கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(

January 5, 2014

(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே  எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்

ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன  சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம்  – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை  அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.

ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.

ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும்  முடியவில்லை!

… முனைப்பில்லையா, எவர் சரி பார்க்கப் போகிறார்கள் என்கிற எண்ணமா, அடிக்கடி எழுதவேண்டிய நிர்பந்தங்களால் ஏற்படும் மன அழுத்தங்களா, எப்படியாவது படிப்பாளியாகக் காட்டிக் கொள்ளவேண்டும் அறிவுஜீவியாகக் கருதப் படவேண்டும் என்கிற மனப்போக்கா, அல்லது இந்த அரைகுறைக் கூமுட்டைத்  தமிழர்களுக்கு இவ்வளவு செய்தாலே போதும் – தலைமேல் வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடுவார்கள் – என்கிற எண்ணமா? அல்லது – வாழ்க நீ எம்மான் என்கிற போக்கில், சில நாட்களுக்கு ஒருமுறை காந்தியைப் பற்றி ஏதாவது பஜனை நாமாவளி எழுதவேண்டும் என ஒரு ஆன்மீக உந்துதலா?

எஸ் ராமகிருஷ்ணனை ஒத்த ஆளுமைகளுக்கு, இப்படியெல்லாம் இருக்கவேண்டிய அவசியம் என்ன? என்ன போதாமை, இப்படி வெளிப் படுகிறது?

இவர் எழுதக் கூடிய தரத்துக்கு – உழைக்கக்கூடிய அளவுக்கு (=potential), இக்காலங்களில் இவர் தொடர்ந்து  எழுதும் தரம்(=stark & sad reality),  ஓரளவு தமிழ் இலக்கியம் பற்றிய விஷயங்களில் ஆர்வமும் பரிச்சயமும் உள்ள, ஆனால் வெகு சாதாரண வாசகனான எனக்கு, மிகவும் வருத்தம் தருவதாகவே இருக்கிறது.

ஹ்ம்ம்… எப்படியாக இருந்தாலும், இவருடைய தற்கால எழுத்துகள் நாராசமாக இருக்கின்றன என்பது என் கருத்து.

தொடர்ந்து தமிழில் எழுதி வரும், சுயானுபவம் சார்ந்த பொருட்படுத்தத்தக்க சிறுகதைளை எழுதியிருக்கும், பரவலாக வாசகர்களைப் பெற்றிருக்கும் ஒருவர் ஏன், இக்காலங்களில் இப்படித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார் என்று ஆயாசமாகவே இருக்கிறது.

சரி, பிலாக்கணத்தை ஓரம் கட்டிவிட்டுப் பார்க்கலாம்…  என்னதான்  செய்கிறார் இவர்? என்னதான் நடக்கிறது இவருடைய கட்டுரைகளில்??

-0-0-0-0-0-0-0-0-0-0-

நான், அவருடைய சோர்வடைய வைக்கும், ஒரே மாதிரியான ‘படம் வரைந்து பாகங்களைக் குறி’ வகையறா எழுத்து நடை, பெயர்களைக்  குதறியெடுப்பது, அஃறிணை-உயர்திணை கவித்துவ  மயக்கம், மொழிவழியான முழிபெயர்ப்புகள் பற்றியெல்லாம் கூட இங்கு சொல்ல வரவில்லை.  இவற்றுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்கள் பற்றி மட்டுமே ஆற்றாமையுடன்  கோடிட்டுக் காட்ட,  நல்ல எழுத்தை விரும்பும் வாசகன் – அதுவும் விலை கொடுத்து வாங்குபவன், புத்தகங்களை மட்டுமெ வெகுமதிகளாக/அன்பளிப்புகளாக அளிப்பவன் – என்கிற முறையில், கொஞ்சம் விழையப் போகிறேன். அவ்வளவுதான்.

சரி. கீழே, ஒரு குட்டி ஜாபிதா…

 1. சில புத்தகங்களை மேற்கோள் காட்டி நானாவிதமான கட்டுரைகளை விலாவாரியாக எழுதுகிறார்.
 2. ஆனால் இவர் குறிப்பிடும் செய்திகள் அப்புத்தகங்களில் இல்லை. அப்படியே இருந்தாலும், அவை புரட்டிப் போடப்பட்டு, இடஞ்சுட்டிப் பொருள்  விளக்க மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டு – எஸ் ராமகிருஷ்ணத்தனம் செய்யப் படுகின்றன.
 3. தன்னுடைய கருத்துகளை, மற்ற புத்தகங்களின் மீது, பெரியவர்களின் கருத்துகளின் மீதேற்றி தொடர்ந்து எழுதுகிறார்.
 4. ஒரு தளத்தில் – தன்னுடைய கருத்துகளை மற்றவர்கள் கருத்துகளாக்கி, அந்த மற்றவர்களையெல்லாம் ரசவாதம் செய்து,  எஸ். ராமகிருஷ்ணன்களாக மாற்றி விடுகிறார்.
 5. உடனே எல்லோரும் தேசாந்திரிகளாக உருமாறி, பரிணாம வளர்ச்சியடைந்து துணையெழுத்தைக் கூட்டிக் கொண்டு பேருரைத்து பேருரைத்து, எழுதி எழுதி எல்லோருக்கும் நவத்துவாரங்களிலிருந்தும் நெடுங்குருதி வரவைத்து, பல பரிமாணங்களிலும் வீரியம் பெற்று, ரவுன்ட்  கட்டிக் கொண்டு நம்மைத்  துன்புறுத்தி,  விக்கி விக்கி அழ வைத்து விடுகின்றனர். ஆக, ஐயகோ,  நமக்கு ஒரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் போத மாட்டாரா, என்கிற எண்ணம் தவிர்க்கப் பட முடிவதில்லை.

-0-0-0-0-0-0-0-0-0-0-

இவரால் மேற்கோள் காட்டப்படும் புத்தகங்கள், சரியாகச் சுட்டப் படுவதேயில்லை. அவர், பொத்தாம்பொதுவாக, சில எழுத்தாளர்கள் பெயரைச் சொல்லி, பின் அவருடைய புத்தகம் என்று (எந்தப் புத்தகம் அது, எந்தப் பக்கத்தில், எந்தப் பின்புலத்தில் என்று விளக்காமல்) எழுத ஆரம்பிக்கிறார். சரி பிரச்சினையில்லை.

ஆனால், பொதுவாக நிறைய – விதம்விதமாகப் புத்தகங்களை விலை   கொடுத்து வாங்கிப் படிக்கும் வேலைவெட்டியற்ற முட்டாள் வாசகனாகிய எனக்கு, இவர் சுட்டியிருக்கும் எழுத்தாளர்கள், புத்தகங்கள் முன்னறிமுகமாகியிருக்கும் சாத்தியக் கூறுகள் மிக அதிகமாகவே இருந்திருக்கின்றன, அதாவது  இது வரை. (இவருடைய திரைப்படச் செய்திகளும் அப்படியே)

ஆகவே ஒவ்வொரு தடவை இவர் இம்மாதிரி எழுதும் போதும், இவர் அந்தப் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் படித்துவிட்டு அல்லது காற்றுப் போக்கில் கேள்விப்பட்டவைகளை வைத்து, இணையத்தில் வரும் அற்பமான, உள்ளீடற்ற அக்கப்போர்களை வைத்து, கற்பனைக் குதிரை, கழுதைப் படைகளின் மீதேறி அவைகளைத் தட்டியெழுப்பி கட்டுரைகளை வடித்து – ‘டேய் டமில் முட்டாக்கூவானுங்களா, படிச்சிட்டு ஜோரா கைதட்டுங்கடா’ – என்று சகட்டுமேனிக்கும் எடுத்து விடுகிறாரோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது.

அதாவது, அந்தப் புத்தகங்களைப் படித்து – மேற்படிக்கு  சமகாலத் தரவுகளைச் செரித்து, மேலும் படித்து, தர்க்கரீதியாகப் புரிந்து கொண்டு தன் அனுபவ அறிவுடன் பொருத்தி –  எது நடந்தது, எது தன் அனுமானம் எப்படி வடித்தெடுக்கப் பட்டது – என்றெல்லாம் கவலையே படாமல் எழுதிக் கொண்டே போகிறார்…

Dan Ariely; The Irrational Bundle: Predictably Irrational, The Upside of Irrationality, and The Honest Truth About Dishonesty (அமேஸான்)

Dan Ariely; The Irrational Bundle: Predictably Irrational, The Upside of Irrationality, and The Honest Truth About Dishonesty (அமேஸான்); a good bundle, impulsively buy it as part of your irrational behavior and savor it! :-)

ஏன் இப்படிச் செய்கிறார் இந்த மனிதர், என்று எனக்குப் புரியவேயில்லை. இப்படியே போனால் இவரும் ஸ்ரீஸ்ரீ தொல்காப்பியனார் அவர்கள் அளவுக்கு இறங்க வேண்ட அவசியம் வந்து விடுமோ என்று பயமாகவே இருக்கிறது…

ஆனால், ஸ்ரீஸ்ரீ தொல்காப்பியனார் அவர்கள் எழுதுவதை நம் தமிழ் வாசகர்கள் அவ்வளவு ஸீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதென் எண்ணம். ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை நம் மக்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்; அவரவர் பிம்பம் அப்படியப்படி… :-(

சரி. இத்தகைய போக்கிற்கு சில அண்மைய உதாரணங்கள் (அதாவது ரணங்கள்!)… பின்வரும் ஒரு பதிவில்… இடஞ்சுட்டிப் பொருள் விளக்க வில்லங்கங்களுடன்…

-0-0-0-0-0-0-0-0-0-

All Hail Discordia!

தொடர்புள்ள பதிவுகள்:

4 Responses to “கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(”

 1. prabhu Says:

  Ayyo…i just finished reading thunaiezhuthu. I liked it too.
  Will wait for your article


 2. Dear P,

  My point is that, as for as ‘literature’ is concerned, it can’t forever be a bunch of reductionist templates (ad nauseam) and repetitive newspaper columns – this is what my issue is, with that abominable ThunaiEzuththu. I agree that it makes for some fast reading and evokes some laboured tender moments.

  But, I am talking about the repeated intentional twisting of real things/happenings into something bizarrely surreal – the layered pure fictional nonsense on top of well documented realities – and then passing them off as real happenings. Oh the erudition, it gives me the creeps.

  This layering happens on the basic assumption that, us Tamils are so starved for want of good literature that, we will ingest any horseshit that is very kindly thrown at us. It builds on our laziness to go to the sources and reduces everything to an asinine minimum common denominator. It assumes that we are ALL stupid. I deeply resent this.

  …So, to this extent, my focus would be on a couple of his posts / some text extracts – that’s all.

  Yes. I will also wait for my exposé(!). What else. :-(

  • prabhu Says:

   Hmm..I have always thought that the success of the writer lies in making the reader not be able to differentiate fact and fiction. You are raising the bar to the next level stating that building an supposedly extraordinary coat around an ordinary set of events is just a silly style. I think I am beginning to see your point.

 3. jag673 Says:

  While discussing a recently released tamil movie in FB, a person commented that most of us think that a(ny) movie that doesn’t have songs or has dialogue that can be seen with family- as good movie. He added that this is very unfortunate .

  What Mr Ram is trying to help the readers here is to identify literature that is the equivalent of the above mentioned “good movie”.

  Thanks Ram. I look forward to the next part.
  Ramanan


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s