புள்ளிராஜாவுக்கு மனுஷ்யபுத்திரம் வருமா?

June 3, 2018

மானஸ்தரும், புரட்சிகர நேர்மையுள்ளவரும், வெகு நியாயமாக புத்தக+கவிதை வர்த்தகங்களை, ஒருவரைக்கூட ஏமாற்றாமல் நடத்தி வந்திருப்பவருமான அப்துல் ஹமீது ஷேக் ‘மனுஷ்யபுத்திரன்’ மொஹம்மது அவர்கள் பொதுவாகவே கொஞ்சம் போராளித்தனம் மிக்கவர்; ஆனாலும் திராவிடக் கட்சியில் நிபந்தனைகளுடன் அடைக்கலம் ஆனபின், ‘ஸாரி, கொஞ்சம் ஓவரோஓவர்’ நிபந்தனைபுத்திரன் ஆகி, பின் ஒரு வழியாக நிந்தனை புத்திரனாகவே ஆகிவிட்டார்.

-0-0-0-0-0-0-

ஏதோ அசட்டுப்பிசட்டென்று போராளிக்கழுதைகளை ஓட்டி அவற்றின் கனைப்புகளைக் கவிதையாக வடித்தெடுப்பதில் விற்பன்னராகி, தமிழ் வரிகளை அடித்து உதைத்து மடக்கிப் போட்டு ஒருமாதிரி கவிதை ஷேப்புக்குக் கொண்டுவந்து – ஏதோ காலச்சுவடு உண்டு காலட்சேபம் உண்டு என இருந்த இவரை – இந்தப் பாவித் தமிழ் மக்கள் ஏகோபித்து ஆதரித்து – அதுவும் நான் மதிக்கும் எழுத்தாளரான ஜெயமோகன் உட்பட :-( என்னால் சுத்தமாக ஒப்புக்கொள்ளமுடியாதபடிக்குக் கொண்டாடி (இதற்காக, அவரை அடுத்தமுறை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்போது மஹாசண்டை போடலாம் என்று இருக்கிறேன், பாவம் அவர்), அநியாயத்துக்குப் பரவ வைத்து விட்டனர். :-(

போதாக்குறைக்கு, காசுக்குக் குரைக்கும் ஊழலாள ஊடகப் பேடிகளும் சேர்ந்து மனுஷ்யபுத்திரக் கும்மாளம் அடித்து, இந்த மாதிரி, அந்த ஆனானப்பட்ட புள்ளிராஜாவையே, இந்தத் தீராவியாதியான மனுஷ்யபுத்திரம் பீடிக்க வைத்துவிட்டனர்.

குறிப்பு: மனுஷ்யபுத்திரம், மனுஷ்யபௌத்திரத்துக்கு மாமாபையன் மூலமாக தகாதஉறவு என விரைவீக்லி நிருபர் – சொப்பனஸ்கலிதேஸ்வர இளங்கருப்பனார் ஒரேயடியாக அடிக்கிறார்;  அவருக்கு நன்றியுடன், என்னெருமை வாலிபவயோதிக 6.5 வாசக அன்பர்களுக்கு, இந்த விளக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்.

-0-0-0-0-0-

மபு மப்புக் கவிதைகளை – சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு ஒன்று வீதம்,  எதற்கெடுத்தாலும் தடுக்கி விழுந்தாலும் வெறிபிடித்து- படுவேகத்தில் எழுதித் தள்ளிக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. (இப்போதும் அப்படியே எழுதுகிறாரோ (=பேதியில் போகிறாரோ) என்ன எழவோ – ஆனால் குறைந்த பட்சம் 1-2 வருடங்களுக்கு முன்புவரை அப்படித்தான் இருந்தார்…)

எப்படி? ஹ்ம்ம்… எடுத்துக்காட்டாக…

பல்துலக்குவதற்கு முன்னே – பின்னிரவில்
கெட்ட
கனா
அதில்
ஒரு கழுதை
அவன் பார்த்துக்கொண்டே எழுதினான்
ஒரு கவிதை

காலை, தூக்கத்திலிருந்து தெருப்பள்ளிவாசலெழுச்சி.

…பல்துலக்கிக்கொண்டே… இன்னொரு கவிதை
காலைக்கடன்
கழிப்பு
குப்பைகூளம்
கூட்டு
துடைப்பத்தால்
பெருக்கு
நாளுக்கான திட்டத்தை
வகு
இப்போதைய திட்டம்
திட்டுவது
…பின்னர் காலையில் பேப்பர்…
முரசொலி
முன்பக்கத் தலைப்புகளை
முதலில் படிப்பு
பின்பக்கங்களால் பின்
பின்பக்கத் துடைப்பு
…அதற்குப் பிறகு காலைச் சிற்றுண்டி கட்டிவரும் பொட்டலக் காகிதத்தைப் பிரித்துப் படித்து இன்னொரு கவிதை…
தூசிக் காற்றிலே
ஒரு துண்டுக்காகிதம்
பறக்கிறது
அதற்கு
இருக்கிறதா சிறகு
நீயும் பறப்பாய்
எனக்குப் பிறகு
ஏனெனில்
நீ
திராவிடத் தீக்கு
விறகு
நாட்டில் நடக்கும் துயர சம்பவங்களைப் பற்றி மணிக்கொரு மனிதவுரிமைப் போராளித்தனக் கவிதை…
ஆனால் அவை:
அழகிரிகளால்
இறந்த அல்லது கொல்லப்பட்ட
தா.கிருஷ்ணன்
பற்றி அல்ல
இசுடாலிர்களால்
இறந்த அல்லது கொல்லப்பட்ட
ரமேஷ்
பற்றி அல்ல
ராசாகனிமொழிகளால்
இறந்த அல்லது கொல்லப்பட்ட
சாதிக்பாட்சா
பற்றி அல்ல
கருணாநிதிகளால்
இறந்த அல்லது கொல்லப்பட்ட
உதயகுமார்
பற்றி அல்ல
அட்டாக்பாண்டி+அழகிரிகளால்
இறந்த அல்லது கொல்லப்பட்ட
சன்டீவி தொழிலாளர்கள்
பற்றி அல்ல
அல்லா
பற்றியும் அல்ல

ஆனால்,

அல்லக்கையான
யான் சாராத
ஆட்கள்
பிற ஆட்களைக்
கொன்று
விட்டார்களே!
அந்தோ.
ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு
இறந்தவர்கள், மானுடர்கள்
பாவம் அவர்கள்
திராவிட சூது
இறந்தவர்கள், தீர்த்துக்கட்டப்படவேண்டியவர்களே
ஓழிந்தார்கள், விடுங்கள்
ஸ்டெர்லைட்டே! எங்கே மனிதவுரிமை?
காவல்துறையே! நீ எங்கே எங்கே!
மோடி மஸ்தான் எங்கே?

ரஜனியே ரஞ்சித்தே நீவிர் எங்கே??

புள்ளிராஜாவுமே, எங்கே எங்கே?
கே? நானிங்கே!

ஆகவே

பாஜக ஓழிக ஒழிகவே!
இன்ஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
-0-0-0-0-0-

மானமிகு மபு அவர்கள் இப்போதெல்லாம் தொலைக்காட்சிச் சேனல்களின் செல்லபுத்திரன், அதன் உரத்த உளறிக்கொட்டல் உரையாடல்களில்(!) ஏகோபித்த நிரந்தர அங்கம் எனும் உலகத்தைக் குலுக்கும் அதிர்ச்சியான செய்தியை நான் அறிந்திருக்கவில்லை…

அவற்றிலும் அவர் வழமையே போல உளறிக்கொட்டி மனிதாபிமான மனிதவுரிமை பற்றியெல்லாம் – தான் கொலைகாரர்களின் சாக்கடையில் அமர்ந்துகொண்டே  அவர்களுக்கு ஏகோபித்த ஆதரவு அளித்துக்கொண்டே பேசுகிறார் என நேற்றுதான் அறிந்தேன்.

றொம்ப றொம்ப சந்தோஷம். பேஷ். பேஷ்.

இத்தனை நாள் அலக்கியத்தை மட்டுமே பீடித்திருந்தது என நினைத்திருந்த இந்த மனுஷ்யபுத்திரம் வைரஸ், இப்போது அரசியலிலும் குத்தாட்டம் போடுகிறது என்பதை அறிந்தபோது விலாநோகச் சிரித்தேன்.

-0-0-0-0-0-0-

அக்கப்போர் அன்பர் ஒருவர், கீழ்கண்ட விஷயத்தை அனுப்பி வைத்திருக்கிறார். (மப்பு அவர்கள் ஃபேஸ்புக் எழவில் இப்படி எழுதியிருக்கிறாராம்)
“ரஜினி தொடர்பாக புதிய தலைமுறைக்கு நான் வழங்கிய பிரத்யேக நேர்காணல்..சமீபத்தில் நான் வழங்கிய சிறந்த நேர்காணல் இது என்ற உணர்வு மேலிடுகிறது”

(மப்பு இப்படி எழுதவில்லை என்று யாராவது சுட்டினால், என்னைத் திருத்திக்கொள்கிறேன், நன்றி. நண்பர் மேற்கண்ட மேற்கோளையும், யூட்யூப் எழவில் உள்ள அந்த ‘சிறந்த நேர்காணல்‘ உளறலுக்கான, போங்காட்டத்துக்கான சுட்டியை மட்டுமே அனுப்பியிருக்கிறார். முழுவிவரம் கேட்டதற்கு ‘ஃபேஸ்புக்கில் சேர்’ என ஒரு அறிவுரை… ஆனால் நானெல்லாம் ஃபேஸ்புக்கில் நுழைந்தால் மற்றவர்களுக்குக் காலம் விரயமாகும், ஆகவே தூரத்திலிருந்தே வாழ்த்தி வணங்கி மகிழ்வதே இப்போதைக்கு முடியும். ஆகவே.)

https://www.youtube.com/watch?v=BABTl0Qc4xo&feature=share

இதே உளறிக்கொட்டலை (+கமுக்கமாக திராவிடக் கொலைகளைக் கண்டுகொள்ளாமல் விடும் வேலையை) ஒரு கட்டுரையிலும் செய்திருக்கிறார், என் செல்ல மப்பு.

இதைப்போய் தமிழகத்தின் நிரந்தர கலகக்கார விளிம்பாலஜிஸ்ட் சாருநிவேதிதா அவர்கள் பதிப்பித்திருக்கிறார் வேறு.

ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி? – மனுஷ்ய புத்திரன்

சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது. காப்பாற்றவும்.

-0-0-0-0-0-0-0-0-0-

எல்லாம் சரி, ஆனால்… எய்ட்ஸ் எழவையே விடுங்கள்….

புள்ளிராஜாவுக்கு மனுஷ்யபுத்திரம் வருமா?

(வந்தேவிடும்; ஏனெனில் மனுஷ்யபுத்திரனின் பிரச்சார பீரங்கித்தனம் மகாமகோ பராக்கிரமம் வாய்ந்தது)

:-(

 

8 Responses to “புள்ளிராஜாவுக்கு மனுஷ்யபுத்திரம் வருமா?”

 1. Anonymous Says:

  மனுஷயபுத்திரன் சாரு அராத்து இவர்கள் உளறல்களின் உச்சம் எழுத்துலகின் சாபக்கேடு சார்

 2. A.Seshagiri Says:

  எனக்கு தெரிந்து தூத்துக்குடி கலவரத்தை பற்றி ஆக்கபூர்வமாக கருத்து தெரிவித்தவர்களில் ரஜினியும் ஒருவர் மற்றபடி ம.புத்திரனுக்கு பெயரில் மட்டும்தான்’ம’இருக்கிறது சாருவைப்பற்றி சொல்லவே வேண்டாம் ரொம்ப நாளாகவே காழ்ப்பின் உச்சத்தில் இருக்கிறார்.

 3. ஆனந்தம் Says:

  //முரசொலி
  முன்பக்கத் தலைப்புகளை
  முதலில் படிப்பு
  பின்பக்கங்களால் பின்
  பின்பக்கத் துடைப்பு//
  ஏற்கெனவே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மக்களை உங்கள் எழுத்துகள் மூலம் தவறாக வழிநடத்துகிறீர்கள். பின்பக்கத் துடைப்புக்கென்று மிக ஆரோக்கியமான வழிகள் இருக்கும்போது முரசொலியை உபயோகித்து மக்கள் மேலும் துன்பப்பட வேண்டுமா?
  https://www.amazon.in/Royal-Bathroom-Tissue-Toilet-Roll_6/dp/B0764DC4WX?tag=googinhydr18418-21&tag=googinkenshoo-21&ascsubtag=32a7e9b8-eeb9-4ca1-a947-d9168b30b258
  ஒரு வேளை இது கட்டுப்படியாகாவிட்டால் இருக்கவே இருக்கு, டைஹைட்ரஜன் மோனாக்ஸைடு. https://othisaivu.wordpress.com/2015/02/19/post-459/
  இனியும் நீங்கள் இதுபோல் மக்கள்விரோதப்போக்கைக் கடைப்பிடித்தால் தமிழகத்துக்காளைகள் உங்களுக்கெதிராக வாடிவாசலில் சீறிப்பாய்வதைக் காண்பீர்கள்.


  • ;-)

   ​ஆனந்தம்,

   வரவர, உங்களுடைய திமிர் அதிகமாகிக்கொண்டே வருகிறது.​

   றொம்பத் துள்ளிக்குதித்து ஆடவேண்டாம். சரியா?​

   அல்லது, மப்புவை ஏவிவிட்டு உங்களைப் பற்றியே ஒரு கழுதை எழுதச் சொல்லவா?

 4. ஆனந்தம் Says:

  ஐயோ! எனக்கு வயிற்றைக் கலக்குகிறதே! இன்னும் எத்தனை ரோல் ஆர்டர் பண்ண வேண்டுமோ தெரியவில்லையே? மபுவால் பாதிக்கப்பட்டோருக்கு Amazon இல் ஏதாவது சிறப்புத் தள்ளுபடி உண்டா? அல்லது அடுத்த தேர்தல் அறிக்கையில் தமிழனுக்கு இதுவும் இலவசமாகக் கிடைக்க வாய்ப்புள்ளதா? ஓட்றா டேய்!

 5. ஆனந்தம் Says:

  கீழ்க்கண்ட கிவிதை மப்புவின் தலைவர் இனமானத்துடன் எழுதியது. கைவசம் ஒரு குவளை ( திருக்குவளை அல்ல) தண்ணீர் மற்றும் STEMETIL MD https://www.practo.com/medicine-info/stemetil-5-mg-tablet-354315mg வைத்துக்கொண்டு படிக்கவும். ‘பின்’ விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல. படிக்கும்போது கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக்கொள்வது உவந்ததல்ல. உங்களை நீங்களே தாக்கிக்கொள்ள ஏதுவாகும்.

  பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
  மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
  பகட்டுக்கு ஒருநீதி – பாவம் ஏழைக்கு ஒருநீதி

  பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
  வாடுகின்ற ஏழைக்குடிகாரன்
  வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்
  மேவுகின்ற சீமான்கள் – போதை
  மோதுகின்ற விஸ்கி, ரம் அடித்தபோதும்
  நவ்ரோஜி வீதியில்தான்
  நாற்றம் துளைக்கலையோ?
  நாடுதான் பார்க்கலையோ?

  இப்போதும் சொல்கின்றேன்,
  கேட்டிடுக!

  இந்தியா முழுமைக்கும் அறவே
  மதுவிலக்கு கொண்டுவர
  சட்டம் செய்தால்:

  சிரம் தாழ்த்தி கரம் குவித்து
  சிறப்பான செயல் என்று போற்றி நின்று
  செயலாக்க முந்திடுவேன்
  அதன் பிறகும்;

  இதய நோய் என்று – சிலர்
  இருட்டினிலே குடிப்பதையும்
  இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்
  முழுவிவரம் தேவை யெனில்
  பட்டியல் பிறகு சொல்வேன்!
  (அன்னாரின் 95வது பிறந்தநாளை ஒட்டி முகநூலில் தமிழார்வலர் ஒருவர் போட்டிருந்தார். மேற்படி சொற்கூட்டத்தைக் கவிதை என்றும் சொல்லலாமென்று அவர் மூலம் தெரிந்துகொண்டேன்.)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s