மூடுபனிக் காலைகள், கேரள வயநாடுப் பகுதி அழகு, பரிந்துரை & ஐடி வெத்துவேட்டுகள் + பெற்றோரியல்(!) அட்ராஸிட்டிஸ்…
November 15, 2022
பொதுவாகவே, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ‘லோ பட்ஜெட்’ ரீதியில் விஸ்தாரமாக ஊர்சுற்றுவேனே தவிர எனக்கு ரெஸார்ட் கிஸார்ட் மொஸார்ட் எனவெல்லாம் ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காகச் சென்ற/செல்கிற பழக்கம் இல்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் தகவல்தொழில் நுட்பம் என ஓட்டிக்கொண்டிருந்தபோதும், ஆஃப்ஸைட் என்றெல்லாம் கண்டகண்ட ரெஸார்ட்களுக்குக் கூட்டிச்சென்று மதுவிலும் வெட்டியரட்டையிலும் ஈடுபடவைக்கும் ஆபாசக் கலாச்சாரத்துடன் எனக்குப் பெரும் பிணக்கு வேறு. (ஒரேயொரு தடவை இந்த உதிரி-உல்லாசக் கேளிக்கைக்குச் சென்று, குடிகாரர்களுடன் ஏறத்தாழ அடிவுதையில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது)
நமது ஐடி ப்ரொக்ராமர் தண்டங்கள், பொதுவாகவே ஓஸி விஷயங்களுக்கு ஆலாகப் பறப்பவர்கள், அலைபவர்கள்; இதற்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலோருக்குக் கொடுக்கப்படும் சம்பளமே ஓஸிதான். தொழிலறமற்ற சோம்பேறி பெஞ்ச்தேய்ச்சி அரைகுறை தடியன்களும் தடிச்சிகளும் சூழ் உலகமது…
இவர்களுக்கு எப்பப் பார்த்தாலும் ஓஸி டீஷர்ட், ஓஸி முதுகுப்பை, ஓஸி தீனிப் பொட்டலங்கள், ஓஸி சாப்பாடு, ஓஸி காப்பி, ஓஸி மெடிக்கல் செக்கப், ஓஸி உடற்பயிற்சியெழவு, ஓஸி குண்டிகழுவல்… எனத் தொடரும் சோகத்தில் அவர்கள் ‘வொண்டர்ஃபுல் விஸார்ட்ஸ் ஆஃப் ஓஸி‘ எனவே தங்களை நம்பிக் கொண்டு விடுவார்கள்…
+ ரெண்டு ஸ்பூன் ஒஸி சாராயம் உள்ளே போனதும் ஏதோவொரு ஓஸி லைஸென்ஸ் வாங்கியது போல ஆபாசமான, சுளிக்கவைக்கும் (எனக்கே!) பேச்சு, உளறல் என அதி சராசரித்தனத்திலும் வக்கிரத்திலும் இவர்கள் இறங்கி விடுவார்கள்.
கேளிக்கை என்றால் இந்தப் பொறுக்கிகளுக்கு, ஊரான் செலவில் குடிப்பதும் கண்டதையும் ‘காணாததைக் கண்டதுபோல்’ பரக்காவெட்டித் தனமாக உண்பதும்தான். இதற்கு தூபம் போடும் வகையில் ஐடி நிறுவன முதலாளி/மேலாண்மைக் கேனையர்களும் நடந்து கொள்வார்கள்… கேட்டால் “ஹேப்பினெஸ் முக்கியண்டே” + “எம்ப்ளாயீஸ் ஸேடிஸ்ஃபேக்ஷன்” + ‘டீம் பில்டிங்’ + ‘கும்பெனி கலாச்சாரத்தை(!) வளர்ப்பது’ … … கூறுகெட்ட ப்ளடி பேஸ்கெட்ஸ். இப்படியா பாத்திரமறியாமல் பிச்சை போடுவார்கள், இந்தத் தண்டங்கள்?
நிலைமை இப்படி இருக்கையிலே…
…என் (சொந்த) பிள்ளைகள் – “எல்லோரும் எங்கெங்கோ போகிறார்கள்… நாங்கள் மட்டும்… …” எனப் பிலாக்கணம் வைத்தபோது (+முக்கியமாக மகள் தனக்குப் பிடித்த துறையில், கல்வியகத்தில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாள் – “இதற்குப் பின் கூடுவிட்டுப் பறந்து விடுவேன், நாமெல்லாரும் சேர்ந்து எங்காவது போகலாம்…”) எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் எங்கள் குழந்தை வளர்ப்பு தத்துப்பித்துவத்தின் அடிப்படை என்பது முடிந்தவரை எங்கள் குழந்தைகளை, பெற்றோர்களைப் பொறுத்தவரை மிகக் குறைந்த எதிர்பார்ப்புகள் கொண்டவர்களாக, வெற்றிகரமாகவே மூளைச் சலவை பண்ணியது… (என நினைத்துக் கொண்டிருக்கையிலே…)
அதாவது வெளியில் போய்விட்டு ரெண்டு உருளைக்கிழங்கு போண்டா வாங்கி வந்தாலே போதும்… இறும்பூது திக்குமுக்காடலில் அவர்கள் ஜன்மம் சாபல்யமாகிவிடும் எனும் நிலைமையில் அவர்களை வெற்றிகரமாக அடக்கி வைத்திருந்தோம்…
புதிய பாடா/பேரகன் ஹவாய் செருப்பு வாங்கிக் கொடுத்தாலே, அல்லது பிறர் அணிந்து களைந்த ஹேண்ட்-மீ-டவ்ன்/ஸெகண்ட்-ஹேண்ட் துணிமணிகளாக இல்லாமல் ஏதாவது ‘திருப்பூர் ஸேல்’ டீஷர்ட் ‘புதிதாக’ தொளதொளாவென வாங்கிக் கொடுத்தாலே அவர்கள் அகமகிழ்ந்து விட்டு எங்களை நன்றிக் கடனுடன் பார்க்கவே அவர்களைப் பழக்கியிருந்தோம். காலம்காலமாக வெளிமனிதர்களைப் பார்க்கச் செல்வதோ, ‘பார்ட்டி’களுக்குப் போவதோ இல்லை. முடிந்தவரை திருமணங்களுக்குச் செல்வதேயில்லை…
(ஆனாலும் டீவி, வெட்டி விடியோ கேம்ஸ், சோம்பேறிக் கிரிக்கெட், இணையம்மேய்தல் என அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவழிக்கவில்லை – ஆனால் நீச்சல், கால்பந்து, மலையேற்றம், ஊர் சுற்றல், புத்தகங்களை வாசித்துத் தள்ளல், விதம்விதமாகப் புதிரவிழ்த்தல், அவரவருக்குப் பிடித்த துறைகளில் ஈடுபடுதல் என நிறையச் செய்திருக்கிறார்கள்; நல்லவேளை!)
பிரச்சினை என்னவென்றால், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் – வீட்டுப் பள்ளிக் கல்வி என்ற இடத்திலிருந்து பள்ளிக் கல்வி என்கிற இடத்திற்கு அவர்கள் ஒருமாதிரி, காலத்தின் கோலத்தால் நகர்ந்திருந்தார்கள்… பிற பிள்ளைகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், பாவிகள். என்ன செய்ய.
ஆனாலும் அவர்கள் ரீபொக் ஹைடிஸைன் லீவைஸ் மல்ட்டிப்லெக்ஸ் படம் போகலாம், மாலில் தெருப்பொறுக்கலாம், பெரிய்ய ஹோட்டல் போகலாம், விமானத்தில் பறக்கலாம் எனக் கேட்கவில்லை என்பதும் ஆசுவாசம் தரும் விஷயம்தான்… நல்லவேளை.
-0-0-0-0-
சரி. மனமகிழ் மன்ற ரெஸார்ட் விஷயத்துக்கு வரலாம்…
என் பிள்ளைகளே இப்படி ‘எங்காவது குடும்பத்தோடு போகலாமே’ எனச் சொன்னவுடன் என் பதில் என்பது, “டேய் பஸ்ங்க்ளா, இது வரிக்கும் நாம எல்லாமே குடும்பமாதாண்டே செஞ்சிருக்கோம்… எவ்ளோ ஊர் சுத்தியிருக்கோம், இப்ப என்ன புத்ஸா ‘குடும்பத்தோட செய்லாம்’னு கதெக்கறீங்க…” எனத் தடாலடியாக இருந்ததிலிருந்து, எறும்பூரக் கல்லும் தேய்ந்து ஒருமாதிரி, “சரி, ஏதாவது பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பாக்கெட்டுக்குத் தோதுப்பட்டா பாக்கலாம்…” என ஈனஸ்வர முனகலில், ஒருவிதமான லாஸ்ட் ரெஸார்ட்டாக முடிந்தது…
…நண்பர்கள் தோதாகக் கிடைத்தார்கள், பாவம். மிக மூத்த ஏழரைகள் அவர்கள். நல்ல நகைச்சுவையுணர்ச்சியும் அடிப்படை நேர்மையும் உடையவர்கள் எனப் பட்டது.
“நாங்கள் கேரள வயநாட்டில் ஒரு ரெஸார்ட் வைத்திருக்கிறோம், வருகிறாயா ரெண்டு நாள்? போகிற வழியில் ஏற்றிக் கொள்கிறோம்…”
பிரச்சினை என்னவென்றால். என்னுடைய ரெஸார்ட் ஓனர் ஸ்டீரியோ டைப்பில் அவர்கள் இல்லை – அவர்கள் வெள்ளையுடுப்பு + தடிமன் தேர்வடத் தங்க செய்ன் போட்டிருக்கவில்லை + கட்சிக்கறை வேட்டி கட்டி ‘ரிலாக்ஸ் பண்ணிட்டு ட்ரிங்க்ஸ் சாப்டுக்கலாம்’ வகையாக இல்லை. மதிப்பான தொழில்களில்/துறைகளில் இருக்கிறார்கள். இவர்கள் போய் எப்படி… எனக் கேள்வி என்னில் இருந்தது; மேலும், அவர்களுடைய பயணத்தையும் என்னுடைய சிடுக்கல்களையும் ஒருங்கிணைப்பு செய்ய முடியவில்லை. ஆகவே நான் போகவில்லை.
…சில மாதங்கள் கழித்துத் தோன்றியது – “அங்கே போனால் என்ன?”
சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு இந்த ரெஸார்ட்டுக்குச் சென்றோம் – அதாவது, வழக்கம்போலவே ‘குடும்பமாக’ப் போனோம் எனவொரு பிரமை, முன்னேபின்னே இருந்திருக்கலாம். என் எதிர்பார்ப்புகளுக்கு (~anti brahminism, thanks to your friend, Sri Bleddy YesRaw) மேலே அது இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அப்போது கொஞ்சம் கட்டுமானங்கள் நடந்து கொண்டிருந்தன என நினைவு. இருந்தாலும் சுத்தம், அமைதி, பாதுகாப்பு, அருமையான ருசி மிக்க, சுடச்சுட நல்ல ‘மலையாள டைப் உணவு’ (நாங்கள் சாகபட்சிணிகள்; தேவைப்பட்டால், வைணவ (அதாவது, அசைவ) உணவு சமைத்துக் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் – ஆனால் சுத்தமான பாத்திரங்கள் இருந்தன, தனித்தனியாகச் சமைத்திருப்பார்கள் எனவும். எப்படியும் நாங்கள் சென்றிருந்தபோது வேறு எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என்பது, என் இப்போதைய அனுமானங்களுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்).
அங்கிருக்கும் உதவியாளர்கள் – பொதுவாகவே இளைஞர்கள், சூட்டிகையானவர்களும் திறமை கொண்டவர்களுமாக இருந்தார்கள். அதாவது, கொப்பரை என்றால் எண்ணையென இருந்தார்கள். ஓஓ! க்ஷமிக்கண்டே. வெளிச்செண்ணெய், கேட்டோ?
ஸெல்ஃபோன்கள் வேலை செய்தன (ஏர்டெல், பிஎஸ்என்எல்) – இன்டர்நெட் கங்கையும் அங்கு நொப்பும் நுரையுமாகப் பிரவகித்துக் கொண்டிருப்பாள் என நினைக்கிறேன்.
அறைகளில் டீவி இருந்தாற்போல நினைவு – ஆனால் நாங்கள் எதிர்-டீவிகாரர்கள். தேவைக்காக ஒரு ஜென்ஸெட்டும் இருந்தது + ஒரு காற்றாடி மின் உருவாக்கி கோபுரமும் இருந்தாற்போல நினைவு.
மூடுபனிக்காலைகள் அகம், அழகான, மரகதவிரிப்புப் பிரதேசத்தில் இருக்கிறது. ரெஸார்ட் பின்னால் ஒரு பெரிய ஏரி. எங்கும் எதிலும் பசுமை. ஆழ்ந்த அமைதி. கொஞ்சம் பக்ஷிஜாலம். அழகான குடில்கள். குளிருக்கேற்ற வெடவெடப்பு. கதகதப்புக்குக் கதகதப்பு. ஒவ்வொரு குடிலிலும் சுத்தமான, காத்திரமான அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப் பட்ட நடைபாதைகள், உண்ணுமிடம், அன்புடன் பரிமாறப்படும் உணவு++.
(ஆனால், குடில்கள் இருந்தாலும் குடி இல்லை என நினைக்கிறேன் – இது தவறாக இருக்கலாம்; அவனவன் நேர்மையாக உழைத்துப் பெற்ற பணத்தில், பிறருக்குத் தொந்திரவு செய்யாமல் ஊற்றிக் மொடாக்குடித்தால், உடல்கெட்டு ப்ளடி செத்தொழிந்தால் எனக்கென்ன, சொல்லுங்கள்?).
ஏதாவது மீட்டிங் கான்ஃபரன்ஸ் ‘ஆஃப் ஸைட்’ என நடத்தவும் பெரிய அறைகளும் தாழ்வாரங்களும் இருக்கின்றன. என் நினைவில், இவ்வளாகத்தில் தாராளமாக 30-35 பேர் சகல வசதிகளுடன் தங்கலாம் என இருந்தது… இப்போது இந்த எண்ணிக்கையானது, இதற்கு மேலேயேகூட இருக்கலாம்.
இந்த ரெஸார்ட்டைச் சுற்றி 30-40 கிமீ ஆரத்தில் பலப்பல விஷயங்கள் பார்க்க-கொள்ள/சுவைக்க என இருக்கின்றன. அதன் வலைத்தளத்தில் இவ்விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
மேலும் நடை பயில்வதற்கென சுற்றுவட்டாரத்தில் பலப்பல பாதைகள் இருக்கின்றன. எந்தப் பக்கம் சென்றாலும் நீர்த்தேக்கங்கள் – ஒருமாதிரி மழைக்கால சென்னை சாலைகளையும் குடியிருப்புகளையும் இவை நினைவு படுத்தி(எடுத்த)ன… ஆனால் குப்பைகூளங்களே ஏறத்தாழ இல்லை; ஆகவேயும் அது திராவிடப் பிரதேசமல்ல என்பது ஆசுவாசம் தந்ததுதான்.
…மூன்று இரவுகள் + நான்கு பகல்கள் அங்கு தங்கினோம் என நினைவு. ஆளாளுக்கு மூன்று புத்தகங்களையாவது படித்துக் கிழித்தோம் என நினைக்கிறேன்… எது எப்படியோ – அந்தச் சுற்றுலா அம்ரிதமாக இருந்தது என்றும்… கூடவே கிறக்கம்++ எனவும் நினைவு…
எப்படியாப்பட்ட இன்பலாகிரிக் கிறக்கம் என்றால், ஊருக்குத் திரும்பும் வழியின் படுப்படு படுமோசமான பகுதி (கிருஷ்ணகிரி -> திருவண்ணாமலை – நெடுங்குடுகுடு தடக்புடக் பயணப் பாதை) கூட அவ்வளவு மோசமான பகுதியாக இருந்ததாக உணர்ந்த நினைவில்லை… (சுமார் 20 வருடங்களாக இந்த சாலை அதே நிலையில் தான் இருந்தது – இப்போது எப்படி எனத் தெரியவில்லை)
இன்னமும் முக்கியமான விஷயம்: வீடு திரும்பியவுடன் என் மத்தியதர வர்க்கதர சொக்காய் ஜேபியை மறுபடியும் படுதீவிரமாகப் பரிசீலித்தேன். அதில் இருந்த ஒரே ஒட்டை மேலே மட்டும் இருந்தது.
ஆசுவாசம்.
-0-0-0-0-
https://www.mistymorningresorts.com/
தேவைப்பட்டவர்கள் இதனை உபயோகித்து அகமகிழவும். Strongly recommended; if one indeed does visit/stay there, one is likely to remember the wholesome experiences and is likely to visit it again – because the whole area abounds in pristine beauty… படு ஸீரியஸ்ஸாகத் தான் இதனை நான் சொல்கிறேன்.
(நான் இந்தப் பதிவை, ஒருமாதிரி விளம்பரமாக வெளியிடவில்லை; அதன் தமிழ் ஆர்வல, மெத்தப் படித்த, தொழில்முனைவோர் முதலாளிகளால் எனக்கு ஏறத்தாழ சல்லிக்காசு*க்குப் பிரயோஜனம் இல்லை; மாறாக வெறும் தொல்லைதான், ப்ளடி – வாட்ஸ்அப்பில் கண்டதை அனுப்பிச் சாவடித்து விடுகிறார்கள், இல்லையேல் குற்றம் சொல்லிக் குத்திக் காண்பிக்கிறார்கள். “நீ க் இட்டுவிட்டாய், அங்கு ஒற்றெழுத்து தேவையில்லை.” மற்றபடி கமுக்கமாகக் கிண்டல் செய்கிறார்கள், பாவிகள்… என்ன செய்ய, சொல்லுங்கள்.
ஆனால், ஒரு நல்ல இடத்தை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு, என்னுள் ரெஸார்ட்கள் குறித்து இருந்த அலட்சியப் போக்கை, துச்சமான மதிப்பை, மாற்றிக் கொள்ள வைத்ததற்கு இவர்களுக்கு நன்றி!)
* பொய் சொல்லக் கூடாது. ஒரு டீல் கொடுத்தார்கள். மகிழ்ச்சி. வீடு திரும்ப வண்டியில் ஏற முற்படும்போது, உதவியாள இளைஞர்கள், அங்கு காய்த்த ஒரு பெரிய பலாப்பழத்தை ஓஸியில் கொடுத்தார்கள், இரட்டிப்பு மகிழ்ச்சி.
-0-
-0-0-0-
November 15, 2022 at 17:03
Thanks Ram
November 16, 2022 at 07:08
1. சிலருக்குப் பொசுக்கென்று கோபம் வந்து விட்டிருக்கிறது. காரணம்: நான் தகவல் தொழில் நுட்பக் குளுவான்களின் ‘பசி’ + ஐடி நிறுவனங்களின் அசட்டுத்தனம் பற்றி எழுதியிருக்கிறேன்.
பதில்:
1.1 விதிவிலக்குகள் எனச் சொற்பமாக ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் அவை ஒன்றிரண்டு மட்டுமே. எனக்கும் இவர்களில் சிலரைத் தெரியும், சரியா? மேலும் நான் பலப்பல வருட சொந்த அனுபவங்களின் மீதாகத் தான் எழுதியிருக்கிறேன்; இன்னமும், இந்த நாள் வரைகூட இதேமாதிரித்தான் விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் அறிவேன். ரொம்பப் புலம்ப வேண்டாம் – ஏதோ நான் வந்துதான் உங்கள் ஐடி குளுவான்களின் கற்பை(!) அழித்து விட்டதாக, ப்ளடி.
1.2 நான் பலமுறை உங்கள் சிலரிடம் கதைத்த படி, நம் சராசரி இளைஞன் Angry Youngman என்பதிலிருந்து பொழுதன்னிக்கும் Hungry Youngman ஆக உருமாறிப் பலகாலம் ஆகிவிட்டது. எதை எடுத்தாலும் சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும், தொப்பை வளர்க்கவேண்டும்… துளிக்கூட தங்கள் உடல் மேல் அடிப்படை மரியாதை வைக்காத குண்டர்கள்… உடல் என்பது நம் வசமிருக்கும் மகத்தான கருவி/tool என்பதை அறியாதவர்கள். காலையில் எட்டுமணிக்குக் கூட படுக்கையை விட்டு எழமுடியாத ஜந்துக்கள், ஏழுமணிக்குக் பிரியாணி கடை திறக்கும் என்றால், ஆறரை மணிக்கே அங்கு வரிசையில் நிற்கிறார்கள்… இவர்களில் பலர் எப்படித்தான் யூரினல்களை உபயோகிக்கிறார்கள் எனத் தெரியவில்லை, எப்படியும் முதலில் துழாவித்துழாவித்தானே அவர்கள் வேற்றுமை உறுப்பு இன்னமும் தொப்பையால் நசுக்கப் படாமல் இருக்கிறதா என்றே தொட்டுணர முடியும்? பின்னர் அதை திசைபார்த்து நிலை நிறுத்த வேண்டிய வேலையெழவு வேறு… ரொம்ப வக்காலத்து வாங்காதீர்கள். சாலையோர அடையார் ஆனந்த் பவன்களின் மூத்திரக் குடுவைக் கழிப்பறைகளைப் பார்த்தால் தெரியும், எவ்வளவு வெளியே மட்டும் தெறித்திருக்கும் என்று… ப்ளடி
1.3 எனக்குத் தெரிந்து இரண்டு இடங்களில்தான் (தமிழகத்தைப் பொறுத்தவரை), பொதுமக்களிடமும் &// சிலபல சிந்தாந்தங்களிடமும் ஈடுபாடு உடைய Angry Youngmen என இருக்கிறார்கள். (பாஜக-ஆர்எஸ்எஸ், நாம்தமிழர்கட்சி) – இவற்றில் பின்னதில் உணர்ச்சிகரமைதுனர்கள் மிக அதிகம். முன்னதில் கடமையுணர்ச்சியும் கண்ணியமும் கட்டுப்பாடும் அதிகம்.
1.4 ஐடி கும்பலில் பொதுவாகவே, முழ நீளம் பேசுபவர்கள்தாம் அதிகம், களப்பணி என்றால் அறிவுரை மட்டுமே, அதுவும் பாதுகாப்பான இடங்களிலிருந்து கொடுக்க ரெடியாகவே இருப்பார்கள் – கேட்டால் எல்லாவற்றைப் பற்றியும் பெத்த கருத்து வைத்திருப்பார்கள் – ஊதியத்துக்குத் தகுந்த உழைப்பை நல்காமல், இன்னமும் ஊதிப்பெருப்பதிலேயே குறியாக இருக்கும் தற்குறிகள்.
2. பெற்றோரியல்(!):
2.2 நான் இந்த அட்வைஸ் பிஸினஸ் எழவில் இல்லை. எனக்குச் சில விஷயங்கள் வர்க்-அவுட் ஆகிருக்கிறார்போலப் படுகிறது, பிரமை; சில விஷயங்கள் ஆகவில்லை எனவும் தெரிகிறது. அவ்வளவுதான். பலப்பல காலமாகப் பிற குழந்தைகளுடனும் அவர்கள் பெற்றோர்களுடனும் கூடிக் குலாவிக் கொண்டிருப்பதனால் சில விஷயங்கள் தெரிய வருகின்றன. அவ்வளவுதான். இதனால் எனக்குக் கோரிக்கைகளை மட்டும் வைக்க முடியும் – அறிவுரைகளை அள்ளி அட்ச்சிவுட முடியாது.
2.2 நான் உதாரண புருஷப் பெற்றோனல்லன். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும். நன்றி.
3. மிஸ்டிமார்னிங் ரெஸார்ட் மறுபடியும் போனாயா? சமீபத்தில்?? ஒரு மீட்டிங் வைக்கலாமா?
3.1 இல்லை. ஆனால் அது இன்னமும் மேம்படுத்தப் பட்டுள்ளது என அறிகிறேன். என் பரிந்துரையால் அங்கு (சீனாக்கார கோவிட் முன்னால்) சென்ற ஓரிரு நண்பர்களும் அங்கு சென்றதில் சந்தோஷமே பட்டிருக்கிறார்கள்.
3.2 தற்போதைக்கு எனக்கு வீட்டை விட்டு வெளியில் ஏறத்தாழ அகலவே முடியாத சிடுக்கல்கள்/கடமைகள். ஆகவே. அடுத்த சில வருடங்களுக்கு இப்படி இருக்கலாம், எனக்கு அனுமானிக்க முடியவில்லை. ஆகவே, ‘கும்பலாகப் போகலாம் கூடிக் குலாவலாம்’ எல்லாம் நடக்கச் சாத்தியமில்லை, மன்னிக்கவும்.
3.3 மீட்டிங் ஈட்டிங் எல்லாம் முடியாது. ஏழரைகளில் ஒருவர்கூட இதற்கெல்லாம் வரமாட்டார்கள். அப்படியே வந்தால் ஏதாவது புத்தகத்தை அலசவேண்டி வரும். நான் கொர்-ஆன் வாசித்து அதனை அறிந்துகொள்ளலாம் என்பேன், ஒத்துக் கொள்வீர்களா?
4. உனக்குக் கமிஷன் எவ்வளவு?
4.1 மொத்தம் ஏழரை பேர் (மிகை அதிகபட்சம்) படிக்கும் இந்தப் பதிவுகளை மிகைமதிப்பீடு செய்யவேண்டா. அதிலும் சுமார் 10% சுட்டிகளைக் க்ளிக் செய்தால் அதிகம். அப்படி க்ளிக் செய்து போகிறவர்களும் அதில் ஒரு சிறு எண்ணிக்கையாக இருக்கும். இதில் கமிஷனாவது மசுராவது.
4.2 பொதுவாகவே நான் எழுதுவதற்கெல்லாம் பெரிய பிரதிபலன் பார்த்து – மெய் நோக்காமல் கண் துஞ்சாமல் காத்திருப்பதில்லை. இதுவும் அப்படியே.
4.3 இதையெல்லாம் மீறி கமிஷன் வந்தால் உங்களுக்கும் பங்கு கொடுக்கிறேன். நீங்கள் திராவிடர் போலும்.