ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்!
July 17, 2018
இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்!
ஆனந்த விடலைக் குசுமத்தின் மீதான என் பிரமிப்பையும் அளப்பரிய மரியாதையையும், என் படுசெல்லங்களான ஏழரைகள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
விஷத்திற்கு நேராக வருகிறேன்.
…
ஜிவ்வென்று பறந்துவந்து என் மடியில் உட்கார்ந்துகொண்ட கழுகார், உன் காதைத் திற, ஒரு ரகசியத்தைச் சொல்லவேண்டும் என்றார். சரி என்று என் ஜிப்பைத் திறந்து கழுகாருக்கு ஜிலேபியைக் கொடுத்தேன்.
முறைத்தார்.
கோபப்படாதீர்! இஞ்சி முறைப்பா வேண்டுமா அல்லது விகடன் ஆசிரியப்பா வேண்டுமா எனக் கேட்டேன். குபுக்கென்று சிரித்துவிட்டார்.
ஜிவ்வென்று கிளம்பி அண்ணாசாலையை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு என் தோளில் உட்கார்ந்து கிசுகிசுத்தார்.
உம் காதைத் திறந்தால் ஜூனியர் குசுமை விடலைக் கோவணாண்டியை விட்டு ஏரோட்டச் செய்வேனே என்றார்.
நான் பதிலுக்கு, “எனக்கு யுவகிருஷ்ணாவின் போலி எழுத்துகளையும் அட்டைக்காப்பியும் ரொம்பவே பிடிக்குமே! ஹைய்யா!!” என்றேன்.
பதிலுக்கு மந்தகாசப் புன்னகையுடன் அவர் சொன்னது: – நான் அவரைப் பற்றிச் சொல்லவில்லை, அவர் பாவம், நடிகைகளின் உள்ளாடை, உள்ளொளி, பிதுங்கிவழியும் பாற்சுரப்பிகள், சம்பந்தமேயில்லாமல் கொச்சபம்பா போன்ற திராவிட ஆன்மிக விஷயங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்…
அப்படியா என்ன, பிடியுங்கள் இந்த கடலை உருண்டையை என்று அவர் வாய் பக்கம் ஒன்றை வீசினேன்; கபக்கென்று அதனை கம்பீரமாகப் பிடித்து கபாலென்று முழுங்கிவிட்டு, ஒரு திராவிட ஏப்பம் விட்டார்.
“விகடன் பருப்பு ஆசிரியராக அதிஷா எனும் ஒரு சூப்பர் விடலையை நியமித்திருக்கிறார்களாம். இதனால்…” என விஷயத்தை உடைப்பதற்குள்ளேயே லொக்லொக் என இருமினார். உடனே அவர் வாயில் பெனட்ரில் இருமல் மருந்தை விட்டேன்.
“ஆனால் கழுகாரே, அதிஷாவுக்கு ஒரு மசுத்துக்கும் தகுதியே இல்லையே! வெறுமனே வதந்திதாசனாகவும் மகத்தான போராளித்தன அரைகுறையாகவும்தானே அவரை நாம் அறிவோம்?” என நான் இழுத்தேன்.
கரகரக் கருணாநிதித் தொண்டையில் தொடர்ந்த அவர், “… இதனால், தமிழக விடலைகள் மேன்மேலும் விடலைக் குசுமத்துக்கு அமோகமாக ஆதரவு தந்து ஜெய ஜெய விடலை போண்டா விகடா எனப் பஜனை செய்துகொண்டே வருவார்களாம்! விற்பனை அதிகமாகுமாம்!!” என்று சொல்லிக்கொண்டே டர்ரென்று விட்டார்.
மூக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “அது எப்படி? அவர் நுங்குப் பனைக்கும் விற் பனைக்கும் ஆறுவித்தியாசங்கள் அறியாதவராயிற்றே! மேலும், அவர் ஒரு அதிசராசரி அயோக்கிய சிகாமணிவேறே?” என நான் கேட்க நினைப்பதற்குள் ஜிவ்வெனப் பறந்துவிட்டார்.
:-(
சுபம்.
-0-0-0-0-0-
ஆனந்தவிடலைக் குசும்பம் என்ற உதிரிக் கும்பலின் முடிவின் ஆரம்பமாக இது இருக்கட்டும்.
தொடர்ந்து அனைத்து உதிரிப் பத்திரிகைகளும் (தமிழ் இந்து தினசொரி உட்பட) பிற ஊடகப் பேடிகளும் வடக்கிருந்து சாகட்டும்.
ஆமென்.
—
July 18, 2018 at 14:09
முடிவின் ஆரம்பம் என்று நினைக்கும் அளவு உங்களைப்போல் நான் ஆப்டிமிஸ்ட் அல்ல. விகடனின் பொறுப்பில் விடலை அமர்ந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும் என்று கேட்டால் அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றே தோன்றுகிறது. (ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் மன்னிப்பர்களாக!)
July 18, 2018 at 15:52
:-( ஆனால் நான், தேடிச்சோறு நிதம் தின்று வீழும் என நினைக்கிறேன்…
July 19, 2018 at 21:08
விகடனின் வீழ்ச்சி ஹிந்துவிற்கு சளைத்ததல்ல!