இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள், ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக முக்கியம்.
ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள் புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள். ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)
January 11, 2014
யுத்த தர்மம் என்று ஒன்று உணடு. ஆனால், வாயையும் கையையும் கீபோர்டையும் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இக்காலங்களில் பிரயோகிக்கத் தெரியாத என்மேல் — என் குற்றச்சாட்டுகளுக்கு(=தீர்ப்புகள்), நேரிடையாகப் பதில் சொல்லாமல், எதிர்வினை தராமல் – இப்படி ஒரு கெரில்லாத் தாக்குதலை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்! கிருஷ்ணர்களுக்கும் தருமத்துக்கும் ஒரு தொடர்புமே இல்லையோ!
பாருங்கள் இந்த அநியாயத்தை – அவர் வலைத் தளத்திலிருந்து ஒரு மகாமகோ முழிபெயர்ப்புச் சாத்தானை ஏவி விட்டிருக்கிறார்!
இவருக்கென்று பிரத்யேகமாக — படு பீதியளிக்கும் பயங்கர ட்ரான்ஸ்லேஷன், டிக்ஷனரி ஆயுதங்களை ஏந்தி, வாசகர்களின் கபாலங்களின் மீது கோரதாண்டவம் ஆடும் பயங்கரவாத ஆபத்துதவிப் படையினர் இருக்கின்றனர் என்று எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. அந்த எழவெடுத்த பொன்னியின்செல்வனில் இது பற்றி ஒன்றுமே இல்லை… Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)
January 8, 2014
B-( 8-( :-( … … :-{
… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…
முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என் அளவுக்கு மிக மிகப் பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
இன்னொரு விஷயம்: ‘வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’ என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது தேவையா?? Read the rest of this entry »
ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு!
January 6, 2014
(அல்லது) n = n +1
எல்லா நாட்களிலும் இப்படி நடப்பதில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால்…
… நேற்று மாலை, என்னவோ யோசனையில் (யாக்கை நிலையாமை என) ஆழ்ந்துகொண்டு, மெதுவாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது – ஒரு மோட்டார்சைக்கிள் பீய்ங் பீய்ங் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. முடிந்தவரை இடதுபக்க ஓரம் சென்றாலும் ஒரே பீய்ங் பீய்ங். சாலை என்னவோ விசாலமாக இருந்தாலும் இப்படி! Read the rest of this entry »
கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(
January 5, 2014
(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்…
ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம் – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.
ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.
ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும் முடியவில்லை! Read the rest of this entry »
what is education?
December 18, 2013
Every once in a while, I do conduct some random workshops (or training sessions if you will), pontificating on what fancies me at that moment.
And so, it was the turn of a few hapless fellow teaching-colleagues who were unfortunate enough to be part of the conscripted audience of a 2.5 hour talk (spread over two days – conducted a few weeks back) delivered by yours truly (of the I-Me-Myself fame).
I wanted to do the talk in Tamil – but that was not to be, because 1) Most of the audience was made up of fellow Tamils – so they wanted it in English 2) There were a few non-Tamils who of course wanted it in English.
Normally my talks (*gasp*) are just plain ol’ stand-up comedy types – but this time, it was done with a few handouts and all that paraphernalia. I even made a powerpoint presentation, O tempora, O mores! :-(
shah jahan’s tajmahal vs raja’s 2G corruption
December 12, 2013
Oh, yeah. Once in a while, we ‘discuss’ politics and allied goings-on (including the civic structures and civil society) with our impressionable adolescents. We sometimes discuss history too, in spite of the fact that, in these times of the impending ‘secondary school leaving certificate’ exams and prep mode for some of our children, we can’t have interesting discussions like *this all the time.
But, still…
Here is a gist of a rather tricky question posed and some ideas it generated…
1600s CE:
The Moghul emperor – Shahab-ud-din Muhammad Khurram – popularly titled and known as ‘Shah Jahan’ (Ruler of the World – for a given value of the world, that is!) in our horrendous history books – ordered the construction of a mausoleum (basically an elaborately & aesthetically constructed interment monument) – over the grave of his favorite queen (who was also Khurram’s maternal cousin) Arjumand Banu Begum – popularly known as Mumtaz Mahal. Read the rest of this entry »


