தண்டுக்கீரை – குறிப்புகள்
June 12, 2018
பலப்பல ஆண்டுகளாக தோட்டம்போடுவதிலும், விதை சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன். தமிழ் அலக்கியத்துக்கு அப்பாற்பட்டு நான் மிகவும், ஆத்மார்த்தமாக விரும்பும் விஷயம் இது.
ஹ்ம்ம்ம்… மன்னிக்கவும். இது பொய். இக்காலத் தமிழ் அலக்கியங்களை நான் வாய்விட்டுச் சிரிப்பதற்காக மட்டுமே படிக்கிறேன்.
சரி. கீழேயுள்ள படம், என் மாடித்தோட்டத்தில் ஒரு பகுதி. பச்சையாக நிமிர்ந்து உயரமாக இருப்பவர் தான் ஹீரோ. விதைக்காக விட்டுவைக்கப்பட்டு, தனிமையில் இனிமை காணும் பேறுபெற்றவர். Amaranthus caudatus. (விதை வேண்டுபவர்கள் முகவரியுடன் எழுதினால், சுமார் ஒருமாதத்திற்குப் பிறகு, அவர்களுக்குத் தபாலில் சுமார் 5-10 க்ராம் விதைகள் அனுப்பி வைக்கப்படும்; அவற்றை விதைக்காமல் விரயப்படுத்தினால், உதையும் தபாலில் அல்ல, நேரிலேயே வந்து அன்பளிக்கப்படும்)
ஆனாலும் இந்த அளவு (என்னை விட உயரம்! ஹா!) வளர்ச்சியுடன் திமிறி நிற்கும் தண்டுக்கீரையை நான் இந்த ஆண்டுதான் பார்க்கிறேன். சுமார் ஆறேமுக்காலடி உயரம்.. (அதன் நடுப்பகுதியில் வைத்திருக்கும் என்னுடைய செல்ல ரெய்ன்ஹோல்ட்ஸ் பால் பாயிண்ட் பேனாவைப் பார்த்து ஒரு குத்துமதிப்புக்கு வரலாம்)
வேலைவெட்டியற்று விக்கிபீடியா பக்கம் போய் தண்டுக்கீரை பற்றி என்ன சொல்லியிருக்கிறது எனப் பார்த்தால்
…தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் (கமல்ஹாஸன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட) இக்கீரையால் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது போல எழுதியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.
ஆகவே, எதற்கும் இருக்கட்டும், என்னாலான உதவி என்று அந்த ஆருடத்தின் முக்கால்வாசியை வெட்டிஒட்டியிருக்கிறேன்.
இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது. சொிமான சக்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மூளை வளர்ச்சியையும், ஞாபக சக்தியையும் உண்டு பண்ணக் கூடியது. முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.
குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும். இரத்ததில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், மூச்சுக் குழல், குடல் போன்றவற்றி்ல் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்ைத நீக்கும் சக்தி படைத்தது. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது. குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலாகவோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அாிசி கழுவிய நீாில் இதன் தண்டைச் சேர்த்து புளி விட்டு மண்டியாகச் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாகும். இது உடல் பலத்தையும், அழகையும், ஒளியையும் கொடுக்கும், மூல நோயைக்கு மிகவும் சிறந்தது.
தண்டுக்கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. தண்டு வெண்ணிறமாக உள்ள கீரையை வெங்கீரைத்தண்டு என்றும், செந்நிறகீரைத்தண்டு என்றும், செந்நிறமாக உள்ள கீரையை செங்கீரைத் தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. செங்கீரைத்தண்டு, வெங்கீரைத்தண்டு ஆகிய இரண்டு வெவ்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மருத்துவ நுால்கள் கூறுகின்றன. செங்கீரைத்தண்டு தீராத பித்த நோயைத் தீர்க்கிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் கண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களின் பெரும்பாட்டையும், உடல் வெப்பத்தையும் குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் வலி சற்று குறையும். கருப்பை கோளாறுகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது. வெங்கீரைத்தண்டு சிறுநீர் பிரச்சிைனகளைத் தீர்க்கிறது. பித்தத்தை அகற்றுகிறது. உடல் வெப்பத்தைத் அதோடு, மேகம், வயிற்றுக்கடுப்பு, மூலம், இரத்த பேதி ஆகியவற்றையும் வெங்கீரைத்தண்டு குணப்படுத்துகிறது. கொழுப்பைக்கரைக்கவும், தேைவயற்ற சதையைக் குறைக்கவும், அதிக உடல் நீரை வெளியேற்றவும் தண்டுக்கீரை பயன்படுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தண்டுக்கீரையை அதிக அளவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
உணவிலுள்ள எல்லாவித சத்தையும் இது தரக்கூடியது. ஆகையால் இதை முழுச்சத்துணவாகக் கொள்ளலாம். இந்த ஒரே மூலிகைக்குள் எல்லாவித மருத்துவக் குணங்களும் அடங்கியிருப்பதால் இதை மருத்துவச் சிறப்பு மிக்க மூலிகையாகச் சித்த வைத்தியர்கள் கருதிப் பயன்படுத்தி வருகிறார்கள். சீரான உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத கீரையாகும்
…இப்படியே போனால், கூடங்குளம் ஸ்டெர்லைட் இசுடாலிர் கொசுத்தொல்லை புதுக்கவிதை போன்ற பிரச்சினைகளையும் இது தீர்த்துவிடும் என நம்பலாம். நன்றி.
இன்னொரு விஷயம்: ஏமாந்தால் – இதுவும் திராவிடனின் பாரம்பரிய உணவு என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் ஒரு வரலாற்றுவிஷயம். தண்டுக்கீரை தொடர்புள்ள அமராந்தஸ் கீரை வகைகள் தென்னமெரிக்காவில் சுமார் எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்து பயிரிடப்படுபவை. இந்தியா பக்கம் வந்து சுமார் 600 வருடங்களாகின்றன. அவ்வளவுதான்.
பின்குறிப்பு: தொடர்ந்து தண்டுக்கீரையைச் சாப்பிட்டுவந்தால் தண்டால் எடுக்காமலேயே உடம்பில் முறுக்கேறும். பஸ்கி எடுக்காமலேயே விஸ்கி குடித்த எஃபெக்ட் கிடைக்கும்.
தண்டுக்கீரையை வாழைத்தண்டுடன் சாப்பிட்டால், வாழைக்கீரையையே சாப்பிட்டதுபோல இருக்கும். வாழைக்கை இனிமையாக இருக்கும். பலானது படமெடுத்து ஆடும். காலா எடுத்த ரஞ்சித்தைக் குறிப்பிடவில்லை. மன்னிக்கவும்.
June 13, 2018 at 15:18
அழகிய சிங்கர் மாதிரி ஏதோ வரப்போகிறது என்று நினைத்தேன். நிஜமாகவே கீரைதானா? ஏமாற்றிவிட்டீர்கள். :-(((
June 13, 2018 at 16:17
நீங்கள் கண்டமேனிக்கும் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் எப்படி பருப்பாக முடியும், சொல்லுங்கள்?
ஜட்டியில் இருந்தால்தானே ஆஃப்பாயில் வேகும்?
அடுத்த போராட்டம் எங்கிருந்து குதித்து எழப்போகிறது, எவர் புண்படப் போகிறார்கள், வடவர்கள் எங்கு ரூம்பு போட்டுத் தமிழ்நாட்டை எப்படி நசுக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பார்கள், அடுத்த ஹிந்துத்துவா பூதம் எங்கிருந்து கிளப்பிவிடப்படும் போன்ற பலப்பல பிரச்சினைகள் என் கடைக்கண் (shoppy eye) பார்வை (மதுபானக் கடையை நடத்து) வீச்சுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது அழகியசிங்கரின் முறைப்பெண்ணான அழகிடான்ஸர் பற்றியா யோசிக்கமுடியும்?
தண்டுக்கீரையை மசியல் செய்து 48 நாட்கள் அதனை மட்டுமே உண்டால், ரத்தத்தின் நிறமே பச்சையாகி அனைவரும் பச்சையிளம் குமரிகளாகவும் குமாரர்களாகவும் ஆகி நாடே பசுமேயாகிவிடுமாமே, உண்மையா?
June 13, 2018 at 16:54
தண்டு கீரை மிகுந்த பலன் தருகிறது. ஆனால் பெங்களூரில் கிடைப்பதில்லை. ஏன் ஒரு மாதம் காக்க வேண்டும். அமேசான் மூலம் வாங்க முடிவெடுத்துள்ளேன்.
இந்த பதிவு மற்ற எஸ்ரா பற்றிய பதிவுகளை விட நன்றாகவே உள்ளது
June 13, 2018 at 17:38
அய்யா, தாங்கள் எஸ்ராவை கிள்ளுக்கீரை என்கிறீர்களா?
எனக்கு உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது. நன்றி. ;-)
June 15, 2018 at 18:06
மிக அரிதான தண்டுக் கீரை விதைகளைப் பெற ஆர்வமாக உள்ளேன் . எப்படிப் பெறுவது என்று தெரியாப்படுத்தவும் .
June 16, 2018 at 03:20
//விதை வேண்டுபவர்கள் முகவரியுடன் எழுதினால்
https://othisaivu.wordpress.com/page-1/
//என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால், othisaivuபுள்ளிramasami@gmailபுள்ளிcom என்கிற முகவரிக்கு எழுதலாம்.
June 16, 2018 at 09:44
Eid Mubarak.
June 16, 2018 at 09:58
more like, ramzaan kareem
June 19, 2018 at 14:01
“அடிப்படை” அகல தண்டுக்கீரை சாப்பிடலாமா??
June 19, 2018 at 14:08
அதற்கென்று வேண்டாம். அது ஒரு படர்காளான் வகை தொற்றுநோய். கீரை, பாவம். பருப்புவேகாது.
ஆனால் தாராளமாக தண்டனிட்டு விஞ்ஞாபனம் அளிக்காமலேயே உண்ணலாம்.