சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்
July 20, 2018
தமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்…
…முதன்மையான ஒன்று – என் செல்ல அரைகுறைக் கேவலரான #எஸ்ரா அவர்கள். இரண்டாவது, இந்தச் சாபக்கேடான ‘I is for Intolerance’ பரப்புரைப் பப்பரப்பாக் காலங்களில், பகிரங்கமாகப் பொய்ப்புனைசுருட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் – மஹாமஹோ #சாருநிவேதிதா அவர்கள்.
(மிச்சம் இருப்பவர், இப்படியெல்லாம் அசிங்கமாக வீழமாட்டார் என்பது என்னுடைய ஓரளவு திடமான (ஆனால், தரவுகளோ முன்மாதிரிகளோ அற்ற) நம்பிக்கை, பார்க்கலாம்… எதிர்காலம் எப்படிச் சுருங்குகிறது என்று!)
-0-0-0-0-0-0-
1980களின் கடைசியில் (என நினைவு – அல்லது 1990-91ல்?) அண்ணா நகரில் வசித்துக்கொண்டிருந்த இந்த மனிதரின் வீட்டிற்கு ‘எலக்கியம்’ தொடர்பாக ஏதோ ஓரிருமுறை (மூளை சரியில்லாமல் பித்துப் பிடித்து – அலக்கியவாதிகளை ஆராதித்துக்கொண்டிருந்த, ‘நம்’ தமிழுக்கு ஏதாவது காத்திரமாகச் செய்யவேண்டும் எனத் தறிகெட்டு நான் கண்டமேனிக்கும் அலைந்துகொண்டிருந்த காலகட்டங்களின் முடிவில்) சென்றிருக்கிறேன். பாவம், நல்லபடியாகத்தான் இருந்தார். பணிவுடனும் அன்புடனும்தான் உரையாடினார்.
இப்போதுதான் பாவம் – தேவைக்கதிகமாக ‘உறை*‘யாடி நரையாடி கூடிக்குடிக் கும்மாளமடித்துத் தள்ளாடி – உறவினருக்குச் சொல்லியனுப்பிவிடவேண்டிய அளவில் இருக்கிறார்.
பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வரவர – எப்போது சான்ஸ் கிடைத்தாலும் – ஒர்ரே ஓலம். யாரும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறார்கள் என அப்படியொரு சுயபச்சாத்தாபம். மூக்குச்சளியொழுக ஒரு பிலாக்கணம். அறியாமையில் முக்குளித்த உளறல். இயலாமை விசும்பல். வடிகட்டிய பொய்மை. அஷ்டதிக்கிலும் அட்ச்சிவுடல். போக்கற்ற போலிப் போராளித்தனம்.
அப்ஸொல்யூட்லி அன்ஸஹிக்கபிள்.
தேவையா? (இப்படியே போனால் – அந்த அதல பாதாள நிரந்தர விடலைகளான அதிஷாக்களிடமும் யுவகிருஷ்ணாக்களிடமும்தான் இவர் சரணடையவேண்டும்)
இவர் எழுதும் விஷயங்கள் குறித்து எனக்குக் கொஞ்சம் நகைச்சுவையாகவும் படுநக்கலாகவும் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் – அவர் கையில் நன்றாக எழுத வரும் தமிழ் இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதனை வைத்துக்கொண்டு மந்திரவாதம் செய்யாமல், வாசகனைக் கட்டுண்டுபோகச் செய்யாமல், என்னவோ விளிம்பு நிலை களிம்பு நிலை எனப் பின்நவீனத்துவ உளறல்களிலும், கலகப் பிரதி உலகப் பிரேதம் என விடலைப் பம்மாத்துகளிலும், லத்தி அமெரிக்க அலக்கியத்தின் குப்பகைதாரராக இருப்பதிலுமேயே ஆழ்ந்து, முஷ்டிமைதுனக் காலட்சேபம் செய்துகொண்டிருக்கிறார்.
…ஏனெனில் அவருடைய செல்ல நாய்க்குப் பொரை வாங்க துட்டில்லையாம். செத்தால் தென்னமெரிக்காவில்தான் நம்மைச் சாகடிக்கவேண்டுமாம். ஐயா, நன்றி. உங்கள் அபிலாஷைகள் குடிய விரையில் நிறைவேற வாழ்த்துகள்…
அவ்வப்போது, மதச்சார்பின்மை வழியான ஹிந்துமத (மட்டும், வெகுசொகுசான) எதிர்ப்புக்கு, அறச்சீற்ற சீறல் அம்மாடியோவ்கள் வேறு. படிக்கவும் கேட்கவும் சகிக்கவில்லை. தயவுசெய்து யாராவது ஒரு ஃபண்ட் ஆரம்பித்து அவருக்கு வாய்க்கரிசி போட ஆரம்பிக்கவும். நன்றி.
2011 வாக்கில் என நினைக்கிறேன் (தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்) – இதே சாரு நிவேதிதா ஆசாமி — பாலியல் தயிரியல் மசுரியல் என யாரோ ஒரு பெண்மணியுடன் ஃபேஸ்புக் எழவில் அசடுவழிந்து, ஜகா வாங்கி உளறிக்கொட்டி, நான் அவனில்லை என நடனமாடி – தமிழ் அழுத்தாளச் சமூகம் கொஞ்சம் நாறிப்போனது, பாவம், அவருக்கே மறந்துபோய்விட்டது போலும்…
அதற்கும் வெகு முன்னால், அவருடைய தொடர்ந்த விடலைக்காலங்களில் – ‘இலக்கியக்’ கூட்டங்களில் செய்த ரகளைகளும் அவருக்கு நினைவில் இல்லை, பாவம். ஸெலக்டிவ் அம்னீஷியா.
கபட இரட்டைவேடதாரிகளுக்கு இலக்கியத் தரம் வராது என்றில்லை. ஆனால், இந்தக் குறிப்பிட்ட, தொழில்முறைப் பேடியாளருக்கு விமோசனம் இல்லை எனத்தான் படுகிறது.
ஆனால் — இத்தனைப் பேயாடல்கள் செய்தாலும் அவருக்கு ஒரு சுக்குக்கூட நேரடிப்பண ஆதாயம் இல்லை எனத்தான் நினைக்கிறேன். (ஏனெனில் அவர் இன்னொரு கூடங்குள உதயகுமாரர் அல்லர், நல்லவேளை!)
இருந்தாலும் இப்படியொரு ஆகாத்தியம்! அழிச்சாட்டியம். பீலா வுடுதல். வதந்தி பரப்புதல். தேவையா?
சரி.
-0-0-0-0-0-0-
அதாவது – நம் தமிழ் நடிகர்கள் என் தங்களை பெரிய்ய தத்துவஞானிகளாகவும், நேர்மையான அரசியல்வாதிகளாகவும் வரித்துக் கொள்கிறார்கள் என்பது தான் இந்தப் பிலாக்கணம்.
என்னவோ, தமிழ் அலக்கியவாதிகள் எல்லாம் பெரிய்ய்ய்ய மசுத்துக்குத் தத்துவ ஞானிகளாகவும் நல்ல அரசியல்வாதிகளாகவும் இருந்துகொண்டு உலா வருவதைப் போல ஒரு அறச்சீற்ற உளறல்…
இருப்பது, தத்துப்பித்துவத்தில் + நேர்மை கிலோ எவ்வளவு லிட்டர் என்கிற அளவில் செயல்பாடுகள். பின் என்ன மசுத்துக்கு ஐயா, சாரு போன்றவர்களுக்கு அறச்சீற்றம்?
எழுத்தாள அரைகுறைகளான நீங்களும் சாதா ஆசாமிகள்தாம். உலகத்துக்கு ஒவ்வொருவரும் தங்கள் பங்கை (நல்லதோ கெட்டதோ) அளிப்பது போல நீங்களும் அளிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கியக் காரர்களும் பிற கலைஞர்களும் ஒரு மசுத்துக்கும் ஸ்பெஷலும் இல்லை மண்ணும் இல்லை. நீங்கள் சமூகத்தின் மனச்சாட்சிகள் அல்ல, அச்சமூகத்தின் அங்கம் மட்டுமே. நன்றி… மசாலா கலந்து பரிமாற உங்களுக்குத் தெரிந்தாலும், நீங்களும் தோசையர்களே! உங்களுக்குள் இல்லாத பொச்சரிப்புகளும் சண்டைகளும் அசிங்கங்களும் – பிற மக்களுக்கு இருக்கிறதா என்ன? சும்மா பம்மாத்து பண்ணவேண்டாம், தயவுசெய்து…
மேலும் – ஒரு சராசரி அஎழுத்தாள சாதாரணனின் நேர்மை+அறத்தின் அளவு, ஒரு சராசரி தமிழ் இலக்கிய எழுத்தாளனின் அறம்சார் மனப்பான்மையின் அளவை விட அதிகம். ஆக நீங்களே உருவாக்கி உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிவுயர அறப் பீடங்களிலிருந்து தாங்கள் தயவு செய்து கீழே இறங்கி வரவும். நன்றி.
…கொஞ்சம் புலம்பி விட்டு, அவருடைய ஆதர்ச செல்லமான Marquis de Sade ஐயாவை, வம்புக்கு இஸ்த்துவுட்டுக்கினே இப்படி அட்ச்சிவுடுகிறார்:
” the 2002 Gujarat riots where a foetus was cut out of a woman’s stomach with a machete “
இந்தப் பரப்புரைப் பொய்க்கு ஒரேயொரு காத்திரமான, உண்மைகளின் மீதான, சரிபார்க்கத்தக்க தரவாவது இருக்கிறதா?
அப்படி அவருக்கு முடியாத பட்சத்தில் – இந்த வதந்தியை, வதந்தி என்று ஒப்புக்கொண்டு, இப்படி வெட்கமில்லாமல் பொய் சொன்னதற்கு, சாரு மன்னிப்புக் கேட்கத் தயாரா?
நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகத் தயாரா?
ஆனால்… இந்த ஜந்துவாராவது, அதனைச் செய்வதாவது…. அவர் செய்யவே மாட்டார்.
மானங்கெட்டு ஈனப்பொய் பேசியே காலட்சேபம் செய்யும் சாரு, ஒரு புளுகுணி மாங்கொட்டை. அதுவும் அழுகல். மன்னிக்கவும்.
இந்தக் கோலாகலக் கொண்டாட்டப் புளுகருக்குக் கீழே, அவருடைய முட்டாள் லீலைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, ஒரு விடலை விசிலடிச்சான் விசிறி கும்பல், ஆராதனை. ரெமி மார்ட்டின் அபிஷேகம். செல்ல நாய்க்குப் பொரை உபயம்.
ஐயா தொடர்கிறார்…
” After all, what is a Tamil writer but lowly scum? “
அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன். இது ஒரு சரியான தன்னிலை விளக்கம். அது மட்டுமல்ல, (மிகச் சில விதிவிலக்குகளுடன்) இது ஒரு பொதுநிலை விளக்கமும் கூட!
நன்றி, சாரு.
சரி. அவருக்கு, கமல்ஹாஸனும் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.
ஆனால் அவர்களை, அவர்களுடைய கூறுகெட்ட விசிறிகள் – ‘அதிமனித ஆராதனை’ செய்கிறார்கள் என்று புலம்புகிறார். (ஏன் ஐயா, உங்களைப் போன்ற அலக்கியவாதிகளை, ஆராதனை செய்யும் கும்பல்களைப் பற்றி ஏதாவது நினைத்துப் பார்க்கிறீர்களா?)
கமல்ஹாஸன் தன்னைக் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் கருதிக்கொள்வது சரியில்லை என்கிறார். (ஆனால் ஐயா, நீங்கள் உங்களை அப்படிக் கருதிக்கொள்வது மட்டும் சரியா? நொபெல் பரிசு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுபோல பிலாக்கணம் வைப்பது எந்த விதத்தில் சரி?)
…ஒரு வழியாக, மகத்தாக உளறிக்கொட்டிவிட்டு, பாபுஜி பற்றி ஏதோவொன்றை எழுதிவிட்டு தன் அரைகுறை ஆங்கிலக் கட்டுரையை முடித்துவிட்டார்.
எனக்கும் புல்லரிப்பு. ஏதோ என்னுடைய சொந்த அரைவேக்காட்டு ஆங்கிலக் காட்டுரையைப் படித்தது போல ஒர்ரே புளகாங்கிதம்.
-0-0-0-0-0-
தம் தமிழ் ப்ளாக் எழவில் இப்படியொரு பதிவை இட்டிருக்கிறார்…
“இந்தியா என்றால் என்ன? அதன் மக்கள்தானே? அதன் மக்கள் தொகையில் கணிசமான பேர் ரேப்பிஸ்டுகளாக இருக்கும் போது நான் எப்படி இந்தியா பற்றிப் பாராட்டி எழுத முடியும்? “
உங்களுக்கெல்லாம் ஒரு ‘எழுத்தாளர்’ பட்டம், உங்களைப் போன்ற தகுதியற்ற அட்ச்சுவுட்டாலஜிஸ்டுகளுக்கெல்லாம் வால்பிடிக்கும் ஒரு விடலைக் கூட்டம்!
அக்மார்க் அரைகுறைகள், வேறென்ன சொல்ல!
“ஆனால் இன்றைய நாட்டு நடப்பு ஒரு வீடே தீப்பற்றி எரிவதைப் போல் உள்ளது.”
சும்மா சும்மா டீவிமுன்னே பப்பரப்பா தினசரிகள் முன்னே லிபரலாக மஞ்சள்காமாலைப் பார்வையுடன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு எழுதித்தள்ளிக்கொண்டிருந்தால் இப்படித்தான் இருக்கும்.
மேலும் ஐயாவின் வயிற்றில் பொறாமைத்தீ எழவு வேறு உள்ளே எரிந்துகொண்டிருக்கிறதோ என்னவோ!
எப்படி இருந்தாலும் – இப்படியா, துளிக்கூட வெட்கமற்று இப்படி அட்ச்சிவுடுவார்கள்? இம்மாதிரி ஓநாய் ஓலங்களை அள்ளித்தெளிப்பதை விட வேறு வேலையே இல்லையா இவருக்கு? (உதாரணத்துக்கு முஷ்டிமைதுனம்??)
” எனவே இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும் நிலை வரும் வரை – அதற்கு இன்னும் 1000 ஆண்டுகள் ஆகலாம், அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் – நான் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தே எழுதுவேன்.”
பல ஆண்டுகள் முன் நீங்கள் – வறுத்த ஈசல் பூச்சிகளைச் சாப்பிட்டால் உடனடியாக வரும் நன்மை (எல்லாம், வழக்கம்போலவே உங்கள் பாலியல் மோரியல் அவியல் எழவு அரைஞாண்கீழ் டிங்டாங் குவியம் பற்றியதுதான்!) பற்றியெல்லாம் விலாவாரியாக அட்ச்சிவுட்டிருந்ததுவேறு இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது….
தமிழகம் உங்களைப் போன்றவர்களின் கழிசடை வீரியத்தை இன்னும் 1000 ஆண்டுகள் தாங்கவேண்டுமா என்றும் பதட்டமாகவே இருக்கிறது. :-(
மேலும் பிலாக்கண உளறல்கள்…
” என்னால் முடிந்தது, ஐரோப்பியர்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டும். இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள் ரேப் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் முலைகளில் தீக்கங்குகள் நசுக்கப்படுகின்றன. இங்கே குழந்தைகளின் ஜனன உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. இதை நான் சொல்லியே ஆக வேண்டும். சொல்லிக் கொண்டே தான் இருப்பேன். “
மேலும், நீங்களே 2011 வாக்கில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் செயல்பட்டதை மறந்துவிட்டீரோ?
ஆனாலும், ஐயா! பிதாமகரே! உங்களுடைய அற்ப வாந்தி எழவையெல்லாம் எவ்வளவு ஐரோப்பியர்கள் படிக்கிறார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்?
அப்படியே படிக்கிறார்கள் என ஒரு குசுவுக்கு வைத்துக்கொண்டால்கூட – அவர்களுக்கு உங்கள் வழக்கமான பொய்களையும் ஊதிப் பெருக்கல்களையும் இனம் கண்டுகொள்ள முடியாதா?
பரிசுத்த பேடித்தனம், வேறென்ன சொல்ல!
“இங்கே குழந்தைகளின் ஜனன உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன.”
இதன் மூலமாக, நீங்கள் ஒவ்வொரு அரேபிய இஸ்லாம் வழி முஸ்லீம் குழந்தையைப் பற்றியும் கரிசனத்துடன் நல்ல அறிவுரைகளைச் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்குழந்தையும் ஸுன்னத் செய்யப்படுவதை எதிர்த்துத் தைரியமாகப் பேசுவதற்கு நன்றி.
மேலும் முஸ்லீம் பெண்குழந்தைகளுக்கும் இப்படி ஜனன உறுப்பைச் சிதைப்பதை இந்தியாவிலும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் உங்களுக்கே உரித்தான தெகிர்யத்துடன் எதிர்த்துக் குரல் கொடுப்பீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
…அய்யோ சாரு, நான் கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களுக்கெல்லாம் எங்கே அம்மாதிரி தைரியம்? கவலைப் படாதீர்கள். தொடர்ந்து உங்கள் ப்ரேண்ட் மதச்சார்பின்மையுடன் குண்டுச்சட்டியில் இலக்கியக் கழுதையை ஓட்டிக்கொண்டிருக்கலாம்.. வாழ்த்துகள்!. :-)
ஹ்ம்ம்… இப்படியே நீங்கள் பொய்களையும் சாருசுருட்டுகளையும் ஊதித் தள்ளிக்கொண்டிருந்தால், நேர்மை துளிக்கூட அற்றுச் செய்திகளைத் திரித்துக்கொண்டிருந்தால், போலி ஆவேஷ அறச்சீற்றத்தால் பொங்கிப் பொங்கல் வைத்தால் – உங்களுக்கு கடை விரித்து வியாவாரத்தை மேலெழுப்பி வளர்ச்சி காண முடியும்தான்.
+தமிழகமும் பாரதமும் – ஏன், உங்களுடைய செல்ல முட்டாள் வாசகர்களுமேகூட நல்லாவே வெளங்கிடுவார்கள்தாம்… சந்தோஷமா?
யோசிக்கிறேன், இப்படிப் படுமோசமாகவும் பொய்பொய்யாகவும் பாரதத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை விரிக்க, அதுவும் வெளி நாட்டான்கள், ‘கீழை’ நாடுகளைப் பற்றிச் சப்புக்கொட்டிக்கொண்டு கேட்க விரும்பும் செய்திகளை ஆனந்தமாகப் பரப்புரை செய்ய – வக்கிர மனதும், புளுகுணி மாங்கொட்டைத்தனமும் மிக்க ஆசாமிகள் – தம்மை லிபரல், ஸெக்யூலர் என தன்னைக் கருதிக்கொள்ளும் கடைந்தெடுத்த அயோக்கியர்களால்தாம் முடியும்.
ஆகவே, என் செல்ல சக ஏழரைகளே! ஒரு விண்ணப்பம்: உடனடியாகத் தேவையான நிதி சேகரித்து, சாரு நிவேதிதாவையும் (அவருடைய செல்ல நாயையும்) தென்னமெரிக்காவுக்கு ஒருவழிப் பார்ஸலில் அனுப்பினால் ஒழிய, தமிழகத்துக்கு விமோசனமேயில்லை.
ஆமென்.
என் ஆசை நிறைவேற, காத்திரமான தரவுகளை அனுப்பவும். நன்றி!
கடைசிப்பின்குறிப்பு: தன் கடன் பிணி செய்துகொண்டு கிடப்பதேயென அலைந்துகொண்டிருக்கும் தமிழ் இலக்கிய அற்பங்களில், தொடர்ந்து செயலூக்கத்துடன் நற்பிணியாற்றும் என் அண்ணன் சாருநிவேதிதா, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒருமாதிரி அதிசய அற்புதர்தானே?
—
July 20, 2018 at 10:50
இப்பிடி எல்லாம் எங்க தலைவரை தரக்குறைவாக பேசிய உங்களை கடுமையாக கண்டிக்கின்றோம்
இவன்
(ஏழரைகளில் ஒருவன்)
மற்றும் தென் அமெரிக்கா இலக்கிய முன்னேற்ற கழகம் பெரு வட்டம்
July 20, 2018 at 10:52
இப்பிடி எல்லாம் எங்க தலைவரை தரக்குறைவாக பேசிய உங்களை கடுமையாக கண்டிக்கின்றோம்
இவன் ஏழரைகளில் ஒருவன் மற்றும் தென் அமெரிக்கா இலக்கிய முன்னேற்ற கழகம் பெரு வட்டம்
July 20, 2018 at 12:18
Sir How come Mamallan is not in your radar for the parody or spoof ?
We owe you a lot for the best medicine rendered to us i.e laugther.
Regards
July 20, 2018 at 12:34
நிறைய எழுதாவிட்டாலும் நன்றாக எழுதியிருப்பவர் இந்த மாமல்லன். (இவர் 2014வரை எழுதியவற்றை, முழுவதும் படித்திருக்கிறேன்; பின்னர் படிக்கவாய்ப்பில்லை)
இவர் எழுத்துகளை ரசித்திருக்கிறேன். ‘குமாஸ்தாவின் நாற்காலி’ (? இக்கதையின் சரியான தலைப்பு மறந்துவிட்டது) கதையை ஒருமுறை நாடகமாக – என் பிள்ளைகளுடன் போட்டிருக்கிறேன். (அது, எனக்குத் திருப்திகரமாக வரவில்லை)
இவரைத்தான் (நான் படித்தவரையில்) 50+ வயதான தமிழ் ‘இலக்கிய’ எழுத்தாளர் வரிசையில் முன்வைப்பேன்.
இவர் ஒரே மோஶ்தரில் டெம்ப்லேட் வைத்துக்கொண்டு எழுதுபவரல்லர். விதம்விதமாக எழுதியிருக்கிறார். மேலும் (எனக்குத் தெரிந்து) தகிடுதத்தங்களில் ஈடுபட்டவருமல்லர். ஆகவே.
(சில வாரங்கள் முன் எனக்குத் தெரியவந்த விஷயப்படி இவர் முனைந்து செய்தார் என நான் நினைக்கும் விக்கிரமாதித்தன் கிண்டில் புத்தக விவகாரம் ஒன்றைப் பற்றி எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. நான் முற்காலத்தில் அதனுடன் தொடர்புள்ளவனாக இருந்தேன்; ஆனால் இப்போதைக்கு அதை எழுதவேண்டாமென்று விட்டுவிட்டேன்; பெரிய விஷயமில்லைதான்!)
July 20, 2018 at 13:03
Thanks a lot Sir for your straight clarification. In case you’re reading his tweets, scope may arise . Anyway, being in your books is good for him (sort of a blessing).
Truly appreciate your efforts in making us laugh day in day out.
Regards
July 20, 2018 at 14:24
Thanks, but then I do not read many tweeters Enough on my plate already. So.
BTW, who are you? (contact me on mail, if you would like to)
__r.
July 20, 2018 at 13:08
Sir – Are you checking on articles of ABHILASH CHANDRAN, ARAVINDAN KANNIYAN ..both impart ‘knowledge’ a lot . Guess you have not meant JEYAMOHAN in your 3rd paragraph of above article.
Thanks again for your effortless mastery of writing – we request your prominence in main-stream .
Regards
July 20, 2018 at 14:25
1. I don’t. I used to read AK, but have given up.
2. No. I meant him.
__r.
July 20, 2018 at 17:53
Bravo Ram! You let it rip! Exactly my thoughts, but would never be able to express as eloquently as you do!
Regards from one of the 7.5 :)
July 21, 2018 at 07:59
As you’ve rightly observed, he certainly has the flair for writing despite his checkered past.
July 21, 2018 at 08:05
ஐயா, ஆமாம். “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?”
July 21, 2018 at 14:38
[…] நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் […]
July 22, 2018 at 18:51
ஐயா ,
இப்பொழுதுதான் கவனித்தேன்.
உங்களுடைய கட்டுரையில் ஓர் பெருங்குறை உள்ளது.
நீங்களும் உங்கள் செல்ல எஸ்ரா போல குறைகளுடன் எழுத ஆரம்பித்து விட்டீர்.
இது மன்னிக்க முடியாதது, மேலும் இனிமேல் உங்களுக்கு எஸ்ரா பற்றி எழுத எந்த (சர்வதேச) தகுதியும் இல்லை என்றறிவீராக.
சரி. நீங்கள் செய்த தவறை நீங்களே படித்து திருத்தி கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
ஆகவே,,
உங்களுக்கு உங்கள் தவறை விளக்குவது எனது கடமை.( shop ink (c) எஸ்ரா)
எப்படி நீங்கள் இப்படி எழுதலாம் ???
” தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒருமாதிரி அதிசய அற்புதர்தானே?”
இன்னும் உங்களுக்கு புரியவில்லையா ??? அல்லது புரியாத மாதிரி இருக்கிறீர்களா ??
அந்த வாக்கியம் இப்படி இருந்தால்தான் சரி.
“தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒருமாதிரி அதிசய அற்பதர்தானே?”
உங்களைப்போன்ற ஒரு தகுதியான கட்டுரையாளரிடம் நான் இது போன்ற “சில்லி மிஸ்டேக்கை” எதிர் பார்க்கவில்லை. :-(
July 23, 2018 at 14:23
;-)
July 25, 2018 at 09:27
[…] […]
July 26, 2018 at 20:25
[…] […]
July 28, 2018 at 05:57
[…] […]