முக இசுடாலிர்: ‘பேட்டரி’ பேரறிவாளனாருக்குக் ‘கொலைமாமணி’ விருதளித்து, எம் திராவிட மாடல் அரசு அழகு பார்க்கும்!

May 20, 2022

…முன்னதாக, இசுடாலிரின் திராவிட மாடல் அரசு, தன் தேர்தல் வாக்குறுதிகள் அனைவற்றையும் 200%  மூச்சுமுட்ட நிறைவேற்றி விட்டதால், மிச்சம் இருந்த ஒரு கோலாகலத்தையும் நிறைவேற்றும் கடமை அதற்கு இருக்கிறது.

ஆகவே பேரறிஞர் பேரறிவாளனாருக்குப் பெரியார் திடலில், கொலைமாமணி

விருது வழங்கப்பட உள்ளது. பிறகொலைகாரர்களுக்கும் அது சமூகநீதியுடன் ரெடி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக வாக்காளப் பெருமக்களுக்குக் கொடுத்த அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளையும் திராவிடமாடல் நிறைவேற்றி விட்டதால், இனிமேலிருந்து இசுடாலிர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து, தில்லியின் செங்கோட்டையை நோக்கிப் பயணிக்க இருக்கிறார்.

2024 மே மாதத்தில், நம் முடிசூடா மன்னர் (ஆ! இப்போது அவர் முடிசூடும் மன்னர் என்றா என்னைத் திருத்துகிறீர்கள்?) பாரதப் பிரதமராகும் கண்கொள்ளாக் காட்சியைக் காணத்தானே போகிறோம்?

எது எப்படியோ… அதற்கான, ஒரு ட் ரெய்லர் காணொளி கீழே:

“All India Federation for Social Justice”

அடுத்த இரண்டுவருடங்களுக்கு மத்திய அரசை அமைப்பதில் இசுடாலிர் தீவிரமாக இருக்கப் போவதால்… உடனடியாக…

பின்குறிப்பு1:

இதனைத் தொடர்ந்து, ‘தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற தலைவன்’ உதயநிதி இசுடாலிர் அவர்கள் தமிழகத்தின் முதலையமைச்சராகிறார்.

பின்குறிப்பு2:

முன்னதைத் தொடர்ந்து ‘கலைஞரின் தன்னிகரற்ற கொள்ளுப்பேரன்’ இன்பன் உதயநிதி அவர்கள், துணைமுதல்வராகப் பொறுப்பு ஏற்கிறார்.

பின்குறிப்பு3:

“இள திராவிடரத்தம், பாரம்பரியப் பெருமைமிக்க துணைமுதல்வரானதை திக ஒருமனதாக வரவேற்று, அவருக்கு ‘ஆரியத்துக்குச் செக்கிடும் செம்மல்’ விருது பெரியார்திடலில் கொடுக்கப் படும்.”

— இனமானத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் கழகம்

பின்குறிப்பு4:

“என் ஸோர்ஸஸ் சொன்னதுபடி, இன்பநிதி பள்ளியில்  அஞ்சாங்க்ளாஸ் தமிழ்மீடியத்தில் படித்தபோது, பக்கத்திலிருந்த சகமாணவனின் குண்டியில் கிள்ளினார். இதனை நான் வரவேற்கவில்லை – ஆனால் அண்ணாமலை இதற்கெதிராகக் குரலெழுப்பாதது, திமுக பாஜகவின் ‘பி டீம்’ என்பதைத் தானே காட்டுகிறது? ஹிந்துத்துவத்தை ஒழிக்க, நான் என் ஸோர்ஸஸ் ஆதரவுடன் முதலையமைச்சரானால் தான் முடியும்…”

— சவுக்கு சங்கர்

பின்குறிப்பு5:

“இன்பநிதிக்கு எதிராக ஏன் மோடி இன்னமும் அறிக்கை விடவில்லை? என் தலைவன் பிரபாகரன் இன்றிருந்தால், என்னைத் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக்கி அழகு பார்த்திருப்பான். இருந்தாலும் என் பாட்டன்பூட்டன் சாவியன் எனக்குத் தமிழகத்தைத் திறந்துவிடுவான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று நேற்று நாம்தமிழர் கட்சியை விட்டு விலகிய நண்பர் எனக்கு முந்தாநாள் சொன்னார்…”

— நாம்தமிழர் சீமான்

பின்குறிப்பு6:

“நம்மை எல்லாரும் ஒடுக்குகிறார்கள்.  தலித் திராவிடர் ஆரியர் பனியர் மார்வாடிகள் வடவர் தெலுங்கர் வடுகர் பார்ப்பனர் முஸ்லீம் க்றிஸ்தவர் பௌத்தர் ஆசீவகர் அமெரிக்கர் ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் என எல்லாரும் ரவுண்ட் கட்டிக்கொண்டு கடந்த 10000 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். நாக்கில் நரம்பற்று நசுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். தீவிரமாகத் தீயிட்டுப் பொசுக்குகிறார்கள்… எல்லாமே இல்லுமினேட்டி சதி வலை. எங்கும் சதி என்பது விதி, அதுவே எங்கள் கதி, எங்களுக்கு இழைக்கப் படும் அநீதி… ஆகவே தமிழ் இனம் வாழ்க… எங்கள் யூட்யூப் சேனலின் லைக் பட்டனைக் க்ளிக் செய்யுங்கள், சந்தாதாரராகுங்கள்… புரட்சி வெடிக்கும்…”

— தமிழ்தேசியக் குஞ்சாமணிகள்

:-(

:-( :-(

6 Responses to “முக இசுடாலிர்: ‘பேட்டரி’ பேரறிவாளனாருக்குக் ‘கொலைமாமணி’ விருதளித்து, எம் திராவிட மாடல் அரசு அழகு பார்க்கும்!”

  1. Sesha a.seshagiri Says:

    பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

    ஹும் … என்ன செய்ய ?

  2. Swami Says:

    கொலை கேசுல ரிலீஸ் ஆகி வந்தவனை ஏதோ ஒலிம்பிக் கோல்ட் வாங்கியாந்த வீரன் மாதிரி கட்டி புடிச்சு கொண்டாடறாங்க! கொடுமை

    நியாயமா பாத்தா பாட்டரி வாங்கினவனோட தில்லாலங்கடி அம்மாவே உள்ள போயிருக்கணும்

    திஸ் கண்ட்ரீ நோ பீச்சர் :(


    • அப்ப நம்பள் திராவிட் கண்ட்ரி முழு நீள பீச்சர் பிலிம் என்பதை நீங்க ஒப்துக்கலண்ரீங்க.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s