“அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர் “ களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா?”
October 16, 2022
ஐயோ,
அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர்“களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…
மனம் வெதும்பவெல்லாம் வேண்டா, ஐயன்மீர்! (அல்லது அம்மணி?)
இப்படிப் பொளேறென்று மட்டையடி அடித்தால் என்ன செய்வதாம், சொல்லுங்கள்? ஏகத்துக்கும் வலிக்கிறதே!
மற்றபடி அவையெல்லாம் நடந்தவையா, அல்லது சங்கயிலக்கிய வகையறா எழுத்தாளர்கள், தாங்கள் நம்பியதை(!) ஒரு மாதிரி வெண்முரசு செய்தார்களா என்பதெல்லாமே நமக்குத் தெரியாது; இனிமேல் புலப்படுமா என்பதும் சந்தேகமே!
மேலும்.
1. முக்காலேமூணுவீச, ~95% ‘சங்க இலக்கியங்கள்’ கற்பனைப் புனைவுகளே. ஏகப்பட்ட மானேதேனேக்களே. மேலும் அவற்றின் ஊற்றுக்கண்கள் தமிழிலோ தமிழகம் சார்ந்தவையோ அல்ல. ஆகவே அவை ‘முழுவதுமாக ஒப்புக்கொள்ளத் தக்க’ வரலாற்றுகால விவரணைகளேயல்ல.
2. மேலும் முக்கியமாக, அவை உயர்வகுப்பினரின் கேளிக்கைக்காக, நாட்டிய நாடகங்களாக, மிகை உயர்வு நவிற்சியுடன், இல்பொருட்களையும் ‘கவித்தனமாக தனித்துவ கவித்துவத்துடன்’ சேர்த்து, அநேகமாகப் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டவை; அவை சித்திரிப்பது எந்தவித சமகால வாழ்க்கையையும் அல்ல.
3. யோசித்துப் பாருங்கள்…
பக்கத்து ஊர்க்காரர்களின் கால் நடைகளைத் திருடப் போகிறவர்கள் வெட்சிப் பூ அணிவார்களாம்! முதலில் அதைத் தேடவேண்டும், அணியவேண்டும், பின்னர் இருட்டில் யாரவற்றை அணிந்திருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டுதாம் ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் செய்யமுடியும், பூக்கள் ப்ளடி வாடிவிடும்வேறு – திருடர்கள் இப்படியா முன்னேற்பாடுகளைச் செய்வார்கள், சொல்லுங்கள்?
தங்கள் வருகையை இப்படியா கட்டியம் கூறுவார்கள், கொள்ளைக் காரர்கள்?
ஒரு, ஒரேயொரு திராவிடராவது, திருடுவதற்கு முன் பூச்சூடிக் கொண்டதாக சரித்திரம் பூகோளம் லெமூரியம் என ஏதாவது இருக்கிறதா?
இதுவாவது பரவாயில்லை – இந்தக் கால்நடைத் திருடர்களை எதிர்கொள்ள பக்கத்தூர்க்காரர்கள் ‘கரந்தை மலர்’களை அணிந்து போரிடுவார்களாம்! திருடனை உடனடியாக உதைக்க விரட்ட முயல்வார்களா, இப்படிச் சாவகாசமாகப் பூப்பறித்துக்கொண்டு இருப்பார்களா?
இதேபோல கோட்டை முற்றுகையாளர்கள், கோட்டை விடப்போகிறவர்கள், போரைவென்றவர்கள் எல்லாம் அததுக்கேற்ற பூச்சூடிக் கொள்வார்களாம், வெற்றிவாகை போல…
இதற்கெல்லாம் தனியாக, பூப்பறிக்கும் நேரம்/நிமித்தம், பூச்சூடிச் சிங்காரித்துக்கொள்ளும் நேரம், பழைய பூக்களை அகற்றும் சோகவேலை… என பலப்பல நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.
சரியான பூக்கள் கிடைக்காவிட்டால், போரோ அல்லது மாட்டுத்திருட்டோ வேண்டவேவேண்டாம் எனவும் சலிப்புடன் அகன்றிருக்கலாம். War adjourned sine die.
…ஆனால் பாவி சங்கப்புலவன் ஒருவனும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லையே என்பதை நினைத்தால்… … ப்ளடி கோபம்கோபமாக வருகிறது, என்ன செய்ய…
எல்லாருக்கும் ‘பூப்புவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கர்கள்’ என நினைப்பு.
4. என்ன சொல்லவருகிறேன் என்றால், இவையெல்லாம் சுவையான நாடகங்களின் மேடைக்கதையாடல்கள், வசனங்கள், பாடல்கள் போன்றவை…
இவற்றைப் பார்த்துக் களித்திருக்கக் கூடும், எண்ணிக்கையில் சிறுபான்மை, உயர்தட்டு மக்கள், ‘நாவலோ நாவல்’ எனச் சொல்லிவிட்டு, வூட்ல ஆவுற வேலயப் பாக்க நகர்ந்திருப்பார்கள் – நாம் தான், இதுதான் ‘100% அக்மார்க் ரியல் ப்ளடி சங்ககால வரலாறுடே‘ என நெற்றிப் பொட்டுத் தெறிக்க, வாயோர நுரை தள்ள, எச்சில் தெறிக்க… உணர்ச்சிவேகத்தில் உளறிக் கொட்டுகிறோம்!
அப்படி மட்டும் இருந்தால் பரவாயில்லை, இக்காலங்களில் புதுத்திணை ஒன்றும் இருக்கிறது – அற்ப அறிவிலி வெறியர்களெல்லாம் ‘சங்ககாலத் தமிழேண்டா‘ என இக்காலங்களில் வெறியாட்டம் ஆடும்போது, அவர்களும் அவர்களைப் பார்த்துப் புத்தி பேதலித்துப்போகும் பாவப்பட்ட நாமும் சூடிக்கொள்ளவேண்டியது, ‘காதுல பூ.’
…காதுலபூத்திணை. நன்றி.
5. தலையாலங்கானம் போர், வெண்ணிப் பறந்தலை போர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போன்ற, பெரும்பாலும் முகாந்திரமோ வேறொரு சிறு காத்திரமான தரவுமேகூட இல்லாத வளமான கற்பனைகள் குறித்து, இப்போது நான் உங்களை போரடிக்கவில்லை; ஆனால், ஒவ்வொன்றாகப் பின்னொரு சமயம் எழுதுகிறேன், சரியா?
ஆனால், டி எஸ் க்ருஷ்ணன் அவர்கள் ஏற்கனவே, மிக ஜனரஞ்சகமான மேற்படிப் போர்களைப் பற்றி தத்ரூபமாக எழுதியிருக்கிறார், இப்போதைக்கு அவற்றைப் படித்து இன்புறவும்.
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம் (இதில் ஒருமாதிரி இமயவரம்பன் பற்றியும் தொட்டிருக்கிறார்)
பின்குறிப்பு: இப்போது சங்கரி என அழைக்கப்படும் சங்ககிரி தான் சங்கயிலக்கிய எழுத்தாளர்களின் முற்காலச் சோழச் சமய ஹெட்க்வார்ட்டர்ஸ் என்பதை நாம் அறிவோமா?
பின்பின்குறிப்பு: (ஐயய்யோ, இப்போது நீங்களும் அந்தப் பாழாப்போன முழுப்பதிவையும் படித்தேவிட்டீர்களா? அப்படியானால் உம்முடன் நானும் @SridharT-ம் சேர்ந்து மூவரானோமா என்ன?)
—
—
October 16, 2022 at 22:41
/ ஐயய்யோ, இப்போது நீங்களும் அந்தப் பாழாப்போன முழுப்பதிவையும் படித்தேவிட்டீர்களா? அப்படியானால் உம்முடன் நானும் @SridharT-ம் சேர்ந்து மூவரானோமா என்ன?)/
ஞங்கள் 2 சூரத்துகள் நங்கநல்லூரில் எப்போதுமே உண்டு
October 17, 2022 at 06:08
5!
October 16, 2022 at 23:35
Though the title seems to be pun intended, the reality could be very similar. Given the size of the chief/kingdoms, they could not have maintained a full time army throughout as it would have made major holes in their economy. May be they had 100+ serious soldiers and rest could be assembled from the local population whenever and wherever there was a war.
October 17, 2022 at 06:23
Yes. Considering a smallish population and a lack of a ‘proper’ state then.
But we are marijuana addicts. And, collectively are on weed.
Weedu-peru, I mean.
October 18, 2022 at 07:07
“இதற்கெல்லாம் தனியாக, பூப்பறிக்கும் நேரம்/நிமித்தம், பூச்சூடிச் சிங்காரித்துக்கொள்ளும் நேரம், பழைய பூக்களை அகற்றும் சோகவேலை…”
சண்டை மார்க்கெட்டில் வாங்கியிருக்கலாம் அல்லவா ?
October 18, 2022 at 07:45
என்னங்க இது! 🤣😀😳😡
நக்கலும் நகைச்சுவையுணர்ச்சியும் அதிகமாகி விட்டதே! கொம்பை மொண்ணையாக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதோ? போட்டியாளர்களை நான் எப்படி அனுமதிப்பது? அப்படி அனுமதித்தால், இந்தக் கலகக் காரர்களே புரட்சி செய்து கட்சியை இவர்களே தடுத்தாட்கொண்டு விடுவார்களோ? பிறகு என் பிள்ளைகளுக்கு என் ஏழரைச் சொத்து சேராதோ?
“கட்சியின் மூத்த ஏழரைகளே இப்படிச் செய்தால், கவலையில் எனக்குத் தூக்கமே வர மாட்டேனென்கிறதே! காலையில் எழுந்தால் என்ன ஏடாகூட கிண்டல்/பின்னூட்டம் வந்திருக்குமோ எனக் கவலையாக இருக்கிறது. ஒத்திசைவின் நிலை மத்தளமாகிவிட்டதே! ரெண்டு பக்கமும் ரவுண்டு கட்டிக்கொண்டு இடிக்கிறார்களே! ஆக – மக்கள் முன்னால் ஏழரைகளின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். இல்லையேல் கடமை-கண்ஂணியம்-கட்டுப்பாடு மடமை-மண்ணியம்-மண்டைப்பாடு எனும் திராவிடமாடலின் படி நான் சர்வதிகாரியாகி உங்களிடம் நாக்குழறத் தாழ்மையுடன் பவ்வியமாகக் காலடியில் வீழ்ந்து வேண்டிக் கொள்ளும் காலமும் வந்துவிடும்.”
(உங்கள் தமிழக முதலையமைச்சர் ஒப்பாரி வைப்பது போலப் படித்துக்கொள்ளவும்!)
October 20, 2022 at 11:03
ராஜாக்கள் மன்னர்கள் தங்க மகுடம் சூடியதும், ராணிகள் தங்கத்திலேயே பிரண்டு உருண்டதாகவும் சகலத்தையும் தங்கத்தில் வைத்து வாழ்ந்ததாகவும் வரலாற்று பெருமை பேசுகிறார்களே. வானளாவிய அரண்மனை கட்டியதாக மார்தட்டுகிறார்களே. Gold extraction எப்படி சாத்தியமானது. சோழ ராஜாக்களின் கோவில்கள் உள்ளது. அரண்மனைகள் எங்கே?
October 20, 2022 at 11:44
யாரய்யா நீர்? புதிதாக வந்து இப்படிப் பட்டென்று போட்டுடைக்கிறீர்? ரொம்பத் திமிர் காட்டினால், ஏழரைக் கழகம் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.
தங்கம் விஷயத்தை நானே ஒருசமயம் எழுதலாமென்று இருந்தேன். நீங்கள் இது குறித்து விலாவாரியாக எழுதினாலும் மகிழ்ச்சியே.
(மற்றபடி தமிழக ஆதிகால கோட்டைகள் என்றால் நாம் ராஜஸ்தான், ஷிவாஜி எனும் பெருங்கட்டுமானங்கள், மலைக்கோட்டைகள் எனப் போய் விடுகிறோம் – ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் நம்மிடம் கெட்டிக்கப்பட்ட மண்சுவர்கள், மரவேலிகள் எனத்தான் மிகப்பெரும்பாலான ‘கோட்டைகள்’ இருந்திருக்கின்றன – சில சிறிய அளவில் கற்கோட்டைகளாகவும் இருந்திருக்கின்றன – ஆனால் ‘சங்க இலக்கியத்தில்’ குறிப்பிடப் பட்டுள்ள வடிவங்கள் + ஐம்பெருங்’காப்பி’யங்களின் வர்ணனைகள், மிகைக்கற்பனைகளே – அவற்றுக்கு ஒரு ருசுவும் இல்லை)
October 20, 2022 at 21:28
நன்றி அய்யா. இன்னும் நிறைய விடயங்களில் (பேசு தமிழ பேசு மகிழன் தொனியில்) உங்களிடம் விவாதிக்கவும், ஆலோசனை கேட்டு ஆறுதல் பெறவும், மனக்குமுறல்களை பகிர்ந்துகொண்டு இரும்பூதடையவும் எண்ணுகிறேன்.
காரணம் : தற்போதைய அரசியல் நிகழ்வுகள் எனக்கு எமோஷனல் எனர்ஜி ட்ரைன் செய்கிறது. நான் எந்த கட்சியையும் சாரவில்லை. ஆனாலும் நல்லவர்கள் பக்கம் நிற்கிறேன். தேசியத்தின் பக்கம் நிற்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
தங்களின் தமிழ் ஆங்கில புலமைக்கும் தமிழ் நகைச்சுவைக்கும் எழுத்துக்கும் 10 ஆண்டு கால ரசிகன்.
–ராஜா
குறிப்பு : உங்களிடம் தொலைபேசியிலோ ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியுமா? உங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு அடியேனுக்கு அருள்வீர்களா?
October 21, 2022 at 11:35
ஐயா, ஐயோ! மிகை மதிப்பு வேண்டா.
சரி. நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரியானதாகக் கொடுத்திருக்கும் பட்சத்தில் தொடர்பு விஷயங்களை, 7½உறுப்பினர்-படிவத்துடன் அனுப்புகிறேன்.
அப்படியில்லை எனில் – othisaivu.ராமசாமிramasami@gmail.comகாம் – முகவரிக்கு (தமிழை அகற்றியபின்) ஒரு ஓலை அனுப்பவும்.
நன்றி.