அணுகுண்டைத் தயாரிக்கும் கொலைவெறி ஆர்எஸ்எஸ்! :-(

June 19, 2018

இத்தனை நாட்கள் அரசல் புரசலாக இருந்த விஷயங்கள், பையில் இருந்த பூனைக்குட்டிகள், வெளியே வந்தேவிட்டன!

பாவிக் காவிகள், ஹிந்துத்துவர்கள், பார்ப்பன பனியாக்கள், உயர்ஜாதி வெறியர்கள், சங்கிகள், பக்தாள்கள், பழமைவாதிகள் – இந்தியாவையே துப்புரவாக ஒழிக்காமல் விடமாட்டார்கள் போலும்…

…எனக்குச் சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது.

நான் ஹிந்துத்துவன் தான். ஆனால், ஒரு பக்கா அஹிம்ஸாவாதியாகிய நான், ஹிந்துத்துவத்தின் மீதான என் நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டேன் என்றே சொல்லிவிடலாம். :-(

அதுமட்டமில்லாமல், ஒரு படி கீழேயே போய் – சமத்துவ ஸெக்யூலர் இடதுசாரி திராவிட ஜோதியிலேயே கலந்து ஒருவழியாக ஐக்கியமாகிவிடலாமோ எனக்கூட கடும்யோசனையில் இருக்கிறேன், என்ன செய்வது சொல்லுங்கள்… :-(

நண்பர் ஒருவர் திடமாக அறிவுரை கொடுத்ததன்பேரில் நேருவியஸோஷலிஸ்டாக (அவரைப் போலவே Nehruvian(!) Socialist(!!)) ஆகிவிடலாமா எனவொரு எண்ணமும் வந்தாலும், எனக்கு இன்னமும் இந்த நேருவியம் என்றால் என்ன அந்த ஸோஷலிஸ்ம் என்றால் என்ன என்பதெல்லாமே சுத்தமாகப் புரியவில்லை – ஆகவே எங்கேபோய் முட்டிக்கொண்டு எப்படித்தான் இவ்விரண்டு ஜந்துக்களும் புணர்ந்து வெளிக்கொணரும் ஜீவாத்மாவை, விஸேஷவிசித்ராத்வைத ரீதியாக அறிந்துகொள்வது என்கிற மனக்கிலேசமும் இருக்கிறது. :-((

…நண்பரும் பலமுறை முயற்சித்தார், வாய்தா வாங்கிக்கொண்டார், புதுவிவாதக்கூறுகளுடன் மறுபடியும் வந்தார்… இப்படிப் பல சுழற்சிகள்! ஆனாலும், என் மரமண்டைக்கு ஏகப்பட்ட அடிப்படை சந்தேகங்கள், அவருக்கும் பொறுமையில்லை; எது எப்படியோ, இவரும் என்னை ‘ஹிந்துத்துவா மூடன்’ அல்லது ‘மதவெறியன்’ அல்லது ‘விதண்டாவாதக்காரன்’ அல்லது ‘பாப்பாரக்கூ’ என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு ஓடாமல் இருந்தால் சரி!

ஆக, நண்பர்களற்று, சுயவெறுப்பில் மூழ்கவிருக்கும் எனக்கு விமோசனம் உண்டா? :-(

-0-0-0-0-0-

சரி – அணுசக்தி பராசக்தி அண்டச்சக்தி பிண்டச்சக்தி அண்டரெண்டப் பறவைச் சக்தி என இத்தனை நாட்கள் பேசிக்கொண்டிருந்தவர்கள், பேசிக்கொண்டு மட்டுமே இருந்திருக்கிறார்கள் என நினைத்து ஏமாந்துவிட்டோமே என்பதை நினைத்தால்…

…ஆனால் நல்லவேளை! வெள்ளைக்காரர்கள், சராசரி இந்தியர்களை விட புத்திசாலிகள் என்பதை நாமறிவோம். அகழ்வாராய்ச்சி செய்வதில் அவர்களுக்கிணை அவர்களே என்பதையும்தான்! ஒரு எடுத்துக்காட்டாக, தமிழ், தமிழகம், தொல்லியல், வரலாறு, என எந்த எழவை எடுத்தாலும், பெரும்பாலும் தமிழகத்தில் அவற்றைக் குறித்து தீர்க்கமாகவும் காத்திரமாகவும் ஆராய்ச்சி செய்பவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா, சொல்லுங்கள்?

வெள்ளைக்காரர்கள் இல்லாவிட்டால் பெரியாரும் அண்ணாத்துரையும் சொன்னதுபோல, நமக்கு கதிவிமோசனமே இருந்திருக்காதுதான்! நன்றி வெள்ளைக்காரர்களே!

-0-0-0-0-

சரி. இப்போது இந்த எழவெடுத்த ஆர்எஸ்எஸ் அணுகுண்டு பகீர் பற்றிப் பார்ப்போம்!

முதல் புத்தகம், இரண்டு பாப்டிஸ்டுகள் எழுதியது [1] – ஆர்எஸ்எஸ் காவிகள் எப்படி அணுவைப் பிளக்க ஆரம்பித்தார்கள், அணுவைப் பிளப்பதன் மூலம் இந்தியாவைப் பிளந்து மறுபடியும் இன்னொரு பாகிஸ்தானை (இதற்கு அவர்கள் வைத்திருக்கும் ரகசியப்பெயர்: ‘பாக்கி பாகிஸ்தான்‘) எப்படி உருவாக்கி இந்திய முஸ்லீம்களை அங்கு தள்ளுவது என்பவற்றின் சித்தாந்த ஆரம்பங்கள் குறித்த புத்தகம்; அவசியம், அனைவரும் இதனைப் படிக்கவேண்டும்.

ஒரு ஜெஸூய்ட் பாதிரியால் எழுதப்பட்ட இரண்டாம் புத்தகம்[2], ஆர்எஸ்எஸ் குறித்த ரகசியங்கள் பற்றியது. பாபரும் ஔரங்கஸெப்பும் – ஏன், அனைத்து மொகல்லாயர்களும் லாயருக்குப் படிக்காதவர்களும்கூட ஆர்எஸ்எஸ் காவிகள் என்கிற மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட உண்மையை, இது பட்டென போட்டுடைக்கிறது.

 

அக்பர், ஔரங்கஸெப் போன்றவர்கள் செய்த எடுத்துக்காட்டுகளான ஹிந்துகொலைகளும் அட்டூழியங்களும் – ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒற்றுமை இழக்கச் செய்து பிளவுபடுத்தி, ஒரு ஹிந்தவி சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக போட்ட அச்சாரம் எனத் தெளிவாக நிறுவுகிறது.

மூன்றாவது புத்தகம் – இது ஒரு மதம் மாறிய இஸ்லாமியத் தீவிரவாதியால் எழுதப் பட்டது.[3] ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகளை வெட்ட வெளிச்சமாக்குவது.

 

இதன் அட்டைப் படத்தின் ஒரு பகுதியை மட்டும் மேலே கொடுத்திருக்கிறேன்; முழுவதையும் பார்த்தால் குலை நடுங்கும் என்பதால் இன்னொரு சிறிய பகுதியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஆர்எஸ்எஸ் களப்பணி என்றாலே, குறைந்தபட்சம் வீச்சறிவாள் வன்முறைதான் என்பதை இன்னமுமா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை? :-(

நான்காம் புத்தகம் ஆர்எஸ்எஸ் நச்சு வளையத்தின் சமூகவலைத்தளப் பின்னல்கள் வேலை செய்யும் விதங்களைப் பற்றியது[4].

மதச் சார்புக் கண்டெண்ட் என்பதை எப்படி உருவாக்குவது, அவற்றை எப்படி மாஃபியா ஸிண்டிகேட்டுகள் மூலம் கொலைவெறித்தனமாகப் பரப்புவது, வதந்திகளை வளர விடுவது என்பது குறித்தது.

இம்மாதிரிப் பரப்புரைகளுக்கு, பொய்ப் பிரச்சாரங்களுக்குப் பெயர்போன வாடிகன் போப்பையே இது அசரவைத்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! :-(

உங்கள் பார்வைக்கு நான் கொணர விழையும் ஐந்தாம் புத்தகம் – இயற்கையாகவே ஐந்தாம்படை [5]பற்றியது.

 

இதில் ஆர்எஸ்எஸ் சார்புப் பாவி ஹேக்கர்கள், இணையத்தில் உள்ள மதச்சார்பில்லாத ஸர்வர்களை முடக்கும் விதங்களைப் பற்றி, விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள்…

இம்மாதிரிக் கொடுமையான விஷயங்களை ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் ஸெல்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதைப் பற்றி ஒரு மூச்சோ பேச்சோ – சுத்தமாகவே தமிழகத்தில் இல்லாமல் இருப்பது, அனைத்துத் தமிழக ஊடகப்பேடிகளின் கள்ளமௌனத்தைத் தானே காண்பிக்கிறது?

எல்லோரும் அவர்கள் வழக்கம்போலவே பொட்டி வாங்கிக்கொண்டு விட்டார்கள், அயோக்கியர்கள்!

சரி. கீழ்கண்ட காவிகள் யாரென்று தெரியுமா?

இவர்களுடைய வஞ்சகப் புன்னகையையும் காவியுடையையும் பார்த்தாலே, உடனடியாகப் புரிந்துகொண்டிருப்பீர்களே!

உமாகாந்த் ரமாகாந்த் என்ற உண்மைப் பெயருடையவர்கள் இவர்கள். இவர்கள்தாம் ‘குண்டேசா‘ சகோதரர்கள் – சங்கப் பரிவாரங்களுக்கு அணுகுண்டைத் தயாரிக்க தொழில் நுட்ப ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடைய பங்களிப்பை மெச்சி ஆர்எஸ்எஸ் இவர்களை குண்டேசாக்கள் என்றே அழைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! :-(

பொதுவாகவே, தரம்வாய்ந்த ஹிந்துஸ்தானி பாடகர்கள் எனும் போர்வையில்[6] ஆர்எஸ்எஸ் காவி ஸ்லீப்பர் ஸெல்களாக வளையவரும் இவர்களுடைய முகத்திரைகள் கிழிக்கப்படப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

-0-0-0-0-0-

தமிழகத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளரும் அணுக்கருசக்தியை ஆழ அறிந்தவருமான எஸ். ராமகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசும்போது
“அணுகுண்டினைப் புரிந்துகொள்ள அதனை அணுக்கமாக அணுகவேண்டும். அணு அணுவாக தம்மைததானே அறிந்துகொள்வதுபோல நாமும் அறிந்துகொள்ளவேண்டும். மதவெறியியக்கம் அணுவெறியியக்கமாக மாற இரண்டேஇரண்டு சிறுபிழைகள் செய்தால் போதுமே!

மேலும், அண்மையில் நான் ஜப்பான் சென்றபோது தெருவோரத்தில் நின்றுகொண்டு ஸூஃபி பாடல்களைப் பாடிகொண்டிருந்த ஒரு ஞானி சொன்னார் ‘பாம்புத்துவா நிக்குமா நிக்காதா?’ இதன் பொருள் என்னவென்றால் – முற்காலத்தில், பாம்பு என்று மானுடர்கள் கருணையுடன் கல்விட்டெறிந்து கொன்ற உயிரினங்கள், தம்மைத்தாமே உயிரூட்டிக்கொண்டு பாம்பாக உருமாறி நிற்கும், இந்துத்துவாவால் வெடித்துச் சிதறும் என்பதுதான்.

கொடுந்தனிமையில் எவ்வளவோ நாட்கள் இப்படி தன்னைதானே தான் பார்த்துக்கொண்டிருக்க உலகம் அசைந்துகொண்டிருக்கும். கூழாங்கல்லின்மீது ஒழுகியோடும் ஆறுக்குத் தெரியுமா தான் பின்னால் ஏழும் எட்டும் ஆகப்போவது?

ஆகவே ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்படவேண்டும் – என என் மங்கோலிய வாசகர் வட்டம் ஐநா சபையில் ஒரு கோரிக்கையை வைக்கப்போகிறது!”
இது குறித்து – பிரபல விமர்சகரும், பல்கலைவல்லுநருமான வெ. ராமசாமி சொன்னது:
“பேரறிவாளர் எஸ்ரா, அணுகுண்டினைப் பற்றியென்ன, தன் குண்டியினைப் பற்றிப் பேசக்கூடத் தகுதியற்றவர், அவரிடம் போய் இப்படியா கேட்பீர்கள்? நல்லா வெளங்கிரும்டா தமிழகம்!”
மதச்சார்பின்மைச் செம்மலும், கவிஞர் என மீளாப்பழி சுமத்தப்பட்டவருமான மனுஷ்யபுத்திரன், டீவி கேமராக்கள் தன் பக்கம் திருப்பப்பட்டதும் சொன்னார்:
“ஹிந்துத்துவா அணுகுண்டை எதிர்கொள்வதற்கு மதச்சார்பின்மை அணுகுண்டால்தான் முடியும். ஆகவே ஸெக்யூலர் அணுகுண்டை உருவாக்குவதற்கு திராவிடர்களால்தான் முடியும்.

தமிழக ஹிந்துத்துவப் பாம்புகளுக்குப் பாடம் புகட்ட அந்த திராவிட குண்டுக்கு துரைமுருகன் அல்லது மாலிக் காஃபூர் எனப் பெயரிடப்படவேண்டும்!

கருத்துப்படம்: திராவிட குண்டு

அனைத்து இஸ்லாமியர்களும் க்றிஸ்தவர்களும் இந்த மதச்சார்பின்மை குண்டுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்!”
இதற்கு, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பதிலளித்த – பொதுவாகவே விரசமாகவும் கண்ணியமற்றும் பேசி எல்லோருடைய வெறுப்பையும் ஏகோபித்துச் சம்பாதித்துக்கொள்ளும் வெ. ராமசாமி,
“முதலில் இந்த ராக்கதமூத்திர விலைமானுடர்கள், வாயால் திராவிடக் குசுக்களை விடுவதை நிறுத்தட்டும், நாற்றம் தாங்கமுடியவில்லை; பின்னர் மதச்சார்பின்மைக் குசுக்களை அமோகமாக விடலாம்….

சரி. அது கிடக்கட்டும். ஏனய்யா ஊடகப்பேடிகளா, வாந்தியாள உதிரிகளை மட்டுமே பொறுக்கி, பார்த்துப் பார்த்துப் போய் பேசி அவர்களுடைய உளறல்களை வாங்கி உய்வதை விட்டால் உங்களுக்கு வேறுவேலையே இல்லையா?”

என்றார்.

இதற்குப் பதிலடியாக, பகுத்தறிவாளச் செம்மல் மதிமாறனார் இயம்பியது:

“பார்ப்பனர்களை ஒழித்து தந்தை பெரியார் கனவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. அந்தக் கொலைவாளை எடடா!”

-0-0-0-0-

(அனைவருக்கும்) முற்றும். நன்றி.

அடிக்குறிப்புகள்:
[3] RSS and Atom in Action (https://www.amazon.com/RSS-Atom-Action-Building-Blocks/dp/1932394494/)
[4] Content Syndication with RSS (https://www.amazon.com/Content-Syndication-RSS-Ben-Hammersley/dp/0596003838/)
[5] Hacking RSS and Atom (ExtremeTech) (https://www.amazon.com/Hacking-Atom-ExtremeTech-Leslie-Orchard/dp/0764597582/)
[6] Gundecha brothers (http://dhrupad.org/gundecha-brothers/)

4 Responses to “அணுகுண்டைத் தயாரிக்கும் கொலைவெறி ஆர்எஸ்எஸ்! :-(”

  1. panagam Says:

    Atom was invented solely due to perceived technical limitations of RSS. Since it was standardized it has been offered as an alternative to RSS. However RSS remains ubiquitous and almost all modern newsreaders will take feeds in either format.

  2. panagam Says:

    Explanation from Steve palmer..

  3. panagam Says:

    உங்களை பல வருடமாக படிக்கும் ஏழரைகளில் அடியேனும் ஒருவன்

    இறுமாப்புடன்
    அ சேஷ்..

  4. Anonymous Says:

    பாவம் விட்டுருங்க அண்ணாச்சி :-) | ‘விலைமானுடர்கள்’ என்ன அழகான சொல்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s