இஸ்லாமிய மாப்பிள்ளைமார்களின் தொடர் ஜிஹாதிக் கொலைவெறி, பாபுஜி, மது கிஷ்வர் – சில குறிப்புகள்

August 12, 2021

முந்தைய பதிவொன்றின் (1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள் 05/08/2021) மீதான ‘டகால்டி’ பின்னோட்டத்துக்குக் கொஞ்சம் விலாவாரியான குறிப்புகள். (நேரடியான பதில்களல்ல – ஏனெனில், அவற்றுக்கு நிறைய தினம் எடுக்கும்)

-0-0-0-0-

வழக்கறிஞர் ஷங்கு தாஸ், பேரா. ஷங்கர் ஷரன் உரைகளைக் கேட்டேன். நீரஜ் அத்ரி’யின் உரையின் சில பகுதிகளை.ச.பா, ஆ.ர – இருவரையும் முன்பு சேம்பிள் செய்த அளவு எனக்கு ஈர்ப்பில்லை, என்பதால் கேட்கவில்லை.

இப்போதுதான் இந்த ஷங்குதாஸ் அவர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்; ஆனால் பேராசிரியர் ஷங்கர்ஷரன் அவர்களைப் பற்றிப் பலகாலமாக அறிவேன். சான்றோர், இவர் வாதங்களையும் தரவுகளையும் உணர்ச்சிபூர்வமாக இல்லாமல் அறிவுபூர்வமாக மட்டுமே அடுக்குவது எனக்கு மிகவும் பிடித்தமானது. (இவரும் மதுகிஷ்வரும் முன்னாள் ஜேஎன்யு மாணவர்கள், பின்னவர் மூலமாகத் தான் இவரை அறிந்தேன்)

ஓரளவு தேசலாக மோப்ளா கலவரங்கள் பற்றித் தெரியும் என்றாலும் நிகழ்ந்தவற்றின் கொடூரங்களும், அவற்றை யார் யார் எந்த அளவு அறிந்தே இருந்தார்கள் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியது ஷங்கு தாஸின் உரை.

+பலப்பல ஆராய்ச்சிகள் வந்துள்ளன; மேலும் சமகால ஆவணங்களும். (உரையாளர்கள் குறிப்பிட்டதற்கும் அதிகமாகவே. எடுத்துக்காட்டாக – வெள்ளைக்காரர்களின் முழநீள மோப்ளா ஜிஹாதிவெறி ஆய்வறிக்கை)

அதாவது, அது ஸர்வ நிஸ்சயமாக ‘முதலாளிகளுக்கு எதிரான தூய வர்க்கம்சார் புரட்சி’ மட்டுமே என்பதெல்லாம் உடான்ஸ் என்று தெரியும். மதம்சார் அழித்தொழிப்பே தான் என்பதில் ஐயம் இருந்ததில்லை. ஆனால் ஹைதர் காலத்திலிருந்து அதை வரிசைக்கிரமமாக தாஸ் எடுத்தவைத்த பாங்கு, சிலபல விஷயங்களை துலங்கச்செய்தது (அதாவது, அது எவ்வாறு வர்க்கப்புரட்சியாக திரித்துக்காட்ட தளங்கள் அமைந்தன என்பதை).

ஹைதர் காலத்துக்கும் மிகமிக முன்பிலிருந்தே இந்த இஸ்லாமிய ‘மாப்பிள்ளை மார்’ அட்டூழியங்கள் இருந்தன – அவை மலையாளத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன; சில வெள்ளைக்காரர்களின் அறிக்கைகளிலும்.

இஸ்லாமிய ‘மாப்பிள்ளை மார்’ என ஏன் சொல்கிறேன்? ஆதிகாலத்தில் யூத, க்றிஸ்தவ மாப்பிள்ளைகளும் இதேபோல, கேரளத்தில் விளிக்கப்பட்டு இருந்தார்கள். க்றிஸ்தவ மாப்பிள்ளைகள் (நஸ்ரானி மாப்பிள்ளைகள்) கொஞ்சமாக ஆடினார்கள். யூத மாப்பிள்ளைகள் (ஜூடா மாப்பிள்ளைகள்) தங்கள் வணிகத்தோடு  நிறுத்தினார்கள். ஆனால் ‘சோனக மாப்பிள்ளைகள்’ என அழைக்கப் பட்ட முஸ்லீம் மாப்பிள்ளைகள்தான் தற்போது ‘மாப்ளாக்கள்’ என அழைக்கப் படுகின்றனர்.

சொல்லப்போனால் – பொயு 800 வாக்கில் பெரும்பதவி வகித்த நாயர்களும் ‘மஹா பிள்ளை’ எனப் பட்டம் கொடுத்து கௌரவமாக அழைக்கப் பட்ட காலங்களும் இருந்ததால் – இதே ‘மஹா பிள்ளை’ பட்டம் கேரளத்தைத் தஞ்சமடைந்த வெளிமதத்தவ/நாட்டினரின் பிரதிநிதிகளுக்கும் அளிக்கப் பட்டது எனும் ஒரு சரடும் (தரவுகளின்மீதானது தான்) இருக்கிறது. (மஹா பிள்ளை மறுவி மாப்பிள்ளை என்பது இதன் சுருக்கம். கவனிக்கவும்: இந்த மாப்பிள்ளை, மருமகன் வகையல்ல)

இன்னொரு விஷயம்: அப்துல் ரஸ்ஸாக் எனும் பயணி பொதுயுகம் 1440களில் கேரளப் பயணம் வந்தபோது இந்த மாப்பிள்ளைகளின் அடாவடி வணிகம், காவலர்படை, தான்தோன்றித்தனமாக மஸுதிகள் கட்டுவது  போன்ற அராஜகங்கள் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட்டிருந்தாலும், வாஸ்கோ-ட-காமாவின் (1498?) வருகைக்குப் பின் அது இன்னமும் மோசமாகியது – பின்னர் தொடர்ந்து மலையாள ஹிந்து அரசர்கள், போர்சுகீஸியர்கள், பிற்பாடு ஆங்கிலேயர்கள், ஃப்ரெஞ்ச் எனப் பலவாறும் கூட்டணிவைத்து, செய்நன்றி மறத்தல், அடுத்துக் கெடுத்தல் எனப் பலவிஷயங்கள் செய்து அட்டூழியங்கள் செய்தனர். ஹிந்து கொலைகளும் – அவர்கள் ஹிந்து என்பதற்காகவே செய்யப் பட்டவை – அமர்க்களமாக நடந்தன.

ஹைதர் அலி திப்புதுப்பு எல்லாம் 1750களுக்குப் பின்னர்தாம். இந்த ஜிஹாதிகளுடன் கூட்டணி அமைத்து, மாப்பிள்ளைமார் இன்னமும் ஆடினார்கள் – கொத்துக்கொத்தாகக் கொலைகள், கற்பழிப்புகள், எண்ணிறந்த மதமாற்றங்கள்…

பின்னர் 1836 ஆண்டிலிருந்து (என நினைவு) தொடர்ந்த கொலைவெறி நிகழ்வுகள் கிட்டத்தட்ட வருடாந்திர தெவசம் போல அரங்கேறின – அதன் உச்சம் 1921.

மேலும் இன்றுவரை தொடர்ந்து சிறிய அளவில் கொலைகள் தொடர்ந்து நடந்தவண்ணம்தான் இருக்கின்றன.

நிகழ்காலத்திலேயே அதன் கொடூரத்தன்மை ஆவணமாக்கப்பட்டமை, கடந்துசெல்ல முயலப்பட்டமை – சிறப்பாக எடுத்துரைத்தார் தாஸ்.

+1. இன்னமும் சொல்லியிருக்கலாம், ஆனால் பொதுவாக அன்னிபெஸண்ட் நீலாம்பூர்ராணி சங்கரன்நாயர் என மட்டுமே சொல்லி நிறுத்திவிட்டார். இவர்கள்தாம் பரவலாக அறியப் பட்டவர்கள் என்பதனால் இருந்திருக்கலாம்.

ஷங்கர் ஷரனின் உரை மிகச்சிறப்பாக அமைந்தது. It was uneasy to listen to certain conceptions being so substantively challenged. காந்தி பல விஷயங்களை (எ.கா. இஸ்லாமிய வரலாறு) அறியவில்லை என்பது மட்டுமல்ல, அறிய முனையவில்லை என்பது மட்டுமல்ல, அது பற்றி தான் கொண்டிருந்த முன்முடிவுகளை *எக்காரணம்* கொண்டும் மாற்றிக்கொள்ள முனையவில்லை, என்பதற்கு ‘மோப்ளா பெருங்கொலைகள்/ கிலாஃபத்’ சம்மந்தமான சார்ந்து அவர் அடுக்கிய சான்றுகள் very sobering.

ஷங்கர்ஷரன் ஒரு படிப்பாளி, சான்றோர். இவர்கள் போன்றவர்களின் பேச்சுக்கச்சேரிகள் நமக்கு இலவசமாகக் கிடைப்பதற்கு நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்தான்.

கிலாஃப த் தொடர்பாக – நம் பாபுஜி இன்னமும் சில மிகவும் வருந்தத்தக்க விஷயங்களையும் (கேவலமாக இருந்தாலும், ஒரு நல்லெண்ணத்துடன் செய்தார் என சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம்) செய்தார்.

அவற்றில் சிலவற்றைக் குறித்த விவரணைகள் ப்ரிட்டிஷ் உளவுத்துறையால் சேகரம் செய்யப்பட்டு, பின்னர் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலங்களில் மராத்திய அரசால் முறையாக ‘சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்கள் குறித்த அரசுஆவணங்கள்’ என ஒருமாதிரி பதிப்பிக்கப்பட்டன. (ஆனால் அவை குறித்து எழுதவேண்டுமென்றால் அதிகநேரம் எடுக்கும்)

ஆர்மீனியன் அழித்தொழிப்பை சற்றுமுன்னர் நடத்திய ஓட்டோமான் சாம்ராஜ்ய /காலிஃபா’வுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் (எதுவும் தனக்குத் தெரியாது என்று தொடர்ந்து அறிவுத்தும்கொண்டு!), காந்தி நன்னடத்தை சான்றிதழ் வழங்குவதை எல்லாம் என்னவென்பது!

ஆர்மினியன், குர்தி அழித்தொழிப்புகள் பலப்பல காலமாக, உத்மன் ஸுல்தான்களால் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருந்தன.

பிரச்சினை என்னவென்றால், பாபுஜியோ சாச்சாவாரோ நிறையப் படிப்பு, உலக அறிவு என்றெல்லாம் மெனக்கிடவில்லை. ஆனால் நல்லவேளை, பாபுஜி உலகவரலாறு, பாரதவுளறாறு என்றெல்லாம் எழுத முனையவில்லை.

ஸ்வாமி ஷ்ரத்தானந்துடனான காந்தியின் உரையாடல், எந்த ஒரு காந்தி மதிப்பாளரையும் வருந்தச்செய்யும்.; ம்

ஐயன்மீர், இன்னமும் பலப்பல அதேபோல இருக்கின்றன; என்ன செய்வது சொல்லுங்கள்… அரசியலைப் பொறுத்தவரை முன்னுக்குப்பின் முரணாகவே இயங்கிவந்திருக்கிறார் பாபுஜி – அவற்றால் பலப்பலர் (=ஹிந்துக்கள்) அநியாயமாக இறந்துமேகூடப் போயிருக்கிறார்கள் – கற்பழிப்புகளையும் கொலைகளையுமே விடுங்கள். (ஆனால்,  இம்மாதிரிச் சோகங்களையும் முரணியக்கம் என உங்கள் பேராசான் முட்டுக்கொடுக்காமல் இருந்தால் புண்ணியம்!)

அஃப்கான் அரசருக்கு அழைப்பை காந்தியே கைப்பட எழுதினார் என்ற வாய்மொழித்தகவலை நான் நம்புவதாக இல்லை. காத்திரமான ஆதாரங்கள் (காந்தியின் எழுத்துக்களில் இருந்தே!) எடுத்துச் சொன்ன இந்த உரையில் அப்படி ஒரு நிரூபிக்கவியலா தகவலை எடுத்து வைக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அது வாய்மொழித் தகவல் மட்டுமேயல்ல. காந்தி கைப்படத்தான் எழுதினார், ஆனால் தனக்காக-தன்னிடம் இருந்து அல்ல.

அவர் நண்பர்களான அலிசோதரர்களுக்கு ‘உதவ’த்தான் எழுதினார். (இதுவும் இன்னொரு சிடுக்கல் விவரணை, என்னிடம் தரவுகள் இருக்கின்றன- ஆகவே, இன்னொரு சமயம் பார்க்கலாம்)

அவ்வுரையின் முடிவில் நீங்கள் மதிக்கும் தொகுப்பாள அம்மையாரின் வார்த்தைகள் அதீத காட்டமாக unfairஆக இருந்தன.
 அவருக்கு காந்தி குறித்த ஏமாற்றங்கள் இருப்பதை புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் ஒரேடியாக கன்னாபின்னாவென திட்டித் தீர்த்தார்.

What is fair and what is unfair, need one tell us, Phaedrus?

மதுகிஷ்வர் அவர்களின் கோபம் புரிந்துகொள்ளக் கூடியது. ஏனெனில் அவர் அகதிகளின் குழந்தை, பாபுஜியின் அரசியல்-களச்செயல்பாடுகளால் எதிர்மறையாகப் பாதிக்கப் பட்டவர். இருந்தாலும் அவர் காந்திக்காக, அவருக்காக வக்காலத்து வாங்கி, லிபரல்-இடதுசாரிகளிடம் மோதி நிறையக் கஷ்டப் பட்டிருக்கிறார். நியாயமான ரீதியில் அவர் பெற்றிருக்கவேண்டிய – அகடெமிக்ரீதியான அவருடைய வளர்ச்சிப் பாதையைத் தியாகம் செய்தார். (அவர் இவற்றைப் பற்றியெல்லாம் பிரகடனம் செய்வதில்லை – ஆனால் நான் செய்கிறேன்)

நாமெல்லாம் வெறும்பேச்சு பேசுபவர்கள், களத்தில் ஒன்றும் செய்யாமல் விமர்சனங்களில் ஈடுபடுபவர்கள்; மாறாக, வருடக்கணக்காகப் போராடி நடைபாதை+சிறு வியாபாரிகளின் அடிப்படை உரிமைகளை மீட்டுத் தந்ததிலிருந்து – அவர் செய்துள்ள அசாத்தியமான விஷயங்கள் ஏராளம், ஏராளம். கும்பல்கும்பலாக  நடமாடும் இடதுசாரிகள், காந்தியர்கள் செய்யாத பலப்பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். ஜம்முகஷ்மீர் விஷயங்களில் அவர் செய்துள்ள அளவுக்கு, வேறு எவரும் ஒரு மசுரையும் பிடுங்கவில்லை என்பதை நான் அறிவேன். இம்மாதிரிப் பலப்பல.

ஓரிருமுறை இவற்றைக் குறித்து இப்பதிவுகளில் எழுதியுமிருக்கிறேன் என மங்கலாக நினைவு.

அண்மையில் 2018ல் நடந்த ‘கதுவா கற்பழிப்பு(!)’ விஷயம் – பொய்பொய்யாக இஸ்லாமிய ஜிஹாதிகளால் ‘ஹிந்துக்கள் ஒரு முஸ்லீம் சிறுமியை, ஒரு கோவிலில் வைத்துக் கற்பழித்துக் கொலை செய்தனர்’ எனப் பெரும்பரப்புரை செய்யப் பட்டது குறித்த சோகம்.

அது குறித்த மகத்தாக கள ஆராய்ச்சியும் ஆய்வும் செய்து (சுமார் 2 வருடங்கள்!) மிகுந்த தைரியத்துடன் ஒரு ஸ்காலர்லி புத்தகத்தை, தரவுகளுடன் எழுதியிருக்கிறார். இது வெளிவர அத்தனை பிடுங்கல்கள். தரமாக ஆராய்ச்சிக்கும் அயோக்கிய எதிர்ப்புகளுக்கும் பின்னர் அவர் எழுதிய் மோதிமீடியாமுஸ்லீம்கள் புத்தகம் இன்னுமொரு சான்று.

இம்மாதிரி விஷயங்களில் சுமார் 1% செய்துவிட்டு வந்தால் ஓரளவு நீங்கள் சொல்வதைப் போன்ற ‘இடதுகையால் புறந்தள்ளல்’ அல்லது நக்கல் விவகாரங்களில் ஈடுபடலாம். (ஆனால் உங்கள் குறிப்புகளைப் புரிந்துகொள்கிறேன்)

அவர் சொன்னமுறை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவர் சொன்னதில், பாபுஜியைப் பற்றிய விமர்சனங்களில், ஒருவிஷயம் கூடத் தவறேயில்லை. (நானுமே முற்காலங்களில் அவருக்கு ஒருமாதிரி ‘ரிஸெர்ச் அஸ்ஸிஸ்டெண்ட்’ போலப் பணி செய்து பல தரவுகளை அளித்திருக்கிறேன்).

அவர் தம்மைக் காந்தியின் ஆராதகர் என வரிந்துகொண்டு பலவிஷயங்களைச் செய்தவர் – இவற்றில் பலப்பல வெளியே தெரியவருவதும் இல்லை, அவர் அதற்கு மெனக்கிடுவதும் இல்லை.

காந்திஜியின் காந்திகிரி பற்றி மேன்மேலும் அறிந்துகொண்ட ஒருவரின் அறச்சீற்றம் என அவருடைய கோபத்தை எடுத்துக்கொள்ளவும். எனக்கும் காந்தியை அனாவசியமாகக் கரித்துக் கொட்டுவதில் ஒப்புதலில்லை. இது குறித்து அண்மையில் எழுதியும் இருக்கிறேன்.

ஆனால் அவருக்கு அவர் செய்யும் விஷயங்களைச் செய்ய அனைத்து உரிமையும் அறரீதியான அடிப்படையும் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு (நான் உட்பட) அவரை  வெறும் விமர்சனம் செய்யக்கூட அருகதையில்லை என்பதுதான் நிஜம்.

என்ன மசுத்தைச் சாதித்திருக்கிறோம் நாம், சொல்லுங்கள்?

வழக்கமாக ஹிந்துத்வாக்காரர்கள் காந்தி பற்றி சொல்லும் மலினமான பழிகளுக்கெல்லாம் சென்றுவிட்டார்: பகத்சிங் தூக்கை காந்தி எதிர்க்கவில்லை வகேரா வகேரா. பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட சகாக்கள் பெயர்கள் கூட அவருக்கு நினைவுதவறிவிட்டது நல்ல தமாஷ் தருணம். அந்த அளவு கோபாவேசம்!

I mean it’s a genuine mistake, it could happen to anyone. But I found it hilarious that she was so animated that Gandhi was allegedly unsympathetic to Bhagat Singh and his comrades (a bogus charge of Left and Right), when she herself managed to forget the name of Rajguru in that very instance.

ஹ்ம்ம் – இந்த பகத்சிங்-காந்தி விஷயத்தில் எனக்குச் சில, தரவுகள் சார்ந்த கருத்துகள் இருக்கின்றன (பின்னொரு சமயம் பார்க்கலாம்).

ஆனால் உணர்ச்சியின், அறச்சீற்றத்தின் பிரவாகத்தில் அவருக்குப் பெயர் மறந்துபோனதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை. ஆனால் நகைச்சுவைதான்.

அதன்பிறகு ஒருவர் வழமையான சாவர்க்கரிய insinuationகளை அடுக்கினார், காந்தி ப்ரிடிஷ் ஏஜண்ட் என்று சொல்லாத குறை. ஷங்கர் ஷரனின் நல்லுரைக்கு பிறகு இவரை மாற்றுக்குறைவான முத்தாய்ப்புகளாக இருந்தன.

அவரும் பெரியவர்; கஷ்மீரி பண்டிட். இவரைக் குறித்துச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். (இருவர் இருந்தனர்)

“சாவர்க்கரிய insinuation?”…மிக எளிதாக, லிபரல்-இடதுசாரி போலப் பேசுகிறீர்கள்! இந்த ‘இன்ஸின்யுவேஷன்’ என்பதற்கான தரவுகள் உங்களிடம் இருக்கின்றனவா?

… ஆம்பேட்கர் வெள்ளைக்காரர்களின் ஏஜெண்ட் (ஆக இருந்தார், பின்னர் இல்லை) எனச் சொல்வதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும் – காந்தி விஷயத்தில் பல வெள்ளைக்காரர்கள் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர் என்பதும் நிஜம். இன்னமும் தரவுகள் இருக்கின்றன. (இவை பற்றி, இன்னொரு சமயம், அவசியமென்றால்)

அடுத்த நாள் உரையில்  நீரஜ் அத்ரி கோட்ஸே புஸ்தகத்தை முன்வைத்துத் தொடங்கியது எரிச்சலைக் கிளப்பியது. வலதில் பலர் மோஹன் பக்வத்தின் DNA கூற்றால் கடுப்பாகியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ‘ஐயகோ தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா’ வகை கோபப் புலம்பல். எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதிது என்பதால் வேடிக்கையாக இருந்தது.

‘வேடிக்கை.’

இந்த டிஎன்ஏ என்பதைக் கேட்டாலே அல்லது பார்த்தாலே ‘டிஎன்ஏவையும் டெத்ஏடரையும்   பார்த்தால் மொதல்ல டிஎன்ஏவ அடீ’  எனச் சொல்லத் தோன்றுகிறது. மற்றபடி சோகம்.

நீரஜ் அத்ரி அவர்களும் ஒரு ஸ்காலர். ஆனால் உங்களுக்கு உங்கள் கருத்துக்கு எல்லாம் உரிமை இருக்கிறது. (கீழே அட்ஜஸ்ட் செய்துவிட்டீர்கள்)

ஆனால். அன்பர் ஹர்லன் எலீஸன் சொல்வது போல, ~~~ “உங்களுடைய (வெறும்) கருத்துக்கு உங்களுக்கு உரிமை இல்லை. தரவுகளின் பாற்பட்ட உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அறியாமையில் உழல யாருக்கும் உரிமை இல்லை.”

ஆனால் ஒருவழியாக தலைப்புக்கு வந்தபோது நன்றாகப் பேசினார் அத்ரி: எப்படி இன்றும் பொது ஊடகங்களில் மிக மிக நேர்த்தியாக சொல் சிலம்பாட்டம் ஆடி, நூறு வருட வரலாறு கூட மாற்றப்படுகிறது என்று பேசினார். The unpacking of the suggestive wordings and twists was very well done. ஒவ்வொரு சொல்லும், எவ்வகையான மனப்பிம்பத்தை ஏற்படுத்தும் வகை மிகக் கவனமாக எடுத்து அடுக்கி பொதுவெளியில் இறக்கிவிடப் படுகின்றன என்று நுட்பமாகப் பேசினார். Insofar as it is applicable to so many writings in media in general, this had a lot of value. உரையைக் கேட்டவர்கள் அவர் குறிப்பிட்ட வழிகளை வைத்து பொதுவாகவே ஊடக செய்து படையல்களை கட்டுடைத்து மகிழலாம்.

முந்தைய தினமே கடிபட்டதால் இருமுறை நாணிய நான், கேள்விபதிலுக்கு தங்கவில்லை.

நானும் அப்படியே; பலருக்கு, கேள்வி கேட்கவோ, உரை தொடர்பான உபரித் தகவல்களைத் தெரிவிக்கவோ பயிற்சியில்லை என்பது சோகம்.

கேட்டவற்றில் மிகச்செறிவான உரை: ஷங்கர் ஷரனின் உரை தான்.நேற்றிலிருந்து அவரது பிற உரைகளைத் தேடிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.(அடடே, அதிகமாக லஃப்ஸ் இஸ்தமால் செய்யாமல்  ஷூத் ஹிந்தி பேசினால் எனக்கும்கூட அனேகமாக புரிந்துவிடுகிறதே!)

+108. இஸ்லாம் பற்றிய இவருடைய சமனம் சார்ந்த உரைகள் அருமையானவை. பொதுவாகவே இவருடைய பராக்கிரமத்தை விரும்புபவன் நான். (துணைவியும் அப்படியே)

செறிவான உச்சம் ஒன்றை ஷரனின் உரை நெருங்கியது, ஆனால் நேரக்குறைவினால் அப்புள்ளியை வளர்த்தெடுக்கவில்லை: காந்தியின் உளவியல். மேலோட்டமான ஃப்ராய்டிய எழவுகூட்டல் போல் அல்லாமல்,  ஷங்கர் ஷரன் நெருங்கிய புள்ளி செழுமையான ஒன்று, வேரொறு சந்தர்ப்பத்தில் அவர் இதை விரித்துப் பேசினால் நன்றாக இருக்கும்:

ஹ்ம்ம்… எனக்கு அப்படிப் படவில்லை. ஏனெனில் காந்திஜியை, பாரதீயர்கள் ‘லிவரேஜ்’ செய்ய அம்மாதிரிப் பார்வைகள் உதவுமா என்பது எனக்குச் சந்தேகமே.

காந்தி தன் பட்டறிவின் மீதான நம்பிக்கையுடன், தான் சந்தித்த மனிதர்களை வைத்து, படிக்கநேர்ந்த  (மிகச்) சிலநூல்களை வைத்து தனக்கென புரிதல்களை ஏற்படுத்திக்கொண்டு முன்சென்றவர். அனேகமாக எவற்றின் பின்புலத்தையும் academicஆக முற்றாராயாமல், பழகி/பார்த்த மனிதர்கள் மூலம் மனபிம்பம் ஏற்படுத்திக்கொண்டு கருத்துதிர்த்து, பின்பு சிலவற்றை மாற்றிக்கொண்டு, பலவற்றை பிடிவாதமாக மாற்றிக்கொள்ளாமல் (நம் எல்லாரையும் போலவே) முன் நகர்ந்தார்.

எல்லாம் சரி. ஆனால் – அவருடைய பள்ளி அனுபவங்கள், இளமையில் நடந்த சிலபல விஷயங்கள் அவரை மிகவும் பாதித்திருக்கின்றன. அவருடைய இந்த இஸ்லாமிய-சகோதரத்துவ சொதப்பல் உட்படப் பலவற்றுக்கும் காரணங்கள், ஊற்றுகள் ஆங்கே இருந்திருக்கின்றன.

அவரது பால்யத்திலும், இளமையிலும் அவரது vantage, professional உறவுகள்,  வழியே ஏற்பட்ட சாய்வுகளை ஒட்டியே, பிற்கால உண்மைகளை பெருக்கியும், குறைத்தும் மதிப்பிட்டுக்கொண்டிருப்பார் (நம் எல்லாரையும் போலவே!)

vantage – என்பதால் என்ன சொல்லவருகிறீர்கள்?  எனக்குப் புரியவில்லை. ஆனால் பால்யப் பிராய பயங்களும் படிப்பினைகளும் அவரை மிகவும் பாதித்திருக்கின்றன.

தான் சத்ய அன்வேஷியாக இருப்பதைப் பற்றி அவருக்கு இருந்தது நிச்சயமாக பம்மாத்து வேடமல்ல. அவர் ஆதமார்த்தமாக நம்பியது. ஆனால் அபத்தகருத்துகள் பலவற்றைத் தொடர்ந்து சொன்னவர், முன்சொன்னவற்றுக்கு பின் செய்த செயல்களுக்கும் புதிது புதிதாக காரணங்கள் கற்பித்தவர். சத்ய அன்வேஷியால் கசப்பான உண்மைகளை ஏற்க முடிந்ததா. இல்லை தன் மிக ஆழமாக நம்பியவற்றையே சத்தியம் என்று கொண்டாரா? இதெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது? பொதுவாக மனிதர்களுக்கு இது எவ்வாறு நிகழ்கிறது? காந்தி மாதிரி ஒரு sway கைகூடியவர்க்கு இப்படிப்பட்ட மனநிலை நிகழுமாயின், அது ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் என்ன.
இப்படி பல கேள்விகள் எழுப்பி நின்றது அவ்வுரை.

பாபுஜி எனும் ஒரு ஆளுமையை, ‘மஹாத்மா’ என்று விரிக்காமல் இருந்தால், சிலபல விஷயங்கள் புரிபடலாம்; நானும் இப்படி முயன்றிருக்கிறேன். ஆனால், ஒரு சுக்கு உபயோகமும் இல்லை. (எனக்கு)

நான் அவரை by default நேருவின் நோக்கிலிருந்தே  பார்க்கிறேன் (அடேங்கப்பா!).

அப்படியென்றால் அது, “எனக்கென்ன ஆதாயம் அதில்?”

மரியாதையும், அதிசயமும், ‘இவ்விவ்விஷயங்களில் கிழவர் சரிப்படமாட்டார்’ என்கிற ஜாக்கிரதை உணர்வும், அவர் திரட்டிய இந்த coreஐச் சுற்றி நாம் நவயுகம் புகுந்தாகவேண்டும் – பல வகையில் அது அவர் நெஞ்சை அறுக்கும் என்றாலும்….என்றவாறு.

இதில் அகங்காரமும், ஒரு வித delivererஇன் கீழ்நோக்கு மக்கட் பிரேமையும், எல்லாத்தை விட முக்கியமாக ஒரு புறவயத்தன்மையும் (சுய பாவனையாகவேனும்) மேலோங்கி இருக்கிறது.

இவை எதுவும் காந்தியிடம் வெளிப்படையாக இல்லாதவை. உள்ளூர இருந்தவையாக அவர்களது விமர்சகர்களால் குற்றஞ்சாட்டப்பட்டவை. ஆனால் அவர் தன்னளவில் இவ்வித கணக்குப்போடும் மனநிலைகளை கடந்தவராக தன்னை உணர்ந்தார் என்கிற தோற்றமே அவர் எழுத்துகளில் தெரிகிறது.

நீங்கள் பாபுஜியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள்; நான் இவ்விஷயங்களை லூஸ்ல வுட்டுவிட்டேன், நன்றி!

அதனாலேயெ இவ்வகை ஆய்வு சுவாரஸ்யமானதாக இருக்கும்.

மண்வெட்டிதாஸத்தனமாகத் இருக்கும். தேவையா?  அலுப்பாக இருக்கிறது. :-(

P.S: நீங்கள் லிங்க் கொடுத்த ஜூடித் ப்ரௌன் புஸ்தகம் $44. அதுவும் பேப்பர்பேக். எங்களைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது உங்களுக்கு? பேசாமல் ஒன்று செய்யுங்கள், நீங்கள் அதை படித்தபோது எடுத்த குறிப்புகளை எடுத்துப்போடுங்கள் நாங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடுகிறோம்.

நான் குறிப்புகள் எடுப்பேன் – ஆனால் அந்தக் குறிப்புகளை என்னால் படிக்கமுடிவதில்லை, என் கையெழுத்தின் அழகு அப்படி. இருந்தாலும் அம்மணியின் புத்தகம் குறித்து, இன்னொரு சமயம், அதற்குத் தேவையிருந்தால் பார்க்கலாம்.

எனக்கு, அந்தப் புத்தகத்தின் மையக்கருத்து கொடுத்தது மாளா சோகமும், ‘இவ்ளோதானா நீங்களும், பாபுஜி’ எனும் அங்கலாய்ப்பும் தான்.

ஆனால் ஸ்வாமி ஷ்ரத்தானந்த கொடுத்தது, ஒரு மாபெரும் தொடர் அதிக அழுத்த மின்சார அதிர்ச்சி.

நான் மீளவே இல்லை.

எனக்கு என் பஹுரூபி காந்தியும், இந்தக் கட்டுரையின் (=மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் ஹிந்துத்துவரை அவர்காலத்திற்கேற்ற பார்வையுடனும், பரிவுடனும், தற்கால அரசியல் அவசியங்களுடனும் காத்திரமாக அணுகுவது எப்படி 11/08/2021) சாரமும் போதுமானவை.

நன்றி.

7 Responses to “இஸ்லாமிய மாப்பிள்ளைமார்களின் தொடர் ஜிஹாதிக் கொலைவெறி, பாபுஜி, மது கிஷ்வர் – சில குறிப்புகள்”


  1. / இதே ‘மஹா பிள்ளை’ பட்டம் … கவனிக்கவும்: இந்த மாப்பிள்ளை, மருமகன் வகையல்ல/

    நன்றி.அதேநேரம் வடகேரள முஸ்லிம் அரசகுடும்பங்களின் சம்மந்தம் செய்யும் உரிமை உடையவர் என்ற்ற அர்த்தத்திலும் ஹைதர்/திப்பு காலத்தில் அந்த பெயர் வழங்கப்பட்டு வந்ததை ஷங்கு தாஸ் குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன்.
    அதாவது மருமகன் என்ற அர்த்தம் தோற்ற்றுவாய் அல்ல, ஆனால் அந்த அர்த்தம் ஒரு வித functional நீட்சி பெற்றது, என்பது போல.
    /சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்கள் குறித்த அரசுஆவணங்கள்’ என ஒருமாதிரி பதிப்பிக்கப்பட்டன. (ஆனால் அவை குறித்து எழுதவேண்டுமென்றால் அதிகநேரம் எடுக்கும்)/நேரம் ப்ராப்தி ரஸ்து என்று வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்.

    /காந்தி கைப்படத்தான் எழுதினார்/
    :-( என்னங்க இது :-/ 
    அப்புறம் என்ன God Save the King, dominion எல்லாம்.Is this a cause worthy of committing treason against the Crown?! 

    /அவர் செய்துள்ள அசாத்தியமான விஷயங்கள் ஏராளம்…….
    …இடதுகையால் புறந்தள்ளல்
    /
    அவரை அறியேன். தகவல்களுக்கு நன்றி.

    முன்பொரு ஸ்வாமிஜியை அவர் எடுத்த பேட்டிக்கு சுட்டி அளித்திருந்தீர்கள். அந்த ஹிந்தி என் pay-gradeக்கு மேல் இருந்தது அதனால் பாதியில் விட்டுவிட்டேன்.

    அறியாத ஆளுமையை நான் நிராகரிக்கவெல்லாம் இல்லை.

    அவர் ‘நான் ஒரு காலத்தில் வியந்த காந்தியை வியந்து பார்த்தேன், இன்று வெறுக்கிறேன்’ என்று வெளிப்படுத்திய கசப்பு, அவர் பயணத்தைப் புலப்படுத்தியது.

    My reaction was to the choice of words, and reductive expressions – that was being made to a receptive audience (live comments section நரம்புபுடைக்கும் HindutvaMax). 

    But then I am also acutely aware that her comments were right on the heels of a talk of a gory massacre, where Gandhi doesn’t come out looking good. 

    /அவர் செய்யும் விஷயங்களைச் செய்ய அனைத்து உரிமையும் அறரீதியான அடிப்படையும் இருக்கிறது./Noted.

    /“சாவர்க்கரிய insinuation?”…மிக எளிதாக, லிபரல்-இடதுசாரி போலப் பேசுகிறீர்கள்! இந்த ‘இன்ஸின்யுவேஷன்’ என்பதற்கான தரவுகள் உங்களிடம் இருக்கின்றனவா?/
    அந்த இரண்டு பெரியவர்களில் ஒருவர், காந்தி முதல் உலகப்போர் முடிவில் இந்தியாவுக்குள் புகுந்தது ஒரு parachuting, “isn’t it too much of a coincidence” என்கிற ரீதியில் suggestiveஆக பேசினார். 

    /“சாவர்க்கரிய insinuation?”…மிக எளிதாக, லிபரல்-இடதுசாரி போலப் பேசுகிறீர்கள்! இந்த ‘இன்ஸின்யுவேஷன்’ என்பதற்கான தரவுகள் உங்களிடம் இருக்கின்றனவா?/

    Looks like I am going to have to take this back.
    மூணு நாள் தேடியும் I am unable to locate anything where Savarkar himself accused Gandhi.

    I only get blunt assertions in RW twitter. I may have incorrectly ascribed this to Savarkar himself. 

    Am I in the wrong? Did Savarkar himself never accuse Gandhi of being a British puppet, despite clear articulation of their differences?

    /பொதுவாகவே இவருடைய பராக்கிரமத்தை விரும்புபவன் நான்/

    காந்தி, இக்பால், அரவிந்தர் பற்றிய ஷங்கர் ஷரன் உரை ஒன்றை நேற்று கேட்டேன். மிகச் செறிவான உரை. உடன் பேசிய  இருவர் கொஞ்சம் கொதிப்பாகவோ, கிண்டல் த்வனியுடனோ பேச, இவர் மிக நிதானமாக தகவல்கள் தளும்ப பேசினார்.

    அறிமுகத்துக்கு நன்றி. 

    1/n


  2. /காந்திஜியை, பாரதீயர்கள் ‘லிவரேஜ்’ செய்ய அம்மாதிரிப் பார்வைகள் உதவுமா என்பது எனக்குச் சந்தேகமே./

    தனிப்பட்ட அளவில் எனக்கு உதவும் :-)Jokes apart, I do think it will be generally instructive : போதுமான அறிதல் கிட்டுவதற்கு வெகுமுன்னரே பொறுப்புகளை பெற்றுவிடக்கூடிய வாய்ப்புகள் பலருக்கு பெறுகியுள்ள இக்க்காலத்தில், முன்முடிவுகள் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறோம் என்ற பிரக்ஞை தயக்கத்தைத் தரும். ஆனால் அதற்காக இயங்காமல் இருக்க முடியாது. பாரதூரமான விளைவுகள் விளைவித்தபடி

    உதாரணமாக நேரு, தன் குறைபாடுகளைப் பற்றியும், தன் மீது மக்கள் மிகையான பிரேமையும், நம்பிக்கையும் வைத்திருப்பதைப் பற்றியும் பதிவு செய்துகொண்டே வருகிறார். கலக்கமும், நெகிழ்ச்சியும் அவரை ஒருசேர உந்துகின்றன. 

    மாறாக, காந்தி தன் நிலைப்பாடு மாற்றங்களைக் கூட மிக நிதானமாக – with an appearance of control – பதிவுசெய்கிறார்.

    அதற்கும் வியாக்யானங்களும், விமர்சனங்களும் உண்டு.
    தகுதி(!)’க்கு மீறீய பொறுப்பு கைவந்தபின், லட்சியவாதத்திற்கே உரிய பிடிவாதத்துடன் (வீம்புடன்?), தன் முன் முடிவுகளுக்காக பெரும்விலைகளை தரத் தயாராக இருந்தது காந்தியா, நேருவா – என்றால் எளிதான விடை இல்லை (என்னளவில்).

    Nehru’s idealism was – contary to RW opinion- tempered with pragmatism to a far greater extent. At the very least, many of the criticisms against him are made with the benefit of hindsight. But Gandhi seemed bull-headed so often even when shown to be practically in the wrong in-vitro! Often taking it beyond the realm of argument to his  ‘inner-voice’ and so on.

    But then he also beating a new path, so how do we even compare!

    /vantage – என்பதால் என்ன சொல்லவருகிறீர்கள்?  எனக்குப் புரியவில்லை. ஆனால் பால்யப் பிராய பயங்களும் படிப்பினைகளும் அவரை மிகவும் பாதித்திருக்கின்றன./

    ஆம். பால்யம் மட்டுமல்ல, தென்னாஃப்ரிகாவிலும் அவர் elite முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழக்காடும், அவர்களால் மதிக்கப்படும் பாரிஸ்டர். இஸ்லாமிய அடிப்படைவாதம் வெளிப்படுவதற்கான அரசியல் வெளி அங்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியர்களாக இணைந்து வெள்ளையர்களை எதிர்க்கும் சூழல். அதில் தன் வழிமுறைகளுக்கு கிடைத்த வெற்றி அவர் ஆளுமையை கட்டி எழுப்பியதில் பெரும்பங்கு வகித்திருக்கவேண்டும்.

    அந்த தனியனுபவமே இந்தியக்களத்தின் கொடூரமான எதிர்-தாரணங்களை ஏற்க அவருக்குத் தடையாக இருந்திருக்கலாம். 
    /மண்வெட்டிதாஸத்தனமாகத் /புரீல்ல :-|I do agree that the chances of shooting from the hip are pretty high. Just lazily hoping someone can substantively argue on the lines of what I lazily sloppily muse! 

    /அப்படியென்றால் அது, “எனக்கென்ன ஆதாயம் அதில்?”/
    I will take the bait :-)
    ‘ஆதாயம்’ என்பது கொஞ்சம் reductive. 

    நேருவின் நோக்குடன் தான் எனக்கு இயல்பான ஒத்துணர்வு என்றாலும், ஒரு moral coreஆக காந்தி மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணம் கூடும், குறையும், ஆனால் நீங்காது. 

    In the popular episode we all read in school about the teacher who nudges him to copy, Gandhi writes:

    “Later I came to know of many other failings of this teacher, but my regard for him remained the same. For I had learnt to carry out the orders of elders, not to scan their actions.”

    இதை இன்றூ எப்படி எப்படி எல்லாமோ வாசிக்கலாம். குயுக்தியாகக் கூட. ஆனால் லிடரலாக பொருள்கொண்டால், இதை நாம் புரிந்துகொள்ளக்கூட முடியுமா!?

    2/2


    • //உதாரணமாக நேரு, தன் குறைபாடுகளைப் பற்றியும், தன் மீது மக்கள் மிகையான பிரேமையும், நம்பிக்கையும் வைத்திருப்பதைப் பற்றியும் பதிவு செய்துகொண்டே வருகிறார். கலக்கமும், நெகிழ்ச்சியும் அவரை ஒருசேர உந்துகின்றன.

      // Nehru’s idealism was – contary to RW opinion- tempered with pragmatism to a far greater extent. At the very least, many of the criticisms against him are made with the benefit of hindsight.

      ஸ்ஸ்ஸ்… மிடீல… 😩🙏🏿

      ற்றொம்ப நெகிழ்ச்சியானத்ல கோமணம் எங்கியோ வுள்ந்திர்ச்சே 😭

      • dagalti Says:

        :-)

        ஒருமுறை நான் “நல்லவேளை காந்தியம் கைமீறிப் போகாமல் நேரு சரியான நேரத்தில் நம்மைத் தடுத்தாட்கொண்டார்” என்ற த்வனியில் ஏதோ சொல்லப்போக, ஒரு காந்தியர் (என்னைப்போல் வெறும் இணையவம்பர் அல்லர், சர்வோதயா இயக்கத்தில் ஊக்கத்துடன் செயல்படுபவர்) : “நீ நேருவைக் கடந்து காந்தியை அடையும் நாள் வரும்” என்று என்னை ஆசீர்வதித்தார்.

        அந்நாள் வர நெடுநாள் ஆகும்போல்ருக்கு :-)


      • யோவ்! நீர் நேருவைக் கடந்த பின், அவர் புத்திரி இந்திரா, பேரன்மார், மருமகள்மார் கொள்ளுப்பேரன்பேத்தி எள்ளுப்பேரன்பேத்தி என மேலதிகமாக நிறைய மூச்சிறைக்கக் கடக்கவேண்டிவரும்.

        இந்தத் தடை-தடகளப் போட்டி முடிய நிறைய நாட்களாகும். ப்ரியங்கா அம்மணியார் பெற்றெடுத்த செல்லங்கள் வரிசையில் பொறுமையாகக் காத்துக்கொண்டிருப்பர்வேறு.

        மேலும் நேருவைக் கடந்தால் காந்திதான் என்பது என்ன குதர்க்கவாதமோ தெரியவில்லை. இந்த சர்வோதயாகாரர்கள் மோட்டர் கண்ட்ரோல் எனத் தொழில்முனைவுகள் செய்தால் நன்றாக இருக்கும்.

        ஆக. எது எப்படியோ.

        இந்த ஜென்மத்தில், உங்களுக்கும் சரி, எனக்கும் சரி – சாபல்யம் கிடைக்கப்போவது இல்லை.

        நன்றி.


    • Thanks sir, for sharing the news.

      Hope it will be pushed to the logical end.

      In any case, wailing will start from the LeLi ecosystem – and this will give them an easy exit and an opportunity to move away from the ignominy of supporting Taliban.

      But more important would be to make good text book corrections. Let us see how the future unfolds.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s