‘சங்க காலம்’ என்பது தமிழர்கள் ஏகோபித்து அடித்த கூட்டுகஞ்சா பராக்கிரமத்தின் விளைவு
March 2, 2023
ஏனெனில்.
ஒரு விதமான காத்திரமான – அதாவது, பலதிசைகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நிறுவப் பட்ட ஆகவே ஸ்காலர்கள்/சான்றோர்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய சான்றுகளே அதற்கு இல்லை. ஒரு நெடுமுடிக்கும், புறச்சான்றே இல்லை.
மாறாக, தரவுகள் ‘too many evidences’ என நாம் குண்டுதெகிர்யமாகச் சுட்டுபவை, நம் ஆத்மார்த்தமாக நம்பும் பிரமைகளோ அல்லது பரப்புரைகளால் நம்ப வைக்கப் படும் விஷயங்களோதாம்.
ஆனால், அழகாக எட்டுத்தொகை இலக்கியங்கள் இருக்கின்றன; ஏன், பிற்காலத்தில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட பத்துப்பாட்டும் தான்.
…நிலவில் ஒரு சூனியக் காரி இருக்கிறாளாமே? ரொம்பத் தொடர்ந்தால் திராவிடக்காரியவள் கனவில் வந்து நம் கண்ணைக் குத்தி விடுவாள்.
ஆகவே.
இந்தப் பதிவு முடிந்தது.
ஏனெனில், வீரியமிக்க கஞ்சாவின் பிடியில் இருந்து வெளிவருவது மிகக் கடினமானவொரு விஷயம்தான்.
நன்றி.
பின்குறிப்பு: இந்தக் கருத்தை நான் வந்தடைய சுமார் 30 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. சொல்லப்போனால், அது என் சொந்தசுயம்பு கருத்தல்ல.
ஏனெனில் – என்னுடைய ஒருமாதிரி தெளிவுக்கு, கீழ்கண்ட பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் பலப்பல சான்றோர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
Tamil Dating Industry: ‘Sangam Age’ spins & our lovely Tamil Hysteriagraphy – quick notes (January 5, 2023)
மற்றபடி, கஞ்சாப்புகையில் மிதப்பது பலருக்கும் பிடிக்கிறது என்பதை அறிவேன்; அவரவருக்கு அவரவர் வழி.