புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி

September 18, 2018

தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.

நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-(

இவற்றின் விளைவாக – பலப்பல புதிர்கள், குதிர்களில் சதிராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் – மிகைச் சராசரித்தனத்தில் அமிழ்ந்து அழுகிக் கொண்டிருக்கும் தமிழகக் கலாச்சாரப் பின்னணியில், இவற்றையெல்லாம் விளக்கவேண்டிய கடமையும் என் மண்டைமேல் வீழ்ந்திருப்பதால், எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏகோபித்து வந்துசேர்ந்த வாசகர் கடிதங்கள் வழியாக – நான் அறிந்துகொண்ட சிலபல ரகசியங்களில் தேர்ந்தெடுத்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இவற்றுக்கான எல்லா ஆதாரங்களையும் கொடுக்கமுடியாவிட்டாலும் (ரகசியங்களைக் காக்கவேண்டுமே, ஐயன்மீர்!) ஒவ்வொரு செய்திக்கும் குறைந்த பட்சம் ஒரு ஆதாரத்தையும் – அவற்றின் ஆதார் எண்களுடன் இணைத்து வழங்குகிறேன். நன்றி.

(ஆனால், ஒரு விண்ணப்பம்: தயவு செய்து, இவற்றைப் பரப்பாதீர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம் விளைவிக்க விரும்பாதவனே நான் தான்.)

1952

லண்டன் டீக்கடை ஒன்றில் பெர்னார்ட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ராணி எலிஸபெத் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் – பேச்சின் குவியம் – யாருக்கு ஆங்கிலத்தில் புலமையும் அறிவும் அதிகம்? இயல்பாகவே,  ஸெக்யூலரிஸ-லிபரல்கார முன்னவர் இருவரும் பெண்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும், அரச குலத்துக்கு மரியாதை அளிக்கும் முறையிலும் – ராணிக்கே அதிக அறிவு என முடிவு செய்தனர்.

அச்சமயம், ஏதேச்சையாக அங்கு, காஞ்சிபுர நடமாடும் பல்கலைக்கழகமும் இனமான திராவிட இனத்தின் தானைத்தலைவருமான பேரறிஞர் அண்ணா வந்தார். அவர்களிடம் ‘என்ன பிரச்சினை’ எனக்கேட்டார்.

ரஸ்ஸல் பதிலளித்தார்; மேலும் அவர், அண்ணாவிடம் ‘ராணி ஒப்புக்கொள்ளும் வகையில் எப்படி இதனைப் பரிசோதிப்பது, தயைசெய்து உதவமுடியுமா?’ எனக் கேட்டார்; ஸர் பட்டம் வாங்கினால் ஸர்க்கிவிடுமன்றோ? அண்ணாவும், வெற்றிலையைக் குதப்பியபடியே, “இதென்ன பெரிய்ய பிரச்சினை? உங்கள் ராணியைக் கேளுங்கள், ‘எத்தனை முறை because எனும் ஆங்கில வார்த்தையை ஒரு வாக்கியத்தில் அடுத்தடுத்து உபயோகிக்கமுடியுமென்று’ – பின்னர் தெரிந்துவிடும் யார் பெரிய்ய அறிவாளி என்று..” எனச் சொன்னார்.

…ராணி துள்ளிக் குதித்துக்கொண்டு சொன்னார், “ஹையா, என்னால் மூன்று முறை உபயோகிக்க முடியும் – The sentence cannot end with because, because, because is the conjunction.”

அண்ணா சொன்னார், “ஹ, உங்களுடைய ஆங்கில அறிவு அவ்வளவுதான். பெரியாரின் ஈரோட்டுக் குருகுலத்தில் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்த என் வரி: If I list out the word ‘because’ 10,008 times in my sentence as in, because, because, because, because … … … because, then I have used ‘becauses’ next to each other, in this sentence, like 10,008 times, yeah?”

இதைக் கேட்டதும் மாரடைப்பினால் ரஸ்ஸலும் ஷாவும் உடனடியாக மண்டையைப் போட்டனர்.

வெறுப்புற்ற ராணியும் பேசாமல் ராணிமுத்து இதழை தான் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.

பேரறிஞர் அண்ணா வெற்றிப் பெருமிதத்துடன், தான் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலைச் சக்கையை, தேம்ஸ் ஆற்றில் துப்பினார்.

…உண்மையில், எலிஸபெத் ராணி சொன்னதுமேகூட, பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து கமுக்கமாகத் திருடிய விஷயம்தான்!

1960

அமெரிக்காவின் ந்யூஜெர்ஸி ப்ரின்ஸ்டன் பகுதியில் உள்ள  – பேர்பெற்ற, மகாமகோ அரவிந்தன் கண்ணையன் அவர்களாலேயே புகழப்படும் பேறு பெற்ற ஒரு அறிவுப்புல முன்னேற்றக் கழகத்தில் நான்கு அணுத்துகள் விஞ்ஞானிகள் காராசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எலெக்ட்ரான்களும் உடைக்கப்பட்டால் அவற்றிலும் அடிப்படையோதிஅடிப்படைத் துகள்கள் இருக்கலாமோ என்று.

அச்சமயம் அந்தவழியில் காரில் சென்றுகொண்டிருந்த பேரறிஞர் அண்ணா (அமெரிக்காவிலுள்ள ஐநாவில் பேருரை ஆற்றச் சென்று கொண்டிருந்தார் அவர்!) சிரித்துக்கொண்டே சொன்னார். நிச்சயமாக. அடுத்த இருபதுமுப்பது ஆண்டுகளில் எலெக்ட்ரான்களும் ஹோலான், ஸ்பினான், ஆர்பிடான் போன்ற மூவகைத் துகள் போன்றவைகளால் ஆக்கப் பட்டவையே எனக் கண்டுபிடிக்கப்போகிறார்கள். ஆக, உங்கள் நேரத்தை வீணடிக்காமல், நீங்கள் வேறெதிலாவது குவியம் கொண்டு உங்களை முன்னேற்றிக் கொள்வது நல்லது.

இதைக் கேட்டவுடன் அந்த நாலுபேர் மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டார்கள்! அவர்கள் பின்னர் ஒரு டீவி சேனலுக்கு நேர்காணல் அளிக்கையில், பேரறிஞர் அண்ணாதுரைக்குத்தான் அந்த ஆண்டுக்கான அனைத்து நொபெல் பரிசுகளும் வழங்கப் படவேண்டும் என உயர்த்திக் குரலிட்டார்கள்.

ஆனால், வருத்தக்குரிய வகையில் திராவிடத் தமிழன், அப்போதும் ஆரியப் பாம்புகளினால் வஞ்சிக்கப்பட்டான் என்பது வரலாறு.

ஆதாரம்: https://www.nature.com/news/not-quite-so-elementary-my-dear-electron-1.10471

அன்றே சொன்னாரல்லவா அண்ணா?

1977

அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின் நடந்த தேர்தல்களில் இந்திரா காந்தி படுதோல்வியுற்றார். இந்த வெட்கக் கேட்டால், தற்கொலை செய்துகொள்ள முனைந்த அவரை, ஆசுவாசப்படுத்தி, அறிவுரை கொடுத்து அவருக்குத் தெம்பையும் நம்பிக்கையையும் அளித்தவர் யார் தெரியுமா? அவர்தான் கலைஞர் மு. கருணாநிதி.

மாற்றாள் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என அன்றே உணர்ந்தவர்தாம் கலைஞர்!

நன்றிக்கடனால் பூரிகெழங்கித்துப் போன, பரவசமடைந்த அம்மையார் – ஒரு சமயத்தில், இதயம் இனிக்க, கண்கள் பனிக்க – தம்மை மணந்துகொள்ள முடியுமா என இறைஞ்சிக் கேட்டுக்கொண்டாலும் கூட, ‘அம்மணி – எனக்கு இரண்டுக்கு மேல் வெளியே தெரியும்படிக்கு வேண்டவே வேண்டாம்!’ எனப் பெருந்தன்மையுடன் மறுத்தவர்தாம் கலைஞர்…

கலைஞருக்குக் கிடைக்காத பாரதரத்னா, வேறு எவரும் பெறத் தகுதியேயில்லை.

ஆதாரம்: https://en.wikipedia.org/wiki/The_Emergency_(India)#Elections_of_1977

1972

பலருக்கு இந்த விஷயம் தெரியாது; காட் ஃபாதர் படத்தின் ஒரிஜினல் திரைக்கதை-வசனம் எழுதியவர்கள் உலக நாயகன் கமல்ஹாஸனாரும் மணிரத்னமாரும்தான். இந்த அரிய பங்களிப்பினால்தான் உலக நாயகருக்கு அப்படத்தில் நடிக்க வாய்ப்பளிக்கப் பட்டது. ஆனால் வருத்தத்துக்குரிய விதத்தில் அவர், தனக்கு இருந்த அப்போதைய கால்ஷீட் கெடுபிடிகளால் அதனை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும், அதன் டைரக்டர் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பொலா, கமலஹாஸனாருக்கு 10, 008 வேடங்களை (=மாஃபியா குண்டர்கள்/குண்டிகள், குண்டுகள், துப்பாக்கிகள், பொலீஸார், ஜட்ஜ்கள், அரசியல்வாதிகள், சிதறியோடும் ஆப்பிள் பழங்கள், கார்கள், ஆஸ்பத்திரி,  டோல்கேட், பீட்ஸா, செத்தமீன், சாலையோர தீயணைப்புக் குழாய், படகு, மலைப் பாறாங்கற்கள், தொலைபேசி, அறுத்த குதிரையின் அறுக்கப்பட்ட தலை, ரத்தம் படிந்த போர்வை, லாஸ்வேகாஸ் சூதாட்டக்கூடம், அவரைக் கொடி, நர்ஸ், குழந்தை, சர்ச், பாதிரி, அகண்ட தார்சாலை, தொப்பி, கால்சராய், காலணிகள், சிலுவை… … எனச் சகல குணசித்திர வேடங்களும்!) அளித்துத் திரையுலகைக் கலக்குவதாக இருந்தார்.

இருந்தாலும் உலக நாயகனுக்கு அது ஒத்துவரவில்லை – தொழில் சுத்தத்தில் கறாராக இருந்த கமல்ஹாஸன், தமிழ்த் திரையுலகிற்கான தம் சேவைகளை விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஆகவே, மனமொடிந்த கொப்பொலா – அனைத்து வேடங்களையும் பிய்த்துப் பிய்த்து அல் பசீனோ, மார்லன் ப்ரேண்டோ எனச் சகலருக்கும் பிரித்துக்கொடுக்கவேண்டி வந்தது.

ஒருவிஷயம்: படுகேவலமாக, இந்த டைரக்டர் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பொலா-  கமலஹாஸனாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு மூச்சுக் கூட விடவில்லை. ஒரு விதத்திலும் மணிரத்னமாரையும் கமலஹாஸனாரையும் மேற்கத்திய ஹாலிவுட் கொண்டாடவே இல்லையென்றாலும், பெருந்தன்மையும் மிக்க இவர்கள் இருவரும் – அவமரியாதைகளை ஒரு பொருட்டாகவே கருதிக்கொள்ளவில்லை! என்னே திராவிடத் தமிழர்களின் பரந்த மனப்பான்மை!

ஆனால், எனக்கு ஒரு ஆசுவாசம் – பலபத்தாண்டுகளுக்குப் பின் தங்கள் காட்ஃபாதர் கனவைச் சாத்தியமாக்கிக்கொண்டனர் மணிரத்னமாரும், கமலஹாஸனாரும் – ‘நாயகன்‘ திரைப்படத்தின் வழியாக…

ஆதாரம்:  காட்ஃபாதர் படத்துக்கு: https://www.imdb.com/title/tt0068646/; ஆதாரம்: நாயகன் படத்துக்கு: https://www.imdb.com/title/tt0093603/

1987

மேற்கண்ட காட்ஃபாதர் பிரச்சினை போலவே, இன்னொரு ஹாலிவுட் அயோக்கியத்தனம் அரங்கேறிய வருடமிது. :-(

என் மனைவி தான், நான் இதனைத் தெரிந்துகொண்டதற்குக் காரணம். இது சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன் நடந்த பகீர் நிகழ்வு.

அவள் சொன்னாள்: உனக்குக் கமல்ஹாஸன் படம் என்றால் கொஞ்சம் அலர்ஜியென்று தெரியும். இருந்தாலும் உறவினர்கள், நண்பர்கள், அதாவது இஷ்டமித்ர பந்துக்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆகவே, நாம் இதனைச் சேர்ந்து பார்க்கவேண்டும் என்று…

ஆக, ‘அன்பே சிவம் (2003)’ படத்தைப் பார்க்க (பைசா கொடுத்து, என் உறவுக்காரக் கழுதையான தம்பி வாங்கிய ஒரு ஒரிஜினல் டிவிடி: அவனும் சொன்னான், “ராம், இது ஒரு வித்தியாசமான கமல் படம், அவசியம் பாருடா!”) ஆரம்பித்தோம்.

பார்க்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே எனக்கு ஒரே கோபம்கோபமாக வந்துவிட்டது. படத்தை நிறுத்திவிட்டேன்.

ஏனெனில், பாவி ஹாலிவுட்காரர்கள் இதே படத்தைக் காப்பியடித்து (டிவிடி கவர், கதை, நிகழ்வுகள், கமல்ஹாஸனார் எழுதிய வசனங்கள் உட்பட!) “Planes, Trains & Automobiles” என 1987லேயே ஒரு படம் எடுத்துவிட்டார்கள்!

அந்த 1987 படத்தை நான் 1996 வாக்கில் (நான் அமெரிக்காவில் சீரழிந்துகொண்டிருந்த சமயம்) ஒரு கேளிக்கைக்காக பார்த்துவிட்டிருந்தாலும் அந்த ஹாலிவுட் படம், ‘அன்பே சிவம்’ படத்தின் அப்பட்டமான காப்பி என அறியாதிருந்துவிட்டேன். :-(

என்னுடைய வருத்தம் என்னவென்றால்: திராவிடச் சினிமாக்காரர்களை இப்படி வளரவே விடாமல்,  அநியாயத்துக்கு ஏன் தான் இப்படிச் செய்கிறார்களோ, இந்த ஹாலிவுட் பேடிகள்.

‘அன்பே சிவம்’ எனும் ‘வித்தியாசமான கமல்’ படத்தைப் பார்த்து ரசித்த அனைவரும், ஐநா சபைக்கு, இந்த ஹாலிவுட் அயோக்கியத்தனத்தைப் பற்றி ஒரு பெட்டிஷன் போடவேண்டும்.

இம்மாதிரி அதிமுக்கியமான பெட்டிஷன் விஷயங்களில் பரிச்சயம் உள்ள வைகோவையும், இசுடாலிரையும் உதவிக்கும் அணுகலாம், உங்கள் இஷ்டம்.

ஆதாரங்கள்: அன்பேசிவம் – https://www.imdb.com/title/tt0367495/; ஹாலிவுட் திருட்டுப்படம் – https://www.imdb.com/title/tt0093748/.

1990

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, இலக்கியத்திற்கான நொபெல் பரிசு கிடைக்கவிருந்தது.

ஆனால், வழக்கம்போலவே மிகக் கறாராக – விருதுகளைத் துளிக்கூட விரும்பாத அவர், தனக்குப் பதிலாக, ஆக்டெவியோ பஸ் அவர்களுக்கு அதனைக்கொடுக்கும்படி பரிந்துரைத்தார் – மேலும் இந்தவிஷயம் மூன்றாம் மனிதருக்குத் தெரியவேண்டாம் எனவும் தெரிவித்தார். நொபெல் கமிட்டியினரும் அவர் சொல்லைச் சிரமேற்கொண்டு, திரு பஸ் அவர்களுக்கு பரிசினை அளித்தனர்.

ஜெயமோகனின் தயவால் தான் தனக்கு பரிசு கிடைத்ததை அறியாத அகங்காரமிக்க பஸ், பின்னர் 2001ல், விஷ்ணுபுரம் விருது தமக்கு அளிக்கப்படவிருந்தபோது அதனை மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நிராகரித்தார்.

ஜெயமோகனும் தனக்கே உரித்த பெருந்தன்மையுடனும் அளவிலாக் கருணையுடனும், அதனைப் பொருட்படுத்தவில்லை.

என்னே தமிழ் இலக்கிய எழுத்தாளனின் மாண்பு! இப்படிப்பட்டவர்கள் நம்மிடையே நடனமாடுவதற்கு, நாமெல்லாரும் கொடுத்துவைத்தவர்கள்தாமே!

-0-0-0-0-0-

சரி.

இம்மாதிரி நவீன தொன்மங்கள் அவ்வப்போது எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் (அதாவது, உங்களுக்கு நேரம் சரியில்லாதபோது) வரும்.

4 Responses to “புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி”

  1. Anonymous Says:

    Sir,
    One side Mr.Aravindan Kanniyan was reporting seeing Vishnupuram, eh, vishwaroopam 2 and your discussing Anbe Sivam seem not an co-occurence. FYI, even movies like
    ‘Virupandi’ (atleast the main plot ) was a rip off of Life of David Gale.
    The list is long and all are there openly for everyone to see .

    Also Maniratnam’s movie to be released end of the month- Chekka Chivantha Vanam- seems to be another adoption of GodFather as the trailer has all those same ingredients.

    What about Kee.Jaa’s rejection of some of Govt Awards ?

    What a coincidence ..just now Nithyananda delivered his thesis on E=MC2 and you will have more stories to share with us all.
    Your good time is equally ours !

    Regards


    • Not even a SINGLE film involving that mayyam guy is 100% original.

      Even Ilaiyaraja was like that, when he started off, but he course-corrected himself and stuff.

      (but I do not know about that nithyananda – nor anything about that ‘new’ stuff from moneyrat-num perhaps not missing anything major, though! what say??)

  2. vksanandan81 Says:

    Dear Ram
    you forgotten to mention “Tamilnadu Tolstoy” S.Raa


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s