அருண் எலஸேரி: ‘கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது’

November 23, 2018

இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!)

புத்திசாலி. (இருவருமே அப்படித்தான் – ஆனால் இந்தப் பதிவின் பாடுபொருள் மலையாள அருண்)

மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு வூட்டிலேயே கல்வி கொடுத்து, 12வதுக்குப் பின் கல்லூரி இத்யாதிகளில் சேர்த்தியிருக்கிறான்/சேர்க்கப் போகிறான். ஒவ்வொரு வேலையிலும் செய்நேர்த்தி. கொஞ்சம் ஓவராகவே செய்நேர்த்தி. எடுத்துக்காட்டாக – தேங்காய் துருவுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்வான், அதுவும் ஒரு மூடி டைப். “தேங்காய்த்துருவல், பார்ப்பதற்குப் பூ போல இருக்கவேண்டும். ஒரு துளி நார்கூட அதில் இருக்கக்கூடாது.”

இவன் இந்த ஒரு காரியத்தைத் தேவை மெனெக்கெட்டு அதன் தத்துவம் பித்துவம் என்றெல்லாம் பேசி, அதனுடன் உரையாடி, சிரட்டையிடம் பவ்யமாக அதனைத் துருவுவதற்கு அனுமதி கேட்டு முடிப்பதற் க்க்க்க்கு ள்ள்ள்ள்…  அதற்குள் நான் எல்லாவற்றையும் முடித்துச் சட்டினி சமேத இட்லிகளை தடுத்தாட்கொண்டிருப்பேன்.

ஒரு சமயம், (சுமார் 8 ஆண்டுகட்கு முன்?) அவன் வீட்டுச் சமையலறையில் ஒரு கத்தியைப் பார்த்துவிட்டு, ‘அட அழகாக இருக்கிறதே, கைப்பிடி அற்புதம்’ என்று ஒருமாதிரி வாய் தவறிச் சொல்லிவிட்டேன். என் நாக்கில் சனி.

‘டேய், கவலையே படாதே! உனக்கு ‘டிட்டோ’ அதே மாதிரி கத்தியை வாங்கிக்கொடுக்கிறேன்!’

அதன் பின், செய்நேர்த்தியுடன் மலப்புரம் (அது குட்டிபுரம் பகுதி) வீதிகளில் சுற்றியலைந்து (5-6 மணி நேரம்) வியர்வைப் பிசுபிசுப்புடன் மாளா களைப்புடன் திரிந்து பிரதட்சிணம் அப்ரதட்சிணம் வந்து ஆங்காங்கே எதிர்ப்படும் தெருமுக்குச் சகநாயர்களுடன் மூக்காலேயே அளவளாவி, ‘இவன் என் ஃப்ரெண்டாணு’ என்று அறிமுகம் செய்து… இம்மாதிரி ஒவ்வொரு முறை அறிமுகத்துக்கும் மடித்துக்கட்டிக்கொண்டிருந்த வேஷ்டியை ‘மரியாதை நிமித்தம்’ நான் அவிழ்த்துவிட்டு… என்னுடைய டங்குவார் ஏகோபித்துப் பிய்ந்துவிட்டது.  ஒவ்வொரு காய்கறிக்கடைக்காரரிடமும் விலாவாரியாக ‘ஸம்ஸாரித்துக்கொண்டு’ … அரட்டையோதி அரட்டை –  ஏண்டாப்பா அப்படி  அந்தக் கத்தியைச் சிலாகித்துச் சொன்னோம் என்றாகி ஸம்ஸார ஸாகரமே அலுத்துவிட்டது.

ஒரு கடையில் கத்தி இல்லை. ஏனெனில் அது கபடா கடை. காதி பவன். இன்னொன்றில் மரப்பிடி சரியில்லை. இன்னொன்றில் வளைவு சரியில்லை. டெம்பர் போதவில்லை. குமிழ் சரியில்லை. இன்னொன்று ரொம்ப வளைவு. ஒன்று தடிமன் அதிகம். பித்தளை புஷ் சரியில்லை. அதில் ப்ரேஸிங் அசிங்கம். இன்னொன்று மெல்லீஸ். இன்னொன்று வெறும் இரும்பில்லை, ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல். ‘ஸார் ஒரு வலிய மெட்டலர்ஜிஸ்டாணு, கேட்டோ?’

‘டேய், ஒரு கத்திக்குப் போய் இவ்ளோ அலையணுமா? எதாவது குட்டியா பிரச்சினை இருந்தா, என் வர்க் ஷாப்பில் எல்லாத்தையும் சரி செஞ்சுக்கறேண்டா’ என்றால் கேட்கவேயில்லை. அவ்வளவு செய்நேர்த்தி, போங்கள். விரக்திவசப்பட்ட என்னை வாழ்க்கையின் விளிம்புக்கே தள்ளிவிட்டான் – விளிம்புக்கு அந்தப் பக்கம் இளித்துக்கொண்டே சாரு நிவேதிதா. ஆ! ஐயய்யோ!! பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. படுபீதி.

…இப்படியாகத்தானே சுமார் ஒரு லட்சம் கடைகளை வெற்றிகொண்டு வாகைசூடி சோகை வந்தபிறகு, என் செருப்பு முழுவதும் தேய்ந்துபோய் என் சொந்த ஜோட்டால் என் சொந்த வழுக்கை மரமண்டையில் அடித்துக்கொள்ளக்கூட முடியாத நிலை. இன்னமும் நடந்தால் என் காலே தேய்ந்து பின், இருக்கும் என் வாமன உயரமும் பங்கமாகிவிடும் எனப் பயமும்.

ஆகவே –  கண்டேன் கத்தியை எனக் கத்தி – அடுத்த கத்தியைக் கண்டதும் காதலாகிக் கசிந்து (பாவி, ஆறு மணி நேரமாகச் சிறுநீரைக் கூடக் கழிக்கவிடவில்லை, அயோக்கியன்!) அதனை எடுத்துக்கொண்டு, இதுதான், இது மட்டுமேதான் வேண்டும் என்று கிட்டத்தட்ட விசும்பி அழவே ஆரம்பித்துவிட்டேன்.

அவனுக்கு அதுவும் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குப் பேய் பிடித்துவிட்டதால், விட்டுவிட்டான். (நான் தான் அதற்குப் பணம் கொடுத்தேன்… ஏனெனில் பணம் கொடுக்கிற சமயத்தில் அவன் வெகு வசதியாக ‘ஸம்ஸாரித்துக்கொண்டு’ பக்ஷே இருக்காம் பாடில்யா என என்னவோ எழவு – ஓசியில் கத்தி கிடைக்கும் என ஊர்கோலம் வந்தால், என் தலையிலேயே கையை வைத்துவிட்டான், ராஸ்கல்!)

கீழே, அந்தப் பாடல் பெற்ற கத்தி. அதன் சரியான அளவு தெரிய, என் செல்லமான ரெய்ன்ஹொல்ட்ஸ் பேனாவை வைத்திருக்கிறேன். இன்புறவும்.

சொல்லுங்கள் – இதுவா ஆறு மணி நேர பாதயாத்திரைக்கு ‘வொர்த்?’

-0-0-0-0-0-

இவனுடன் அளவளாவல், என்னுடன் நான் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு தனித்துவத்துடன் உரையாடிக்கொள்வது போன்றே, ஒரு இன்பலாகிரியைத் தருவது.

இந்திய ஆன்மிக மரபுகளில் இருந்து (என் ஆறுயிர் நண்பர் ஜெயமோகன் அவர்கள், கருணையுடன், சிலுவையின் பெயரால் அருளிச் செய்த ஆறு தரிசனங்களுக்கு அப்பால் — ஏழாவதாக உருவாகி வரும் ஒன்று உட்பட), கென் வில்பர் (இவருடைய நண்பன், ஆனால் கெல் வில்பர் எனக்கு அவ்வளவாக ஒத்துவரமாட்டார், பாவம் அவர்; ஆனால்  பேராசானுக்கு வருவாரோ? ), வாத்தியாக இருப்பது எனும் சோகப் பைசாசம் என ஆனந்தமாக விரியும்.

சிரிக்கும் வெங்காயம் என, குழந்தைகளுக்கான ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்.

ஹ்ம்ம்ம். மன்னிக்கவும். இதற்கும் திராவிடச் சுயமரியாதைத் தன்மானச் சின்னத்துக்கும் தொடர்பில்லை.

இது வேறு.

இன்னொரு பெரிய ‘இந்தியக் கல்வி’ குறித்த புத்தகத்தை எழுதிக்கொண்டேஏஏஏஏஏ இருக்கிறான்.

ஆனால்… என்ன இருந்து என்ன பயன், இவனுக்குத் தமிழ் சுட்டுப்போட்டாலும் வராது. ஆகவே எஸ்ரா சாருநிவேதிதனாதிகள் போன்ற நகைத்தலுக்குரிய இன்னபிற ஜந்துக்களை, அவர்கள் தொடர்ந்து கற்பழிக்கும் மொழியிலேயே படிக்கும் பேற்றைப் பெறமுடியாத அபாக்கியவான்.

இவனுடைய மலப்புரம் பகுதி தரவாட் வீட்டின் வாசலில், வெண்முரசுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், ஒரு செவ்வல்லி கூட அற்ற சந்தனக் குழம்பு (ரசம்?) சேற்றுக்குளம்.

அரட்டையும் – அதுவும் அலுக்கும்போது அல்லது நினைத்தபோதெல்லாம் அதில் நீந்தியபின், துண்டைக் கட்டிக்கொண்டு (கவலைப் படாதீர்கள்; கோமணம் உள்ளொடுங்கி ஆங்கே பொசிந்துகொண்டிருக்கும்) நடுங்கியபடி சுடச்சுட தேனீர் வெள்ளம். பின்னர் ஆவேசமாக, அடுத்த சாயாவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு முன்னமேயே, பாரதத்தின் கல்வியை மேம்படுத்தியே ஆகவேண்டும் என அப்படியொரு வாக்குவாதம். ஜோஸஃப் குமரப்பா, தரம்பால், மாண்டிஸொரி நயீதலீம் பாபுஜி என விரியும் குருக்ஷேத்திரம்.

சரி.

அண்மையில் ‘உண்மையான கல்வி‘ எனவொரு தளம் ஆரம்பித்து  (இதன் ஒரு பங்குதார நிறுவனம் ஸித்  – இது  ஹிமாலயப் பிராந்தியங்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துக்காகப் பல ஆண்டுகளாக உழைத்துக்கொண்டிருக்கும் நிறுவனம்; இதுவும் ஸ்ரீ தரம்பால் அவர்களின் ஆசியுடன் தொடங்கப்பட்டவொன்று) அதன் வழியாகத் தொடர்ந்து புத்தகங்களை வெளியிடப் போகிறேன் எனப் பயமுறுத்துகிறான். பிற பணிமனை கிணிமனை உள்ளிட்ட பலப்பல விஷயங்களையும் செய்யப்போவதாக அறைகூவுகிறான்.

இப்படியெல்லாம் அவனவன் புற்றீசல் போல, கல்வியை உருப்படவைத்தே தீருவேன் எனக் கிளம்பினால், எஸ் ராமகிருஷ்ணனுக்குச் ‘சபாஷ்! சரியான போட்டி!!’யாக பலர் வந்துவிடுவார்களோ?

அருணுடைய – நேரடியான கல்விச் சிந்தனைகள் தொடர்பான முதல் புத்தகம், உயர்தரமான அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இது.

இதனைத் தரவிரக்கம் செய்து (இது எளிது – ஆனால் இது சிறு அறிமுகப் புத்தகம் தான்; ஆகவே படிக்கவும் / படிக்கலாம்) காலட்சேபம் செய்யவும்.

நீங்கள் படிக்கவும் படித்து, அதனைப் பிடித்தும் இருந்தால் – அதன் காகிதக்கூழ் வடிவத்தையும் வாங்கலாம் அல்லவா?

நன்றி.

ஏழரைகளுக்கு ஒரு விண்ணப்பம்: உங்களில் எந்த ஒரு அரையாவது, அல்லது அப்படி வேறு யாராவது தப்பித் தவறி அவன் தளத்திற்குச் சென்றால் – அவனைப் பற்றி உண்மையாக நான் எழுதியிருப்பதைச் சொல்லிவிடாதீர்கள். இன்னொரு முறை ‘கத்தியின் மேல் நடப்பதற்கு’ எனக்குத் தெம்பில்லை.

7 Responses to “அருண் எலஸேரி: ‘கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது’”

 1. SB Says:

  Sir,
  Thanks for the above article.
  If not a presumptuous suggestion, please check whether we can have an e-book in Kindle for above .Easy to download and read and price also is ok(Rs.180).
  This book is the very need of the hour. Students are under tremendous stress and home-schooling concept has been gaining momentum .Many congrats to Mr.Arun Elassery to have this carried out somehow with unbounded enthusiasm and penchant for perfection.

  SV’s –
  “Take up one idea. Make that one idea your life; dream of it; think of it; live on that idea. Let the brain, the body, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success, and this is the way great spiritual giants are produced.”

  FYI, ES RA started his own youtube channel ( Deshanthri) as like Mr.Manushya puthiran and educating Tamil Masses is a corollary of book sales of Author’s own books. We all of us have to pick up such ideas (including Mr.Arun) to get our logical goals achieved.

  Will check for the book duly .FYI ‘Learing how to learn’ (Barbara Oakley) is seen at Kindle and title is more or less simular.

  God bless Mr.Arun (an erudite scholar/educator ) and all involved in Asli Shiksha and SIDH . Their works will be the boon for the society, no doubt.

  Regards
  SB


  • Thanks SB, but this ‘learning how to learn’ is a beaten-to-death concept. What Arun is talking about it derived mostly from Sri Aurobindo’s concepts of Integral Education.

   On to yesraw heehaw – I hope the youtube channel of the critter would be more exciting and humorous compared to his, what, what passes for posts and creative-outpourings on his godforsaken blog. Thanks for warning me though!

   __r. :-(


 2. Thank you for this introduction. The Professor’s views and approach, grounded on Indian ethos, are interesting. The question, ‘What good is an educational system that aims to filter most of the children’ is a sledge hammer blow to our muddled heads, err, my head. I promise to buy the book and read through. Kudos to the Professor and you, especially, for putting this effort to the notice of ordinary laukikas like me.


 3. Sir, thanks. Please do.

  But Arun is merely a graduate, just like yours truly. Whereas, that other Arunn is a Prof. Both, lovely chaps. So.

  Also, I too belong to that famed muddle-class and an extremist laukika at that. Life, I celebrate thee!

  Best:

  __r.

 4. somu Says:

  உங்கள் Torture-யும் தாண்டி :-) இந்த தளத்தில் ஒவ்வொரு post-ஐயும் வந்து பார்ப்பதற்கு காரணம் நீங்கள் அறிமுகப்படுத்தும் நல்ல அறிவான மனிதர்களை பற்றி தெரிந்து கொள்வதும், உங்கள் தளத்தில் post-ல் நீங்கள் கொடுக்கும் links-ம் தான். நன்றி அண்ணா.


  • யோவ், நண்ரீ.

   இத்தயெல்லான் டார்ச்சண்ற. போய் எஸ்ரா சாரு படீ, அப்ப தெர்யும் என்னோட மவ்ஸ் ;-)

 5. Swami Says:

  இன்னொரு அருமையான பதிவு

  உங்களை (அருண், ராம்) போன்றவர்களின் செயலூக்கம் கண்டு பாரதத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வலுப்பெறுகிறது


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s