கு ஏற்படும் மகா வியப்பு !

    பி .கு: இந்தக் கருத்தை தவறுதலாக தங்களின் வேறொரு கட்டுரைப்பதிவின் விமர்சன இடத்தில் பதிந்து விட்டேன் மன்னிக்கவும்


    • :-( நீங்கள் எவர்மேலும் (என்மேல் உட்பட) அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க முயற்சிக்கவும்…

      ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான். ஜெயமோகன் கேஸ் தெரிந்ததுதான், எக்குதப்பாக மாட்டிக்கொண்டால் ‘ஒரு சராசரி, எளிய குடிமகனாக’ கருத்துகளைச் சொன்னேன் என பேராசூட்டில் தப்பிவிடுவார்.

      இன்னொருபக்கம், இந்த பிஏ கிருஷ்ணன் அவர்களின் அண்மைய செயல்பாடுகளை (துரதிருஷ்டவசமாக) அறிந்து இறும்பூதடைந்தேன்.

      வீழ்ச்சிகள் பலவிதம். எனக்கும்தான். வயதாகிறதே தவிர விவேகம் வரவில்லை.

      ‘எல்லா விரல்களும் ஒரேமாதிரியா இருக்கின்றன?’ எனவொரு தத்துபித்துவத்தை உதிர்த்தபடி போய்க்கொண்டே இருப்பதா, அல்லது ஒவ்வொரு அயோக்கியத்தனத்தையும் நம்மால் முடிந்தவரை எதிர்கொண்டு பொருதுவதா எனத் தெரியவில்லை.

      பார்க்கலாம்.

  5. Gopalasamy Says:

    Jeyamohan is evolving as another Thirumurugan Gandhi. I pray God ( Hindu gods only ) that jeyamohan should not become another Dinakaran. ( Not TTV Dinakaran ). Firstly he blabbered about Hindu religion when somebody questioned about Islam. .Jeyamohan went to Madurai college . Then started praising Thiruma. According to Peraasaan, Thiruma’s popularity is almost equal to MGR’s popularity. Now started praising Rahul Gandhi. Rev. Jeyamohan selected his route.


  6. […] இப்படியென்றால், நம் தமிழக ‘சமூகத்தின் மனச்சாட்சி ஸ்பெஷலிஸ்ட்‘ வகைப் பேராசான்களும் இந்தக் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s