இஸ்லாம், ஸூஃபிகள், தர்காக்கள் – சில கேள்விகள், குறிப்புகள்

August 13, 2021

சில மாதங்கள் முன் நண்பர் ஆர்ஸி அவர்கள் – சில கேள்விகளைக் கேட்டிருந்தார். க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் 28/02/2021)

அதற்குச் சாவகாசமாக (மன்னிக்கவும்)  இன்றுதான் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன்; ஊக்கபோனஸ்ஸாக, பதில்கேள்விகளையும் எழுப்புகிறேன்.

(இவை திட்டவட்டமான பதில்களா என்பதில் எனக்குச் சந்தேகம். ஏனெனில் இவற்றுக்குத் தரவுகள் பூர்வமாக, காத்திரமான பதில்கள் கொடுக்க வேண்டுமென்றால் நிறைய காலம் எடுக்கும், மேலும் தமிழில், சுமார் ரெண்டுபேர் படிப்பதற்கு அவற்றை எழுதுவதில் எனக்கு அலுப்பாக இருக்கிறதும் கூட; ஆனால் தரவுகள் சர்வ நிச்சயமாக இருக்கின்றன)

-0-0-0-0-0-

1) ‘Softer Islam’அல்லது தங்கள் வேர்கள் (ஆப்கானிஸ்தான்) விட்டு இந்திய நிலத்தில் ‘state formation’க்கான தேவையென அந்நாளைய ஆட்சியாளர்களுக்கு Sufism இருந்திருக்கமுடியாதா?

1.1 மென்மையான/மிருதுவான இஸ்லாம் எனவொன்று இருந்திருப்பதாகவோ இருப்பதாகவோ நான் அறியேன். ஏனெனில் இஸ்லாம் திட்டவட்டமாக, கொள்கைரீதியாக இரு நிலைகளில் மட்டுமே உலகத்தைப் பார்க்கிறது: இஸ்லாமியமாக்கப்பட்ட பகுதி (தர்-அல்-இஸ்லாம்), இஸ்லாம்மயமாக்கப்படாத/பிரச்சினைப் பகுதி (தர் அல்-ஹர்ப்); அவ்வளவுதான் – இதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை.

1.2  இந்தப் பிந்தைய தர் அல்-ஹர்ப் பகுதியின் இஸ்லாம் செயல்படுவதற்கும் (கொஞ்சம் போலிப்பணிவாக, குறைந்த பட்ச அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கும்போதே மேன்மேலும் அழுத்தம் கொடுப்பது) – இஸ்லாமியமயமாக்கப் பட்ட பகுதிகளில் செயல்படுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன; பின்னதில் குஃபர்/காஃபிர்கள் எனப் பலப்பல விஷயங்கள் கோரமாக வாய்ப்புகள் அதிகம் – பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற பிரதேசங்களைப் பார்க்கவும் – அவை இஸ்லாமியரசுகளாக இருந்தாலும் அவற்றில் இன்னமும் முழுமையாக ஷாரியா விதிகள் செயல்படவில்லை – இருந்தாலும் அங்கு சிறுபான்மையினர் மீது செலுத்தப்படும் அராஜகம் உங்களுக்குத் தெரியாததல்ல.

1.3 தற்போதைய எமிரேட்டுகள், ஸவுதிஅரேபிய தொடர்பான நெகிழ்வுகள் – இஸ்லாம் என்பது மிதவாதம் கொண்டதாகவும் இருக்கலாம், ஆக இதுவெல்லாம் ஸாஃப்ட்-இஸ்லாமோ, ஆன்மிக இஸ்லாம் நெகிழ்வாலஜியோ போன்ற கஞ்சாபிரமைகளை எழுப்பியிருக்கின்றன; ஆனால் அவை ‘இஸ்லாமை, ஏழாம் நூற்றாண்டிலிருந்து பிடித்து இழுத்து. தரதரவென்று  இருபத்தொன்றாம் நுற்றாண்டுக்குக் கொணரும் முயற்சிகள் அல்ல – அவை பொருளாதாரம்/எதிர்காலம் சார்ந்த அரச முடிவுகள்; இஸ்லாம் அப்படியேதான் இருக்கிறது.

மாறாக, ஆனால் – கொர்-ஆன்  என்பது ஒரு தனிமனிதரின் (அப்படி ஒருவர் இருந்திருந்தால்) பிரமைகள், வாய்க்குவந்த கோட்பாடுகள் சார்ந்த தொகுப்பு என ஒப்புக்கொள்ளப்பட்டால், அது தொடர்பான சாமான்-சுமைகள் பயணமூட்டைகள் லூஸ்லவுடப்பட்டால், அங்கிருந்து முஸ்லீம்கள் சமுதாயம் மேலெழும்பலாம் – மேலெழும்புவது என்றால் ‘பிற சமூகங்களின் மீதான உள்ளார்ந்த மரியாதையை ஆதாரசுருதியாக வரிப்பது’ எனப் பொருள் படுத்திக்கொள்ளவும்.

1.4 இந்த ஸ்டேட்-ஃபார்மேஷன் எனும் (மேற்கத்திய எடுத்துக்காட்டுகளின் சிலகூறுகள் மீது கட்டமைக்கப் பட்ட) கோட்பாடு பற்றியும் அதனை வைத்துக்கொண்டுக் காரணகாரியங்களைக் கவிழ்த்தி பாரத வரலாற்றைப் புரிந்துகொள்வதிலும் எனக்குப் பல பிரச்சினைகள். அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

Monopolization and institutionalization of the legitimate means of violence எனும் விஷயம் – மேற்கத்தியப் பார்வையில், ‘ஸ்டேட்’ என்பதன் முக்கியமான அங்கம்; இதனை ஒருமாதிரி – முறையான/ஒப்புக்கொள்ளப் பட்ட வன்முறை மீதான ஏகபோகமும் அதனைச் சுற்றியுள்ள நிறுவனமயமாக்கமும் (ஸ்ஸ்ஸ்… யப்பா!) – எனப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், இது பாரத அளவில் பலப்பல எடுத்துக்காட்டுகளின் மூலம், திராபைக் கருத்தாக்கம் என நிறுவ முடியும். ஏனெனில், தர்மரீதியான சட்ட/நீதி பரிபாலனம் என்பதை ஜாதிக்கட்டுமானங்களும், ஸ்ரேணிகளும், அடிமட்டக் கட்டுமானங்களும் (மத்திய, ஒருங்கிணைக்கப் பட்ட ‘ஸ்டேட்’ அரசுக்கும் தொடர்பேயில்லாமல்) அமர்க்களமாகச் செய்து வந்திருக்கின்றன.

ஸ்ரேணிகள் (வர்த்தக, உற்பத்திக் குழுமங்கள்) என்பவைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் – அவை, தங்களுடைய சொந்தப் படைகளை வைத்திருந்தன – இவை வெறும் வியாபாரத்துக்காக மட்டும் இருந்திருக்கவில்லை. அவை நீதி பரிபாலனம் செய்து தண்டனை கொடுத்தன; வரி-சந்தா வஸூலித்தன. இன்ஸ்யூரன்ஸ் வகை (ஆயுள் காப்பீடு, சரக்குக் காப்பீடு) சமூக முன்னெடுப்புகளைச் செய்தன. ‘அரசு’ என்பதும் இருந்தது – ஆனால் அது இவற்றில் நுழையவில்லை. (இம்மாதிரி விஷயங்களை நம் ரொமிலாதாபர் இர்ஃபன்ஹபீப்கள் கண்டுகொள்ளாமல், மேற்கத்திய இடதுசாரி உளறாற்றாளர்கள் – ஃயுடலிஸ்ம் (நிலப்பிரபுத்துவம்), ஸ்ர்ப்ளஸ் ஃபார்மேஷன் (உபரியாக்கம்) தஸ்புஸ் என உளறிக்கொண்டிருந்தால், நாம் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை)

மேலும், இந்த மேற்கத்தியக் கருத்தாக்கமான ‘ஸ்டேட்’ என்பது sovereignty ஸாவரெய்ன்டி/இறையாண்மை விஷயத்தோடு நெருங்கிய தொடர்புடையது, பின்னது இன்றியமையாததுகூட! ஆனால் ஸ்ரேணி தொடர்பான விஷயங்களில் கூட, அரசுக்கு இறையாண்மை இருந்திருக்கிறது (அதாவது மேற்கத்திய ரீதி ‘ஸ்டேட்’ கலைச்சொல்லின் பொருளில்) எனச் சொல்லமுடியும் என்கிறீர்கள்?

இப்போதைக்கு இந்த ஒரு ஸ்ரேணி எடுத்துக்காட்டு போதும்.

1.5 எனக்குத் தெரிந்து முகலாயர்களோ, பிற ஸுல்தானியர்களோ (கஸ்னா ப்ராந்தியத்தின் ‘கஜினி’ மொஹம்மத், கோர் ப்ரதேசத்தின் ‘கோரி’ மொஹம்மத் தவிர)  ஆஃப்கனிஸ்தான் பகுதிக்காரர்கள் அல்லர் – அவர்கள் பொதுவாகவே மங்கோலியர்கள், டர்கிக் (துருக்கிய) திரட்கள், பாரசீகர் வகையறாக்களின் வழித்தோன்றல்கள்; சொல்லப் போனால் – கஜினியும் கோரியும் முறையே துருக்கி, மத்திய ஆசிய வழி வந்த இஸ்லாமியத் திரள்களின் வழித்தோன்றல்கள்தாம்!)

அதேசமயம் ஸூஃபிகள் எனும் வகையில் படுஸீரியஸ் ஆக்கிரமிப்புகள் பாரதப் பிரதேசங்களில் ஆரம்பித்தது 1190களில் இருந்துதான். பதின்மூன்றாம் நூற்றாண்டில் (நடு 1200கள்) தான் இவை வீரியம் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு முன்னமேயே கோரியும் கஜினியும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 1200களில் நடந்த மங்கோலியப் படையெடுப்புகளில் இருந்து தப்பிவந்த, அல்லாஹ்வால் கைவிடப்பட்ட இஸ்லாமியர்களில் சில பகுதியினருக்குக் கொஞ்சம் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டதில் ஆச்சரியமிருக்கக் கூடாது… ஆனால் அடிப்படைக் கொலைவெறிகள் தொடர்ந்தனதாம்.

மிகப் பிற்காலத்தில் வந்த அஹ்மெத்ஷா அப்தாலிகள் (இவர்கள் ஆஃப்கனியர்கள்) எல்லாம் வேறு விஷயம் – ஸுஃபிகூஃபிகளும் அவர்களுக்கும் தொடர்பில்லை,

1.6 ஸூஃபியம்/ஸூஃபிஸ்ம் என்பது மென்மையானது அல்ல. ஆதிகாலத்திலிருந்தே அது வன்முறையில் தழைத்தது. (பிற்கால வரலாற்றாளர்கள்(!) அதற்கு ‘அஹிம்ஸை’ ஜீவகாருண்ய/சகோதரத்துவம், அமைதி, அன்புப் பெருக்கு போன்ற ஜிகினாக்களைக் கொடுத்தார்கள் அவ்வளவுதான்)

ஸூஃபிகளின் ஆன்மிக உச்சங்களில் ஒருவர் என அபாண்டமாகக் குற்றம் சாட்டப் படும் ஜலாலுத்தீன் ரூமி பற்றி ஒத்திசைவில் எழுதப் பட்ட ஒரு பழைய கட்டுரை: இதுதாண்டா ஸூஃபி! இவ்ளோதாண்டா ரூமி!! 12/03/2020

உங்களுக்கு என் குற்றச்சாட்டுகள் பிடிக்கவில்லை, மதக் காழ்ப்புடன் பேசுகிறேன் அல்லது மேட்டிமைத் தனமாக உதாசீனம் செய்கிறேன் எனப் பட்டால் – ஆனானப் பட்ட ரூமியடிப்பொடியான ‘நாகூர் ரூமி’ அவர்களே உளறிக்கொட்டி ரூமியையும் ஈவெராமசாமியையும் புளகாங்கிதத்துடன் இணைத்து எழுதியுள்ள இக்கட்டுரையைப் படிக்கலாம், பாவம்!

சரி.

உங்கள் கேள்விக்கு எதிர்வினையாக, மேற்கண்ட விஷயங்களைத் தொகுத்து என்ன சொல்லவருகிறேன் என்றால்: இல்லை. முடியாது. (மாற்றுப் பார்வைகள் இருந்தால், பொதுவில் வைக்கவும்)

2) Islam கனிந்த ஞானிகளை, அது உருவாகி அல்லது முதலில் பரவிய மத்திய கிழக்கு பகுதிகளில் உருவாக்கியிருக்க வாய்ப்பேயில்லை என்று facts based நீங்கள் சொல்ல வருகிறீர்களா? குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றிய தங்கள் பின்னூட்டத்தால் வந்த சந்தேகம்.

2.1 ‘கனிந்த ஞானிகள்’ என்று சொல்வதால் பயமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து அப்படி ஒருவரும் இல்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். வெறும் ஞானிகள் சிலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஸூஃபி தர அல்லது மற்றபடி ஆன்மிக வாதிகளாக இருந்திருக்கவில்லை.

ஸ்பெய்ன் பகுதிகளை இஸ்லாம் ஆக்கிரமித்தபோது ஒரு ஞானி அங்கு ஊடாடினார்: இப்ன் ரஷீத் என அறியப் பட்டவர்; இவர் குறித்து ஒருமுறையாவது ஒத்திசைவில்  கொஞ்சம் எழுதியிருக்கிறேன்:
அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013; பொறுமையிருந்தால் படிக்கவும்.

2,2  குணங்குடி மஸ்தான் ஸாஹிப் குறித்த ஆன்மிகக் கட்டுக் கதைகள் அதிகம், மிக அதிகம்.இவர் வாழ்ந்த காலத்திற்குப் பின் 200 ஆண்டுகள் கூட ஆகவில்லை – ஆனாலும் சமகால ஆவணங்கள் என ஒரு பெரிய முடியும் இல்லை – அவரே ஒருமாதிரித் தன்னிலை விளக்கம்போல எழுதியுள்ள மாதிரி, “இரண்டு கால் நடுவில் ஒருகூடை மயிர்தான்’ – நினைவில் இருந்து எழுதுகிறேன், தவறாக இருந்தால் திருத்திக் கொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

எது எப்படியோ. He is terribly overrated.  தமிழகத்தின் ரூமி அவர். (இதைப் பற்றி முடிந்தால் பின்னொரு சமயம், மன்னிக்கவும்)

சாராம்சமான எதிர்வினை: வாய்ப்பேயில்லை. ஏனெனில் ஊற்றுக் கண்கள் அப்படி, யாரைச் சொல்லியும் குற்றமில்லை. (கபீர் கவிஸ்கி  கஜின் கப்ராந்தி எனச் சொல்லிக்கொண்டு வராதீர்கள் :-) – ஏனெனில் கபீர் பற்றியெல்லாம் எழுத ஆயாசமாக இருக்கிறது)

3) தமிழ் பேசும் முஸ்லீம் வணிகர்கள் நாகூர் ஆண்டவரை தாங்கள் சென்ற இடங்களில் (eg.singapore) வணங்க தர்கா அமைத்ததை எவ்வகையில் பார்க்கிறீர்கள்?

3.1 என் இரண்டு (ஹ்ம்ம், உண்மையாகச் சொல்லப்போனால் ஒன்றரை) கண்களைக் கொண்டுதான் பார்க்க விருப்பம் என நினைக்கிறேன் – ஆனால் அது/Simhapura தொலை தூரத்திலிருக்கிறதே ஐயன்மீர், என்ன செய்ய! + எனக்கு சாளேச்சுரம் வரும் வயதுவேறு. :-(

3.2 பொதுவாக தர்காஹ் என்பது, ஸூஃபி/ஞானி(!) இறந்த/புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி வளர்வது. ஆனால் சென்ற இடமெல்லாம் இந்த தர்காஹ் விஷயத்தை எடுத்துச் செல்வது, மதம்மாறிய முஸ்லீம்களிடம் இன்னமும் பழைய பழக்கவழக்கங்கள் எச்சங்களாக இருக்கின்றன என்பதைத் தான் காட்டுகிறது; அதற்குமேல் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

(இம்மாதிரி நடமாடும், பிறவிடங்களில் முளைக்கும் தர்கா விஷயங்கள், அதன் மானுடவியல் குறிப்பான்கள் பற்றி ஒரு ஆவணத்தைப் படித்த நினைவு… அதில் ஷாஹ் அல்-ஹமீதின் புனைவுத்திறன்களான வியாதிகளை குணப்படுத்துதல், நீரின்மீதான அது தொடர்பான அற்புதங்கள், பறக்கும் பாங்கு, கைகொடுத்துக் காப்பாற்றும் திறன்(!)கள்  எனப் பல குறிப்பிடப் பட்டன; மேலும் இவர், பலப்பல முறை கடற்பயணங்கலைச் செய்து அற்புதங்கள் நடத்தியதாகக் கட்டுக்கதைகள் பல இருக்கின்றன.  கடல்கடந்து வாணிகம் செய்த முஸ்லீம் திரட்களுக்கு இந்த பிம்பங்கள் உதவிகரமாக இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது – ஆகவே ஒருசடலம்-பலதர்க்காக்கள்)

3.3 தர்காக்களின் வரலாற்றிலேயே இந்த நாகூர் விஷயம் ஒரு விசித்திரம் – இதற்கு சிங்கப்பூரில் மட்டுமல்ல, ஜார்ஜ்டவுன் (பெனாங்க்/மலேஷியா) பகுதியிலும் இன்னொரு தர்காஹ் இருக்கிறது. மொத்தம் எனக்குத் தெரிந்து மூன்று!

3.4 இந்தப் பதினாறாம் நூற்றாண்டு ஷாஹ் அல்-ஹமீத் நாகூரி பற்றி இன்னொரு சமயம் எழுதவேண்டும். நாகூர் தர்காஹ் இருக்குமிடம், சுற்றியுள்ள குளங்கள் இன்னபிற – அனைத்தும் தஞ்சாவூர் நாயக்க மன்னர் ஒருவரால் (அச்சுதப்ப நாயக்கர்? பின்னர் ப்ரதாப்சிங்??)  நில/கட்டமைப்பு நீராதாரங்கள் தானமாகக் கொடுக்கப் பட்டவை என நம்பப் படுகிறது – இதில் சிறிது உண்மை இருக்கிறது.

…ஆனால் இன்று வரை அவையெல்லாம் முறையான அரச கட்டளைப் படி இருக்கின்றனவா, மேலதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப் படவேயில்லை. நேர்மையாக இவற்றை அகழ்வாராய்ச்சி செய்தால் பூதங்கள், ஜின்னுகள் கிளம்பலாம். (ஆவணங்கள் சரியாக இருந்தாலும் ஜக்கி வாசுதேவ் அவர்களை உலுக்கும் திமுக ஆட்சி, இந்த அடிப்படை ரெவின்யு ஆவணங்களைச் சரிபார்த்தலைச் செய்யுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?)

4) தங்கள் பதிவு fact based என்பதை முழுமனதோடு ஏற்பினும், மனிதனின் அடிப்படை ஆன்மீக உணர்ச்சியை நம்பாத நாஸ்திகத்திற்கு தூபம் போடுவது போல் தோன்றுகிறது(என்னுடைய புரிதல் குறைவு இருக்க வாய்ப்புண்டு), தங்களுடைய approach கைக்கொண்டால் எந்த மத செயல்பாடுகளும் தப்ப வாய்ப்பில்லை தானே? தவறெனில் திருத்தவும்.

4.1 மானுடத் திரள்களுக்கும் நம்மைப் போன்ற தனிமனிதர்களுக்கும் ஒருமாதிரி ஆன்மிக, ஒருமை-ஒத்திசைவு உணர்ச்சி இருக்கிறது – அது தர்ம, ரித விஷயங்கள் தொடர்பானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை – ஏதோ ஒருமாதிரி ஒரு ஆங்கிலக் கட்டுரையை இதன் தொடர்பாக எழுதியிருக்கிறேன்: guilt, shame, politics, freedom, soaring high & ऋत: reflections & notes 31/01/2021 – முடிந்தால் படித்து வசைபாடவும்.

4.2 ஆனால் தர்மம் எனும் அடிப்படை ஹிந்து மதங்களுக்கே (ஜைனம், பௌத்தம் உட்பட) உரியது; பிறர் அதனை எடுத்துக்கொள்வதிலும் ஒரு பிரச்சினையும் இல்லை.

4.3 ‘மதம்’ என்பதனை ரெலிஜியன்/religion என நீங்கள் எடுத்துக்கொண்டால் – அதற்குக் கிட்டத்தட்ட அருகே வருவது பந்த் (மார்க்கம்?) எனும் சொல்தான். ஹிந்துமதங்களை ரெலிஜியன்கள் எனச் சொல்ல முடியவேமுடியாது – அவற்றின் ஊற்றுக்கண்களும் வேறு, நடைமுறைகளும் குறிக்கோட்களும் வேறு. ஆகவே – தனிப்பட்ட மார்க்கங்களில்/ரெலிஜியன்களில் நீங்கள் சொல்வதுபோல ‘தப்ப வாய்ப்பில்லை’ எனக் கருதலாம்; ஆனால் தர்ம வழிகள் அப்படியல்ல.

4.4 நான் ஒருமாதிரி ஊசலாடிக்கொண்டிருக்கும் நாஸ்திகனாக இருக்கலாம்.  ஆனால் கடவுள், ஈஷ்வர வழிபாட்டை தூஷணை செய்யமாட்டேன். நான் தமிழில் எழுதுபவனாக இருக்கலாம் – ஆனால் அதற்காக, படுமட்டமானவனோ கேவலமானவனோ அல்லன். (ஆனால் கொஞ்சம் அப்படியிப்படி இருக்கலாம்)

… எனக்கும் பிடித்த இஷ்டதேவதைகள், வழிகாட்டிகள் இருக்கிறார்கள் – அவர்களில் ஒருவர் ஸரஸ்வதி. இன்னொருவர் ‘யாதுமாகி நின்றாய்’ காளி.

4.5 ‘தூபம் போடுவது:’ அதிக பட்சம், உங்களையும் என்னையும் சேர்த்து, ரெண்டுபேர் படிக்கும் ஒரு வலைத் தளத்தினால் தமிழுக்கோ சிந்தனைக்கோ ஏதாவது சாதகபாதகம் இருக்கும் என நினைக்கிறீர்கள்? :-)

சாராம்சமாக: சர்வ நிச்சயமாக ஒரு ஹிந்து, தார்மிக் என்பதில் பெருமை உடையவன் நான். அதேசமயம் – என் வழியே உய்ய ஒரே வழி என்று உணர்வதும் இல்லை, உளறிக் கொட்டுவதுமில்லை.

5) தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில்,முஸ்லீம் படையெடுப்புகளில் 4 கோவில்கள் (மதுரை,சிதம்பரம்,காஞ்சி,பூந்தமல்லி) மட்டுமே எனப்படித்தேன் சிலகாலம் முன்பு. ( Source கிடைக்கவில்லை மன்னிக்க..) நீங்கள் விரிக்கும் சித்திரத்தை விடுத்து (கிருஷ்ணகிரி,பண்ருட்டி சிறு நகர தர்கா) விளிம்புநிலையிலுள்ள சமூகத்தின் வயிற்றுப்பாட்டுக்கான முயற்சி என்ற நோக்கில் பார்ப்பது சரியென நினைப்பது secular/left(derogatory sense) எனச் சொல்வீர்களா?

5.1 ஆம்.

5.2  ‘விளிம்புநிலையிலுள்ள சமூகத்தின் வயிற்றுப்பாட்டுக்கான முயற்சி’ – முதலில் ஏழைகள் என்றால் அவர்கள் ஆட்டொமெடிக்காகத் திருடுகளில் ஈடுபடலாம், அதற்கு நாம் முட்டுக்கொடுக்கலாம் என்பது சரியேயில்லை. ஏனெனில் எவ்வளவோ கொடும்பசியில் வாழும் ஏழைகளின் அடிப்படை அறவுணர்ச்சியை நான் நேரடியாகக் கவனிக்கும் பேறு பெற்றிருக்கிறேன். (முஸ்லீம்கள் உட்பட)

5.3 மேலதிகமாக: தமிழகத்தில் பலப்பல கோவில் சார்ந்த இடங்களில் இப்படி இஸ்லாமிய அழித்தொழிப்புகள் நடந்திருக்கின்றன, அவற்றில் பலவற்றின்மீது கும்மட்டங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதை ஆவணபூர்வமாக நிரூபிக்க முடியும்.  இவை வெறுமனே நான் விரிக்கும் சித்திரங்கள் அல்ல. மன்னிக்கவும்.

இந்த அழிவுகளுக்கும் கேவலங்களுக்கும் காரணம் கொர்-ஆன். + மொஹெம்மத் நபியின் வழிகாட்டுதல்கள். + முந்தைய இரண்டின் அடிப்படையான வெறுப்பியம், கொலைவெறிக்கான உந்துதல்கள், பரிந்துரைகள். +இஸ்லாமிய மதத் தலைவர்களின் அயோக்கியத்தனம். (இவர்களில் விதிவிலக்குகள் மிகக்குறைவு)

இம்மாதிரி வெறி விஷயங்களில் க்றிஸ்தவம் அதிக தூரத்தில் இல்லை. அதுவும் எட்டிவிடும் தூரம்தான்.

-0-0-0-0-0-

ஐயன்மீர், முடிந்தவரை நான் சில குறிப்புகளைத் தர முயற்சித்திருக்கிறேன். YMMV.

மற்றபடி.

ஆகவே நாம்தான் எச்சரிக்கையோடு, முன்முஸ்தீபுகளோடு இருக்கவேண்டும், வெறுமனே வெறுத்தோ நொந்தோ புண்ணியம் இல்லை.

Evangelical Christianity and Jihadi Islam are the occupational hazards of being a Hindu.

…erm, on second thoughts, probably the italicized adjectives are irrelevant in the above sentence.

11 Responses to “இஸ்லாம், ஸூஃபிகள், தர்காக்கள் – சில கேள்விகள், குறிப்புகள்”

  1. Muthukumar Says:

    //இம்மாதிரி வெறி விஷயங்களில் க்றிஸ்தவம் அதிக தூரத்தில் இல்லை. அதுவும் எட்டிவிடும் தூரம்தான்.
    No, “I object”, “your honor!”, Already it is there in very worst form, “பாவாடை போர்த்தி” நடக்கின்றது and also by colorful AK47s which continue to fire automatically cycling fresh rounds on us…


    • Agreed. There are no crypto-islamics who move about in the garb of Hindus, after having gotten converted. In this context. Islam is straight-forward religion. It overtly and clearly hates kuf’rs and hinduism. It makes no bones about it. It is very clear.

      But Christianity is not like that. It encourages deceit and lies. Therefore there are crypto-christians. In this context, therefore, it is more dangerous to heathens/kuf’rs than Islam.

      Again, as the target populations, we have to be extra-careful. Yes.

  2. Vel Says:

    //இந்தப் பிந்தைய தர் அல்-ஹர்ப் பகுதியின் இஸ்லாம் செயல்படுவதற்கும் (கொஞ்சம் போலிப்பணிவாக, குறைந்த பட்ச அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கும்போதே மேன்மேலும் அழுத்தம் கொடுப்பது) – இஸ்லாமியமயமாக்கப் பட்ட பகுதிகளில் செயல்படுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன//

    இஸ்லாம் மதமா அல்லது ஒரு தேசியமா? V S நைப்பால் இஸ்லாமை அராபிய தேசியவாதம் என்று கூறுவார். இன்னும் சிலர் (Robert Spencer) இஸ்லாமிய மதமே அராபியர்கள் தங்கள் பேரரசை நிறுவிய பின்பு கட்டமைத்த ஒன்று என்று கூறுகிறார்கள். முகமதே ஒரு கட்டமைக்க பட்ட பிம்பம் என்பது அவர்கள்(Sven Kalisch) கருத்து. இஸ்லாமில் மதம் சார்ந்த கருத்துகள் குறைவாகவும், சமூகம்(qaum) மற்றும் சட்டம்(shariat) சார்ந்த கருத்துகள் அதிகமாகவும் இருக்கிறது. எப்படி இருந்தாலும் இஸ்லாம் நவீன அரசியலமைப்பை கொண்ட தேசியங்களுக்கு பெரும் எதிரியாகத்தான் இருக்கும், பெரும் வன்முறையை கட்டவிழ்த்து கொண்டே இருக்கும் போல.


    • ஐயா, நீங்கள் சொல்வதுபோல பலப்பல காத்திரமான, சர்ச்சைக்குரிய விஷயங்கள் இஸ்லாமில் இருக்கின்றன. போர்வாளையும் விந்துத் துப்பாக்கியையும் ஏந்தியுள்ள மார்க்கம் அது, பிற மார்க்கத்தினரைத் துச்சமாக மதித்துக் கேவலப் படுத்துவது.

      ஆனால், அதாவது ஆகவே, நாம் தான் ஜாக்கிரதை உணர்ச்சியுடன் இருக்கவேண்டும் எனப் படுகிறது அல்லவா?

  3. RC Says:

    அன்பு ஐயா,
    அருமையான பதிவு.தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.
    என் அறிவுக்கு எட்டிய வரையில் 1.4,2 மற்றும் 4.5 தவிர்த்து பிற அனைத்தையும் ஏற்றுக்கொள்ள சிரமமேதுமில்லை.
    1.4+ 1.1,நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லை என்று படுகிறது.
    இஸ்லாம் இறுக்கமான சட்டகம் உடையது என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.
    religion கருதுகோள் வருமுன்பே நாம்-பிறர்,nation என்பதும் christian vs heathen/moor/pagan என்றிருந்தது தானே.
    ஸ்ரேணிகள் வைத்து நீங்கள் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன்.

    //மென்மையான இஸ்லாம் எனவொன்று இருந்திருப்பதாகவோ/இருப்பதாகவோ நான் அறியேன்// என்று நீங்கள் சொல்வதை என்னால் உள்வாங்கமுடியவில்லை.

    அதற்கான தேவை அன்றும் இருந்திருக்கும் இன்றிருப்பதைப்போல.
    பொதுவில் புழங்கும் கருத்துக்களை (ரூமி வகையறா புரூடாக்கள் போல) புறந்தள்ளுவதும், ‘மென்மையான இஸ்லாம்’ என்ற அந்த தேவையே இருந்திருக்காதென தள்ளுவதும் வேறு என்றே நினைக்கிறேன்.

    சுன்னி-வகாபிகள் சூஃபிகளை தங்களுடையவர் என்று நினைப்பதில்லை.சூஃபி ஸ்தலங்களை தகர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை செய்திகளில் பார்க்கிறோம்.

    இந்நிலையில் ஒரு இந்து, மேலிருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என நினைப்பது எவ்வகையில் பொருத்தமாக இருக்கும்? ஆனால் இருவரிடமும் கவனம் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    இரண்டு பொருள்கள்/கருத்துக்கள், ஒன்று போல இருந்தாலோ அல்லது முற்றிலும் வேறாக இருந்தாலோ அங்கு ஒப்பீட்டிற்கான தேவையே இல்லை.
    இரண்டுக்கும் இடையில் ஒரு சம தளமும் வேறுபாடுகளும் ஒரே நேரத்தில் தெரிய வரும்போதே ஒப்பீடு தேவையாகிறது.

    என் குறைந்தபட்ச அறிவு/அனுபவங்களின் வழி நான் ஒரு மென்மையான இஸ்லாமை எதிர்நோக்குகிறேன்.சூஃபிசமாக (sufism) அது இருந்திருக்கலாமா? என்று சந்தேகிக்கிறேன்+குழம்புகிறேன்.சந்தேகத்தின் பலனை அளிக்காதே என்று தரவுகள் வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்.

    ஒரு வாதத்திற்காக,மேற்காசியாவில் முஸ்லிம் ஞானிகள் இல்லாமலிருக்கலாம் என்று ஏற்கலாம்.
    ஆனால் எண்ணற்ற மஹான்கள், சித்தர்கள் வாழ்ந்த நிலம் நம்முடையது.
    பரந்த இந்த நிலத்தில் சில பல சித்தர் கோவில்களுக்கு சென்று வருகிறவன் என்ற முறையில், இஸ்லாமியராய் பிறந்த/பிறக்க நேரிட்ட ஒரு மஹான் கூட இருக்க வாய்ப்பில்லை என்று என்னால் அறுதியிட்டு சொல்லவியலாது.

    நான் சூஃபியை சித்தர் என்று பொருளேற்றமோ / பொருள் திரிபோ (and viceversa) செய்ய முற்படவில்லை. நான் செல்லும் சிலபல சித்தர் கோவில்கள் சில நேரங்களில் தர்காக்களாக பொதுப்பார்வையில் இருக்கின்றன என்பதையே குறிப்பிடுகிறேன். இன்று பல இடங்களில் முளைத்திருக்கும் ஷீர்டி சாய்பாபா கோவில்களை இதில் சேர்க்கவுமில்லை.
    நன்றி தங்கள் நேரத்திற்கு.

    • Muthukumar Says:

      //இந்நிலையில் ஒரு இந்து, மேலிருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என நினைப்பது எவ்வகையில் பொருத்தமாக இருக்கும்?
      We shall not advice how a Hindu can think.
      Please note, you are able ask a Hindu, Can you dare
      vice versa?


      • Sir, thanks for your rejoinder. But, RC is merely placing his cards/arguments on the table which is fine. Like you, he is also a sweet feller.

        ISIS of Khorasan and Taliban are enemies of each other; Taliban has made ISIS a depleted force which only exists in cells (and not in battalion formations), within Afghanistan. ISIS is now steadily undertaking assassinations of Taliban leaders. (however – from our point of view – both are unalloyed scum, and are better dead than alive)

        Similarly, my point would be that: Sunnis are against kuf’rs like us. Same is the case with ALL Sufis (many of then were Shias). They would also want kuf’rs converted, enslaved and what not. But Sunnis (especially of the Salafi kind) are against Sufis. There is always a tussle between them.

        But for kuf’rs like us both represent the same danger. My point was that Sufis ALSO practiced violence, deceit and what not.

        -0-0-0-

        However, as far as discussions on this blog go, each unto his own PoV – based on his/her lived experiences. That’s all. It would be nice if solid evidences are marshaled and examples given, but it is okay.

        We do not have to violently agree. We do not have to wimpily disagree either. The point is to have a civil conversation and perhaps enhance and/or finehone pur points of view, if at all.

        And, depending on where we come from, our mileage varies.

        Thanks for your patience.

        🙏🏿🕉️

      • Muthukumar Says:

        Sir
        Thank you for your patience with me as I learn. I intent not to hurt RC sir. Instead I wondered, how we can ask an “Abstract” average person’s ( here a Hindu) thinking which resulted out of complicated push and pulls. Then wondered about can I ask an “Abstract” Muslim how he reads “kafir” -does not mean Non-Muslim….
        Apologies SirS.


      • Hey, relax – you were NOT rude anything; all of us perfectly understand that there is this certain angst in all of us. And it requires some release once in a while. Perfectly understandable and relatable.

        No need for apologies or whatever. Relax. I don’t think you hurt RC. Considering the fact that he has been around for donkey’s years here, says something about the thickness of his skin as well as his sense of humour and megatonnes of patience.

        I suppose – we are all learning in the process, as to how to grapple with the ghosts of our pasts – so that we are better prepared for the possible futures, that may threaten to become extensions of our pasts.

        🙏🏿🕉️

        ‘Come, walk with me in the mud,’ as Hugh Prather or someone said.

        Now, ‘Onward to the Unknown’ as Aldous Huxley said.

        “इदं न मम”


    • ஐயா, தாங்கள் சொல்ல வருவதைப் புரிந்துகொள்கிறேன். சொல்லவருபவைகளுக்கு ஆமோதிப்புகளும் எதிர்வினைகளும் இருக்கின்றன – ஆனால்…

      ‘மென்மையான இஸ்லாம்’ எனும் கருத்தாக்கம் ‘கரடுமுரடான இஸ்லாம்’ எனவெல்லாம் (+அல்லது இவற்றுக்கு நடுவே இன்னொன்று அல்லது பலப்பல) வெல்லாம் இல்லை, அது இஸ்லாம், மொஹம்மத் நபி, கொர் ஆன், ஃபிக் ஹடீத் ஸிரா தஃப்ஸிர் என எந்த வழியிலும் நிரூபணம் செய்யமுடியாத விஷயம் என நான் நினைத்தாலும் நீங்கள் அப்படி நினைக்கவேண்டிய அவசியமில்லைதான். உங்கள் சொந்த அனுபவம் வேறுமாதிரி இருக்கலாம். 

      நான் ‘கடவுள் இல்லை’ எனச் சொல்லிக்கொண்டே சர்வ நிச்சயமாக ஹிந்துவாக, தார்மீகனாக இருக்கலாம்; ஹிந்து சடங்குகள் எதையும் செய்யாமல், ஏன் அவற்றுக்கு எதிராக இருந்தும் ஹிந்து எனச் சொல்லிக்கொள்ளலாம்;  யாரும் என்னைக் கரித்துக் கொட்டமாட்டார்கள், கொலைவெறியுடன் தாக்கவும் மாட்டார்கள். (ஹிந்துயிஸ்ம் ஹிந்துத்துவா என எப்படிப் பார்த்தாலும் இதுதான் நடைமுறை உண்மை.)

      அதேபோல -அல்லாஹ் இல்லை + மொஹம்மத் நபி சொல்வதைக் கேள்விகேட்பேன் என (ஒரு முஸ்லீமாக நான் இருந்து) சொன்னாலும், என் கருத்துகளை மதித்து என்னைத் தொடர்ந்து சக (சும்மா லூஸ்லவுடுவதையே அல்ல) முஸ்லீமாக ஏற்றுக்கொள்ளும், என் உரிமைகளைப் பாதுகாக்கும் நடைமுறை முஸ்லீம்கள் என இருந்தால், அந்த முஸ்லீம்களை நான் ‘மென்மையான முஸ்லீம்கள்’ எனச் சொல்லக்கூடும்.
      ஆனால் உங்கள் பார்வை உங்களுக்கு.

      இஸ்லாமில் ஞானிகள் இல்லாமல் இல்லை – நானே அவெர்ரீஸ் பற்றி எழுதியிருக்கிறேன். இன்னமும் சிலபலர் உள்ளனர். அவர்கள் தங்கள் அறிவை கொர்-ஆன்+மொஹெம்மத் நபி இஸ்லாமுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாதவரை ஒரு பிரச்சினையும் இல்லை. (எனக்கு)

      எது எப்படியோ. நீங்கள் விழைவது/பார்ப்பது போல ஒரு ‘மென்மையான இஸ்லாம்’ இருந்தால் அது நல்லதே. என் கருதுகோட்கள் இவ்விஷயத்தின் பொய்ப்பதை நான் வரவேற்பேன்.

      நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s