‘இந்தா வாய்ன்கோ’வின் ‘பாப்பான திட்டு, கல்லாவ கட்டு’ + சர்வரோக நிவாரணி குளிகை
December 2, 2022
எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-)
நானே பலமுறை இப்படி, ஒரு மசுத்துக்கும் தொடர்பேயில்லாமல் திட்டப்பட்டிருக்கிறேன், தமிழக அரசின் ‘பள்ளிக் கல்வித்துறை’ அதிகாரிகளாலுமே தான்! அதுவும் ‘டேய்’ + ‘புடுங்கி’ + ‘பூணல்’ போன்ற அன்பான ஏகவசனக் கரிசனங்களுடன்தான்… (நான் சரளமாகக் கொச்சைத் தமிழிலும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் புழங்கும் மெட்றாஸ்பாஷையிலும் பேசக்கூடியவன் + தோல் நிறமும் ஜொலிக்கும் கறுப்புப் பழுப்பு, இருந்தாலும் எப்படியோ ஜாதியை முகர்ந்துவிடுகிறார்கள், மெய்ஞானிகள்!)
நான் பாக்கியம் பெற்றவன். பராக்கிரமம் மிக்கவன்.
(அடியேனானவன், ஒரளவு பாரதத்தின் சிலபல பகுதிகளில், கிராமப் பிராந்தியங்கள் உட்பட ‘பணி’ செய்யும் அரிய சந்தர்ப்பங்களையும் பெற்றவன் தான். வந்த வழி நெடுக, அங்குமிங்கும் சிலபல சச்சரவுகளும், மோதல்களும் (பெரும்பாலும் அதிகார வர்க்க சோம்பேறி லஞ்சலாவண்யஸ்தர்களுடனும், சொற்ப அளவு உள்ளூர் அரசியல்வாதிகளுடனும் சிலபல சர்ச்வியாபாரிகளுடனும் ஒன்றிரண்டு மதராஸா இமாம்களுடனும்) நடந்துதான் இருக்கின்றன – ஆனாலும் சில விகசிப்புகளும் இருந்திருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறேன்…
என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் தமிழகத்திலிருப்பது போன்ற படுமோசமான திராவிட ஜாதிவெறியினை, நான் வேறெங்கும் பார்த்ததில்லை.
… வெறும் ப்ராஹ்மணர்களுக்கு எதிரான திராவிட/தமிழ்தோசைய வாயோர நுரைதள்ளல்களை மட்டும் வைத்து இதனை நான் சொல்லவில்லை. ஏனெனில் மற்ற பிறபல சமூகங்களுக்கு (எடுத்துக்காட்டாக, அருந்ததியர், குறவர்கள், மலைஜாதி/மலையாளிகள், பாரதவடக்கிலிருந்து வந்து தமிழகத்துக்கு உழைக்கும் மக்கள் (இந்தத் திரளின் மீதான குவிக்கப் பட்ட வெறுப்பியம், இப்போது இணையத்திலும் அமோகமாக வளர்ந்து வருகிறது என்பதை உணர்கிறேன்), தெலுகுபேசும் உழைப்பாள ‘ஒட்டன்’ வகை ஜாதிகள், +++) எதிராகக் குமுங்கிக் கொண்டிருக்கும், அவ்வப்போது வெளிப்படும் அயோக்கிய திமுக/திக திராவிட வெறியென்பது, வெகுசாதாரணமாகவே வெளிப்படும் வெறுப்புணர்ச்சி என்பது – முன்னதை விடப் பெரும் வீரியம் மிக்கது என்பதை நேரடியாகவே அறிவேன்… இவற்றில் பலப்பல, ஏன், ஏறத்தாழ எதுவுமே பெரிய அளவில் வெளிவருவதில்லை…
மேலும் தமிழகத்தில் நடப்பதைப் போல – பின்னவர்களின் பெரும் பிரச்சினைகளுக்கு, முன்னவர்களின் அராஜகம்தான், முற்கால(!) ஒடுக்குமுறையும் மட்டுமேதான் பெரும் காரணங்கள் – எனும் திசைமாற்றிப் பரப்புரையை, நான் பிறபகுதிகளில் பெரிதாக எதிர்கொள்ளவேயில்லை என்பதையும் நான் பதிவு செய்யவேண்டும்.
…இருந்தாலும் நானொரு நம்பிக்கைவாதி. நிலைமை படுப்படு மோசமில்லை, மாறாக, ‘சரித்திர சக்கரம்’ எனவொன்று இருக்கிறது என்பதையும் ஒருமாதிரி அனுபவபூர்வமாக உணர்ந்தவன். ஆகவே.
எனக்கு என்ன படுகிறதென்றால் – பாரதக் கட்சிகளிலேயே, நம் பாஜக-வுக்குத் தான் இந்த அயோக்கியத் தனங்களை எதிர்கொள்ளும் ஆன்மிக பலமும், செயலூக்கமும், பாரதத்தின்மீதான கரிசனமும், நம் பரந்துபட்ட மக்களின் மீதான காத்திரமான அன்பும் இருக்கின்றன. பார்க்கலாம்… இதற்கெல்லாம் நம் தமிழகம் எவ்வளவு மரியாதை கொடுக்கிறது என்று…)
‘இந்தாவாய்ன்கோ’வின் பாப்பான திட்டு, கல்லாவ கட்டு:
இன்றுதான் இதனைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது (அல்லது என் நினைவு மங்கிக் கொண்டிருக்கிறது):
அருமையான பகடி + தற்கால இசையிழைகளுடனும் பரிச்சயம் + சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் தன்மை + நினைவுவங்கியில் இருக்கும் இசை/படத் தொகுப்புகள், அவற்றைக் கோர்க்கும் லாகவம் + எடிட்டிங் + அடிப்படையில் படுபுத்திசாலித்தனம்.
எப்படித்தான் இப்படி யோசிக்கிறார்களோ + செயலூக்கத்துடன் இருக்கிறார்களோ! வாழ்க! பொலிக!!
இவர்களுடைய ட்விட்டர் கணக்கை வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து படிக்கவேண்டும் எனக் குறித்துக் கொள்கிறேன். புத்திசாலிகள் எனும் பாரதீயஜாதி, தமிழகத்தில் அருகிக் கொண்டிருக்கும் கால கட்டங்களில்…
மேற்கண்டதைக் கண்டுபிடித்துவிட்ட பராக்கிரமத்தை நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டு அகமகிழ்ந்து பீற்றிக் கொண்டால்…
…பாவிகள், ‘அது எப்போதோ வந்துவிட்டது, நீ இப்போதுதான் படுலேட்டாக பார்த்திருக்கிறாய்’ என ஆனந்தபலூனைக் குத்திச் சிதைத்தற்கு அப்பாற்பட்டு, இன்னொரு 2012 கிண்டல் காட்டுரையையும் பகிர்கிறார்கள்…
சர்வரோக நிவாரணி குளிகை:
—
பின்குறிப்பு: நான் தான் வேலைவெட்டியெனப் பெரிதாக ஒன்றுமில்லாமல் கதாகாலக்ஷேபம் செய்து கொண்டிருக்கிறேன் என இறும்பூதில் இருந்தால்… இந்தக் க்ரியா சக்தி மாக்கள்… ப்ளடி… பாவிகள்…