புதுப்புதுத் தமிழ்வார்த்தைகளை உருவாக்குவது எப்படி

August 10, 2017

பாஸ், இந்த வாசகர் கடிதமும் அதுக்கு எழுத்தாளரோட பதிலும் ரொம்ப விரசமாக இருக்கும்னு யிட்சிணி சொல்லுது. நீங்க இப்ப ஒதுங்கிக்கறது உத்தமம்.

டேய், நீ என்ன டிஸ்டர்ப் பண்ணாதடா, அந்த கோ. சி. மணி பையன் ஹவாலா பணமோசடி வழக்குல ஒரு முக்கியமான துப்பு கிடைச்சிருக்குன்னு அமலாக்கப் பிரிவு விமலாதித்தமாமல்லன் சொல்றார். அதுக்கும் ஸ்டாலின் பையன் வாங்கின ஹவாலா ஊழல் மேல்நாட்டுக்காருக்கும் தொடர்பிருக்குதுன்னு ஒரு பட்சி சொல்லுது. பிசியா இருக்கேண்டா! ஷெர்லக் ஹோம்ஸ், ஹெம்லக் ஜோன்ஸ் போல யாராவது என் இடத்தில இருந்தார்னா அவர் என்ன செய்வார்? சொல்லு?

யாரு பாஸ்? மெய்க்கிரிமங்கலத்து போக்கிரின்னிட்டு அண்ணா செல்லமா அழைச்ச அந்த கோசி மணியோட பையனா? அந்த எழவெல்லாம் நமக்கு எதுக்கு பாஸ்? இப்ப ஒங்களை வந்து பாத்துட்ட போன பஞ்சுமிட்டாய் அழகி யார்?

ஒனக்கும் அந்த வெத்துவேட்டு ராமசாமிக்கும் வேற வேலயே இல்லையா! ஏண்டா கண்டகண்ட விஷயங்கள்ல கால விட்றீங்க? அந்த கனிமொழி 2G கேஸ் பேப்பர் கட்டு எங்க இருக்குன்னு பாத்தியா? இப்டியே நீங்க பாவாடை பின்னால அலஞ்சிட்டிருந்தா அந்த அம்மணி வரிசையா 5G 6G 7G 8Gன்னும் மேலமேல ஊழல் பண்ணிகிட்டே போவாங்க, அவ்வளவுதான் இந்தியா!

அந்த பாப்கார்ன் யார்? அத மொதல்ல சொல்லுங்க பாஸ். பைங்கனி இதழில் பேபர்போட் ஜூஸ் தருவாள் பருகிடத் தலை குனிவாள்னு ஆடித் தள்ளுபடில ஆடிக்கிட்டே போன அம்மணியை விட கோசிமணி பையனோட ஊழல் இப்ப ரொம்ப முக்கியமா?

ஒன்ன திருத்தவே முடியாதுடா. சலிப்பா இருக்கு. ஒரு விளக்குக் கம்பத்துக்கு லெக்கிங்க்ஸ் போட்டுவிட்டா உடனே அந்தப் பக்கம் நாயாட்டம் காலைத் தூக்கிட்டு ஓடற ஒரு ஜூனியர வெச்சுகிட்டு நான் படற பாடு இருக்கே!

பாஸ், காலாகாலத்துல வேல நடக்கணும். உங்கள மாதிரி நான் முற்றும் துறந்த முனிவன் இல்ல பாஸ்; பாருங்க, நான் பேண்ட் சட்டை போட்டிருக்கேன்.

டேய்! என்னை இந்த ஒத்திசைவு படிக்கவிடப்போறியா இல்லையா? ஏற்கனவே எனக்கு அந்த நடை கடுப்படிக்குது, என்னத்துக்குத்தான் இவனுங்கல்லாம் ப்ளாக் எழுதறாங்களோ. நீட்ஷே என்ன சொல்றாருன்னா…

பாஸ், நீட்ஷேவும் வேண்டாம் அகல்ஷேவும் வேண்டாம், காராஷேவுதான் வேணும்…

கடுப்படிக்காத, இப்ப ஒனக்கு என்ன வேணும்?

பாஸ், என் லேட்டஸ்ட் காதலி ரீட்டா என்ன சொல்றான்னா…

அடப்பாவி, நேத்திவரைக்கும் மும்தாஜ் பின்னாடிதான சுத்திட்டிருந்த? என்னடா இது, சட்டையை மாத்தறமாதிரி இதெல்லாம்… அசிங்கமாயிருக்கு! பாவம்டா அந்த மும்தாஜ். உருகி உருகி ஒம்பின்னாடி சுத்திட்டிருந்ததுடா அது… ப்ரத்தியேகமா தாஜ்மஹல் ஒண்ணு கட்டி, நீங்க ரெண்டுபேரும் தனிக்குடித்தனம் செய்யப் போறதா சொன்னியேடா?

அந்த மும்தாஜ் கிளி யாரோ ஷாரே ஜஹான் ஸே அச்சான்னு எவனோடவோ போயிட்டா பாஸ். கிளிக்கு றெக்கை மொளச்சுடுத்துடீ அதனால… அது பறந்துபோய்டுத்து… பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வராது கச்சேரிக்கு… பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி கேட்ருக்கீங்களா பாஸ்?

இல்லை, ஆனா மும்தாஜ் தப்பிச்சுதுன்னு சந்தோஷப் படு.

பாஸ், சொல்றேன்னிட்டு தப்பா நெனச்சிக்காதீங்க. உங்களை மாதிரி ஹார்மோன் இல்லாத ஆசாமிகளுக்குதான் சிட்டுக்குருவி லேகியம் உடும்புத் தைலம்லாம் இருக்கு. ஒரு கோர்ஸ் எடுத்திட்டீங்கன்னா, சர்ப்பம் சும்மா நின்னு ஹைடெஃபனிஷன் படம் எடுத்து ஆடும் பாஸ்… நீங்களே ஆடிப்போய்டுவீங்க! ஆட்டுவித்தால் யாரொவருவர் பக்ரீத் வருதே கண்ணான்னிட்டு கேட் வின்ஸ்லெட்டெல்லாம் வரிசையா வந்து ஒங்க பெட் ரூம் வாசல்ல ஏக்கத்தோட ஒங்களோட பிரியாணிக்கு தவம் கெடப்பாங்க…

இருக்கலாம், ஆனால் ருட்யார்ட் கிப்ளிங், பெர்ட்ரண்ட் ரஸ்ஸலோட பேசிட்ருந்தபோது ரிச்சர்ட் ஃபைய்மன், அம்ஃபிட்டமைன் பற்றி என்ன சொன்னார்னா…

பாஸ்! உங்களுக்கு என் வந்தனம். என்னை விட்ருங்க. ரீட்டா கிளி, பையப் பையப் பறந்துவந்து என்னோடே என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் வண்டிலே என் பின்னால பச்சக் அப்டீன்னு ஒட்டிக்கிட்டு ஈருடல்வோருயிர் போல உட்கார்ந்து பாண்டிச்சேரி போலாமா ராஜாவேனு செல்ஃபோனித்து, பாஸ்! வரட்டா? இன்றைய ஆஃபர்: இன்று போய் ரீட்டாவை ரீசார்ஜ் டாப்அப் எல்லாம் பண்ணி, சூட்டோட சூட்டாக போட்ட குட்டியுடன் நாளை மறுநாள் வருகிறேன். பை…

அடப்பாவி… உனக்கு உடம்புபூரா மச்சமில்லடா, நீயே ஒரு மச்சம்தாண்டா!

பாஸ், மச்சமுள்ள மச்சானைப் பார்த்து பொறாமைப்படாம, நீங்களும், அதோ அங்கே போற மார்வாடிக் குயில் பின்னாடி போங்க… மாராப்புன்னா மார்ல ஆப்பா பாஸ்? ஹார்மோன், நினைவிருக்கா? அதுதான் பாஸ், கடவுள்!

அடப்பாவீ… …

-0-0-0-0-0-0-0-

சரி. மேற்கண்டது ஒரு திருஷ்டாந்தம்.

…துள்ளல் நடையில் ஜாக்கிக்கொண்டு போனால் அது சிரேஷ்டம். சுஜாதா நடை சுளுவான நடை. பக்கம்பக்கமாக எழுதித் தள்ளலாம்…

யோசித்தால். எந்தத் தமிழ் எழுத்தாளராக இருந்தாலும் அவரவருக்கு என ஒரு தேய்ந்துபோன நடை இருக்கிறது – அல்லது சிலபல வழமை நடைகள் இருக்கின்றன.  ஆக, இம்மாதிரி சுளுவான நடைத் திரள்களை உபயோகித்து ஒரு கணிநி நிரலை எழுதி அதனை அந்ததந்த எழுத்தாளர்களின் பலப்பல கட்டுரைகளுக்கும் இன்னபிற பொழிவுகளுக்கும் பழக்கப்படுத்தினால் – ஒரு சமயத்தில் விஷயங்கள் திரண்டுவந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு பதிவு என நம் அபிமான எழுத்தாளர்கள்போல அட்ச்சுவுடலாம். இது சாத்தியம். இது மெலிதாகச் சோகம் தரும் விஷயம்தான்.

ஆனால், மண்டையில் அடித்துக்கொண்டு என்னுடைய சுளுக்கு நடையை மேலே படிக்கவும். இது கொஞ்சம் ஓவர் விரசமாக இருக்குமென நினைக்கிறேன், ஆகவே, ஸ்வல்ப அட்ஜஸ்ட் மாடி. அம்மணிகளும் முகத்தைச் சுளித்துக்கொண்டு கடனெழவே எனத் தங்கள் தார்மீகக் கடமையைச் செய்யலாம். நன்றி.

-0-0-0-0-0-0-0-0-

ஆசிரியரின் ஆசிரியரே! பேராசான்களின் பேராசானே!!

உங்கள் பொன்மலர்ப் பாதங்களின் இந்த மின்னஞ்சலைச் சமர்ப்பிக்கிறேன்.

தமிழர் இடர் தீர தமிழருள் புரிந்த திராவிடனடி குஞ்சே குறி… எனத் திராவிடர் சட்டி கவசகுண்டலத்தினைச் சொல்லிக்கொண்டே உங்களை ஆராதிக்கிறேன். (நான், ஆரிய கந்தர் சஷ்டி கவசத்துக்கு எதிராக வடிவமைத்துள்ள டூய டமிள் இறைவழிபாட்டுத் திராவிடக் கவிதைதான் இது, தேவையில்லாமல் கலவரப்படவேண்டாம்!)

அய்யா ஞானகுருவே! பல்துறைப் பண்டிதரே! ஒவ்வொருமுறை உங்களுடைய, உங்களால், உங்களுக்கெனவே உருவாக்கப்பட்ட புதுத் தமிழ் வார்த்தையைப் படிக்கும்போதும் நான் அடையும் புல்லரிப்புக்கு அளவேயில்லை! அதே சமயம், புழக்கத்தில் இருக்கும் வழமைத் தமிழ்வார்த்தைகளுக்குப் புதுக்கோணத்தில் பொருளுரைப்பது என்பதையும் நீங்கள் உங்கள் கருமமாகக் கொண்டு ஒழுகுகிறீர்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

ஏ! அப்பா! சற்றொப்ப 1, 000 புதுத் தமிழ் சொற்களை நீங்கள் உருவாக்கி, அதில் சுமார் 1, 000,000, 000 சொற்களை தமிழர்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் உபயோகிக்கிறார்கள் என நீங்களே சொல்வது என்பது சாமானியமான விஷயமே அல்ல!

எப்படி சார் இதையெல்லாம் செய்கிறீர்கள்? இதை அறிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. நீங்கள் மனிதரேயல்ல! ஒரு தெய்வம்!

உங்கள் சீடன்,

எழுச்சித் திராவிடன் குண்டலகேசி

-0-0-0-0-0-

ஹ்ம்ம். எழுத்தாளர், தம் பதிலை, வெகு எழுச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் மும்முரமாக இன்னமும் எழுதிக்கொண்டிருப்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்…

…ஆனால் ஒரு விஷயம், ஹ்ஹ… நீங்கள் என்னதான் செய்தாலும், எழுத்தாளரிடமிருந்து தப்பிக்க முடியவே முடியாது! நீங்கள் எங்கு சென்றாலும் எழுத்தாளரிடமிருந்து ஓடிஓளியமுடியாது…

வந்தனம்.

-0-0-0-0-0-

 

24 Responses to “புதுப்புதுத் தமிழ்வார்த்தைகளை உருவாக்குவது எப்படி”

  1. சந்திரமௌலி இரா Says:

    தல புல் பார்ம்ல இருக்காரு

  2. Prabhu Deva Says:

    ஆசானே,
    முடியல. ஒன்னுமில்லங்கிரதை இப்படியும் சுத்திவளைச்சி நெளிச்சி சொல்லலாமா.


    • யோவ் பிரபுதேவா, நீங்க மட்டும் ஒடிச்சி வளைச்சி நெளிஞ்சி நடனமாடலாமா?

      இதென்னய்யா போங்காட்டம்? :-(

  3. Anonymous Says:

    எழுத்தாளர்களுக்கு.வரும்.கடிதங்கள்.எல்லாம்.அந்த.எழுத்தாளர்.
    பாணியிலும்.மற்றும்.நடை.யிலும்..உள்ளதை..கவனித்தீர்களா

  4. srinivasan sundararajan Says:

    எழுத்தாளர்களுக்கு.வரும்.கடிதங்கள்.எல்லாம்.அந்த.எழுத்தாளர்.
    பாணியிலும்.மற்றும்.நடை.யிலும்..உள்ளதை..கவனித்தீர்களா


    • அய்யா,

      பொதுவாகவே ஒரே ஆளுடையதை (நான் அதனைச் சொல்லவில்லை) மிக நிறையப் படிக்கும்போது அந்த மனிதருடையதின் நடை உடை பாவனை எல்லாமே காலப்போக்கில் நமக்கு வந்துவிடுகிறது. பின் ஆராதனை அதிகமாகும் போது வேறொன்றும் ஒத்துவராமல் போய் அந்த ஆளின் கருத்தே தன் கருத்தாகவும் ஆகிவிடுகிறது. ஒரு சமயத்தில் வாசகர்கள் தமக்குள்ளே ஒரு அடுக்குவரிசையை ஏற்படுத்திக்கொண்டு, எல்லோரும் ரஷ்யன் ‘மாட்ரொஷ்கா’ பொம்மைகள் போல ஆகிவிடுகின்றனர். இணையம் இந்தப் போக்குக்கு வாய்க்கால் அமைத்துக்கொடுக்கிறது.

      ஆனால், இதிலெல்லாம் சதித்திட்டம் இல்லை, ‘நமக்கு நாமே’ இல்லை எனத்தான் நினைக்கிறேன்.

      பார்க்கலாம்.

      • Yayathi Says:

        “சலிப்பா இருக்கு. ஒரு விளக்குக் கம்பத்துக்கு லெக்கிங்க்ஸ் போட்டுவிட்டா “….

        ஒரு பிளாக்ல வர எழுத்தோட வீச்சா இது ? அந்தி நேரத்தில ஒளிக்கும் இருட்டுக்கும் நடக்குற சம்பாஷிணையிலே அவள்ன தெரியரா – அரூபத்தின் ஸ்தூல வடிவல்லவா அவள். அஸ்தமனத்தில் அரவிந்தமாகும் ஆதியின் ஒளி வீச்சு நரம்பெங்கும் விண் விண்ணென்று தெறித்து சிந்தா நதியில் பிரதிபலித்தது.

        லா ச ராவா பார்த்தா எல்லா இடத்திலும் அவள் இருக்கிறாள் :-)

        அன்புடன்!


      • அய்யா, நன்றி.

        ஆனால் வசந்திடம் அளவுக்கு மீறி எதிர்பார்க்கமுடியாதல்லவா. மற்றபடி சக்தி ஸ்மரணை இங்கும் உண்டு. ஆக, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்… :-)

  5. nparamasivam1951 Says:

    துள்ளல் நடை தான் நன்றாக உள்ளது.

  6. RC Says:

    அய்யா,
    மிடில..ஓடிரு
    வா டமிலா,
    “தற்காப்பு முக்கியமில்லை தன்மானமே முக்கியம் ” ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் முரசொலித்து அழைக்கிறார் !!

    அய்யோ இன்னும் வேகமா ஓடு ஓடு
    :)


    • முதலில் புரியவில்லை. இன்று காலைதான் ‘விடுதலை’ படித்து அன்னாரின் சோடைப்பேச்சைத் தெரிந்துகொண்டேன் – உருண்டுருண்டு என் குண்டியை நீக்கிக்கொண்டு சிரித்தேன். நன்றி.

      உளற நாயகன், வேறென்ன சொல்ல. ;-)

  7. A.Seshagiri Says:

    இந்த பதிவுக்கு சம்பந்தமில்லா விஷயமானாலும் உம்மை ஜாலி மூடிலிருந்து மாற்றி சீரியஸ்ஸாக பதில் சொல்ல வைக்க முயலுகிறேன்!.நமது ஜனாதிபதி “கோவிந்து ” பற்றிய நல்ல விஷயங்களை அவர் பதவிக்கு வருமுன் ஒரு பதிவில் தெரிவித்தீர்கள்.கூட போனஸ்சாக முன்னாள் ஜனாதிபதி நாராயணன் பற்றிய மாயைகளையெல்லாம் உடைத்தீர்கள்.இப்போது முன்னாள் உப ஜனாதிபதி ஹமீது அன்சாரி முறை.
    பத்து வருடம் நன்றாக பதவியில் தேய்த்துவிட்டு இப்போது தூக்கத்தில் எழுந்து அருள்வாக்கு வழங்கியிருக்கிறார்!.வேறென்ன வழக்கம் போல் நம் நாட்டில் ‘முஸ்லிம்களுக்கு’பாதுகாப்பு இல்லை என்ற புளித்து போன கருத்தைதான் புலம்பியிருக்கிறார்.மேலும் ‘தலாக்’ விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று ஒரு புரட்சிகர கருத்தையும் கூறியிருக்கிறார்.இனி ஓவர் டு நீங்கள்!


    • அய்யா சேஷகிரி, எனக்கு இந்த மனிதர் மேலே பலப்பல வருடங்களாகவே மரியாதை இல்லை.

      ஆக, என்னை மன்னிப்பீர்களா?

      தவிரவும், பெறுநர் முகவரியை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லையோ? அப்படியே அனுப்பிவிட்டீர்கள், எனக்கு வந்துவிட்டது.

      நன்றி.

  8. Kannan Says:

    எங்கயோ யாரையோ இடிக்கற மாதிரி தெரியிதே, இல்லை இது என்னோட மனப்பிராந்தியா ?

    அய்யோ, பாயைப்பிறாண்ற வியாதி எனக்கும் வந்திருச்சு போல.


    • இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
      கெடுப்பார் இலானுங் கெடும்.

      :-)


    • அய்யா, பாவப்பட்ட முஸ்லீம்கள் உங்களுக்கு என்ன பெரிய கொடுமையைச் செய்துவிட்டனர்? ஏன் அவர்களைப் பிறாண்டவேண்டும்? :-(

      • Kannan Says:

        you mean #bhaiScratching, no no no, this is just படுக்கிற பாய்.


      • ஆ! அப்போது ‘ஜஸ்ட் படுக்கிற பாய்’ என எல்லா முஸ்லீம்களையும் சோம்பேறிகள் எனச் சித்திரத்தை விரிப்பது தகுமா?

        சுத்த அமதச்சார்பின்மைக்காரத்தனமாக இருக்கும் உங்கள் கருத்தைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

      • Kannan Says:

        straw mat.ஸ்ஸ்ஸ், அப்பப்பா!!


      • So, you think they are men of straw? Or they can be easily, just like that, thrown on the mat?

        What the hell!

        I would hate to deal with islamophobes. What intolerance!

        Frankly Kannan, this is my last straw.

        __r.

  9. Dinesh Babu Says:

    அய்யா ஒன்றுமே புரியவில்லை…
    வாசகர் வட்டத்தில் இணையமுடியவில்லை…முதலில் நான் வாசகனே அல்ல..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s