கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா?
March 16, 2019
ஒரு இனிய பயத்துடன் மட்டுமே இக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அது ஒழுங்காக, குறைந்த பட்சம் தகவல்பிழைகளில்லாமலாவது இருக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டேதான்.
ஆக, ஜெயமோகன் போலவே கடலூரார் அவர்களும் பேராசானின் நடையை அடியொழுகி ‘உணர்ச்சி மேலிட தரையை அறைந்து சொன்னேன்‘ + ‘நமது தர்க்க மனது. இவற்றுக்கு வெளியே, அக ஆழத்தில் இருப்பது தூய்மையான ரத்த வெறி அன்றி வேறில்லை என்பதுதானே நிதர்சனம்‘ ++++ என்றெல்லாம் சுளுக்கெடுத்தான் வெண்முரசபாணியில் எழுதியிருப்பதைப் பார்த்து அகமகிழ்ந்து நெகிழ்ந்த அதே நேரத்தில்… … :-(
… பலவருடங்களுக்குமுன் – மேல்சித்தாமூர் எண்ணாயிரம் மலைப் பக்கம் சமணர் அம்மணர் குமாரகம்பணர் வந்தவாசி என நானும் என் பள்ளிக்குழந்தைகளைக் கூட்டிக்கொண்டும் (மூன்று நாள் சைக்கிள் பயணங்கள்) தனியாகவும் (மோட்டர்பைக்கில்தான்!) சுற்றோதிசுற்றுச் சுற்றியிருக்கும் காரணத்தால் அக்கட்டுரையை மேலோட்டமாக அல்லாமல் ஆழ்ந்துவேறு ஒருமுறைக்கு இருமுறை படித்துத் தொலைத்தேன்.
எல்லாம் என் கர்மா. தேவையா, சொல்லுங்கள்?
தத்துப்பித்துவ வகை மானுட இருப்பின் அவஸ்தைத்தர நெகிழ்வாலஜிகளுக்கும் பெருமைகளுக்கும் அப்பாற்பட்டு, இதில் அலைஅலையாகப் பிரச்சினைகள்; அடிப்படைத் தகவல்பிழைகள் (கருத்துக் கதம்பங்களையே விடுங்கள்!) மலிந்த பயணக் கட்டுரை இது. இந்தத் தன்மையும் பேராசானின் பயணக் கட்டுரைகளை எனக்கு நினைவு படுத்தியது.
இந்த இளைஞர் ஏனிப்படி எழுதுகிறார்? சகவாசதோஷமோ? அல்லது அதீதமான ஆர்வக்கோளாறா? தெரியாத விஷயங்களைத் தெரிந்ததுபோல் பாவலா காட்டும் பண்பா? :-( (பல ஆண்டுகளுக்கு முன் இவருடன் ஒருமுறை ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். அப்போது நல்லபடியாகத்தான் இருந்தாரென நினைவு, பாவம்!)
சரி. அங்கலாய்ப்பதை விட்டுவிட்டு – இதில் ஒரு முக்கியமான சோக நகைச்சுவையை மட்டும் கோடிட்டுக் காட்டி உங்களுக்கும் புளகாங்கிதம் கிடைக்க ஆவன செய்யமுடியுமா எனப் பார்க்கிறேன், சரியா?
கடலூரார் கட்டுரையின் ஒரு பகுதி கீழே:
பிரச்சினை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் எழுத்துக்கூட்டி, மகாமகோ கங்காதேவி (இவர் குமாரகம்பணரின் தேவி – படிப்பறிவும் வீரமும் அழகுணர்ச்சியும் மிக்கவர் – போர்முனையில் வாளேந்திப் பொருதியவர்) அவர்கள் எழுதிய அந்த ‘வீரகம்பராய சரிதம்’ அல்லது ‘மதுரா விஜயம்’ வரிகளைப் படித்திருக்கிறேன். மதுரை ஸுல்தான்களின், தமிழக ஹிந்துக்கள் மீதான ஜிஹாதிக் கொடுமைகளின் விவரணைகளை அறிய சமகால மூலங்களைப் படிக்கும் ஆர்வத்தில் அதைச் செய்திருக்கிறேன்.
என் பிழைதான், என்ன செய்வது சொல்லுங்கள்? :-(
…மதுராவிஜயம் ஒரு சிறிய ஸம்ஸ்க்ருதக் கவிதை நூல். இதில் கங்காதேவி அவர்கள், விஜயநகரப் பேரரசு ஏன் தமிழகத்தின் உதவிக்குப் போனது, அங்கு என்ன செய்தது என ஒரு பௌராணிக நடையில் விவரிக்கிறார்.
அவர் கணவரும் இளவரசருமான குமாரகம்பணர் (அச்சமயம் அவர் தம்முடைய அப்போதைய தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்தார்) இதற்காக ஏன் முனைந்தார் என விளக்கும் போது – ஒரு பெண் (தெய்வீகம் பொருந்திய? மதுரை மீனாக்ஷி??) – துலுக்கர் அராஜகத்தினால் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என விளக்கும்படியாக விரிக்கிறார். மேலும் அந்தப் பெண், குமாரகம்பணரை, மதுரையையும் ஹிந்து பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டுவதாக எழுதுகிறார்.
இதுதான் கடலூரார் தன் கற்பனைக் கோவேறு கழுதையைப் பறக்கவைக்கும் படலத்துக்கான பின்புலம்.
மதுரா விஜயம் உண்மையில், கடலூரார் அட்ச்சிவுட்டதைக் குறித்து என்ன சொல்கிறது? (ஸம்ஸ்க்ருத மூலம்)
துலுக்கர்கள் (துலுக்காஹ் / துருஷ்க / துலுஷ்க / யவன) ஆட்சியில் ஹிந்து மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அவர்களுடைய வாழ்க்கைமுறைகள் ஒடுக்கப்படலும் மதரீதியான வன்முறையையும் தமிழகத்தை நாசமாக்கிக்கொண்டிருக்கிறது.
…மதுரையைச் சூழ்ந்திருந்த அழகான தென்னைமரச்சோலைகள், ஆக்கிரமிப்பாளர்களால் வெட்டப்பட்டு அவற்றின் இடத்தில் சூலங்கள் [வேல்கள்] சொருகப்பட்டு, அவற்றிலிருந்து, வெட்டப்பட்ட தலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் தொங்குகின்றன…
மதுரா விஜயத்தின் சாராம்சம் இது குறித்து என்ன சொல்கிறது? (ஆங்கிலம் – 1924ல் மறுபதிப்பு செய்யப்பட்ட மதுராவிஜயத்தின் ஆங்கில முன்னுரையிலிருந்து)
ஆக கடலூராரே! மண்டையோடு செருகப்பட்ட சூலங்கள்? உக்ர சைவர்கள்??
…அப்படியே கருத்துக் கழுதையை மேய்த்துக்கொண்டுபோய் காவி வெறியர்கள், ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ், சங்கிகள், ஆகவே மோதி ஒழிக, ராஹுல் வாழ்க என விரிக்கவில்லை என்பதற்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
இஸ்லாமியர்கள் இழைத்த அநீதிகளைக் குறிக்கும் விதமாக, கவிதாரூபமாகச் சொல்லப்பட்டதை அப்படியே உல்ட்டா செய்து சைவர்கள் மண்டையில் நிஜம்மாகவே கவிழ்த்திவிட்டாரே இந்தச் சிற்றாசான்! படுகேவலமல்லவா இது?
அதுமட்டுமல்ல – சைவர்கள் (போன்றவர்கள்) இப்படியும் உயிர்ப்பலி கேட்டும் ஆகாத்தியம் செய்ததற்கு மாறாக ‘கருணை மழை’ மார்க்கங்கள் எப்படி இயங்கின என்றும் மேதாவிச் சான்றோர் தனமாக அட்ச்சிவுடுகிறார்.
“எல்லையில் போர்ப் பதற்றம், உள்ளே ரத்தம் ரத்தம் என்று கோரி சாமியாடும் நூறு நூறு ஆசாமிகள். நெடிய பண்பாட்டின் பின்புலத்தில் இன்றும் தணியாத அந்த ரத்தப் பசிக்கு பல கோடி நியாயமான காரணங்களை கற்பித்துக் கொள்கிறது நமது தர்க்க மனது. “
ரத்தப் பசி? ஐயோ! இதுவும் கவித்துவ ஆவேச போராளிக்கார மனிதவுரிமை மனச்சாட்சிக்காரக் கூப்பாடாக விரிகிறதே! ஞான் எந்தா செய்யும்!
இப்படியெல்லாம் அவர் கண்டமேனிக்கும் அட்ச்சிவுடுவது, அறியாமையால் நிகழ்ந்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை, விஷயங்களை இப்படி அசிங்கமாகத் திரிப்பது – கடைந்தெடுத்த பேடித்தனம், வேறென்ன சொல்ல.
நல்ல சிற்றாசான், நல்ல தளமைத்துக்கொடுத்தல். எங்கள வுட்ருங்கடா!
-0-0-0-0-
கடலூர் சீனு,
வணக்கம்.
பதிநான்காம் நூற்றாண்டுகளில் கடைசியில் இப்புத்தகம் எழுதப்பட்டது.(1370க்குப் பின்னர்தாம் – விஜய நகரத்துக் குமாரகம்பணர் அதற்கு முன் தான் தமிழக மன்னர்களுக்கு உதவியாக மதுரை வந்து மதுரை+வடக்குச் ஸுல்தான்களால் அழிக்கப்பட்ட மதுரையைத் தமிழருக்காக(வும்) மீட்டுக் கொடுக்கிறார் – இந்த வருடம் போலத்தான், இஸ்லாமிய அழித்தொழிப்புகளுக்குப் பின், அதாவது சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின் மதுரைமீனாட்சி கோவிலில் மறுபடியும் வழிபாடு ஆரம்பிக்கிறது)
ஆக – இந்தப் புத்தகம் எழுதப்பட்டது, நீங்கள் குறிப்பிடுவதற்கு மாறாக, பதின்மூன்றாம் நூற்றாண்டில் அல்ல. சரி, இது பெரிய தவறில்லை. அதற்கான காரணம் உங்களுடைய கவனக்குறைவு / சிரத்தையின்மை என இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்.
ஆனால் — நீங்கள் மதுராவிஜயத்தைப் படிக்கவில்லை. மாறாக – மிகை அதிகபட்சம், அதைப் படித்ததாகப் பாவலா செய்த இன்னொருவரின் கருத்தை ஒழுகி, தங்களுடைய மேலான கருத்துகளைச் ‘சமைத்துக்’ கொண்டிருக்கிறீர்கள் எனத்தான் படுகிறது. ஏனெனில் ஒழுங்காக அதன் மூலத்தையோ அல்லது சரியான மொழியாக்கங்களையோ படித்திருந்தால் இப்படி அட்ச்சிவுட்ருக்க மாட்டீர்கள் அல்லவா?
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதுராவிஜயத்தின் ஒருமாதிரியான தமிழாக்கத்தைப் பதிப்பித்திருக்கிறது என நினைக்கிறேன். அதையாவது படித்தீர்களா? இல்லை படித்தது போன்ற பிரமையில் இருக்கிறீர்களா? அல்லது படித்தது சுத்தமாக மறந்துவிட்டதா?
ஏனிப்படியாகிறது? தெரியாத/அறியாத விஷயங்கள் என நம் அனைவருக்கும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லையே!
அல்லது படித்ததையும் உண்மை நடப்புகளையும், துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் திரித்துச் சொல்லும் ‘தாராளவாத’ இடதுசாரி திரிசமமும் அலக்கியவாதிகளின் அகங்காரமும் உங்களையும் பீடித்து விட்டதா?
சமணபௌத்த மார்க்கங்களை உயர்த்திப் பிடியுங்கள் சீனு, உங்களுக்கும் அந்தக் கருத்துரிமை இருக்கிறது. (பௌத்தமதம் கருணைவாய்ந்தது எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்வது தவறென்றாலும், கௌதமபுத்தரே இதனைக் கேட்டால் கெக்கலி கொட்டிச் சிரிப்பார் என்றாலும்; மேலதிகமாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் பௌத்தத்தின் அடிப்படைப் புத்தகங்களைப் படியுங்கள், சரியா?)
ஆனால், அம்மார்க்கங்களை தூக்கிப் பிடிப்பதற்காக, ஏன் இப்படி பொய்பொய்யாக சைவர்களைப் பழித்து எழுதுகிறீர்கள்? தேவையா?
ஹிந்து நம்பிக்கைகள் குறித்துத் தாராளமாக விமர்சனம் வைக்கலாம் – ஆனால் இப்படியா தரவுகளை மாற்றி, எந்தக் கும்பலோ செய்ததை சைவர்கள் செய்தார்கள் என ரஸவாத மாற்றம் செய்வீர்கள்? நீங்கள் எழுதுவது என்ன? ஹிஸ்டரியா ட்விஸ்டரியா? history or twistory?
இப்படியெல்லாம் மேற்கோள் காட்டி எழுதும்போது, விட்டேற்றித் தனத்துடன் அல்லது ‘நாம் தெகிர்யமாக எத்தையாவது சொன்னால், அத்தை எவன் கேள்விகேட்கப் போகிறான்’ எனும் மனோபாவம் சரியா?
சரி, நாமெல்லாரும் தவறு செய்கிறவர்கள்தாம் – ஆனால் அடிப்படைத் தவறையும் செய்துவிட்டு, அந்தத் தவற்றின் மேல், பெருந்தாவல் தாண்டவராயனாக உங்கள் சொந்தக் காமாலைக் கருத்துகளைக் கட்டுமானம் செய்து மினுக்குவதும் ‘சைவர்கள் வன்முறை’ என்கிற தொனியில் எழுதுவதும், பிற மார்க்கங்களை உயர்த்திப் பிடிப்பதும் (இதுவும் சரியில்லை என்பது வேறுவிஷயம்!), ரத்தவெறி என்பது பாரதத்தின் தொடரும் பாரம்பரியத்தைப் போலவும் பரப்புரைகளை விரிப்பது – எந்த அளவுக்கு அறம் வாய்ந்த செயல்கள்? ஹ்ம்ம்?
பேராசான், அவருடைய ஆகிருதிக்கு என்னவேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் தெகிர்யமாக அட்ச்சிவுடலாம். ஏனெனில், ஆலையில்லா ஊரில் கேட்க ஆளில்லை; அப்படி இருந்தாலும் இலுப்பைப்பூ பேராசானின் தொடர்த்தாக்குதல்களில் களைத்துப் போய்விடுகிறார்கள். ஆனால், இளைஞராகிய நீங்களும் அவருடைய செயல்பாடுகளை அப்படியே ஒற்றியெடுத்து உங்கள் செயல்களைக் கட்டமைத்துக்கொள்ளவேண்டிய / செய்யவேண்டிய அவசியம் இருக்கிறதா எனத் தயவு செய்து யோசிக்கவும். அவரிடம் உள்ள நல்லபண்புகளை (கடும் உழைப்பு?) மட்டும் எடுத்துக்கொண்டால் என்னவாம்?
மேலும் –
‘எப்பொருள் பேராசான் வாய் கேட்பினும், அப்பொருள் பொய்ப்பொருள் காண்பதறிவு’
…எனத் திருவள்ளுவன் தன்னையும் குறித்து அன்றே சொன்னானல்லவா?
எது எப்படியோ – செயலூக்கம் இருப்பதாக நம்பப்படக்கூடிய இளைஞர்களும் இப்படித் தேவையற்ற முறையில், மாயமௌடீக வலைகளில் சிக்கிக்கொண்டு சீரழிவது என்பது மிகுந்த வருத்தம் தருவது.
உங்களுடன் ஒரிரு வார்த்தை பேசியுள்ள அளவில், உங்களை, குயுக்தி அற்ற, அறிந்துகொள்வதில் ஆசையுள்ள வெள்ளை மனது ‘impressionable youngster’ எனத்தான் கருதினேன். அப்படியேதான் நீங்கள் இருக்கவேண்டும் எனவும் விழைகிறேன்.
மற்றபடி உங்கள் இஷ்டம். உங்கள் பரப்புரை. +அதற்கான உங்கள் கருத்துரிமையும்.
வளர்வதோ செழுமைப் படுத்திக்கொள்வதோ அல்லது சராசரிச் சாகரத்தில் தொடர்ந்து உழல்வதோ, உங்கள் பாடு, உங்கள் ராஜபாட்டை.
நன்றியும் மாளா வருத்தமும்,
__ரா.
பின்குறிப்பு: ஜெயமோகன் அவர்களின் நீண்டகால பங்களிப்பு என்பது – நன்றாக மேலெழும்பக்கூடிய இளைஞர்களை இப்படிக் காயடிப்பு செய்ததுதான் எனச் சுருங்காமல் இருக்கவே எனக்கும் ஆசை.
ஊக்கபோனஸாக, தோசையும் ஆமைவடையும்.
நன்றி.
March 16, 2019 at 16:54
Yes five years back he was nice gentleman now mingled into the inner circle
No hope
March 16, 2019 at 23:08
>> எல்லாம் என் கர்மா. தேவையா, சொல்லுங்கள்?
நிச்சயமா கர்மா(ம்)தான் . இல்லையென்றால் கடலூர் சீனுவையெல்லாம் படிப்பீங்களா ?! இதுக்கு மருதன் கட்டுரைகளை படிக்கலாம். சீரியஸாக சொல்லி நம்மை சிரிக்கவாவது வைப்பார்.
>> இந்த இளைஞர் ஏனிப்படி எழுதுகிறார்? சகவாசதோஷமோ?
இது ஜெமோ-வின் பொடியாழ்வார்கள் செய்வதுதான். அப்போதுதான் அவர் தளத்தில் அவர்கள் எழுதியது வரும். இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை வரும் பாருங்க…பலமான ஒப்பாரியுடன்.
சீனுவின் மற்ற படைப்புகளும் அந்தத் தளத்தில் இருக்கிறது. படித்து மகிழலாம் (அல்லது அழலாம் :)).
இவர் ஆசானின் மகனை தெய்வ ரேஞ்சுக்கு வைத்து எழுதிய ஒரு கட்டுரை உங்களுக்கு : https://solvanam.com/2016/01/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/
ஜெமோவின் சமீபகால தரமற்ற படைப்புகளுக்கு காரணம் இதுபோன்ற ஜால்ராக்கள்தான். ஜெயமோகனுக்கு சில நல்ல (பரவலாக, ஆழமாக) படித்த வாசகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அவரிடம் கனமாக விவாதம் செய்யும் தகுதியும், திறமையும் இருந்தது. அவர்கள் இவரிடமிருந்து விலகியபின் hollow வாசகர்கள்தான்.
பாவம் ‘இனிய ஜெயம்’ கடாக்ஷம் கிடைக்க எப்படியெல்லாம் நாட்டியம் ஆட வேண்டியிருக்கு?!
March 17, 2019 at 07:53
ஆனாலும் கடலூர் சீனு குமாரகம்பணரையும் அவரது பத்னியையும் இப்படி அவமான படுத்தி இருக்கவேண்டாம்.மேற்படியாரின் தண்டயாத்ரை மதுரை மீது இல்லையென்றால் சிக்கந்தர் பாஷா தென்னகத்தை கிழக்கு வங்கம் போல் மாற்றியிருப்பார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
March 17, 2019 at 11:41
Another reference to Madurai Sultan’s cruelty.
Moroccan traveler Ibn Batuta describes the cruel behaviour of the Madurai sultan Ghiyas-ud-Din Muhammad Damghani, in his memoirs. His army routinely rounded local Hindu villagers and impaling and decapitated them, indiscriminately with women and children being included
Batuta, Ibn (1879). Defrémery, Charles François; Sanguinetti, Beniamino Raffaello, eds. Voyages d’Ibn Batoutah (PDF) (in French). Volume 4. Paris: L’Imprimerie Nationale. Aiyangar 1921, p. 166
March 17, 2019 at 12:16
Thanks Vinod, infact the incidents mentioned by Ibn Batuta corroborate very well with Madhura Vijayam.
Tamil histories that are taught in Tamilnadu should include all these. No need for whitewashing. All Tamils – whatever be their religion, should be aware of the dangers of Jihad – based on their own pasts…
One of these days, one should at least write about the mass depradations, massacre of hindus and temple destructions of Hyder Ali, Tippu Sultan, Delhi based islamic marauders, Madurai Sultans and Golconda Sultans – wrt Tamilnadu.
But Time is a tantalizingly dirty mistress.
March 17, 2019 at 20:21
By means of doing all this, what are going to achieve?
Going to gather masses for your RSS support ?
(மதுரை ஸுல்தான்களின், தமிழக ஹிந்துக்கள் மீதான ஜிஹாதிக் கொடுமைகளின் விவரணைகளை அறிய சமகால மூலங்களைப் படிக்கும் ஆர்வத்தில் அதைச் செய்திருக்கிறேன்.)
எங்காவது ஏதாவது நடந்திருக்காதா என்று தேடுறீங்க. நல்ல ஒரு தேடல், வாழ்க வளமுடன்
May 11, 2019 at 15:31
Recent news about the discovery of a old Shiva Temple, and many human bones from around Madurai.
March 17, 2019 at 13:00
ஜெயமோகனுக்கு சில நல்ல (பரவலாக, ஆழமாக) படித்த வாசகர்கள் இருந்தார்கள்//
யார் அந்த 10 முட்டாள் பாப்பானுகளா ? ஹஹ , அவனுக இடத்த காலி பண்ணுனதுக்கு பின்னாடிதான ஆசான் உருப்படியா வெண்முரசு எழுதுனாரு? இல்லன்னா பாப்பானுகள தாங்கி கட்டுரை எழுதியே நேரம் போயிருக்கும்,
ராம்சாமி , எந்த கட்டுரை எழுதினாலும் அதென்ன நான் ,எனது ,சந்திப்பு , புடுங்கினேன் ?
வெட்டி வாழ்க்கை அல்லவா நீ வாழ்றது ? தொழில்லயோ , சமூக பணியிலயோ , ஸ்கூலிலயோ எதாவது ஒரு சின்ன விஷயம் புரடிக்டிவா செஞ்சிருக்கயா நீயி ? வெறும் பார்ப்பன சாதி பாசம் தவிர ஏதாச்சும் மிச்சமிருக்கா உன்கிட்ட ,பரிக்ஷா ஞாநி போலவே பரிதாபமான வாழ்க்கை , பாவம்யா நீயி , ஊதிப்பெருக்கிக்கொண்ட உன் சுயபிம்பம் (பல பிராமணர்கள் போலவே ) நாய் புண்ணை நக்கிக்கற மாரி சுவை ,அவ்ளோதான் .
காந்தி பேர சொல்லித்தான ஜெயமோகனை ஏமாத்துன ? பாவம்யா அந்த வைசியன் . அந்தாள விட்டு உன் தாம்பிராஸ் அடையாளதோடவே வா ,
காந்தி தென்னாப்பிரிக்கா போன மூனாம் மாசம் ஆரம்பிச்சு திரும்ப வரும்வரை அவரை வாரா வாரம் திட்டி ,அதுக்காகவே பத்திரிகை நடத்துனான் ஒரு தமிழ் பாப்பான் , அவன் பேரு ஒத்திசைவு ராம்சாமியா இல்லை சுரேஷ் வெங்கடாதிரியா என வரலாறு மட்டுமே முடிவு செய்யும் .
காந்தியும் ஜெயமோகனும் இருப்பாங்க , உண்டக்கட்டி பாப்பானுக பாவம் அடையாளமே இருக்காது,
இந்தன வெறுப்பு பிரச்சாரத்துக்கு பின்னாடியும் கட்டண கூட்டத்துக்கு வந்தவர்களில் பாதிக்கு மேல் பிராமண நண்பர்கள் , காந்திக்கு பின்னாடி போய் அரிஜன சேவை செய்த பெரும்பான்மையானோர் பிராமணர்கள் போலவே.
தினமுமெல்லாம் உங்க ஜாதியாசனவாயரிப்புக்கு பதில் சொல்ல முடியாது , ஏதோ அப்பப்ப பொயிலை வச்ச மாதிரி இதெல்லாம் .வர்டுமா ராம்சாமி ,பை.
March 17, 2019 at 14:07
அன்பருக்கு,
தாங்கள் என்னைக் குற்றம் சாட்டிக் கோபப்படுவதற்கு ஏதாவது காத்திரமான தரவுகள் இருக்கின்றனவா?
அல்லது வெறும் வெறுப்பியத் தரகுவேலை மட்டும் பார்க்கின்றீர்களா?
;-)
March 17, 2019 at 20:34
பாப்பான் அது இதுன்னு ஏன் தேவையில்லாதத பேசுறீங்க? கேடு கெட்டவனுங்க தான் எல்லாத்துலயும் ஜாதிய சேப்பானுங்க. அப்பறம் ராமசாமி சாரே இந்த commentக்கு எப்போ reply பண்ண போறீங்க – https://othisaivu.wordpress.com/2019/03/14/post-950/#comment-10711
ஜெயமோகன் ஆரம்பிச்சி இப்போ கடலூர் சீனு , தமிழ் வரலாறு அக்பர் பாபர் திப்பு சுல்தான்னு பேசுறீங்க. அப்படியே பின்னாடி போய் விழுந்துட போறீங்க. கொஞ்சம் comment reply பண்ணுங்க சாரே. பி ஏ கிருஷ்ணன் ஒரு list ready செய்றாரு. பாப்போம் எப்படி விரிகிறதென்று :O
March 18, 2019 at 07:04
அன்பருக்கு,
உங்களுடைய மற்ற உப்புசப்பில்லாத பின்னூட்டங்களை கடாசி விட்டேன்.
இதுதான் கடைசி அனுமதி.
பிஏகிருஷ்ணன் அவர் லிஸ்டைப் போட்டுக்கொள்ளட்டும். அவருடைய தரத்தைக் குறித்துக் கொஞ்சம் பயமாக இருந்தாலும் – நான் அவரைப் பற்றி எப்படியும் எழுதப்போகிறேன். நன்றி.
ரா. (தொடர்ந்து பின்னூட்டம் எழுதும் சலுகை வேண்டுமென்றால், எனக்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பவும்; பின்னர் பார்க்கலாம்.)
March 18, 2019 at 19:01
(உங்களுடைய மற்ற உப்புசப்பில்லாத பின்னூட்டங்களை கடாசி விட்டேன்.)
உங்களை ஜாதி பெயர் சொல்லி திட்டினேனா ? கெட்ட வார்த்தை சொன்னேனா? இங்கே பேசுவதில் என்ன தப்பு – சொல்லுங்க சாரே
March 18, 2019 at 19:22
உண்ஂமைதான். நீங்கள் திட்டினீர்கள் எனச் சொல்லவில்லை. உப்புசப்பில்லை எனத்தான் சொன்னேன்.
மேலும், அனாமதேயங்களுடன் பட்ட அனுபவங்கள் காரணமாகப் பொதுவாகவே, கொஞ்சம்கூடத் தெரியாதவர்களுடன் எனக்குக் கஷ்டமாகிவிடுகிறது.
அதனால்தான் மின்னஞ்சல் எனச் சொன்னேன். மற்றபடி உங்கள் இஷ்டம்.
March 18, 2019 at 08:06
“ஆசான் உருப்படியா வெண்முரசு எழுதுனாரு?”
nuff said, about yourself Ani (:
March 17, 2019 at 15:49
Sir,
Guess Aniruddhan(Brahmarayar?) was responding to Raj on the first para!
Seems the Brahmin King seems to be knowing you in and out .
‘Ad hominem’ arguments not only on you but on the departed soul Mr.Gnani also.
Where were you discussing ‘Brahmin and casteism’ in this (your )article(s)?
‘Calling spade a spade’ is a sin ?
Your asking for validations /proofs from this man of refinement belies your boldness in countering the audacious …pray explain why?
The ironic part was that ‘ The grass is always greener on the other side of the fence’ ( Author(Hindu) visiting Jain remainders with his friend of different faith ) may have been deemed ok if one’s own not defiled with incorrect data .
You have got all reasons to take umbrage at this stupidity and get them correct themselves. Bingo..
Not all Jeymo state is untrue as your coined OR- kkural indicates so. To read this word ‘ பேராசான் வாய்’ carefully as conjoined reading will give the reader a different feel !!
Regards
SB
March 17, 2019 at 23:00
அனிருத்தன் அவர்களே வருக
ஆசானின் அல்லக்கைகள் வேறு தளத்தில்
வருவதில்லை.
தங்கள் தரத்தை வெளிபடுத்தியத்திற்கு நன்றி
March 18, 2019 at 05:33
இன்றுதான் படித்தேன். 😟
முஸ்லீம்கள் அக்காலத்தில் செய்த படுகொலைகளை சைவர்கள் மேல் கவிழ்த்திய திரித்தல்களுக்கு கடலூர் சீனுவோ ஜெயமோகனோ வருத்தம் தெரிவிப்பார்களா?
March 18, 2019 at 08:21
ஐயா ‘பெயர்வேண்டாமே!’ – முதலில் பதிலளிக்கவேண்டாமே என நினைத்தேன்! ;-)
சரி. முதலில் அவர்கள் இந்த ஒத்திசைவு எழவைப் படிக்கிறார்களா எனத் தெரியாது. அவர்கள் தொழில்முறையில் கட்டுரைத் தொழிற்சாலை நடத்துபவர்கள்.
மேலும் வருத்தம் கிருத்தம் எனவெல்லாம் தெரிவித்தால் மானபங்கம் ஆவதற்கு அப்பாற்பட்டு – மேன்மேலும் திரிக்க அவர்களுக்கு நேரம் குறைவாகி விடுமே!
March 18, 2019 at 10:16
[…] ஈடுபாட்டுடன் தொடர்கேளிக்கையில் (‘பி ஏ கிருஷ்ணன் ஒரு list ready செய்றாரு‘) படுதீவிரமாக ஈடுபட்டுக் […]
March 25, 2019 at 09:59
[…] கடலூர்சீனுகடலூர்சீனு எனும் ஒரு பாடல்பெற்ற வரலாற்றாளரின் இன்னொரு கட்டுரையைப் […]
May 13, 2019 at 22:31
[…] […]
June 1, 2019 at 21:14
[…] எதற்குப் படிக்கவேண்டும், என்வழி ஆசான்வழி என்கிறீர்களா? சரிதான்! பரவாயில்லை. […]
October 7, 2019 at 19:31
[…] with rage, a while back, as it has already been grossly distorted and, my dear Gangadevi has been misrepresented in my dear & abysmal ‘modern’ Tamil […]
April 13, 2020 at 16:01
[…] […]
August 14, 2020 at 00:17
[…] புளுகும் இந்தக் கால்குறை இளைஞருக்கு, […]
April 23, 2021 at 20:45
[…] அட்ச்சிவுட்டதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். சிஷ்யக்குட்டி பதினாறடி பாய்ந்தால், […]