எஸ். ராமகிருஷ்ணன்: உணவு விற்பன்னர், உணவுசார் அரசியல் நிபுணர்

May 9, 2016

ஆனால், அடியேன்: வெறுமனே உணவைத் தின்பவன், அம்புட்டுதேன்!

…என் நல்லூழ் காரணமாக மட்டுமே –  நெடுங்குருதி காலத்திலிருந்தே, தொடர்ந்து என் நண்பராகவும் பேராசானாகவும் இருக்கும் என் அண்ணன் எஸ்ரா அவர்களின் இந்தப் புதிய அவதாரத்தை நான் இதுவரை, இன்றுவரை, இந்த வினாடிவரை அறிந்திருக்கவில்லை. ஆக, இன்று நான் என் பிறவிப்பயனை அடைந்தேன்; மசுர்க்கூச்செறிகிறது, நன்றி!

-0-0-0-0-0-0-

ஆகவே, என் மண்டைமேல் சம்மட்டியால் அடித்து எனக்கு இப்புதிய அவதாரம் பற்றிய அளப்பரிய உண்மைகளையும் இறும்பூதையும் அளித்த நண்பருக்கு என் இதயபூர்வமான, மூளை வெதும்பிய, மனம் நொந்த, சலிப்புச் சாபங்கள்.
Screenshot from 2016-05-09 10:14:36
மேற்கண்ட கண்டவிஷயத்தைப் படித்தவுடன், எனக்கு மூச்சுமுட்டி மூத்திரம் வந்துவிட்டது. என் தவறுதான். ஆனால் இதில் இரண்டு விஷயங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன, தொடர்ந்து தருகின்றன.

1. எஸ்ரா அவர்களின் புகைப் படங்களைப் பார்த்தால், அவர் பாரம்பரிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு, மிகுந்த ஆரோக்கியத்துடனும் இலக்கியத்தனத்துடனும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆரோக்கியத் தொந்திமுதல்வாதம் எனக்குக் குழப்பத்தை விளைவிக்கிறது. நிலைமை இப்படி இருக்கையிலே, எப்படி என் அண்ணனார், இம்மாதிரியெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யமுடியும்? (ஆனால், முடிகிறதே அய்யா!)

2. இந்த எழவெடுத்த விளம்பரத்தில், ‘We have lost the safe food from our pates‘ என்று மிகச் சரியாகவே எழுதியிருக்கிறார்கள். ஆனால் வருத்தம்தரக்கூடிய விதத்தில், pate என்றால் (முன்)மண்டை. bald pate என்றால் வழுக்கை மண்டை. plate என்றால் தட்டு.

ஆக, இந்த பிரகிருதிகளெல்லாம், முன்மண்டையின் மீது ஏன்தான் தங்கள் ‘பாதுகாப்பான உணவினை’ வைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. அப்படி வைத்துக்கொண்டால், அவை வழுக்கி விழுவது என்பது சாதாரணமாகவே நடப்பதுதானே?

Screenshot from 2016-05-09 10:54:09
ஒரு எடுத்துக்காட்டாக, அண்ணன் எஸ்ரா அவர்களின் pate என்பதைப் படம் வரைந்து பாகத்தைக் குறித்திருக்கிறேன்.
அவர் தன் உணவை அங்கு மிக பாதுகாப்பாகவே வைத்துக்கொண்டால் (அவர் மேஜிக்ரியலிஸக்காரர் என்பதையெல்லாம் நான் அறிவேன், இருந்தாலும்!), அதற்குப் பன்னாட்டு நிறுவனச் சதிகள் எப்படித்தான் காரணமாக இருக்கமுடியும், சொல்லுங்கள்? :-(

அவரது இரண்டு கைகளையும் தட்டச்சு விசைப்பலகையிலிருந்து சற்று நேரமாவது எடுத்துவிட்டு, தன் தலையில் வைத்திருக்கும் உணவுப் பண்டத்தைப் பாதுகாப்பாக, சபரிமலைக்கு வேண்டிக்கொண்டு போகிறவர்களைப் போலப் பிடித்துக்கொள்ளலாமல்லவா? ஸ்ஸாமியே யீ ஸரணமய்யப்பா!!!!

இடக்கை தாக்கிய இதயமொரு கோடி
கோடியுமே உன்னைத் தேடி
இருள் பெற
திருத்தலம் வந்தோம் நாடீ….
எஸ்ராப்பா ஸ்வாமீ எஸ்ராப்பா…

-0-0-0-0-0-0-0-

ஸப் பாபி பேட் கி ஸவால் ஹை?

மேற்கண்டதைத் தவிர, தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் வந்திருக்கும் இந்த அழைப்பும் காணக் கிடைத்தது; எல்லாம் அதே ‘உணவு யுத்தம்’ தொடர்பான பேருரை தொடர்பாகவேதான்!:

For those who have not read his book, the author is an expert on food and the politics around it.

…இதன் மூலமாகத்தான் நான், என் நண்பர் எஸ்ரா அவர்களின் அல்டாப் ஆகிருதியைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

அழுகையாக வருகிறது.  ஒரு பாவப்பட்ட சப்ஜெக்டைக் கூட விடாமல், இப்படிக் கலந்தடித்துக் கதம்பச்சோறு பரிமாறுகிறாரே, இந்த எஸ்ரா! :-(

ஆனால், ஒருவேளை நானுமே கூட ஒரு மகாமகோ Expert on eating food and the governance around itடோ என்ன எழவோ! ங்கொம்மாள… :-((

இப்போது அந்த அறிவிப்பு சொறிவிப்பின் மற்ற பகுதிகளைக் பார்க்கலாம்.
Do come over to understand:
– How MNCs are deciding what you are eating..

ஒரு பேச்சுக்கு இப்படி இந்த எழவெடுத்த பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன, எனும் நகைச்சுவையைச் சரியென்றே எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் வேலை கொடுத்தால் எடுத்துக்கொள்வோம். அவர்கள் தண்டத்துக்குக் கொடுக்கும் சம்பளத்தையும் புளகாங்கிதத்துடன் பெற்றுக்கொள்வோம். அந்தப் பிச்சைக்காசில் எங்களுடைய உப்புமா பாண்டவத்தை வாங்கினால் அதிமகிழ்ச்சியடைவோம். அதாவது நமக்கு லாபம் வரவேண்டுமென்றால், என்னவேண்டுமானாலும் அறவுணர்ச்சியுடன் ஆடிக் கொண்டு, பெருந்தன்மையுடன் துட்டைப் பெற்றுக்கொள்வோம்.

ஆனால், அந்த நிறுவனங்கள், தங்கள் லாபத்துக்கு என்று ஒரு மசுத்தையும் பிடுங்கக்கூடாது! ஆமான், நான் சொல்லிப்புட்டேன்.

எஸ்ராவின் பார்வையே அலாதிதான்!
– How food is an organized Industry…

அய்யோ! இப்படியா உளறுவார்கள்?  உணவு என்பது ஒரு தொழில் என்றால், கார் என்பதும் ஒரு தொழில். புத்தகம் என்பதும் ஒரு தொழில். கட்டுரை ஒரு தொழில். வசை ஒரு தொழில். வேசை ஒரு தொழில். எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு தொழில். ஏன், நானுமே ஒரு தொழில்தான்.

தொழில்முறையில் உளறிக்கொட்டிக்கொண்டேயிருப்பதற்கு என புற்றீசல் போலக் கிளம்பியிருக்கிறார்கள் போல!

இன்னாங்கடா ஸொல்ல வர்ரீங்க, தொளில்முறை உளறல்வாதிகளா??

– How meticulously industrialising food is distancing food and health

ஏண்டா, உங்களுக்கு கமா கிமாவெல்லாம் எஸ்ரா கிட்டயாச்சும் கடன் வாங்கமுடியணுமேடா! இப்டீ கொல்றீங்களேடா!

எந்த வார்த்தைய எங்க வொபயோகிக்கணும், ஓரளவுக்காவது எலக்கண ஸுத்தமா ஒரு வரிய எள்தணும்றத யெல்லாம் எப்படா கத்துக்கப் போற்றீங்க!

– The myths of today’s food and its ill effects..

டேய்! அப்டீன்னாக்க, உணவோட ‘எதிர்மறை’ வெளைவுன்னிட்டு நீங்க பர்ப்புர பண்றதும் ஒரு கதைகட்டல்தானாடா?

என்னடா இப்டீ எள்தியே ஸாவடிக்கிறீங்க, கோமாளிங்களா!

டமிள்ளயும் ஒய்ங்க்கா எள்த முடியலே, இங்க்லீஸ்லயும் நாலு வார்த்த கோர்வையா எள்தவரல்லே! ங்கொம்மாள, வொங்க்ளுக்கெல்லாம் ஃபேஸ்புக் எளவு ஒரு கேடா?

-0-0-0-0-0-0-0-

கந்தறகோளமாக, எப்படித்தான் இப்படி உணவுயுத்தம் என்றெல்லாம் பெயர் வைக்கிறார்களோ! ஒருவேளை, இப்படி ஏதாவது பகீர்த் தலைப்பெழவுகளை வைத்தால்தான் புத்தகம் விற்கும் எனும் சிந்தனையோ? (எப்படியும் நான் இந்தப் புத்தகத்தைப் படிப்பதாகவில்லை என்றாலும்…)

யுத்தம் சரணம் கச்சாமி
கருமம் சரணம் கச்சாமி
எஸ்ரா சரணம் ராம்சாமி
மொக்கை மரணம் முன்சாமி

-0-0-0-0-0-0-

…பிரச்சினையென்னவென்றால், எஸ்ரா அவர்களுடன் எந்த எழவு சேர்ந்தாலும், அதுவும் நாறுடன் சேர்ந்த பூ போல டார்டாராகப் பிய்ந்துவிடுகிறது. ஊக்கபோனஸாக, நாறுகிறது. இது தேவையா?

தமிழிலிருந்து ஆங்கிலம் வரை, அணுசக்தியிலிருந்து சாப்பாடுவரை, ஓசையிலிருந்து வேசை வரை, ஜென் எழவிலிருந்து பேக்கரி பன் வரை – எஸ்ரா தொடர்பேற்ப்பட்டால், சர்வ நாசம் ஆகி விடுகிறது, என்ன செய்ய…

இந்த அழகில் இவர், வுயிர்மை நடாத்திய ஜுஜாதா விருது விளா ஒன்றில் பேசியிருக்கிறாராமே? :-(

அதில் ஜுஜாதா படித்த புத்தகங்களைப் பற்றியெல்லாம் அட்ச்சுவுட்டாராமே, உண்மையா என்ன?

இந்த மனிதரின் ஞானதிருட்டி எனக்கு, படுபயங்கர பொறாமையை அளிக்கிறது, வேறென்ன சொல்ல!

(சும்மா பேச்சுக்குக் கேட்டேன்; யாரும் சுட்டியைக் கொடுக்காதீர்கள், எனக்குத் தாளாது!)

நன்றி.

-0-0-0-0-0-0-0-

கடந்த பத்து நாட்களாக, மிகச் சந்தோஷமாகவே குழந்தைகளுடன் வேலை (=”பொறியியல் பணிமனை” ) செய்துகொண்டிருக்கிறேன். இது அடுத்த மூன்று வாரங்களுக்குத் தொடரும். ஜாலிதான்.  தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறதோ, தேர்தல் முடிவு என்னவாக ஆகப்போகிறதோ என்ற கவலையெல்லாம் படாமல், ஒரு விசித்திரமான, நாட்டு நடப்புகளைப் பற்றிய கவலையே பட அவசியமில்லாத, ஆகவே லாகிரி கொடுக்கும் வாழ்க்கை.

…இருந்தாலும் ரொம்பவும் மகிழ்ச்சியடையக்கூடாதல்லவா? வாழ்க்கையில் சோகமும் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கவேண்டும் என்பதால்தான் இப்படி

-0-0-0-0-0-0-

4 Responses to “எஸ். ராமகிருஷ்ணன்: உணவு விற்பன்னர், உணவுசார் அரசியல் நிபுணர்”

 1. ravi Says:

  //
  தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறதோ, தேர்தல் முடிவு என்னவாக ஆகப்போகிறதோ என்ற கவலையெல்லாம் படாமல், ஒரு விசித்திரமான, ட்டு நடப்புகளைப் பற்றிய கவலையே பட அவசியமில்லாத, ஆகவே லாகிரி கொடுக்கும் வாழ்க்கை.
  //
  ஏன் ராம், எப்படியும் இந்த அம்மா தான் ஜெயிக்க போகிறது !! எதற்கு வெட்டி வேலை என்றா ??

 2. ravi Says:

  இந்த முறை தேர்தல் சம்பந்தமாக ஏதாவது சுவாரசியமான செய்திகள் ??


 3. அவரளவுக்கு எழுதுவதற்கு நீங்கள் இன்னும் சில ஜென்மம் எடுக்கனும். ஆனால் அப்பொழுதும் சிரமம் தான்.காழ்புணர்ச்சியும்,வக்கிர எண்ணமும்
  உள்ளவர்களால் எழுத்து மட்டுமல்ல எதிலுமே வெற்றி பெறுவது கஷ்டமே!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s