கங்கா மாதா, ஸ்வாமி ஸானந்த், தொடரும் நீரோட்டம், சமையலறை – சில குறிப்புகள்

October 2, 2018

என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன்.

செப்டெம்பர் 30 அன்று இந்தச் செய்தி வந்தது. அதாவது நவம்பர்9க்குப் பின் அவர் குடிநீர்கூட அருந்தப்போவதில்லை என்று – Final Letter to Prime Minister – 30.09.2018 CE

-0-0-0-0-0-

… மேலும் எனக்குப் பிடித்தமான பள்ளிகளில் ஒன்றில் இருந்து இந்தச் செய்திவேறு.

https://www.change.org/p/prime-minister-of-india-shri-narendra-modi-ji-save-unique-sacred-ganga-life-of-swami-sanand-seeking-national-mission-on-aviral-ganga

பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது; ஸ்வாமிஜி அவர்களை மிகவும் பிடிக்குமே, வரலாமே, மூன்று மணி நேரம்தானே என்று. பெங்களூர் பாபுஜி சிலையருகில் மௌனமாகத் தட்டிகளைத் தூக்கிக்கொண்டு நிற்கலாம் என்று.

ஆனால் எனக்கு இந்தத் தட்டிமுதல்வாதம் ‘symbolic protest’ ஒத்துவராது; மேலும் பெங்களூர் எம்ஜி (அதுதான் மஹாத்மா காந்தி) சாலையில் நடைபயிலும் சொகுசு ஆசாமிகளிடம், தகவல்தொழில்நுட்ப அரைகுறைகளுடனும் எனக்கு எடுத்துக்கூற என எதுவும் இல்லை.

அவர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படவேண்டும் எனவொரு நமைச்சலும் இல்லை.

(ஆனால் எனக்குத் தெரியும் – இந்தப் பள்ளியிலிருந்து ஒரு பெரிய குழு தில்லி, ஹரித்வார் எனச் சென்று – ஸ்வாமிஜி தன் உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள பெரும் முயற்சிகளைச் செய்தது என்று, இருந்தாலும்…)

நாம் மிகவும் மதிக்கும் ஒருவர் – நம் முன்னால் அநியாய மரணமடைந்தால், அது நமக்கு மனக்கிலேசத்தைக் கொடுக்கும். ஆனால் இயல்பான வாழ்க்கையில், அதுவும் கடந்துவிடும். வேறென்ன சொல்ல. :-(

நீரோட்டம் தொடரும்.

-0-0-0-0-

பொதுவாகவே – நான் தட்டியைத் தூக்கிக் கொண்டு டீவி கேமராக்களுக்காக அலையும் ப்ரொட்டெஸ்ட்வாலா பேடித்தனத்தை வெறுப்பவன்.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு அது இது என பம்மாத்துக்காட்டி வளர்ச்சிக்கான எத்தனங்களுக்கு முட்டுக்கட்டை போடும் சொகுசுத் தலைவர்களை, இரட்டைவேடதாரி அயோக்கியர்களை அடிமனதிலிருந்து ஆழ்ந்து வெறுப்பவன்; அவர்கள் பின்னே விட்டில்பூச்சிகளாகச் செல்லும் சிலபல, அறியா பாமர மக்களையும் பார்த்துப் பச்சாத்தாபப் படுபவன்.

ஒரு அரசு அமைப்புக்கு இருக்கக்கூடிய பலப்பல மேலாண்மை ரீதியான பிரச்சினைகளை நேரடியாக உணர்ந்தவன். ஏனெனில் அரசு இயந்திரத்துடன் ஓரளவு சுமுகமாகவே வேலைசெய்துள்ள எனக்கு – சிலபல தொழில்முனைவுகளில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாகவும், ஊத்திமூடியும் இயக்கி(!)யுள்ள எனக்கு – சும்மனாச்சிக்கும் – எனக்கு வாய் ஒன்று இருப்பதினாலேயே ‘வோத்தா, இந்தாடா, எங்கர்த்த பிட்ச்சிக்கினு ஓட்றா‘ எனச் சொல்லிப் பம்மாத்து வேலைகளில் ஈடுபடப் பிடித்தம் இல்லை.

இருந்தாலும் கங்கை, நம் புராதனக் கலாச்சார ஊற்றொழுக்களில் ஒன்று என்பதிலும் ஆகவே அதன்மீது(ம்) மரியாதையோடு இருக்கவேண்டும் என ஒரு அவா இருக்கிறது என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

ஆக, ஸானந்த்ஜி அவர்களின் நிலையைக் குறித்துக் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது. உணர்ச்சிக் கலவைகள். அறிவுபூர்வமான சிந்தனைக்கும் உணர்ச்சிவசப்படலுக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழித்தல்கள்.

ஒரு பொதுவாசகனாக, சாமானியனாக, சாதாரணனாக இப்படிக் கருதவில்லை. விஷயங்களை அறிந்துதான் இப்படி, மன்னிக்கவும்.

ஆகவே, நரேந்திர மோதி அரசிற்கு இருக்கும் கெடுபிடிப் பிரச்சினைகள் எனப் பலப்பல இருந்தாலும் – ஸானந்த் ஸ்வாமிஜி இறப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ – கங்காஜியைக் காப்பாற்ற எத்தனங்களில், மோதி ஈடுபடுவார் என ஒரு நம்பிக்கை.

பார்க்கலாம், கங்கை எங்கே போகிறாள், எப்படி விரிகிறாள் என்று…

இன்று பாபுஜி அவர்களின் பிறந்த நாள். ஆகவே அவருடைய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்தை மறுபடியும் படிக்கவேண்டும்.

அதற்குமுன் மூன்று மணி நேரம் தோட்டவேலை செய்து என்னைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்.

சரி.

அதற்குமுன் சமைக்கலாம் எனப் புறப்பட்டால் – துவரம்பருப்பு(ம்) ஒரு துளிக்கூட இல்லை. என் சமையலறை மேலாண்மையின் லட்சணம் இவ்வளவுதான். உலகத்திலேயே திட்டமிடுதலில் சிக்கல் நிறைந்தது, இந்த சமையல் செய்வதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு அப்பாற்பட்டு இருக்கும் மகாமகோ சமையலறை மேலாண்மை விஷயம்தான்.

அடுத்தது – இந்த ஜெயமோகவிசிறிகளுடன் தட்டாமாலை சுற்றுவது. எப்படிப்பட்ட முட்டாக்கூ அரைகுறைகளை பெற்று வளர்த்தெடுத்திருக்கிறார் இந்த ஜெயமோகன்! கர்மவினைப்பயன் என்பது ஒரு அடாவடி வில்லன், சரிதான்.

ஐயோ! துவரம்பருப்பு!!

சரி. ஓடு. பக்கத்துக் கிராம மளிகைக்கடைக்கு.

லௌகீக வாழ்க்கையின் சௌகரியங்களில் ஒன்று – ஸானந்த்ஜி இறந்துவிடுவாரோ என அல்லல் பட்டு மனவுளைச்சலில் வாடவேண்டியதற்கு நேரமில்லாமல் – அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்னடா செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கலாம்…

அந்தக் கடையில், காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்.

நன்றி!

குறிப்பு: அடச்சே! இதை ஒரு அலக்கியச் சிறுகதையாக எழுதியிருக்கலாமோ?

ஒன்று – அப்படியே விடலாம்;  சிறுபத்திரிகை எழவு எதற்காவது ஓராண்டுச் சந்தா(!) கட்டினால் உடனே அதனை ‘இருப்பின் அவஸ்தை’ என்கிற மாதிரி பதிப்பித்து விடுவார்கள்.

இரண்டுஇன்னமும் அலக்கிய மஸாலா சேர்த்து – ஆனால் கடைசியில் நடந்ததைக் கொஞ்சம் மாற்றி, நான் எம்ஜி ரோட் சென்று வீரத் தட்டிகளைச் சுமந்து, தீரப் போராட்டம் செய்து, காவல்துறை தடியடியில் மண்டை உடைந்து ரத்தம் ஆறாகப் பெருகுவதாகவெல்லாம்…

…பிறகு இறந்துகொண்டிருக்கும் தருணத்தில்  என் மகன், அழுதுகொண்டே, என் வாயில் வீட்டிலிருக்கும் கங்கைச் சொம்பு நீரை விடுவதாகவெல்லாம்….

…அவன் விட்டுக்கொண்டிருக்கும்போதே,  நான் ‘கங்கா மாதா கீ ஜெய்’ எனச் சொல்லிக்கொண்டே உயிரை விடுவது போலவெல்லாம்

எழுதும்போதே எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, என்ன செய்வது சொல்லுங்கள்… :-(

–0-0-0–

“டேய் ராம், அடுப்புல ஏதோ கருகற மாறி இருக்கே!”

“இல்லயே தேனே, நான் அடுப்புக்கு பக்கத்ல தான இருக்கேன்!”

“பொய்சொல்லாத; நீ லேப்டாப்புல ஏதோ நோண்ட்ற, சரியா?”

“இல்லை கண்மணீ! எதோ விபஷ்ஷனா தியானத்தில் இருந்தேன், ஆனா பானா. அதனால அடுப்புல எரியறது தெரீல… அவ்ளோதான்! காந்தீ பொற்ந்த நாள்ல நான் பொய் சொல்வேனா?”

“சரி, வாய்கூசாம புளுகறதுல வொன்னோட ஆசானுக்கு எண, நீதான்! ஒழி.”

பின் தொடரும் குரல்களின் நிழல்களோடு சேர்த்து அவற்றின் குரல்வளையையும் ஊக்கபோனஸாக நெரித்துவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

சுபம்.


பின்குறிப்பு: ஸானந்த்ஜி இம்முறை தப்பினால், அவசியம் அவருடைய கயா பர்ணசாலைக்குப் போய் அவருக்குத் தொந்திரவு கொடுக்கவேண்டும் எனவொரு நப்பாசை.

 

18 Responses to “கங்கா மாதா, ஸ்வாமி ஸானந்த், தொடரும் நீரோட்டம், சமையலறை – சில குறிப்புகள்”

  1. K.Muthuramakrishnan Says:

    //எப்படிப்பட்ட முட்டாக்கூ அரைகுறைகளை பெற்று வளர்த்தெடுத்திருக்கிறார் இந்த ஜெயமோகன்! கர்மவினைப்பயன் என்பது ஒரு அடாவடி வில்லன், சரிதான்// .ஆனால் அவர்களைப் பாருங்கள்.மற்றவர்களையெல்லாம் முட்டாள் என்று புனைந்து கொள்கிறார்கள்.When little fishes talk,they talk like whales.


    • அம்மா, உங்களுக்குச் சுரணையில்லை போலும். அல்லது மறை கழன்றுவிட்டது. அல்லது மூளை உருகிவிட்டது. ஆழ்ந்த அனுதாபம்.

      என் வாழ்நாளில், முதல்தடவை பெண் ட்ரோல் (+அவுட் ஆஃப் கன்ட்ரோல்) ஒருவரைச் சந்திக்கிறேன் என நினைக்கிறேன்.

      ஒத்திசைவைப் படிக்கும் சிலபல பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மரியாதைக்குரியவர்கள், புத்திசாலிகள் என நினைக்கிறேன். பொதுவாகவே, ஒத்திசைவைப் படிப்பவர்கள் மூளையை உபயோகிப்பவர்கள்; நீங்கள் தவறான இடத்திற்கு, தவறான வழிகாட்டலினால் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எனக்கு இதில் ஆச்சரியம்தான்.

      மறுபடியும் மறுபடியும் தேவையற்ற வசைபொழியும் பின்னூட்டங்களை இடவேண்டாம். அவற்றையெல்லாம் பெரும்பாலும் – மேற்கண்ட மூன்றைத் தவிர – நான் அகற்றிவிட்டேன். விட்டால் என்னையே வன்புணர்ச்சி செய்துவிடுவீர்கள் போல; எனக்குப் பயமாகவே இருக்கிறது. ;-)

      நீங்கள் குற்றம்சாட்டுவதுபோல் – நான் ஒன்றும் உங்களை ‘ஸ்டாக்’ செய்யவில்லை. பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கவில்லை. நான் சாருநிவேதிதா அல்லன். நீங்கள்தாம் அப்படிச் செய்கிறீர்கள். தேவையா?

      எனக்கு மகளாக / மகனாக இருக்கக்கூடிய அளவில்தான் உங்களுக்கு வயது இருக்கவேண்டும். அனாவசியக் கோபம் வேண்டாம். உங்கள் ஆசான் கூட, இம்மாதிரி அநாகரிகச் செய்கைகளை அனுமதிக்க மாட்டாரென்று நினைக்கிறேன். அவருக்கு வெட்கமும் சங்கடமும் கொடுக்குபடிக்கு இப்படி அசிங்கமாக இவ்விஷயத்தைத் தொடரவேண்டாம்.

      ஆனால் – இதை அனுமதித்து பதில்களையும் கொடுக்கிறேன். அவை இரண்டு.

      1. தயவுசெய்து சுட்டித்தனமாகச் சுட்டிகளைக் கொடுக்கவேண்டாம். ஆனால் நீங்கள் அனுப்பிய சுட்டியை மேலோட்டமாகப் படித்தேன்; என்னைப் பொறுத்தவரை, எப்போது வெண்முரசு தொடரைவிடப் படுப்படு நீளமாக, ஒரு பொழிப்புரை வருகிறதோ – அப்போதே அது, வெண்முரசோடு சேர்ந்து அதுவுமேகூட ஒரு க்ளாஸ்ஸிக் ஆகிவிட்டது.

      ஆகவே என் கருத்துகளை அனைத்தும் வாபஸ் வாங்கிக்கொண்டு, உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, உங்கள் ஆசானிடமும் அந்த பெங்களூர் தட்டச்சுப் பொழிப்புரைப் பையனிடமும் காலில்விழுந்து – உங்களுக்குப் பிடித்தவகையில் புறமுதுகிட்டோடுகிறேன்.

      2. நீங்கள் பெண் என நீங்களே குறிப்பிட்டதால் உங்களை அம்மா/அம்மணி என அழைத்தேன் – நீங்கள் ஒரு அரைகுறை ஆணாகவும் இருக்கலாம்; உங்கள் க்ரேவதார், மின்னஞ்சல் ஐடி எல்லாமே பொய் எனத் தெரியும். ஆனாலும் இணையம் என்பதில் அனாமதேயமாக இருப்பது கடினம். + நானும் உங்களை விட மிகஅதிக மூளையும் கணிநி அனுபவமும் பெற்றவன். இவற்றையும் கருத்தில் கொள்ளவும். I can HISS as well as bloody BITE, Okay?

      இன்னொருமுறை உங்கள் அலுவலகத்திலிருந்து, அலுவலக நேரத்தில் இப்படி அலுவலகவேலைக்குத் தொடர்பற்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்களானால் – உங்கள் நிறுவனத்தின் ஐடி/ஸிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்களுக்கு சகலவிவரங்களையும் கொடுத்து உங்களை ஒருவழி பார்ப்பதைத் தவிர வேறுவழியில்லை. + உங்களுடையது ஒரு பன்னாட்டு நிறுவனக் கடை – நேரடியாகப் புகார் அளித்தால் சுளுக்கெடுத்துவிடுவார்கள் – அவர்களுக்கு அது மானப்பிரச்சினையாகிவிடும். முன்னமே இப்படி இரண்டு முறை இரண்டு பேருக்குச் செய்திருக்கிறேன்; அதில் ஒருவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இன்னொருவருக்குக் கல்தா கொடுக்கப்பட்டது.

      நீங்கள் இளவயதினராக இருக்கவேண்டும். தவறுகள் செய்வது பிரச்சினையில்லை. ஆனால் எருமைமாட்டுத்தனம் வேண்டாம். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். உங்கள் எதிர்காலம் நல்லபடியாக இருக்கவேண்டுமானால் – இந்தப்பேடித்தனத்தை இந்த நொடியே விட்டுவிடவும்.

      ஆகவே, நான் புறமுதுகிட்டோடுவதுபோலவே, உங்கள் பங்குக்கு இதனைச் செய்யவும் – இது மிக ஸீரியஸ்ஸான எச்சரிக்கை.

      தயவுசெய்து அகலவும்.

      உங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லவில்லை. ஆனால், தொடர்ந்து தொந்திரவு கொடுத்தால், எல்லைகளைத் தொடர்ந்து மீறினால் பின்னர் வருத்தப்படவேண்டி வரும். என் பொறுமைக்கும், நகைச்சுவை தெளிக்கப்பட்ட உரையாடல்களுக்கும் ஒரு எல்லை உண்டு.

      நான் காந்தியன் அல்லன். மேலதிகமாக – குற்றத்துக்கு ஏற்ற தண்டனை (மரணதண்டனை உட்பட) எனும் விஷயத்தில் நம்பிக்கையும் உண்டு.

      என்னுடைய இஷ்டதேவதை நரசிம்மம். நகம் கூர். கோரைப் பற்கள் கோரமானவை.

      பின்னர் உங்கள் இஷ்டம்.

  2. venkatesh Says:

    இவர்கள் தற்கொலைப்படையும் அல்ல,ஜெயமோகன் விசிறிகளுமல்ல,காரிய காரர்கள்,காரிய காரிகள் .தான் ஒரு வாழ்வாங்கு வாழும் சிட்டு என்ற கனவில் மினுக்கிக்கொண்டு திரியும் ஒரு அசட்டு வாழாவெட்டியை கூடி கும்மி அடித்துக்கொண்டு பொழுது போக்கும் பொக்கைகள்!நம் சாமியார் பயல்கள்தான் இங்கே நினைவுக்கு வருகிறார்கள் ,அவனுங்க ஊர் காடு மலை ,வெயில் குளிர் என்று பாராமல் அலைந்து புண்ணியத்தை வாங்கிக்கொண்டு வந்தால்,இந்த பக்த சம்சாரிப்பயல்கள்,காலை கழுவி,பஜனை [ஓள்?]வைத்து,அந்த புண்ணியத்தை லவட்டிக்கொண்டு போவானுங்களாம்!அது போல இந்த மாதிரி உடலுழைப்பு கிறுக்கனுங்கள காயடிச்சி விட்டு அவனை உளற விட்டு பொழுது போக்குக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்!அவனும் சாமியார் ,நாங்களும் பக்தகோடிகள்.இதோ இந்த ஆளு இலக்கிய வாத்தினா நாங்களெல்லாம் வாசக அறிஞ கூட்டமல்லவா?


    • ஐயா வெங்கடேஷ்,

      இப்போதைக்குச் சும்மா கிடக்கும் சங்குக்கு, இப்படி ஊதிக்கெடுத்தால் எனக்குச் சங்கூதப்பட்டுவிடுமே ஐயா! :-(

      நிச்சயமற்ற வாழ்க்கையையே விடுங்கள், நித்தியமற்ற வாழ்க்கையில் பயனுண்டோ என் கொல். நகைச்சுவைக்கு வித்திடும் நித்தியைக் கிண்டல் செய்வதை அனுமதியேன். அப்படித் தான் என் குரு, என் சீடனால் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறான்.

      ​ஆகவே.

      அநித்தியத்தை நோக்கிப் போவோம். நன்றி.​

      • venkatesh Says:

        என் ஆன்மிக தலைவனும்,கூடுதலாக என் ஜாதிக்காரனுமாகிய,நித்தியை இந்த எழுத்தாள உழைப்பாளியும் மணி சார்,பாலா சார்,முருக தாஸ் ,கலாநிதி சார்களிடம்[இன்னுமா?அந்த இங்கிலாந்து காரனுங்க சார் பட்டம் கொடுக்குறானுங்க?]எழுத்து தொண்டூழியம் செய்யும் ஒருத்தரையும்,அவரின் கோமாளி சீடக்ககுஞ்சுகளோடு எப்படி ஒப்பிடுவேன்?இவைகள் வாழா வெட்டிகள்,என் தலைவன் வாழும் சிட்டல்லவோ?சிட்டுக்குருவிகளோடு!பலனை எதிர்பாரா கர்ம யோகியாக்கும்.தன் ஆனமீக உழைப்பை உரிமைக்கோராமல்[அதாவது,ராயல்ட்டி உரிமையையும் துறந்ததால்]அந்த வீடியோ சாட்ச்சிகளை கண்ட கம்மினாட்டிபுலனாய்வு பத்திரிகை பயல்ளும் ,புத்தகமாகவும்,விடியோவுமாக யு டியூபில் விற்று ,மகளுக்கு கல்யாணம்,மனைவிக்கு நகைகள்,கேளம்பாக்கத்தில்,சொத்து என்றெல்லாம்,சம்பாதித்துவிட்டானே!அந்த அளவுக்கு பொருளின் மீதோ,புகழின் மீதோ,பற்றில்லாத என் ஆன்மிக அதிபதி எங்கே இந்த எச்சிலை பொதிகளெங்கே?


      • ஹ்ம்ம்… ஐயா, குளிர்பானம் ஏதாவது அருந்துங்கள். அல்லது ‘வெண்குளிர் கருமேகம்’ வருவதற்குக் காத்திருங்கள். நன்றி.

  3. Swami Says:

    Tragic day :(
    The powers that be simply let him die

    May be, may be we dont deserve real mahatmas any more


    • Was expecting it, I had given up already. The reason is – the Gov machinery takes an immense amount of time to respond to situations like this, even if the intentions are good…

      And, the path to hell is paved with good intentions.

      Leave alone Gangamayya, it is a personal loss for me and also for Bharath. What a scholar and DOER!

      __r.

  4. Vijay Says:

    A very sad day indeed. Wish I had known previously about his work and him as a person. A great soul of India.
    -Vijay

  5. SB Says:

    https://gulfnews.com/news/asia/india/gd-agrawal-the-activist-on-fast-unto-death-to-save-ganges-dies-1.2289021

    Yes Sir – Disheartened to know of this sad news . Thought you were there to meet him which was your intense wish. Anyway these yogis not just live through body which is basically an hindrance to them.
    RIP.

    Regards
    SB

  6. SB Says:

    Sir,
    Regretfully no word was written about Swami by prominent tamil writers (now including obituaries ) and if not for you, we would not have known about this great soul and we are indebted to you Sir.

    With respectful regards
    SB


  7. […] ஆர்வமானது – பெரியவர் ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா […]


  8. […] லீலாவதிஸாரம் கதை வடிவத்தை, நான், ஸ்ரீ ஸானந்த் ஸ்வாமிஜி அவர்களிடம் பேச்சுவாக்கில் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s