திராவிட முன்னேற்றக் கழகம், பொறுக்கிகள், மதமாச்சரியங்கள்-மதமாற்றங்கள், மகாமகோ கிருபானந்த வாரியார் – குறிப்புகள்

March 30, 2019

மூளையுள்ள பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – திமுக பேடிகளின் வெறுப்பியம், குறிப்பாக ஹிந்துக்களையும் அவர்கள் மதிக்கும்/நம்பும் தலைவர்களையும் சான்றோர்களையும் கடவுளர்களையும் அளவுக்கு மீறிப் புண்படுத்துவது  (அதேசமயம் பிறமதங்களுக்கு எதிராக, மிகக் கவனமாக அட்டைக்கத்தியைக் கூடச் சுற்றாமலிருத்தலும் – ஏனெனில் அம்மதங்களில் அமைப்புசார்வன்முறை ஒரு இன்றியமையாத அங்கம், போட்டுத் தள்ளிவிடுவார்களன்றோ!) பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான், தேர்தல் சமயங்களில் இக்குள்ளநரிகளின் கூச்சல் அதிகமாகிவிடும் ஆனால் நாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்று. ‘நாங்க 1950லேர்ந்து பார்த்து வருவதுதானே!

இன்னொரு பார்வை(!) என்னவென்றால் – பாரதத்தின் அடிப்படை நம்பிக்கைகளும் வாழ்முறைகளும் இஸ்லாமிய மதமாற்ற அட்டூழியங்களை ஆயிரம் வருடங்களுக்கு மேலாகத் தாங்கவில்லையா? க்றிஸ்தவ மதமாற்ற அட்டூழியங்களை 500ஆண்டுகளுக்குக் மேலாகத் தாக்குப்பிடிக்கவில்லையா? ஹிந்து மதங்கள் இன்னமும் இங்கு இருக்கத்தானே செய்கின்றன? (பாவம், இவர்களுக்கு இவை இன்னமும் நீடிப்பது வருத்தமாக இருக்கிறது போலும்!)

உலகத்தில் வேறெந்த இடத்திலாவது இப்படி இருக்கிறதா? க்றிஸ்தவமும் இஸ்லாமும் தங்கள் மதப்புத்தகங்களுடனும் குறுங்குழுவெறிகளுடனும் கொடுவாளுடனும் சென்ற இடங்களிலெல்லாம் பழம் பாரம்பரியங்கள் பூண்டோடு ஒழிக்கப்பட்டு பழைய நினைவுகள் அம்மக்களுக்குச் சுத்தமாகவே இல்லையே!  எல்லாரும் சுயசிந்தனையோ பாரம்பரிய நீட்சிகளோ இல்லாத வறண்ட பண்பாட்டுப் பாலைவனங்களில் ஆமென் அல்லேலுயா அல்லல்லாஹூ என்றும்தானெ ஆயிருக்கிறது. மெஹிகோவைப் பார். ஏன், க்ரொவேஷியாவையே பாரேன்!

...ஆனால், நமக்கு அப்படியா ஆயிற்று? இப்போதுதானே ரதஸப்தமி கொண்டாடி முடித்தோம்? ஏனெனில் பாரதத்துக்கு உள்ளார்ந்த விசை இருக்கிறது, அது பார்த்துக்கொள்ளும். நீ ரொம்ப கவலைப் படுகிறாய். நிம்மதியாக உட்கார்ந்து குரசாவா அகிரா திரைப் படங்களைப் பார்.

ஆக, திமுகவும் கடந்துவிடும், கவலைவேண்டேல்.

சரிதான். அருகில் வரவும்.

யோவ்! வெள்ளக்கார பாரதஎதிர்ப்புப் கல்வி எனும் திராபையில் முக்குளித்து ஒரு ஏட்டுப்படிப்பை வைத்துக்கொண்டு,  இடதுசாரி உளறாற்றாள தீராவிடப் பரப்புரைகளைக் கேட்டுக்கேட்டு மேலதிகமாக உங்களுடைய சொந்தப் பேடித்தன கமுக்கச் சுயசால்ஜாப்பையும் கேட்டுக்கொண்டு  – உங்கள் செவிமடல்களின் அளவானது ஏகத்துக்கும் பெரிதாகி விட்டது. ஆகவே ஒரு முழம் கதம்பம் பற்றாது – ஒரு செவிக்குப் பத்து முழங்கள் வேண்டும்போல!

புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் உங்கள் குண்டுச்சட்டியில் கற்பனைக் கழுதையை விரட்டிக்கொண்டு ஜல்லிக்கழுதை ஆடுவதை விட்டுவிட்டு – கொஞ்சம் வெளியுலகை அவதானிக்கவும். வரலாறுகளைக் கற்கவும் – முதலில் உங்கள் கண்முன் இருக்கும் படுதாக்களை நீக்கவும். பின் உங்களுக்குத் தெரியவரலாம் – பாரதத்தை ஒழித்து  தார் அல்-ஹர்ப் அதனை தார் அல்-இஸ்லாமாக்குவதும் (Dar al-Islam) க்றிஸ்துவுக்காக-இந்தியாவாக்குவதும் (India for Christ) பெரும் திட்டங்கள், அவை தொடர்ந்து வீரியம் பெற்றுக்கொண்டே வருகின்றன என்பதையும். இந்தத் திட்டங்களுக்குத் துணைபோய் மாமாவேலை செய்வதும்தான் இந்தத் திராவிடம் என்பதும். ஆனால் அதற்கெல்லாம் உங்கள் தாமச குணம் இடங்கொடுக்காது.

ஆகவே, முடிந்தால், என்னைக் கடுப்பேற்றாமலிருக்கவும். அசைபோடப்படாத, தரவுகளேயற்ற உங்கள் கருத்து(!)களை உங்களிடமே வைத்துக்கொள்ளவும். அவ்ளோதான்!

இப்படிச் சொன்னால், ‘அப்போது, நீ க்றிஸ்தவர்களை முஸ்லீம்களை வெறுக்கிறாய்!‘ டட்டடா டட்டடா. சிரிப்புத்தான் வருகுதய்யா.

-0-0-0-0-0-

அம்மணர்களே அம்மணிகளே – அப்படி இல்லை.

ஏனெனில், பெரும்பாலான க்றிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அவர்கள் மதப்புத்தகங்கள் சொல்லும்படிக்கே 100% செய்தேயாகவேண்டும் என ஒழுகுவதில்லை என்பது எனக்குத் தெரியும். பாவம் – புரிந்ததோ புரியவில்லையோ உச்சாடனம் பாராயணம் செய்து திருப்தியடைபவர்கள்தாம், அவர்கள். முடிந்தவரை பிறருக்குத் தொந்திரவு தருவதில்லை. ‘எங்கள் கடவுள்தான் ஒர்ரே கடவுள், பிறருடையது துச்சம் – பிறர் நம் மதத்திற்கு வந்தால்தான் அவர்களுக்கு கதி மோட்சம்‘ என்றெல்லாம் நுரைதள்ளத் தள்ளாடுவதில்லை. அஸ் ஸஹாதா சமயத்தின்போது தொழுகையில் சொல்வது போல ‘அல்லாதான் ஒரே கடவுள்,  மொஹம்மத் தான் கடைசி இறைதூதர்’ உச்சாடனம் செய்பவர்களே ஒழிய, பின்னர் வாளெடுத்துக்கொண்டு பிற கடவுள் நம்பிக்கையாளர்கலை வெட்டிக்கொல்லக் கிளம்புவர்கள் அல்லர். பெரும்பாலான எதிர்மறைவிஷயங்களை லூஸ்ல வுடுபவர்கள்தாம் அவர்கள். மேலும் அவர்களுடைய மார்க்கம், பாரதத்தால் மென்மை செய்யப்பட்டுள்ளவகை.

நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே அவர்கள் சடங்குகளுடன் தொடர்புள்ளவர்கள் – அவை ஏன் எதற்காகச் செய்கிறோம் என்றெல்லாம் யோசிப்பதில்லை – அது பெரிய விஷயமும் இல்லை; ஒரு அமைதிக்காகவும் சமன நிலைக்காகவும் குடும்பப் பண்பாட்டுத் தொடர்ச்சிக்காகவும் செய்கிறார்கள் என நானும் அவற்றையெல்லாம் லூஸ்ல விடுபவன் தான். அவர்களும் அப்படித்தான்.

மேலும் ஒருவருடைய முன்னோர்கள் எப்போதோ சிலபலக் கொடுமையான, வெறுக்கத்தக்க விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் என்றால் – அதற்கு இப்போது உள்ள அவர்களுடைய வம்சாவளியினர் அதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது, தேவையுமில்லை – அப்படிப் பிறர் அவர்களை வற்புறுத்துவும் முடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படி ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை.

அதே சமயம், ஒருவர் ‘அந்தக் காலத்தில் என்னுடைய முன்னோர் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள்’ எனப் பழம்பெருமை (தரவுகளுடனோ, ஏன் தரவில்லாமலோகூட) பாடினால் தன்னை அந்தப் பாரம்பரியத்தின் அங்கமாகப் பரப்புரை செய்தால் – அதே முன்னோர் செய்த அட்டூழியங்களுக்கும் (தரவுகளுடன்) வெட்கிக்க வேண்டும். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. எல்லாம் ஒரு பேக்கேஜ் – அனைத்துப் பாதைகளும் இருவழிப் பாதைகளே!

அக்பர் அக்பர் என உருகினால் அக்பர் செய்த கடைந்தெடுத்த அயோக்கியத் தனங்களையும் சொல்லவேண்டும், கருத்தில் கொள்ளவேண்டும்; ஸுஃபி ஆன்மீகம் என உருகினால், தாம் அவர்கள் வழிவந்தவன் என்று புளகாங்கிதமுற்றால் – அவர்கள் பெரிய அளவில் செய்த அற்பத்தனங்களையும் வன்முறைகளையும் ஊக்கபோனஸாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஸெயிண்ட்(!) ஃப்ரேன்ஸிஸ் ஸேவியர் போன்ற அயோக்கிய ஜெஸூய்ட் பாதிரிமார்கள் செய்த அற்புதம் கிற்புதம் என்றால், பெருமை பாடினால், அவர்கள் வழி வந்தோம் எனப் பெருமிதம் கொண்டால் – அவர்கள் செய்த படுகொலைகளையும் துரோகங்களையும் படுபாவங்களையும் உணர்ந்துகொள்ளவேண்டும். அவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்; இதுதான் நியாயம்.

History (based on evidence & primary sources) is a very tough mistress. Sorry.

இன்னொரு விஷயம்: நம் பாரதத்தைப் பொறுத்தவரை – மிக மிகக் குறைந்த சதவீதத்தினரே ‘ஹிந்து மதங்களில் கொடுமை, உங்கள் மார்க்கம் மகோன்னதமானது’ என ஆய்ந்தறிந்தோ அனுபவபூர்வமாகத் தம்மளவிலாவது உணர்ந்தோ பிற நம்பிக்கைகளுக்கு மாறியவர்கள். (நான் ஒரு ஆய்வுக்காக இதற்கான புள்ளியியல் ரீதியான தரவுகளைத் திரட்டியிருக்கிறேன்)

மாறாக இவர்களில் பெரும்பாலோரின் முன்னோர்கள் கீழ்கண்ட ‘வரலாற்று ரீதியான’ காரணங்களுக்காக மாறியிருக்கின்றனர். ஏன், இப்போது மாறுபவர்கள் கூட இவற்றில் 2+5+6+7+8+9 வகைகளில் மாறுபவர்கள்தாம்.

1. நானும் என் குடும்பத்தினரும் மதம் மாற விருப்பம் தெரிவிக்க மறுத்தால், கொலை செய்யப்படுவோம். பிறர் அப்படிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னால் தப்பி வெளியேறவும் முடியாது. ஆகவே.

2. மதம் மாறினால் – நான் தற்போதைய ஆளும் வர்க்கத்திடம் அல்லது அதிகாரம் மிகவுள்ள அமைப்புகளுடன் அணுக்கமாக இருக்கமுடியும். பதவி, வேலை, வசதிவாய்ப்புகள் கிட்டும். நேரடி நிதியும் கிடைக்கலாம்.

3. மதம் மாறினால் – எனக்கு வருமான, விவசாய வரி விதிப்பும் எனக்குக் குறைவாக ஆகும். மத வரி இருக்கவே இருக்காது. புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும்போதெல்லாம் எனக்குப் பெரும்வரி கொடுக்கவேண்டியதில்லை.

4. எனக்கு என் பூர்வீக நம்பிக்கைகள் பற்றிப் பெரிதாகத் தெரியாது. பரப்புரைகள் அதனைக் கேவலமாகச் சித்திரிக்கின்றன. மேலும், நான் மதம் பிறழ்ந்தவுடன் இப்போது காயடிக்கப் பட்டுவிட்டேன். நான் நபும்சகன். அடிமை. எனக்குப் பிறமதம் தான் சாத்தியம்.

5. எனக்கு சொந்தப் பிரச்சினை வந்தபோது பாதிரி வந்து எனக்காக ஜெபித்தார். ஆமென்.

6. நான் காதலித்து மணம் புரியவிரும்பிய ஆண்/பெண் என்னை அவருடைய மதத்துக்கு மாறினால்தான் மணக்கச் சம்மதிப்பேன் எனச் சொன்னதால் செய்தேன்.

7. என் வீட்டை/உறவினரை விட்டுக் கடத்திச் செல்லப்பட்டு  அனாதையானதால், வேறு வழியின்றி, உயிர்தரிக்க, என்னைக் கடத்தியவர்களின் மதத்தில் சேர்ந்தேன்.

8. நான் வாராந்திர ஜெபத்தை/தொழுகையை ‘அட்டெண்ட்’ செய்தால் எனக்கு சுமார் 500 ரூபாய் கொடுப்பார்கள்; தாகசாந்தி செய்துகொள்வதற்காவது ஆகும். ஆனால் இப்படி வாராவாரம் வாங்கிக்கொண்டு அவர்கள் மதத்தில் சேராமல் இருப்பது நியாயம் இல்லை.

9. நான் அந்த மதத்தில் சேர்ந்தால் எனக்கு வேலை நிச்சயம் – ஏனெனில் எனக்கு சர்ச்-ப்ளாண்டிங் (புத்தம்புது சர்ச்களை, அவையில்லாத பகுதிகளில் புகுத்துவது) செய்வது எப்படி என்பதை நன்றாகச் சொல்லிக் கொடுத்து, பின்னர் என்னை மாதாந்திர சம்பளத்தில் அவ்வேலையைச் செய்யவும் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். நான் ஜார்கண்ட் போய்க்கொண்டிருக்கிறேன்.  நன்றி!

10. பஞ்சகாலத்தில் எனக்கு ரெண்டுமூட்டை அரிசி கொடுத்தார்கள். ஆகவே அவர்களுடைய கருணைக்கு உருகாமல் எப்படி? (ஆனால் அந்த மூட்டைகளே எங்கள் சொந்தங்களிடமிருந்து உறிஞ்சப்பட்டதுதான் என்பதை நான் கவனமாக மறந்துவிடுவேன் அல்லது லூஸ்ல வுட் ருவேன்!)

ஆனால் – இப்படிப்பட்ட காரணங்களினால் மாறுபவர்களில் சிலர், சுயவெறுப்பில் மூழ்குவதால் – மிகவும் கொடுமைக்காரர்களாகவும், தன்னுடைய பூர்வ மத நம்பிக்கைகளை முழுவதாக மறுதலித்து அந்த நம்பிக்கையாளர்களைப் படுகொலை செய்யவும் தயங்காமல் இருப்பவர்களாகவும் பரிணாம வளர்ச்சி பெறுகிறார்கள். மாலிக் கஃபூர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பிற எடுத்துக்காட்டுகள் பழனி பாபா, மதானி, யாஸீன் மாலிக், பிரதர்/பேஸ்டர் தினகரன்கள் போன்றவர்கள்.

சரி.  மதம் மாற்றம் எல்லாம் அவரவர்களுடைய தனிப்பட்ட விஷயம். (அதாவது தற்காலத்தில்! ஏனென்றால் முகலாய, ஸுல்தானிய, திப்புவிய காலகட்டங்களில் கிராமம்கிராமமாக வாள்முனையில் மதமாற்றங்கள் நடந்தன!)

ஆனால் – இப்படி (மேற்பட்டும் சிலபல வழிகள் இருக்கலாம்) பலப்பல வழிமுறைகளில் மதம்மாறியவர்களின் அல்லது மாற்றப்பட்டவர்களின் குழந்தைகள், வம்சாவளியினர் – முன்னோர்களுடைய காரியங்களுக்கு எப்படிப் பொறுப்பேற்க முடியும்? முன்னோர்களுடைய சூழல்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்கள் பார்வையில் சரியாக அமைத்துக்கொள்ள அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காக – சரியோ தவறோ – முடிவெடுக்கிறார்கள்; அதற்காக அவர்களையோ அவர்களின் வம்சாவளியினரையோ எப்படி நாம் குற்றம் காண முடியும்?

அதாவது இப்போது ஹிந்து மதங்களற்ற மதச்சார்பினராக இருக்கும் பாரதீயர் அனைவரும் மேற்கண்ட ஒன்பதுபத்து பிரிவுப்பகுப்புகளின் காரணமாகப் பிற மார்க்கங்களுக்குச் சென்றவர்கள்தாமே!

நம் சகோதரர்களை நாம் எப்படி வெறுக்க முடியும், நான் எப்படி வெறுப்பேன்? அதுவும் அவர்கள் செய்யாத பாவத்தை அவர்கள் மேல் எப்படிச் சுமத்துவேன்? மேலும், நண்பர்களையே விடுங்கள் – எனக்குப் பல க்றிஸ்தவ/முஸ்லீம் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். என்னுடைய ஒவ்வொரு பணியின்போதும் (கடந்த ஏழு சுழற்சிகளில்) எனக்கு இரண்டாவது இடத்தில், தேடித்தேடித் தகுதியும் வாய்ந்த ஒரு முஸ்லீம் இளைஞனைத்தான் வேலைக்கு வைத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே.

இதற்குமேல் இதைக்குறித்து மேலதிகமாக எழுதவேண்டிய அவசியம் இல்லை எனவே நினைக்கிறேன்.

-0-0-0-0-

ஆனால் – இம்மதங்களைச் சார்ந்த அயோக்கியர்கள் என ஒரு கணிசமான சதவீதத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் லூஸ்ல விடுவதில்லை. ஒருகையில் மதப்புத்தகம். இன்னொரு கையில் வாள். பாக்கெட்டில் அபரிமிதமாக அயல் நாட்டு மதமாற்றப் பணம். பாரதத்தைச் சீர்குலைக்கவும் போராளித்தனங்களுக்கும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிலசமயம் ஊக்கபோனஸாக – இடுப்பில் தற்கொலை பெல்ட்பாம்ப். தேவையா?

நான் இவர்களைத் தாம் க்றிஸ்தவ, இஸ்லாமிய வெறியர்கள் என்கிறேன். நன்றி.

என் இடத்தில் செம்மொழி தமிழ்மொழிக் கலைஞர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

நான் க்றிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை எதிர்க்கவில்லை; க்றிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தான் எதிர்க்கிறேன்!

என்ன எழவோ! சிரிப்பாக இல்லை, இந்த உளறல்??

ஆனால் இப்படித்தான் கருணாநிதி பிராமணர்களைப் பற்றியும் பிராமணீயத்தைப் பற்றியும் உளறிக்கொட்டினார் என்பது நினைவிலிருக்கிறதா? அதையும் நம் அறிவுஜீவிகள் கைகொட்டி வரவேற்றார்கள், நினைவிருக்கிறதா?

-0-0-0-0-

ஆனால், இந்தத் தீரா விட திராவிடப் பொறுக்கிகளுடன் ஐக்கியமாவது – மதம்மாறியவர்களில் படுமோசமான பொறுக்கிகள்தாம். இனம்இனத்தொடு சேரும். அதனால்தான் – திமுகவின் ஹிந்து மத வெறுப்பு என்பது வீரியம் மிக்கது. அதனால்தான் கருணாநிதி 1988 ஜூலை ரம்ஜான் தினத்தன்று, குல்லாய் போட்டுக் கஞ்சி குடித்துக்கொண்டே இப்படிப் பேசினார்:

“இந்த ரம்ஜான் நோன்பு உடலை மட்டுமில்லாமல் உள்ளத்தையும் தூய்மைப் படுத்துகிறது. அதனால், நான் கூட உங்களுடன் சேர்ந்து அறுபது நாட்கள் வேண்டுமானாலும் இந்த உண்ணா நோன்பு இருப்பேன். ஆனால், எங்கள் ஹிந்து மதத்தில் உள்ள ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம் போன்ற விஷயங்களில் எங்களுக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அந்தத் தினங்களில்தான் நாங்கள் அதிகமாகச் சாப்பிடுவோம்! “

இதற்கு, இந்த அற்பத்தனத்துக்கு, அங்கு ரம்ஜான் கஞ்சி குடித்துக்கொண்டிருந்த உதிரிகள் அனைவரும் ஏகோபித்த கைதட்டல்!

இந்த திமுக பாரம்பரியம்(!) இப்படி இருக்கும்போது இப்போது 2019ல் திமுக மேடை ஏச்சாளர்கள் ஹிந்து மதத்தை இப்படிக் கேவலப்படுத்துகிறார்களே எனக்கேட்டால்…?

தொடர்ந்து ஹிந்துக்களே இந்தக் கழிசடை திமுகவினரைத் தேர்ந்தெடுப்பதால்தான் தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் பிரச்சினை!

சரி, ஹிந்துமத எதிர்ப்பு அரசியலாவது எல்லா கழிசடைகளும் வெகுஎளிதாகச் செய்வதுதானே என விட்டுவிடலாம்; ஆனால், இந்தத் திமுக-வுக்கு மேலும் பலப்பல கல்யாண குணங்கள்!

அது கொடுங்கொள்ளைக்காரக் கட்சி.

பெண்களை, போகப் பொருட்களாகக் கருதும் கட்சி. சோடாபாட்டில் செயல்வீரர்கள் நிறைந்த உதிரிப் பொறுக்கிகள் கட்சி.

கொலைகளுக்கு அஞ்சாத கட்சி – அண்மையில் நடந்த சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷ்  ‘தற்’கொலை விவகாரங்கள் நினைவிலிருக்கின்றனவா?

அதிமுகவின் பூலாவரி சுகுமாரனும் அவருடைய தந்தையும் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டது?

காங்கிரஸின் நெய்வேலி தொண்டர்கள் தேவஅன்பும் தேவதாஸும் கொல்லப்பட்டது?

காங்கேயம் மாணிக்கம்??

தஞ்சாவூர் ஜங்கமங்கலத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் மாமனார்-மாமியார் (அதாவது இப்போதிருக்கும் இளம் திமுக உதிரி மஹேஷ் பொய்யாமொழியின் அப்பன் அன்பில் பொய்யாமொழியின் அப்பன் அன்பில் தர்மலிங்கத்தின்…) சேர்ந்து பகிரங்கமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்தது?

பட்டியல் மக்கள்திரளைச் சார்ந்த எம்எல்ஏவான ஜெயராஜின் கால் வெட்டப்பட்டது யாரால்? (இப்போது, அதே திமுகவினருக்கு வெட்கமேயில்லாமல் சாமரம் வீசிக்கொண்டிருக்கும், பட்டியல்திரள் தலைவராக மினுக்கிக் கொண்டு அலையும் திருமாவளவளவளவனை நினைத்தால்…)

அண்ணாமலைப்பல்கலைக்கழக உதயகுமார்களையும் திருச்சி க்ளைவ் ஹாஸ்டல் அயோக்கியத்தனங்களையே விடுங்கள்!

திமுக, கமிஷன்களுக்கே கமிஷன் கொடுக்கும் கட்சி. (இரண்டுமூன்று வருடங்கள் முன், ஒருமுறை தில்லி சென்றிருந்தபொது ஒரு ஐஏஎஸ் அதிகாரி (அஸ்ஸாம் கேடர்) – நகைச்சுவையுணர்ச்சி மிக்கவர் – அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அரட்டை. டிஆர் பாலு, தயாநிதி மாறன்  போன்ற திமுக உதிரிகள் கொஞ்சமும் வெட்கமும் நாசூக்கும் அற்று பகிரங்கமாகவே  லஞ்சமும் ‘பிரதியுபகாரங்களும்’ வாங்கியதைக் குறித்தும் கனிமொழி சிறுபிள்ளைத்தனமாகப் பெரும் ஊழல்கள் செய்ததைப் பற்றியும்  – கொஞ்சம் அவர்கள் மாதிரியே ‘நம் மதறாஸ் ஆங்கிலத்தில்’ பேசி நடித்துக் காண்பித்தார்; எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது, என்ன செய்ய!)

திமுக – துறைதுறையாக தமிழகத்தையே கபளீகரம் செய்துகொண்டிருக்கும் கட்சி. ஒரு பலகுடும்ப ஆட்சிமுறையால் எல்லா துறைகளிலும் கிடுக்கிப்பிடி போட்டுக்கொண்டிருக்கும் உதிரிக் கும்பல்.

இந்தக் குப்பைமேனியர்களுக்கு- நிர்வாகத் திறமையற்ற, பொதுஅறிவற்ற, ஏகத்துக்கும் உளறிக்கொட்டும் பொறுக்கித் தலைவர்கள்.

சரி. இப்போதைக்கு, இது போதும்.

-0-0-0-0-0-

என்னென்னவோ பழைய நினைவுகள். பழங்குறிப்புகளைத் தூசிதட்டியெடுத்து, அவற்றில் சிலவற்றைப் படித்தேன். சில வாரியார் அவர்கள் பற்றி. அவருடைய சுயசரிதையிலிருந்து. (திருமுருக கிருபானந்தவாரியார் வாழ்க்கை வரலாறு, தில்லை திருப்புகழ் சபை, சிதம்பரம், 1979)

இப்போது, என்னைக் குறித்த ஒரு கேவலமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டும்.

எனக்குச் சிறுவயது – ஆறேழு வயதிருந்திருக்கலாம், 1970களின் ஆரம்பம் – எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் (நங்கநல்லூர் –  வரசித்தி வினாயகர் கோவில் இன்னமும் செயல்பாட்டில் இருக்கும் என நினைக்கிறேன்) வருடா வருடம் இருமுறையாவது ஸ்காந்தம், கம்பராமாயணம், பாகவதம் என, ப்ரவசனங்கள் ஒடிக்கொண்டிருக்கும்.

மகாமகோ வாரியார் அவர்களும் சிலபல முறை வந்திருக்கிறார். திருப்புகழ் கந்த புராணம் என, ஒரு வெள்ளப் பெருக்கு. பலப்பல அற்புதமாக செய்திகள். தொன்ம விவரணைகளைத் தற்கால நடப்புகளுடன் இணைக்கும் பாங்கு. ஆனால் அவருடைய ‘லௌகீக’ நகைச்சுவை கொஞ்சம் இன்னமும் பிடித்தமானது. மிமிக்ரி செய்யத் தக்கது; நானும் வீட்டுக்கு வந்து அம்மா-அப்பா அருகில் இல்லாதபோது ‘முருகாஆஆ!’ என வாரியார்கள் அவர்கள் போலவே நடித்துக்காட்டியிருக்கிறேன். சிறுவயதில் இருந்த கிண்டல் மனப்பான்மை, எள்ளல் என்றெல்லாம் இருக்கிறதே! (நான் வளரவேயில்லை!) ;-)

சரி.

வாரியார் சுவாமிகளை திராவிடர்கள் வெறுத்தார்கள். ஏனெனில் அவர், தமிழ் மக்களை,  வறட்டுப் பொறுக்கித்தனமான திராவிடபாணி பகுத்தறிவிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தார்; அசாத்தியமான முயற்சி அது. மகாமகோ பெரியவர் வாரியார் சுவாமிகளின் நடவடிக்கைகளையும், பாரத-தமிழச் சமுதாயத்துக்கு அவருடைய காத்திரமான பங்களிப்புகளையும், அவருடைய கரிசனத்தையும் பற்றி  ஒரு மீள்பார்வைசெய்து யாராவது சான்றோர்கள் ஒரு புத்தகமாவது எழுதி அதனை அடுத்த தலைமுறைக்குச் சேர்த்தால், அது எவ்வளவு நன்றாக இருக்கும்!

…ஆக சுவாமிகளின் உபன்யாசங்களில் புகுந்து ரவுடித்தனம் செய்வது, வெட்டிக் கேள்வி கேட்பது, இடக்காகப் பேசுவது, உரத்து ஏப்பமும் குசுவும் விடுவது, சொற்பொழிவைக் கேட்கவந்து கடைசி வரிசைகளில் இருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்வது, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களைப் பேசுவது – எனப் பலவகைகளில், திராவிடர்கள் செயல்பட்டனர். இப்போது ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் ஆலந்தூர் ஆர்எஸ் பாரதி எனும் திமுக உதிரி ஆசாமியின் அக்காலத்து அடிப்பொடிகளும் அதில் அடக்கம்! ஆனால் அவர்கள் கற்கள் வீசவில்லை என்பது ஒரு குறை. (அதாவது, நங்கநல்லூரில்!) பிற இடங்களில் அதையும் செய்தனர். பேடிகள்.

நிலைமை இப்படி இருக்கையிலே – அண்ணாத்துரை ஒருவழியாக, 1969 ஃபெப்ருவரியில் போய்ச் சேர்ந்தார். அச்சமயம் வாரியார் சுவாமிகள், நெய்வேலியில் ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்றவொரு அமைப்பின் அழைப்புக்கிணங்கி புராணச் சொற்பொழிவு வரிசை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இதில் குறிப்பிடவேண்டிய உபரிச் செய்தி என்னவென்றால் – ‘அறிஞர்’ அண்ணாத்துரையே, படுபடு கேவலமாக ஹிந்துக்களை மட்டுமல்லாமல், குறிப்பாக, வாரியார் சுவாமிகளைக் குறித்தும் அசிங்கமாகத் தொடர்ந்து எழுதிவந்த பெருந்தகையார்தாம்! ஆகவே, அவர் இறந்தபின் – யாரையெல்லாம் அவர் அசிங்கமாகத் திட்டினாரோ அவர்களையெல்லாம் பொறுக்கித் தனமாகத் தாக்கினர் – திமுக விசிலடிச்சான் குஞ்சுகளும், ஊர்ப் பொறுக்கிகளும்.  ஏனெனில், ‘சோகம்’ + மப்பு.

இப்போது சுவாமிகளின் சுய சரிதையிலிருந்து:

“அடியேன் [நெய்வேலி தங்குமிடம்] இருப்பிடத்தில் இரவு, உடல் நலமின்றி மயங்கிப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தேன். இரவு மணி 12 இருக்கும். 200, 300 கயவர்கள் கூடிவந்து நான் இருந்த இடத்தில் நுழைந்து ஓ எனக் கதறி கலாட்டா செய்தார்கள்.

நான் வழிபடுகின்ற [முருகன்] பூஜாமூர்த்தியைக் கீழே தள்ளினார்கள். மயில் உடைந்தது. சேதப்படுத்தினார்கள்.

நான் மயக்கம் தெளிந்து எழுந்தேன். இன்னதென்றே புரியவில்லை. அந்தப் புல்லர்கள் காட்டுமிராண்டிகள் போலக் கத்தினார்கள்.

…உடனே ஒரு காவல்துறை அதிகாரி வந்து, என்னை உடனே புறப்பட்டுப் போகுமாறு கூறினார். நான் சிதறியிருந்த பூஜா சாதனங்களை எடுத்துக்கொண்டு கார் ஏறிக் காவல்துறை அதிகாரியுடன் புறப்பட்டேன். வடலூர் ஓபி ராமசாமி ரெட்டியார் இருக்கும் இடத்தை அடைந்தேன்.”

ஒரு சாது. வன்முறையாளரே அல்லர்; மாறாக மரியாதைக்குறிய சான்றோர். தமிழ்ப் பாரம்பரியத்தில் ஊறியவர்.  அதற்காகப் பாடுபட்டவர், பாரதீயர்.

இவரையும் விட்டுவைக்கவில்லை அண்ணாதுரைகளும், பொறுக்கித் திராவிடர்களும்!

-0-0-0-0-0-

…எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால் – படு தைரியமாக, காலம் காலமாக இந்த திமுக உதிரிகள் தங்கள் பொறுக்கித் தனங்களை வெளிக்காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் ஹிந்து மத துவேஷத்தை – ‘சிறுபான்மையினரின்’ ஓட்டுகளைப் பொறுக்குவதற்காக, வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும் திமுகவை பெரும்பாலும் ஆதரிப்பது ஹிந்துக்கள் தாம்!

எப்படி?

ஏனென்றால் – பொதுவாகவே நம் மக்களுக்குத் தாமஸ குணம் அதிகம். ‘எல்லாம் அவன் செயல்.‘  ‘எல்லாம் அவன் பாத்துப்பான்!’ அல்லது ‘நாம் ஒருவர், மாற்றி ஓட்டளிப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?‘ அல்லது ‘திமுக காரனுக்கு லஞ்சம் கொடுத்தா வேல நடக்கும்!

இலவசங்கள். ஓட்டுக்காக நேரடி லஞ்சங்கள். மேலும் இளகியகுணம் எனும் எழவுவேறு. ‘பணத்த வாங்கிட்டு அப்பால ஓட்டுபோடாம இருக்கக்கூடாது‘ வகை புரட்சிகர நேர்மை. இவற்றாலும்தான்.

என்னைப் பொறுத்தவரை – ‘சிறுபான்மை’ மக்களும் – நம்மையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இந்தப் பொறுக்கித் திமுகவினர் என உணர்ந்தால் இன்னமும் நலம்.

சர்வ நிச்சயமாக – பாரதத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டிய கட்சி என ஒன்றைச் சுட்டவேண்டுமானால் – வெகு சுலபமாகச் சொல்லிவிடலாம்.

அது திமுக எனும் அகொதீக தான்!

பார்க்கலாம்.

-0-0-0-0-

நல்லவேளையாக நம்மிடம், தற்சமயம் விடிவெள்ளிகள் இருக்கிறார்கள்.

ஆகவே, நரேந்த்ரமோதி!

10 Responses to “திராவிட முன்னேற்றக் கழகம், பொறுக்கிகள், மதமாச்சரியங்கள்-மதமாற்றங்கள், மகாமகோ கிருபானந்த வாரியார் – குறிப்புகள்”

 1. Dinesh Says:

  திமுக மீது அதீத வெருப்பு தான்…

  சில நண்பர்கள்…திராவிட கட்சிகளாள் தான்…தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்கிற வாதத்தை நிராகரிக்க முடியவில்லை…


  • ​அன்புள்ள தினேஷ்,

   தமிழகம் முன்னேறிய மா நிலமாக இருப்பதற்கு, சர்வ நிச்சயமாக, திமுக காரணமல்ல. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளங்களும் திட்டங்களும்தான் காரணம். அதற்கும் முன்பிலிருந்து பார்த்தால், தமிழர்கள் பொதுவாகவே செயலூக்கம் படைத்தவர்கள். ​(ஆனால் திராவிடத்தைப் போய் நம்பி விட்டார்கள்!)

   நன்றி.

   Yes, Tamilnadu has progressed NOT because of DMK – but IN SPITE of DMK.

 2. Sivaaa Says:

  என்ன செய்வது பார்பனர்கள் தான் இப்போதும் இந்த அயோக்கியத்தனங்களை பேசுபவர்கள் அவர் சாதியினரே கூட திமுக ஆதரவாளர்கள் தான். அது இருக்கட்டும் பார்ப்பனர்களும் கூட மஹா பெரியவாளை கொண்டாடிய காலகட்டத்தில் அவன் சூத்திரன் என்று கிருபானந்த வாரியாரை இகழ்ந்திருக்கிறார்கள்.


  • ஐயா சிவா,

   தங்களுடைய செய்திகளுக்குத் தரவுகள் இருக்கும் என் நம்புகிறேன்.

   இது ஒரு புறமிருக்க – கீழிருப்பவற்றைப் பலமுறை எழுதியிருக்கிறேன்:

   1. எந்த ஜாதியிலும் மதத்திலும் (எந்தத் திரளிலுமே) அயோக்கியர்கள் என இருப்பார்கள், ஆனால் இவர்கள் சிலரை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக பொத்தாம்பொதுவாக ஒரு மக்கள்திரளைப் பழிக்கமுடியாது. பார்ப்பனர்களெல்லாம் அயோக்கியர்களுமில்லை. இதை நான் திட்டவட்டமாகச் சொல்லமுடியும். ஏன், எந்தத் திரளைக் குறித்துமே இப்படிச் சொல்லமுடியும்.

   2. எங்கள் குடும்பத்திலும் சுற்றத்திலும் வாரியார் சுவாமிகள் கொண்டாடப்பட்டவர். எங்கள் வீட்டின் சுவாமி மாடத்தில் அவருடைய படமும் இருந்தது. எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் அவர் பல நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.

   3. என் தந்தையாரின் குடும்பத்தைச் சார்ந்த தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரவாசிகள் சிலர் திமுக அனுதாபிகள் – சுமார் 20 வருடங்கள்முன்வரை; பின் தொடர்பு அறுந்துவிட்டது. இதில் ஒருவர் நான் ஏதோ பேச்சுவாக்கில் ‘கருணாநிதி’ எனச் சொன்னதற்கு ‘கலைஞர்னு சொல்லுடா மயிராண்டி!’ என்று அன்புடன் சொல்லியிருக்கிறார். இவர்கள் பண/நிதிரீதியாக அயோக்கியர்களாக இல்லாவிட்டாலும் – மௌடீகர்கள். அடுக்குமொழி பொறுக்கி நடையின் அடிமைகள். எல்லா ஜாதியிலும் இப்படி இருக்கிறார்கள். அவ்ளோதான்! ஆகவே லூஸ்ல வுடத்தக்கவர்கள்.

   4. ஒரேகடவுள், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர் வகையறா நம்பிக்கைகள் பொதுவாகவே இளகும் தன்மை அற்றவை, இறுகி, இறுதியான விஷயமாக ஆனவை. நாம்-பிறர் எனும் போக்கை அதிகரிக்கவைப்பவை – ஆகவே, விஷயங்களை அப்படியே எடுத்துக்கொண்டு கூத்தாடுபவர்களுக்கு வெல்லக்கட்டிகள். ஆகவே இவற்றில் அயோக்கியர்களுக்குச் சட்டக ரீதியான தாக்கத்துகள்/முட்டுக்கொடுத்தல்கள் அதிகம்.

   ரா.

   • Sivaaa Says:

    தரவுகள் எல்லாம் கிடையாது நான் தனிப்பட்ட முறையில் அறிந்த சிலர். எல்லா பார்ப்பனர்களும் அயோக்கியர்கள் என்று கூறவில்லை.


   • புரிந்துகொள்கிறேன். நன்றி.

    இன்னொன்று: இன்னொரு அன்பர் ஒருவர் அந்தப் படத்தில் புகைப்படத்தில் இருப்பது கனிமொழியல்லர் நான் ஏமாற்றுகிறேன் எனத் தெரிவித்துத் திட்டியிருக்கிறார். பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை.

    அது சரியானதுதான். பொய்யில்லை. 1989 முதல் திருமணத்தின்போது கனிமொழிக்கு 20 வயதுதான்! அப்போது, அந்தப் பையனுக்கு 25 என்ன எழவோ!

    2015ல் அதிபன் போஸ் காஷாயப் படம்: https://tamil.oneindia.com/img/2015/10/01-1443702022-athipan-bose5677.jpg – பார்த்து மகிழவும்.

 3. Sivaaa Says:

  98 குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு கருணாநிதி முஸ்லிம்களை கடைசி வரை நம்பவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்த அற்புதம் அப்போது நடந்தது. கருணாநிதி குடும்பம் வெளிப்படையாக தீவிர இந்து குடும்பமாக வெளிவர தொடங்கியது. இன்று கனிமொழி கோயில் அர்ச்சகரிடம் பிரசாதம் வாங்குகிறார். தேர்தல் ஸ்டண்டாகவே இருந்தாலும் கருணாநிதி ஒருபோதும் இப்படி செய்ய துணிந்திருக்க மாட்டார் என்கிறார்கள் சில கிறித்தவ திமுக அனுதாபிகள். அவர்களுக்கு இது ஒவ்வாமையை தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


  • ​இந்தக் குண்டுவெடிப்புக்கு முன்/பின் போன்ற நரேட்டிவ்ஸ்/கதையாடல்கள் சரியில்லை என நினைக்கிறேன்.

   திராவிடத் தலைவர்கள் இரட்டை வாழ்வு வாழ்வதில் விற்பன்னர்கள். ஊருக்கொன்று தமக்கொன்றுதான் அடிப்படைக் கொள்கை. அவர்களுடைய தொண்டர்களும் அடிமைகளும் உணர்ச்சிபூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். ஆகவே இரட்டைவேடங்களை (ஏன், அதற்கு மேற்பட்டவைகளைக் கூட) சாதாரணமாக எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் – அல்லது அறிவிலிகளாக இருக்கிறார்கள்.

   (எனக்குத் தெரிந்து)​ இந்த ஆராதனை வகைகளில் ஈடுபடாமல் அக்குடும்பங்கள் ஒரு நாளும் இருந்ததில்லை. (வெளியே திட்டித் தீர்ப்பார்கள் என்பது வேறு விஷயம், பேடிகள்)

   சிவா, கனிமொழி இப்படி கோவிலுக்குப் போகிறார் என்கிறீர்கள்; அவருடைய முதல் திருமணம் (அதிபன் போஸுடன் – இது ஒரு பெரிய ஊழல் கதை, அடாவடி, தகிடுதத்தம் – இதைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்; மனிதன் விட்டுவிட்டு ஓடிப்போய் ஒரு சன்னியாசியாகவே மாறிவிட்டார்!) எப்படியெல்லாம் நடந்தது என்று தெரிந்துகொள்ளவும். நடந்தது 1989. அது குறித்த ஒரு பழைய புகைப்படத்தை தரவேற்றியுள்ளேன் – https://othisaivu.files.wordpress.com/2019/03/kanimozhiwedding-1989.jpg பார்த்துக் கொள்ளவும்.

   மற்றபடி தரவுபூர்வமான விஷயங்களை நம்புவதோ நம்பாமலிருப்பதோ உங்கள் இஷ்டம்.

 4. Sridhar Tiruchendurai Says:

  திராவிட கழகங்கள் மட்டுமல்ல, தம்மை லிபரல் என்று கூறிக்கொள்ளும் கூட்டத்திற்கு, கூச்சமில்லாமல் இரட்டை நிலை எடுப்பது மிக எளிது. லிபரல்களுக்கும், பிறருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது.

  பிராமணர்கள் வாரியார் சுவாமிகளை மதித்ததில்லை என்பது எங்கோ சில இடங்களில் நடந்திருக்கும். எங்கள் வீட்டில் அப்படி இல்லை.

  திருச்சி மலைக்கோட்டைக்கு கதாகாலட்சேபம் செய்ய வாரியார் சுவாமிகள் வந்தபோது அவரிடம் ஆசி வாங்கியது நினைவில் இருக்கிறது. கதா காலட்சேபம் செய்ய விரும்பிய என் பெரியப்பா, வாரியார் சுவாமிகளை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு தொடங்கினார்.


  • ஐயா ஸ்ரீதர், உண்மை.

   இந்தப் பதிவின் பாடுபொருள்(!) திமுக என்பதால் அதனைக் குறிப்பிடவில்லை. இந்த லிபரல் எனச் சொல்லிக்கொள்பவர்களிலும் – ‘படித்தவர்’களும் இருக்கிறார்கள். உண்மையைத் திரிபில்லாமல் பேசக்கூடியவர்கள் என நம்பப்படுபவர்கள்; ஆனால், துளிக்கூட அப்படியில்லை!

   அவர்கள் ‘ஐயோ!’ என்று போகக் கடவது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s