ராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது!

September 20, 2018

நிற்க, கொலைகளைச் செய்தாலும் அவற்றுக்கான நிரூபணங்கள் 100% காத்திரமானவை என்றாலுமேகூட – எவருக்கும், நீதிமன்றங்கள் உட்பட, அச்சாதனையாளர்களைக் கொலையாளிகள் என அநியாயமாகக் கண்டனம் செய்யும் உரிமை இல்லை. மன்னிக்கவும்.

திராவிடத் தமிழச் சாதனையாளர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆரிய நச்சரவங்களால் பாதிப்படைய விடக்கூடாது!

இப்படித்தான் எங்கள் ஆசான்கள் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.

அதற்காகத்தான் அவர்களை விடுதலை செய்யக்கோரியிருக்கிறோம். பார்க்கலாம்.

-0-0-0-0-0-0-

அப்படி என்ன பெரிய குற்றம் செய்து விட்டார்கள் இச் சாதனையாளர்கள்?

எப்படியும் தங்கள் வாழ்நாள் இறுதியில் சாகத்தான் போகும் கீழ்க்கண்டவர்களை, கொஞ்சம் அவசரப்பட்டு அனுப்பி விட்டார்கள்! இதுவெல்லாம் ஒரு குற்றமா?

கீழே, ராஜீவ் காந்தியுடன் மேலுலகம் சென்றவர்களின் பெயர்களைக் கொடுத்திருக்கிறேன்.

 1. பிகே குப்தா – ராஜீவ் காந்தியின் தனிப்பாதுகாப்பு அதிகாரி
 2. தர்மன் – காவல்துறை கான்ஸ்டபிள்
 3. முருகன் – காவல்துறை கான்ஸ்டபிள்
 4. ராஜ்குரு – காவல்துறை இன்ஸ்பெக்டர்
 5. எட்வர்ஜ் ஜோஸஃப் – காவல்துறை இன்ஸ்பெக்டர்
 6. எத்திராஜூ – காவல்துறை இன்ஸ்பெக்டர்
 7. சந்திரா – காவல்துறை கான்ஸ்டபிள்
 8. கே எஸ் மொஹெம்மத் இக்பால் – காவல்துறை எஸ்பி
 9. ரவிச்சந்திரன் – காவல்துறை அதிரடிவீரர்
 10. சந்தானி பேகம் – காங்கிரஸ் மகளிர் அணி
 11. ‘லீக்’ முனுசாமி – முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஸி + எஸ்ஸி/எஸ்டி பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலாளர்
 12. லதா கண்ணன் – காங்கிரஸ் மகளிர் அணி
 13. கோகிலவாணி – லதாவின் மகள்
 14. சரோஜாதேவி – காங்கிரஸ் மகளிர் அணி
 15. டேனியல் பீட்டர் – காங்கிரஸ் தொண்டர்

…எதற்கு இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி மொத்தம் 16 பேரை ஸ்பீட்போஸ்ட்டில் மேலுலகம் அனுப்பிய பணியில் உயிரிழந்த தனுவும் புகைப்படக் கொலைஞர் ஹரிபாபுவும் தங்கள் இன்னுயிரை ஈந்ததைத் தமிழகம் அறியுமா?

என்னவோ மேற்கண்ட 15 பேரும் தமிழர்கள் போலவும், இவர்களை குரியர் செய்தவர்கள் தமிழர்களல்லர் போலவும்தானே பரப்புரைக் குரைக்கிறார்கள், அந்த ஆரிய ஹிந்துத்துவா நச்சுப் பாம்பினர்!

என்னவோ, இந்தப் 15 பேர்களுடைய பிள்ளைகுட்டிகளும் குடும்பத்தினரும் மட்டுமே நடுத்தெருவில் நின்றமாதிரியல்லவா வதந்திபரப்புகின்றனர் – எங்கள் தனுவின் குடும்பத்தினர் பற்றி மூச்சுகூட விட மாட்டேனென்கிறார்களே!

…பார்க்கப்போனால், எம் சாதனையாளர்களால் கணக்கு முடிக்கப்பட்ட பேறு பெற்றதற்கு – அந்தப் பதினைந்து குடும்பத்தினர் பெருமையல்லவா படவேண்டும்?

மேலும், ஏறிக்கொண்டிருக்கும் மக்கள்தொகையை அரும்பாடுபட்டுக் குறைத்த எம் சாதனையாளர்களுக்கா நாம் துரோகம் இழைப்போம்?

-0-0-0-0-

ஆகவே – கீழ்கண்ட சாதனையாளர்களைப் போற்றுவோம்!
 • நளினி
 • முருகன்
 • ரவிச்சந்திரன்
 • ஜெயகுமார்
 • ராபர்ட் பையஸ்
 • சாந்தன் என்கிற டி சுதந்திரராஜா
 • ஏஜி பேரறிவாளன்
அவர்கள் வாழ்நாள் சாதனைக்காக அவர்கள் அனைவருக்கும், அவர்கள் தியாகச் சிறைவாசத்தை முடித்து வெளிவந்த அடுத்த கணம், எம் திராவிடத் தமிழரசின் சார்பில் கொலைமாமணி விருது வழங்கி அவர்களைக் கௌரவிப்பதாக உள்ளோம்.

எம் திராவிடத் தமிழக் கொலைமாமணிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

போற்றுதற்குரிய திராவிடச் சிங்கி, தமிழ்ப் போராளி செம்போராளி னுவுக்கு – செம்புச் சிலை ஒன்றை சட்டமன்ற வளாகத்தின் நிறுவுவதாக உள்ளோம்.

தன்னுயிரை ஈந்த சிவராசனின் படத்தை சட்டமன்றத்தில், ஸோனியாகாந்தி அல்லது திருநாவுக்கரசரால் திறக்கவைப்போம்!

அம்மா, கலைஞர், அண்ணா, பெரியார் என அனைவர் பேரிலும் சத்தியம் செய்கிறோம்! இவற்றை நடத்திக் காட்டுவோம்.

-0-0-0-0-

அதே சமயம் மேற்கண்ட 15பேரின் நெருக்கமான உறவினர் – தலா ஒருவரை, பிடித்து ஆயுள்தண்டனை விதித்து சிறையில் தள்ளவும் ஆவன செய்துகாட்டப்போகிறோம்!

ஏனெனில்,  மேற்கண்டவர்கள், வேலை வெட்டியற்று வெடிகுண்டு தன்னிச்சையாக வெடித்த இடத்தில் வேடிக்கை பார்க்கக் குவிந்ததனால்தானே எம் சாதனையாளர்கள் காராக்கிருகத்தில் வாட நேர்ந்தது?

தமிழக மக்களுக்குத் தெரியாதா இந்த ‘நெஞ்சுக்குநீதி?’

அதேசமயம், ராஜீவ் செத்ததற்காக, ஸோனியாகாந்தியையும் முடிந்தால் சிறையில் அடைக்கலாம் எனப் பார்த்தால் – அவர் குடும்பத்தினர் நேரடியாகச் சாதனையாளர்களைச் சந்தித்து, தங்கள் ராஜீவ்காந்தி வேலைவெட்டியில்லாமல் ஸ்ரீபெரும்புதூர் போனதால் கொலை செய்யப்பட்டதற்காக, வருத்தம் தெரிவித்துவிட்டனர்.

ஆகவே, அவரை நாங்கள் சாய்ஸில் விட்டுவிட்டோம்.

-0-0-0-0-

கொலைமாமணிகள் வாழ்க! அவர்கள் புகழ் ஓங்குக!!

வாழ்க தமிழ்! வெல்க திராவிடர்!!

வாழிய கொலைமாமணித் திருநாடு!!!

நன்றி.

17 Responses to “ராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது!”


 1. All Dravidian parties, congress(tn) and even few from bjp(tn) considering these 7 jailbirds to be released. Because they have had enough in their life for their act in Rajiv Gandhi’s assassin.
  Now May I ask you what bothers you on their release?
  Even the court has no issues on releasing them.


  • Thanks for expressing your outrage.

   I merely registered my sentiment that – since they have actually helped in population reduction, which is a noble cause, the TN government should create a new award series ‘kolai maamani’ to honour them.

   Please let me know why my rallying to the support of their meritorious service to the cause of Tamils – seems to be bothering you.

   I really want to know. Thanks in advance.

   __r.

 2. Anonymous Says:

  Sir,
  Having understood your satire, I would like to ask you as to the delay in bringing justice to all involved …25+ years rotting in jail is a joke ? Would you then say that their staying in jail for such a long time ‘alive’ is a bonus of living ? Were all involved (proven matter) to be hanged ?
  Your sarcasm should have got its place on the delayed justice also ..whatever that could be. Imagine the plight of that Mother …waiting for this or that for 25+ years ?? Is that a joke?

  Are you going to write a piece on Rafale or will you be waiting for ‘truth’ to come out of its own? Best of luck.

  Regards


  • Sir, Rafale has been beaten to death. There is no scam now. Why don’t you please verify the facts? And, do your homework?

   If you write in detail about all the so called misdeeds (with correct data ans sources) I may do a rejoinder.

   But, I would say – don’t trust any of the ‘liberal’ newspapers or ‘breaking noose’ websites – esp like TheHindu, quint, thewire, theprint et al for data. They lie thru their teeth.

   ’nuff said.

   __r.


   • Again sir, I have been polite so far in my responses. But henceforth, if you do not do your homework and instead expect ME to do YOUR homework, please do not post rejoinders.

    Please understand that the the scumbags committed the dastardly murders (SIXTEEN!) in 1991. The TADA court actually gave them ALL death sentences in 1988 – after a very diligent and due process.

    That WAS justice. It was NOT delayed. Definitely NOT by 25 years!

    I really wish you did your homework.

    Thanks!

    __r.

   • Anonymous Says:

    Sir, Thanks ..Duly read the year as 1998 (TADA) instead of 1988. As you have your data on your finger-tips being the master of several subjects, please do take us novices lightly . It’s a commoner question and seeking your considered opinion will help us have the required clarity.
    So, their being alive even after the verdict is their/their Mothers’ solace ?
    Justice dept’s own reversal of their stand (you have not commented on same ) and advising the TN Govt to adopt their course after vetting by Governor (Governor sending same to President/Central Govt for their views) seem to indicate that the so called despicable will have to be in Jail for life time . Hope the mother gets the idea as she’s been doing her work of going from pillar to post ..Passing the bucks has a clear equivalent here !

    We will wait for AG of Republic to give us the ‘ truths’ alongwith
    ‘authentications’ ..If you say that there’s no scam there, we take it so as you are well-learned/connected.

    Fools rush in where angels fear to tread ..we will keep that in mind while regretting inconvenience caused to you.

    Regards

   • Swami Says:

    In this case, Justice is delayed/denied forever!

    It was not just 16 murders but also an act of terror and war against the Indian state

    The death sentences should have been carried out long long ago


   • Sir, thanks. I am happy that you are also in the band of non-senti no-nonsense justicewallahs.

    It is all great to talk very piously and sanctimoniously – teaching the virtues of the scoundrel scum, and their constitutional rights – knowing fully well that these scum are AGAINST the same constitution.

    Of course the scum were duly tried and treated fairly, is a fact, conveniently forgotten by the semi-literates.

    Those who live by the sword, will die by the sword. Karma.

    முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.

    முற்பகலில் முனைந்து செய்துவிட்டு, ஐயோ, பிற்பகலில் பலன் கைமேல் கிடைக்கிறதே என்றால்?

    __r.


  • Sir, thanks – I browsed thru it.

   The hack who created that news item – Swati Chaturvedi (@bainjal) works for a fee. Current paymasters are INC.

   So, please do not ask me to reflect on that garbage.

   She has been debunked so many times that it is not a joke.

   Sorry.

   __r.

   • RC Says:

    அன்பு அய்யா,
    அவருடைய நூல் ஒன்று ‘எதிர்’ வெளியீடாகவும் சமீபத்தில் வந்துள்ளது தங்கள் பார்வைக்கு.
    தேர்தல் ஜுர சமிக்கைகள்.. வேறென்ன சொல்ல
    https://www.panuval.com/naan-oru-troll-10004630


   • ஐயா ஆர்ஸி, என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டதற்கு நன்றி.

    இந்த இரா. செந்தில், பாவம் – நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அப்பாவிப் பரப்புரைக் குளுவான் போலும்!

    இப்படி ஒரு பதிப்பகம் ‘பனுவல்’ – இருப்பதையே இன்றுதான் அறிந்துகொண்டேன்,

    காஞ்சா ஐலையா புத்தகமெல்லாம் போட்டிருக்கிறார்கள் போல! சரிதான்! ;-)

    மற்றபடி, தேர்தல் ஜுரமோஜுரம்தான்!

    அன்புடன்,

    ரா.

   • RC Says:

    ஐயா, சுரம் அதிகமானது தங்கள் சமீபத்திய (கஜன்,கசன்) பதிவு கண்டு .போற போக்க பார்த்தா ‘ஜ’, ‘வேறென்ன சொல்ல’ போன்றவைகளை விடணும் போலயே :-) அதிக செய்நேர்த்தி எதிர்பார்க்கிறீங்க ஐயா. 🙏


   • அய்யா ஆர்ஸி, என்னை மன்னித்தருளவும். உண்மையாலுமே.

    எனக்குச் சனியன், முற்றி விட்டது. கோபதாபங்களையும் அகங்காரத்தையும், நம் தமிழைக் குறித்த இயலாமையையும், பிற கலாச்சாரச் சூழல்களைக் குறித்த அளவிலாப் பொறாமையையும் எவ்வளவு நாட்களுக்குத் தான் நகைச்சுவை(!)யில் மூழ்கடிக்கப்போகிறேன் எனப் பிடிபடவில்லை.

    || ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி ||

    பார்க்கலாம் – ஒத்திசைவு எழவை இழுத்து மூடலாம். பிறவேலைகளில் மேலதிக கவனம் செலுத்தலாம்.

    நன்றி.

    __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s