…ஆனால், பாவப்பட்ட தமிழ் வாசகனுக்குத்தான் தீர்வேயில்லை!
August 7, 2019
:-(
உலகத்திலுள்ள சகல படுபீதியளிக்கும் பயங்கர இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்போல. ஆனால்…
… தமிழ் அலக்கியவாதிகளிலிருந்தும் கிவிதையாளர்களிலிருந்தும்
படைப்பாள அலப்பரைகளிலிருந்தும் அவர்களுடைய தீர்வுகளிலிருந்தும் அறச்சீற்ற எழவுகளிலிருந்தும் சமூகவிமர்சனங்களிலிருந்தும் லிபரல்கருத்துதிர்த்தல்களிடமிருந்தும், அறிவுஜீவிகளிடமிருந்தும் அவர்களுடைய ‘இன்டர்நேஷனல் ரோமிங்’கில் இருக்கும் மனச்சாட்சிகளிடமிருந்தும், புளித்தப் படிம தோசைமாவுகள் மீளுருவாக்க அரைக்கப்படல்களிடமிருந்தும் நமக்குக் கதிவிமோசனமேயில்லை. நமக்கு அதற்கெல்லாம் கொடுப்பினையே சுத்தமாக இல்லை. மன்னிக்கவும்.
ஆமென்.
நன்றாகத்தானே இருந்தார் இவர். :-(
ஆனால் – வரவர போகன், ஏன் மனுஷ்யபுத்திரன்போலாகி வருகிறார்? நமக்கு ஒருவரையே தாங்கமுடியவில்லையே! மனச்ச்சாச்சி கீதுன்னிட்டு காமிச்சாவ்ணும் அப்டீன்னாக்க அர்சியல்சமூவ வெமர்சனத்த கள்தேல செஞ்சேஆவ்ணுமா ஐயா?
ஏனிப்படியாகிறது? சகவாச தோஷமா அல்லது சகவாச கோஷ்டமா?
ஷாட்கன் போகன்! உங்களுக்கு இது தகுமா? :-( அல்லது மனுஷ்யபௌத்திரனைக் கிண்டல் செய்கிறீர்களா? :-))