கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர்  அருளிச் செய்த அம்ரீகா பர்க்லி பிஹெச்டி ஆய்வேட்டினைப் படித்தே விட்டேன்! (அல்லது: ஆசீவகம் என்பது ஆதித்தமிழ்க்றிஸ்தவமே!)

August 28, 2022

பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-(

விநாயகர் என்பவர் சமண கடவுளா ? | விளக்குகிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி | Pesu Tamizha Pesu

சாராம்சம்: பிள்ளையார் / விநாயகர் / கணேஷ குறித்த திராவிடப் பரப்புரைகளான ~~’இக்கடவுள் வழிபாடு, ஆதித்தமிழர்களுடன் தொடர்பற்ற ஆரிய சமாச்சாரம் + மேலும் முக்கியமாக, ஹிந்துமதம் சமணர்/ஆசீவகர்களிடமிருந்து இக்கடவுளைத் திருடிக்கொண்டது’ – போன்ற முன்னுக்குப் பின் முரணான உளறல்களை, பண்புடன் கிழித்தது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால் – போகிற போக்கில் எம் தனித்தமிழ்த் தனிக்குடிவழிப் பெருமையான அரும் ஆசீவகம் குறித்து அட்ச்சிவுட்டு வுட்டார்களே, இந்த இந்துத்துவ பார்ப்பன-பனிய அல்லது அபார்ப்பன-டீஷர்ட்ட ‘பேசுதமிழாபேசு + பத்ரிசேஷாத்ரி’ போன்றவர்கள் என்பதை நினைத்தால்… … வேதனையோ வேதனை… போதுமடா சாமீயோவ்!

ஆகவே.

தரவுகளுடன் இக்கதையாடலை முறியடிக்கும் வேளை வந்தே விட்டது!

முன்னாள் பேராசிரியர் முன்னாள் டாக்டர் பிறந்தபோதுமட்டும் நேர்மையாளர், திருமிகு கண்ணபிரான் ரவிசங்கர் ‘கரச’ அவர்களின் பிஹெச்டி பட்டத்திற்கான ஆய்வுரையை நான் மட்டும்தான் பார்த்தவன் (கரச கூட அதனைப் பார்த்ததில்லை எனத் திருவண்ணாமலை திருப்பாதம்தூக்கி எஸ்கேபி கருணா அவர்களிடம் அவரே சொல்லியதற்கான சான்று பின்னவரிடம் இருக்கிறது) என்கிற முறையில், நான் வேறு வழியில்லாமல், பொய்ப் பிரச்சாரங்களை எதிர்கொள்ள இந்த எழவையும் செய்யவேண்டியிருக்கிறது என்பதை நினைத்திட்டால்… …

:-(

…பிஹெச்டிகொண்டார் ஜார்ஜ்ஹார்ட்கண்டார் பாரீசுபோனார் போனமச்சான்திரும்பிவந்தார் திருதிருவாளர் பேரறிஞர் கரச-வின் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை, அவருடைய சம்மதத்துடன் கீழே பதிக்கிறேன்.

என் தமிழ்ச் சொந்தங்கள், தமிழ்ப் பந்தங்கள் அனைவரும் தீச்சட்டி சமேதராக ஏகோபித்து உடனே ஓடிவந்து அலைகடலென அணிதிரண்டு ஆர்பரித்து ஆதரித்து ஆர்பாட்டம் செய்து, தமிழ்க் குலவை செங்குலவையிடவும். நன்றி!

1

ஆசீவக கிறிஸ்துவின் பிறப்பு, அவரது தொல்காப்பியத் திணை சார்ந்த ஆதித்தமிழ வாழ்க்கையை அறியாதோர் யாவர்?

முதற்கண்:

ஆசீவகம் என்றால் – ஆசி கிடைக்கும் அகம்; வீடுபேறு கிடைக்கும் வீடு. அதாவது இயேசுவைப் பிரார்த்தனை செய்து நம்மைச் சொஸ்தம் செய்துகொள்வதற்கான கூடம். பாவத்தின் எரிதீயில் கரியாகாமல் சொர்க்கத்தில் நம் இடத்தை, ஏஸி இரண்டாம்வகுப்பு அப்பர்பர்த்தில் கன்ஃபேர்ம் செய்யும் இடம்.

இதுதான் முக்கியத் தரவு.

2

ஒன்றரைக் கண்:

மரமும் மரத்தைச் சார்ந்த மருதத் திணையில் மரவேலைக்காரரான ஔசேப்பியார் (இவர் நம் சங்ககால ஔவையாரின் மாமன் முறை) அவர்களுக்கும் அன்னை  மதுரை மரிக்கொழுந்துவாச மரிப்பில்லா மரியாளுக்கும் பிறந்து பின்னர் நெய்தல் நிலத்தில் மீன்களைப் பங்கிட்டுக் கடைசியில் மலைமேற் குறிஞ்சி நிலத்தில், அவரது மிச்ச வாழ்க்கையை நிலுவையில் வைக்காமல் சிலுவையில் அறையப் பட்டார் என்பதெல்லாம் செப்புவது என்ன?

அவரது சீஷர்களான மக்காளி கோசலா வக்காளி தேசலா ஆகியோரின் தேசலான ஊழியம் மற்றும் பங்குத் தந்தையத்தை மறப்போமா நாம்?

ஆதிஆசீவக இயேசுவின் நல்மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை நற்செய்தி நூல்கள் பல நமக்கு வாரிவாரிக் கொடுக்கின்றன என்பவையெல்லாம் ஆசீவக அருமைகள் அன்றி வேறென்ன?

பழைய ஏற்பாட்டின் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவாக இயேசு ஆசீவகர், ஆசியா முழுவதும் எவ்வாறு இருந்தார் என்பதையும், பழைய ஏற்பாட்டின் அடித்தளம் மீதான புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள போதனைகளுக்கு கொத்தளம் அமைப்பதையும் குறித்து சுவிசேஷ புத்தகங்கள் மத்தளக் கொட்டுடன் நிரூபிக்கின்றன என்பது எதை நிரூபிக்கிறது?

இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்க ஆதிஆசீவகர்கரால் உலகிற்கு ஸ்பீட்போஸ்ட்டில் அனுப்பப்பட்ட மனிதர்களான இயேசுவின் அப்போஸ்தலர்களின் செயல்களை அப்போஸ்தலருடைய நடபடிகள் நடவடிக்கைகள் நமக்குப் பதிவு செய்வது என்ன?.

ஆசீவகத் திருச்சபையின்  தமிழக ஆரம்பம் மற்றும் முதல் நூற்றாண்டில் அதன் விரைவான வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு புனித தாமஸ் அப்போஸ்தலருடைய நடபடிகள்  நடவடிக்கைகள் பற்றிய சரியான புரிதல்களை நாம் அடையவேண்டும்; குறிப்பாக, அப்போஸ்தலரின் அப்போதைய நடவடிக்கைகளுள் அவர்  உள்ளூர் உள்ளுறை ஆசீவகத் திருவள்ளுவருக்கு, அவர் குறள்வளையைப் பிடித்துப் போதித்ததுதான் திருக்குறள் என்பது மட்டுமே இங்கே கறாராக ஆவணப்படுத்தப் பட்டுள்ள வரலாறு.

பிறகு  தானே அருளிய  ஆசீவகத் திருக்குறளுக்கும் ஒரு உள்ளுறை உரையை யாக்க அப்போஸ்தலர் தாமஸ் மயிலாப்பூரில் முயற்சித்தபோது அவரை அப்பர்-சுந்தரர்-மாணிக்கவாசகர்-சம்பந்தர் எனும் நாற்பெரும் அணியினர் ஆண்டாள் தலைமையில், சேக்கிழாரின் அமைச்சில் சாதிவெறி இந்துத்துவ அணி கண்டு, ஈட்டிமுனையில் விரட்டி விரட்டி, சென்னைப் பக்கப் பரங்கிமலை உச்சிக் கொடுங்குளிர்ப் பனிசூழ்ப் பிரதேசத்துக்கு ஈவிரக்கமில்லாமல் துரத்தித் துரத்தி அனுப்பி, ஆங்கும் அவரை  ‘திருக்குறள் – மலைமேலழகர் உரை’யினை எழுத விட்டார்களா காவிப் பாவிகள்?  இரத்தக் கறை படிந்த ஆசீவக வரலாறு அது!

அறுபத்துமூவர் உற்சவம் எனப் பங்குனி (இந்தப் பங்குனி என்பதே ‘பங்கு நீ’ என தேவனிடத்தில் பாதிரிகள் பிராது வைக்கும் தோத்திரம்தான் என்பதும் தமிழகத்தில் அவாளால் அமுக்கப்பட்டதை எவ்வளவு பேர் அறிவோம்?) மாதத்தில்  வருடாவருடம் மயிலாப்பூரில் நடாத்தப்படும் நாடகமே பிராம்மணப் பார்ப்பனர்களின்  இந்துத்துவ வெறிக்குச் சான்று. அவர்கள் கொண்டாடுவது, புனித தோமையர் எனும் அப்போஸ்தலர் தாமஸ், கொடூரமாகப் பரங்கிமலைப் பனிமலையுச்சியில் கொலை செய்யப் பட்டதைத்தான்!

அவாளின்  ஆசீவகவெறுப்புக்கும் ஒரு எல்லையுண்டோ?

முற்சங்க காலத்து ஆசீவகஸ்தலனாகிய,  காவிரி நீரில் வளர்ந்த சங்க நெல்லின் உமியை நீக்கி அரிசியை அவலாக்கிய பவுல் எழுதிய பவுலின் நிருபங்கள் மேற்குறிப்பிட்ட திருச் சபைகளுக்கான ஆதிக் கடிதங்களாகும் – ஆதிகார பூர்வமான ஆதி ஆசீவகக்கிறிஸ்தவ கோட்பாடுகளையும் அந்த கோட்பாடுகளைப் பாடுபடாமல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் சொஸ்தம் பண்ணி நமக்குத் தருகின்றன. பொதுவான நிருபங்கள் ஆசீவகப்பவுலின் நிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் மேல் கூடுதல் விவரங்களை கற்பிக்கின்றன மற்றும் நடைமுறை பயன்பாட்டுடன் எடுத்துக் கூறி ஆதிஆசீவக விவிலியத்தை வலியுறுத்துகின்றன. 

இவைபோன்ற அளப்பதற்கரிய ஆனால் அளக்கவே வேண்டிய ஆதித்தமிழ் ஆசீவகத்தை வெளிப்படுத்தின விசேஷம்தான் சங்கீதப் புத்தகம்; மேலும், நம் இறுதி காலங்களில் இனி சம்பவிக்கப்போகும் நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஆசீவகசொர்க்கமும் அதே!

சங்ககாலப் புதிய ஏற்பாட்டின் ஒரு கண்ணோட்ட ஆய்வு ஒரு சக்தி வாய்ந்த மற்றும் பலனளிக்கும் ஆய்வாகும் என்பது வெள்ளிடை மலைப் பிரசங்கம்.

நம்முடைய  ஆதிலெமூரியத் தமிழர் சார்பாக நமது ஸ்தானத்தில், இந்துத்துவ சிலுவையில் ஆசீவக இயேசு மரித்ததைப் பற்றியும், அவருடைய மரணத்திற்கு நம்முடைய பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் புதிய ஏற்பாடு சொல்கிறது, என்பது பழைய ஏற்பாடு எழுதப்பட்ட சேலம் பக்கத்து ஏர்க்காட்டிலுள்ள தமிழிக் கல்வெட்டு சொல்லும் ஆசீவகச் சான்று.

புதிய ஏற்பாடு, அந்த ஆதிஆசீவகப் போதனையைப் பின்பற்ற வேண்டிய நடைமுறை முடிவுகளுடன் உறுதியான கிறிஸ்தவ போதனைகளை வழங்குவதிலும், சைவர்களுக்கு சைவத்தை விளக்குவதிலும் – ஏன் அசைவர்களுக்கு ஆம்பூர் கொத்துபிரியாணி வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது.

பழைய ஆசீவகம் எனும் புதிய ஏற்பாட்டின் பல்வேறு புத்தகங்களின் கண்ணோட்டம்/சுருக்கங்களுக்கான இணைப்புகள்  கரச அவர்களுடைய பிஹெச்டி ஆய்வில் உள்ளன.

பாவிகளே! நீசர்களே! ஆசீவகக் கிறிஸ்துவுடனான உங்கள் ஆன்மிக நடைப்பயணத்தில் எங்களது புதிய ஏற்பாட்டுக் கண்ணோட்ட  பர்க்லி பல்கலைக் கழக ஆய்வு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மெய்யாகவே நாங்கள், கரச-வின் கபடமறியா, மேற்கொண்டு கசடதபறவும் அறியாத சீஷர்கள் நம்புகிறோம்.

3

இன்னமும் கரச-வின் பராக்கிரமத்தையும் அவர் புட்டுப்புட்டு வைக்கும் அவாளின் சதிகளையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் என் மகளிடம் சார்மினார் கோல்கொண்டா இத்தியாதிகளைக் காண்பித்து,  விலாவாரியாக அவற்றுக்கான இடம்பொருள்ஏவல் விளக்கம் அளிப்பதாகவும் படம் வரையாமலேயே பாகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லப் போவதாகவும் உறுதி அளித்திருக்கிறேன் – ஆகவே அகல வேண்டும், நீண்ட பயணம் அல்லவா அது?

கடைக்கண்:

கண்ணைப் பார், சிரி.

“Sorry I didn’t catch that.”

8 Responses to “கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர்  அருளிச் செய்த அம்ரீகா பர்க்லி பிஹெச்டி ஆய்வேட்டினைப் படித்தே விட்டேன்! (அல்லது: ஆசீவகம் என்பது ஆதித்தமிழ்க்றிஸ்தவமே!)”

  1. Venkataramanan Says:

    Trail of places where Mr.Kannabiran Ravishankar claimed a UC, Berkeley PhD

    https://realitycheck.wordpress.com/2022/08/27/kannabiran-ravishankar-profile-of-a-foul-vicious-misogynist-anti-brahmin/

  2. Aathma Says:

    பேராசானின் நன்மதிப்பைப் பெற்றவர் இந்த மேதை..பேராசானே இந்த மேதையை பதிவுகளை படித்து கற்கிறார் என்று அவரே சொல்கிறார்


    • ஐயன்மீர்!

      பக்கா திராவிடத் திருடர்களுக்கே பாடம் புகட்டியுள்ளவர் எம் முதுமுனைவராசான்; அவருக்கு நம் வெறும் பெரும்பேராசான் எம்மாத்திரம்!

      ஆனாலும், உண்ஂமையைச் சொல்லவேண்டும்; கரச-வார் எழுதியிருந்த ஓரிரு ‘மாதவிப் பந்தல்’ கட்டுரைகள் (எனக்கு, பக்தி இலக்கியம் குறித்த அறிவுடையோர் என்றால் கொஞ்சம் சபலம் எனும் பிரச்சினை) படித்தபோது மரியாதை தரத் தக்கனவாகத் தான் தென்பட்டன. ஆனால் இரண்டாம் வாசிப்பில் இளித்து விட்டன, என்ன செய்ய.

      அதுவும் இந்தக் கரச, ஒருபொய் இரு பொய் என்றால் பரவாயில்லை – ஆனால் திராவிட அல்லக்கைகள் கொடுத்த முட்டுகளில், தன்னிலை மறந்து தொடர்ந்து வருடக் கணக்காக உளறிக்கொட்டிப் பீலா விட்டிருக்கிறார். (நான் இந்த ‘பிஹெச்டி’ விவாகரத்தை, மன்னிக்கவும் விவகாரத்தைச் சொல்லவில்லை)

      யுவகிருஷ்ணா எனும் திராவிடக் காப்பிக்கடை விடலை ஜந்து ஒன்று இளித்துக்கொண்டு இருந்தது – இப்போதும் உலாவுகிறதா எனச் சரியாகத் தெரியவில்லை. அதனை விடவும் படுகேவலமான ஆசாமிதான் கரச.

      ஆனாலும் திராவிட மெய்ஞானிகளில் கரச பெரியவரே!

      • Aathma Says:

        மாதவி பந்தலில் ஒரேயொரு கட்டுரை படித்தேன்..ஆதி பகவன் விளக்கம்..மிக கவலைக் கொண்டேன் அன்றே.‌.பிறகு அந்த பக்கமே போகல..


      • ஐயய்யோ! சான்ஸ் போச்சே!

        அங்கு பத்து பதிவு படித்தால், பர்க்லி பிஹெச்டி ஃப்ரீயா அள்ளலாம்னிட்டு யாரும் உங்ககிட்ட சொல்லலியா?

        :-(

  3. nparamasivam1951 Says:

    The Twitter account @maithriim belongs to kryes only. Just to denigrate Brahmins, this is maintained by the socalled PhD man. He will tweet in that account as though it is tweeted by some Brahmin Lady. He will then denigrate it in the Twitter of his own. Questions and Answers by the same person.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s