ரஷ்யா மீது இந்தியாவின் படுபயங்கர அணுகுண்டு தாக்குதல்! ஐயோ!!
February 20, 2022
தேவையா?
நமக்கு, ரஷ்யா பேரில் (அல்லது அதன் பூர்வாசிரமமான ‘ஸோவியத் ஸோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்’ எழவின் பேரில்) எவ்வளவோ ஆதங்கங்கள் இருக்கலாம், அவர்கள் மெகாடன் அளவுகளில் கொணர்ந்து இறக்கிய ‘லெனின் தொகை நூல்’ இத்யாதிகளுக்காக… அவர்கள் பொதுவுடமைத் தோழர்களுக்கு ஓசியில் அளித்த லடா கார்கள், நாணய ஞமலிகள் பக்கம் வீசியெறிந்த பொற்கிழி நாணயங்களுக்காக… இப்படிப் பல விஷயங்களுக்காகவென.
அதற்காக இப்படியா? நெஞ்சு பொறுக்குதில்லையே!
தேவையா?
பதிலுக்கு ரஷ்யா இன்னொரு குண்டை (எம் பேராசான் எஸ்ராமகிருஷ்ணன் அளவுக்கு இல்லாவிட்டாலும்) நம்மீது போர்க்கால ரீதியில் போட்டால், நாம் என்னதான் செய்யக்கூடும், சொல்லுங்கள்?
அல்லது, ரஷ்யா இந்த எழவை ரஷ்யமொழிக்கு மொழிபெயர்த்து, அதனை கிகாடன் கணக்கில் குண்டுகுண்டாக நம்மேலேயே குரோதத்துடன் வீசினால்??
அல்லது, இந்த மண்டியிட்ட, படுபீதியளிக்கும் குண்டுகளுக்குப் பயந்து, சாரிசாரியாக ரஷ்யர்கள் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தால் – நம் தேசத்தின் பொருளாதாரம் என்னவாகும்? அந்த மக்களின் கதியென்ன?? நம் கதியென்ன?
இப்படியே நம் தேசமும், ரஷ்யர்களும் தேசம்தேசமாகத் தேகம் தேய, இடக்கையை லொட்டிக்கொண்டு தேசாந்திரியாகத் திரியவேண்டியதுதான் போல.
ஐயகோ! ‘மண்டியிடுங்கள் தந்தையே’ ஒரு நாவல் அல்ல – அது ஒரு ப்ளடி மனிதவுரிமை மீறல்! சுற்றுச்சூழல் பேரிடர்!
இந்த ப்ளடி அலக்கியவாதிகள், உலகத்தை அமைதிப் பாதையில் இட்டுச் செல்வதற்குப் பதிலாக, இப்படிப் போர்ப்பாடையில் எடுத்துச் செல்கிறார்களே! அழிவை நோக்கி ஆர்ப்பரித்து நடக்கவைக்கிறார்களே!
இந்த அலங்கோலத்தைக் கேட்பாரே இல்லையா?
எஸ்ரா போன்றவர்களைக் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைதுசெய்து – இந்த மாபெரும் போரிடர் ஏற்படாமல் இருக்க, நம் திராவிடஸ்டாக் திமுக அரசு ஒரு எத்தனமும் எடுக்காமல், ஏன் மெத்தனமாக இருக்கிறது?
February 20, 2022 at 20:40
பின்புலத்தை நான் சொல்கிறேன்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை Russian Consulக்கு ஒரு மின்தபால் போட்டேன்:
இந்த புஷ்கின் வட்டம், சதுரம் என்று இலக்கியவாதிகளை கூப்பிட்டு கதைக்கவைப்பது என் மூதாதையர் காலத்து சமாசாரம். போதுமய்யா. நாங்களே தேடிப் படித்துக்கொள்வோம்.
நான் படித்த (அதாவது படித்திருக்கக்கூடிய) காலத்தில் திரைப்படங்கள் போடுவீர்கள், சரி. ஆனால் இன்று எல்லாம் வலையிலேயே கிடைக்க்கிறதய்யா.
கலாசார பரிவர்த்தனத்துக்கு நீங்கள் செய்ய வேண்டியது: ரஷ்ய ஓவியக் கண்காட்சி.
ஒரு காலத்தில் ஒரு நடை போத் ஹெர்மிடேஜ், ட்ரெட்யகோவ் அருங்காட்சியகங்களைப் பார்த்துவரும் ப்ரயாசை இருந்தது.
இப்போது கிளரொளி இளமை கெட்டாகிவிட்டது.
இம்முகமதை நோக்கி மலை வந்தால் தான் உண்டு.
ஒரிஜினல்கள் கூட வேண்டாம் ஐயா. ப்ரிண்ட்களை தருவித்து கான்ஸலேட் இருக்கும் ஒவ்வ்வொரு ஊரிலும் தலா ஒரு வாரம் நடாத்தலாமே……. என்றேன்.
ம்ஹூம். கிணத்தில் கல்.
எனது நியாயமான கோரிக்கையை உதாசீனம் செய்தவர்களுக்கு
கைமேல் பலன் இந்த கலாசார படையெடுப்பு.
இந்த முன்னெடுப்பில் உக்ரைனின் கை உண்டு என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
February 20, 2022 at 21:24
//இம்முகமதை நோக்கி மலை வந்தால் தான் உண்டு.
ஆ! உங்களை அமைதிமார்க்க இறைதூதருடன் பொருத்திப் பார்த்துக்கொள்கிறீர்களோ? என்ன கொடுமையைய்யா இது! உங்களை தலை, இனி உங்களுக்குத் தலைமை தாங்கவேண்டாம் என முடிவு செய்துவிட்டீரோ, பாவம்?
கிட்டேவாருங்கள், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் என்னதான் நடக்கிறது எனக் கொஞ்சம் ரகசியமாக விவரித்துச் சொல்லமுடியுமா, இல்லை உங்கள் நண்பருடன் சேர்ந்து தண்ணிகிடையாது#குறியீடு வத்தல்#நாகராஜ் எனச் சிறுபிள்ளை விளையாட்டே போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்தா?
பின்குறிப்பு: உங்களைப் போன்ற தேர்ந்த வாசகர்வாளும், எஸ்ராவைக் கிண்டல் செய்வது வருந்தத்தக்கது. நிலைமை இப்படி இருந்தால், தமிழிலக்கியம் எப்படித்தான் வளர்வதாம்?
February 20, 2022 at 22:02
/சிறுபிள்ளை விளையாட்டே/
நானொரு நேருவிய உளவாளி என்று முத்திரைக் குத்தப்பட்ட ஏழரையிலிருந்து அவைநீக்கம் செய்யப்படும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்பதை நன்கறிவேன்.
எனக்கும் ஒரு நாள் Nerdy Tasteless Humour கதவடைக்கப்படும்.
அதனால் இப்போதே பலதரப்பட்ட விளையாட்டு இடங்களில் துண்டுபோட்டு வைத்துக்கொண்டுவிடுவது என் பார்ப்பனீய குயுக்தி.
Jokes apart, I kinda liked SR’s நெடுங்குருதி and a couple of his short stories.ஆனால் அந்தக்காலத்திலேயே சலிப்புத் தட்டிவிட்டது. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் (தகவல்களைச் சொல்லவில்லை, you know what I mean) நிறைய்ய்ய்ய எழுதுகிறார், என்பதே என் அபிப்ராயம்.
அவர் கட்டுரை நடையை பலர் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது எனக்கு sobering realization.
நெடுநாள் படிக்காமல் விட்டுவிட்டேன். அதற்குள் அவர் பேராளுமை ஆகிவிட்டார்.
சமீபத்திய எழுத்துக்களைப் படிக்காமல் உங்கள் கிண்டலில் பங்கேற்பது பற்றி தேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால் தயக்கம் இருக்கலாம். நல்லவேளை எனக்கு அந்த சங்கடம் இல்லை.
எப்படியும் அடுத்த ஒத்திசைவு.இன் cyber-attackல் இதெல்லாம் அழியத்தானே போகிறது என்ற துணிச்சல் எனக்கு.
February 21, 2022 at 07:37
ஐயா,
0. ப்ளடி நேருவியத்துக்கு உளவாளித்தனம்தான், கலவிக்குக் குறைச்சல். (நண்பர் ஸாய் அவர்களுக்கு கெட்டவார்த்தைகளை உபயோகிக்கமாட்டேன் என வாக்குக் கொடுத்திருக்கிறேன்)
1. எஸ்ரா – அவர் எழுத(!) ஆரம்பித்த காலத்திலிருந்தே அப்படியேதான் இருக்கிறார். அவருடைய தேர்ந்த வாசகர்களும் அப்படித்தான். (ஹ்ம்ம் – இப்போது ஓரளவுக்கு, தன்னுடைய ஒற்றெழுத்துகள் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறார் போலப் படுகிறது; மெய்யா தெரியவில்லை – பிரமையாக இருக்கலாம்)
2. நீங்கள் ஏழரையே இல்லை – இந்த அழகில் உங்களை அவை நீக்கம், சுளுக்கு நீக்கம் எனச் செய்யவேண்டிய அவசியமே இல்லை. வாடியிருக்கும் உங்களுக்கான வாசல் இங்கு திறந்தே கிடக்கும்; கோவில்காளை போல, நன்றாகவே கொம்பு சுழற்றலாம்.
3. இங்கு ஸைபர்தாக்குதல் எழவு ஒன்றும் நடக்கவில்லை. நடத்தப்பட்டது, நடந்தது, யார், ஏன் எல்லாவற்றையும் யாம் அறிவோம்.
4. முடிந்தவரை, அடுத்த சில மாதங்களில் அனைத்தையும், ஒன்றுவிடாமல் புனருத்தாரணம் செய்து, புனருத்தாரண புருடான் கார்லியோன் (கார்லி பள்ளி, தாம்பரம்; அங்குதான் படித்தேன்; யோனி என்றெழுதினால் ஸாய் மறுபடி அறிவுரை கொடுப்பார்) எனப் பெயர் வாங்கவே ஆசை, பார்க்கலாம்.
5. உங்களுக்குத் திமிர் அதிகமாகிக்கொண்டு வருகிறது; அடுத்த பதிவில் அடக்க முயல்கிறேன். எச்சரிக்கை.
February 21, 2022 at 08:21
பாகிஸ்தான் பிரச்சினை முடிந்ததென்று நினைக்கிறேன். அன்னாரது இரண்டு வெண்டைக்காய் புத்தகங்களை பார்டரில் நின்று வீசிவிட்டால் கதிகலங்ககிவிடமாட்டான்களா ?
February 21, 2022 at 08:42
🙏🏿 நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கலாம். நீங்கள் அஷ்டதிக் ஏழரைகளில் பாதுகாப்புத்துறை வல்லுநர். நான், வெறும் ஒரு எஸ்ரா வள்ளுநன் மட்டுமே!
ஆனால், என்னுடைய பாகிஸ்தானிய உளவாளிகள் (MindBuckets) சொல்வது என்னவென்றால், அன்னாரது smokeபடம் ஒன்றை தூரத்திலிருந்து காட்டிவிட்டாலே போதும் என்பதே.
February 22, 2022 at 04:22
எஸ் ரா எழுத்துக்கள் அதிகம் படித்தவன் இல்லை. உங்கள் தொடர் எள்ளல்கள் அவர்மீது ஆவல் உண்டாக்கிவிட்டது. நகைச்சுவைக்கு கியாரணாடி அளிக்கும் எந்த நாவல் படிக்கலாம் என்று ஆலோசனை கூறவும். அவர் பேச்சுக்கள் இரண்டு யூட்யூப் இல் ஒன்று கேட்டேன். நல்ல ஜாங்கிரி மாஸ்டர்.
February 22, 2022 at 06:09
//எஸ் ரா எழுத்துக்கள் அதிகம் படித்தவன் இல்லை.
நீங்கள் பாக்கியசாலி, பொறாமையாக இருக்கிறது.
// உங்கள் தொடர் எள்ளல்கள் அவர்மீது ஆவல் உண்டாக்கிவிட்டது.
ஐயோ இதென்னடா விபரீதம்! இனி அந்த ஆளைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிடவேண்டுமோ?
// நகைச்சுவைக்கு கியாரணாடி அளிக்கும் எந்த நாவல் படிக்கலாம் என்று ஆலோசனை கூறவும்.
மாட்டேன். எதைப் படித்தாலும் அதே எழவுதான். நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த காசைக் கரியாக்கவேண்டாம்.
போய் உருப்படும் வழியைப் பார்க்கவும்.
தினவு அதிகமானால், வாழ்க்கை மிகவும் அழுத்தம் கொடுத்தால் – (என்னைப்போல) வாய்விட்டுச் சிரிக்க அவருடைய அதகளத்தளப் பதிவுகளை (களை) வாரம் ஒருமுறை மேம்போக்காக வாசிக்கலாம், பிடுங்கலாம்; யோசித்தால் தண்டக்கருமாந்திரமார் எழுதுவதெல்லாம் மேம்போக்கின் மேம்போக்குதான். வயிற்றுபோக்கு கியாரண்டி.
அல்லது ஒரு காந்தியராக, சுயதுன்புறுத்தலில் தொடர்ந்து திளைக்கவேண்டுமென்றால், அந்த மும்மூர்த்திகளின் கீர்த்திகளை வாரமொருமுறை வாசிக்கலாம்.
வாழ்க்கை மற்றபடி இனிக்க ஆரம்பிக்கும்.
நீங்கள் ஜாங்கிரி சுற்றுகிறார் என்கிறீர்கள், உடலுக்கு உள்ளே செலுத்தப்படுவது அது. ஆனால் இந்த தண்டங்களின் ஆக்கங்கள், வெளியனுப்பப் படுபவை, ஏறத்தாழ அசப்பில் ஜாங்கிரிபோலத்தான்.
தற்காலத் தமிழின், தமிழகத்தின் படுகேவலமாக வீழ்ச்சிக்கும், அதிசராசரித்தனத்துக்கும், ஆனால் மஹாமினுக்கலுக்கும் எஸ்ரா ஒரு தனித்துவ எடுத்துக்காட்டு இல்லை, இவர்கள் எல்லாருமே ஒருமாதிரி எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
தொழில் அறமற்ற ப்ளடி திராபைகள்.
பிகு: இனிய காலை வணக்கம்.
—
—