ஒத்திசைவு ஆன்மிக மரபும், புதுப்புதுத் தமிழ்வார்த்தைகளும்

August 14, 2017

தமிழ் அலக்கணத்தையும் ஆன்மிக இலக்கியத்தையும் கலந்துகட்டி அட்ச்சுவுடலாம் + ஊக்கபோனஸாக, வாசகர்கடித இலக்கியத்தை எப்பாடுபட்டேனும் முன்னேற்றலாமென்றால் — முந்தைய பதிவை இந்த, ​வேலைவெட்டியற்ற கணேஷும் வசந்தும் அநியாயத்துக்கு ஹைஜேக் செய்துவிட்டார்கள், கேடுகெட்ட பாவிகள். ஆகவே, இப்போது…

-0-0-0-0-0-0-0-0-

அன்புள்ள எழுச்சித் திராவிடன் குண்டலகேசி,

உங்கள் கடிதத்துக்கு நன்றி. ரொம்பவும் எழுச்சியடைந்து கோமணம் கிழிந்து விடப்போகிறது. கவனமாக இருக்கவும். என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் – எதற்கும் ஒன்றுக்கு இரண்டாக போட்டுக்கொள்வது நல்லது. ஆனால், இரண்டுக்குமேல் வேண்டவேவேண்டாம் எனும் குடும்பக் கட்டுப்பாடும் வேண்டும். உனக்கு நான், எனக்கு நீ, நமக்கு ஏன்? தன் கையே தனக்குதவி என்று சும்மாவா சொன்னார்கள், நம் பெரியவர்கள்?

யோசித்தால் எழுச்சித் திராவிடரே! இந்த உலகம் நடந்துகொண்டிருப்பதே, உயிரினங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதே – அந்தப் பலான சாமானிய விஷயத்தினால்தான் சாத்தியமானவை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அந்த நொடியில் நீங்கள்தான் அடுத்த ஜென் ஞானி ஓஷோ! அடுத்த ஷோ இரவு ஒன்பது மணிக்கு.

சாமானியர்களுக்கான இந்தப் பதில், ஏடாகூடமான திசையில் சென்று கொண்டிருக்கிறதேயென பயப்படாதீர்கள். பிரச்சினை என்னவென்றால் – எனக்கு மிளகுரசத்துடன், விரசமும் பிடிக்கும். ஆக, ஒரு முன்னெச்செரிக்கையாகத் தான் இது. ஏனெனில், நான் உங்களுக்கு எழுதும் இக்கடிதம், உங்களினுள்ளே அப்படிப்பட்ட முன்னெழுச்சிமிகு எதிர்வினைகளை எழுப்பலாம். ஏன், என் பதிவு எழுப்பப்போகும் இன்ப லாகிரியில் அந்த வேலைவெட்டியற்ற பரிசுத்த ஆவிக்கேகூட தூய எழுப்புதல் ஏற்படலாம்.

திருப்பலியெழுச்சி ஏற்படலாம். அதனால் தான் —  ஜன்னாஹ்வில் ஒவ்வொரு ஆணுக்கும் துய்க்கக் கிடைக்கக்கூடும் 72 தேவதைகளென்ன, 72000 தேவதைகள் இருந்தாலும் அந்த ஃபிர்தௌஸுக்கே சென்றாலும் கூட – அனைவருக்கும் இந்த இன்பலாகிரியைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக்கூடிய நுண்ணுணர்வு மிக்க மெய்தேடலென்பது,  இவ்வுலக இடைவிடாத ஊர்மேய்தல் மூலமாக மட்டுமே கண்டறியப்படும்.  அளப்பரிய ஆண்மீகம் மூலமே அளக்கப்படும். முடி பிளக்கப்படும்.

”தம்மில் சிவலிங்கம் கண்டதனைத் தாம் வணங்கித் தம் மன்பால் மஞ்சனநீர் தாமாட்டி…” எனத் திருக்களிற்றுப்படியார் சும்மாவா சொன்னார்?

மேலும் ஸாஃப்ட்வேர் என்பது ஹார்ட்வேர் என்பதை உள்ளடக்கி அதற்குமேல் கட்டமைக்கப் படுவதான ஒன்றாக இருப்பதை உணர்ந்தால், உங்களுக்கு ஜாக்ருத் – விழிப் புணர்ச்சி வந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை.

ஆனால், இந்தப் புணர்ச்சியை வெறும் சாருநிவேதிதா வகையாகப் புரிந்துகொண்டால் அது ஸ்வப்ன ஸ்கலித நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றாகி விடும். இது குறித்த மேலதிக ஆழமான உராய்வு விவரங்கள் அவருடைய உபயோகத்தில் இருக்கும் ட்யூரெக்ஸ் உறைகளில் உறைந்திருக்கின்றன.

சரி. இந்த ஸாஃப்ட்வேர் என்பது, என்னதான் ஸாஃப்டாக இருந்தாலும் அது அண்டர்வேர் அல்ல என்பதைப் புரிந்தால் உங்களுக்கு ஸுஷுப்தி நிலை வந்துவிட்டது எனப் பொருள்.

அதாவது, சொப்பன நிலையின் மகாமகோ ஆச்சாரியரான தேவகௌடாபாதர் உரையின் படி – கோமணம், மென்பொருட்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது சர்வ நிச்சயமாக, கணிநியை ஓட்டும் மென்பொருளல்ல எனும் ஆழமான த்வைத அறிதல்தான் இந்த ஸுஷுப்தி நிலை.

ஆனால்…. அந்த அண்டர்வேர் என்பதே உடலுக்கு நடுவில் போட்டுக்கொள்ளப்படுவதால்தான்  மிட்டில்வேர் என அழைக்கப்படுகிறது என்பதைக் குறித்த அடிப்படை அண்டர் ஸ்டேண்டிங் பெற்ற அடுத்த வினாடியில், குறியீடு அடியிலிருந்து குண்டலினியாகக் கிளம்பி எழும்பி நிற்க ஆரம்பிக்கும். ஆண்மிகை வளர்ச்சி.

இவ்வளர்ச்சியை அமோகமாகப் பெற்ற உங்களுக்கு, துரிய நிலை கியாரண்டி. கவலை வேண்டேல்.

அதன்பிறகு, நீங்கள் முமுட்சுவாகப் பரிமாணம் பெற்று பரிமாண வளர்ச்சியை எட்டி, கதிமோட்சத்தை அடைவதை விட வேறுவழியே இல்லை. மன்னிக்கவும்.

…ஆகவே ஒத்திசைவு ஞானமரபில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்மூட்டல்: கண்டிப்பாக, நீங்கள் இன்னமும் லேப்டாப்பை மடியில் வைத்திருந்தால் உடனடியாக அகற்றிவிடவும். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? நன்றி.

மேலும் (அல்லது கீழும்) நீங்கள் எக்குதப்பாக திடீரெக்ஸ் திராவிட எழுச்சி பெற்று கணினி உருண்டு கீழே விழுந்து, ஊக்கபோனஸாக நீங்கள் லேப் டாப்லெஸ் ஆனால் எனக்குப் பார்க்கச் சகிக்குமா, சொல்லுங்கள்?

மேலும், எனக்கெதுக்கு வம்பு.

-0-0-0-0-0-0-0-

ஆன்மிகம் கிடக்கிறது கழுதை. இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உண்மையைச் சொன்னால் – எனக்கே என்னைப் பற்றி ஆச்சரியமாக இருக்கிறது. என்னை நானே புகழ்ந்துகொள்வதற்கும் கொண்டாடுவதற்கும் எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், உண்மையை உரக்கச்  சொல்லவேண்டுமல்லவா, சொல்லுங்கள்? என் குரு எனக்கு அப்படித்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் ஞானமரபு அப்படிப்பட்டது.

ஒருவன் படுபடுபடுபடு புத்திசாலியாகவும், அளவுக்கு மீறிய ஞானவானாகவும் இருந்தால்தான், அதாவது என்னுடைய ஆகிருதியில் 5சதவீதமாவது இருந்தால்மட்டுமேதான் – அவனால் புதுப்புது வார்த்தைகளையும் அர்த்தங்களையும் தொடர்ந்து உருவாக்க முடியும்.

ஆக, குறிப்பாக – எனக்கே உரித்தான எல்லையற்ற தன்னடக்கத்துடன் சொல்லவேண்டுமென்றால், வேறு எவனும் என் கால்தூசுக்குக் கூடச் சமமில்லை. மனிதர்களால் அவதானிக்கவே முடியாத உச்சங்களில் தனிமையின் எகாந்தத்தில் இனிமை காணுபவன் நான்…

சரி – நீங்கள் கேட்கிறீர்களே என்று சொல்கிறேன்: பொதுவாக, நான் ஏதாவது புதுத் தமிழ் வார்த்தையை உருவாக்கினால் அதற்கு மூன்று காரணங்கள் அல்லது முறைமைகள் இருக்கும்:

முதலாவது: இது  ஒரிஜினலாக ஒரு எழுத்துப்பிழை – தற்செயலாக நடப்பது. ஆனால் இப்பிழையைத் திருத்துவதற்கு பதிலாக, எப்படி அந்த பின்னப்பட்ட வார்த்தைக்கு இன்னொரு பொருளைச் சுட்டலாம் எனப் பார்ப்பேன். பல சமயங்களில் இது நூதனமுறையில் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு: அக்கிரமிப்பு – ஒரு இடத்தை அறத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்தல்.

ஆக்கிரமிப்பு என்பதை காந்தியரீதியாகப் பார்த்தால் ஒருமாதிரி அஹிம்சாவழி சாத்வீகமாக இருக்கும். மார்க்சீய ரீதியில் பார்த்தால் ஒருமாதிரி சிவப்பு நிறத்தில் பாட்டாளி வர்க்க அறம் போன்றிருக்கும். ஆனால் திராவிட ரீதியில் பார்த்தால் அது அடாவடிப் பொறுக்கித்தனமாக இருக்கும். ஆக – அக்கிரமிப்பு என்பது திராவிட வழி.

இதை எப்படி உபயோகப் படுத்துவது?

திராவிடப் பிணங்கள்கூட சென்னை மெரீனா கடற்கரையை அக்கிரமிப்பு செய்கின்றன. இதுவரை எந்த திராவிடப் பிணம் விழுந்தாலும் அதனை எடுத்துக்கொண்டு போய் புதைக்கவேண்டும் எனும் வேலை இருந்தது. ஆனால் வரும் காலங்களில் – பழக்கதோஷத்தால்  பணப்புழக்கம் சார்ந்த பிணப்புழுக்கத்தால், எந்த உயர் திராவிடப்பிணமும் அது விழுந்தவுடன் ஆட்டோமேடிக்காக மெரீனா சென்று ‘தனக்குத் தானே’ என ஒரு குழியை நோண்டி அதில் படுத்துவிடும். செத்தாலும் கெடுப்பான் திராவிட அக்கிரமிப்பாளன் எனத் தெரியாமலா சொன்னார்கள் சங்ககாலத்தில்?

ஆக, 2050வாக்கில்  அக்கிரமிபீச் என அழைக்கப்படக்கூடும் மெரீனாபீச்சில் அக்கிரமிப்பு  சமாதி அமைத்தே சம்பாதிப்பான் திராவிடக் காண்ட்ரேக்டாளக் கொழுந்து.

…ஊக்கபோனஸாக, கடற்கோள்களே கூட இந்த திராவிடவேதாளங்களின் பாசறைகளை மீறி சென்னையில் பேரிடரை உருவாக்கமுடியாது. ஏனெனில் திராவிடப் பிரேதங்களுக்கு இருக்கும் பசியிலும் தாகத்திலும் அவை கடற்கோள்களை மட்டுமில்லாமல் கடல்களையே கபளீகரம் செய்துவிடக்கூடிய பராக்கிரமம் மிக்கவை. ஆக – வங்காளவிரிகூடாவுமே அலைகடலென ஆர்பரிக்க முடியாமல் கடலெழவே என அமுக்கி வாசிக்கத்தான் முடியும்.

பாவம், அது. இனிமேல்  வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

இந்த நெருப்புக்கு ஜலஜாக்கினி எனப் பெயர் என, என் குருவுக்கு நான் போதித்ததாக நினைவு… பிரச்சினை என்னவென்றால் இப்படி எவ்வளவோ திறப்புகளை என் குருவுக்கு அளித்திருக்கிறேன்; ஆனால் அவர் ‘முதலில், உன் பேண்டில் ஜிப் போட்டுக்கொண்டு வா’ என மரியாதைக்குறைவாகச் சொல்லிவிட்டார்… வயதானாலும் அவருக்கு விவேகம் வரவில்லையே! குறைந்த பட்சம் வடிவேலமாவது வந்திருக்கலாமே! ஹ்ம்ம்ம் :-(

ஆக – ஒரு எழுத்துப்பிழையை வைத்துக்கொண்டு என்னால் ஒரு திடுக்கிடவைக்கும் மர்ம நவீனத்தையே எழுதிவிடமுடியும். ஏனெனில் ஒரு இலக்கியவாதியின் படைப்பு சக்தி என்பது அப்படிப்பட்டது. இது புடைப்பு சக்திக்கு அத்தைமகள் என்பதையாவது நீங்கள் இப்போது புரிந்து கொள்ளவேண்டும். நன்றி.

-0-0-0-0-0-0-

இரண்டாம் முறைமை: ஆட்டோ கரெக்ட் / ஆட்டோ கம்ப்ளீட் வழி / ஆட்டோ ஸஜ்ஜெஸ்ட். பொதுவாக, நம் கணிநியில் நாம் எத்தையாவது தட்டச்சு செய்ய முயலும்போது நாம் சரியாக அடித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம், வெகு மும்முரமாக அது நம்மைக் கரெக்ட்/கம்ப்ளீட் செய்து கொண்டிருக்கும் அல்லவா? நம்மில் பெரும்பாலானோர் இதற்கெதிராக ஒரு ஜிஹாத் நடத்துவார்கள், அது கரெக்ட் செய்ததை நாம் கரெக்ட் செய்ததை அது மறுபடியும் கரெக்ட் செய்ய, பின் இப்படியாப்பட்ட சுழற்சிகளில் கரெக்டார கம்ப்ளீட்டார சாகரங்களில் நீந்தி வெறுத்துப் போய் பின்னர் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டி மறுபடியும் ஆரம்பித்தால் – மறுபடியும் அதே ஆட்டோகரெக்ட்! :-(

ஆக – விட்டுவிடுதலையாகி விட்டாய் அந்தத் தட்டச்சுக்குருவியைப் போலேயெனப் பிரலாபித்து விக்கித்து, வாழ்க்கையின் விளிம்புக்கே ஒடிப்போய்விடுவார்கள், பலர்.

ஆனால் அய்யா, நான் அப்படியல்லன். விட்டேனேபார்தான்! இந்த முயற்சியினால் எனக்குக் கிடைப்பது பொக்கிஷம்பொக்கிஷமாக புதுவார்த்தைகளும் சாத்தியக்கூறுகளும்.

ஒரு எடுத்துக்காட்டாக:நான் தட்டச்சு செய்ய முயன்றுகொண்டிருப்பது: ராமசாமி – ஆட்டோ கம்ப்ளீட்/கரெக்ட் செய்யப்படுவது: சுப்ரமணியசாமி
ராம…
ராமசுப்ரமணியசாமி
ராமசா
சமோசா
ரா ம சா
மசானகொள்ளை
மசாமி
மனசாஸ்மராமி
சாமி?
ஸ்ரீவேங்கடேசம் மனசாஸ்மராமி
ராமி
ரம்மி
ரா
ரண்டி

ராசா
கைய வெச்சா
ராசா
ராங்கா போனதில்ல


ஒருவழியாக என் பெயரை அடிக்காமல் ‘ஜெயமோகன்’ (பெயரை) அடிக்கலாம் என்றால், இப்படி ஒரு கொடுமை. :-(

ஜெயமோகன்
ஜெயலலிதா
மோகன்
ஏகே47
ஜெமோ
ஜெல்லோ
ஜெயமோ
ஜெயஹே
யமோகன்
யமஹா
மஹா
கமல்ஹாசன்
பி ஜெயமோ
பிஜேபி
ஜெயன்
ஜெயின்
ஜெயம்
விஜயம்
ஜெமோன்
ஜெர்மன்

ஜென்
ஞான் மரபாணு

… …
சரி, இதனையும் அம்போவென விட்டுவிட்டு என் செல்ல எஸ்ரா பக்கம் போனால்… இந்த ஆட்டோகம்ப்ளீட் அதற்குள் மிகச்சரியாகத் தெலுங்குமொழியை வேறு கற்றுக்கொண்டுவிடும்.
எஸ்ரா
சற்குணம்
எஸ் ரா
ஆம், உள்ளே வரவும்
எஸ்ராமகிருஷ்ணன்
கும்பகர்ணன்
தேசாந்திரி
விளக்குத்திரி
துணையெழுத்து
தலையெழுத்து
சூஃபி
காப்பி
ஜென்
மாருதி

ஜென்
ஜன்னி

தேகம்
பப்பிள்கம்
இடக்கை
வழுக்கை
வலக்கை
உலக்கை
வலகை
உலகை
அபா!
அமா!
அயோ!
அயயோ!

அமாடியோ!
அமேடியஸ்
?
வொலக திரைபட
??
டவுன்லோட்
???
ஆளைவிடு
நெடுந்தனிமை

… …  இவற்றைத் தவிர, ஆர்வமுள்ள ஆனால் பிறபிழியும் வேலைகளற்ற குமாஸ்தாவிய தமிழ் இளைஞர்களால் பல புதிய தமிழ் வார்த்தைகள் உருவாக்கப்படுகின்றன. ஆக…

மூன்றாம் முறைமை: இந்த வழியையும் நான் தாராளமாக உபயோகிப்பேன்.  எடுத்துக்காட்டாக, மஜராட்டி எனும் புத்தம்புதிய தமிழ் வார்த்தை.

மஜராட்டி – கிளுகிளுப்பு மஜா கொடுத்து ஆட்டிப்படைக்கும் பிராட்டி, முற்காலங்களில் ‘கனவுக் கன்னி’ என அழைக்கப்பட்ட அதே அம்மணீ!

இதனை ‘நிசப்தம்’ புகழ் இளம் மணிகண்டன் அவர்களிடமிருந்து கப்சிப்பென்று கடன்வாங்கி ஒரு காலையும் சேர்த்தியிருக்கிறேன்; உண்மையைச் சொல்லவேண்டும் – இந்த இளைஞரை நான் குறைவாக மதிப்பிட்டுவிட்டேன். :-( இவருடைய நகைச்சுவை உணர்ச்சி என்பது ஏகத்துக்கும் எகிறிக்கொண்டிருக்கும் விஷயமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது!

(கருத்துப் படம்: மணிகண்டனின் மஜராட்டி; கன்னி. இந்தப்படத்தையே பார்த்துக்கொண்டு தூங்கிவிழுந்து கனவிலேயே எழுச்சி பெற்றால் – அது மஜராட்டியாக, கனவுக் கன்னியாக உர்ர்ர்ர்மாற்றம் பெறும்)

பெரும்பாலும் இம்மாதிரிச் சொற்கள் வேர்ச்சொற்கள் – அவற்றிலிருந்து பலப்பல சாத்தியக்கூறுகளைக் கறந்தெடுக்கலாம்.

உபயோகம்: ‘மக்களைப் பெற்ற மஜராட்டி!’ இது, அண்மையில் குட்டிகளை ஈன்ற தாய் நாயைக் குறிக்கும்.

இன்னொரு மரூவு மறுஉபயோகம்: ‘நீ என்ன பெரிய மசுராட்டியா?’ (இது பெண்பாலினத்தவர் மேல் பெண்பாலினத்தவரே, ஒரு பெரிய பெண்ணியப் பிரச்சினையுமில்லாமல் பிரயோகிக்கலாம்)

கஜராட்டி – யானைக் குழுமங்களில் இருக்கும் பராக்கிரமம் மிக்க பெருந்தாய்.

புஜராட்டி – தோள்வலி வந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சினைகளில் சிக்கி அல்லா(ஸல்)டும் பெண்மணிகள்.

டஜராட்டி – 12 பிராட்டிகள் கொண்ட குழுமம்ஸ் (=குழு தாய்மார்கள்)

இப்படியே தொடர்ந்தால் – பிராட்டிகளுக்கும்,  நாயுடுஹால் விளக்கவுரைகள் கொடுக்கலாம், ஆனால் எனக்கெதுக்கு வம்பு.  நன்றி, இளம் மணிகண்டராடிட்டி சோழர் அவர்களே!

-0-0-0-0-0-0-0-

ஆக,  எழுச்சித் திராவிடன் குண்டலகேசி அவர்களே! நீங்களும் உங்களுக்கு சாவகாசம் இருக்கும்போதெல்லாம் புதுப்புதுத் தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்து, ஒத்திசைவு ஞான மரபில் அரும்பணியாற்றலாம். மேலதிக எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெறலாம். நன்றி.

அன்புடன்,

எழுத்தாளர் வெ. ரா.

One Response to “ஒத்திசைவு ஆன்மிக மரபும், புதுப்புதுத் தமிழ்வார்த்தைகளும்”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s