தெருவள்ளுநன்

October 1, 2018

​அம்மணர்களே, அம்மணிகளே!

தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள்.

…ஏற்கனவே ஜெயமோகன் — எனக்குப்போய் வாழ்த்துரை, அணிந்துரை, அணிந்துவிட்டுத் தூக்கிப்போட்ட உறை என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் துர்பாக்கியத்தில் இருக்கிறார்; இந்த எழவழகில்,  ஒரு ஆசாமி – ஜெயமோகன் தளத்தில் வந்துள்ள ஒரு பொருளாதாரக் கட்டுரையவியல் சுட்டி  ஒன்றை அனுப்பி,  அதிலுள்ள இரண்டு திகில் கொடுக்கும் கருத்துகளை மேற்கோள் மட்டும் காட்டி (+ அது இல்லையே, இது இப்படியா?) அனுப்பியிருக்கிறார், என் கர்த்து வேண்டுமாம்.

ங்கொம்மாள, போங்கடா! பொழிப்புரை பழிப்புரை புகழுரை எல்லாம் நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

உங்களுக்குப் படிப்பு(!) இருக்கிறது. இணையம் இருக்கிறது. எனக்கிருக்கும் கிழட்டு மூளையின் அளவில் குறைந்தது 100%ஆவது உங்களிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஸ்ரத்தை எனும் ஊரில் பிறந்திருந்தால், கண்டவர்களையும் கொம்பு சீவி வளர்க்கமாட்டீர்கள். உங்களைப் போன்ற கருத்துலகச் சோம்பேறிகளால்தான், நிரந்தரக் கடன்வாங்கிக் கலாச்சாரவாதிகளால்தான் நமக்கு இந்த நிலைமை.

நீங்கள் தப்பும் தவறுமாக எழவெடுத்த தங்க்லீஷில் அஞ்சு வரி எழுதுவீர்களாம். நான் முனைந்து ஆயிரம் வரி, என் சுளுக்குத் தமிழில் எழுதவேண்டுமாம்.

நல்லா கீதுடா வொங்க ஓள்பஜன! அதுவும் நல்ல, பிடித்தமான, ஆய்ந்தறியப்பட்ட விஷயமாக இருந்தால் பரவாயில்லை. ஏதோ மசுத்துக்குக் கண்ட குப்பைகளையெல்லாம் அனுப்புகிறீர்கள். எனக்கு இது தேவையா? நீங்கள் நேரடியாக, அவருக்கே ஏன் எழுதிக் கேட்கக்கூடாது?

இன்னொரு முறை இப்படி எழுதாதீர்கள். ஏன், எழுதாமலேயே இருந்தால்கூட இன்னமும் நல்லது.

​அப்படியே எழுதவேண்டும் எனவொரு ஏடாகூடத் தினவு ஏற்பட்டால், கண்டிப்பாக, “இனிய பயம், …” அல்லது ‘கசப்பு ராமம், …’ என்று ஆரம்பித்துத்தான் எழுதவேண்டும், சரியா?​ இல்லாவிடில், வ்வோத்தா, வூட்டுக்கு வந்து ஒதிப்பேன். நன்றி.

..ஹ்ம்ம். எது எப்படியோ, க்கு மேல் வேண்டவேவேண்டாம். ஏற்கனவே ஒரு ஸவுதி அரேபிய ஜிஹாதி அன்பருடன் ஏகத்துக்கும் மதமாற்ற ரகளை ஒன்று, சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாஷால்லாஹ்.

இப்படிப்பல திரிகள். வெடிகுண்டுகள். அயர்வாக இருக்கிறது.

-0-0-0-0-0-

ஏனெனில் தமிழச் சூழலில் வழமையான – அதிசராசரித்தன அயோக்கியங்களையும் அழிச்சாட்டியங்களையும் — பார்த்து, மனம்வெம்பி, பொறுக்கமுடியாமல் வள்வள்ளென்று விழுந்து, அற்ப தெருமுக்குத் திராவிட ரௌடி வல்லுநர்களைப் போல, ஒரு தெருவள்ளுநன் ஆகிவருகிறேன் எனப்படுகிறது. சராசரித்தனங்களைப் பார்த்துப் பார்த்து ஓலமிட்டு அவர்கள் ஜோதியில் கலந்து நானுமேகூட ஒரு அலக்கியக்கார அறிவுஜீவியாக, கண்டமேனிக்கும் கருத்துதிர்க்கும் முடிக்கிள்ளிச் சராசரியாக மாறிவிடுவேனோ எனப் பயமாகவும் இருக்கிறது.

அதே சமயத்தில் — திராவிடத்தால் துப்புரவாகக் காயடிக்கப்பட்ட தமிழச் சூழலில் – அதிசராசரியாக இருந்துகொண்டு –>>  விட்டேற்றி இலுப்பைப்பூக்களாக ஒரு துறையில்  நுழைந்து –>> ஆலையில்லா ஊர்களில் உடனடி அடாவடியாகத் துறை வல்லுநர்களாக மாறி –>> பின்னர் அதிரடியாக துரை வல்லுநர்களாகப் பரிமாணங்களை விரித்துச் சர்வாதிகாரம் செய்யும் துரைமார்களைப் பார்த்தால் ஆச்சரியம் தாளவில்லை… என்ன செய்வது சொல்லுங்கள்… :-(

ஆனால் – ஒருவருமே உருப்படியில்லை எனச் சொல்வதற்கும் இல்லை – ஏனெனில் விமலாதித்த மாமல்லன்கள், …, …, சு வேணுகோபால்கள் (கடைசி ஆசாமியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு பாஸ்டன் பாலா  என்கிற பெயரில் சந்தேகாஸ்பதமான முறையில் வளையவரும் அன்பருக்கு நன்றி – சுவே நான் படித்த ஒன்றிரண்டு விஷயங்களில் எனக்கு ஆர்வத்தைத் தருகிறார்) போன்றவர்கள் இருக்கிறார்கள் (அவர்கள் அப்படியே தொடரட்டும், ப்..ளீ…ஸ்…); இவர்கள் அதிகம் (நானறிந்த வரையில்) எழுதுவதில்லை என்றாலும்; மேலும் சிலர் (ஏன் பலரேகூட!) அப்படியிப்படி என இருக்கலாம். ஆனால் எனக்குத்தான், தெரிந்துகொள்ளும் ஆவலும்கூடப் போய்விட்டது. இருந்தாலும்

ஐயன்மீர், நம் வாழ்க்கையைக் குறித்த ஒரு அமோக உண்மை என்னவென்றால் – ஒவ்வொரு மணித்துளியிலும் நம் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது… ars longa, vita brevis… ஆகவே. (சர்வநிச்சயமாக ஜெயமோகன் தளத்தில் வந்தது என்பதற்காகவே, ஒரு விஷயம் முக்கியமற்றதோ, நன்றாக ஆய்ந்தறிந்து புனையப்படாதவொன்றோ அல்ல, போங்கடா! திடுக்கிடும் வகையில், தப்பித் தவறி, அது சரியாகவே இருந்துவிடவும்கூடும், சனியன். என்ன செய்வது சொல்லுங்கள்…)

…இவையெல்லாவற்றையும் விட – என்னுடைய உயிரினும் உயிரான நகைச்சுவை(!) உணர்ச்சியும் குறைந்துகொண்டு வருகிறது; எனக்கு இது தேவையா? (ஏழரைகளான உங்களுக்கும்தான்!)

மேலும் இந்த அலக்கிய விமர்சனம் வகையறா சாமியாடல்களும், பொய்மைகளும், அளந்துவிட உதவும் அளவுகோல்களும், அளப்பரிய அட்ச்சுவுடல்களும்  – பொதுவாகவே எனக்கு ஒத்துவரமாட்டா.

ஒரு மசுரும் தெரியாமல் உளறிக்கொட்டிக் காப்பியடித்துக்கொண்டே – சிடுக்கல் மொழியையும், தேய்ந்த வழக்குகளையும், இடியாப்ப வகையறா நூட்ல்ஸ் சிந்தனையையும்(!), தத்துப்பித்துவத்தையும், நைந்த சொற்றொடர்களையும், மாரடைப்பு வரவைக்கும் உவமான / உவமேயங்களையும், கண்ட மேனிக்கும் பெயருதிர்த்தல்களையும் வைத்துக் கொண்டு மட்டுமே  – ஒருவன், நம் தமிழ்ச்சூழலில் அலக்கியக்காரனாகவோ, அலக்கியவிமர்சகனாகவோ ஏகத்துக்கும் மினுக்கிக்கொண்டு பவனி வரமுடியும். (நான் நினைத்தால், என்னால் சர்வநிச்சயம் முடியும் – தனித்துவம் கினித்துவம் என்றெழுதியே ஆயிரம்வார்த்தை நீளப் பதிவுகளைத் தொழில்முறையில் உருவாக்கமுடியும்.

கண்பெரிசு என்று ராமாயணத்தை (சீதையை முன்வைத்து) ரேம்போயணமாக எழுதவும்தான்!

ஜெய்ஸ்ரீ ரேம்போ, சிவசம்போ!!

வாழ்க வெண்முரசு! வளர்க (கொஞ்சம் குறைவாக) வெண்முரசு!!

-0-0-0-0-

சரி. என் அன்புக்கும் மரியாதைக்கும் உரித்தான ரேன்டல் மன்றொ அவர்கள், அலக்கியத்தையும் அலக்கியவிமர்சனத்தையும் கிண்டல் செய்யும் பாங்கைப் பாருங்கள்…


:-) https://xkcd.com/451/

—-ஆனால் ஒரு விஷயம்: இந்த அரைகுறைத் துறையான ஸோஷியாலஜி எழவில் ஒன்றும் புரியாமல் பேசிக்கொண்டே பணிமூப்புகூட அடைந்துவிடலாம் – ஆக, இதுவும் இலக்கியவிமர்சனம் வகைப் பம்மாத்துதான். (அதனால், அதற்கு 4 நிமிடம் என்பது எனக்கு ஒத்துவராது – அது ஆகத்தான் இருக்கவேண்டும்)

சரி. தமிழ் இலக்கியவுலகம் என்பது (வெகுஜன அற்பத்தனமாக இருந்தாலும் சரி, குறைஜன மேட்டிமை பம்மாத்தாக இருந்தாலும் சரி) பொதுவாகவே பிரமிக்கவைக்கும் ஒரு அரைகுறையுலகம், வேறென்ன சொல்ல.

இந்தத் தமிழ் எழவுகளுக்கு (=திருட்டிலக்கியம், திருட்டுப்படம், திருட்டிசை) அப்பாற்பட்டு, ஒருவனுக்கு உலகப்பார்வையிருந்தால், அவன் சர்வமுட்டாளாக + கேனக்கிறுக்கனாக (=என்னைப்போல) இருந்தாலொழிய, அவன் தமிழ் பக்கமே, சென்டிமென்டலாகக்கூட வரமாட்டான். ஆகவே, ‘மென்டலாக இருந்தால் வருவான்’ என்பது ஆங்கே பொதிந்துள்ளது என்பதைக் காணீர்!

-0-0-0-0-0-

என் பிரச்சினையும் (ஆகவே உங்கள் பிரச்சினையும்) எனக்குப் புரிகிறது.

எமக்குத் தொழில் எழுத்தோ பேச்சோ – சர்வ நிச்சயமாக அல்லவேயல்ல, கவலையே படாதீர்கள்!

என்னுடைய வரித்துக்கொண்ட தொழில் பொதுவாகவே பொறியியல், அறிவியல், பாரதவியல், கரங்களினால் செயல்படுதல் போன்றவற்றுக்குள் உள்ள தொடர்புகளில் மையம் கொண்டுள்ளது; தொழில்முனைவுகள்,  விதம்விதமான யந்திரங்களை/மாதிரிகளை வடிவமைப்பது, மின்னியல், தோட்டவேலை, கணிநி எனக் கோணாமாணாவென, ஆனால் விகசிக்கவைக்கும்படிக்கு விரிவது.

இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால் –  இவை போன்ற விஷயங்களில் சராசரித்தனத்தில் அமிழ்ந்து கிடக்கவே முடியாது – என் சராசரித்தனத்தின் விளைவுகள் பாதகமாக இருந்தால், அவை ப்ரத்யட்சமாக எனக்குத் தெரியவரும், என்னைத் திருத்திக்கொள்ளமுடியும். சாதகமாக இருந்தால், அவை மிளிரும். மேலதிகமாக எத்தனங்களில் (எத்து வேலைகளிலல்ல!) ஈடுபடலாம்.

சுய ஏமாற்றல்களுக்கு, குளுவான்களுக்கு இன்பலாகிரி தருவதற்கு, குழுமங்களில் குசுவிட்டுக்கொண்டு அலைவதற்கு, முகர்ந்துபார்த்து இறும்பூதடைவதற்கு என இங்கே இடமில்லை.

Engineering is a tough, but, lovable mistress, yes!

+ வரலாறு, மொழியியல், படிப்பித்தல்(!), திரைப்படம், இசை, அலக்கியம் மண்ணாங்கட்டி தெருப்புழுதிகளில் எனக்கு நெடு நாட்களாக( >> 45 வருடங்களாக) ஆர்வம். அவ்வளவுதான். நிறைய எழுதுவேன், ஆனால் அவற்றில் 5%மசாலாவைப் பதித்தால் அதிகம். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழப் படிக்கும்/புரட்டும் 2-3 புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் பிறகுறிப்புகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்காக எழுதிவருபவன். அவ்வளவுதான்.

ஆக – அலக்கியம் மசுரென்று நான் தமிழ் பக்கம் போகாமலிருந்தால், அது எனக்கும் நல்லது, பிற அனைவருக்குமேகூட!  ஏனெனில் – இலக்கியம் போலல்லாமல், அலக்கியம் என்பது வேறு – குறிப்பாக, தற்காலத் தற்குறித் தமிழ் அலக்கியம் என்பது தடிமன் தோல் ஜந்து, அதனைத் திருத்தவே முடியாது; அப்படி முயன்றால், மேலே விழுந்து பிடுங்கும்வேறு, சனியன்.

‘Never try to teach a pig to sing; it wastes your time, and it annoys the pig.’ (1973, Robert A Heinlein, Time Enough for Love)

-0-0-0-0-0-0-

ஆக -வெகுயோசனைக்குப் பிறகு – எஸ்ராமகிருஷ்ண பினாத்தல்கள், சாருநிவேதிதப்  புளுகுகள் – எனத் தலா ஒன்று  (இவை இரண்டையும், இரண்டு நாட்கள்முன் ஒரு மேலோட்டமான பார்வை பார்த்தபின் வந்த சிரிப்பு அடங்கவில்லை, இவர்கள் உலகத்தரம் வாய்ந்த கேளிக்கைக் கோமாளிகள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை!) என சிறு காட்டுரைகளை எழுதியவுடன்  – இந்தத் தமிழலக்கியச் சகதியை விட்டுவிட்டு மீள்வதாக ஒரு எண்ணம். ஆக, சராசரிகளுடன் மாரடிக்கத் தேவையேயில்லை. எந்த அலக்கியக் காரர் அருகிலும் போவதாக இல்லை, அவர்கள் தளங்களுக்குக் கூட. (யாரும் என்னை – இந்த எழவுகளைப் படிபடி எனத் தொந்திரவு கொடுக்கவில்லை – நான் விட்டில்பூச்சி, அதுவும் ஸ்லோ ஸ்பீட் எழவில் பறப்பவன். அவ்வளவுதான். ஆக – சுடர்விடும் விளக்கொளி என நினைத்துப் போய்ப்பார்த்து, அது வெறும் சைனாக்கார அற்ப ஜோடனை விளக்கு எனத் தெரிவதற்குள்… ஐயகோ!)

வுட்டா போதுண்டாப்பா!

மீட்சி. இப்போது, எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விடுதலை உணர்ச்சி என்பது தொடர்ந்து என்னிடம் இருக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்தில், அப்படியொரு தமிழிலக்கிய அரிப்பு ஏற்பட்டால் – எனக்கு என் பாரதி, புதுமைப்பித்தன், சுந்தராமசாமி, திஜா, மௌனி, கரிச்சான்குஞ்சு, தருமுசிவராமு, அசோகமித்திரன், குபரா, ஜிநாகராஜன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன்கள் போன்ற அந்தக் காலங்கள் (+ வெகுசில தற்கால ஆசாமிகள்) போதும் – என் (இனியிருக்கும்) வாழ்நாட்கள் – நம் தமிழைப் பொறுத்தவரை –  இவர்கள் போன்றவர்களின் எதிரொலிகளில் அடங்கினால் போதும். எப்படியும் பின்புலத்தில், கம்பனும் ஆண்டாளும் சைவக்குரவர்களும் இருக்கிறார்கள்.

குறையொன்றுமில்லை கோவிந்தா. ஆகவே கண்டகழுதைகளையும் பார்த்துக் குரைக்கவேண்டியதில்லை. ஆக, அடிப்பொடி சராசரிகளுடன் மாரடிக்கவும் தேவையேயில்லை.

ஏனெனில் வெளியுலகத்தில்  – அழகுகள் கொட்டிக்கிடக்கின்றன, அற்புதங்கள் விரவியிருக்கின்றன – அதாவது திராவிடத்தமிழக் கலாச்சாரத்துடன் தொடர்பற்ற, ஆகவே மகோன்னத ஆழிகளின் கரைகளில் உட்கார்ந்துகொண்டு அசைபோட, சான்றோர்களின் மடியில் அமர்ந்து அவர்கள் பாலைப்பருகவென – – பலப்பல இருக்கின்றன; தற்காலத் தண்டக்கருமாந்திரத் தமிழில் என் வாழ்நாட்களை (+முடிந்தால் உங்கள் வாழ்நாட்களையும்) விரயமாக்கக்கூடாது. அவ்வளவுதான்.

நன்றி.

“கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும்,  குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
– – சுப்ரமண்ய பாரதி

 

15 Responses to “தெருவள்ளுநன்”

  1. JeMoFan Says:

    omg 👿 r u callling jemo, pig? 😡


    • அம்மணீ! என்னை மிகவும் தொந்திரவு செய்கிறீர்களே!

      நீங்கள் இதையெல்லாம் முழுவதும் படிப்பீர்கள் என்பதே எனக்கு ஒருபக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.

      ஆனால் உங்களைப் போன்றவர்களை, ஒரு தற்கொலைப்படை போல ஜெயமோகன் (தன்னை அறியாமலே?) உருவாக்கியிருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

      அம்மணீ – நீங்கள் சிறுசேரி தகவல்தொழில் நுட்ப டப்பா நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆகவே தயவுசெய்து அலுவலக நேரத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்க முடியுமா?

      என்னை மன்னித்துவிட்டு அகலமுடியுமா? தயவுசெய்து?? :-(

      • JeMoFan Says:

        தர்கொலைக்கு தூண்டுகிறிர்கள். சட்டப்படி அது குட்ற்றம். புகார் கொடுக்கப்போகிரேன்


      • சர்த்தான் போம்மே! பூச்சாண்டியா காட்றே?

        அம்மணீ, தாங்களும் தங்களுடைய மேன்மைவாய்ந்த தப்பும்தவறுமான ஆங்கிலத்தாலும் தமிழாலும் தங்க்லீஷாலும் இங்கிழாலும் + அலுவலக நேரத்தில் சமூகப்பணியாற்றும் பண்பாலும் — என்னையும் தற்கொலை முயற்சிக்குத் தூண்டுகிறீர்கள்.

        ஆக – நீங்கள் புகார் கொடுத்தால், நானும் பூவையரினத்தவரான உங்களைக் குறித்து பூம்புகார் கொடுப்பேன். என் ஆசான் எனக்கு அப்படித்தான் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

        ‘ஜெயனுண்டு பயனில்லை மனமே!’ என அன்றே ஜெயமோகன் குறித்துச் சொன்னானல்லவா பாரதி?

        தற்கொலை கிற்கொலை எனப் பேசுகிறீர்கள். எதற்கும் உங்கள் ஆசானிடம் அறிவுரை கேட்டுக்கொள்ளவும்; அவரும் – தானும் ஒரு பொதுவாசகனான அவருக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், தற்கொலையில் இறந்த முன்னனுபவம் இல்லாமல் இருந்தாலும் அவருடைய மேலான கருத்துகள் என முழ நீளத்துக்கு அறவுணர்ச்சியுடன் அட்ச்சிவுடுவார்.

        ஒட்டுகேஜ் எழவாக – ‘தற்கொலையின் மீளுருவாக்கப் பொருளாதாரம் – ரகுராம்ராஜனின் நிந்தனைகள்’ என அந்த பாலஜெயமோகசுவாமிகளும் திருவாக்கு அருளுவார்.

        அதன்பின் ஜெயமோக பதிலுக்காக இறப்பதா அல்லது, நான் எழுதுவதை நீங்கள் திரித்துப் புரிந்து கொண்டதற்காக இறப்பதா என முடிவு செய்துகொள்ளவும்.

        எப்படியும், உங்கள் முடிவுக்கு என் வாழ்த்து.

        இத்துடன் முடித்துக்கொல்கிறேன்.

        நன்றி. (இது பன்றியல்ல; இரண்டுமுறை படித்துச் சரிபார்த்து ஹலால் முறையில் கொல்லவும்)

  2. Swami Says:

    तथास्तु!
    Amen!!


    • புறமுதுகு, வேறேன்ன சொல்ல!

      அம்மணி ஜெமோமின்விசிறி அள்ளி வீசும் சுழற்காற்றுப் புயலை என்னால் தாங்கமுடியவில்லை.

      எங்கோ மணம் பறக்கிறது. பயமாக இருக்கிறது. ஓடிவந்து என் கையைப் பிடித்துக்கொண்டு இந்தச் சாலையைக் கடக்க உதவமுடியுமா, ப்ளீஸ்? குப்பைத் தூசி என் கண்ணை மறைக்கிறதுவேறு!

  3. SB Says:

    Sir,
    We value your pieces immensely and thank you for time spent to give us that genuine laugh including this latest piece . For you writing is a precious gift and it has become so effortless . Therefore, please bear with us . Your readers (7.5) should refrain from posting all stupid queries and should only enjoy what you give them . We got it. However, please respond only to queries which you feel genuine (where efforts given by the reader to bring out a different perspective) and discard rest of all (if at all you get them all).

    Thanks for the valid tips .

    Regards
    SB

  4. SB Says:

    On a lighter note..What would happen if one attends to Charu’s Cinema Factory lectures ?

  5. A.Seshagiri Says:

    ” (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல”
    சார்,பூவண்ணனார் இப்போதெல்லாம் தங்களின் மதிப்பிற்குரிய பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் முகநூல் பக்கங்களில் தவறாது ‘சிலம்பம்’ ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதை பணிவுடன் தூரத்தில் இருந்து தெரிவித்துக்கொள்கிறேன். {இப்பெல்லாம் கிட்ட நெருங்கவே பயமாக இருக்குப்பா :-) }


    • ஐயா, பயமோ நடுக்கமோ வேண்டாம். நடுங்கவேண்டியவன் நான் தான்.

      மேற்படி பாலஜெயமோகஸ்வாமிகளின் பொருளாதாரக் காட்டுரையைப் பற்றிக் கருத்துகேட்டவர், நீங்களல்லர் என நினைக்கிறேன்.

      முடிந்தபோது தொடர்பில் இருக்கலாம், ஒரு பிரச்சினையுமில்லை. கவலை வேண்டேல்.

      பூவண்ணன் அவர்கள் தொடர்ந்து கதக்களி ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி. பாவம், என்ன இருந்தாலும் பாரத சேனையில் பணி புரிந்தவர், ஆகவே அவரை நான் மதிக்கிறேன்.

      சிலசமயம் (இது சர்வ நிச்சயமாக, ஒருமாதிரி தற்கொலை உணர்ச்சிதான்!) அவரை நினைத்து ஏங்குகிறேன்.

      ஆனால் — எது எப்படியோ – உங்கள் ஆசான், உங்கள் மூடுபனி. அலுப்பு. என் விலகல். நிம்மதி.

      நன்றி!

  6. Kannan Says:

    லைன் கிளியர், தேங்ஸ்.

    அடிச்சுவுடு சிந்தாமணி ஆறாம் புத்தகத்தை ஆரம்பிக்கப்போகிறேன், முதல் அஞ்சு பாகத்தை கடைசில எழுதுவேன்.

    தினமும் பத்து அத்தியாயம் எழுதி பிரிட்ஜில் வைத்துவிடுவேன், குவாலிட்டி எல்லாம் பாக்கக்கூடாது, எனக்கு வேற வேலைகள் இருக்குது. குறிப்புகள் கிடையாது. தப்பு எல்லாம் நீங்கள் சரி பாத்துக்கணும், ஆனா இருக்காது, because I said so.

    கதை பற்றி ஒரு சின்ன குளூ : சிந்தாமணி ஸ்டோர்ல மளிகை சாமான் வாங்கறதுதான் தீம்.

    wish me good luck. :)


    • … non-spilling bell சிரிப்புமணி! யோவ்! எவ்ளோபேர் இப்டீ கெள்ம்பிக்கீறீங்கோ!

      :-) உங்களைப் போன்ற ஆசாமிகளெல்லாம் அலக்கியம் செய்யாமல் என்ன முடியை அகற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?

      ஸீரியஸ்ஸாகச் சொல்கிறேன் – நீங்கள் என் நகைச்சுவை அதுஇது என்று ஸீரியஸ்ஸாக எழுதக் கூடாது?

      தற்குறித் தமிழலக்கியம் கொஞ்சம், உறவுக்காரர்களுக்குச் சொல்லியனுப்பிவிடவேண்டிய நிலையில் இருக்கிறதே!

      இதேபோலத் தொடர்ந்தால், நானே ஆசானுக்கு ‘என் வீட்டில் கரப்பான்பூச்சித் தொல்லை அதிகமாகிவிட்டது. அதனை காந்தியத் தாத்தா வழியில் முறையிட்டு அகற்ற, காந்திஜெயந்தியாகிய இன்று, தாங்கள் அருள்பாலிக்கமுடியுமா’ எனக்கேட்டு பொதுவாசகர்களுக்கான முறையில் நானறிந்த வாழ்க்கைச்சூழலில் இவை என்ன பொருள் எப்படிக் கொள்கின்றன என்று விளக்கமுடியுமா என ஒரு கோரிக்கை வைக்கலாமா எனவொரு எண்ணம்.

      நீங்கள் என்ன நினக்கிறீர்கள்?

      • Kannan Says:

        அடுத்து திறனாய்விலும் இறங்க உத்தேசம்.

        டைட்டில் , டெம்ப்பிளேட் எல்லாம் ரெடி. 

        I am the Best and you are NOT

        முதல் போணி 

        Gone with the wind, Margaret Mitchell

        இந்தம்மா என்னவோ எழுதிருக்கு, அந்த காலகட்டத்தில அது முக்கியம்.
        ஆனாலும் அவ்வளவு முக்கியமில்லை. அதனால யாரும் இதை படிக்க வேண்டியதில்லை.

        The Man, Irving Wallace

        ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியாவதைப்பற்றி கதை. நானே 
        எழுத்துவதாக இருந்தேன், இந்தாளு எழுதிட்டான். ஆள் வேற கொஞ்சம் ஒல்லி. இருந்தாலும் நாந்தான்… you got it.

        எப்படி இருக்கு ?


      • ஷப்பாஷ்! ஸர்யான போட்டீ! ;-)

        மேலே, திரைக்கதை? பொருளாதார, அற அறிவுரைகள்??


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s