‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’
July 21, 2018
‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன்.
அதனை, ஆச்சரியத்துக்குரிய வகையில், சில சக½கள் படித்து – அந்த 7½ பேர்களில் இரு அன்பர்கள் நிதியுதவி செய்வதாகத் தெரிவித்து, அவருடைய வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கின்றனர்.
ஹ்ம்ம்… இந்த ஆசாமிகள் உண்மையாகவே கொடுப்பார்களா – அல்லது நக்கலாகவோ அல்லது விஷய ஞானத்துக்காகவோ(!) கேட்கிறார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது, சரியாகத் தெரியவில்லை – ஆனால், எது எப்படியோ எனக்கு, மானுடத்தின் தனித்துவத்திலும் நெகிழ்விலும் அறவுணர்ச்சியிலும் தானதருமங்களிலும் கடைத்தெருத்தேங்காய்களிலும், வழிப்பிள்ளையார்களிலும் நம்பிக்கை கொஞ்சம் தாஸ்தி என்பதைப் பதிவுசெய்கிறேன்.
ஆகவே!
இன்னொன்று: நீங்கள் பாரதத்தின் எதிர்கால மேன்மையிலும் வளர்ச்சியிலும் அதன் அங்கமாகத் தமிழக முன்னேற்றத்திலும் நம்பிக்கை வைப்பவரானால் – இம்மாதிரி அஹிம்ஸாவழி ஏற்றுமதி விவகாரங்களுக்கு உதவுவதைத் தவிர, உங்களுக்கு வேறு வழியிருக்கிறதா என்ன?
-0-0-0-0-0-
சரி.
உங்களுக்கு முடிந்தவரை + முடிந்தபோதெல்லாம், இந்த “சாருநிவேதிதா தென்னமெரிக்க பரஸ்பர சஹாய நிதி” முயற்சிக்கு உதவவும். சிறுதுளி பெருவெள்ளம்.
அது இன்னமும் உருமாறி, கூடுவிட்டு வூடு பாய்ந்து, வூடு விட்டு நாடு பாய்ந்து – தென்னமெரிக்கப் பெரு வெள்ளம் என்று உருமாறினால், எனக்கு மகிழ்ச்சியே.
இந்த ‘பெனிஃபிட் ஃபண்ட்’ நிதி திரட்டலில் மூன்று விஷயங்கள்/பிரிவுகள் இருக்கின்றன:
ஒன்று: அவரையும், (அவருடைய செல்ல ஞமலி விருப்பப்பட்டால், அதையும்) பார்ஸேல் செய்து தென்னமெரிக்கா அனுப்புவதற்கு.
இரண்டாவது: அவர் திரும்பவர அவசியமில்லாமல், அவர் சகல சௌபாக்கியங்களுடன் அங்கேயே டேங்கோ[1] ஆடிக்கொண்டிருக்க மாதாமாதம் வாய்க்கரிசி (+ நாய்க்குப் பொரை) போடுவது.
அன்பர்களே! இவை இரண்டும் மிகவும் மிகமிக முக்கியம்.
மூன்றாவது: (கலகப்)பிரதியுபகாரமாக அவரிடமிருந்து ‘நான் இனிமேல் புலம்பவே மாட்டேன்‘ என்கிற ஒரு உத்திரவாதத்தைப் பெறுவது. (இதை சாய்ஸில் விட்டுவிடலாம்; ஆனால் முதலிரண்டும் முக்கியமானவை)
இம்முயற்சி திருவினையானால், அன்பர் ½எஸ்ரா அவர்களை அடுத்ததாக ஜப்பானுக்கு ஓருவழி பார்ஸேல் செய்ய ஒரு எண்ணம். என்ன நினைக்கிறீர்கள்?
இந்த வழி ஒத்துவந்தால், ஒருவர் பின் ஒருவராக எல்லா பிதாமகர்களையும், போர்க்கால ரீதியில் ஏற்றுமதி செய்து, தமிழகத்தில் சுபிட்சமும் தன்னிறைவும் நிலவச் செய்யலாம் அல்லவா? (பாவம், பத்ரி சேஷாத்ரிக்கும் அவர் ப்ளாக்கில் இடதுபக்கச் சட்டகம் இருக்கும் இடம், கொஞ்சமாவது ஃப்ரீ ஆவும், என்ன நான் சொல்வது?)
குறிப்பு: எனக்கு பெரு + ஜப்பான் தேசங்கள், அவற்றின் மக்கள்மீது ஒரு வெறுப்புமோ அல்லது வாய்க்காத் தகறாரோ – ஒன்றும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
எது எப்படியோ – ‘திருவிதாங்கோ சமஸ்தானம் எனவொரு நடனப் பாரம்பரியம் தென் தமிழக-கேரளத்தில் இருந்தது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்’ என டமாலென்று அட்ச்சுவுடாமல் இருந்ததற்கு, ½சாரு அவர்களுக்கு நன்றி நவிலாமல் கிண்டல் செய்தால், நான் பேதியில்தான் போவேன்!
சாருநிவேதிதா அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
தயவுசெய்து, இவருக்கு முடிந்த அளவு உதவி, தமிழகத்தையும் பாரதத்தையும் கடைந்தேற்றவும். நன்றி.
:-(
—
July 22, 2018 at 08:08
We need Charu for comic relief in these troubled times!
However, I am willing to part with half my kingdom to sponsor the ‘see go’ (parcel) that would transport ‘Amaam Pachchai’ (Yes Raw) to Japan. Japan Ozhigha
July 22, 2018 at 11:06
ட்டேங்கோ என்பது தான் சரி என்று சாருக்கும் தெரியும்… குறுக்க மறுக்க அவ்வப்போது தாங்கோ தாங்கோ என்றால் தானே ”ஓ பாவம் எதாவது தரச்சொல்கிறார்” அல்லது ஞாபகப் படுத்துகிறார் என்று தெரியும்.
July 23, 2018 at 14:24
;-) (courtesy: Rahul Van Winkle)
July 25, 2018 at 09:26
[…] […]
July 26, 2018 at 20:25
[…] […]
July 28, 2018 at 05:57
[…] […]