பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர், தறுதலைப்புலி பிரபாகரனை விட ஆகிருதியும் ஆழமும் மிக்கவர்: சில நினைவுகள், குறிப்புகள்
October 13, 2022
இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.
ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று…
சரி.
என் பெருமதிப்புக்குரிய பத்திரிகையாளர் டேவிட் ப்யூவல் சபாபதி ‘டிபிஎஸ்’ ஜெயராஜ் அவர்களுடைய வார்த்தைகளில் சொல்லப் போனால்…
‘தமிழ் ஈழ’ தேசிய தீவிரவாத இயக்கங்களில் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் – அவற்றின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்புள்ளவராக இருந்திருக்கிறார், சின்ன பாலா; அவருடைய வரலாறு என்பது குறைந்தபட்சம் பிரபாகரனின் வரலாறுக்குச் சமமானது, அல்லது மேலானது. சின்னபாலா, பலவிதங்களில் – தமிழ் அரசியல் முனைவுகளின் பல படிகளை, போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்.
சின்னபாலா பற்றி என்னுடைய குறிப்புகள்.
ஆக, ‘தமிழ் ஈழம்?’ “…. பொய்யாய், பழங்கனவாய் மெல்லப் போனதுவே…” Coming to think of it now, bleddy, good riddance too. It was never a great/useful idea in the first place.
At least from now on, the youth (including Tamils) of Sri Lanka, should be able to progress – now that the LTTE lumpen have been completely decimated.
Yes.
October 16, 2022 at 00:12
இதெல்லாம் இத்தனை நாள் தெரியாம போச்சே சாமி.. என் அறியாமை என்ன சொல்ல