வாசகர் கடிதம் – புத்தம்புதிய காப்பி, செம்பதிப்பு*

August 6, 2017

கசப்பு ராமம்,

நீங்கள் எழுதுவது எதுவும் எனக்குப் புரிவதேயில்லை. அதனால், புரிந்துகொள்ள முடியாததையெல்லாம் 1) அற்புதமாகக் கருதுவது அல்லது 2) அற்பமாகக் கருதுவது எனும் தமிழ வழமையின் படி, இரண்டாம் வழியாக உங்களை அணுகுகிறேன்.

நீங்கள் அகங்காரம் பிடித்த மேட்டிமைவாதியானதால் –  ஒன்று கடுமையான ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் இல்லையேல் கொடுமையான அதிகொடூரத் தமிழில். இந்தச்சோக நிலைமைக்கு,  உங்கள்  1) திமிர்  அல்லது 2) திறமையின்மை 3) அல்லது இவையிரண்டும் செம்புலப் புயல் நீரென கலந்ததுதான் காரணமாக இருக்கவேண்டும்.

கணிநி எலியின் கொட்டையை உருட்டிவுருட்டித் தலையைச் சொறிந்துகொண்டு, ஒரு வழியாக உங்கள் கட்டுரைகளைப் படிப்பதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. நீங்கள் எழுதுவது பிறர் படிப்பதற்குத்தானே? இப்படியே தத்தித்தத்தித் தவளை நடையில் எழுதினால் ஒருவரும் படிக்கவரவே மாட்டார்களே! நீங்களும் உங்கள் நான்கு நண்பர்களும் மட்டுமே உங்கள் காட்டுரைகளைப் படிப்பதில்லையே! ஆறாவது நானாயிற்றே?

கஷ்டப்பட்டு, மிகவும் முனைந்து ஏதோ எழுதுகிறீர்கள் பாவம், ஆறுதல் பரிசாக ஏதோ கொஞ்சம் படிக்கலாம் என்று வந்தால் – அதுவும் ஏகத்துக்கு  நீள நீளமாக நீட்டி முழக்கி எழுதுகிறீர்கள். சலிப்பாக இருக்கிறது. ஒருவேளை இந்த நீட்டிப்பெல்லாம் ஏதாவது ஆண்குறியீடா?

பிற எழுத்தாளர்களைக் கிண்டல் செய்கிறீர்கள். அவர்கள் தமிழுக்குச் செய்துகொண்டிருக்கும் மகோன்னத சேவையில் ஒரு சதவீதமாவது செய்து விட்டு, பின்னர் அவர்களைக் கிண்டல் செய்தால் ஒரு பொருள் இருக்கும். எல்லாவற்றையும் வெறுத்துக்கொண்டிருந்தால் எப்படி? உங்களைப் போன்ற வெறுப்பாளர்களாலும் கிண்டலாளர்களாலும்தான் தமிழ் வளரவே மாட்டேனென்கிறது. தமிழ் வளர்வதற்கான உரையாடலும் உண்மையான விவாதமும் ஆய்வும் வேறெங்கோதான் நடக்கிறது என்று ஆறுதல் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியேயில்லை.

சிரிப்பாக எழுதுகிறீர்களா அல்லது ஸீரியஸ்ஸாக எழுதுகிறீர்களா என்பதையே முக்கால்வாசி நேரம் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

உங்களுக்கு ஒரு சிறிய அற்ப விஷயத்தையும்கூடச் சரியாகவே எழுதத் தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதை நான் நம்பவே முடியவில்லை. இது நிச்சயமாகப் பீலா. சும்மா யாரும் இதனைச் சரிபார்க்கமாட்டார்கள் என அட்ச்சுவுடுகிறீர்கள் போல.

உங்கள்  மூஞ்சியையும் கர்வத்தையும் முகம் சுளிக்கவைக்கும் ஆபாசஎழுத்தையும் பார்த்தால், எந்தத் தகப்பன் உங்களிடம் குழந்தையை விடுவான். அப்படியே இருந்தாலும், பாவம் அந்தக் குழந்தைகள்.

இந்த அழகில் அத்தைச் செய்தேன் இத்தைச் செய்தேன் எனக் கதையாடல்கள். நான் இவ்வளவுசெய்தாலும் ஒன்றும் நடக்கவில்லையே என்கிற தொனியில் பிலாக்கணங்கள். நாடகமாடுவதற்கும் ஒரு அளவுவேண்டும். வெட்டிப் பேச்சுப் பேசியே உங்களுக்கு ஒரு பில்ட்-அப் செய்துகொள்கிறீர்கள். நீங்கள் திறமைசாலிதான். சுயமுன்னேற்றம் என்பதுதான் உங்கள் போக்கற்ற கதையாடல்களின் அடிநாதம். அப்பட்டமான பார்ப்பன ஹிந்துத்துவா நிலைவேறு. சிறுபான்மையினரைக் குறி வைத்து அடிக்கிறீர்கள். வதந்திகளைப் பரப்புகிறீர்கள்.

போயும்போயும் உங்கள் எழுத்துகளையும் படிக்க ஒரு கும்பல் (நானும் நீங்களும் உட்பட மொத்தம் 6) இருப்பது நல்லவிஷயமா இல்லை வரலாற்றுப் பிறழ்வா என்பது தெரியவில்லை.

ஆனால், இந்தியா கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு. நீங்கள் தாராளமாகத் தொடர்ந்து எழுதலாம். (எப்படியும் இனிமேல் நான் படிக்கப் போவதில்லை). ஆனாலும், நம் தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது நீங்கள் எழுதுவதையும் கற்பிப்பதையும் நிறுத்தவும்.

தமிழகத்தில் எதுவுமே உருப்படியில்லையா?

வெளிச்சத்தை நோக்கி:

கணைக்கால் இரும்பொறை.

பிகு: உங்கள் பொறுக்கி மொழியில் சொல்வதானால் – ஒரு மயிரும் புர்யல, ஆனா ங்கோத்தா, ஏதோ எள்த முயற்சி பண்றீங்கண்றது மட்டும் புர்யுது!

 
-0-0-0-0-0-0-0-

அன்புள்ள பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்,

உங்கள் பெயரே உருப்படியில்லை, ஏதோ நாய் ஒன்று காலிடுக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடும் பொறையைப் போலத் தோன்றுகிறது. ஆனானப்பட்ட வள்ளுவரே பொறையுடைமை பற்றி எழுதியிருந்தாலும், நான் படைப்புவீரியம் மிக்க எழுத்தாளனாதலால் அதனை மாற்றி விட்டேன். இனிமேல் உங்களுக்கு வாழ்க்கையில் ஏகோபித்த ஏற்றம்தான். திருப்திதானே! எனக்கு நியூமராலஜி லெட்டராலஜி எழுத்துருவாலஜி வரிவடிவாலஜியெல்லாமும் கொஞ்சம் தெரியும். ஏனெனில் அவற்றைப் பற்றியும் ஒன்றரை கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

உங்கள் கேள்விகளை, குறைந்தபட்சம் ஐந்து விதமாகப் புரிந்துகொள்கிறேன்.

அ: நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லை. (எனக்கும் இதுகுறித்த சந்தேகங்கள் இருக்கின்றன)

ஆ: நான் ஏன் எழுதுகிறேன் என்பது உங்களுக்கு சரியாகப் புரியவில்லை.

இ: உங்களுக்கு, நான் என்ன எழுதுகிறேன் என்பதும் புரியவில்லை.

ஈ: நான் எப்படி எழுதுகிறேன் என்றும் புரியவில்லை.

உ: நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.

நீங்கள் ஐம்பெரும் அஞ்ஞானிதான்.

#அ: நான் எழுதுவது தமிழ் போன்ற ஒரு மொழியில். ஆனால், அது தமிழல்ல. ஆனால், என் பேராசான் எஸ்ராமகிருஷ்ணன் அவர்களின் கிமிழையே தமிழ் என்று எம் இனிய தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளும்போது, என் தமிழ் போன்ற மொழிக்கு என்ன கேடு? ஆஇரா வேங்கடாசலபதியாரின் ஆ!-ஆங்கிலத்தை ஆனானப்பட்ட ‘த ஹிந்து’ தினசரியே பொறுத்துக்கொள்ளும்போது என் ஆங்கிலத்துக்கு என்ன குறைவு? ஏன், உங்களுக்கேகூட இதற்குமேற்பட்ட தமிழைப் படிப்பதற்குத் தகுதியில்லை. ஆக, முன்வாலைச் சுருட்டிக்கொண்டு அமரவும்.

சரி. #ஆ முதல் #ஈ வரை சாய்ஸில் விட்டுவிட்டேன். ஏனெனில் என்னிடம் திரைக்கதை கேட்டு ஸ்வீடனில் இருந்து ஆள் அனுப்பியிருக்கிறார்கள். எதையுமே நான் தேடிப் போவதில்லை. நாளைக்கு ஜப்பானிய டைரக்டர் அகிரா கரசேவா அவர்களிடம் (இவர் என் பதிவுகளைப் படித்து உய்வதற்காகவே நொபொரு கராஷிமா அவர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார், பாவம்) அவருடைய இராமாயணம் தொடர்பான திரைப்படத்தைக் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. இதற்கு கறுப்புஎக்காளம் அல்லது அயோத்தீ எனப் பெயர் வைக்கப்படலாம்.

மேலும்,   இலக்கியத்துக்கான அடுத்த நொபெல் பரிசு, ஸாஹித்ய விருது, ஞானபீடப் பரிசு, மேன் புக்கர் விருது, கணிதத்துக்கான ஃபீல்ட்ஸ் விருது எல்லாம் என் எழுத்துகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும்  வரிசையில் நின்று பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கின்றன. எனக்குத்தான் அவற்றை எழுத, பதிவுசெய்ய நேரமில்லை. ஓய்வென்பது துளிக்கூட இல்லாமல் வாசகர் கடிதங்களை எழுதிக்கொள்ளவே நேரம் போதமாட்டேனென்கிறது, என்ன செய்ய. :-(

மங்கோலியாவில் பயணம் செய்ய அடுத்தமாதத் திட்டம் உறுதியாகிவிட்டது. அடுத்த சென்னை புத்தகச் சந்தை 2018க்கு மங்கோலியாந்திரி எழுதவேண்டுமல்லவா? அதற்கடுத்த மாதம் அலாஸ்கா போய் எல்லாவற்றுடனும் மௌனமாகப் பேசிக்கொண்டிருக்கலாமெனவும் ஒருதிட்டம். என்னுடைய அலாஸ்கா வாசகர் வட்டம்தான் இதற்கு ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்யாதீர்கள் எனக் கடிந்துகொண்டாலும் அவர்கள் கேட்டால்தானே! :-( ஆக, அலாஸ்காந்திரி.

நான் திரைகதை எழுதி கஜினி நடிகும் ‘சோமனாத அகம்’ படம், ஒரு கவிதை. அன்புநண்பர் சீமான் இயகதில் காலவெளியில் விரிகிறது, உட்குவிந்து வாழ்கையை கேள்விகிறது. மௌனமாக ராகங்களை இசைகிறது. நெகிழ்ந்து அமிழ்துகிறது. இந்த திரைபடம் ஒரு புதுகவிதை. ஜென். ஒரு உரத நிசப்த கவிதை. சூஃபி. தியானம்.  வரலாறு. புவியியல். அறிவியல். கதிரியக்கதின் தீமைகள். உள்ளே பல உலக சினிமாக்கள். இபடி பல முகியமான செய்திகள் இருகிறது. அவசியம் பார்கவும். பாப்கார்ன் சுவையாக இருகும்.

அண்மையில் டவுன்லோட் செய்து, ஹிட்லர் பற்றி ஒரு படம் பார்தேன். ஆக – ‘நாஜிகளின் ஜென்,’ ‘ஜெர்மானிய சமையல் கலை’ பற்றிய பதிவுகளும் + ‘நாஜியாந்திரி’ எனும் காலயந்திரதில் பயணிகும் தமிழன் ஒருவனின் திரைகதையும் என் மனதளவில் உருவாகிவிட்டது. ஆனால், சீமான் ஃபோனை எடுகவே மாட்டேனென்கிறார்.

இதுவரை இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை – சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் பலநாள் வாசகரும் நண்பருமான போர்ஹெஸ்  என் வீட்டிற்கு வந்து என் அறிவுரைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது, ‘நீதான் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் விடிவெள்ளி’ என்று சொன்னார். :-( எனக்கு வெட்கமாகி விட்டது என்றாலும் இதுதானே உண்மை?

தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ எனும் நிகழ்ச்சி வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இதன் டச்சு மூலத்தைப் பலமுறை தொடர்ந்து எங்கள் டீவியில் பார்த்திருக்கிறேன்.  தமிழன் திரைப்பட நாராசங்களாலும் சோற்றாலும் அடிக்கப்பட்ட பிண்டம். நான் தொலைக்காட்சி பார்த்தே 60 வருடங்களாகி விட்டன. பாவம் ஓவியா. பார்க்க உருப்படியாக இருந்தது. ஆனால் துரத்திவிட்டார்கள். எல்லாம் வன்மம். ஆணாதிக்க வெறியர்கள். தமிழகம் முழுவதும் ஃபிலிஸ்டைன்ஸ். எப்படியும் கமலுக்கும் எனக்கும் ஒத்துவராது. அவர் என்னை வெறுக்கிறார்.

பிக்பாஸ் போல ‘பிக்எழுத்தாளர்’ என்ற நிகழ்ச்சியை உருவாக்கி முப்பெரும் எழுத்தாளர்களான எங்கள் மூன்று பேரையும் தொட்டுக்கொள்ள மணிகண்டன், யுவகிருஷ்ணா, ஸமோஸா போன்றவர்களையும் அதில் கோர்த்துவிட்டால் அது அதகளமாக இருக்குமல்லவா? ஆனால் லத்தீன் அமெரிக்காவில்தான் இதெல்லாம் சாத்தியம்.

லத்தீன் அமெரிக்காவில் லத்தீனில்தான் பேசுவார்கள் எனும் அடிப்படையுண்மையைக்கூட அறியாதவர்கள்தாம் முட்டாள் தமிழர்கள். நான் இனிமேல் லத்தீனில் மட்டும்தான் எழுதப் போகிறேன். கேப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் (என் நண்பன் தான்! என்னால் தயாரிக்கப்பட்ட எண்ணிறந்த எழுத்தாளர்களில் ஒருவன்தான் இவன்) இதைக் கேள்விப்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சியடைவான், ராஸ்கல்.

என் செல்ல ‘வள்ளுவர்’ குரைத்துக்கொண்டிருக்கிறது. பொறை வேண்டுமாம். பொறையுடைமை அதிகாரத்தை, சனியன், படித்திருக்கவேண்டும்.

ஆக, தொழில் ரீதியான வேலை மும்முரங்களில்  இருக்கிறேன்.

ஸீரியஸ்ஸான விஷயத்தைச் சிரிப்பாகவும், சிரிப்பான விஷயத்தை ஸீரியஸ்ஸாகவும் எழுதித்தான் எனக்குப் பழக்கம். ஆனால், எது சிரிப்பு எது ஸீரியஸ் என்ற பிரச்சினைக்குள் புக, பொத்தாம்பொதுவாக எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நிலைப்பாடை நான் எடுக்க முடியாது. ஏனெனில் என் பாடை என்பதை எடுக்க, பிற நாலுபேர் வந்தால்தான் முடியுமல்லவா? நட்ட பாடை நகருமோ நாதன் உயிர் இருக்கையில்? நன்றி.

வீழ்க ஒத்திசைவுடன்,

வெ.ரா.

*மன்னிக்கவும். இதற்கு முன்வெளியீட்டுச் சலுகைத்திட்டம் என ஒன்றுமில்லை. ஏனெனில், உங்கள் சிறுநீரை, நீங்கள் எங்கு வேண்டுமானாலும், வழக்கம்போலவே இலவசமாக அடித்துக்கொள்ளலாம். இது இந்தியா. நாமடிக்கும் மூத்திரம் நமதென்பறிந்தோம். நன்றி. (ஹ்ம்ம்… சுத்தம்-சுகாதாரம் குறித்த அடிப்படை மானுட அறங்கள் பற்றி அடுத்த பதிவில் அறிவுரையளிப்பதாக இருக்கிறேன்)

16 Responses to “வாசகர் கடிதம் – புத்தம்புதிய காப்பி, செம்பதிப்பு*”

  1. Sridharan S Says:

    // ஆக, முன்வாலைச் சுருட்டிக்கொண்டு அமரவும்.// பரிணாமத்தின் பரிமாணங்களைக் குறிப்பால் உணர்த்தி ஞானமரபின் தத்துவங்களைத் தரிசிக்கச் செய்து உய்வித்தமைக்கு நன்றி குருவே!
    // இபடி பல முகியமான செய்திகள் இருகிறது. அவசியம் பார்கவும். பாப்கார்ன் சுவையாக இருகும்.// காராசேவு(நான் பெரும் விசிறி) அவர்களுடன் கதை விவாதம் எனக்கூறிவிட்டு பாப்கார்ன் சுவையயைச் சுட்டுகிறீர்கள், ஒருவேளை ஏகாதிபத்தியம், அமெரிக்கா,ஹிரோஷிமா,நாகசாகி, ஃபுகுஷிமா, அணுஉலை எதிர்ப்பு போன்றவற்றின் ஜென்வடிவக் குறியீடுதான் பாப்கார்னோ? மேலும் நிலவாந்திரி,மார்சாந்திரி,பால்வெளித்திரளாந்திரி என தஙகள் திரிந்(த்)த புராணங்களை நெகிழவோடு எதிரபாரகிறேன்.
    //நான் தொலைக்காட்சி பார்த்தே 60 வருடங்களாகி விட்டன. பாவம் ஓவியா. பார்க்க உருப்படியாக இருந்தது.// இந்நூற்றாண்டின் உலக எழுத்தாளர்களை உருவாக்கி, நோபல் உள்ளிட்ட பரிசுகளைப் பெறவைத்துவிட்டு, உள்ளூர் மடையர்களுக்கு பப், குடி, குறி, குட்டி எனத் தங்கள் பல்துறை ஞானத்தை ஓசியில் அளித்தும் ஒரு சினிமாக்காரனோ, அதை மட்டுமே காட்டும் சேனல்காரனோ, அதற்கு அடிமையாகிக் கிடக்கும் இந்த ஃபிலிஸ்டைன் சமூகமோ உங்களைக் கொண்டாடதபோது, திரும்பிக் கூட பார்க்காதபோது நீங்கள் ஏன் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்(ஓவியா சான்சே இல்ல), தமிழில் எழுதவேண்டும்? உங்கள் இடம் ஆன்ட்ரோமெடாதான்.

  2. Prabhu Deva Says:

    இவரென்ன திராவிட பொறையா?

    • Sridharan S Says:

      அய்யன்மீர், தீராவிடப் பொறையானது மாளா விடத்தில் ஊறித்திளைப்பது, எனக்கந்த அருகதை இல்லை, மன்னிக்கவும். மேற்கண்ட எதிர்வினையில் (பதிவிலும்கூட குறைந்தபட்சம்) மூன்று பகுதிகள் உள்ளன, முடிந்தால் அவற்றைத் தனித்தனியே வேறுகோணத்தில் பார்க்க முயலவும், பின்னர் இறும்பூது எய்தவும், நன்றி.


      • அய்யா ஸ்ரீதரன்,

        பிரபு அவர்கள் உங்கள் பின்னூட்டத்துக்கு எதிர்வினையிடவில்லை. உங்களுடையதற்கும் (நான் அதனைக் குறிப்பிடவில்லை) அவருடையதற்கும் (நான் அதனைக் குறிப்பிடவில்லை) 54 நிமிட இடைவெளி இருந்தாலும், அவர் உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இன்று காலையில் தான் உங்கள் இருவருடைய பின்னூட்டங்களையும் ‘ஒகே’ செய்திருக்கிறேன். சரியா?

        நன்றி.

        கொடிய சுயம்.

      • Sridharan S Says:

        Got it Sir, thanks for correcting me, meant no offence.

        //நான் அதனைக் குறிப்பிடவில்லை//
        எதனையும் குறிப்பால் உணர்த்தும் வல்லமை பெற்ற தாங்கள் அதனைக் குறிக்கையில் அறியாமல் விடுவோமா என்ன? ஹஹ்ஹஹ்ஹா…

        நெடிய எக்காளத்துடன்
        ஈயம்.

  3. Anonymous Says:

    //கசப்பு ராமம்,

    X இனிய ஜெயம்!

    சரிதானே?


    • சரி. நீங்கள் அக்கப்போர்க்காரராக இருந்தாலும் கண்டுபிடித்துவிட்டீர்கள்! சபாஷ்!!

      எல்லாம் சரி, நீங்கள் ஏன் இன்னமும் அனாமதேயமாகவே இருக்கிறீர்கள்?

      இனிய பயம்? ;-)

  4. ஆனந்தம் Says:

    நம்ம தலைவருக்கு யார் மேலயாச்சும் காண்டு வந்துச்சு, அப்புறம் இப்படித்தான்: https://media.giphy.com/media/6BZaFXBVPBtok/giphy.gif


    • அப்பாவி மேல் இப்படியொரு பாவத்தைச் சுமத்துவது தகுமோ?

      தலை இருப்பவனெல்லாம் தலைவனா? என்னய்யா இது!

  5. Anonymous Says:

    lier, your writing vasagar letter you, same style. EMATHU VELA

    YOU CANT CHEAT EVERYONE


    • அய்யா, நீங்கள் அதே கேபிடலிஸ்டோ?

      என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது! உங்கள் வீட்டில் சுற்றிப் போடச் (அல்லது உங்கள் மரமண்டையில் ஒரே போடாகப் போட) சொல்லவும்.

      எப்படி இந்த அரிய உண்மையைக் கண்டுபிடித்தீர்கள் எனச் சொல்லமுடியுமா? உடனே, இம்மாதிரி அறிதல்களுக்கும் புரிதல்களுக்கும் உள்ள வாய்க்கால்களை அடைத்து விடுகிறேன்.

      ஏனெனில் இந்த ஒத்திசைவெழவு என்பது, புத்தியுள்ள சுயசிந்தனையுள்ள அம்மணிகளுக்கும் அம்மணர்களுக்கும் மட்டுமே. உங்களைப் போன்ற அதிஅற்புத படுபுத்திசாலிகளுக்குக் கிடையாது.

      உங்களைப் போன்ற மேல்மாடிகாலி ஆசாமிகளெல்லாமும் இங்கே வருகிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

      நீங்கள் தான் பொய்யர். போய் என் பேராசான்களுக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி உங்களைப் பற்றி ஒரு பிராது வைக்கப்போகிறேன்.

      இனிய இக்காலையில் என் நாட்களை உருவாக்கியதற்கு நன்றி. That is, thanks for this. You made my daze.

  6. SivaKumar Viswanathan Says:

    புத்தம் புதிய கப்பி , செம் பாதிப்பை படித்து ஞானமும் யுவ கையும் அடைந்தோம். எஸ்றாவிய பாடு பொருளின் பக்க விளைவுகளிலிருந்து இன்னும் மீளா கடைந்தேரா மன்னா… இதே பாரிஸ் ஆக இருந்தால் உங்கள் பெயரில் ஒரு விமான நிலையமே இருந்திருக்கும்… கீ பேட் தேயத்தேய வாசகர் கடிதம் எழுதவேண்டியிருந்திருக்காது..

  7. Anonymous Says:

    Kasappu ramam.. mudiayla saami :)


  8. […] வாசகர் கடிதம் – புத்தம்புதிய காப்பி, … 06/08/2017 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s