டாக்டர் ஒத்திசைவு வெ. ராமசாமி, பிஹெச்டி (பர்க்லி பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா, அம்ரீகா)

August 23, 2022

ஸ்ஸ்ஸ், யப்பாடா

ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன்.

பின்குறிப்பு: நன்றாகக் கவனிக்கவும், இந்தச் சான்றிதழில் கையொப்பம் இட்டிருப்பது, ஜோ பைடன் + டொனல்ட் ட்ரம்ப்; எனக்குத் தகுதியான மரியாதையை அவர்கள் அளித்திருக்கிறார்கள்; நானும் பெரியமனது செய்து மிகுந்த தயக்கத்துடன் இதனை ஏற்றுக்கொள்கிறேன்; மற்றபடி, நம் திராவிடப் பழக்கதின்படி. இதயம் இனிக்க, கண்கள் பனிக்க அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன்.

பின்பின்குறிப்பு: என்னருமை நண்பரும் சுயமரியாதைக்குரிய உடன்பிறப்பும் கல்வித்தந்தையும் திராவிடகுலத் திருவிளக்குமாகிய திரு எஸ்கேபி கருணா அவர்கள், எனக்கு அறிவுரை கொடுத்தார்:

“டேய் ராமசாமீ! உனக்கு நோபெல் பரிசு தயாராக இருக்கிறது, உனக்குப் பிடித்தமான துறையில், தேவையானால் அனைத்துத் துறைகளிலும், ஏன், பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து அந்த விருதுகளை நீ மட்டுமே பெற, என் ஆணைக்குக் காத்திருக்கிறார்கள் நோபெல் அமைப்பினர். ஆனால், இச்சமயத்தில் உனக்கு பர்க்லீ பட்டம் முக்கியம். ஏனெனில் மெய் நோக்காமல் கண் துஞ்சாமல் ஒத்திசைவு மூலமாகத் தமிழுக்கு நீ  செய்யும் தன்னிகரற்ற தன்னலமற்ற சேவை அளப்பரியது.”

அதனால் , அண்ணன் சொற்படிதான் நான் அந்த நோபெல் விருதுகளை நிராகரித்தேன். நம் திராவிடப் பேராண்மை எமக்கு உணர்த்துவது என்னவென்றால்: “தமிழ் எனக்கு உயிர். நோபெல் எனக்கு …மயிர்.” என் கண்களைத் திறந்த என் ஆருயிர் அண்ணனுக்கு என் அன்பும் மரியாதையும். (ஆனால், இவ்வறிவுரைக்கு மாறாக – என் இன்னொரு ஆருயிர் அண்ணன் பழனிவேல் ‘பிடிஆர்மதுரை’ தியாகராஜன் அவர்கள் நோபெல் பரிசை மிகவும் மதிக்கிறார் என்பதால் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது; ஆகவே அடுத்த வருடம் முதல் நோபெல் பரிசுகளை அள்ளலாமென ஒரு திட்டத்தை முன்வைத்து, அதற்காக முதலில் ஒரு குழுவினை அமைப்பதாக இருக்கிறேன்)

பின்பின்பின்குறிப்பு: கடந்த 3-4 வாரங்களாக, நான் ஒத்திசைவு பதிவுகள் இடாமல் இருந்ததன் காரணம் இப்போதாவது உங்களுக்குப் புரிந்ததா? மேற்படி பிஹெச்டி வேலை சுளுக்கெடுத்துவிட்டது. ஆனால் மனநிறைவாக இருக்கிறது.

என் பிஹெச்டி நீட்கட்டுரையில், ஏனெனில் என் தமிழினத்தின் தமிழனின் தமிழின் பெருமையைப் பறைசாற்ற – கீழ்கண்ட விஷயங்களை, சந்தேகத்துக்கிடமில்லாமல் நிறுவியிருக்கிறேன்:

THE DRAVIDO-LEMURIAN ORIGINS OF HOMO SAPIENS & TAMIL ORIGINS OF THE WORLD LANGUAGES INCLUDING PYTHON

அதாவது:

–>> பெருவெடிப்பு/பிக்பேங்/BigBang தோன்றி, காலம் தோன்றாக் காலத்திலிருந்தே மனித இனத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்து திராவிட-லெமூரியம் விளங்கியது

+ –>> உலகத்தின் அனைத்து மொழிகளின் (பைத்தன்/python போன்ற கணிநி மொழிகள் உட்பட) தாய்மொழி தமிழ்மொழிதான், தமிழ்மொழி மட்டுமேதான்

என இரு கருதுகோட்களைக் கறார் தரவுகளுடன் நிறுவியது.

பின்பின்பின்பின்குறிப்பு:

என் பராக்கிரமத்தைப் பார்த்து பயந்து விடாதீர்கள்! பர்க்லீ பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களை நீங்களும் பெறுவதற்கு ஒரு எளிய, நியாயமான முறை இருக்கிறது.

முதற்படி: இந்தச் சுட்டியிலிருந்து, சான்றிதழின் டெம்ப்லேட்டை இரக்கமேயில்லாமல் தரவிரக்கம் செய்துகொள்ளவும்:  https://docs.google.com/document/d/1WVFq3xk3mqWmKIRpa6cI2RPOCkD5ycJU/edit?usp=sharing&ouid=107577446738193867735&rtpof=true&sd=true

இரண்டாம்படி: அதில் உங்களுடைய் சுயவிவரம் + சான்றிதழ் அளிப்பவர்களின் விவரங்களை உள்ளிடுங்கள்.

மூன்றாம்படி: உங்களது சான்றிதழ்களை அள்ளுங்கள்!

நான்காம்படி: அவற்றைச் சுற்றங்களுடனும் நட்புவட்டங்களுடனும்  பகீரங்கமாகப் பகீருங்கள்!

நன்றி.

வாழ்க பர்க்லீ சான்றிதழுடன்! வளர்க களவுடன்!!

meta/tbd/post-1534


14 Responses to “டாக்டர் ஒத்திசைவு வெ. ராமசாமி, பிஹெச்டி (பர்க்லி பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா, அம்ரீகா)”


  1. STOP PRESS

    ஐயோ!

    மன்னிச்சிடுங்க! மேற்கண்ட காட்டுரை, ஒருமாதிரி கிண்டல்/sarcasm வகை.
    @skpkaruna எஸ்கேபி கருணாவுடைய ‘டாக்டர் கண்ணபிரான் ரவிஷங்கர்’ @kryes உதிரி/லும்பன் ஆசாமியின் பீலாவுக்கான முட்டுக் கொடுத்தலுக்கான கிண்டல்.

    அவ்வளவுதான்.

    நான் பிஹெச்டி கீஹெச்டி எல்லாம் செய்வதாக இல்லை. நன்றி.

    முதலில் ஒருவர் ட்விட்டர் டிஎம்மில் வாழ்த்து தெரிவித்தார், அதிர்ச்சியாக இருந்தது; இப்போது இன்னொருவர்…

    மிடீல.

    (இத்தனைக்கும் இதனை ‘ரசக்குறைவான நகைச்சுவை’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்; என்னவோ போங்க…)

    :-( ட்டேய்! இந்தமேரி கிண்டல படுஸீரியஸ்ஸாக எடுத்துக்கற நீங்கள்ளாம் ஏழரைங்களே இல்லேடா, பாவீங்க்ளா!

    • முரசொலி முழக்கம் Says:

      ஆ! முனைவர் பட்டம்பெற்ற ஆசானுக்கு அமேரிக்க கண்டமே அதிரும் வண்ணம் ஆராட்டு விழா நடத்திட நினைத்திட்டோமே! விடிவதற்குள் ஊரை வளைத்து, சாலை மறித்து பஹூத்தறிவுடன் பதாகை நிறுத்திட்டோமே! நாளேடு முதல் தொலைக்காட்சி வரை, இதழ்கள் தொடங்கி இணையம் ஈறாக எண்ணிலா விளம்பரங்கள் செய்திட்டோமே! அத்தனையும் வீண்தானோ அடலேறே! ஐயகோ! இக்கொடுமையைக் கண்டிட்டாயா திராவிடியா கொடுக்கே! ஆரிய சதியால் அந்நிய நாடளித்த பட்டத்தை இழந்திட்டோமே உன் உதிரம் கொதிக்கவில்லையா? ஆண்மை ஆர்ப்பரிக்கவில்லையா? உருவிடு உன் கொலைவாளை! ஊரடித்துச் சேர்த்திடு பெரும்பொருளை! உடனே அனுப்பிடு இங்கே, விலைக்கு வாங்குவோம் அமேரிக்காவை அங்கே!


      • ஒரிஜினல் டாக்டர் பட்டம் (அதுவும் மதிக்கத் தக்க துறையில், மதிக்கப் படும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில்) பெற்று, தமிழகக் கல்வித் துறையிலும் பணியாற்றும் நீங்கள், இந்தத் திராவிடச் சாக்கடையில் – கிண்டலுக்காகவே கூட உழலலாமா, சொல்லுங்கள்?

        யோவ்! போயி ஆவுற வேலய பாரூ மேன்!

  2. anbu thondan Says:

    annan othisaivu amerika PhD pattam petratharkaga vazthukkal, rendu biriyani parcel, thevu thidalil meeting, annan olivilaku, kalaingarin maindhan karangalal ungaluku meedum DR pattam alipathil perumagichi adaigiren. kindly Gpay, transfer money, details are as follows:

    • anbu thondan Says:

      please mail.. so i can update payment details, we also help in spreading your doctorate across various channels. Making you Dravida Pughaz, Dravida oli vilaku, lighting lamps across tamilnadu.


      • Nice try.

        You first need to make an advance payment (EMD – Earnest Money Deposit, non-refundable of course) of Rs 10,000/- only, to me so that I can send you a mail.

        Of course you would get your own Berkeley PhD Certificate, in a subject matter chosen by you, totally free as a sign-on bonus along with my email.

        I can introduce to my wealthy friends in Nigeria too, for additional payment.

  3. anbu thondan Says:

    Thank you very much dear Dr. Dravida Pughaz, tamil kudimagar, othisaivu Ramsamy for allowing me to donate and propogate your principle all over.. will reach out soon. Ungal Anbu thondan, dravida oli, othisaivu thuli anban ki.ku

  4. Rajmohanbabu Mani Says:

    கலிபோர்னியா பர்க்லி பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற எங்கள் ஒத்திசைவு வாழ்க வளர்க மேலும் பல டாக்டர் பட்டம் பெறுக தமிழை எத்திசையிலும் ஒலிக்க செய்க

  5. Rajmohanbabu Mani Says:

    ராம் Twitter ல் இதற்கு வாழ்த்து செய்தி பார்த்தேன். நிறையப் பேர் தலைப்பை பார்த்தவுடன் வாழ்த்துக்கள் பதிகிறார்கள் போல.


    • ஹ்ம்ம், அதனால் என்ன பரவாயில்லை – சொல்லட்டும். என்னை நேரடியாகத் தெரிந்த நண்பர்களும் இப்படி பயந்துபோய் வாழ்த்துச் சொல்லி விட்டார்கள்…

      வேறுவழியே இல்லாமல் பிஹெச்டி படுகுழியில் என்னைத் தள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்களே என்பதை நினைத்திட்டால்…

      திட்டத்தான் தோன்றுகிறது. :-(

  6. Aathma Says:

    அடுத்து வந்தேறிகளின் மொழி சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் வாங்கி பார்ப்பன பரதேசிகளின் முகத்தில் கரியை பூச தாழ்மையுடன் வேண்டுகிறேன்..


  7. […] பல்கலைக் கழகச் சான்றிதழை, ப்ரின்ட்-ஆன்-டிமாண்ட் தொழில் நுட்பத்தை உபயோகித்து, ‘நமக்கு நாமே’ […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s