தயிர்க்காரப் பெண்ணும் கும்மாங்குத்தும்: அடப் பாவிகளா!
November 24, 2018
…வ்வ்வோத்தா டாய்!
இன்னாடா இப்டீ வொளற்றீங்கோ, கஸ்மாலங்களா! உர்ப்ட்வீங்களாடா நீங்க? தமிள ஒள்ச்சீங்க, சர்ரி, ஆனாக்க கொரியா நரியான்னிட்டு எங்கிட்டோ போய் நட் கள்ண்டிக்கினு மொளிபெயர்த்து கவிதயவே நட்டுக்க வெச்டீங்களேடா!
படுகேவ்லமாகீதேடா! இத்த எங்க சொல்லீ எங்கேடா போய் முட்டிக்கினு அள்வற்து? பேமானீங்க்ளா!
தமிள ஒள்ச்சீங்க, அத்து நம் டாய்மொளி சொம்மொளி, அத்தொட்டு பர்வால்லன்னாக்க, ஏண்டா இப்டீ ஊரான் மொளிய ரேப் பண்றீங்க? அந்த கொரியா கவிஞ்சி இன்னாடா பாவ்ம் பண்ணிச்சி, திராபை சல்பேட்டாங்களா…
எஸ் ராமகிருஷ்ணன், சமயவேல் (Timely spear or Religious spear or Equally spear அல்லது மதத் திமிங்கிலம்) அவர்கள் பெயர்த்த கவிதையை மிகுந்த புளகாங்கிதத்துடன் வெளியிட்டிருக்கிறார். (ஆனால் இதைப் படிக்காதீர்கள், மூளை கனன்று கழன்று விடும், பார்த்துக்கொள்ளுங்கள்! மேலும், இந்தப் பெயர்ப்பில் ஸஸ்பென்ஸ் விஷயங்கள் இருக்கின்றன, ஆகவே!)
ஆம். சமயவேல் சேவை, கொரியாவுக்குத் தேவை!
ஆனால் நமக்கு?
மேற்கண்ட பெயர்ப்பின் ஆங்கிலமூலம் (முழுமூலம் கொரியமொழியில்) – இதனை உங்கள் சரிபார்த்தலுக்காக, குறிப்புகளின் முழுமைக்காகக் கொடுக்கிறேன். ஆனால், படிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இதில் நகைச்சுவை இல்லை, சரியா?
இதுவரை எஸ்ரா மட்டும் தன்னந்தனியே தனித்துவமாக சகட்டுமேனிக்கும் அட்ச்சிவுட்டு ஜென் டர்புர் என உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார்; கண்டமேனிக்கும் மொழிகளை (தமிழ் உட்பட) பெயர்த்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என அவருடைய சிலபல வாசகக் குஞ்சாமணிகள் கருத்துத் தெரிவித்திருக்கலாமோ என்ன எழவோ, பாவிகள்!
ஆக – இப்போது தன்னோடுகூட அவருடைய அளவுக்குத் தகுதியும் ஆகிருதியும் பெற்ற சான்றோர் நண்பர்கள் குழாமைக் கூட்டிக்கொண்டு நம்மை ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறார். என்ன செய்வது சொல்லுங்கள்… அடுத்த கூட்டணி யுவகிருஷ்ணாவுடனோ என்ன எழவோ. பீதியாகவே இருக்கிறது.
:-(
இதைக் கேட்பாரே இல்லையா? பாவி தமிழ் இலக்கியக்குண்டு செங்குண்டர்கள், இப்படி கும்பல் சேர்த்திக்கொண்டு நம்மேல் அணுகுண்டுகளைப் பொழிகிறார்களே!
‘ we make him couple blissfully with a buttery woman’ என்பதை – ‘ நாம் அவரை ஒரு தயிர்க்காரப் பெண்ணுடன் ஆனந்தத்துடன் இணைய விடுகிறோம்’ என்றும்.
‘We build a house on a cliff overlooking a blue river’ என்பதை – ‘ஒரு நீல நதியைப் பார்த்தவாறு ஒரு மலைச்சிகரத்தில் ஒரு வீடு கட்ட’ என்றும்.
‘… divide them up into numerous pouches என்பதை – ‘அவற்றை எண்ண முடியாத பைகளில் பகிர்ந்து’ என்றும்.
‘cut off his nose and swallow it down with water’ என்பதை – ‘ அவரது மூக்கை வெட்டினோம் மற்றும் அதைத் தண்ணீரில் நனைத்து விழுங்கினோம்’ எனவும்.
‘We pummel him’ என்பதை – ‘ நாங்கள் அவரை கும்மாங்குத்து குத்தினோம்’ என்றும்…
…இப்படியே… … … முடிவே இல்லாத உளறல் பெயர்ப்பு மஹாத்மியம்… தமிழ்க்குத்து டப்பாங்குத்து. தமிழ்கும்மா செங்கும்மா.
ஆ!
சமயவேலின் தமிழும் அந்தோ பரிதாபம், என் மூஞ்சியைப் போல. ஆங்கில அறிவோ, அதற்கும் மேல் ஆகாத்தியம் கொண்டு என்னுடையதைப் போல இருக்கிறது… ஆனால் பின்னதை – இந்த வெள்ளைக்காரக் காலனியச் சனியன்களுக்கு, வ்வோத்தா, இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என விட்டுவிடலாம்.
எது எப்படியோ! இப்படிப்பட்ட ஒரு மஹோன்னத மசுரை இதுவரை நான் இந்தப் பூமியில் யாங்கணுமே கண்டதில்லை! என்ன தவம் செய்தனை யதோசா மசால்தோசா.
இந்த வடிகட்டிய சோம்பேறிகளுக்கு என்ன உதாசீனம்? என்ன அரைகுறைத்தனம்?? எந்த மசுரை எழுதினாலும் ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்க்கவேண்டாமா? தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டாமா? கவிதை பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளவேண்டாமா? மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம், அதை இப்படியா செய்வார்கள்? உழைப்பு என்றால் கிலோ எவ்வளவு விலை எனக் கேட்பார்கள் போலிருக்கிறதே!
அற்பர்கள்.
கவிதை பற்றியே ஒரு மசுரும் தெரியவில்லை, இதில் பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு பாவனை ஒரு கேடு.
-0-0-0-0-0-0-
ஒரு குப்பை மொழிபெயர்ப்பைச் செய்ய, சரியாகச் சமைக்கத் தெரியாத ஒரு சமயவேல் குப்பைமேனியார். தகுதியற்ற, தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் திறமையுமற்ற நபர். அழகுணர்ச்சியிலார், அழகுணர்ச்சி ஈதென்ற விஷயமும் அறிகிலார்.
அந்த பெயர்ப்பு அசிங்கத்தைப் புளகாங்கிதத்துடன் ஒரு மசுரும் தெரியாமல் பிரமித்துப் பிரசுரிக்க ஒரு எஸ்ரா எனும் மகாமகோ அலக்கிய சகஅரைகுறை. ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லாமல் டால்ஸ்டாய் கார்க்கி சார்லிசாப்ளின் என வாய்க்குவந்தாற்போல ஏகத்துக்கும் உளறிக்கொட்டிக்கொண்டு.
போதாத குறைக்கு, இந்த அரைகுறைக் கொள்கைக் கூட்டணியில் ஐக்கியமாக — இந்த நெகிழ்வாலஜிக் குப்பைகளைப் படித்து ‘வாசிப்பனுபவம்’ பெற்றுப் புளகாங்கிதம் அடையக் காத்திருக்கும் கோவேறுகழுதை வாசகக் குஞ்சாமணிக் கூவான் கோமகன்கள்!
ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
இப்படியே போனால், ‘மக்கள்சேவை செய்து விருது பெற்ற’ டிஎம் கிருஷ்ணாவுக்குப் பிறகு எஸ்ரா+சமயவேல் கூட்டணியினர் மக்ஸய்ஸாய் விருதையும் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் போல! (காரணம்: தமிழர்களை ஏகோபித்துத் தற்கொலை செய்யவைத்து, அதன்மூலமாக தமிழகத்தின் மக்கள்தொகையைக் குறைத்த நற்செயலுக்காக, நன்றி!)
இவர்கள் கொரியக் கவிதையை நமக்குக் கொறிக்கக் கொடுக்கவில்லை என யார் அழுதார்கள்?
அப்படியே யாராவது, ங்ஙொம்மாள, தப்பித் தவறி அழுதிருந்தாலும் – அது என்ன கவிதை, அதன் பாடுபொருள் என்ன, புத்தருக்கும் அக்கவிதையில் சொல்லப்பட்ட/கோடிகாட்டப்பட்ட நிகழ்வுகளுக்கும் உள்ள பின்புலம் என்ன, கொரிய பௌத்தத்தின் கூறுகள் யாவை, அதன் பாரம்பரியம் என்ன, இந்தக் கவிதாயினி (அவரை ஒரு கவிதாயினி என ஒப்புக்கொள்ள முடியுமானால்) ஏன் இதனை எழுதினார், மூலகவிதையின் சொற்கட்டு எப்படி, ஊடுமொழியின் சொற்கட்டு எப்படிக் கவிதையை மாற்றும், மூலத்தில் உள்ள படிமங்கள் என்ன, அவற்றைத் தமிழ்ப் படுத்தி எடுக்கமுடியுமா… … … என்றெல்லாம் ஒரு மசுத்துக்கும் தெரிந்துகொள்ளாமல் ஆய்ந்தறியாமல் இப்படியா பட்டர் சிக்கன் பன்னீர் பட்டர் மசாலா தயிர் லஸ்ஸீ தயிர் வடை தேசிகன் என்றெல்லாம் பெயர்ப்பது?
இப்படியெல்லாமா பெயர்த்து – ஒரு கொரிய அறிமுக எழவைச் செய்வது? இதெல்லாம் எந்த மசுத்துக்குச் ‘சேவை?’
ஆனால், பெயர்ப்பார்கள் பாவிகள். ஏனெனில் வெட்கங்கெட்ட அரைகுறைகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஏதாவது உலக உளறலை லோக்கல் உளறலாக ரசவாதம் செய்துகொண்டால் போதும். அதாவது:
ஸாம்ஸங் (எலக்ட்ரானிக்ஸ்) = ஸாம் பாடினார் (தேர்தலியல்)
எல்ஜி = பெருங்காயம்
ஹண்டே = ஹண் தினம்
போஸ்கோ (ஹோல்டிங்க்ஸ்) = புகைப்படம் எடுக்க வசதியாகச் செல் (தூக்கிக்கொண்டவைகள்)
கியா (மோட்டார்ஸ்) = சாவிஆம் (மின்சுற்று விசைப்பொறிகள்)
…இப்படியே காலட்சேபம் செய்துகொண்டிருப்பார்கள், கெரகங்கள்…
இந்த அழகில் இந்தக் கவிதையெழவை ‘தென் கொரிய மூலம்: Kim Hyesoon’ எனக் குறிப்பிடுகிறார் சமயவேல்! அதாவது வடகொரிய மொழிக்கும் தென்கொரிய மொழிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளதைப் போல ஒரு மேதாவிக் கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்! பிரச்சினை என்னவென்றால் கொரியமொழி என ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் வடக்குக்கும் தெற்குக்கும் – உச்சரிப்புகள் கொஞ்சம் வேறுபடுகின்றன; மேலும் தென்கொரியாவில் திசைச்சொற்கள் புழக்கம் அதிகம். அவ்ளோதான்.
பிரமிப்பாக இருக்கிறது.
-0-0-0-0-
இந்தப் பெயர்ப்பாளச் சமயவேல் – பாவம், இவரை சுமார் 30 வருடங்கள் முன் பார்த்திருக்கிறேன். அப்போது, ஒரு மலங்குமலங்கேஸ்வர இளைஞனாக, வெட்கம் மிகுந்தவராக, இலக்கிய பாவனைகளுடன் இருந்தார். பின் பாவப்பட்ட அவர், சுத்தமாக வளரவேயில்லை போலும்! ஆனால் அதில் என்ன பிரச்சினை? நானும்தான் வளரவில்லை – ஆனால் சர்வ நிச்சயமாக நான் எழுத்தாளம் எனத் தப்புத்தாளம் போட்டுக்கொண்டு கண்சொருகி தாடிவுட்டுக்கினு அலையவில்லை. தமிழ்புரோட்டா செம்பரோட்டாவை தமிழ்க்குருமா செங்குருமாவுடன் சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறவில்லை.
என்ன மசுர்!
படுகேவலமாக இருக்கிறது, நம் தமிழின் நிலைமை.
பிற ‘திராவிட’ மொழிக் குடும்ப உறவினர்களுக்குச் சொல்லியனுப்பிவிட வேண்டியதுதான்.
கருமாந்திரம் பண்ண எஸ்ரா வழக்கம்போலவே ரெடி; கூடவே ஒத்தாசைக்கு, தமிழ்ப்பிணம் செம்பிணத்தின் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த எடுபிடியாக சமயவேலும் சமயத்தில் வந்து சேர்ந்தார்.
கொளுத்துங்கடா கவிதய! பொஸ்க்குங்கடா தமிழ, பன்னாடைங்களா…
நன்றி. :-(
—
November 24, 2018 at 13:07
jemo sutru mudinthu sra sutru? when will charu’s turn come???????
November 24, 2018 at 15:21
ஐயா, பொறுத்தார் பூமி ஆள்வார். நம் பிதாகமர்கள் இருக்கும் வரையில் கேளிக்கைக்குப் பஞ்சமேயில்லை. கவலை வேண்டேல்…
November 24, 2018 at 22:47
Sir
Taking people for granted is the easiest thing for these authors/translators .
https://www.jeyamohan.in/114863#.W_mUPtszbIU
Arriving at subjective judgement is another facade .
What is ironic is that these Authors not wanting to hear from their audience categorically (they want only one-to-one communication to ‘ manage’ the matter) and finest example is their PROHIBITING readers to give their comments ( good or bad) in the same page of articles ..Mr.Jeymo used to have that but had that proscribed .Mr.EsRa hasn’t given such provision to know of the real feedback of their readers. Why did they bar readers to post their comments in their pages ? That states it all !
They are not as bold as they felt themselves to be. This is another challenge (first one making a gist of Vishnupuram) for Jeymo bhakts …to get their Guru to open up posting of comments in the same articles of his .
Mr.EsRa’s idea is to cash in on ‘ Rajni’s Muthu euphoria in Japan …2nd edition in 3d being worked out …by bringing JAPAN/KOREA into the fold and only he knows what’s at stake for him ( as a dialogue writer for cinemas).
It is awful that ‘buttery woman’ was translated as ‘curd-seller’ and it proves that Mr.Es Ra also not knowing the basics of English language ..nor have got the heart and soul of the poem.
Thanks
Regards
SB
November 25, 2018 at 05:02
Sir, it was Samayavel who ‘translated’ the farce. YesRaw HeeHaw was only a kind, benevolent host.
Having said that, I would say what Jeyamohan is saying in that article is more or less a sad truth. (again exceptions are there – I have had many interesting interactions with college students, but then, I never indulge in intellectual faffing or literature and the like – mine are not in the realm of social ‘sciences’ and stuff at all)
Also – I would understand Jeyamohan, when he does not want to allow feedback on his posts – as comments. I know from personal experience that, this could get really enervating because, many guys do not understand the value of democracy. Instead of writing on the wall, they piss on the wall.
Many guys do not want to have any informed opinion and instead go for borrowed/useless opinions that they repeat without tiring. (there was a gent here by name Poovannan Ganapathy who was a stellar example; he was polite but completely nonsensical)
Frankly, I feel that there should not be free speech. It should be taxed.
So much for early morn febrile thoughts.
Each unto his own and YMMV. What else.
November 28, 2018 at 07:38
பள்ளியில் படிக்கும்போது ஆர்வக்கோளாறில் ‘ரேடியோ ரிப்பேர் செய்வது
எப்படி’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.
அதில் ‘In Nutshell’ ‘ என்பதை ‘கொட்டையளவு’ என்று எழுதியிருந்தார். அருகில் ஆங்கில
வார்த்தையும் இல்லாமல் இது எனக்குப் புரிய பல வருடங்களானது.
இதையெல்லாம் தொகுத்து ஒரு காமெடி டிக்ஷனரி போடவேண்டும்.
November 28, 2018 at 08:45
யோவ் கண்ணன்!
என் தவறு, காப்பி குடித்துக்க்கொண்டே உங்கள் கொட்டைப் பின்னூட்டத்தைப் படித்திருக்கக்கூடாது!
இப்போதுதான் ஒருவழியாக கணிநித் திரையை, உங்களைத் திட்டிக்கொண்டே துடைத்துமுடித்தேன்.
கோபத்துடன்,
ரா.
டிக்ஷனரரி என எழுதுகிறீர்கள், ஆண்குறிஒதுக்ககம் என அழகாக முழிபெயர்த்தால் என்னவாம்?
November 28, 2018 at 10:10
glad to know that you’ve enjoyed it, In those days that word never failed to evoke a laughter in the back bench :)
November 28, 2018 at 10:19
Sir, I am a permanent backbencher.
Thanks for your camaraderie. :-)
December 14, 2018 at 13:11
That was a terrible Tamil translation beyond doubt. What a shame!
December 14, 2018 at 16:09
அம்மணி, என்ன செய்வது சொல்லுங்கள்?
:-)
2019 ஸாஹித்ய விருது சமயவேலின் மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைக்க சாத்தியக்கூறு இருக்கிறது.
ஏதாவது முக்காடு வாடகைக்குக் கிடைக்குமா? உதவுவீர்களா??
கழிவிரக்கத்துடன்,
ரா. :-(
December 15, 2018 at 19:52
All in the game. Let us watch.